ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

5. மோகவிழியால் எனை தைக்காதே
 
பிரபு பேங்க் எக்ஸாம் எழுதியிருந்தான்.. அதன் ரிசல்ட் வந்திருக்க காலேஜ் முடித்து சந்தோசத்துடன் வீட்டுக்கு கிளம்பியவன் வீட்டுக்குள் சென்றதும் “அக்கா எங்கிருக்க உனக்கு ஒரு குட்நியூஸ் சொல்லபோறேன்” என வீட்டுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டு வந்தான் பிரபு.. 
 
ஹாலில்  கலைவாணி அரிசியை புடைத்துக்கொண்டிருந்தவர் பிரபுவின் சத்தம் கேட்டு “அடேய் அக்கா தூங்குறாடா.. என்ன தலைபோற விசயம்” என்று மகனை பார்த்துக் கேட்க..
 
“ம்மா.. நான் பேங்க் எக்ஸாம்ல பாஸ்ஸாகிட்டேன்.. எனக்கு வேலைகிடைச்சிடும்.. வேலைக்கு போய் பெரிய வீடா கட்டப்போறேன்.. உன்னை மகாராணி போல வைச்சுப்பேன்.. அக்காவ பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிவைப்பேன்” என்று அவன் ஆசைகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போனான்.
 
“பிரபு பேங்க் வேலைக்கு பணம் கட்டணுமா என்ன?” 
 
கலைவாணி “பணம் கட்டணம்மா” என்றதும் அதுவரை பிரபுவின் முகம் தௌசன்ட் வாட்ஸ் பல்பு போல எரிந்தது.. ஜீரோ வாட்ஸ் பல்பு போல அவன் முகம் ஆனது.. 
 
“எவ்வளவு கட்டணுமாம்”
 
“5லட்சம் பணம் கட்டணுமாம்” என்று சொல்லும் போது அவன் முகம் வாடிப்போனது.
 
“நான் சாம்ராட் ஐய்யாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுறேன்” என்றதும் தான் பிரபுவின் முகம் மலர்ச்சி ஏற்பட்டது.
 
“சரிடா நான் நைட்டுக்கு டிபன் செய்யுறேன்” என்று சமையலறைக்குச் சென்றார் கலைவாணி.
 
தங்கமீனா தூங்கி எழுந்து பார்க்க இரவு ஏழாகியிருந்தது.. கட்டிலை விட்டு எழ அவளுக்கு மனமேயில்லை.. பாவம் தனியா சமைப்பாங்க ஹெல்ப் பண்ணலாமென எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி ஹாலுக்கு வர..  அங்கே பிரபு புக்கை வைத்து நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான்.
 
கலைவாணி தக்காளி சட்னி அரைத்துவைத்து இட்லியை அடுப்பில் ஊத்தி வைத்து மகளை எழுப்பலாம் என்று அறைக்குப் போக ஹாலில் நின்றிருந்த தங்கமீனாவை பார்த்து “மீனுக்குட்டி எழுந்துட்டியடா இப்போ உடம்பு சோர்வு போயிடுச்சாடா” என்று அவள் பக்கம் வந்து கன்னம் தொட..
 
“ம்ம்.. இதழ் விரித்து.. டிபன் செய்துட்டீங்களாம்மா”
 
“பசிக்குதாடா சட்னி அரைச்சுட்டேன்டா.. இட்லி ஊத்தி வைச்சிருக்கேன்.. ரெடியாகியிருக்கும் நான் போய் எடுத்துட்டு வரேன்.. பிரபு சாப்ட்டு முடிச்சு எழுதுடா” என்று மகனை சாப்பிட அழைத்துவிட்டு சமையல்கட்டுக்குள் சென்றார் கலைவாணி.
 
வேலையை பத்தி கேட்டா அம்மாகிட்ட என்ன சொல்லலாம்.. என யோசித்துக்கொண்டிருக்க.
 
பிரபு நோட்புக்கை பேக்கில் வைத்துவிட்டு “அக்கா எந்த கோட்டையை பிடிக்க உத்தேசம்” என்று அவள் தோளைத் தொட..
 
