ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 02

 

“ஹே!! எழுந்திரிடி….”

“மணி மதியம் ஒன்னு ஆகுது….

இன்னும் காலையில் இருந்து நீ சாப்டவே இல்ல காலேஜ் வேற கட்

அடிச்சிருக்க….மாசத்துக்கு நாலு நாள் தூங்குறதுக்குக்காகவே லீவ் போடுற ஆள் நீயா தாண்டி இருப்ப….” என்று தனுவிடம் தொண்டை வலிக்க கத்திக் கொண்டிருந்தாள் அவள் தோழி இந்துமதி.

 

“அட!! தூங்க விடு டி பிசாசே….”என முதுகுகாட்டி படுத்து விட்டாள்.

 

“அந்த அக்கவுண்ட்ஸ் மேடம் என்னடான்னா, நீ லீவு போட்டால் மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க….அதுவே நாங்க என தெரிஞ்சா போதும் ஒரு வாரத்திற்கு வேலை கொடுத்து சாகடிக்குறாங்க….”

 

“அதுக்கு எல்லாம் ஒரு முக ராசி வேண்டும் டி….” என்று தனு சிரித்து கொண்டே சொல்லவும்…

 

“அஹா அஹா!! சிரிப்பு வரல….” 

 

“சரி டி!! நான் தூங்குகிறேன்….

எனக்கு லஞ்ச் வாங்கி வை….” என்றாள் தனுஜா.

 

“உன் அப்பா வந்திருக்காரு டி தூங்குமூஞ்சி…” என இந்துமதி அவள் தோளில் ஒரு அடி வைக்கவும்….

 

“ஐயோ!!….என்று அடிச்சு பிடிச்சு எழுந்து, இதை முதலில் சொல்ல மாட்டியா எருமை!!” என்று அவள் தலையில் தட்டி வராண்டாவுக்கு ஓட்டமாக ஓடினாள்.

 

ஹாஸ்டல் வராண்டாவில் அமர்ந்திருந்த ஐம்பது வயது மனிதரை கண்டு….

“அப்பா!!!” என்று அழைத்துக்கொண்டே ஓடிபோய் கட்டிக் கொண்டாள்.

 

“தனும்மா!!” என்றார் அவர் தழுதழுத்த குரலில்.

 

“தனும்மா வாடா!! நம்ம வீட்ல எல்லோரும் உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஆசை படுறாங்கம்மா…. ஃபோன் கூட சரியா பேசுறது இல்ல நீ” 

என்று குறைபட்டுக் கொண்டார்.

(அவளுக்கு தான் தெரியுமே ஃபோன் பேசினால் வீட்டு பெரியவர்கள் முதல் ஆடு மாடு கூட நலம் விசாரிக்கிறேன் பேர்ல அத்தனை பேருக்கும் பதில் சொல்லியே இவளுக்கு நாக்கு தள்ளிவிடும்.)

 

“போய் சீக்கிரம் ரெடி ஆகி வாம்மா!!”

“சரிப்பா!!…. வார்டன் கிட்ட விடுமுறை கடிதம் எழுதி கொடுத்திட்டு வந்துவிடுகிறேன்.” என சொல்லி கொண்டே விரைவில் கிளம்பி தந்தையுடன் பயணிக்க ஆரம்பித்தாள்.

 

அவள் வெகு நாள் கழித்து தன் குடும்பத்தை பார்க்கும் மன நிலையோடு உப்பின் வாசமும் தென்றல் காற்றும் வீச ரம்மியமான பொழுதோடு தூத்துக்குடியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்க…இங்கே விதி அவள் ஆசையும் கனவையும் புதைக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது.

 

தனுவின் குடும்பம் ஊரில் பெரிய தலைக்கட்டு…. எந்த நல்லது கெட்டது என்றாலும் அவர்களை மீறி செய்ய முடியாது. அப்படி யாராவது மீறி துள்ளினால் அந்த ஊரில் அடுத்து அவரை பார்க்க முடியாது.

இரவோடு இரவாக கொன்று உடலில் உள்ள பாகங்களை ஆர்கன் சந்தையில் விற்று விடுவர். (அந்த காலத்து மாதிரி ஆற்றிலும், தண்டவாளத்திலும் வீசினால் யாருக்கு லாபம்…. எதிரியும் ஒழிந்தான் அவனால் பணமும் ஆச்சு எப்படி)

 

தனு வீட்டுக்கு வந்த உடனே ஓடிச்சென்று பெரியப்பா, என்று கட்டிப்பிடித்து…. “ஐ மிஸ் யு பெரியப்பா!!”…. அவள் அன்பில் எப்பொழுதும் போல் அவர் இப்போவும் நெகிழ்ந்து தான் போனார்.

“சரி சரி!!…. வாடாம்மா!! பெரியப்பா உனக்காக சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் உள்ள வாம்மா!!”

