ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

24 மோகவிழியால் எனை தைக்காதே
 
ஊர் மக்கள் அனைவரும் தனது வீட்டின் முன் நிற்பதைக் கண்டு பிரச்சனை பெரிதுதான் என்று எண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினான்… நடுநாயகமாக குருமூர்த்தி அமர்ந்திருந்தார்.. 
 
தங்கமீனாவோ கூட்டத்தைக் கண்டு என்னவாயிருக்கும் இத்தனை பேர் நம்ம வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க.. என்ற அச்சத்துடன் காரை விட்டு இறங்கினாள்.
 
காரிலிருந்து பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தாள் தங்கமீனா.. வீட்டில் வேலைசெய்யும் ஆட்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல.
 
குருமூர்த்தியின் பக்கத்தில் போட்டிருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து “என்னய்யா பிரச்சனை ஊர்காரங்க வந்திருக்காங்க” என்று முகம் இறுக்கத்துடன் கேட்க.
 
“எல்லாம் அந்த நாசக்காரன் நாகாதான் தம்பி இப்போ மறுபடியும் நம்மகிட்ட பிரச்சனை பண்ணுறான்”
 
“என்னவாம் அவனுக்கு அவன் பல்லை உடைத்தும் அவனுக்கு திமிரு அடங்கலையா” என்று கண்கள் சிவந்து கையை முறுக்கினான்.
 
கணவனின் கோவத்தை பார்த்திராத தங்கமீனா.. கிருஷ்ணாவின் புதிய அவதாரம் கண்டு விக்கித்து நின்றாள்.
 
“ஐய்யா நீங்க என்ன சொல்றீங்க” என்று அவனது குரல் அசுர வேகத்தில் வந்தது.
 
“இனி நீ பார்த்து என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன்.. ஆனா நம்ம வீட்டு உசுரு ரெண்டு அங்க இருக்குது தம்பி.. பார்த்து பண்ணு.. என்று அவர் கண்ணில் சிறு துளி கண்ணீர் வர.. கிருஷ்ணாவிற்கு தெரியகூடாதென தோளில் கிடந்த துண்டை எடுத்து முகம் துடைப்பது போல துடைத்துக்கொண்டார் குருமூர்த்தி.. 
 
தந்தை கண்ணீர் விடுவது கிருஷ்ணாவின் கண்ணுக்கு தப்புமா.. ஐய்யா இனி உங்க கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வர விடமாட்டேன்.. என்று டேய் நாகா நான் உன்ன சும்மா விடப்போறதில்லைடா.. என்னோட குடும்பத்தைப் பிரிச்சு நீ ஜெயிச்சுட்டேன்னு நினைக்காத.. எப்பவும் இந்த கிருஷ்ணாதாண்டா ஜெயிப்பேன் என்று மனதில் கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க பெரும்பாடு பட்டான் கிருஷ்ணா.
 
“ஐய்யா நம்ம ஊர்ல வர ஞாயித்துக்கிழமை மீன் குளம் ஏலம் விடுறாங்க.. இந்த முறையும் நாம தான் ஏலம் எடுக்கணும்.. ஆனா அந்த நாகா.. இந்த முறை நீங்க இல்லைன்னு தெரிஞ்சு ஏலம் எடுக்க வரான்னு நமக்கு செய்தி வந்திருக்கு”
 
“வரட்டும் ..அவன் மூக்கை உடைக்கிறேன்” என்று கர்ஜித்தான் கிருஷ்ணா..
 
கிருஷ்ணாவின் வேகம் கண்டு அச்சப்பட்ட குருமூர்த்தி “தம்பி கொஞ்சம் அவசரப்படாத. பொறுமையா இருப்பா” என்றார் குருமூர்த்தி.
 
“ஐய்யா நீங்க பொறுமையா இருந்ததுனாலத்தான் நான் சின்னபையனா இருக்கும்போது உங்கள ஏமாத்தி நம்ம கண்ணையே வைத்து உங்கள கட்டம் கட்டி ஏமாத்தினாங்க.. இனிமே நான் பொறுமையா இருக்கமாட்டேன்” என்று எழுந்தவன்.. 
 
தங்கமீனாவை பார்க்க… அவளோ பயத்தில் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தாள்.
“தங்கமீனா.. நீ வீட்டுக்குள்ள போ நான் கொஞ்சநேரம் கழிச்சு வரேன்” என்றவன் காரை நோக்கிப் போக.
 
