10. மோகவிழியால் எனை தைக்காதே
கிருஷ்ணா இன்று காலையில் ஒரு ஆப்ரேசன் இருக்க அதற்கு தயாராகிக்கொண்டிருந்தான்.. கதவு திறந்திருக்க.. லேசாக நாக் செய்து விட்டு உள்ளே செல்ல அவன் நாற்காலியில் இல்லாமலிருக்க..
காபி போட்டு குடிப்பாரோ அவர் தான் காபி பிரியர் ஆச்சே.. என்று எண்ணியவள் அறைக்குள் சென்று எட்டிப்பார்க்க அவனோ துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேண்டுக்கு மாறிக்கொண்டிருந்தான்..
அச்சோ என்று அவள் திரும்பி நின்றாள்..
தங்கமீனா கண்டிப்பாக தன்னை சந்திக்க வருவாள்.. என்று எண்ணியிருந்தவன் அவள் கால் கொலுசுசொலி வைத்தே அவள் வந்ததை கண்டுபிடித்துவிட்டான்.. “என்ன வேணும் கோல்ட்” என்று அவள் தோள் தொட்டு அதில் முகம் புதைத்தான்.
அவனது செயலில் எரிச்சலடைந்து “சார் என் மாமாவுக்கு ஆக்சிடன்ட் ஆகிட்டுச்சு ட்ரீட்மெண்ட் வந்து பாருங்க” என்று கூற..
“எனக்கு ஆப்ரேசன் இருக்கு டாக்டர் ரமேஷ் வந்து பார்ப்பாரு” என்று அவள் தோளில் அவன் முகத்தை அழுந்தப் புதைத்தான்.
“ஏன் நீங்க பார்க்க மாட்டிங்களா” என்று அவன் தலையை தன் தோளிலிருந்து எடுத்து விட..
“க்ரிட்டிக்கல் ஆப்ரேசன் கோல்ட் நான்தான் போயாகணும்” என்று கோட்டை மாட்டிக்கொண்டு பேச.
“ஓ.. குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதா.. அதான் நீங்க ட்ரீட்மெண்ட் பார்க்க வரல” என்று கோபமாய் கத்தினாள்..
அவள் பேசியதில் திடுக்கிட்டு திரும்பிய கிருஷ்ணா “வாட்ஆஆ.. என்ன பேசற.. உன் மாமாவுக்கு ஆக்சிடன்ட் ஆச்சு.. நான் என்ன தப்பு பண்ணினேன்.. எதுக்கு என்கிட்ட வந்து கத்துற”
“ஏன்னா நான் உங்களுக்கு கிடைக்கணும்னா என் மாமாவ போட்டுத்தள்ளனும்”
“நான்சென்ஸ் நான் டாக்டர்டி… இந்த மாதிரி சில்லித்தனமான காரியம்லாம் நான் பார்க்க மாட்டேன்.. அன்ட் உன் கழுத்துல தாலி கட்டணும்னு நினைச்சா இப்ப கூட கட்டுவேன் பார்க்குறியா” என்று அவன் எகிறி குதிக்க.
“ரொம்ப நடிக்காதீங்க டாக்டர்.. இப்ப என் மாமாவுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கணும்.. அட்வான்ஸ் கட்டச்சொன்னாங்க எனக்கு டைம் கொடுங்க”
“அது முடியாது ஹாஸ்பிட்டல் ரூல்ஸ்”
“எனக்கும் ரூல்ஸ் போடுவீங்களா”
“நீதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொல்லிட்டையே.. அப்புறம் என்ன உறவுமுறையில உனக்கு நான் ஹெல்ப்பண்ண” என்று உதட்டுக்குள் சிரித்து.. அவள் கோபப்படும் அழகை இரசித்தபடியே.. ஹாஸ்பிட்டலில் கிருஷ்ணாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் டாக்டர் ரமேஷ்க்கு கீழ எமர்சன்சி வார்டில் இருக்கும் அருள் என்ற பேசண்டை போய் பாருங்க.. என்று போனில் மெசேஜை தட்டி விட்டு.. கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் பெண்ணவளை தன் கைவளைவில் கொண்டு வந்த கிருஷ்ணா அவள் கழுத்தில் மீசையை உரசிக்கொண்டு.. அவளிடம் விளையாட எண்ணி “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லு.. இப்ப நானே வந்து உன் மாமனுக்கு டீரிட்மெண்ட் பார்க்குறேன்” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுக்க.