“ஹா பிரபு என்ன கேட்ட”
 
“சரியா போச்சு போக்கா.. அப்துல் கலாம் கனவு காணுங்களென சொன்னது போல நீ நின்னுட்டே கனவு காணுறீயா” என்று கிண்டலடிக்க
 
“டேய் கொழுப்புடா உனக்கு” பிரபுவை, அவள் அடிக்க வர அவன் ஓட இருவரும் வீட்டை சுற்றி ஓடிவந்தனர்.. தன்பிள்ளைகளின் விளையாட்டை இரசித்துப்பார்த்திருந்தார் கலைவாணி.
 
இருவரும் மூச்சு வாங்கி ஹாலுக்கு வர.. பிரபுவின் தலையில் இரண்டு கொட்டுக்கள் வைத்துவிட்டுதான் அமர்ந்தாள் தங்கமீனா.. 
 
“ஆஆ அக்கா வலிக்குது” என்று போலியாக கண்ணீர்விட..
 
“டேய் நான் சும்மா தொட்டுக்கொடுத்தேன் அது உனக்கு வலிக்குதா”என்று நங்கென்று வேகமாக கொட்டு வைத்து சிரித்தாள்.. இப்படி சிரிப்பவர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பான் கிருஷ்ணா என்று அறியாமல் இருவரும் ஆனந்தமாக இருக்கின்றனர்.
 
“ரெண்டு பேரும் விளையாண்டது போதும் சாப்பிடுங்க” என்று கலைவாணி கூறியதும் இருவரும் சாப்பிட்டு முடிக்க.. 
 
“அக்கா சொல்ல மறந்துட்டேன் நான் பேங்க எக்ஸாம்ல பாசாகிட்டேன்” சட்டை காலரை தூக்கிவிட்டான்.
 
“வாவ் சூப்பர்டா.. உனக்காவது கவர்மெண்ட் வேலை கிடைக்கட்டும்” என்று சந்தோசத்தில் தம்பியை அணைத்துக்கொண்டாள்.
 
“மீனு குட்டி பேங்க் வேலைக்கு ஐந்து லட்சம் பணம் கட்டணுமாம்.. நாம எப்படி கண்ணு அத்தனை பணத்தை புரட்டுவது” என்று கவலைப்பட்டார் கலைவாணி.
 
“ம்மா இந்த வீட்டை வித்திடலாமா” என்று கேட்க..
 
“அடியே உன் கல்யாணத்துக்கு இந்த வீட்டு பத்திரத்தை வச்சுத்தான் உனக்கு சீர் செய்யணும்”. என்று தங்கமீனாவை பார்த்து முறைக்க..
 
“அக்கா.. நீ தான் வேலைக்கு போக போறீல.. அங்க முன் பணம் கேட்க முடியுமா? சாம்ராட் சார் அங்க சீப் டாக்டர் தான அவர் பணம் தரச் சொன்னா உனக்கு தருவாருங்கள்ள.. நான் வேலைக்கு போனதும் சீக்கிரம் பணத்தை திருப்பி கொடுத்துடலாம்” என்று பிரபு.. தங்கமீனாவின் முகத்தை ஆவலாகப் பார்க்க..
 
ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போக வேண்டாமென்று முடிவெடுத்து வைத்திருக்கும் தங்கமீனா அங்கே இப்போது தம்பியின் வாழ்க்கைக்காக தன்மானத்தை விட்டு வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.. கிருஷ்ணாவிடம் தள்ளியேயிருக்கலாம்.. அத்துமீறினால் சாம்ராட் சாரிடம் கம்ப்ளைன்ட் செய்திடலாம் என்று எண்ணி இருந்தாள்.. 
 
“சரிடா வேலைக்குப் போனதும் பணம் கொடுப்பாங்களான்னு தெரியல.. கேட்டுப்பார்க்குறேன்.. இல்லைனா இந்த வீட்டு பத்திரத்தை அடகு வச்சு உனக்கு வேலைவாங்கித்தருவேன்டா.. இந்த அக்கா” என்று பிரபுவின் கையை பிடித்துக்கொண்டாள்.
 
தங்கமீனா பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த அருள்.. “என்னை இந்த வீட்டு ஆளுன்னு நீங்க நினைக்கலயே தங்கா” என்று கலைவாணியின் பக்கம் வந்து உட்கார்ந்தான்.
 
