ATM Tamil Romantic Novels

உயிரை உரசாதே உறவே

2. உறவு 
 
“இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
 
சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள்.
 
திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில் பேசினான்.
 
“ஹான்” என்று நிதர்சனத்திற்கு வந்தவள் தன் கவுண்டரில் நின்றிருந்தவரிடம் கேஷ்  வாங்கிக்கொண்டாள்.
 
மதியம் லன்ச் டைம் வந்தது. “திலீப் சாப்பிடப்போலாமா?” என்று கேட்டாள் சிற்பிகா. அவள் பசி தாங்கமாட்டாள். டைம்க்கு அவள் வயிற்றில் அலாரம் அடித்து விடும். திலீப்க்கு வேலை அதிகம் இருக்க. “இருப்பா இதோ பைவ் மினிட்ஸ்ல வேலை முடிஞ்சுடும் போலாம்” என்று சொல்லியவன் வேலையை முடித்து விட்டு எழுந்தான்.
 
சிற்பிகாவோ “நான் முன்னே போறேன் திலீப் எனக்கு பசிக்குது” என்று பேக்கை மாட்டிக்கொண்டு சாப்பிடும் இடத்திற்குச் சென்றாள். அங்கே சந்தோஷ் அடுக்கு டிபனிலிருந்து சாதத்தை எடுத்து தட்டில் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்து டேபிளுக்கு அவள் கால்கள் தானாகவே சென்றது. 
 
“ம்மா இன்னிக்கு சாம்பார் சூப்பர். வாழைப்பூ பொரியல் செம டேஸ்ட்” என்று பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
 
“மிச்சம் வைக்காம சாப்பிடுடா கண்ணா” என்று அமுதவள்ளி மறுமுனையில் சொல்ல
 
“ம்ம் மிச்சம் வைக்காம சாப்பிட்டேன்மா” என்று ஸ்கூல் குழந்தை சொல்லிக் கொண்டு இருக்க அவனை கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் சிற்பிகா. ‘ஓ இவன் அம்மா பையனா கொஞ்சம் கஷ்டம்தான் டி சிற்பிகா உன் நிலமை ப்ச் யார இருந்தாலும் இந்த சிற்பிகா அவங்களை பேசியே மடக்கிடுவா’ என்று அசால்ட்டாய் பேசினாள் சிற்பிகா. அமுதவள்ளியை பற்றி முழுதாக தெரிந்துக் கொள்ளாமல்.
 
அதற்குள் திலீப் சிற்பிகாவின் பக்கம் வந்தவன் சந்தோஷை பார்த்துக்கொண்டிருந்தவளின் கையை பிடித்து “அங்க என்ன வேடிக்கை பார்க்குற” இழுத்துக்கொண்டு வந்து வேறு டேபிளில் உட்கார வைத்தான்.
 
“ஏய் எதுக்குடா என் கையை பிடிச்சு இழுத்துட்டு வர?” என்று திலீப்பை முறைத்தாள் சிற்பிகா.
 
“நீ சந்தோஷ் சாரை பார்க்குற பார்வையே சரியில்லை உனக்குதான் உன் கனவு நாயகன் இருக்கான்ல அப்புறம் ஏன் மேனேஜரை சைட் அடிக்குற? இது சரியில்லை” என்று அவளை திட்டிக்கொண்டே டிபன் பாக்ஸை திறந்தான் திலீப்.
 
“திலீப் என் கனவுல வருவான்ல அ… அது நம்ப புது மேனேஜர் சந்தோஷ் சார்” என்றவளுக்கு வெட்கம் வந்து விட தலையை குனிந்துக் கொண்டாள்.
 
“எ… என்னது உன் கனவுல வருவது நம்ம மேனேஜரா!” என்று சத்தமாக கேட்டுவிட்டான் திலீப். 
 
இவர்கள் போட்ட சத்தத்தில் அமுதவள்ளியிடம் போன் பேசிக்கொண்டிருந்த சந்தோஷ் இருவரையும் நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.
 
திலீப்போ “சாரி சார்” என்று அமைதியாகி சாப்பிட ஆரம்பித்தான்.
 
‘ஏன்டா’ என்பது போல பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சிற்பிகா.
 