“ச்சே மனுசங்களோட பீலிங்க்ஸ் புரிஞ்சுக்க முடியாத மிருகம் நீங்க.. பாசம்னா என்ன நேசம்னா என்னன்னு உங்களுக்கு எப்படி தெரியும்.. என் மாமா.. என் மேல பாசம் வச்சிருக்காரு.. ஆனா நீங்க.. என் உடம்பு மேல ஆசைப்படுறீங்க.. அதான உங்களுக்கு வேணும்.. என்ன பேசுகிறோம்னு தெரியாமல் பேசி.. இதோ இப்பவே என்னை எடுத்துக்குங்க” என்று ஷால் பின்னை கழட்டப்போக..
தங்கமீனா பேசிய வார்த்தைகளில் அடிப்பட்டு போன கிருஷ்ணா “ஆமான்டி எனக்கு பாசம் கிடைக்கலதான் தாண்டி.. நான் மிருகம்தான்டி.. என்ன சொன்ன உன் உடம்பு மேல ஆசைப்பட்டேனா.. அப்படி நினைச்சிருந்தா.. உன்னைப் பார்த்த அடுத்த நாள் என் படுக்கை அறையில நீ இருந்திருப்ப.. ச்சை.. என்னைப் பார்த்து என்ன பேச்சுடி பேசிட்ட” என அவள் மீதிருந்த கோவத்தில் டேபிளில் கையை குத்தி.. நான் என்ன பொம்பளை பொறுக்கின்னு நினைச்சியாடி.. இந்த ஹாஸ்பிட்டல எந்த பொண்ணுகிட்ட வேணும்னாலும் என்னைப் பத்தி கேட்டுப்பாரு.. இனி நீயா வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்குங்கன்னு சொல்லி கேட்டாக்கூட.. நான், உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்.. என்று பேசியவன் ஆத்திரத்தில் தங்கமீனாவை தள்ளிவிட்டு சென்றான்.
தங்கமீனாவுக்கு.. அருள் தன்னால் தான் அடிப்பட்டு போனான் என்ற எண்ணத்தோடு வந்திருப்பவளிடம் விளையாட்டாகப் பேசி அவளுக்கு கோபத்தையும் வரவழைத்து.. அவனிடம் பேசக்கூடாத வார்த்தைகளை பேசவிட்டு இப்போது அவளை குற்ற உணர்வோடு நிற்க வைத்து விட்டு போய்விட்டான் கிருஷ்ணா.
நடை தளர்ந்து எமர்ஜன்சி வார்டுக்குப் போக.. அங்கே பிரபு மட்டும் நின்றிருந்தான்..
“பிரபு மாமாவ போய் பார்த்தியா?”
“அக்கா.. மாமாக்கு தலையில ப்ளட் கிளாட் ஆகியிருக்கு மைனர் ஆப்ரேசன் பண்ணணும்னு இப்பதான் ஆப்ரேசன் தியேட்டர் கூட்டிட்டுப்போயிருக்காங்க.. நீ வரட்டும்னு காத்திருந்தேன்” என்றதும்..
தப்பு செய்துட்டோம்.. அவர, நான் தப்பா புரிச்சிக்கிட்டேன் போல..
அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டேன் என்று மனதில் வருந்திக்கொண்டு.. ஆப்ரேசன் தியேட்டருக்குள் போக அவளுக்கு மனம் கேட்கவில்லை..
“பிரபு.. மாமாவுக்கு எப்ப டீரிட்மெண்ட் வந்து கொடுத்தாங்க..
அட்வான்ஸ் கேட்டாங்களே என்ன பண்ணின”
“அக்கா.. கிருஷ்ணா டாக்டர பார்த்துட்டு வரேன்னு போனில.. நீ போய் கொஞ்ச நேரத்துல ஒரு டாக்டர் வந்து மாமாவ செக்பண்ணிட்டு.. என்கிட்ட வந்து ஆப்ரேசன் பண்ணணும்னு சொன்னாங்க.. நான்.. நீ வரட்டும்னு சொன்னேன்.. இல்ல இப்பவே ஆப்ரேசன் பண்ணணும்னு சொல்லி ஆப்ரேசன் தியேட்டருக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க”
“பணம் கேட்டிருப்பாங்களே”
“இல்லக்கா பணம் அப்புறம் கட்டச்சொல்லிட்டாங்க”
“அச்சோ நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்” என்று தலையைப் பிடித்து உட்கார்ந்துவிட்டாள்.
