ATM Tamil Romantic Novels

மாயோனின் இதயசிறையில்

 

13)

இங்கே மருத்துவமனையில் இருந்த கௌதம் பிச்சு போட்ட பரோட்டா போல் கை கால் எல்லாம் கட்டு போட்டு மயக்கத்தில் கிடந்தான்…

 

“டாக்டர் அவர் எப்போ கண் முழிப்பார்?…”

 

“மயக்கம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தெளிந்து விடும்… வேற ஒன்னும் பிரச்சினை இல்லைம்மா… நீங்க பிறகு போய் பார்க்கலாம்…”

 

கௌதம் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன்…

“அடியே நிஞ்ஜா!!… கொலைகாரி கார்ல சிவனே என்று போனவனை எதுக்கு டி கொலை பண்ண பார்த்த…”

 

“நீ தான் டா…என் காரில் வந்து மோதின… எல்லாம் நீ பண்ணிவிட்டு என்னை பழி சொல்லுறியா? உன்னை…” என்று அவன் முடியை பிடித்து ஆட்ட…

 

“விடு டி பிசாசு…” என்றான் வலியின் மிகுதியில்…

 

“உன்னை போய் பார்க்க வந்தேன் பாரு… என்ன சொல்லணும்…!!” என்றாள் எரிச்சலாக…

 

“மாமன் மேல அவ்ளோ பாசமா?…ஆப்பிள் பழம் எல்லாம் இல்லையா?… சும்மா வந்திருக்க?…”

 

“மானம் கெட்டவனே …நீ நினைப்பது போல் அப்படி எல்லாம் இல்ல ஒரு மனிதாபிமானத்திற்கு தான் வந்தேன்…” என்றாள் முகத்தை திருப்பி கொண்டு…

 

“வந்ததும் வந்துட்ட அப்படியே இந்த ஹாஸ்பிடல் பில் எல்லாம் கட்டிடு டி…”

 

“அதானே பார்த்தேன்…. திருந்தாத ஜென்மம்…”

 

“ஹே!!…வலிக்குது டி… “

 

“ஹே!!… என்ன டா ஆச்சு… எங்க வலிக்குது…” என்று கை கால்களை ஆராய…

 

“இரு டாக்டரை வர சொல்லுறேன்…”

 

“நிஞ்ஜா… அங்க இல்ல டி இங்க…” என்று தன் நெஞ்சை தொட்டு காட்டினான்…

 

அவள் புருவ முடிச்சுடன்… பார்க்க

“நிஞ்ஜா பேபி… ஐ மிஸ் யூ டி… நீ இல்லாமல் நான் செத்துடுவேன் டி…

எங்க பார்த்தாலும் ஒரே வெறுமை… உனக்கு நிச்சியம் ஆனதில் இருந்து என்னால முடியல டி…” என்றவன் ஒரு துளி கண்ணீர் அவள் கைகளில் விழுந்தது….

 

“நான் அவனை லவ் பண்றேன் அவனோட எனக்கு கல்யாணம் ஆக போகுது…”

 

“நீ சந்தோசமா இருக்கியா?”

சிறிது யோசித்தவள்…

 

“ஆமா இருக்கேன்…

அதுவும் இல்லாமல் நீ எங்க குடும்பத்திற்கு பெரிய உதவி பண்ணிருக்க…”

 

“என்ன சொல்லுறா?”(அவ அண்ணன் சாவு பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாதா )

 

ஆமா… எங்க அண்ணாவ, உங்க மாமா கிட்ட இருந்து நீ காப்பாத்த போராடி இருக்க… ஆனா முடியல… அதற்காக உங்க மாமா கிட்ட கூட சண்டை போட்டிருக்க என்று அரவிந்த் சொன்னான்…

அந்த நன்றிக்காக தான் இங்க நான் உட்கார்ந்திருக்கேன் புரியுதா?”

 

“இது என்ன புது கதை…

எப்படி இருந்தால் என்ன…… இதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்க வேண்டும்…

நிஞ்ஜா!!… அப்போ உங்க அண்ணன்காக என்னை நீ கல்யாணம் பண்ணி எனக்கு வாழ்க்கை கொடுக்கலாம்ல… இல்ல என்றால் ஹாஸ்பிட்டல்ல என் கூட ரெண்டு வாரம் இரேன்…”

 

“அடிங்க!! உன் புத்தி மாறாது என்று எனக்கு தெரியாதா?…”

 

“பிளீஸ் நிஞ்ஜா!!… அது எல்லாம் முடியாது…

என்னால உனக்கு ஆயா வேலை பார்க்க சொல்லுறியா?…

உன்ன இரண்டு நாள் வீட்ல வச்சதுக்கே நான் ரொம்ப பட்டுடேன்…”

 

“ப்ட்ச்!! கிளம்பு டி… ” என்றான் கோவத்தில்…

 

உடனே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அரவிந்தும் தனுவும்…

“டேய்!!… என்ன டா ஆச்சு?” என கேட்டால் தனு கலங்கிய குரலில்…

 

“ஒன்னும் இல்ல டி கருவாச்சி…சின்ன அடி தான்…”

 

“இதுவா?… இனி நான் உன் கூடவே இருக்கேன்… வீட்ல சொல்லி கால் பண்ணி வர சொல்லுறேன்…

 

கெளதம் எழுந்து மெல்ல அவள் காதில்…

“அடியே!!… இப்போ தான் ரொம்ப நாள் கழிச்சு நிஞ்ஜாவை பார்க்கிறேன்… அப்படியே அவ கூட இருக்கலாம்ன்னு பார்த்தால்…. என் காதலுக்கு சங்கு 

ஊதவே… அங்க இருந்து கிளம்பி வந்தியா…

ஏதாவது ஐடியா சொல்லு டி…!!”