“தம்பி அவசரப்பட்டு எதையும் செய்துட்டு வராதே” என்று குருமூர்த்தியின் கவலை குரல் அவனை தடுத்து நிறுத்த.
 
“எல்லாம் எனக்கு எப்படி நடந்துக்கணும்னு தெரியும் ஐய்யா” என்று தலையசைத்தவன் காருக்குள் ஏறப் போக..
 
“தம்பி நாங்களும் வரோம்” என்று ஊர்காரர்கள் கூற..
 
“யாரும் வேண்டாம் நானே பார்த்துக்குறேன்” என்று கை காப்பை ஏற்றிவிட்டு காரை எடுத்துக்கொண்டு நாகாவின் வீட்டுக்கு கிளம்பினான்.
 
அங்கோ சாவித்ரி பூஜை அறையில் நின்று தனது குலதெய்வம் அம்மனிடம் அம்மா என்னோட பையனுக்கு நீதான் துணையிருக்கணும்.. எங்கண்ணா அவன எதுவும் செய்திடக் கூடாது.. நான் செய்த தப்புக்கு எனக்கு என்ன தண்டனை வேணா கொடு நான் தாங்கிப்பேன்.. என்று கண்ணீருடன் அம்மனை வேண்டிக்கொண்டிருந்தாள்.. 
 
“என்னம்மா தங்கச்சி பெரிய வேண்டுதல்” போல என்று பூஜை அறையின் முன்பு நின்றார் நாகா.. கண்ணை துடைத்துக்கொண்டு “அண்ணா என் பையனை எதுவும் செய்துடாதீங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள்.. கிருஷ்ணாவின் பலத்தை பற்றி சாவித்ரிக்கு தெரியவில்லை.. அவனால் தான் நாகாவிற்கு ஆபத்து ஏற்படும் என்பதை சாவித்ரி அறிந்திருக்கவில்லை.
 
“உன் பையன் டாக்டரு ரொம்ப துள்ளுறான்.. போன முறை ஏலத்துல ஏமாந்து விட்டேன்.. இந்த முறை ஏமாற மாட்டான் இந்த நாகா” என்று அவரது கடா மீசையை முறுக்க.. அவரது வாரிசு வேலன் அவர் முன்னே வந்து நின்று “அப்பா கிருஷ்ணா நம்ம ஊரிலேயே ஹாஸ்பிட்டல் திறக்கப்போறானாம்.. அதுவும் நாளைக்கே” என்று பொறாமையுணர்வுடன் வன்மத்துடன் பேச..
 
“வேலா அவன் என்னோட பையன்டா எதுக்கு உனக்கு, அவன்மேல இத்தனை பொறாமை இந்த எண்ணத்தை விடு” என்று அவனை முறைத்துப் பார்க்க.
 
“என்னோட அப்பாவோட தங்கச்சின்னு உங்கள விடுறேன்.. நீங்க பேசின வார்த்தை வேற யாராவது என்னை பேசியிருந்தா.. இன்னேரம் பல்லு உடைஞ்சிருக்கும்” என்று சாவித்ரியை மனம் நோகப் பேச..
 
சாவித்ரி இதற்குமேல் பேசினால் இன்னும் நாமதான் அவமானப்படணும்.. என்று அமைதியாய் நின்றிருந்தார்.. வேலன் பேசியதை கேட்டுக்கொண்டு காயத்ரி அவளது அறையிலிருந்து காலேஜ் போக வெளியே வந்தவள்.. பூஜையறை பக்கம் போய்
“எதுக்கு எங்க அம்மாவ அவமானப்படுத்தி பேசுறீங்க… இந்த நிமிசம் நாங்க வெளியே போயிடுவோம்.. எங்கண்ணாகிட்ட போய் நடந்ததை சொன்னா உங்க ரெண்டுபேரையும் பீஸ் பீஸ் ஆக்கிடுவாரு தெரியுமா” என்று நாகாவையும், வேலனையும் பார்த்து சினம் கொண்டு பேச.
 
“அய்யோடி நாங்க பயந்துட்டோம் பாரு.. போடி உன் நொண்ணன் உங்க பக்கத்துல நின்னு கூட பேசமாட்டான்.. அதுக்குள்ள நீங்க சொல்றத கேட்க போறானா? “என்று எகத்தாளமாக சிரிக்க.
 
