3. மோகவிழியால் எனை தைக்காதே
உதயகிருஷ்ணாவோ கையில் ஸ்டெதஸ்கோப்புடன் தங்கமீனாவை சுட்டெரிக்கும் சூரியனை போல எரிக்கும் பார்வை பார்த்தான்.
கண்ணை திறந்து பார்த்த தங்கமீனா.. இவரு யாராயிருக்கும் நெட்டை பனைமரம் போல வளர்ந்து வச்சிருக்காரு.. என்று தொண்டைக்குழியில் எச்சில் விழுங்கிக்கொண்டு “சா..சாரி சார்” என்று சொல்லி அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள் பேதை பெண்.
“இடியட் கண்ண என்ன பிடரில வச்சிட்டு வரீயா” என்று கர்ஜித்தவன்.. அவள் மலங்க மலங்க விழிப்பதையும்.. அவள் கையில் இறுக பிடித்து வைத்திருக்கும் பைலை பார்த்தவன் புருவ முடிச்சிட்டு “என்னது கையில” என கேட்டு அவளருகே செல்ல..
“நா. நான் நர்ஸ் இன்டர்வியூக்கு வந்திருக்கேன்” என்று தைரியமாக பேசிவிட்டாள் உதயகிருஷ்ணாவிடம்.
“வாட்..? நர்ஸ் இன்டர்வியூக்கா.. எனக்குத் தெரியாம இங்க எந்த இன்டர்வியூவும் நடக்கலையே” என்று நெற்றியை சுருக்க.
அடக்கடவுளே அப்ப நமக்கு இங்க வேலை கிடைக்கும்னு நம்பிக்கையில வந்தேனே.. இந்த நெட்டகொக்கன் இன்டர்வியூ நடக்கலன்னு சொல்றான்.. என்று முகத்தை சோகமாக வைத்தாள்.
அவள் முகம் காட்டும் ஜாலங்களை தனது லேசர் பார்வையில் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அவள் உதடு அபிநயம் பிடிப்பதைப் பார்த்து உதட்டுக்குள் முதன் முறை ஒரு பெண்ணை பார்த்து சிரித்து வைத்தான் உதய கிருஷ்ணா..
“இல்ல சார்.. என்னை சாம்ராட் சார்” என சொல்ல வாயெடுக்க.
அந்த நேரம் தலையில் அடிப்பட்டு இரத்த காயத்துடன் இருக்கும் ஒரு சிறுவனை ஸ்டக்சரில் வைத்து வார்டு பாய் தள்ளிக்கொண்டு வர பக்கத்தில் அந்த பையனின் தாய் கதறிக்கொண்டு “டாக்டரய்யா என் பையனை காப்பாத்துங்க.. ஒரு காருக்காரன் என் பையன அடிச்சு போட்டு போய்ட்டான்” என்று நெஞ்சில் அடித்து அழுது கொண்டு உதயகிருஷ்ணாவின் முன்னே நிற்க.
சிறுவன் தலையில் இரத்தம் வடிவதை பார்த்த தங்கமீனா.. கைக்கட்டி சிறுவனை பார்த்துக்கொண்டிருந்த உதயகிருஷ்ணாவை கண்டு “அச்சோ சார் என்ன சிலையாட்டம் நிற்குறீங்க.. கொஞ்சம் என்னனு பாருங்க” என்று பதற..
“உஸ்ஸ்..” என்று வாயில் விரல் வைத்து மிரட்டியவன்.. வார்டு பாயை பார்க்க.. அவனோ பயத்துடன் எமர்ஜென்சி வார்டுக்கு அச்சிறுவனை கொண்டு சென்றான்..
உதயகிருஷ்ணா புறங்கையை கட்டிக்கொண்டு எமர்ஜென்சி வார்டுக்கு செல்லும் முன்.. தங்கமீனாவை திரும்பி பார்க்க.. அவளோ என்ன இவன் பெரிய இவனாட்டம் உஸ்னு வாயில விரல் வைச்சு மிரட்டுறான்.. மீண்டும் உதயகிருஷ்ணாவை, அவள் கரித்துக்கொண்டிருந்தாள்.
அவள் இதழ் அசைவைக் கண்டு சரியான பஜாரியா இருப்பா போல.. என்று எண்ணி.. “ஏய் இங்க வா” என்று கையசைக்க..