ஆப்ரேசன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த மூத்த நர்ஸ் தங்கமீனாவை பார்த்ததும்.. தங்கமீனா இங்க என்ன பண்ணுற உன்ன எம்.டி ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே வரச்சொன்னாரு..
பதறி அடித்து உள்ளே சென்றாள்.. அங்கே கிருஷ்ணாவை எதிர்பார்த்து சென்றவள் கிருஷ்ணா இல்லாமல் டாக்டர் ரமேஷ் தான் மாஸ்கை கழட்டி “தங்கமீனா உங்க மாமாவுக்கு ஆப்ரேசன் முடிஞ்சது.. ஒருவாரம் ஹாஸ்பிட்டல இருக்கணும்.. அண்ட் ஒன் மன்த் ரெஸ்ட் எடுத்தா போதும்.. உனக்கு அதிகமாக எதுவும் சொல்லவேண்டியதில்லை” என்று கூறிவிட்டார் சென்றார்.
மயக்கத்திலிருக்கும் அருளின் முன் போய் நின்றவள் அவன் காயத்தை விரலால் தொட்டுப்பார்த்து ஷாலால் முகத்தை பொத்திக்கொண்டு அழுதாள்.
கிருஷ்ணா மேஜர் ஆப்ரேசனை முடித்துவிட்டு அருளை செக் பண்ண வந்தவன் கண்ணில் இந்தக் காட்சி கண்ணில் பட கண்கள் சிவந்து “ஏண்டி.. என் மேல உனக்கு லவ் வரலல” என்று கையை முறுக்கி அங்கே வைத்திருந்த மருந்து பாட்டிலை எடுத்து கையில் வைத்து உடைக்க.. அவன் கையில் போட்டிருந்த கிளசுவுக்குள் கண்ணாடித்துண்டு கிழித்து இரத்தம் கொட்டியது.
சத்தம் கேட்டு திரும்பிய தங்கமீனா.. கிருஷ்ணாவின் கையில் இரத்தம் வருவதைப் பார்த்து “அச்சோ இரத்தம்” என்று ஓடி வந்து காட்டனை எடுத்து அவன் கையைப் பிடிக்க..
“தொடாதடி என்ன” என்று கையில் காட்டனுடன் நின்றவளை கண்கள் தெறித்து விழும் அளவிற்கு முறைத்தான்..
“நான் பேசினது தப்புதான் என்னை மன்னிச்சுடுங்க” என்று அவள் மன்னிப்பு கேட்க.
“இங்க பாரு உன் மாமனுக்கு போய் சேவகம் பாரு.. என்னை கவனிக்க எனக்குத் தெரியும்” என்று கையில் ரத்தம் சொட்டு போட வெளியே போகத் திரும்ப..
அங்கே வந்த நர்ஸ் ஒருவர் “டாக்டர் கையில என்னாச்சு இரத்தம் வருது” என்று அங்கேயிருந்த காட்டனை எடுத்து கிருஷ்ணாவின் கையைப் பிடித்து சுத்தம் செய்து கட்டு போட்டுவிட்டார்.
கட்டு போட்டதும் தங்கமீனாவை முறைத்துவிட்டு அவனது அறைக்குச்சென்றான்.
அவனது கோபத்தைக் கண்டு முதன் முறை பயம் வந்தது தங்கமீனாவுக்கு.
அருளை ஐ.சி.யுவிற்கு மாற்றச் சொல்லியிருந்தான் கிருஷ்ணா.. ஐ.சி.யுவினுள் நுழைந்த கிருஷ்ணா அருளை செக் பண்ணிவிட்டு அங்கே நின்றிருந்த தங்கமீனாவிடம் பேசாமல் அருளின் பக்கம் நின்றிருந்த பிரபுவிடம் “தம்பி இவருக்கு கம்பி, கண்ணாடித்துண்டு தலையில இருந்ததால அதையெல்லாம் ரிமூர்வ் பண்ணியாச்சு..
இன்னும் டூ வீக்ஸ் இங்கயே இருக்கணும்” என்று கூறிவிட்டு மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்துவிட்டு மறந்தும் தங்கமீனாவின் பக்கம் திரும்பாமல் வெளியே சென்று விட்டான்.
குருமூர்த்தியின் அறைக்குச் சென்ற கிருஷ்ணாவை கையில் கட்டுடன் பார்த்து “தம்பி என்னாச்சுப்பா” என்று அவன் கையை பிடித்து பதறிவிட்டார்..