சிரிங்கடா என் புள்ளை என்ன புரிஞ்சுகிட்டு என்கிட்ட வருவான்.. அப்ப இருக்கு உங்களுக்கு.. என்று எண்ணிய சாவித்ரி காயத்ரியிடம் “கண்ணு உனக்கு காலேஜ்க்கு நேரமாச்சு வா வந்து சாப்பிடு” என்று மகளை அழைத்துச்சென்றார்.
 
சாவித்ரிக்கும், காயத்ரிக்கும் தட்டில் சாப்பாடு போட சாப்பாடு இறங்கவில்லை.. பெயருக்கு சாப்பிட்டு வெளியே வந்தனர்.
 
“டேய் நாகாஆஆஆஆ” என்று கிருஷ்ணாவின் இரும்புக்குரல் கணீரென்று வெளியே கேட்க.
 
கிருஷ்ணாகேட்டை திறந்து உள்ளே வந்தான்.. நல்லவேளை அந்த கேட் இரும்பில் செய்திருந்தது.. இல்லையென்றால் அவனது இரும்புக்கரம் பட்டு விரிசல் ஏற்பட்டிருக்கும்.
 
“சாவித்ரி உன் டாக்டர் பையன் வந்துட்டான்” என்று நாகா சிரித்துக்கொண்டே வாசலுக்கு வந்தான்.
 
சீறிய காளை போல வந்து நின்றவனை பார்த்த நாகா.. “என்ன மாப்ளை வாங்க வாங்க இப்பத்தான் இந்த மாமாவீடு உங்களுக்கு கண்ணுக்கு தெரியுதா?” என்று மீசையை தடவியபடி கேட்க.
 
“டேய் நாகா நான் உன் வீட்ல உறவாட வரலடா.. என்னமோ எங்க ஊரு மீன் குளம் ஏலத்த இந்த முறை நீ எடுக்கறன்னு சொன்னாங்க.. அது இந்த முறையும் உனக்கு கிடைக்க விடமாட்டான் இந்த கிருஷ்ணா” என்று ஆக்ரோசமாய் சிங்கம் போல சீறி நின்று பேசினான்.
 
“அப்பா!!.. அப்பா!!.. என்ன வேகம்.. உன் வேகத்தைக் கண்டு எனக்கு கொஞ்சம் பயம்தான் வருது கிருஷ்ணா” என்று ஏளனமாக கிருஷ்ணாவை பார்த்து சிரிக்க..
 
கிருஷ்ணாவுக்கு எங்கிருந்து அத்தனை கோவம் வந்ததோ தெரியவில்லை அவன் நின்ற இடத்தில் அங்க கிடந்த மரக்கட்டையை அவன் காலில் தட்டிவிட்டான் பாரு.. நாகாவின் பக்கத்தில் கைக்கொட்டி சிரித்து நின்றிருந்த வேலன் நெற்றியை பதம் பார்த்து இரத்தம் பீறிட்டு வந்தது.
 
“டேய் கிருஷ்ணா” என்று நாற்காலியிலிருந்து எழுந்தார் நாகா.
 
“என்னோட பலம் தெரியாம என்கிட்ட மோதாதடா நாகா” என்று பல்லைக்கடித்து சர்ட்டை மடித்து விட்டு “என்னை என்னடா நினைச்சுகிட்டீங்க.. இவன் டாக்டர் ஆப்ரேசன் பண்ண மட்டும் தான் கத்தி எடுப்பான்னு பார்த்தீங்களா.. நானும் இந்த மண்ணுல பிறந்த வீரன்தான்.. நல்லதுக்கும் கத்தி எடுப்பேன்.. அதே போல அரக்கர்களை அழிக்கவும் இந்த கிருஷ்ணா கத்தியை எடுப்பான்” என்று அவனது வீட்டில் நின்ற காரின் மேல் தட்ட.. அவன் தட்டிய வேகத்தில் கார் கண்ணாடி சுக்கு நூறாக சில்லி சில்லியாக உடைந்தது.
 
கிருஷ்ணாவின் கோவத்தின் அளவை கண்ட நாகாவுக்கும், வேலனுக்கும் பயம் வரத்துவங்கியது.. ஆனால் சாவித்ரியும், காயத்ரியும் தன்னுடன் இருப்பதால் கிருஷ்ணாவை சென்டிமென்டல் பிளாக்மெயில் பண்ணிவிடலாம்.. என்று எண்ணிக்கொண்டனர் அப்பாவும் , மகனும்.. எல்லாம் பாலாய்போன பணத்திற்காகத்தான் இப்படி நடந்துகொள்கிறனர் நாகாவும் வேலனும்.. அதை எல்லாம் தவிடுபொடி ஆக்கப்போகிறான் கிருஷ்ணா.
 