சந்தோஷ் சாப்பிட்டு முடித்தவன் டிபன் பாக்ஸை கழுவி வைத்து விட்டு சிற்பிகா, திலீப் இருவரையும் தாண்டிச் செல்லும்போது திரும்பி பார்த்து “இரண்டு பேரும் சாப்பிடும்போது கூட பேசாம சாப்பிட மாட்டீங்களா? அப்படியே பேசினாலும் மெதுவா பேசமாட்டீங்களா?” என்று சிறு அதட்டலாகவே கேட்டுவிட்டான்.
 
“அ…அது இனிமே பேசலை சார்” என்று பொறுமையாக பதில் கூறினாள் சிற்பிகா.
 
“ம்ம்” என்றவன் அங்கே நிற்காமல் சென்றுவிட்டான்.
 
அவன் சென்றதும் “நாம ரெண்டு பேரும் வேலை செய்யும் இடத்துல பேசினா தப்பு, சாப்பிடும் நேரத்துல கூடவா பேசக்கூடாது” என்று “இவனை பார்த்தா எனக்கு கோபமா வருது சிற்பிகா”  என்றான் திலீப்.
 
சிற்பிகாவோ “அவர் சொல்றது சரிதான் எங்கம்மா கூட சொல்லியிருக்காங்க சாப்பிடும்போது பேசினா ஜீரணம் ஆகாதாம் இனிமே சாப்பிடும் நேரம் பேசாதே” என்று சாப்பிட ஆரம்பித்தாள். “லவ்வர் வந்துட்டா இந்த நண்பன் பேசறது தொல்லையாத்தான் தெரியும்” என்று கோபித்துக்கொண்டு எழுந்தான் திலீப்.
 
“ரொம்ப கோபப்படாதே திலீப் உட்காரு உன் லெமன் ரைஸ் நான் இன்னும் எடுத்துக்கல” என்று அவன் தனியாய் எடுத்து வைத்திருந்த லெமன் ரைஸை சாப்பிட்டாள்.
 
“இந்த கார சட்னி உனக்கு செட் ஆகமாட்டான்டி உனக்கு வேற நல்ல பையனா கிடைப்பான்” என்றான் திலீப். 
 
சிற்பிகாவோ “எனக்கு காரசட்னித்தான் பிடிக்கும்னு உனக்கு தெரியும்ல நியூ இயர் அன்னிக்கு நம்ம பேங்குல நியூ இயர் செலிபரேசன் பண்ணுவோம்ல அப்ப சந்தோஷ் சார்கிட்ட உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. என் கனவுல தினமும் நீங்க வர்றீங்கனு சொல்லி லவ் புரோபோஸ் பண்ணப்போறேன் லன்ச் டைம் முடிஞ்சது வா போகலாம்” என்று அவளது சீட்டுக்கு வந்து அமர்ந்தாள்.
 
மாலையானதும் சந்தோஷ் கேபினை எட்டிப்பார்த்தாள் சிற்பிகா.
 
அவனோ இந்த மன்த் லோன் எத்தனை பேர் வாங்கியிருக்காங்க என்று செக் பண்ணிக்கொண்டிருந்தான் கம்ப்யூட்டரில்.
 
“சார் வேலையில சின்சியர் போலவே” என்று சந்தோஷின் கேபினை தட்டிக்கொண்டுச் சென்றாள்.
 
அவளோ வெகுநேரம் நின்றுக் கொண்டேயிருந்தாள்.
 
“சார்” என்றாள் மெதுவாக.
 
“ம்ம் சொல்லுங்க” என்று நிமிர்ந்தவனின் காந்தக் கண்களை பார்த்தவளுக்கு பேச வார்த்தை வரவில்லை பேச வந்ததை மறந்து விட்டாள்.
 
“ம்ப்ச் எனக்கு வேலையிருக்கு மேடம் டைம் வேஸ்ட் பண்ணாம சொல்லுங்க” என்றான் சலித்துக்கொண்டு.
 
அவள் செய்த வேலைகளை சொல்லி முடித்து “நா…நான் கிளம்புறேன் சார்” என்றதும்
 
“ம்ம்” என்று கம்ப்யூட்டருக்குள் தலையை நுழைத்துக் கொண்டான். 
 