கிருஷ்ணா கூப்பிட்டதற்காக போகவில்லை அவள்.. அச்சிறுவனுக்கு என்னவாகியிருக்கும் என்று அவன் கூப்பிட்டதும் புள்ளி மானை போல மார்பில் பைலை வைத்துக்கொண்டு அவன் பக்கம் போய் நின்று எமர்ஜென்சி வார்டை எட்டிப்பார்த்து உதயகிருஷ்ணாவையும் முறைத்துப்பார்த்தாள்.
“உள்ள வா” என்று அவள் கையை அழுத்தமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு அவன் செல்ல..
“சார் கைய விடுங்க” என்று அவளது கையை விடுவிக்க பார்க்க.. அவனது இரும்பு பிடியிலிருந்து அவளால் விடுவிக்கமுடியவில்லை.
“சார் இப்ப கையை விடப்போறீங்களா.. இல்ல இங்க சீப் டாக்டர் சாம்ராட் சார்கிட்ட இந்த டாக்டர் நடத்தை சரியில்லைன்னு உங்களை பத்தி கம்ப்ளைண்ட் பண்ணுவேன். ஹா உங்க பேரு என்ன” என்று அவனது அங்கியில் இருக்கும் அவனது பெயரைப் பார்க்க.
சாம்ராட் பெயரைக் கேட்டதும் அவளது கையை விட.. அவளின் பால்நிறம் இப்போது அவன் பிடித்த இடம் செக்கச்செவேலென சிவந்து கன்றிப்போனது..
“ப்பா கிராதகா” என்று கையை உதறி உதய கிருஷ்ணாவை முறைத்துப்பார்த்தாள்.
உதயகிருஷ்ணா.. தங்கமீனாவிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுவதும் அடிப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி பண்ணும் நர்ஸின் மேல்தான் இருந்தது.. அந்தப் பெண்ணோ தலையிலிருந்த இரத்தத்தை ஒழுங்காக துடைக்க தடுமாறிக்கொண்டிருக்க.. இன்று தான் அந்த பெண் வேலைக்கு வந்திருந்தாள். அதுவும் அந்த மருத்துவமனையின் சொந்தக்காரன்.. ஒரு சிடுமூஞ்சி என்று பலரும் அந்த பெண்ணிடம் சொல்லியிருக்க பயத்தில் நடுங்கிக்கொண்டு முதலுதவி பண்ணிக்கொண்டிருந்தாள்
சிறுவன் பக்கத்தில் வந்து நின்ற உதயகிருஷ்ணா அந்த நர்ஸிடம் “என்னம்மா பண்ணுற.. இப்படித்தான் பர்ஸ்ட் எய்ட் பண்ணுவாங்களா ஒரு பேசண்ட்க்கு.. உனக்கு இங்க வேலை கிடையாது.. வெளியே போ” என்று ஒரு அதட்டல் போட்டானே பாரு.. அந்தப் பெண்ணோ பயந்து வெளியே ஓடிவிட்டாள்.
தங்கமீனா கையிலிருந்த பைலை டேபிள்மீது வைத்து விட்டு ஒரு பக்கம் போட்டிருந்த ஷாலை இருபக்கமும் போட்டு முடிச்சிட்டு.. சிறுவனுக்கு பர்ஸ்ட்டெய்டு பண்ண ஆரம்பித்தாள்.. முதலில் இரத்தத்தை சுத்தமாக துடைத்துவிட்டு பார்க்க.. காயம் தையல் போடும் அளவிற்கு இருக்க.. அவள் வேலை செய்வதை கண்ணெடுக்காமல் கை கட்டிப்பார்த்திருந்தான் உதயகிருஷ்ணா.
சிறுவன் வலியில் முணங்க சற்று முன் உதயகிருஷ்ணாவிடம் அவள் சண்டை போட்டதெல்லாம நினைவில் வைக்காமல் “சார் காயம் கொஞ்சம் ஆழமா இருக்கு மைல்ட் டோஸ் மயக்கமருந்து கொடுங்க” என்று அவன் முகம் பார்க்க.
“தள்ளிப்போ” என கண்ணால் சைகை செய்தான்.
“க்கும்” என்று அச்சிறுவனை விட்டு எழுந்து நின்றாள்.
ஐந்து தையல் போட வேண்டியிருந்தது.. காயம் பட்ட இடத்தில் மறுப்பு ஊசி போட்டு இரண்டே நிமிடத்தில் தையலிட்டு முடித்தான்.
