ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

18 மோகவிழியால் எனை தைக்காதே
 
கிருஷ்ணா வந்ததும் அவன் பார்வை தங்கமீனாவின் மீது படிந்தது.. அடுத்த நொடியே அருளை பார்த்தவாறு “என்ன அருள் இப்ப எப்படி இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே அருள் பக்கம் செல்ல.. அருள் பக்கம் நின்றிருந்த தங்கமீனாவுக்கு உதறல் எடுத்தது.. அருளின் கையிலிருந்து அவளது கையை தானாக உருவிக்கொண்டாள்.. அருளும், கிருஷ்ணா வந்துவிட்டான் அதனால்தான் தங்கமீனா  சங்கடப்பட்டு எடுத்துக்கொண்டாளென்று எண்ணிக்கொண்டான்.
 
அருளை செக் பண்ணிவிட்டு “ம்ம் எல்லாம் நார்மல் அருள்.. இன்னிக்கு உங்கள வார்டுக்கு மாத்திடுவேன் இன்னும் மூணுநாள் ஹாஸ்பிட்டல இருந்தா போதும்.. இன்னும் கொஞ்சம் லேப்லட் எழுதிக்கொடுக்குறேன்” என்று மாத்திரைகளை எழுதிக்கொண்டே “தங்கமீனா  வெளிய நிக்கிறவங்கள உள்ள வரச்சொல்லுங்க” என்று கூற.. அவளோ என்ன நடக்கிறது என்று அறியாமல் நின்றிருந்தாள்..
 
தங்கமீனாவின் அமைதியைக் கண்டு அவளை ஒரு பார்வை பார்த்து “ஹலோ தங்கமீனா என்ன கனவு காண்கறீங்களா” என்று அவள் கைகளை ஸ்தெடஸ் கோப் கொண்டு இடிக்க.. 
 
“ஹாங் சார் சொல்லுங்க” 
 
“சரியா போச்சு போங்க.. இப்படித்தான் கவனமில்லாம இருக்கறதா.. வெளிய இருக்கறவங்கள உள்ள வரச்சொல்லுங்க” என்றதும்..
 
“அச்சோ அம்மாகிட்ட மாட்டி விடறயே நெட்டக்கொக்கு” என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தவள்.. 
 
“அம்மா டாக்டர் உன்னை உள்ள வரச்சொல்றாங்க” கிருஷ்ணா ஐ.சி.யுவினுள் உள்ளே போகும் போது அவனை பார்த்து முறைத்தவர் இப்போ கிருஷ்ணா கூப்பிட்டதும் “ம்க்கும்.. வரேன் போ” என்று உள்ளே வந்தவர் அமைதியாக நின்றார்.
 
“உங்க தம்பிக்கு மாத்திரை எழுதிக்கொடுத்திருக்கேன் வாங்கிட்டு வந்து கொடுத்திருங்க” என்று கலைவாணியிடம் மருந்துச்சீட்டை நீட்ட.. அவரோ கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டு வெடுக்கென சீட்டை வாங்கினார்.
 
உங்க பொண்ணுக்கு கொழுப்பு கொஞ்சம் இருக்கு.. அது எங்கிருந்து வந்துச்சுன்னு இப்பதான் தெரியுது.. என்று இதழ் வளைத்துச் சிரித்து.. கதவு வரை சென்றவன்.. 
 
“ஹா தங்கமீனா கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு என்னோட ரூமுக்கு கொஞ்சம் வந்துடுங்க” என்று கதவு திறந்து அவனது கேபினுக்கு சென்று விட்டான்.. 
 
அவன் கண்கள் பேசிய பாஷைகள் தங்கமீனாவுக்கு மட்டும்தான் புரிந்தது.. கலைவாணி, மகளின் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் “அருள் நான் மாத்திரை வாங்கிட்டு வந்துடறேன்” என அவரும் வெளியே சென்று விட.. இப்போது அருளிற்கு, தங்கமீனாவிடம் தனியே பேச வாய்ப்பு கிடைத்தது.
 
“எனக்கு அடிபடலனா இன்னேரம் நாம கல்யாண வேலைகளை பார்த்திட்டிருப்போம்.. கல்யாணத்த இன்னும் மூணு மாசம் கழிச்சு வச்சிக்கலாம்” என்று கூற.. தங்கமீனாவின் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனது.. மாமா என்னை மன்னிச்சுடு மாமா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. என்ற உண்மையை சொல்ல.. அவளது உதடுகள் துடித்தது.. அவள் மனம் ஊமையாய் அழுதுகொண்டிருந்தது.. அவனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.. 
 
