அத்தியாயம் 33
சோபாவில் படுத்திருந்த ஆதிகேசவன் வேகமாய் எழுந்து, கண்கள் சிவக்க, “ஏய்! அந்த வெற்றி என்னை நாயடி அடிச்சுருக்கான் ! அவனை நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா? அவன் மேல லாரி ஏத்தி கொன்னுடுவேன், உன்னையும் உயிரோட விடமாட்டேன்!” என்று கோபத்துடன் கத்தினான்.
அவனின் குரலில் நடுங்கிய அருந்ததியோ, ராஜேஷின் பக்கம் ஓடி வந்து நின்றாள். அவள் கண்ணில் நீர் வழிந்தது.
கேசவனின் கையை பிடித்து தடுத்த ராஜேஷ், “வயசுக்கு வந்த பொண்ணை கை நீட்டி அடிக்கிறதா? தப்புடா!” என்று அதட்டியபடி மகனை கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
நடுங்கி நிற்கும் அருந்ததியை கையை பிடித்து “அரு குட்டி… நீ இன்னைக்கு காலேஜ் போகாதே. கொஞ்சம் ஓய்வு எடு” என்று பாசமாய் கூறி அவள் தோளில் கை வைத்தார்.
“அப்பா… எக்ஸாம் இருக்கு, போகணும்” என்றாள் அருந்ததி மெதுவாக.
“ஆமா! நீ எக்ஸாம் எழுதி பெரிய கலெக்டர் ஆகப் போற? காலேஜ் போக வேண்டாம் உள்ளே போ!” என்று ஆத்திரப்பட்டு கத்தினான் ஆதிகேசவன்.
அவளோ “நான் காலேஜ் போகணும்” என்றாள் தேம்பிக் கொண்டு.
அவன் அருந்ததியின் கையைப் பிடித்து இழுத்து அவளது அறைக்குள் தள்ளிவிட்டு, மெத்தையின் மேல் இருந்த அவளது போனை எடுத்துக் கொண்டு, “இனி எப்படி அவனோட பேசுறேனு பார்ப்போம்!” என்று கண்களை அகட்டி, கோபத்தில் முணுமுணுத்தவாறு அவளை முறைத்து வெளியில் சென்று விட்டான்.
வெற்றியை ஆரம்பத்திலிருந்து ஆதிகேசவனுக்கு பிடிக்காது. ஞானவேல் வஜ்ரவேல் இருவரும் தன்னை நம்பி வேலையை கொடுத்துவிட்டு அந்த வேலை முடிந்ததா இல்லையா என்று கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் வெற்றி அப்படி கிடையாது அவன் ஒரு வேலையை ஆதிகேசவனிடம் கொடுத்தால் அந்த வேலை முடியும் வரை கண்காணித்து அதில் குறை தெரிந்தால் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுவான். வெற்றி கம்பெனிக்குள் வந்துவிட்டால் ஆதிகேசவன் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவிடுவான்.
ஒரு கம்பெனி ஆரம்பிக்கும் அளவு பணத்தை எடுத்துக் கொண்டு அடுத்த மாதம் புதிய கம்பெனி ஆரம்பிக்கிறோம் என்ற நிலையில் அருந்ததி வெற்றியை லவ் பண்ணும் விஷயம் தெரிந்ததும் காண்டாகி விட்டான் ஆதிகேசவன்.
இப்போது ஆதிகேசவன் புதிதாய் ஆரம்பிக்கும் மசாலா கம்பனியில் ஒரு பார்ட்னராக சிவா சேர இருக்கிறான். ஆதிகேசவன் வீட்டுக்கு பிசினஸ் விஷயம் பேச வந்த போது அவனுக்கு காபி கொண்டு வந்த அருந்ததியை பார்த்ததும் சிவாவுக்கு பிடித்துவிட்டது.
