ATM Tamil Romantic Novels

தீயை தீண்டாதே தென்றலே -7

7

 

 

ஆதிரன் சொன்ன ரேப் அண்ட் மர்டர் கேஸ்டா பாவீ என்ற சொற்கள் கொற்றவையை கூர் அம்புகளாக தாக்கின… பேரிடியாக அவள் தலையில் வந்து விழுந்த செய்தியாள் பூமி அவள் கால்கள் இடையே நழுவிட வலுவிழந்து அப்படியே மடிந்து தரையில் அமர்ந்து விட்டாள்…

 

 

 

அங்கு அவளின் நிலையை புரிந்துக் கொள்ளவோ பகிர்ந்துக் கொள்ளவோ யாரும் இல்லாத அவலை நிலையில் தனித்து விட பட்டாள் என்பதை விட அவளை கண்டுக் கொள்ளும் நிலையில் யாருமே இல்லை என்பது தான் பொருத்தம்…

 

 

 

என் சட்டையுலிருந்து கையை எடுங்க டாட் இல்லனா நீங்கள் என்னை பெத்தவருன்னு கூட பார்க்க மாட்டேன்…எடுங்கனு சொல்றேன் இல்லை என பத்ரி ஆதிரன் பிடியின் இருந்து தன்னை முரட்டு தனமாக பிரித்து செல்ல… அதில் ஆதிரனே ஒரு நிமிடம் தடுமாறி தான் போனான்… 

 

 

 இளசிங்கத்தின் வீரத்திற்கு முன்னால் பெரிய சிங்கம் தோற்று ஒடங்க வேண்டியதாகி போயிற்று…

 

 

தனக்கு கீழ் பணிபுரிபவர்களின் முன்னால் பத்ரி தன்னை தள்ளி விட்டதை அவமானமாக கருதிய ஆதிரனின் முகம் கருத்து விட்டது…

 

 

பத்ரிக்கோ ஆதிரன் விழுவான் என்றல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆதிரனின் பலமான பிடியில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள அவனும் பலத்தை பிரியோகப் படுத்திட ஆதிரன் விழவும் ஐயோ என்றாகி விட்டது பத்ரிக்கு… தன்னை சுதாரித்து கொண்டு ஆதிரன் எழ உதவி செய்ய முயலவும்…

 

 

வேடுக்கென்று அவன் கைகளை தட்டி விட்ட ஆதிரன் தானே சுயமாக எழுந்துக் கொண்டவன்…

 

 

நீ இவ்ளோ சீப்பா நடந்துப்பன்னு நான் எதிர்பார்க்கல டா பத்ரி என்றவன் அவனின் முந்தயை நடத்தைகளையும் சேர்த்தே தான் சொன்னான்…

 

 

ஓ இப்போ உங்க கண்ணுக்கு நான் சீப்பா போயிட்டேனா ரொம்ப தேங்க்ஸ் உங்க மனசுல உள்ளதை மறக்காம சொன்னதுக்கு நீங்க வந்த வேலை முடிஞ்சிதுனா கிளம்புறீங்களா என பத்ரி ஆத்திரத்தை அடக்கிய குரலில் வார்த்தைகளை கடித்து துப்பிட…

 

 

முகத்தில் அறைந்தது போல் தன் மகன் தன்னை வெளியே போக சொல்வான் என்று அறியாத ஆதிரனோ திகைத்து தான் போனான்…

 

 

டேய் உன் மனசுல கொஞ்சம் கூட ஈரமே இல்லையாட நான் உன்னை பெத்தவன் என்கிட்டயே இப்படி நடந்துகிரியே எப்போ இருந்துடா நீ இப்படி ஒரு மிருகமா மாறின என மனம் தாளாமல் கேட்டு விட்டான் ஆதிரன்…

 

 

ஆதிரனின் கேள்வியனது பத்ரியின் முந்தைய பக்கத்தின் சொல்ல படாத ரணங்களையும் மீள முடியாத வலியை கீறி விட பட்டதை ஆதிரன் அறிந்து இருக்கவில்லை…

 

 

ஆமாஆஆ… நான் மிருகம் தான்… நான் மிருகம் தான்… என பைத்தியம் பிடித்தவன் போல் கத்தியவன்… இதுவரை உள்ளே அடக்கி வைத்த எதோ ஒன்று உடைபெடுத்து வெளியே வர காத்திருந்த ஒன்று இன்று ஆதிரனால் வெளியே வந்து விட்டது…

 

 

என்ன சொன்னிங்க என்ன சொன்னிங்க நான் மிருகமா மாறிட்டேனா…??