“என்ன புள்ள எதுவும் பேசல..உனக்கு கல்யாண தேதி தள்ளிபோனதில வருத்தமா இருக்கா” என்று அவளிடம் பேசிக்கொண்டே போக.. அவளால் அங்கே நிற்ககூடமுடியவில்லை.. கடவுளே என்ன காப்பாத்துக்களேன் என்று கண்ணீர் வந்து விட.. திரும்பி நின்று கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
 
பரிமளாவுக்கு உடம்பு சரியில்லாமல் போக அவரை ஐ.சி.யுவிற்கு மாற்ற வேண்டும்.. பணம் கட்டுங்க என்றதும் ஈஸ்வரி அருளிடம்தான் சென்றாள்.. ஆனால் ஐ.சி.யுவின் கதவை திறக்கும் முன் இருவரும் பேசுவது அவள் காதில் கேட்க.. இப்போ உள்ள போனால் அவர்களுக்கு சங்கடம் என்று எண்ணியவள் அப்படியே அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.. அதுவும் அருளின் திருமண பேச்சு அடிபட.. அவள் மனதில் சொல்ல முடியாத நெஞ்சை போட்டு பிசைவது போல உணர்வு ஏற்பட்டது.. ஏதோ ஒன்று தன்னிடமிருந்து விலகுவது போல இருந்தது.. பழனி அங்கே வர.. “அக்கா ஏன் வெளியே உட்கார்ந்திருக்கீங்க”
 
“அம்மாவ ஐ.சி.யுவில சேர்க்க சொல்லியிருக்காங்க.. பணம் தேவைப்படுது அதான் அருள் சார்கிட்ட கேட்கலாம்னு வந்தேன்.. உள்ள யாரோ பேசிட்டிருக்காங்க” என்றதும்.. 
 
“அக்கா இருங்க நான் உள்ள போய் அருள் அண்ணாகிட்ட பேசிட்டு வரேன்” என்று உள்ளே சென்ற பழனி அட நம்ம தங்கமீனா.. என்று அருள் பக்கம் சென்றவன் “அண்ணே நம்ம ஈஸ்வரி அக்காவோட அம்மாக்கு ரொம்ப உடம்பு முடியலபோல பணம் தேவைபடுதுன்னு உங்கக்கிட்ட கேட்க ஈஸ்வரி அக்கா வெளியே உட்கார்ந்திருக்காங்க” 
 
“பழனி அவங்களுக்கு தேவையான பணத்தை ஹாஸ்பிட்டலுக்கு கட்டிடு.. முதல அவங்க அம்மா பக்கத்துலயே இருக்கச்சொல்லிடு”
 
“சரிண்ணா” என்றவன் வெளியே வந்து ஈஸ்வரியிடம் “அக்கா நீங்க பயப்படாதீங்க.. அருள் அண்ணா எவ்ளோ பணம் வாங்கிக்க சொல்லி இருக்காரு.. பணம் நான் கட்டிடறேன்.. நீங்க அம்மா பக்கத்துல போய் இருங்க” என்றதும் அருளை பார்த்து நன்றி சொல்லணும் என்று நினைக்க.. அதற்குள் நர்ஸ் ஈஸ்வரியை கூப்பிட்டு இந்த மருந்து கொஞ்சம் அவசரமா வேணும் வாங்கிட்டு வாங்க.. என்று கூறிவிட. 
 
“அம்மா இப்ப எப்படியிருக்காங்க சிஸ்டர்”
 
“டாக்டர்கிட்ட கேட்டுக்கோங்க” என்று நர்ஸ் சென்று விட..
 
ஈஸ்வரிக்கு ஆறுதல் கூற கூட யாரும்மில்லாமல் நிற்கதியாய் நின்றாள்.
 
பழனி சென்றதும்.. “ஈஸ்வரி யாரு மாமா” என்று ஈஸ்வரியை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் கேட்க.
 
“அ..அவங்க  நம்ம டிராவல்ஸ்ல கார் ஓட்டுறாங்கடா.. ஏன் நின்னுட்டிருக்க உட்காரு” என்று நாற்காலியை காட்ட… கிருஷ்ணா அவன் அறைக்கு வரச்சொல்லி போனில் மேசேஜ் போட.. அவள் போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டாள்.
 
ஓ சுவிட்ச் ஆப் பண்ணுறையா.. என்கிட்ட உன்னோட பாட்சா பலிக்காதுடி.. என்று அறைக்குச்சென்று இப்போ காபி குடிச்சா நல்லாயிருக்கும்.. அதுவும் பொண்டாட்டி கையால குடிக்கணும் என்று போனை எடுத்து தங்கமீனாவ என்னோட அறைக்கு வரச்சொல்லுங்க.. என்று போனை அணைத்துவிட்டான்… 
 
இப்ப இங்க வந்து தான் ஆகணும் கோல்ட்.. என்று புத்தகத்தை எடுத்து அதில் நுழைந்துகொண்டான்.
 