கிருஷ்ணா எல்லா நல்லவனுங்களும் ஒரு விசயத்துல கோட்டை விடுவானுங்க.. அது உன்னோட அம்மாவும், உன் தங்கச்சியும் தான் என்று எமோசனல் பிளாக்மெயில் செய்து அவனை வெறுப்பேத்த,,
 
சாவித்ரி மனதுக்குள் ஊமையாய் அழுது நின்றார்.. காயத்ரி எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து நின்றாள்.
 
நாகாவின் பேச்சைக் கேட்டு “அடேய் என்னை சென்டிமென்டலா பிளாக்மெயில் பண்ண நினைக்காத எனக்கு ஐஞ்சு வயசுல இருந்து எனக்கு அம்மா இல்ல”என்று மனதை கல்லாக்கிக்கொண்டு அந்த வார்த்தையை விட்டான்.. ஒரு தாய் எந்த வார்த்தையைக் கேட்க கூடாதோ அந்த வார்த்தையைக் கேட்டு இப்போதே இந்த நிமிடம் என் உயிர் போயிடக்கூடாதா.. என்று துடி துடித்துப் போனார் 
சாவித்ரி.. 
 
“கண்ணா” என்ற வார்த்தை அவர் இதழ் அசைவில் வர.. அந்த கண்ணா என்ற அழைப்பு கிருஷ்ணாவின் காதுக்கும் சென்றது.. இது அதிர்வலையா.. அல்லது இரத்த பந்த பாசையா என்று யாருக்கும் தெரியாது.. 
 
கண்ணீர் விட்டு நிற்கும் தாயை பார்த்தவன் மறுநிமிடமே வேறு பக்கம் பார்க்கத் துவங்கினான்.. 
 
வேலனுக்கு அவனது ஆட்கள் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டிருந்தான்.. 
 
“டேய் எங்கடா போனீங்க.. என் பையன அடிச்சுப்போட்ட இந்த கிருஷ்ணாவ சும்மா விடக்கூடாது அடிச்சு கொன்னு போடுங்கடா” என்று சத்தம் போட்டான் நாகா.
 
“எத்தனை பேர்டா உன்கிட்ட இருக்காங்க வரச்சொல்லுடா” என்று இன் பண்ணிய சட்டையை எடுத்துவிட்டு தலைமுடியை அழுத்தக்கோதிவிட்டு நெஞ்சை நிமிர்ந்தி நின்றான்.. 
 
“அச்சோ கிருஷ்ணா! என் பையனை விட்டிருங்க” என்று சாவித்ரி மயங்கியே விழுந்துவிட்டார்.
 
நாகாவின் ஆட்களை பந்தாடினான் கிருஷ்ணா.. ஒவ்வொரு ஆட்களும் கிருஷ்ணாவின் பக்கம் வர பயந்தனர்.. கடைசியில் நாகாவை பார்த்து ஒரு கட்டையை தூக்கிப்போட அவர் பயந்து வீட்டுக்குள் ஓடி விட்டார்.
 
பிரசர் அதிகமாகி மயங்கிக் கிடக்கும் தாயை விட்டு போகும் அளவிற்கு அவன் கல்நெஞ்சக்காரன் கிடையாது.. சாவித்ரிக்கு பிரசர், சுகர் இருப்பது முதல் கொண்டு கிருஷ்ணாவிற்கு தெரியும்.. ஆனால் அதை ஒருபோதும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டான்.. அவனது கோபமே வேறு.. காருக்குள் சென்று பர்ஸ்ட் எய்டு பாக்ஸில் வைத்திருக்கும் ஊசியை எடுத்து வந்து மயங்கிக்கிடக்கும் சாவித்ரிக்கு ஊசியை போட்டுவிட்டு அழுதுகொண்டிருக்கும் காயத்ரியிடம் “ஏன் உங்கம்மா பிரசர் மாத்திரை ஒழுங்கா சாப்பிடமாட்டாங்களா” என்று அவளிடம் பேசிக்கொண்டே எழுந்தான்.. அவனுக்கு முன்னமே சண்டை போட்டாள் எதாவது சாவித்திரிக்கு ஆகிவிடும் என்று மருந்து ஊசியெல்லாம் எடுத்து வந்திருந்தான்
 