 

“ஏலெய்!! என் பேத்தி இப்போ தானடா

வந்திருக்கா….வாப்பூ சாப்பிடலாம்… 

உனக்கு பிடிச்சது மீன் குழம்பும், இறால் தொக்கும், நண்டு கறி எல்லா உங்க அம்மாவை சமைச்சு வைக்க சொல்லிருக்கேன்” என்ற நொடி …

 

“இதோ போறேன் ஆச்சி….” “இச்!!”….” இச்!!” என்று முத்தத்தை கொடுத்துட்டு சிட்டாக பறந்தாள் சமையல் கட்டை நோக்கி…

(நமக்கு சோறு தா குலசாமி என்ன மக்களே நான் சொல்லுறது)

 

“அம்மா! எங்க இருக்கீங்க என்று சத்தம் போட்டுக்கொண்டே சமையலறைக்குள் சென்றாள். அவள் அம்மா விஜயலட்சுமியியோ….கையில் கரண்டியோடு அவளை பாசமாக முறைத்துக் கொண்டிருந்தார்.

“ஏன் மம்மி!!….” என்று இதழை பிதுக்கினாள்.

 

“ஏன்டி!! என்ன துணி டி இது?”

 

“ஜீன்ஸ் மா!!” என்று கண்ணடித்தாள்.

 

“கன்றாவியாக இருக்கு….” என்று தலையில் அடித்து கொண்டவர்.

“போய் தாவணிய மாத்திட்டு வா….!!”

 

“போம்மா!! உனக்கு உன் வயசுல போட முடியலன்னு பொறாமை அப்படி தான அத்த…. என்று அருகில் இருந்த அவள் அத்தை மீனாட்சியையும் தன் பங்கிற்கு சேர்த்துக் கொண்டு பேசினாள்’.

 

“வாய் பேசாமல் போடி….

நீ பண்றதெல்லாம் பார்த்தா உன் மாமியார் என்னை தான் சீவகட்டையால அடிப்பான்னு” நொந்து கொண்டார்.

 

“பசிக்குது….சாப்பாடு எடுத்து வைம்மா…. நான் போய் குளிச்சிட்டு வரேன்…”

 

“விஜி!! அவ சின்ன பொண்ணு….அவளுக்கு நல்லது செய்றோம்னு அவள் வாழ்க்கையை இடியாப்பச் சிக்கல் ஆக்கி வைக்க போறீங்க…. அவ்ளோ தான் சொல்லுவேன் என சொல்லி விட்டு மீன் பொறிக்க மசாலா தடவி 

கொண்டிருந்தார்.

 

 

 

“ஹ்ம்ம்!!” என்று பெரு மூச்சு மட்டும் தான் அந்த வீட்டில் விட அதிகாரம்….

அந்த வீட்டு பெண்களுக்கு, சமையல் அறையிலே இருபத்தி ஐந்து வருடம் கழிந்து விட்டது.

 

”அண்ணன் பண்ணி வச்சிருக்கிற காரியம் பாப்பாக்கு தெரிஞ்சால்… என்ன கஷ்ட படுமோ!!” என்று வருத்தத்தோடு முடித்தார்.

 

”எனக்கு வேற கலக்கம் ஆக இருக்கு அண்ணி….!!’

போகும் மகளையே இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தார் விஜி.

 

அரவிந்த் சனிக்கிழமை எப்போதும் சங்கரன் வீட்டில் தான் இருப்பான்.

அங்கு அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வேலை பார்க்கும் வேளையில் ஒரு மென்மையான கரம் இடுப்பை வளைத்தது…உடனே சுதாரித்தவன். கீழே தள்ளி மேலே பாய்ந்து இரு கைகளையும் முன்னரே விடாமல் சிறை செய்தான்.

 

“என்ன பயம் விட்டு போச்சா!!” என்றான் அதிகார குரலில்.

 

“ம்ம்!!….சொல்லு….” கேக்குறேன்ல…. என உறுமவும்.

 

“ஹே!! செம்ம ஆளு யா நீயு” என்றாள் கிறக்கமாக.

 

“வாய மூடு வினி…. இப்போ எதுக்கு இங்க வந்த?” என்றான் சீறும் சிறுத்தையைப் போல, குரல் ஆவேசமாக வந்தது.

 

“உன்ன பார்க்க தான் தெரியாத உனக்கு…”என அசட்டையாக கூறினாள்.

 

அவன் அசந்த நேரம் அவன் இதழை நெருங்கவும்….

அதை முன்கூட்டியே உணர்ந்தவன்….

“விடு வினி!! அசிங்கமாக இல்ல…”

 

“இல்ல… இப்போ என்ன?”என்றாள் திமிராக.

 

“எனக்கு பிடிக்கல வினி….” என்று எச்சரிக்கும் தொனியில் சொன்னான்.

 

“என்ன சார் கட்டபிரமச்சாரி போல பேசுறீங்க?” “கல்யாணம் ஆகாத சம்சாரி தான…” என்று நோக்கியவளின் கண்களில் எகத்தாளம் தெறித்தது.

