அத்தியாயம் 03
“பாட்டி..” என தன்னை அணைத்துக் கொண்டிருந்த கைகளை விலக்கிக் தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தவளின் இதயம் ரயில்தடமென தடக் தடக் என்ற சத்தத்துடன் அதிவேகமாக துடித்தது. அவளின் சத்தம் கேட்டு பதறி ஓடி வந்த ஆவுடையம்மாள்,
“என்ன சூர்யா? எதுக்கு இப்படி கத்துன?”
“பா..பா.. யா..யாரோ.. என்னை.. இங்க.. இங்க..” என திக்கித் திணறி கூறியவளின் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கக் கொடுத்தவர் அறையில் விடிவிளக்கை போட்டுவிட்டார். அப்போது சூர்யாவின் அருகில் யாரும் இல்லை.
“நீ ஏதோ கெட்ட கனவு கண்டுருக்கத்தா. இங்கப்பாரு. இங்க யாருமே இல்ல. அதுவுமில்லாம ரிஷி ரூம்குள்ள அவனைத் தவிர யாராலும் வரமுடியாது. அதுவுமில்லாம இப்ப ரிஷிகூட இங்கில்ல. துபாய் போயிருக்கான்.”
“இல்ல பாட்டி. நான் பார்த்தேன். யாரோ.. என் பக்கத்துல படுத்திருந்த மாதிரி இருந்துச்சு. நான் சொல்றதை நம்புங்க பாட்டி. எனக்கென்னவோ இங்க பயமாயிருக்கு. நான் உங்கக்கூடவே படுத்துக்குறேனே. ப்ளீஸ்..”
“உன்னை என்கூட படுக்க வைச்சுக்கலாம். ஆனா உன்னோட மாமா அடிக்கடி அங்க வந்து போவான். அவன் கண்ணுல நீ பட்டேனா அவ்வளவு தான். அதுக்கு தான் ரிஷி ரூம்லயே உன்னை தங்க வைச்சேன். நாளைக்கு காலைல நம்ம கம்பெனில உனக்கு வேலை சொல்லிருக்கேன். போய் பாரு.”
“அங்க மட்டும் மாமா என்னை பார்த்தா ஒன்னும் சொல்லமாட்டாரா?”
“சொல்லுவாந்தான். ஆனா அதை நான் பார்த்துக்குறேன். இப்ப நீயும் தூங்கு. என்னையும் தூங்க விடு. ஓல்ட் பாடி டி. மாத்திரை வேற போட்ருக்கேன். இப்படி அடிக்கடி கத்தி என்னைய எழுப்பி விட்டுடாத. என் கண்ணுல. ராசாத்தில. தூங்குத்தா.” என தன் கையில் இருந்த திருநீற்றை எடுத்து அவளது நெற்றியில் பூசினார்.
“எப்பா.. பதினெட்டாம் படி கருப்பா.. என் பேத்திக்கூடவே இருந்து அவளை காப்பாத்துப்பா.”
“பாட்டி.. என்னப் பண்ணுறீங்க?”
“ஸ்ஸூ.. இந்த திருநீற்றை அழிச்சுறாத. கருப்பே உனக்கு காவல் இருப்பான்.” என கூறிவிட்டு வெளியே சென்றார். அவர் சென்றதும் அந்த அறையின் மூலை முடுக்கெல்லாம் தேடினாள். யாரும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை.
‘இல்லையே. சம் திங் இஸ் ராங்.’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், தன் இதழ்களை தடவிப் பார்த்தாள். அதில் அவள் அனுபவித்த இதழ் முத்தத்தின் தடமிருப்பது போல் தோன்ற, தலையை உலுக்கி கொண்டு படுத்துறங்கினாள். அதிகாலையில் எழுந்ததும் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்குள் சென்று குளித்து விட்டு வெறும் டவலை மட்டும் சுற்றிக் கொண்டு வெளியே வந்தவள், முன்னே ரிஷி ஆரிகேத் உருவம் தோன்ற, தன் பின்னந்தலையில் தானே தன் கையால் தட்டிக் கொண்டாள்.