“டேய் நீ ஏற்கனவே தங்கமீனா படிப்பு செலவுக்கு பணம் கொடுத்துட்ட.. இப்ப பிரபுவோட வேலைக்கு உன்கிட்ட பணம் கேட்க மனசு இடம் தரலடா தம்பி” அங்கலாய்ப்பை கூற
 
தங்கமீனாவுக்கு, அருளிடம் பணம் வாங்க விரும்பமில்லை.. பின்னாளில் அவனை திருமணம் செய்ய நேரிட்டால் ஒரு நாளில் அவன் உன் குடும்பத்துக்கு நிறைய செலவு செய்தேன்.. என்று கூறுவதை அவள் விரும்பாமல்.. “ஆமாம் மாமா நீங்க எங்க குடும்பத்துக்கு நிறைய செய்துட்டீங்க.. தம்பிக்கு வேண்டிய பணத்தை நாங்களே புரட்டிக்கொள்கிறோம்” என்று அருளின் மனம் நோகாமல் கூற..
 
“என்ன புள்ள என்ன இப்படி ஒதுக்கு வைச்சுப் பேசுற.. நான் இந்த குடும்பத்து ஆளு.. நானும் என் பங்குக்கு ஏதாவது செய்வேன்” என தொகை எவ்வளவு வேணும் பிரபு என்று அவனிடம் கேட்க..
 
“ஐஞ்சு லட்சம் மாமா” என்றான்.
 
“ஐஞ்சு லட்சமா படுபாவி பயலுக.. கஷ்டப்பட்டு எக்ஸாம் எழுதினது நீ.. இப்படி பணம் கட்டச்சொல்றானே” என்று கையை முறுக்கினான்.
 
“சரிடா டிபன் சாப்பிடு”
 
“பசிக்குதுக்கா சாப்பிடத்தான் வந்தேன்” என்று தட்டை எடுத்து அவனே இட்லியை போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.. இந்த வீட்டில் அருளும் ஒருவனாகத்தான் இருந்தான்.. இரவு மட்டும் வெளியே தங்கிக்கொள்வான்.. தங்கமீனாவையும், தன்னையும் சேர்த்து வைத்து ஊரார் யாரும் அவதூறாக பேசக் கூடாது.. என்று நினைத்து ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்திருந்தான்.. 
 
கலைவாணி சமைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அறைக்கு படுக்க சென்றுவிடுவான்.. இதுதான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.. சாப்பிட்டுவிட்டு “அக்கா நான் போய்ட்டு வரேன்.. என்னால பிரபுக்கு வேண்டிய பணத்தை நான் ஏற்பாடு பண்ணுறேன்” என்று சொல்லி சென்றுவிட்டான்.
 
அன்றிரவு தங்கமீனாவுக்கு தூக்கம் வரவில்லை.. மீண்டும் கிருஷ்ணாவிடம் வேலைக்கு போவதா என்று யோசித்தாள்.. படித்த  உடனே வேற ஹாஸ்பிட்டலில் வேலை கிடைக்காது.. அப்படியே வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாகத்தான் கொடுப்பார்கள்.. என்று மனதில் பலவேறு எண்ணங்கள் தோன்றியது.. 
 
கிருஷ்ணா சொன்னது போல அவன் ஹாஸ்பிட்டலுக்கே வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தத்தை எண்ணி வருத்தப்பட்டாள்.. என்ன செய்வது ஏழையாய் பிறந்து விட்டோம்.. வேற ஹாஸ்பிட்டல் போனாலும் அங்கே பாதுகாப்பு இருக்குமோ இல்லையோ என்ற அச்சமும் அவளுக்கு ஏற்பட்டது.. எதையும் துணிந்து நடப்போம்.. என்று உறுதியுடன் கண் மூடினாள் தங்கமீனா.
 
தங்கமீனா காலையில் எழுந்ததும் சமையல் வேலைகளை ஆரம்பிக்க.. கலைவாணி இன்று நேரமே எழுந்து வந்துவிட்டார்.. “மீனும்மா நான் சமையல் வேலையை பார்க்குறேன் நீ போய் புறப்படு” என்று கூற..
 