 

ஒரு நிமிடம் கண்ணை மூடி மௌனமாக நின்றுந்தான்.

அடுத்த நொடி அவளிடம் இருந்து விலகி.

“என் வழியில குறுக்க வராத வினி…சங்கரன் அண்ணா தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்….”

வெளிய போடி என்று சொல்லி கீழ தள்ளிவிட்டவன் அடித்து கதவை சாத்தினான்.

 

கீழ சிராய்புடன் எழுந்த வினியோ, நக்கலாக பார்த்துவிட்டு…. “உன் பைங்கிளி உனக்கு கிடைக்கமாட்டா….வந்தாலும் நான் விட மாட்டேன்….

நீ எனக்கு மட்டும் தான்….” மனதில் வலியோடு மாடியின் மேலே ஏறி சென்றாள். அவன் அவளின் முதல் காதல் ஆயிற்றே…

அவனை கண்ட நாள் முதல் இன்று வரை அவனை ரசிக்கிறாள்….

அவள் அண்ணன் சங்கரன் அவனைப்பற்றி பெருமையாக சொல்லும் போதெல்லாம் என்னவன் என்று கர்வமாக நினைப்பவள்….பல வழிகளில் காதலை சொல்லியும்…. அவன் பதில் “என்னை என்றும் நெருங்காதே அவ்வளவே…”

 

சங்கரன் அவனிடம் கல்யாணம் பற்றி பேசினாலும் இங்கு வர மாட்டேன்” என்று சொல்லவும்…. அவரும் அதோடு அந்த விஷயத்தை பேசுவதை நிறுத்தி விட்டார்.

 

ரவுடி சங்கரன் அரவிந்த் இருக்கும் அறைக்குள் நுழைந்து…. “அரவிந்த் நம் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது….” என்று சொல்லிக்கொண்டு அருகில் போடப்பட்டு இருந்த நற்காலியில் அமர்ந்தார்.

 

வெற்றிக்கு அறிகுறியாக “பக்கா” என்று கை உயர்த்தினான். 

உடனே சங்கரன் நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்து அகோரமாக அறையே அதிரும் வண்ணம் சிரித்தார்.

 

தன் அடுத்த குறிக்காக கச்சிதமாக காய் நகர்த்த திட்டம் வகுத்து கொண்டிருந்தனர்.

 

அவனின் முதல் குறி சரவண பெருமாளின் மகள், சிக்குவாளா?

 

 

ஆராதிக்க வருவாள்!!!

22 thoughts on “மாயோனின் இதய சிறையில்”

  1. олимпус слот
    Gates of Olympus — востребованный онлайн-слот от Pragmatic Play с механикой Pay Anywhere, цепочками каскадов и множителями до ?500. Действие происходит на Олимпе, где верховный бог усиливает выигрыши и делает каждый спин динамичным.

    Игровое поле представлено в виде 6?5, а выигрыш начисляется при появлении не менее 8 совпадающих символов без привязки к линиям. После расчёта комбинации символы удаляются, сверху падают новые элементы, запуская каскады, дающие возможность получить несколько выплат за один спин. Слот относится игрой с высокой волатильностью, поэтому может долго раскачиваться, но при удачных раскладах способен порадовать крупными выплатами до 5000 ставок.

    Чтобы разобраться в слоте доступен демо-версия без регистрации. Для игры на деньги рекомендуется рассматривать проверенные казино, например MELBET (18+), ориентируясь на показатель RTP ~96,5% и условия конкретной платформы.

  2. To download the game quickly and safely, use [url=https://playboy-888.com/]playboy888[/url].
    In today’s digital age, obtaining mobile applications is straightforward and fast. This step ensures the device allows the installation of third-party applications.

  3. Learning why partnering with an Social Security impairment attorney may prove helpful is something many claimants realize. The federal agency manages a wide range of benefit programs intended for people who struggle to maintain employment due to serious medical conditions. Since the application system involves technical requirements, relying on a knowledgeable professional often helps with organizing information accurately. A seasoned SSA attorney can assist with reviewing medical documentation, handling paperwork, and addressing agency requests. When a claim is not approved, they can explain available options and assist hearings, improving the likelihood of a approved result.

    https://webforceone.livejournal.com/4127.html

  4. Hello there, I discovered your blog by means of Google whilst looking for a related matter,
    your web site got here up, it seems great. I’ve bookmarked it in my google bookmarks.

    Hi there, simply was alert to your blog via Google,
    and found that it is really informative. I’m going to watch out for brussels.
    I’ll appreciate in case you proceed this in future.
    A lot of folks will likely be benefited from your
    writing. Cheers!

  5. Great site you have here but I was wondering if you knew of any discussion boards
    that cover the same topics talked about here?
    I’d really love to be a part of community where I can get responses from
    other knowledgeable people that share the same interest.
    If you have any suggestions, please let me know.
    Bless you!

Leave a Reply to Martinaporo Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top