“ச்சே.. நேத்து ராத்திரில இருந்து இதே மாதிரி வந்து ஏன் கோபால் என்னை மிரட்டுறீங்க? உங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?” என சரோஜா தேவி போல் கூறியவள், ஆளுயர கண்ணாடியின் முன் சென்று டவலின் இரு முனைகளையும் தனது இரு கைகளால் பிடித்துக் கொண்டு தன் முன் அழகை பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு பின்னால் இருந்த ரிஷி ஆரிகேத்தின் உருவமும் உறைந்து போய் அப்படியே நின்றிருந்தது. நிழல் பிம்பம் இவ்வளவு நேரமாகவா இருக்கும் என சந்தேகம் கொண்டு சரியாக டவலால் தன்னை மூடியவள், அந்த உருவத்தின் அருகில் சென்றாள். அதன் முகத்தை தொட்டுப் பார்க்க, அது ஜில்லென்றிருந்தது. நிழற்பிம்பத்தின் உருவத்தை தொட்டுப் பார்க்க முடியுமா?
“ஓ மை காட்.. இது.. இது.. ரிஷியத்தான்..” என அவளது மூளைக்குள் மணியடிக்க, தன் வாயைத் திறந்து ஆவென கத்துவதற்குள் ரிஷி ஆரிகேத், “அப்பத்தா..” என கத்தியிருந்தான். அவனது குரலைக் கேட்டு மீண்டும் குளியலறைக்குள் சென்று தன்னை மறைத்துக் கொண்டாள் சூர்யா. குளியலறைக்குள் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு ஒன்று புரிந்ததும் தானாக அவளது இதழ்கள், “கடவுளே.. கடவுளே..” என முணுமுணுக்கத் தொடங்கியது. அறைக்கு வெளியே தன் பாட்டியிடமும் தாயிடமும் ரிஷி ஆரிகேத் ஆடும் ருத்ரதாண்டவத்தை உள்ளிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“யாரைக் கேட்டு அவளை வீட்டுக்குள்ள விட்டீங்க? ஆடு பகை குட்டி உறவா? தொழில்ல அவங்க கொடுக்குற டார்ச்சர் உங்களுக்கு தெரியுமா? இது அப்பாக்கு தெரியுமா? யார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்காம எப்படி அவளை உள்ள விட்டீங்க? உங்களுக்கு தான் அறிவில்லன்னா அவளுக்குமா இல்லை. இப்படியா சூடு, சொரணை எதுவுமில்லாம நம்ம வீட்டுக்கு வந்து இருப்பா.”
“எய்யா.. ராசக்குமாரா.. கத்தாதய்யா. இன்னும் ரெண்டு நாளைக்குய்யா. அப்புறோ அவளோட ஸ்நேகிதி வீட்டுக்குப் போயிடுவா. யாரும் இல்லாம இருக்காயா. நம்ம எதிரி சம பலத்தோடு இருக்கும் போது தான் நம்ம பலத்தை அவன்கிட்ட காட்டணும். அவளே ஒரு சோப்புலாங்கி. அவக்கிட்ட போயி சரிக்கு சரி நிக்குதியே.” என ஆவுடையம்மாள் ரிஷி ஆரிகேத்தை சமாதானப்படுத்த முயற்சிக்க,
“ஆமா.. நீ துபாயில் இருக்குறேனும் நீ வர இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னும் உன் அப்பாரு சொன்னாரு. நீ என்னன்னா அங்கப் போன ரெண்டே வாரத்துல திரும்பி வந்துட்ட.” என அலமேலு அம்மா கேட்க,
“ஓஹோ.. அப்போ எப்படா இவன் அந்தப்பக்கம் வெளியப் போவான். நாம இந்தப் பக்கம் இவளை கூட்டிட்டு வந்து வைச்சுக்கலாம்னு நினைச்சுட்டு இருந்துருக்கீங்க. அப்படித்தானே..”
“நான் அப்படி சொல்லல.”
“வேற எப்படிம்மா சொல்ல வாறீங்க?”