“கேசவா உன் தங்கச்சியை எனக்கு பிடிச்சிருக்கு எனக்கு கல்யாணம் பண்ணி தருவியா?” என்று பட்டென்று கேட்டுவிட்டான்.
“அரு படிச்சிட்டிருக்காளே” என்று தயங்கினான்.
“கல்யாணத்துக்கப்புறம் நான் படிக்க வைக்குறேன் கேசவா” என்றான் சிவா சிரித்தபடி.
நமக்கு செலவு மிச்சம் என்று நினைத்த ஆதிகேசவனோ “அப்பாகிட்ட பேசிட்டு சொல்லுறேன் மச்சான்” என்றிருந்தான்.
ஆதிகேசவன், சிவா அருந்ததியை கல்யாணம் பண்ணிக் கொள்ள விருப்பம் தெரிவித்ததை ராஜேஷிடம் கூறினான்.
ராஜேஷோ “சிவாவை கல்யாணம் பண்ண அருந்ததி கொடுத்து வைச்சிருக்கணும் கல்யாணத்துக்கு சரினு சொல்லிடு கேசவா” என்று க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.
அருந்ததி வெற்றியை லவ் பண்ணும் விஷயம் தெரிந்த ஆதிகேசவன் சிவாவுக்கு தங்கையை கல்யாணம் பண்ணி கொடுக்க வாக்கு கொடுத்திருக்கிறோம் அவள் எங்கே தன்னை மீறி வெற்றியுடன் சென்றுவிட்டால் சிவாவுடன் பார்ட்னர் வைத்து கொள்ள முடியாது என்றுதான் அருந்ததியை வீட்டுக்குள் அடைத்து வைத்து மிரட்டுகிறான்.
“நான் காலேஜ் வருவேன்னு வெற்றி எனக்காக காத்திருப்பாரே நான் என்ன செய்வேன் இப்ப போனும் பண்ண முடியலையே” என்று மருகினாள் அருந்ததி.
“கேசவா அருந்ததியை அடித்து நம்ம பக்கம் அடிபணிய வைக்கிறதை விட அவகிட்ட பக்குவமா பேசி நம்ம பக்கம் வைச்சுக்கணும் நாளைக்கு அவளை காலேஜ்க்கு அனுப்பி வைப்போம் சிவா மாப்பிள்ளை நாளைக்கு யூஎஸ்ல இருந்து வராரு அருந்ததியை நம்ம குலதெய்வ கோவிலுக்கு கூட்டிட்டு போய் காதும் காதும் வைச்சது போல கல்யாணத்தை முடிச்சுருவோம். கல்யாணம் நடந்துச்சுனா அருந்ததி வெற்றியை மறந்துடுவா” என்றார் தந்திரமாக.
“இதுவும் நல்ல ஐடியா தான் அப்பா” என்று தலையை ஆட்டினான்.
வெற்றி அருந்ததிக்கு போன் போட போன் ஸ்விட்ச்ஆஃப் என்று வந்தது தன்னவளிடமிருந்து போனை பிடிக்கி வைத்துருப்பார்கள் என்று அவன் எதிர்பார்த்தது தான்.
அன்று இரவு அருந்ததியின் வீட்டுக்கு சுவர் ஏறி குதித்து அவளது அறை ஜன்னலை தட்டினான் வெற்றி. அவள் தூங்காமல் வெற்றியின் நினைவில் தான் படுத்திருந்தாள்.
ஜன்னல் தட்டும் சத்தம் கேட்டு திருடானா இருக்குமோ என்று பயந்து ஜன்னலை திறக்கவில்லை அருந்ததி மீண்டும் வெற்றி ஜன்னலை தட்டினான். கட்டிலிலிருந்து மெதுவாய் இறங்கி ஜன்னல் பக்கம் வந்து நின்றாள்.