 

 

ஏன் உங்களுக்கு தெரியாதா…?? இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா…??

 

 

 என்னை இப்படி மிருகமா மாத்தினதே நீங்கள் தான் நீங்க மட்டும் தான்… என்றவன் கர்ஜனையில் அந்த மொத்த இடமும் ஸ்தம்பித்து போனது…

 

 

தானே தன் காயத்தை கீறி ரணப்படும் விலங்கினத்தை போல் தன் பச்சை ரணங்களை நினைவூட்டிக் கொண்டான் பத்ரி…

 

 

காலங்களில் கண்ணாடி குடுவையில் அடைத்த மணல் போல் பின்னோக்கி சென்றது…

 

 

அது பாலிவுட் சூப்பர் ஸ்டார் பத்ரியின் புகழ் சறுக்கத் தொடங்கிய நேரம்… துரோகங்களாலும் தீராத வலிகளாலும் பத்ரியை துரத்தி துரத்தி சம்பவம் செய்த காலம்…

 

 

அவன் வாழ்வில் நிதர்சனமும் உண்மையும் புரியத் தொடங்கும் போது சகலமும் அவனை விட்டு கட்டாயமாக பிரித்து துடிக்க விட்ட நேரம்… அவன் மொத்தமாக குடியின் பிடியில் சிக்கி காலமும் அது தான்…

 

 

யாரை நம்புவது என்று தெரியாமல் தன்னை அறியாமலே வஞ்சத்தின் பிடியில் வீழ்ந்தான் பத்ரி… கூடா நட்பு கேடில் விளையும் என்று அவன் கற்ற கல்வி கூட அவனுக்கு கை கொடுக்கவில்லை என்பதே இங்கு நிதர்சனம்…

 

 

அப்படிபட்ட அவன் நட்பு வட்டத்தில் இருந்து ஒருநாள் பத்ரிக்கு ஒரு அழைப்பு வந்தது… அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதால் அவனின் தலை எழுத்தே மாறிப் போகும் என்பதை அவன் முன்பே அறிந்து இருந்தால் கூட அங்கு சென்று இருக்க மாட்டானோ என்னவோ… விதி யாரை விட்டது…

 

 

பாலிவுட்ன் முக்கிய பிரமுகரின் மகன் பிறந்தநாளுக்கு அழைக்க அங்கு சென்றவனை வலிய வம்புக்கு இழுத்து கார் ரேஸ்ல் பங்கு பெற வைத்தனர்… 

 

 

அந்த ஆள் அரவம் அற்ற கடற்கரைசாலையில் நேரம் பன்னிரண்டு மணியை தொட நான்கு சொகுசுகார்கள் இருளை கிழித்துக் கொண்டு கண்ணை குருடாக்கும் வெளிச்சத்துடன் காதை பிளக்கும் ஹார்ன் சத்தத்துடன்…

 

 

 

ஒன்றை ஒன்று மிஞ்சும் அசுர வேகத்துடன் சீறிப்பாய்ந்து வந்தது…

 

 

 

அதில் அனைத்து கார்களையும் தன் அதீதவேகத்தில் முந்திக்கொண்டு வந்தது ரேஞ்ச்ரோவர் கார்.. அதுவே வெற்றி கனியையும் பறித்தது..

 

அவன் வெற்றியை விலையுறந்த சாம்பியன் பாட்டில்களை பொங்க விட்டு கொண்டாடினர் அந்தமேல் தட்டுமாந்தர்கள்..