“ம்மா பாதி சமையல் முடிஞ்சாச்சு.. முடிச்சுட்டு கிளம்புறேன்” என்று சமையலை முடித்து ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட ஆரம்பித்தாள்.
 
“காதில் பட்டன் தோடு ஒரு கையில் வாட்ச் கட்டி கொண்டு  முடியை கொண்டை போட்டு நர்ஸ் எப்படி வேலைக்குப் போக வேண்டுமோ அது போல ரெடியானாள்.
 
சாம்ராட்.. தங்கமீனாவை கூட்டிச்செல்ல வந்து விட.. கலைவாணிக்கு ஏகபோக சந்தோசம்.. “வாங்க ஐய்யா பெரியவங்க எங்க வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசம்” என்று நாற்காலியை போட்டு அவர் அமர்ந்ததும் அவருக்கு காபி போட்டு எடுத்துட்டு வந்து அவர் கையில் கொடுக்க.. புன்னகையுடன் காபியை வாங்கினார்..
 
பெரிய ஹாஸ்பிட்டலின் சீப் டாக்டர் என்றெல்லாம் கௌரவம் பார்க்காமல் தன்னால் ஒரு குடும்பம் வாழ போகிறது ..என்று எண்ணித்தான் கலைவாணியின் வீட்டுக்கு வந்தார்.
 
பிரபு கல்லூரிக்கு ரெடியாகி வர.. ஹாலில் சாம்ராட் உட்கார்ந்திருந்ததைக் கண்டு “வாங்க சார் நல்லாயிருக்கீங்களா”என்று நலம் விசாரிக்க.
 
“ம்ம்.. நல்லாயிருக்கேன்ப்பா.. உன் படிப்பு எப்படி போகுது இந்த வருசம் முடிக்க போறீல”
 
“ஆமாங்க சார்.. எனக்கு பேங்க்ல வேலை கிடைச்சிருக்கு” என்று அவன் ஆனந்தமாக கூற..
 
“கன்ங்ராட்ஸ் பிரபு” என்று அவனுக்கு கை நீட்ட.. 
 
“தேங்க்யூ சார்” என்று பதிலுக்கு கைக்குலுக்கினான்.
 
தங்கமீனா ரெடியாகி வர.. 
 
“அடடே நர்ஸ் ரெடியாகி வந்துட்டாங்க” என்று சாம்ராட் தங்கமீனாவை பார்த்து சிரிக்க..
 
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க சார்” என்று அவர் காலில் தங்கமீனா விழ..
 
“நல்லாயிரும்மா… ஆல் தி பெஸ்ட்” என்று அவளை தூக்கி விட்டு.. கலைவாணி நாங்க கிளம்புறோம் என்று கூறியவர்.. 
 
தங்கமீனாவிடம் “நீ போய் கார்ல உட்காருடா. நான் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்” என்றதும்..
 
ஒரு நிமிடம் தயங்கியவள் பின் பெரிய மனிதர் போக சொல்லும் போது அங்கே நிற்காமல் வெளியே சென்று காருக்குள் ஏறாமல்.. அம்மாகிட்ட சாம்ராட் சார் என்ன பேச போறாரு என்று நகம் கடித்து யோசித்துக்கொண்டிருக்க.. பிரபுவையும் வெளியே அனுப்பி வைத்தார் சாம்ராட்.. சிறிது நேரத்தில் பிரபுவும் வெளியே வந்து தங்கமீனாவின் பக்கத்தில் நின்றவன்..
 
“அக்கா.. டாக்டர், அம்மாகிட்ட என்ன இரகசியம் பேசப்போறாரு.. நம்ம ரெண்டு பேரையும் வெளியே அனுப்பி விட்டாரு” என்று கேள்வி கேட்க.
 
எனக்கு மட்டும் என்னடா தெரியும் அவர் என்ன பேசப்போறாருன்னு.. என்று அவள் யோசனையாக நின்றாள்.
 