அண்ணன், தன்னிடம் பேசிவிடமாட்டானா? என்று ஏங்கியிருந்தவள்.. கண்ணீருடன் “அண்ணா என்கூட பேசமாட்டியா” என்று கேவிக்கொண்டு கேட்க.. “எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க” என்று பெருமூச்சுடன் எழுந்து திரும்பிப் பார்க்காமல் காருக்குச்சென்றான்..அவன் மனதிற்குள் அழுதது அவனுக்கு மட்டுமே தெரியும்.
 
சிறிது நேரத்தில் கண்விழித்த சாவித்ரி “என்னோடப் பையனுக்கு என்னாச்சு காயத்ரி” என்று நடுங்கி எழுந்து பார்க்க..
 
“அம்மா.. அண்ணாதான் எல்லா தடியன்களையும் அடிச்சுப் போட்டிச்சு” என்று காயத்ரி சிரித்துக்கொண்டே சொல்ல..
 
“அப்படியாடி” என்ற சந்தோசம் சாவித்ரியின் கண்ணில் தெரிந்தது.. 
 
“நம்மள நம்ம வீட்டுக்கு என் பிள்ளை சீக்கிரம் கூட்டிட்டுப்போவான்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு காயுமா” என்று மகளை அணைத்துக்கொண்டார்.
 
காரை எடுத்த கிருஷ்ணாவிற்கு தாயும், தங்கையும் பேசுவது அவன் காதில் கேட்கத்தான் செய்தது.
 
காரை ஓட்டிக்கொண்டு போக அவன் மனதில் ஐந்து வயதில் நடந்தது அவன் கண் முன்னே நிழலாக தோன்றியது..
 
அம்மா என்னை விட்டு போகாதம்மா.. என்று சாவித்ரியின் பின்னால் ஓடியது அவனுக்கு நியாபகம் வர காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.. ஏசி காரிலும் அவனுக்கு வியர்த்துக்கொட்டியது..
 
காரில் எப்படி வீட்டுக்குள் சென்றான் என்பது அவனுக்கே தெரியவில்லை.. வீட்டுக்குள் சென்றவன் சாப்பிடாமல் அறைக்குள் சென்றான்.. கணவனுக்காக காத்திருந்து பார்த்த தங்கமீனா அசதியில் உறங்கிவிட்டாள்.. 
 
“மாமா அவரு எங்க போயிருக்காரு.. இன்னும் வரலையே” என்று தங்கமீனா கவலைப்பட்டு கேட்க.. அவரோ தம்பி வந்துடும்மா நீ சாப்பிட்டு தூங்கு என்றிருந்தார்.. ஆனால் தங்கமீனா சாப்பிடாமலே உறங்கிவிட்டாள்.. கவலையில் வந்து அப்படியே கட்டிலில் படுத்துவிட்டான் எப்படி தூங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
 
காலையில் விழிப்பு வர.. “ஏய் கோல்ட் ஒரு கிஸ் குடுடி” என்று கண்ணை மூடிக்கொண்டு பெட்டில் கைகளால் துலாவ அங்கு தங்கமீனா இருந்தால் தானே.. அவள் இல்லையென்று தெரிந்து கண்திறந்து பார்த்தான்.. எங்க போனா என்று கண்ணை தேய்த்து எழுந்தவன் குளியலறை கதவு திறந்து பார்க்க அங்கேயும் இல்லை..கிச்சன்ல இருப்பா என்று நினைத்தவன் குளித்து முடித்து கீழ ஹாலுக்கு போக.. குருமூர்த்தி சோபாவில் அன்றய நாளிதழ் படித்து கொண்டிருந்தார்  “ஐய்யா தங்கமீனா எங்க கிச்சன்ல இருக்காளா?”
 
“தம்பி நேத்து ஒண்ணும் பிரச்சனை பெருசா நடக்கலையே”
 
“ஏன் ஐய்யா அங்க நடந்தது உங்க காதுக்கு வந்திருக்கும்தானே.. எல்லா அடியாட்களையும் அடிச்சுப் போட்டு வந்திருக்கேன்.. இன்னும் ஏதாச்சும் தப்பு பண்ணினா கொன்னே புடுவேன்” என்று கோபம் கொண்டு பேச.
 