அவளோ அங்கேயே நின்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
 
அவனோ அங்கே ஒருத்தி நிற்கிறாளா என்று கூட சட்டை செய்யாமல் இருந்தான்.
 
அழகா இருக்கானே கனவுல பார்க்கறதை விட மேன்லியா இருக்கான்ப்பா என்று பெரும்மூச்சுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
‘சரியான குட்டிச்சாத்தானா இருப்பா போலயே அப்படியே நம்மளையே உத்து பார்க்குறா. இது பேங்க்கா இல்ல பார்க்கா இவகிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்’ என்று யோசித்தவன் தன் வேலைகளை முடித்து வீட்டுக்குக் கிளம்பினான்.
 
சிற்பிகாவோ மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குள் சென்றாள். அவர்களது கார்மென்ட்ஸ் வீட்டுக்கு பக்கத்திலேயே வைத்திருந்தனர். அங்கேதான் அவளது அப்பா ஆனந்தன் இருந்தார். உமா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் சிற்பிகாவிடம் கண்டிப்புடன் இருப்பார். காலையில் நேரமே எழுந்து எனக்கு கிச்சன்ல உதவி செய்து துவைச்சு வைச்ச துணிகளை மடிச்சு வை என்று மகளிடம் வேலைகளை சொன்னால் அவளோ அம்மா எனக்கு டயர்டா இருக்கு என்று தப்பித்து ஓடிவிடுவாள்.
 
ஆனந்தன் இன்ஸ்கர்ட் தைத்து வெளியூர்களுக்கும் உள்ளுர் சந்தைகளுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்ஸ்கர்ட்டுகளை பேலாக கட்டிக் கொண்டிருந்தவரிடம் “அப்பா” என்று ஓடிச் சென்று அவரது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
 
“இன்னிக்கு என் பொண்ணு ரொம்ப ஹாப்பியா இருக்காளே அப்படி என்ன நடந்துச்சு பேங்குல” என்று மகளின் முகத்தை பார்த்து புன்னகைத்தார்.
 
“அப்பா தினமும் என் கனவுல ஒருத்தன் வருவானே இன்னிக்கு அவன் என் பேங்குக்கு வந்தான் தெரியுமா?” என்று கண்ணை உருட்டினாள்.
 
“அப்படியா உனக்கு அவன்கிட்ட பேச வாய்ப்பு கிடைச்சுதா?” என்று அவரும் ஆவலாக கேட்டார்.
 
சிற்பிகாவிடம் “உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்டா” என்று ஆனந்தன் மகளிடம் கூறினார்.
 
அவளோ தன் கனவில் வரும் நாயகனை பற்றி தயங்கியபடியே சொல்ல மகளின் பைத்தியக்காரத்தனத்தை கண்டு கோபம் கொண்டவராக “ஏன் டி நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க கனவுல வருபவனை எல்லாம் கல்யாணம் பண்ணுறேனு சொல்லுற. ஒழுங்கா நாங்க பார்க்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுற வழியை பாரு உனக்கு மாப்பிள்ளை பிடித்தான் தான் கல்யாணம் பண்ணிவைப்போம்” என்று காரசாரமாக பேசினார் உமா.
 
சிற்பிகாவோ ஆனந்தனை பார்த்து “ப்பா ப்ளீஸ்ப்பா இன்னும் ஒரு 6 மாசம் டைம் கொடுங்க அதுக்குமேல நீங்க பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று கண்ணை சுருக்கி கெஞ்சிக்கேட்டாள்.
 
“சரிடா இன்னும் ஒரு ஆறுமாசம்தானே என்னோட செல்ல மகளுக்காக நீ சொல்றதை நான் கேட்குறேன். அதுக்குமேல நாங்க சொல்றதை நீ கேட்கணும் சரியா?” என்று மகளின் நெற்றியில் முட்டினார் ஆனந்தன்.
 
“அப்பானா அப்பாதான்” என்று ஆனந்தனை கட்டிக்கொண்டு உமாவை பார்த்து எப்படி என்று புருவம் உயர்த்தி இதழை கோணினாள் சிற்பிகா.
 