“அலமேலு.. நீ செத்த சும்மா இரு. நான் பேசிக்குறேன். நீ வாயா அப்பத்தாக் கூட. அட வாயான்னா..” என ரிஷி ஆரிகேத்தின் கையைப் பிடித்து தன்னோடு இழுத்துச் சென்றார் ஆவுடையம்மாள். அவர்கள் அந்தப் பக்கம் சென்றதும் தன் தலையை மட்டும் வெளியே நீட்டினாள் சூர்யா.
“அப்பாடா.. ஹிட்லரைக் காணோம்.” என முணுமுணுத்து கொண்டே தன் ஆடைகளை அணிந்து கொண்டாள். அங்கே தன் பாட்டியுடன் சென்றவனைக் கண்ட விஜயகுமார்,
“ஹேய் ரிஷி.. என்னடா இவ்வளோ சீக்கிரம் துபாயில் இருந்து வந்துட்ட?” எனக் கேட்க தன் பல்லைக் கடித்தவாறு,
“எஸ் டாட். துபாய் ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆகிடுச்சு. அதான் திரும்ப வந்துட்டேன்.” எனக் கூற அவனை அதிசயமாகப் பார்த்தவாறு நடைப்பயிற்சிக்கு சென்றார். ரிஷியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவர், அவனது கைகளைப் பிடித்து கொண்டு,
“இன்னும் நடந்ததையே எவ்வளவு நாள் நினைச்சுட்டு இருப்ப?”
“அப்போ நம்ம குட்டிமா?! அவ அனுபவிச்ச வேதனை? அதுக்கெல்லாம் இவதானே காரணம்.”
“இங்க பாரு. ரிஷி நம்ம ஊர்ல ஒரு பழமொழி இருக்கு. பகையாளி பகையை உறவாடி கெடுன்னு சொல்லுவாங்க. ஊரே அவங்க குடும்ப ஒற்றுமையைப் பத்தி அப்படி பேசுது. அப்படிப்பட்ட குடும்பத்தோட வாரிசு நம்ம கைல. இதைவிட அவங்களை பழிவாங்க வேறென்ன வேணும்?! நல்லா யோசிச்சுப் பாரு. அதென்ன.. ஹ ஆஆ.. ஃபர்ஃயூம் பிஸ்னஸ்ல தானே அவங்க கொடிகட்டி பறக்குறானுவ. இவளை உன்கூடவே வைச்சுக்கோ. இவ மூலமா அவங்களுக்கு திருப்பிக் கொடு. சமயம் கிடைக்கும் போது இவளுக்கும் சரியான பாடம் சொல்லிக் கொடு. என்னலே அப்பத்தா சொல்லுறது விளங்குதா?”
“நீ சொல்றதெல்லாம் சரி தான் அப்பத்தா. ஆனா இவ நமக்கே ரிவிட் அடிச்சுட்டானா?”
“அப்படினா?”
“மக்கு அப்பத்தா. இவ நமக்கே குழி தோண்டிட்டானா என்னப் பண்றது?”
“ஆமாலே. இப்படி ஒன்னு இருக்குதோ? நான் இதை யோசிக்கவே இல்லையேல. அப்ப ஒன்னு பண்ணு. அவளை நீ கல்யாணம் கட்டிக்க. அப்புறம் எப்படி உன்னைப் பத்தி வெளில சொல்லுவா?”
“ஏய்..அப்பத்தா.. உண்மைய சொல்லு நீ அவளைப் பழிவாங்க ஐடியா கொடுக்குறியா? இல்லை அவ என்னை பழிவாங்க ஐடியா கொடுக்குறியா? உனக்கு என் மேல ஏதாவது பகை இருந்துச்சுன்னா சொல்லு பேசி தீர்த்துக்கலாம். இப்படி என்னோட வாழ்க்கைல விளையாடாத.”
“நான் விளையாட உன்னோட வாழ்க்கை என்ன ஃபுட்பாலாலே? இந்த அப்பத்தாவ நம்புலே. இந்த கல்யாணமே நீ அவளை பழிவாங்கத்தே. இதை சாக்கா வைச்சுகிட்டு அந்த ஆனந்தனை நானும் பழிவாங்குவேன்லே. என்ன சொல்லுத?”
“ம்ம்ம்.. முதல்ல அவ என்ன சொல்லுதான்னு கேளுங்க.”