“அழகி நான் தான் டி” என வெற்றியின் குரலை கேட்டதும் வேகமாக ஜன்னலை திறந்தவள் அங்கே ஜன்னலை பிடித்து நின்ற வெற்றியை பார்த்ததும் எதோ ஒரு யுகம் பார்க்காதது போல “அத்து… எ.என் போனை அண்ணா பிடிங்கிட்டு போய்ட்டாரு அதனாலதான் என்னால உங்களுக்கு போன் பண்ண முடியல” என்று அவனது கை விரல்களை பிடித்து அழுதாள்.
அவனோ “நீ போன் பண்ணாம இருந்ததும் நான் புரிஞ்சுக்கிட்டேன்டி உன்னை பார்க்க ஓடி வந்துட்டேன் கதவை திறந்து வெளியே வாடி அழாதே” என்றான் மெல்லிய குரலில்.
அவளோ “அப்பா அண்ணா இருக்காங்க எனக்கு பயமா இருக்கு” என்றாள் மெலிந்த குரலில்.
“நான் காலையிலிருந்து உன்னை பார்க்காம தவிச்சு போய் இருக்கேன்டி வாடி இருக்கற நேரத்தை வீண் பண்ணாதே” என்றான் ஏக்கமான குரலில்.
தன்னவனை காண தானும் தானே தவித்து கிடந்தோம். என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என் அத்து என் பக்கம் இருக்காரு என்று தைரியத்தோடு “சரி வரேன் இருங்க” என்று தன் அறையிலிருந்து மெதுவாய் பூனை போல நடந்து வெளியே வந்த அருந்ததி சோபாவில் படுத்துறங்கும் ராஜேஷை பார்த்தாள். அவர் அசந்து உறங்குவதை கண்டு பெருமூச்சு விட்டு வாசல் கதவை சத்தம் வராமல் திறந்து வந்ததும் அவளுக்காய் காத்திருந்த வெற்றியோ அவளது கையை பிடித்துக் கொண்டு தோட்டத்து பக்கம் அழைத்துச் சென்றவன் “அழகி” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டான். அவளும் அவனை காற்று புகா வண்ணம் இறுக்கி கட்டிக் கொண்டாள்.
பிரிய மனமே இல்லை இருவருக்கும். அவள் முகம் முழுவதும் இச் மொச் என்று முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான் வெற்றி. அவளும் அவனுக்கு பதில் முத்தம் கொடுத்தாள். அவள் இதழில் முத்தம் கொடுக்க அவள் கண்ணை பார்க்க அவளோ அவன் இதழை கவ்விக் கொண்டாள்.
மூச்சு முட்ட முத்தம் கொடுத்து கொண்டனர் இருவரும். அவள் மூச்சுக்கு ஏங்க ஒரு நிமிடம் அவளை மூச்சு விட அனுமதித்து அடுத்த நிமிடம் அவள் இதழை மென்று தின்றான். அவன் கைகள் அவள் இடையில் அலைபாய “அத்து” முனகினாள் அவன் இதழ்களுக்குள்.
அவன் விரல்கள் அடுத்து இன்னும் முன்னேறி அவள் அழகுகளில் அலைபாய சட்டென்று அவன் இதழை விட்டு விலகி “இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தானே சொன்னீங்க அத்து” என்று அவள் இதழ் பிதுக்கினாள்.
“சாரிடி அழகி உன்னை ஒரு நாள் பிரிஞ்ச ஏக்கத்துல அங்கே தொட்டுட்டேன்” என்றவன் அவள் இதழில் பச்சக் என்று முத்தமிட்டு “இதுக்கு மேல இங்க இருந்தா என் கை சும்மா இருக்காது உனக்கு புது போன் வாங்கிட்டு வந்திருக்கேன் மறைச்சு வச்சிக்கோ நாளைக்கு எப்படியும் காலேஜ் வந்துடு” என்று அவள் மீண்டும் இறுக்கி அணைத்து அவள் இதழில் முத்தமிட்டு “சீக்கிரம் உன் கழுத்துல தாலி கட்டுறேன் ரெடியா இரு” என்று அவளை விட்டு பிரிய மனமில்லாமல் சென்றான்.