“ம்ம்.. ரொம்பத்தான்.. இவன பார்த்தா பல ஆப்ரேசன் செய்தவன் போல இருக்கான்.. மருத்துவத்துல பழம் தின்று கொட்டை போட்டவன் போல” என்று இதழை பிதுக்கினாள் மங்கை.
ரெஸ்ட் ரூம் சென்றிருந்த எமர்ஜென்சியின் நர்ஸ் வார்டுக்குள் வர அங்கே நின்றிருந்த உதயகிருஷ்ணாவை கண்டு விழி பிதுங்கி நின்றாள்.. பின்னே அந்த நர்ஸ் ரெஸ்ட் ரூம் போகிறேன்.. என்று அவளது லவ்வருடன் பேசிக்கொண்டு வர அரைமணிநேரம் ஆனது.
“நர்ஸ் இந்த மாசத்தோட வேலையில இருந்து உங்களை தூக்குறேன்” என்று அசால்ட்டாக சொல்லி வெளியே சென்று விட்டான்.
அதிர்ச்சியில் நின்ற நர்ஸின் முன்னே போய் நின்று “யார் சிஸ்டர் இந்த டாக்டர் உங்களை வேலையிலிருந்து தூக்குறேன்னு சொல்றாரு”. என்று உதயகிருஷ்ணாவை பற்றி அறியாமல் கேட்க.
“அவர் இந்த ஹாஸ்பிட்டல் எம்.டி.. அண்ட் நியூராலஜிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் உதயகிருஷ்ணா” என்றதும்..
போச்சு உன் பொல்லா வாயைக் கொண்டு இந்த டாக்டர்கிட்ட சண்டை போட்டியே தங்கமீனா.. உனக்கு வேலை கொடுப்பானா அவன் என்று பைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
பிரபுக்கு அடிப்பட்டதும் அவனுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தது உதயகிருஷ்ணா என்று தங்கமீனாவுக்கு தெரியவில்லை.. அவள் அன்று வந்திருந்தாள் இன்று கிருஷ்ணாவிடம் சண்டை போட்டிருக்கமாட்டாள்.
நடை தளர்ந்து நடந்து வந்தவளை சாம்ராட் பார்த்துவிட்டார்.. “தங்கமீனா” என்று அவர் கூப்பிட..
சாம்ராட்டை பார்த்ததும் அவளுக்கு ஏதோ ஒரு மூளையில் தமக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது.
சாம்ராட் பக்கம் படபடப்புடன் சென்றாள் தங்கமீனா.
ஏன்மா இவ்ளோ லேட்டா வர..ஹாஸ்பிட்டல் எம்.டி உதயகிருஷ்ணா இப்ப ஆப்ரேசன் பண்ண போய்டுவாரு.. அப்புறம் நாம அவர நாளைக்குத்தான் பார்க்கமுடியும்.. வாம்மா போகலாம் என்று அவளை கூப்பிட..
“சார் எனக்கு இந்த ஹாஸ்பிட்டல்ல வேலை கிடைக்காது” என்று இதழ் பிதுக்க.
“நான் உதயாகிருஷ்ணாகிட்ட உன் வேலை விசஷயமா பேசிட்டேன்ம்மா” என்றிட..
சற்று முன் உதயகிருஷ்ணாவிடம் தான் துடுக்குத்தனமாக பேசியதை சாம்ராட்டிடம் தயங்கி தயங்கி தங்கமீனா கூற.
“ஹாஹா என்று சிரித்தவர்.. நல்ல பொண்ணுமா நீ அவர்கிட்ட போய் சண்டைபோட்டியா.. இனி நான் பேசி சாமாளிக்கிறேன்” என்று தங்கமீனாவை கூட்டிக்கொண்டு கிருஷ்ணாவின் அறைக்கு முன்னே சென்று நின்று “நீ கொஞ்ச நேரம் வெளியே நில்லும்மா.. நான் பேசிட்டு வரேன்” என அவளை நிற்க வைத்து அவர் அறைக்குள் சென்றார்.
உதயகிருஷ்ணா புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான்..
“கிருஷ்ணா” என்று சாம்ராட்டின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்க..
“சொல்லுங்க அங்கிள்.. கொஞ்சம் பேச வந்ததை சீக்கிரம் சொல்லுங்க எனக்கு ஆப்ரேசனுக்கு நேரமாச்சு” என புத்தகத்தை மூடி வைத்து எழுந்தான்.