“நர்ஸ் அருளின் அறைக்குள் சென்று சார் இன்னிக்கு உங்கள நார்மல் வார்டுக்கு மாத்துறோம்” என்று கூறிவிட்டு 
 
“தங்கமீனா உங்கள எம்.டி கிருஷ்ணா டாக்டர் வரச்சொல்லியிருக்கார்.. சீக்கிரம் போங்க.. எமர்ஜன்சி கேஸ் போல என்று சொல்லிவிட்டு அருளை வார்டுக்கு மாற்றவேண்டிய வேலைகளை பார்த்தார் நர்ஸ்.
 
“மாமா நான் கிளம்புறேன்.. ஈவினிங் வந்து பார்க்குறேன்” என்று வெளியே வந்தவளுக்கு கிருஷ்ணாவின் வேலையை எண்ணி மூக்குக்கு மேல் கோவம் வந்தது.. வேகமாக வந்தவள் ஈஸ்வரியின் மேல் மோதிட.. மருந்து பாட்டிலை இறுகப்பற்றிக்கொண்டாள் ஈஸ்வரி.
 
“அச்சோ சாரிங்க”
 
“பரவாலங்க.. நீங்க அருள் சாரோட மாமா பொண்ணுங்களா” தங்கமீனாவின் வாய்சை வைத்து கண்டுபிடித்து கேட்க.
 
“ஆமாங்க.. நான் அருள் மாமாவோட அக்கா பொண்ணுதான்”
 
“நான் ஈஸ்வரி உங்க மாமா ட்ராவல்ஸ் கார் ஓட்டுறேன்”
 
“ஓ.. உங்க அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லையா?” 
 
“ஆமாங்க.. அம்மாவுக்கு நுரையீரல் பாதிப்பு அவங்க உயிர் நாள் கணக்குத்தானு  டாக்டர் சொல்லியிருக்கா” என அவள் கண்களில் கண்ணீர் உருண்ட வர.
 
“அப்படி சொல்லாதீங்க உங்கம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது” என்று அவளுக்கு ஆறுதல் கூறி என்னோட போன் நெம்பர் நோட் பண்ணிக்கோங்க.. எதுவாயிருந்தாலும் என்கிட்ட சேர் பண்ணுங்க.. எந்த நேரத்துலயும் என்னை கூப்பிடுங்க.. நான் இங்க தான் நர்ஸா ஒர்க் பண்ணுறேன்.. இப்ப சீப் டாக்டர் கூப்பிட்டாங்க அவசரமா போகணும்.. நான் ஈவ்னிங் வந்து அம்மாவ பார்க்குறேன்” என்று சென்றுவிட..
 
“அருள் சார்க்கு ஏத்த பொண்ணுதான்” என்று மருந்தை பரிமளா இருந்த ஐ.சி.யுவிற்கு கொண்டு சென்றாள்.. அவருக்கு மூச்சு விட சிரமம்பட ஆக்ஸிஜன் வைத்துவிட்டனர்.
 
கிருஷ்ணாவின் அறைக்குள் போக வழக்கம் போல் கதவை ரிமோட்டால் லாக் செய்து விட்டான்.. கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மள வச்சு செய்வாரு.. இப்ப கேட்க வேணாம் என்று பயந்தபடி சென்றாள்.
 
இன்று அனைத்து கேஸ்களையும் ரமேஷ் டாக்டரை பார்க்கச்சொல்லயிருந்தான்.. 
 
அவனது அறையில் சோபாவில் கால் மேல் கால் போட்டு புத்தகத்தை கையில் வைத்து அமர்ந்திருந்தான்.. “ம்க்கும் என்று தொண்டையை செரும.. “என்ன உங்க  மாமாக்கூட கொஞ்சி பேசிட்டியா.. என்றதும் அவளுக்கு சுர்ரென்று கோவம் வந்தது.. 
 
“இப்படி கேட்க உங்களுக்கு எப்படி மனசு வருது.. கொஞ்சம் கூட மனச்சாட்சியில்ல.. ச்சே” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.
 
எழுந்து நின்றவன் புத்தகத்தை அலமாரியில் வைத்துவிட்டு “ஏய் கூல் கூல் நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்” என்று அவளை இழுத்து தன் பக்கம் உட்கார வைத்தான்.
 
“எதுல விளையாடனுமு ஒரு வரைமுறை இருக்கு.. விடுங்க நான் போகணும்”
 
“எங்க போற”
 
“எங்கயோ போறேன்.. என் குடும்பத்துக்கிட்டயிருந்துதான் என்னை பிரிச்சிட்டிங்களே.. வேற எங்க போக முடியும்.. போகத்தான் விட்டிருவீங்களா?” என்று மூக்கு விடைக்க கோபம் கொண்டு பேச.
 
“கோல்ட் எதுக்கு இப்ப இவ்ளோ கோபம்”
 
“எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கணும்” என அவனிடமிருந்து தப்பிக்க தூக்கத்தை சாக்காக கூற.
 
