ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – I

 

கதையின் நாயகன்: அரவிந்த்

கதையின் நாயகி: தனுஜா

 

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமும்…. ‘கொங்கு நாடு’ என்று அழைக்கப்படும் கோவை மாநகரம்… இந்தியாவின் மிக வேகமாக வளரும் தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரம்.

 

கோவையில் பிரபலமான கல்லூரி, பல மாணவர்களின் கனவு கல்லூரி. அங்கு தான் நம்ம ஹீரோயின் படிக்கிறாள். 

நம்ம ஹீரோயின் தனு, பத்தி சொல்லனும் என்றால் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி, காலேஜ் டாப்பெர். எப்போவுமே எந்த கவலையும் இல்லாம நண்பர்களோடு ஜாலியாக வம்பு பண்ணிட்டு தன் நாட்களை சந்தோசமாக கழிக்கும் சாதாரண பெண் தான்….நம்ம ஹீரோயின் தனுவிற்கு வாழ்க்கையில் தான் நினைத்த துறையில் சாதிக்க நிறைய ஆசை.

 

காதல் என்று பேரை கேட்டால் கூட இஞ்சி தின்ன கொரங்காட்ட முகத்தை வச்சுப்பாங்க…. அப்படி பட்ட நம்ம தனு லைஃப்ல காதலே சரணம்னு சொல்ற நம்ம ஹீரோ வந்தா…. (வந்தா என்ன? ஏன் வந்தோம் என்று சொல்லுற அளவுக்கு தெரிச்சு ஓட வைக்கலாம். இல்லை, என்றால் ஹீரோவோட பெர்பார்மன்ஸ்ல விழுந்து காதலில் காத்தாடி போல் பார்க்கலாம் அவ்ளோ தாங்க.)

 

நம்ம ஹீரோ சார் பெயர் அரவிந்த்…. நல்ல வாட்ட சாட்டமான திராவிட நிறத்து அழகு….சொந்தமாக விவசாயம் பார்க்கிறான்….அது போக செங்கல் சூளையிலும் வருமானம் வருது… அளவுக்கு அதிகமான செல்வம் அதை அனுபவிக்க அவன தவிர வேறு யாரும் இல்லை.

அனாதையான அவன் “மனதையும் உறவையும்” ஆராதிக்க வருவாளா நம் நாயகி…

 

அன்று விடியலுக்கு முன்பே எழுந்த அரவிந்த், அவனை சுற்றி பச்சை பசேல் என்று கொஞ்சி கொண்டே அசைந்தாடும் நெற்கதிர்களும், அந்த சாலையோரத்தில் மலர்ந்தும் மலராமல் குலுங்கும் பூக்களையும் அருகில் இருந்த வாய்க்கால் வரப்பில் நடந்து கொண்டே பார்த்துச் செல்ல அந்த இயற்கை தேவதையின் வனப்புகளில் மனம் லயிக்காமல் அவனின் நினைவலைகளை குத்தகை எடுத்துக் கொண்டது அவனின் பைங்கிளியே.

 

அவனை பொறுத்த வரை அவனின் விடி வெள்ளி அவளே…. அவளை நினைக்கும் போது மட்டும் தான் அவன் மனம் சாந்தமாக இருக்கும்.

அவளை பார்த்து ஏங்கும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு குளிக்கச் சென்றான்.

        

அரவிந்தின் சொந்த ஊர் உடன்குடி.

‘துறைமுக நகரம்’ என்று அழைக்கப்படும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் பிறந்தவன்…. பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரன்…. ‘மக்களின் கடவுள்’ என்று அழைக்கப்படும் சுடலை மாடன் போன்ற தேஜஸ்….

மீசை மட்டும்…. அளவு பெரியதாக இருந்தால் பார்க்க அப்படி தான் தோன்றும்…. ஆனால் அவன் முகத்திலோ எப்பொதும் சதா வீற்றிருப்பது கோபம், இறுக்கம், அமைதி மட்டுமே…. 

         

யாராவது உதவி என்று கேட்டால் கூட ஒரு பைசா கையில் இருந்து தர மாட்டான்….சுயநலத்தின் மறுபிறவி…… ஈவு இரக்கம் எல்லாம் என்ன விலை என்று கேக்கும் ரகம்…. இந்த குணமே அவள் அவனிடம் இருந்து விலகி செல்வாள் என்பதை அவனிடம் யார் சொல்வார்?

          

அவன் வாழ்வில் இரண்டு பேர்… ஒன்று அவன் பைங்கிளி அடுத்து ரௌடி சங்கரன்…. ரௌடி சங்கரன் தூத்துக்குடியில் ஒரு நிழல் தாதா என்று கூட சொல்லலாம்…. வெளியில் அவர் மக்கள் நாயகன் என்று வலம் வருபவர்… ஆனால் அவர் கெஸ்ட் ஹவுஸ் அடியில் இருக்கும் பிணங்கள் சொல்லும் மக்களுக்காக எவ்வளவு நல்லது செய்திருக்கிறார் என்று…. 