“அப்பாவுக்கு இப்ப உடம்பு எப்படியிருக்கு.. சர்ஜரி எப்போ?” என்று நேராக தங்கமீனாவின் வேலை விசயத்தை கேட்காமல் குருமூர்த்தியின் உடல்நிலையை பற்றி விசாரிக்க.. அவனுக்கு தெரியும் இப்போது அவர் வந்திருப்பது தங்கமீனா வேலை விசயமாகவென்று.. தங்கமீனா… சாம்சாட் சார் என்று பேசியது கிருஷ்ணாவின் மூளைக்குள் சேமித்து வைத்திருந்தான்.
“ஐய்யாவுக்கு நாளைக்கு சர்ஜரி அங்கிள்.. நீங்களும் வந்திடுங்க.. வேற எதாவது பேசணுமா” என்று வாஷ்ரூம் பக்கம் சென்றவன்..
“கிருஷ்ணா ஒரு நிமிசம்”
சாம்ராட்டை அழுத்தமான பார்வையில் கையிலிருந்த வாட்சை பார்த்துக்கொண்டு “சொல்லுங்க அங்கிள்” என்று பார்க்க.
“எனக்கு தெரிஞ்ச குடும்பத்து பொண்ணு பி.எஸ்.சி நர்ஸ் கோர்ஸ் இப்பத்தான் முடிச்சிருக்கா.. அவ அப்பா கூட சமீபத்துல இறந்துட்டாரு.. கொஞ்சம் பூவர் பேமிலி.. அவளுக்கு நம்ம ஹாஸ்பிட்டல்ல வேலை கொடுக்கறேனு நம்பிக்கை வார்த்தை சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்” என்று அவர் நெற்றியை நீவ.
“ஓ.கே அங்கிள்” என்று அவன் தோளை குலுக்கினான்.
“கிருஷ்ணா அவ்வளவு ஈசியாக ஒத்துக்கொள்வான்” என்று சாம்ராட் நினைக்கவில்லை.
“ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா.. அந்தப் பொண்ணு வெளியே நிற்குறா.. நா வரச்சொல்லட்டா”
“வரச்சொல்லுங்க” என்று வாஷ்ரூம் செல்லும் முன்.
“அங்கிள் 3 ஆம் நெம்பர் ரூம்ல இருக்க பேசண்டை கொஞ்சம் போய் பாருங்களேன்.. நான் இப்போ வந்துடறேன்” என்று வாஷ்ரூம் சென்றான்.
மாரியாத்தா உள்ளேயிருக்க நெட்டை கொக்கு எனக்கு வேலை தரேன்னு சொல்லிடணும்.. ஆடி மாசம் உனக்கு கூல் ஊத்துறேன்.. என்று மாரியம்மனை மனதுக்குள் கும்பிட்டு நின்றாள் தங்கமீனா.
மகிழ்ச்சியுடன் வெளியே வந்த சாம்ராட் தனக்குள் பேசிக்கொண்டிருந்த தங்கமீனாவின் கைப்பிடித்து “கங்கிராட்சுலேசன்மா.. உனக்கு வேலை கிடைச்சாச்சு” என்று சந்தோசத்துடன் அவர் கூற..
“தேங்க் யூ சோ மச் சார்” என அவள் விழியோரம் கண்ணீர் கசிய..
“கிரேசி கேர்ள் எதுக்கு கண்ணீர்விடுற.. எந்த ப்ராளம்னாலும் என்கிட்ட சொல்லணும்.. என்ன உன் அப்பா போல நினைச்சுக்கோ.. உனக்காக கிருஷ்ணா வெயிட் பண்ணுறார் உள்ளே போமா” என்று அவர் கிருஷ்ணா சொன்ன வார்டுக்கு சென்றார்.
நெட்ட கொக்குதான் இந்த ஹாஸ்பிட்டல் எம்.டினு தெரியாம சண்டை வேற போட்டோம் இப்ப எப்படி போய் பேசறது.. என்று தைரியத்தை வரவழைத்து உள்ளே செல்ல.
கிருஷ்ணாவின் வெற்று நாற்காலிதான் அவள் முன்னேயிருந்தது.
என்ன நெட்டக்கொக்க ஆளக் காணோம்.. என்று சுற்றி சுற்றிப் பார்க்க.. கிருஷ்ணா டீ போட்டு குடித்து வர அறைக்குச் சென்றிருந்தான்.. அவனது அறையில் உள்ளே சிறியதாக சமையல்கட்டு.. பெட்ரூம் என்று அறைக்குள்ளேயிருந்தது.
சார்.. சார்.. என்று ராகம் போட்டு அவள் அழைக்க.