பிரபு வெளியே சென்றதும் “கலைவாணி, உன் பொண்ணுக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கு.. தங்கமீனாவ எங்க ஹாஸ்பிட்டல் எம்.டி.க்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.. அவர் தங்கமீனாவ கல்யாணம் செய்துக்க விரும்புறாரு.. உன்னோட பதில கேட்டுதான் அவர் கிட்ட நான் சொல்லுறேன்னு சொல்லியிருக்கேன்” 
 
“ஐய்யா என்னை மன்னிக்கோணும்.. என் தம்பி அருளுக்கும், தங்கமீனாவுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் செய்ய பேசிமுடிச்சிட்டோம்.. இப்ப என் தம்பி, தங்கமீனா மேல உசிரையே வைச்சிருக்கான்.. அவன் ஆசைய கெடுக்க முடியாதுங்க”. என்று தயங்கிக் கூற.
 
“தங்கமீனாவுக்கும், உன் தம்பி மேல விருப்பமா” என்று சாம்ராட் கேட்க.
 
“என்பொண்ணு.. நான் சொல்றத தட்ட மாட்டாங்கய்யா”
 
“அப்படியா.. அப்ப நல்லா யோசித்துப்பாரு.. பெரிய இடம்” என்று கலைவாணியின் மனதை கலைக்க.
 
“அது முடியாதுங்கய்யா” என்று முடிவாக கூறிவிட்டாள் கலைவாணி.
 
“சரிமா நான் கிளம்புறேன்” என்று வெளியே வந்தவர் மனதில் கிருஷ்ணாவுக்கு என்ன பதில் கூறுவது.. கலைவாணி கூறியதை கிருஷ்ணாவிடம் கூறினால் அவன் கோபப்பட்டு எதையும் செய்ய துணிவான்.. என்று அச்சப்பட்டு காரின் அருகே வந்தவர்.. தங்கமீனாவும், பிரபுவும் நிற்பதைக் கண்டு “ரெண்டு பேரும் காருக்குள்ள ஏறுங்க” என்றதும்..
 
பிரபு ஆசையாக காரில் ஏறப்போனான்.
 
“டேய் மாப்ள” என்று அருள் குரல் கேட்டு திரும்ப.
 
“ம்க்கும்.. இந்த மாமா இப்பத்தான் வரணுமா.. இப்ப கார்ல என்ன போக விடாது” என்று முகம் சுளிக்க,
 
பிரபு எண்ணியது போலவே அருள் அவனை காரில் போகவிடாமல் “நான் உன் காலேஜ் பக்கம் தான் போறேன் வா நான் கூட்டிட்டுப்போறேன்” என்று பிரபுவை காரில் போக விடாமல் தடுத்துவிட்டான்.. 
 
அருள் இங்கே வந்தது தங்கமீனாவை அழைத்துச் செல்லத்தான் ஆனால் அருளை பார்த்ததும் காருக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டாள் தங்கமீனா.
 
அந்த கோவத்தில்தான் பிரபுவை காரில் ஏறவிடாமல் தடுத்துவிட்டான் அருள்.
 
சாம்ராட்.. காரை கிருஷ்ணாவின் ஹாஸ்பிட்டலின் கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்க.. தங்கமீனாவும் இறங்க.. காரை லாக் செய்து ஹாஸ்பிட்டலுக்குள் சென்றனர்.
 
அனைவரும் சாம்ராட்டிற்கு வணக்கம் வைக்க.. தங்கமீனா கிருஷ்ணாவை எண்ணியபடியே நடந்து சென்றாள்.
 
தங்கமீனா வருவதை கேமராவில் தன் அறையிலிருந்தவாறு பார்த்து இதழ் வளைத்து சிரித்து எப்படியும் நீ இங்க வருவன்னு தெரியும்டி.. என்று நகைத்தவனுக்கு.. கலைவாணி.. தங்கமீனாவை, அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் கூறவில்லை என்று அவன் அறியாமல் திமிராக இருக்கிறான் ஆணவகார கிருஷ்ணா.
 
சாம்ராட் குருமூர்த்தியை பற்றி தங்கமீனாவிடம் கூறி அவளை குருமூர்த்தியிருக்கும் அறைக்கு கூட்டிட்டு  வந்தார்.
 