“தம்பி அவனுங்க ரொம்ப மோசமானவங்க பார்த்து நடந்துக்க என்றவர்.. ஹா மருமக கோவிலுக்கு போயிருக்கா” என்றதும்..
 
“என்னது கோவிலுக்கா.. என்கிட்ட சொல்லாம போயிருக்கா” என்று தாடையை தேய்த்து.. “ஐய்யா நானும் கோவிலுக்குப் போயிட்டு தங்கமீனாவ கூட்டிட்டு வந்துடறேன்” என்று கார் கீயை எடுத்து வெளியே சென்றான்.
 
தங்கமீனா கோவிலுக்குப் போக ஆசைப்பட்டு வந்திருக்க.. எப்போதும் வழக்கம் போல வரும் சாவித்ரியும் கோவிலுக்கு வந்திருக்க.. தங்கமீனாவை பார்த்தவர் மகிழ்ச்சி கொண்டு மருமகளே என்று கூப்பிட ஆசைப்பட்டவர் அப்படி கூப்பிட முடியாத நிலையை எண்ணி வருத்தப்பட்டு நின்றார்.
 
“அம்மா என்ன கோவிலுக்கு வந்துட்டு ஏதோ யோசனையில இருக்கீங்க” என்று சாவித்ரியின் கையை தொட்டாள் தங்கமீனா..
 
“அம்மாடி உன்னோட பேரு” என்று அவளைக் கண்ணில் நிரப்பிக்கொண்டு கேட்டார்.
 
“தங்கமீனா அம்மா” என்று புன்னகையுடன் கூற.
 
“மகாலட்சுமி போல இருக்க” என்று பையில் கொண்டு வந்த பூவை எடுத்து தங்கமீனாவுக்கு தலையில் வைத்து விட்டார்  
“ஆமா, நான் உங்கள ஏற்கனவே பார்த்திருக்கேன்” என்று பேச வாயெடுக்க..
 
“தங்கமீனாஆஆஆ” என்று கிருஷ்ணாவின் குரல் கேட்டு சாவித்திரியும், தங்கமீனாவும் அதிர்ந்து நின்றனர்.
 

8 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Discover the thrill and winnings with[url=https://7777-casino.com/]???? ??[/url]— your reliable online casino.
    A notable feature of 7777 is its palindromic nature; it is symmetrical in reading.

  2. [url=https://casinoromania.site/]casino romania[/url] romania casino, online casino romania, cazino romania, cazino online romania, casino romania online, casino romania login, casino romania official site, casino romania website, casino romania access, casino romania mobile, casino romania mobile version, casino romania app, casino romania real money, jocuri cazino online, sloturi cazino romania, live casino romania, casino romania games, best casino romania

  3. Для вашего удобства предлагаем [url=http://arenda-avto-s-voditelem54.ru/]прокат авто с водителем новосибирск[/url].
    От экономичных вариантов до представительских автомобилей премиум-класса.

  4. Когда мотор начал греметь, обороты плавают или при разгоне ощущается нехватка тяги — проблема сама не исчезнет. Профессиональный ремонт двигателя автомобиля: выявляем точную неисправность и восстанавливаем ресурс. Полная диагностика, ремонт блока цилиндров, ГБЦ, привода ГРМ, системы смазки и охлаждения. Фиксированная смета до начала работ, контроль качества на каждом этапе. Цель простая: двигатель снова уверенно работает, без шума и запахов. Обращайся, если авто стало проблемой — мы вернём ему здоровье.

  5. The game of chess has always been a great ways to challenge the mind. Whether you’re new to chess or more experienced, there is always a new idea to explore. Playing chess is known to strengthen strategic thinking with practice. When beginning, understanding simple opening ideas is a smart place to start. No worries if you lose early on, since each match teaches what to improve. Playing consistently with a variety of players helps spot patterns. Watching games can also speed things up, particularly if you notice why certain moves are played. With experience, you’ll start to feel more confident. Most importantly, stay relaxed. This game rewards patience, and it makes more sense the more you play.

    https://chessmaxacademy3.wordpress.com/2025/12/12/essential-chess-strategies-for-beginners/

    [url=https://pabloescandoncusi.org/pablo-escandon-cusi-tips-mentor-empresarial/#comment-46909]Game of Chess Clinics aimed at Elders and Keeping Alert as well as Community-oriented[/url] 688b76a

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top