அருந்ததி வெற்றி தலை மறையும் வரை பார்த்திருந்து விட்டு வீட்டுக்குள் வந்தவள் இன்னும் உறங்கும் தந்தையை பார்த்தவாறு வேகமாக தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள் அவள் கதவை மூடியதும் ராஜேஷ் கண் விழித்துக் கொண்டார்.
“என்னை அவமானப் படுத்தியவன் கூட ஒட்டி உறவாடிட்டு வரியா அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன்…” என்றவர் தூக்கம் வராமல் மகளுக்கு உடனே திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலையில் ராஜேஷ் தான் அருந்ததியை காலேஜ்க்கு அழைத்துச் சென்றார். அவள் காரை விட்டு இறங்கியதும் “வெற்றி கூட பேச கூடாது பாப்பா அவன் உன்னை லவ் பண்ணறது போல நடிச்சு ஏமாத்த பார்க்குறான். நீ அவன் கிட்ட ஏமாந்திடாதே” என்று அவளிடம் அனுசரணையாக பேசியவர் “ஈவினிங் காலேஜ் முடிச்சதும் உன்னை அழைச்சுட்டு போறேன்” என்றதும் அவள் “ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்டிச் சென்றாள்.
அன்று மாலை காலேஜ் விடும் முன்னே வெளியே வந்த அருந்ததி வெற்றி காரில் அவன் தோளில் சாய்ந்து படுத்திருந்தாள். “என் கழுத்துல தாலி எப்போ கட்டுவீங்க அத்து..! எனக்கு வேற யாரையோ கல்யாணம் பண்ணி வைச்சுருவாங்களோனு பயமா இருக்கு” என்று அவன் முகம் பார்த்தாள்.
“எந்த கொம்பனும் உன் கழுத்துல தாலி கட்ட விட மாட்டான் இந்த வெற்றி…!” என்றான் உறுதியான குரலில்.
அவள் பயந்த முகத்தை இரு கைகளால் பிடித்து, மெதுவாக நெற்றியில் முத்த ஒத்தடம் கொடுத்து
“பயப்படாதே, அழகி… நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… சீக்கிரம்.” என்றான் கண்ணை சிமிட்டி.
“நா. நான் கிளம்புறேன் அப்பாவோ அண்ணாவோ வந்துட போறாங்க பிரச்சனை ஆகிடும்” என்று அஞ்சியவளின் இதழை சிறைபிடித்து அவள் இதழை கொஞ்சி தீர்த்து அவளை விட்டு பிரிந்து “நீ என்னோட பொண்டாட்டி… இன்னிக்குத்தான் நீ தங்கச்சினு அவன் கண்ணுக்கு தெரியற போல. என்னமோ என் தங்கச்சி தங்கச்சினு குதிக்குறான். உன்னை நான் சின்ன வயசுலயே என் பொண்டாட்டியா நினைச்சுட்டேன். உன்னை யாருக்கும் விட்டு தரமாட்டேன்டி” என்று அவள் இதழில் முத்தம் கொடுத்து அவன் பார்வை போன இடத்தை கண்டு இதழ் சுளித்து “நீங்க ரொம்ப மோசம் அத்து” என்று அவன் கன்னத்தில் மெதுவாய் அடித்து விட்டு எழுந்து உட்கார்ந்த நிமிடம் ஆதிகேசவனிடமிருந்து போன் வந்தது.
“அச்சோ அண்ணா போன் பண்ணுறாங்க” என்று அடித்து பிடித்து போனை ஆன் பண்ணி காதில் வைத்தாள்.
“அரு உன் காலேஜ் வழியா வரேன் உன்னை வீட்டுல விட்டு போறேன்” என்றதும்
“ம்ம் ச… சரிங்க அண்ணா” என்றாள் தயங்கியபடியே.