“அப்ப உனக்கு சம்மதமா?”
“அப்படின்னு நான் சொன்னேனா? அவகிட்ட கேளுங்கன்னுதே சொன்னேன். வெட்ற ஆட்டுகிட்டக் கூட மஞ்சத் தண்ணிய தெளிச்சு வெட்டுறதுக்கு ஃபர்மிஷன் கேட்டுட்டு தானே வெட்டுறோம். அது மாதிரி தான் இதுவும்.”
“அப்ப சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணிக்கோடா.”
“ம்ம்.. பார்க்கலாம்.” எனக் கூறியவன், அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக தன் அறைக்குள் சென்றான். அங்கே தனது பெட்டிப் படுக்கையுடன் நின்றிருந்தாள் சூர்யா.
“எங்கப் போற?”
“தெரியல.”
“இங்கிருந்து வெளியேப் போயி உனக்கெதும் ஆச்சுன்னா எங்களைத் தான் சொல்லுவாங்க. அதனால அப்பத்தா சொன்ன மாதிரி உன் ப்ரெண்ட்.. ம்ம்.. யார் அவ?”
“அஞ்சலி.”
“ஹ.. அதே எலி தான். அவ வீட்டுலயே தங்கிக்கோ.”
“அப்புறம் ஒரு சின்ன ஹேல்ப்.”
“என்ன?”
“எனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு பண்ணிக்கொடுக்குறீங்களா? ப்ளீஸ்..”
“ம்ம்.. ஓகே.. என்னை ஆஃபிஸ்ல வந்து பாரு.”
“எப்போ?”
“நாளைக்கு காலைல வா.”
“தாங்க்ஸ் அத்தான்.”
“இந்த உறவுமுறையெல்லாம் வேண்டாம்.”
“அப்போ உங்களை நான் எப்படி கூப்பிடுறது? ம்ம்.. பாஸ்.. பாஸ்.. ஓகேவா?”
“ம்ம்ம்.. ஓகே ஆஃபிஸ்ல பார்க்கலாம்.” என அறையை விட்டு வெளியேறச் சென்றவனின் கையைப் பிடித்து தடுத்தவள்,
“நீங்க நிஜமாவே இன்னைக்கு காலைல தான் வந்தீங்களா?”
“ஏன் கேட்குற?”
“இல்ல. சும்மாதான் கேட்டேன்.” எனக் கூறியவளைத் தாண்டிச் செல்லும் போது தன் உதட்டை நீவியபடி வெளியே சென்றான் ரிஷி ஆரிகேத்.
*****************************************
“என்னடி சொல்ற? உன் வீட்டுல இவ்வளவு நடந்துருக்கா?”
“அதையேன்டி கேட்குற? நாட்டாமை படத்துல வருமே இவன்கூட யாரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாதுன்னு. அதே மாதிரி ஒரு வருஷத்துக்கு எங்கூட யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது, பார்க்கக்கூடாதுன்னு நாட்டாமை தீர்ப்பெழுதிட்டாருடி.”
“பாவந்தாண்டி நீ. எப்படி அவங்கக்கூட பேசாம பார்க்காம இருக்கப் போறியோ?!”
“பார்த்துக்கலாம் டி. அப்புறம் உன் வீட்டுல தங்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் டி.”
“தாங்க்ஸ் சொன்ன கொன்னுடுவேன். இந்த வீட்டுல இதுவரைக்கும் நான் மட்டும் தான் இருக்கேன். இப்போ ஷேரிங்கிற்கு ஆள் கிடைச்சுடுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. உன் பாட்டி மட்டும் சொல்லலைனா நீ என்னைப் பார்க்க வந்துருக்க மாட்டேல. நல்ல ப்ரெண்ட் டி நீ.”
“சாரி டி. நம்ம பைனல் இயர் ப்ராஜெக்ட் சப்மிஷன் முடிஞ்சுடுச்சு. இனி எக்ஸாம்கு மட்டும் காலேஜ் போனா போதும். அதுனால அத்தானோட கம்பெனில வேலைக்கு போறேன் டி. நாளைக்கு காலைல வர சொல்லிருக்காரு.”