கிருஷ்ணாவுக்கு அவள் கூப்பிடுவது அவன் பாம்பு காதுக்கு கேட்டது.
இதழ் வளைத்து சிரித்தவன்.. இந்தப் பொண்ணுக்கு எவ்ளோ தைரியம் என்கிட்டயே சத்தம் போடுது.. வாய் ரொம்ப நீளம் போல.. அடக்கி வைக்குறேன் என்று டீயை குடித்து முடித்து நிதானமாக வெளியே வர.
தங்கமீனா.. பாத்ரூம்ல இருக்காரா.. என்று வாஷ்ரூம் அறையின் கதவை தட்டி விட்டு திரும்ப.
மீண்டும் அவன்மீது மோதினாள் தங்கமீனா.. இம்முறை மோதியது மட்டுமல்லாமல் கார்ப்பெட் தடுக்கி கீழ விழப் போக அவளது பட்டு மேனி இடுப்பில் அவனது முரட்டு கரம் கொண்டு அவளைத் தாங்கி பிடிக்க.. இருவரது இதழ்களும் முட்டிக்கொள்ளும் தூரத்தில்.. அவனது மூச்சுக் காற்று அவளது முகத்தில் தென்றலாக வீச.. கண்மூடினாள் பாவையவள்.
கிருஷ்ணா அவளது முகத்ததை உற்று நோக்கிட.. அவள் பால்நிறத்தை இரசித்தான்.. மீன்விழியாலை கொத்தி தின்ன ஆசை வந்தது ஆண்மகனுக்கு.. அவள் துடிக்கும் இதழலை அடக்கியாள தோன்றியது உதயகிருஷ்ணாவுக்கு.. அவள் சங்கு கழுத்துவளைவில் மீசை புரட்ட எண்ணம் வந்தது.. அந்த ஒரு நிமிடம் அவன் எண்ணத்தில் ஏதோ தோன்ற.. அவன் பாகாய் இளகிய முகம்.. அடுத்த நொடியில் பாறையாய் இறுகிப்போய் அவளை தன்னிலிருந்து விலகி நிறுத்தினான் அவன்.
சிலைக்கு உயிர்வந்தது போலிருந்தது தங்கமீனாவுக்கு.. சற்றுமுன் அவள் இடுப்பை அவன் பிடித்த உடும்பு பிடி தான் கீழே விழுந்திருந்தாள் கூட இப்படி வலித்திருக்காது போல.. என்று எண்ணினாள் பதும்மை.
உனக்கு எப்போதும் கண்ணு பின்னால தான் இருக்குமா.. எப்ப பார்த்தாலும் என் மேல வந்து மோதுற.. என்று தங்கமீனாவை அதட்டினான்.
தன்னை திட்டும் கிருஷ்ணாவை பதிலுக்கு தானும் அவனை திட்ட எண்ணினாலும் தன் வீடு சூழ்நிலையை எண்ணி அவனிடம் எதிர்வாதம் செய்யாமல் சாரி சார் .. இனி கண்ணை திறந்து நடக்குறேன் என்று கூற கிருஷ்ணாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஓ. கே நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கோ” அவள் முகம் பார்க்காமல் வெளியே செல்ல
“தேங்க்ஸ் யூ சார்” என்று பைலை எடுத்துக்கொண்டு அவளும் அவன் பின்னே வர
அவன் போன் எடுக்க திரும்ப அவன் மீது மீட்டும் மோதினாள்.
இம்முறை அவள் இதழை வன்மையாக ஆக்கிரமித்தான்.
அவள் அவன் இதழ் முத்தம் கொடுப்பான் என்று கனவில் கூட எண்ணியிருக்க மாட்டாள். அவன் மாமன் அருள் தன்னை தொட கூட விரும்பாதவள் .. இப்படி அதிரடி முத்தம் குடுப்பவனை என்ன செய்வாள் தங்கமீனா.

[url=https://play-avia-master.site/]play avia masters[/url] aviamasters, aviamasters game, aviamasters game, aviamasters online, aviamasters online, aviamasters casino, aviamasters casino, aviamasters strategy, aviamasters strategy, best aviamasters strategy, best aviamasters strategy, aviamasters bonus, aviamasters bonus, aviamasters win, aviamasters win, aviamasters app, aviamasters app
Immerse yourself in a captivating world[url=https://astronaut-game-aviator.com/]aviator game[/url]and try your luck at flying your own plane!