“ஐய்யா கண்ணாடி கிளாஸ் கைதவறி விழுந்துடுச்சு.. சின்ன காயம் தான் கட்டுதான் பெரிசு” என்று அவரை நம்பவைத்தான்.
மகன் கூறுவதும் முற்றிலும் பொய் என்பதை அவர் அறிவார்.. காலையில் கிருஷ்ணாவிடம் கல்யாண வேலைகளை பற்றி பேசிவிட்டு வரலாம்.. என்று எண்ணி மணியை, கிருஷ்ணாவின் அறைக்கு கூட்டிட்டுப்போகச் சொல்ல.. மணியோ, குருமூர்த்தியை வீல் சேரில் உட்கார வைத்து கிருஷ்ணாவின் அறைக்கு கூட்டிச்சென்றார்..
அப்போது மகனுக்கும், மருமகளுக்கும் நடந்த விவாதத்தை காதுகொடுத்து கேட்டுவிட்டார்..
“மருமகளே அவசரப்பட்டு வார்த்தைய பேசிட்ட.. இனி அவன் காலில் சலங்கை கட்டி ஆடுவான்” என அவரது இதயத்தை பிடித்துக்கொண்டார்.. கடவுளே இப்பதான நானும், என் பையனும் சந்தோசமா இருந்தோம்.. அதுக்குள்ள உனக்கு பொறுக்கலையா என்று கடவுளிடம் மன்றாடினார்.
குருமூர்த்தியின் நிலைமையை புரிந்து கொண்ட மணி அவரை அங்கே இருக்க விடாமல் அவரது அறைக்கு கூட்டிட்டு வந்துவிட்டார்.
தம்பி கல்யாண வேலைகளை ஊர்ல பார்க்கச் சொல்லிட்டேன்.. என்று மகன் முகத்தைப் பார்க்க..
“இந்தக் கல்யாணம் நடக்காது ஐய்யா.. வேலைகளை நிறுத்திடச் சொல்லுங்க” என்று திரும்பி நின்று கொண்டான்..
சாம்ராட்.. அருள் அடிபட்ட விசயம் தெரிந்து அருளை பார்த்துவிட்டு, அப்படியே குருமூர்த்தியை பார்க்க வர.. அங்கே அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு இருந்தார்.. கிருஷ்ணா திரும்பி நின்றதால் அவனுக்கு தெரியவில்லை.
“குருமூர்த்தி என்னாச்சு” என சாம்ராட் பதறி அவரருகே ஓட.. சட்டென்று திரும்பி தந்தையை பார்த்த கிருஷ்ணா.. மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருந்த குருமூர்த்தியைத்தான்.. மருத்துவன் என்பதை கிருஷ்ணா மறந்து தந்தை கல்யாண பேச்சை எடுத்ததும் நிறுத்திடுங்க.. என தந்தையிடம் பொறுமையாக ஏதோ ஒரு சாக்கு வைத்து எடுத்து கூறியிருக்கலாம்.. ஆனால் அவசரப்பட்டு கூறியது குருமூர்த்திக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது.. கார்டியோ டாக்டருக்கு விசயத்தை கூற பறந்து வந்தார் குருமூர்த்தியை பார்க்க..
அவர் வருவதற்குள் கிருஷ்ணாவே தந்தைக்கு இன்ஜக்சனை போட்டிருந்தான்.. காலதாமதமாகத்தான் உணர்ந்தான் தான் தந்தையிடம் பேசியதை.. இப்போது இதற்கு காரணமான தங்கமீனா மீதுதான் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
காலையிலிருந்து அருள் பக்கம் இருந்தாள்.. கலைவாணிக்கு விசயம் தெரிய என் குடும்பத்துக்கு இருக்க ஆழம் விழுது அவன் ஒருத்தன்தான் அவனையும் பறிக்க பார்க்குறயே கடவுளே.. என்று புலம்பிக்கொண்டு மருத்துவமனை வந்து ஐ.சி.யுவின் முன்னே நின்றிருந்த பிரபுவிடம் அழுது கரைந்தார்..
“மாமாக்கு ஆபத்தில்லைன்னு சொல்லிட்டாங்கம்மா.. நீ அழாத” என்ற பிரபு.. கலைவாணியின் கண்ணீரை துடைத்து விட.
“அக்கா எங்கடா” என்று விசும்பிக்கொண்டே கலைவாணி கேட்க.
“ம்மா.. அக்கா ஐ.சியுக்குள்ள இருக்கா”
ஐ.சி.யுவை எட்டிப்பார்க்க அங்கே தங்கமீனா அருளிற்கு குளுக்கோஸ் பாட்டிலை மாத்திக்கொண்டிருந்தாள்.