ஆதிகேசவன் காலேஜ் வாசலில் நின்று தான் அவளுக்கு போன் போட்டான்.
ஆதிகேசவன் வந்து நிற்பது தெரியாமல் “அத்து நான் கிளம்புறேன்” என்று அவசரமாய் காரிலிருந்து இறங்கியவளை ஆதிகேசவன் பார்த்துவிட்டான்.
காரிலிருந்து இறங்கிய வெற்றியை பார்த்ததும் ஆதிகேசவனின் முகம் சிவந்து போனது.
அருந்ததி அச்சத்துடன் வெற்றியின் பக்கம் வந்து நின்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
ஆதிகேசவன் காரிலிருந்து இறங்கி அருந்ததியின் பக்கம் வந்தவன் “வீட்டுக்கு போகலாம் வா” என்று அவள் கையை பிடித்தான்.
“அவளோ நா… நான் வரமாட்டேன்” என்று தலையாட்டினாள்.
“நம்ம குடும்பத்து மானத்தை காத்துல பறக்க விடுறியா. அம்மா இல்லாத பொண்ணை வளர்க்க தெரியலனு நம்ம சொந்தம் முழுக்க அப்பாவை திட்டுறாங்க அப்பா இப்போ கொஞ்சம் முன்னே சூசைட் பண்ணிக்க பார்த்தாரு” என அவள் நம்பும் படி நடித்தான்.
“அச்சோ அப்பா இப்போ எப்படி இருக்காரு அண்ணா” என்று பதறினாள். அவளை பெற்ற தந்தை பாசம் காட்டவில்லை என்றாலும் தன்னால் தான் அப்பா உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தாரா என்று அவள் மனம் துடிக்க வெற்றியின் பக்கம் திரும்பியவள் “நான் போய்ட்டு வரேன் வெற்றி” என்று தலையசைத்து ஆதிகேசவனின் காரில் ஏறினாள்.
“பார்த்தியா? என் தங்கச்சியை ஒரு நிமிஷத்துல என் கார்ல ஏற வைச்சேன்!” என்றான் பெருமை கலந்த சிரிப்போடு.
“என் அப்பா புதிய கம்பெனி ஆரம்பிக்கிறதுல பிஸியா இருக்காரு… நாளை மறுநாள் என் தங்கச்சிக்கும் சிவாவுக்கும் கல்யாணம். இனிமே அருந்ததி உனக்கு கிடையாது, வெற்றி!” என்றான் அகங்காரமாக.
வெற்றியின் முகம் உறைந்தது.
ஆதிகேசவனோ “அருந்ததியை மறக்க முடியாம நீ சட்டையை கிழிச்சு திரியறதை நான் பார்த்து சந்தோசப் படுவேன்டா” என்று எக்காளமாக சிரித்தான்.
வெற்றியோ நிமிர்ந்து நின்று, “போடா… பைத்தியக்காரனே! அருந்ததிக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சுருச்சு. இப்ப அவ என் உயிர், உன் தங்கச்சி இல்ல! நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்” என்று அசராமல் ஆதிகேசவனின் தலையில் அணுகுண்டை தூக்கி போட்டான் வெற்றிவேல். அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கத்தி போல் பாய்ந்தது. ஆதிகேசவனின் முகம் அந்த நொடியிலே மங்கி போனது.
“உன்னை சும்மா விட மாட்டேன்” என்று அங்கே கீழே கிடந்த கல்லை தூக்கி வெற்றி மேல் போட பார்க்க
அவன் கையில் இருந்த கல்லை பிடிங்கி தூக்கி எறிந்த வெற்றியோ “நேத்து தானே என் கையால அடி வாங்கின இன்னும் அடி வாங்கணுமா துரோகி” என்று சிரித்தபடி அவனை அடிக்க கைய ஓங்கவும் அருந்ததி காரை திறந்து வேகமாக ஓடி வந்து வெற்றி கையை பிடித்துக் கொண்டு “வேணாம் அத்து” என்றாள் கண்ணீருடன்.