 

அவன் கூற்றில் கோபம் துளிர்க்க… “இரு டா!! நீ இப்படி போறியா?”

 

அரவிந்த், நான் கௌதமை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறேன்… என்

வீட்டுக்கு தெரிய வேண்டாம்… இப்போ தான் பெரியப்பா செத்து எல்லாம் சரி ஆகிருக்கு… இப்போ இவனுக்கும் ஒன்று என்றால் ரொம்ப பயந்து விடுவார்கள்…. இவன் காண்ட்ராக்ட்காக மும்பை சென்று இருக்கிறான் என்று சொல்லி விடலாம்….அப்பா கிட்ட மட்டும் விசயத்தை சொன்னால் எல்லாம் நார்மல் ஆகிடும்…அவர் வீட்டுக்கு தெரியாம பார்த்து கொள்வார்…”

 

என்னது இந்த தனு… அரவிந்த் வீட்டில் இருக்க போகிறாளா…நோ வே…

யார் வீட்டில் யார் இருப்பது?… நீ அங்க எல்லாம் போகக் கூடாது…. என்றாள் ரோஹிணி வெடுக்கென்று… திரும்பி பார்த்த அரவிந்த…

“அதை சொல்ல நீ யாரு டி?”

 

அவனை அடிப்பட்ட பார்வை பார்த்து…

“நமக்கு கல்யாணம் ஆக போகுது… “

 

“அதான் இன்னும் ஆகலையே” என்றான் திமிராய்…

 

திடீர் என்று வெளியே செல்ல இருந்தவளிடம் “நிஞ்ஜா என் கூட தான் இருப்பா… இல்லைன்னா நான் அங்க இருக்க மாட்டேன்.”. “ஏய் கருவாச்சி!!… நீ கூட அவளுக்கு பிறகு தான் எல்லாம் நியாபகம் இருக்குல்ல…”

 

“ம்ம்!!…” என்றாள் முறைத்து கொண்டே…

 

“அப்படியே உனக்கு எல்லாத்தையும் அவளே செய்யட்டும்…என்று வெளியே கிளம்பி விட்டாள் தனு…

“ஹே நிஞ்ஜா பேபி… இங்க வா டி…”

 

“டேய்!!… உன்ன என்ன பண்ணுறேன் பாரு…”

 

“உனக்கு தான் டி சப்போர்ட் பண்ணினேன்… என்னை பார்த்துக்க மாட்டியா…”

 

“முடியாது போடா…”என்க 

 

“சரி போடி!!… என்று சொல்லி கொண்டே கட்டிலில் இருந்து வேண்டும் என்றே கீழே விழுந்தான்… வலியை பல்லை கடித்து பொறுத்து கொண்டு… டேய் என்னடா… இப்படி பண்ணிட்ட… அவனை எழுப்ப வேண்டும் என்றே அப்படியே படுத்து கொண்டிருந்தான்… சரி வரேன் உன்ன பார்த்துக்க…

 

“ம்ம்!!” என்றான் மண்டையை ஆட்டி கொண்டே…

 

“இத மட்டும் நல்ல பண்ணு டா…”

 

ஹீ!!…ஹீ!!…வேண்டும் என்றே அவள் இடுப்பில் கையை சுற்றி நெஞ்சில் அணைத்துக் கொண்டான்… அடேய் விடு டா மாடு!!… மாடு இல்ல டி… காஞ்ச மாடு அப்படி தானே சொல்லுவ… “

 

“விடு…!!”

 

“ம்ம் சரி!!” என்றான் இன்னொரு முறை இறுக்கி அணைத்து கொண்டே…

 

“ச்சை!! எல்லாம் என் நேரம் என்று சொல்லி கொண்டாலும் மனதில் அவன் இயல்பு நிலைக்கு மாறி வந்து விட வேண்டும் என்று, அவசரமாக கடவுளிடம்

வேண்டுதல் வைத்தாள்.

( இது காதலுக்கு நல்ல அறிகுறி)

 

இனி காதல் கலாட்டா… ஆரம்பம்…  

 

ஆராதிப்பாள்!!

 

8 thoughts on “மாயோனின் இதயசிறையில்”

  1. Hey I know this is off topic but I was wondering if
    you knew of any widgets I could add to my blog that automatically
    tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for
    quite some time and was hoping maybe you
    would have some experience with something like this.
    Please let me know if you run into anything. I truly enjoy reading your blog
    and I look forward to your new updates.

  2. Наслаждайтесь удобством и скоростью [url=https://dostavka-alcogolya-club331.ru]доставка алкоголя мск 24 часа[/url] прямо сейчас!
    Важно строго контролировать возраст покупателей и условия хранения напитков на маршруте.

  3. You are so interesting! I don’t think I have read through a single thing like that before.
    So great to find somebody with original thoughts on this topic.
    Seriously.. thanks for starting this up. This site is one thing that’s needed on the internet, someone with
    a bit of originality!

  4. Hi, I do believe this is a great blog. I stumbledupon it 😉 I’m going to revisit
    once again since i have saved as a favorite it. Money and freedom is the greatest way to change,
    may you be rich and continue to guide others.

Leave a Reply to new online casinos Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top