This distinctive game combines aspects of luck and tactics, ensuring that every round is full of surprises.
Here’s an article that intrigued me—thought you’d enjoy it https://niqnok.com/julialavarack8
Играйте в [url=https://aviator-1win-apk.ru/]1вин авиатор[/url] и испытайте удачу в увлекательном мире авиационных приключений!
Она предлагает уникальный опыт и возможности для заработка.
pdTrCeCmXZvLiDhCpRiyp
best free american porn sites
สล็อตเว็บตรง
เกมสล็อตออนไลน์ ที่ได้รับความนิยม .
ทุกวันนี้ เกมสล็อต ออนไลน์ ถือเป็น เกมที่มีผู้เล่นจำนวนมาก ในตลาดเกมออนไลน์ เนื่องจาก วิธีการเล่นที่ไม่ซับซ้อน เรียนรู้ได้เร็ว และ ให้ความสนุกทันที ไม่ว่าผู้เล่นจะเป็นมือใหม่หรือมีประสบการณ์ เกมสล็อต ก็ยังตอบโจทย์ สำหรับการเล่นในระยะยาว.
เหตุผลที่ผู้เล่นเลือกเล่น สล็อต .
สล็อต มีจุดเด่นหลายด้าน ตัวอย่างเช่น เข้าใจง่าย ไม่ต้องใช้ทักษะซับซ้อน, มีรูปแบบเกมหลากหลาย พร้อมกราฟิกทันสมัย, สามารถเริ่มต้นด้วยเงินน้อย และ มีฟีเจอร์โบนัส พร้อมระบบฟรีสปิน. ด้วยเหตุนี้ เกมสล็อต จึงถือเป็น เกมยอดนิยม ของผู้เล่นจำนวนมาก.
ความหมายของ สล็อตเว็บตรง .
สล็อตตรง คือ การเล่นเกมสล็อตผ่านเว็บไซต์หลัก ไม่มีตัวกลาง ซึ่งช่วยให้ระบบมีความเสถียร. จุดเด่นของสล็อตเว็บตรง ประกอบด้วย การโหลดเกมที่รวดเร็ว, ความปลอดภัยสูง, ผลลัพธ์โปร่งใส และ มักมีโปรโมชั่นมากกว่า. ผู้เล่นจำนวนมาก จึงเลือก เว็บตรง เพื่อความปลอดภัยในการเล่น.
ทดลองเล่นสล็อต pg แบบไม่ใช้เงินจริง .
สำหรับผู้ที่ยังไม่ต้องการลงทุน สามารถเลือก ทดลองเล่นสล็อต pg ได้ทันที โดยเป็นโหมดเดโม สามารถเล่นฟรี. การทดลองเล่น ช่วยให้ผู้เล่น เรียนรู้ระบบการเล่น, เข้าใจระบบโบนัส และ เลือกเกมที่เหมาะสมได้ เหมาะสำหรับมือใหม่ รวมถึงผู้ที่ต้องการเปรียบเทียบสล็อต.
ทำไม pg slot ถึงเป็นที่นิยม .
pg slot คือเกมสล็อต จากผู้พัฒนา PG ที่ได้รับการยอมรับ ในตลาดสล็อต. จุดเด่นของ pg slot ได้แก่ ภาพสวย คมชัด, รองรับการเล่นบนมือถือ 100%, ระบบลื่นไหล และ ฟีเจอร์โบนัสหลากหลาย. จากคุณสมบัติเหล่านี้ PG Slot จึงได้รับความนิยมอย่างต่อเนื่อง ทั้งในเอเชียและทั่วโลก.
สรุป .
การเลือกเล่น เกมสล็อต ผ่าน เว็บตรง ร่วมกับการใช้ ทดลอง pg slot และ รวมถึงเกมของ pg slot ช่วยให้ผู้เล่นได้รับประสบการณ์ที่ปลอดภัย สนุก และมีคุณภาพ เหมาะสำหรับการเล่นระยะยาว.
If you are going for most excellent contents like me, simply go to see this web page
daily since it presents feature contents, thanks
For latest information you have to pay a visit world wide web and on the web I found this
web site as a most excellent web page for most up-to-date updates.
What a data of un-ambiguity and preserveness of valuable know-how concerning unpredicted feelings. http://subscriber.channelbiz.co.uk/profile/login.php?continue=http%3A%2F%2Fwww.dunklesauge.de%2Ftopsite%2Findex.php%3Fa%3Dstats%26u%3Dchangburd97&continue_label=ChannelBiz+UK