“என் பொண்டாட்டிக்காக உன்னை விடுறேன் போடா நாயே” என்று அவன் முதுகில் குத்து விட்டான்.
ஆதிகேசவனோ “என் தங்கச்சியை உன் கிட்டயிருந்து நிரந்தரமா பிரிப்பேன்டா” என்று வெற்றியை முறைத்துக் கொண்டு அருந்ததியுடன் காரில் ஏறினான்.
அடுத்த நாள் காலையில் ராஜேஷும் ஆதிகேசவனும் “குலதெய்வ கோவிலில் பூஜை வைச்சுருக்கோம் போகலாம்” என்று அருந்ததியை அழைத்துச் சென்றனர்.
கோவிலுக்குச் சென்றதும், கோவிலில் மலர் அலங்காரம், நாதஸ்வரம், ஏற்பாடுகளை கண்டவளுக்கு “இது பூஜை இல்ல, கல்யாண ஏற்பாடு போல இருக்கு!” என்று உள்ளுக்குள் அதிர்ந்து வெற்றிக்கு போன் போட்டாள் அருந்ததி.
“அத்து… கோவில்ல எனக்கு கல்யாணம் நடத்த பார்க்குறாங்க”…” என்றாள் கலங்கிய குரலில்.
வெற்றியோ “நான் கோவிலுக்குள்ளே தான் வந்திட்டிருக்கேன் அழகி பயப்படாதே இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் ஆக போகுது” என்று அவள் நெஞ்சில் பாலை வார்த்தான்.
சிவாதான் தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று அருந்ததிக்கு தெரியாது.
சிவா கார் பிரேக் டவுன் ஆகி விட்டது. சிவா தன் குடும்பத்துடன் கோவிலுக்கு வர தாமதம் ஆனது. ஆதிகேசவனோ சிவாவிற்கு போன் போட்டான்.
“மச்சான் கார் பிரேக் டவுன் ஆகிடுச்சு அம்மா இந்த கல்யாணம் வேணாம் அபசகுனமா தெரியுதுனு சொல்லுறாங்க. நான் காரை சரி பண்ணி அம்மாவோட கிளம்புறேன் சாரி” என்று காரில் கிளம்பி விட்டான்.
அருந்ததி கழுத்தில் மூன்று முடிச்சிட்ட வெற்றியோ “ஐ லவ் யூ பொண்டாட்டி” அவள் நெற்றியில் முத்தமிட்டான் சந்தோச புன்னகையுடன்.
அருந்ததிக்கு ஆதிகேசவனை நினைத்து பயம் ஒரு பக்கம் இருந்தாலும் வெற்றியின் பொண்டாட்டி ஆகி விட்டோம் இனி என்னை யாரும் வெற்றியிடமிருந்து பிரிக்க முடியாது என்று நிம்மதியில் மிதந்தாள்.
ஆதிகேசவன் போன் பேசி முடித்து விட்டு திரும்பியதும் அருந்ததி மாலையும் கழுத்துமாய் வெற்றியின் கை கோர்த்து நின்றவளை கண்டு ஆத்திரத்தோடு “ஏன் டி எங்க முகத்துல கரியை பூசிட்டியா” என்று அருந்ததியை பல்லை கடித்துக் கொண்டு அடிக்கச் சென்றான்.
“என் பொண்டாட்டி மேல கையை வைச்ச உன் கையை உடைச்சுடுவேன் பார்த்துக்கோ” என்று பற்களை நறநறவென கடித்தான்.
“வெற்றி பிரச்சனை வேணாம்” தன்னவனை தடுத்து விட்டாள் அருந்ததி.