“ஆஆ.. எனக்கும் தான் டிரைவ் பண்ணி ரொம்ப டயர்டா இருக்கு.. வா தூங்கலாம்” என்று அவளை அப்படியே தூங்கிக்கொண்டான்.. 
 
கட்டிலில் அவளைப் படுக்க வைத்து தங்கமீனாவை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்..
 
அவனது அணைப்பு அவளுக்கு மூச்சு முட்ட.
 
“அச்சோ எனக்கு பிரியா படுக்கணும்.. கொஞ்சம் தள்ளிப்படுங்க”
 
“ஓ.. பிரியா படுக்கணுமா.. எனக்கு ரொம்ப சௌகரியம் கோல்ட் சீக்கிரம் டிரஸ்ட் கழட்டு” என்றானே பார்க்கலாம்.
 
“கிருஷ்ணாவின் மண்டையில் நாலு போடணும்” என்று அவளுக்குத் தோன்றியது..
 
சாருக்கு ரொம்ப ஆசைதான் என மனதில் நினைத்தவள்  “அச்சோ நான் உங்களை தள்ளிப்படுக்கச் சொன்னேன்”
 
“ஏய் புதுசா கல்யாணம் ஆனவங்க தள்ளிப்படுப்பாங்களா” என்றவன் அவளை மேலும் இறுக்கி காற்று புகா வண்ணம் அணைத்துக்கொண்டான். அவளது சர்ட் பட்டன் கழண்டு விட அவளது அழகுகள், அவனது மார்பில் பதிய அவனின் லீலைகளை ஆரம்பித்தான்.. ஆனால் முழுதாக ஆளவில்லை.. குட்டி குட்டி முத்தங்கள் கொடுத்தும் வாங்கியும் கொண்டான்.. அவள் சிலநொடிகளில் உறங்கிவிட.. அப்படியே சில நொடிகள் படுத்திருந்தவன் போன் அடிக்க அவளின் தூக்கம் களையாதவாறு தலையணையில் படுக்க வைத்து விட்டு சொல்லுங்க என்றான்.
 
“கிருஷ்ணா.. நான் சாம்ராட் பேசுறேன் ஒரு எமர்சென்ஸி கேஸ் வரமுடியுமா?” 
 
“இதோ பைவ் மினிட்ஸ் சார் வந்துடறேன்” என்று போனை வைத்துவிட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு ஆப்ரேசன் தியேட்டர் சென்றான்.
 
அருள் டிஸ்ஸார்ஜ் ஆகும் நாள் வந்தது.. தங்கமீனா அந்த இருநாட்களில் அவனிடம் தள்ளி நின்றுதான் பேசினாள்.. அருளிற்கு சந்தேகம் வர ஆரம்பம் ஆகியது.. கிருஷ்ணா அவனை செக் பண்ண வரும்போதெல்லாம் தங்கமீனாவை பார்க்கும் பார்வையை வைத்தே இருவர் மீது அருளிற்கு சந்தேகத்தை கிளம்பியது.
 
அவனது உடல்நிலை பூர்ண குணமானதும்.. அன்று அருள் வீட்டுக்கு போகலாம்.. என்று கூறியிருந்தான் கிருஷ்ணா. இன்று மாமாகிட்ட எப்படியும் உண்மையை சொல்லிடணும்.. என்னால இதுக்கு மேல உண்மையை சொல்லாம இருந்தா என் மண்டை வெடிச்சிடும்.. என்று எண்ணிய தங்கமீனா அருள் இருந்த அறைக்குள் சென்றாள்.
 
“வாடா” என்று நிதானமாக அவளை தன் பக்கம் உட்காரச்சொன்னான்.. 
 
“மாமா, நான் உன்கிட்டப் பேசணும்” அவள் குரல் நடுங்கி வந்தது
 
“பேசுடா” என்றான் அவன் மனதை கல்லாக்கிக்கொண்டு.. 
 
ஏற்கனவே அருளிற்கு உண்மை தெரிந்துவிட்டது.
 
“மாமா நான் உன்னை ஏமாத்திட்டேன்.. என்னை மன்னிச்சுடு மாமா” என்று அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்.
 

2 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Ищете комфортный трансфер из Новосибирска или аэропорта Толмачево в Шерегеш? Посетите https://taximinivan54.ru/sheregesh.html со мной проще и быстрее доехать на трансфер такси межгород Новосибирск Шерегеш. В минивэн поместится вся ваша компания и горнолыжное снаряжение. Приехали, или прилетели и сразу поехали кататься! Цена фиксированная, при заказе. Время поездки от 7 часов. Пассажиров не набираю, едет только ваша группа. Отслеживаю ваш рейс, вожу аккуратно, дорогу знаю наизусть.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top