குருமூர்த்திக்கு ஆப்ரேசன் செய்ய அவரை அழைத்துச்செல்ல கிருஷ்ணா அவர் அறைக்கு வர. அங்கே தங்கமீனாவை சாம்ராட் இந்த பொண்ணுதான் கிருஷ்ணா சொன்ன பொண்ணு.. என்று குருமூர்த்திக்கு மட்டும் கேட்கும்படி கூற.. 
 
புன்னகையுடன் தங்க விக்கிரகம் போல நின்றிருக்கும் தங்கமீனாவை தன் குலம் தழைக்க வந்த ஸ்ரீ தேவி.. என்று கண்ணெடுக்காமல் அவளை பார்த்தார்.
 
கிருஷ்ணாவின் பிடிவாதம் அறிந்த சாம்ராட் எப்படியும் தங்கமீனாவை, கிருஷ்ணாதான் கல்யாணம் செய்து கொள்வான்.. என்று குருமூர்த்தியிடம் அவளை அறிமுகப் படுத்தி வைத்தார்.
 
தங்கமீனாவும் .. குருமூர்த்தியின் சாந்த முகத்தை பார்த்து இவர் மகனா அந்த பொறுக்கி நெட்டக்கொக்கு கிருஷ்ணா.. என்று அவளுக்கு சந்தேகம் வந்தது.
 
“ஐய்யா ஆப்ரேசன் தியேட்டருக்கு போகலாம்” என்று ஜன்னலோரம் நின்ற தங்கமீனாவை உரசிக்கொண்டு சென்று யாரும் பார்க்காத நேரம் அவள் இடுப்பை கிள்ளி விட்டு குருமூர்த்தியின் அருகே சென்று அவரை கட்டிலை விட்டு இறங்க உதவி செய்தான்.
 
“தம்பி நீ செலக்ட் பண்ண பொண்ணு சூப்பர்” என்று கிருஷ்ணாவிடம் கூற..
 
“ஐய்யா ஆப்ரேசன் தியேட்டர் போகலாம்” என்று அவரை கூட்டிச்செல்ல..
 
“தங்கமீனா ஆப்ரேசன் தியேட்டர் வந்துடுங்க” என்று அதிகாரமாக கட்டளை போட்டுச் சென்றான்.
 
“வாம்மா போலாமென்று” தங்கமீனாவை, சாம்ராட் ஆப்ரேசன் தியேட்டருக்கு கூட்டிச்சென்றார்.
 
தங்கமீனாவுக்கு கொஞ்சம் படபடப்பு இருந்தது.. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தியேட்டருக்கு வெளியே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த விநாயகர் படத்தை கும்பிட்டு உள்ளே சென்றாள்.
 
அங்கேயிருந்த மூத்த நர்ஸ் ஒருவர் தங்கமீனாவிடம் ஆப்ரேசன் அறைக்கு போடும் ஆடையை அவள் கையில் கொடுத்து போட்டு வரச்சொல்ல.. அறைக்குள் இருந்த இன்னொரு அறைக்குள் சென்றாள்.. அங்கே கிருஷ்ணா ஆடை மாற்றிக்கொண்டிருந்தான்.. அறை மாறி வந்துவிட்டாள்.. சரியாக அந்த நேரம் பார்த்து கிருஷ்ணா திரும்ப.. அச்சோ என்று அறையை விட்டு ஓடப்பார்க்க.. ஒரே எட்டில் அவளை எட்டிப் பிடித்து அவன் அணைப்பில் நிறுத்தினான். 
 

1 thought on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. В случае если вы планируете визит по Италии и планируете войти в обстановку агротуризма, то агротуризм в Тоскане – великолепный решение. Это смесь первозданной красоты, классической кухни и восхитительных сельских ландшафтов. Очень любопытен агротуризм Италия Тоскана тем, кто ценит мирный отдых в удалении от городской суеты шума.

    Для тех, кто ценит насыщенный отдых и открытия, настойчиво советую взглянуть на направления по Венеции за один день или маршруты по Доломитовым Альпам на машине. Также необходимо посетить на фабрики-магазины во Флоренции, в частности, The Mall – там можно отыскать отзывы и дельные советы на [url=https://holidaygid4.ru]амальфитанское побережье на машине[/url] . Италия богата восхитительными местами, вроде Амальфитанское побережье на машине или туры из Неаполя в Помпеи.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top