“அண்ணா எனக்கு வெற்றியை பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் எங்களை நிம்மதியாக வாழ விடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
“சீ என்னை அண்ணானு கூப்பிடாதே” என்ற நேரம்
மாலை வாங்கச் சென்றிருந்த ராஜேஷ் கோவிலுக்குள் வந்தவர் மணக்கோலத்தில் நின்ற மகளை கண்டதும் கொதித்து விட்டார்.
“அப்பா என்னை மன்னிச்சுடுங்க” என்று அவள் கண்ணீர் விடவும்
“இனிமே நீ எனக்கு மகள் கிடையாது உன்னை இப்பவே தலை முழுகிட்டேன். கேசவா வா போகலாம்” என்று கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டனர்.
அழுதுக் கொண்டிருந்த அருந்ததியை சமாதானப் படுத்தி காருக்கு அழைத்து வந்த வெற்றியோ “நம்ம வீட்டுக்கு போகலாம் வா” என்று அருந்ததியை வீட்டுக்கு கூட்டிச்சென்றான் அங்கே நடக்கும் விபரீதம் தெரியாமல்.

прет 30-45 мин.1к10.действием похож на рсц https://mos-akpp.ru Хороший магазин и отличные цены. Доставили через 3 дня после заказа. О качестве товара комментарий оставлю позже.Ребятки все пушка
I will immediately clutch your rss feed as I can not in finding
your email subscription hyperlink or newsletter service.
Do you have any? Kindly let me know so that I
could subscribe. Thanks.
Do you have a spam issue on this website; I also am a blogger,
and I was wanting to know your situation; many
of us have created some nice practices and we are looking
to swap techniques with other folks, please shoot me an e-mail if interested.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
We stumbled over here different website and thought I might as well check things out.
I like what I see so i am just following you.
Look forward to looking over your web page again.
Actually when someone doesn’t know afterward its up to other people that
they will help, so here it occurs.
Hi mates, how is the whole thing, and what you desire to say about this post, in my view its
in fact remarkable in support of me.
Wow, superb blog layout! How long have you been blogging
for? you make blogging look easy. The overall look of your site
is great, as well as the content!
I have been browsing on-line greater than three hours these days,
but I by no means discovered any attention-grabbing article like yours.
It’s pretty price sufficient for me. In my opinion, if all web owners and
bloggers made excellent content as you probably did, the net will
likely be a lot more useful than ever before.
Wonderful beat ! I would like to apprentice while you amend your website, how could i subscribe for a blog site?
The account aided me a acceptable deal. I had been a little
bit acquainted of this your broadcast offered bright clear concept
Thank you for the good writeup. It in reality used to be a enjoyment account it.
Glance complicated to far delivered agreeable from you!
However, how can we communicate?
Very nice article, just what I needed.
Magnificent goods from you, man. I have be aware your stuff prior to
and you are simply extremely magnificent. I really like what you’ve got here, certainly like what you’re stating and the way wherein you say it.
You make it entertaining and you still care for
to keep it wise. I can not wait to learn much more from you.
That is really a great site.
I like the valuable information you provide in your articles.
I’ll bookmark your weblog and check again here regularly.
I’m quite certain I will learn plenty of new stuff right here!
Best of luck for the next!
Admiring the time and energy you put into your site and in depth information you present.
It’s good to come across a blog every once in a while that
isn’t the same old rehashed material. Wonderful read!
I’ve saved your site and I’m including your RSS
feeds to my Google account.
I truly love your website.. Pleasant colors & theme. Did you develop this amazing site yourself?
Please reply back as I’m looking to create my own site
and want to find out where you got this from or what the
theme is named. Thank you!
WOW just what I was looking for. Came here by searching for
Thanks for the marvelous posting! I certainly enjoyed reading it, you
could be a great author. I will remember to bookmark your
blog and may come back in the future. I want to encourage continue your
great job, have a nice weekend!
I’m gone to say to my little brother, that he should
also go to see this website on regular basis to take updated from latest reports.
Everything is very open with a really clear description of the issues.
It was really informative. Your site is very helpful.
Thank you for sharing!