 

அவரை பற்றி முழுமையாக அறிந்த ஒரே நபர் நம் நாயகன் மட்டுமே…. ஆனால் அவனும் சங்கரனோடு சேர்த்து மறைமுகமாக தன் காரியங்களை சாதித்துக் கொள்வான் அது ஒரு தனி கதை…. அதை பிறகு பார்ப்போம்.

 

இங்கு கோவையில் நம் ஹீரோயின் தனுஜாவோ…. 

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் கே.ஜி சினிமாஸில் தன் நண்பன் கௌதமோடு படம் பார்த்து விட்டு அவன் பர்ஸ் ஓட்டை ஆன பிறகு தான் நிம்மதியாக அவனை விட்டாள். 

 

கெளதமோ அவனின் காலியான பர்ஸை பார்த்தவன் பல்லை கடித்து கொண்டு….”இனி ஒரு வாரத்திற்கு நான் வயிற்றில் துணியை தான் கட்டிக்கனும்….” என்றான் தன் வயிற்றில் கை வைத்து கொண்டு.

 

அவளோ சிரித்து கொண்டு….

“என் கார்டை நாளைக்கு வந்து வாங்கிக்க….”

என்று சொல்லவும்…. “அப்படி சொல்லு டி…. என் கருவாச்சி!!” என்றான் 

வாய்கொள்ளா புன்னகையுடன்.

 

(கௌதமமும் தனுவும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். பல நண்பர்கள் இருந்தும் அவள் உரிமையாக பேசுவதும், சீண்டுவதும் அவனிடம் மட்டும் தான்)

 

“நாளைக்கு எங்க போகலாம்?” என அவள் ஒவ்வொரு இடமாக சொல்லி கொண்டிருக்க…. அதில் பொறுமை இழந்தவன்.

 

“அடியே!!…. அறிவு இருக்கா டி உனக்கு?”

“நீ இப்படி வீட்டுக்கு தெரியாமல் ஊர் சுத்துறது மட்டும் தெரிஞ்சால் என்ன ஆகிறது!!…. உன்னால தான் நான் என்னோட நாளை எண்ணனும் போல இருக்கு டி!!….”

 

“அட!! விடு டா தடியா!!”

“உனக்கு தான் எக்ஸாம்ல அரியர் வராம காப்பத்தறேன்ல…” என்றாள் இல்லாத காலரை தூக்கி விட்டு…

 

“அந்த ஒரு நன்றிக்கு, நான் ஆண்டி ஆகிருவேன் போலிருக்கே கருவாச்சி!!…” என்று வாயை பொத்திக் கொண்டு உடல் குலுங்க சிரித்தான்.

 

“என்னடா தடியா சொன்ன?” என்று முறைத்தவள்.

“நான் என் கார்டை தர மாட்டேன் போடா!!” என்று சொல்லி விட்டு வேகமாக ஹாஸ்டலை நோக்கி ஓடினாள்.

 

 

“கருவாச்சி!!…. கருவாச்சி!!….” என்று வேண்டுமென்றே வெறுப்பேற்ற மீண்டும் சத்தம் போட்டு கத்தினான்.

(கருவாச்சி நீ என் அழகு ராட்ச்சசினு மனது சொல்லி கொண்டது)

 

“டேய் கொரங்கு!!”

 

வெறுப்பு ஏத்துறியா?”

 

“என் கையில மாட்டுன சங்கு தான் டா!!”

என்று கீழ் இருந்த கல்லை எடுத்து அவனை நோக்கி குறி பார்த்து வீசினான்.

 

“மீ எஸ்கேப் கருவாச்சி!!….”

என்று அவள் கன்னத்தை நறுக்கென்று கிள்ளி விட்டு ஓட ஆரம்பித்தான்….

 

(ஆமாங்க நம்ம ஹீரோயினும் திராவிட கலர் தான்… எத்தனை நாளுக்கு தான் சந்தனமும் பாலும்னு சொல்லிகிட்டு இருக்கறது. நம்ம ஹீரோயின் அழகுக்கே டஃப் கொடுத்த தமிழ்நாட்டு கலருங்க.)

 

“நாளைக்கு காலேஜ்ல உன்னை நான் கவனிச்சுக்கிறேன்” என்று கருவி கொண்டு தன் கன்னத்தை தடவி விட்டு…. ஹாஸ்டல் அறையை நோக்கிச் சென்றாள்.

 

“அப்பாடி!!…. எப்படியோ ஆசை பட்ட தலைவர் படத்தை பார்த்தாச்சுன்னு நிம்மதியாக தூங்குற ஹீரோயின்க்கு ஆப்பு…. அப்பா, ரூபத்தில் வருவது தெரியாமல் நிம்மதியாக தூங்கிட்டு இரு

ந்த தனுவை விதி கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

ஆராதிக்க வருவாள்

2 thoughts on “மாயோனின் இதய சிறையில்”

  1. Официально и без личного присутствия оформить санкнижку в Рязани с доставкой предлагает сайт [url=https://klinika-almaz.ru/]https://klinika-almaz.ru/[/url]. Компания подготовят официальный документ с печатями и подписями в течение одного дня по выгодной цене от 1699 руб. https://klinika-almaz.ru/ Заказ можно сделать по телефону без очередей и потерь времени.

Leave a Reply to Spravkitqr Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top