 

 

 

ஆனால் வெற்றி பெற்ற கோ மகனுக்கோ அதில் சிறிய ஆர்வம் கூட இல்லாமல் நின்று இருந்தான்… காரணம் சற்று முன் அவன் காதுகளுக்கு எட்டிய செய்தி…அது அத்தனை உவர்ப்பானதாக இல்லை என்பதை பத்ரியின் முகத்தில் இருந்தே அறியலாம்…

 

 

பாலிவுட்ன் பிரபல டைரக்டர் மிஸ்டர் வர்மாவின் படத்தில் இருந்து அதிரடியாக பத்ரியை தூக்கியது தான் அந்த செய்தி…அதுவும் அவனிடம் எந்த வித தகவலும் தெரிவிக்காமலே இது எத்தனை பெரிய அவமானம் ஒரு நடிகனுக்கு என்பதை அனைவருமே அறிவர்… இது தான் சாக்கு என்று அவன் வஞ்சம் உள்ளவர்கள் அவனுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்கிற பெயரில் பத்ரியை குத்தி கிழித்தனர்… அந்த நேரம் பார்த்து பத்ரியை அழைத்தான் ஆதிரன்…

 

 

இவர் தான்… நடந்த எல்லாத்துக்கும் இவர் தான் மொத்த காரணமும் என நினைத்தவன் ஆதிரன் அழைப்பை ஏற்காமல் ஃபோனை அணைத்து போட்டவன்… உள்ளம் மட்டும் அணையாமல் இருந்தது… இதுதான் சமையம் என்று பத்ரியிடம் எதையோ குடிக்க நீட்ட… கோவத்தில் இருந்தவன் என்னவென்று பாராமல் வாங்கி அருந்தி விட்டான்… எவ்வளவு குடித்தும் அவன் உள்ளம் மட்டும் அணையவே இல்லை…

 

 

அடிபட்ட வேங்கை என உருமி கொண்டிருந்தான் அவன்… பத்ரி கண்ணில் தெரிந்தது எல்லாம் கோபம் கோபம் கோபம் மட்டுமே.. அவனுள் தகித்தது தீயை அடக்க..

 

 

தன்னருகில் அவனுக்காகவே காத்து கிடந்த எதிலும் தாராளம் என்னும் மனப்பான்மை உள்ள பெண்ணின் இடையை வளைத்து வலிக்க பற்றி தன்னோடு இறுக்கிக்கொள்ள..

 

 

 

“ஸ்ஸ் வலிக்குது டார்லிங்…!!” என ஸ்ருங்கார குரலில் கூறியவளை. தன் சீறும் பார்வையில் “வலித்தால் தாங்கிக்கொள்” என தகவல் இருக்க மீண்டும் இடையை வலிக்க வலிக்க பற்ற அதில் அவள்தன் உதட்டை கடித்து வலியை அடக்க இருந்தும் கண்களில் நீர்துளிர்க்க நின்றாள்… அன்றைய இரவு அவளுடன் தன் உடல் வெம்மையையும் மனபுழுக்கதையும் தீர்த்து கொள்ளமுடிவு செய்துவிட்டான்…

 

 

அவர்கள் போல் மேல் தட்டு வர்க்கத்துக்கு இது மிகசாதாரணம் தான் ஆனால் இதை பெரிது படுத்தி டிஆர்பி ஏற்றி கொள்ள துடிக்கும் மீடியாவிற்கு இது பெரிய தீனி.. அதுவும் அவன் மிக பெரிய குடும்பத்தின் வாரிசு மற்றும் பாலிவுட் திரை உலகையே தான் கைவிரலால் ஆட்டிபடைத்த சாம்ராட் அவன்..

 

 

 

அவன் போகும் இடம் எங்கும் கழுகுகளாக வட்டமிட்டு வந்தனர்.. இன்றும் அவ்வாறே வந்த இரண்டு பத்திரிக்கையாளர்களை அவனின் நிழல் படைதடுத்து அவர்களின் கேமராக்களை சில்லுசில்லாக உடைத்தெறிந்து அவர்களின் கைகால்களை முறித்து அனுப்பினர்..

 

 

 

அதுவே நாளை அவனுக்கு எதிராக போர் தொடுப்போர்களால் பயன்படுத்த போக முக்கிய அஸ்திரமாக மாறும் என்று ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பத்ரியும் அறிந்து இருக்கவில்லை… அது மட்டுமா அவனால் ஒரு அப்பாவி உயிர் துடிக்க துடிக்க பரிப்போனதையும் அவன் உணரவே இல்லை…

 

 

1 thought on “தீயை தீண்டாதே தென்றலே -7”

Leave a Reply to jqk_ywpl Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top