ஐ.சி.யுவின் உள்ளே சென்ற ஒரு நர்ஸ் தங்கமீனாவிடம், குருமூர்த்தியின் நிலையை பற்றிக் கூற.
“சிஸ்டர் எங்க மாமாவ கொஞ்ச நேரம் பார்த்துக்குறீங்களா?” என்று கண்களால் கெஞ்ச.
“நீ போய்ட்டு வா மீனா நான் பார்த்துக்குறேன்” என்று அவளுக்கு உதவி செய்தாள்.
வெளியே வந்த தங்கமீனா கலைவாணியை பார்த்து விட.. தனது படபடப்பை குறைத்து கலைவாணியிடம் போக.
“மீனா குட்டி என் தம்பி எப்படியிருக்கான்” என்று நெஞ்சில் கை வைத்துக் கேட்க.
“மாமா நல்லாயிருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணுமுழிச்சிடும்” என்று கூறியவளின் கால்கள் அங்கே நிற்கவில்லை.. அம்மா நான் அசவரமாக ஒரு பேசண்ட பார்க்க போகணும் என்று குருமூர்த்தி இருக்கும் அறைக்குச் சென்றாள்.
குருமூர்த்தி இப்போது நன்றாக மூச்சுவிட அமைதியாக உட்கார்ந்திருந்தார்.. அவர் பக்கத்திலேயே கிருஷ்ணா அமர்ந்திருந்தான்.. கதவை திறந்து உள்ளே சென்ற தங்கமீனாவை பார்த்து இங்க எதுக்கு வந்த என்று உதடசைத்தான்.. அவள் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள்..
“வாம்மா” என்று குருமூர்த்தி தலையசைத்து அவளை கூப்பிட.. அவளை கிருஷ்ணா பார்வையால் எரித்தான்.
மெல்ல நடந்து வந்த தங்கமீனாவை இன்னொரு பக்கம் உட்கார வைத்துக்கொண்டார்.. அவள் அமர்ந்து சுற்றிப்பார்க்க டாக்டர்ஸ், நர்ஸ் என்று அனைவரும் நிற்க. “நான் என் மருமககிட்ட பேசணும் தப்பா நினைக்காம ஒரு ஐஞ்சு நிமிசம் எல்லாரும் வெளியே இருக்கீங்களா” என்று மெதுவாகக் கூற.
அனைவரும் கிருஷ்ணாவை பார்க்க.. அவன் கண்ணசைவில் அனைவரும் வெளியே போக.. சாம்ராட்டும் வெளியே செல்ல.. “சாம்ராட் நீங்க இருங்க” என்றார் குருமூர்த்தி.. அவர்தான் பெண்வீட்டு சார்பில் பேசணும்.. என இருக்க வைத்தார் குருமூர்த்தி.
“என்பிள்ளைய கட்டிக்க உனக்கு சம்மதமா? என் வீட்டு மருமகளா வருவியா?” என்று தங்கமீனாவின் கைப்பிடித்துக்கேட்க..
“இல்லைங்கய்யா” என்று அவள் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய் வழிய தலையசைத்தாள்.
தங்கமீனாவை கொன்றுவிடும் அளவிற்கு அவள்மீது சினம் எழுந்தது கிருஷ்ணாவிற்கு. எதனால் அவள் வேண்டாம் என்று கூறிகிறாள் என்பதற்கு காரணம் அவளிடம் இருக்கிறது.. இப்போது அவளால் அதை இங்கே கூற முடியவில்லை.
“சரிம்மா உனக்கு விரும்பமில்லைனா வேண்டாம்.. அதற்காக நீ என்ன பார்க்க வராம இருக்காத” என்று அவர் தலையை நீவிக்கொடுக்க. அப்போதே முடிவுசெய்தான் கிருஷ்ணா.. இனி நீதான் என் பெண்டாட்டி.. என் ஐய்யா, என் வீட்டுக்கு மருமகளா வருவியான்னு கேட்டும் நீ வரமாட்டேன்னு சொல்வியா? நாளைக்கு காலையில நீ என்னோட பொண்டாட்டி.. என் ஐய்யாவோட மருமகள் ஆகப்போற.. என்று தங்கமீனாவை இதழ் வளைத்து ஏளனமாக பார்த்தான். அவன் பார்வையில் சூட்சமத்தை அறியாது போனாள் பெண்ணவள்.