“அதெல்லாம் ஓகே டி. உன் பெரியப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரே டி.”
“நல்லா கோபப்படட்டும். என்னைய குடும்பத்துல இருந்து பிரிச்சாருல. நல்லா நொந்து நூடூல்ஸ் ஆகட்டும்.” எனக் கூறியவள், அடுத்த நாள் காலையில் ரிஷி ஆரிகேத்தின் செல்லா ஆர்கானிக் ப்ரொடெக்ஸ் கம்பெனிக்கு சென்றாள். அங்கே ரிஷி ஆரிகேத்தின் பிஏ ஷ்யாமை சந்தித்தாள். ரிஷி அவளுக்கென உருவாக்கிய வேலையைப் பற்றி அவளிடம் கூறினான். பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களை அவளது அறையில் வைத்து எதனுடன் எதை சேர்த்தால் நன்றாக இருக்குமென கண்டுபிடித்துக் கூற வேண்டும். ஷ்யாமிடம் தகவல்களை பெற்றுக் கொண்டு, தனது அறைக்குள் வந்தவள், அங்கிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தாள். அதில் அமர்ந்து அதனை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள். இதனை தனது சிசிடிவி கேமராவின் மூலம் பார்த்த ரிஷி ஆரிகேத்,
“இவளை..” என பல்லைக் கடித்தவாறு அவளது அறைக்குள் நுழைந்தான். அப்போது வேகமாக சுற்றிக் கொண்டிருந்தவள், இவனது எதிர்பாராத வரவினால் சமநிலை தடுமாறி கீழே விழுகயிருந்தாள். அவளை கீழே விழுகாமல் தடுப்பதற்காக தன்னை நோக்கி இழுத்தான் ரிஷி ஆரிகேத். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதியவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்தவனும் சமநிலை தடுமாறினான். இருவரும் அருகில் இருந்த சோஃபாவில் விழும் போ
து சரியாக அவளது இதழ்களுடன் அவனது இதழ்கள் மோதிக் கொண்டன. கனவில் நடப்பது நிஜத்தில் நடப்பது சாத்தியமா? ஆனால் இங்கே நடக்கின்றதே!

я тоже несколько раз брал ,всё прошло чётко ,качество радует,доставлено всё в лучшем виде,оператор молочага всегда обьяснит всё что к чему,вообщем магазин для меня лучший ,самый надёжный,УСПЕХОВ И ПРОЦВЕТАНИЯ ВАШЕЙ КОМАНДЕ!!!!!! Купить кокаин, мефедрон, бошки, гашиш, марихуану, шишки Но в свое время с 250м было время за месяц перед запретом:и что теперь делать с заказом мне его оплачивать через терминал!? или..
Круиз из Дубая оказался отличным способом увидеть сразу несколько стран, не меняя отель и наслаждаясь комфортом https://kruizy-po-persidskomu-zalivu.ru/
Оплатил подождал очередь неделю так как завал у магазина теперь жду посыль респект ребята работаете на высоте Купить кокаин, мефедрон, бошки, гашиш, марихуану, шишки ну если для кавото это естественно, для меня нет…кавото и палынь прет..Всё здорово спасибо Вам
Really enjoyed this article you may like it too http://8.130.212.131:9001/pearloiw903018/pearl2003/-/issues/1
Try your luck and enjoy the exciting game on[url=https://swiminator.com/]Swiminator Slot[/url], which will give you a sea of ??pleasure and bonuses.
The game also includes a gamble feature where players can risk winnings for a bigger reward.
Informative article, just what I needed.
May I simply say what a relief to find somebody that actually understands what
they’re talking about on the internet. You certainly understand how to bring an issue to light and make
it important. A lot more people have to check this out and
understand this side of your story. I was surprised that you’re not more popular given that you certainly have the
gift.
Very great post. I simply stumbled upon your weblog and
wished to say that I’ve really enjoyed browsing your weblog posts.
After all I will be subscribing for your
rss feed and I’m hoping you write once more very soon!
Excellent, what a weblog it is! This website presents useful facts to us, keep
it up.
This post is invaluable. When can I find out more?