“இப்படியே இவ சொல்றதை கேட்டா உங்க பொண்ணு முதிர்கன்னி தான் ஆவா பார்த்துக்கோங்க. இவளோட படிச்சவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு சரி பொண்ணுங்களுக்கு வேலை வேணும்னு இவ்ளோ பொறுத்திருந்தேன். இப்ப உங்களை பேசியே மடக்கிட்டா” என்று ஆனந்தனிடம் சண்டைக்கு வந்தார் உமா.
 
“ஏய் போய் வேலையை பாருடி நமக்கிருக்கிறது ஒரு பொண்ணு அவ ஆசைப்படுறது போல ஒரு ஆறுமாசம் காத்திருப்போம்டி” என்று உமாவை சமாளித்து பேச. 
 
உமாவோ “க்கும் நான் சொல்றதை என்னிக்கு கேட்டிருக்கீங்க இன்னிக்கு கேட்க” என்று கழுத்தை நொடித்துக்கொண்டுச் சென்று விடுவார்.
 
“அப்பா என் கனவுல வந்தவருதான் இப்போ நான் வொர்க் பண்ணுற பேங்கல மேனேஜரா வந்திருக்காரு” என்றவளுக்கு முகத்தில் மகிழ்ச்சி துள்ளியது.
 
“பையன் எப்படிடா நல்ல குணமா இருக்கானா? சொல்லு நான் வந்து என் பொண்ணுக்காக பேசுறேன். அவன் குணம் எப்படினு எனக்கு தெரியணும்டா! எங்களுக்கு நீ ஒரே பொண்ணு நீ விருப்பப்பட்டேனு உன்னை தூக்கி அப்படியே கொடுத்திட முடியாது” என்றார் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமேயென்று.
 
“அவர் முகத்தை பார்த்தா நல்லவனாதான் தெரியுறாருப்பா. அதுவும் அவர் சாப்பிடும்போது அவர் அம்மாகிட்ட பாசமா பேசினது எனக்கு கேட்டுச்சு. அம்மா மேல பிரியமா இருக்கவரு மனைவி மேலயும் பிரியமாத்தானே இருப்பாங்க” என்று சந்தோஷ்சுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தாள் சிற்பிகா.
 
“ம்ம் நீ பேசுடா” என்றவர் “ஜாக்கிரதையா இருக்கணும் ராஜாத்தி” என்று மகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் மறைமுகமாக.
 
“நான் பார்த்துக்குறேன்ப்பா” என்றவளோ தன் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்ததும் “ஹேய் சிற்பிகா சப்பாத்தி போடுறேன்டி வந்து தேச்சுக்கொடு” என்று சமையல்கட்டிலிருந்த சத்தம் கொடுத்தார் உமா.
 
“ம்மா பணம் எண்ணி என்னோட விரல்லெல்லாம் வலிக்குதும்மா ப்ளீஸ் நீயே போடேன் உன் கையால சப்பாத்தி போட்டா சும்மா வெண்ணெய் போல சாஃப்டா இருக்கும்” என்று வாய் ஓயாது பேசி டீவி ரிமோட்டை எடுத்து டிவியை போட்டாள். 
 
“ம்ம் சாஃப்டா இருக்கும்டி நாளைக்கு போற இடத்துல மாமியார்கிட்ட பேச்சு வாங்குவ பாரு அப்ப நீ  சமைக்கும்போது இந்த அம்மாவோட அருமை உனக்கு தெரியும்” என்று மகளை புகைந்துக் கொண்டே சமையல் செய்ய ஆரம்பித்தார். 
 
உமாவும் சிற்பிகாவுக்கு பெரிய வேலையெல்லாம் செய்ய சொல்லமாட்டார். காலையில் பாத்திரம் கழுவுவது, வீடு பெருக்குவது என்று சிறு சிறு வேலையெல்லாம் செய்ய சொல்லுவார். அதற்கே சிற்பிகா ஆயிரத்தெட்டு காரணம் சொல்லி தப்பிக்க பார்ப்பாள். அதையும் செய்ய வேண்டி வந்தால் ஆனந்தனை உதவிக்கு அழைத்து வந்துவிடுவாள் சிற்பிகா. உங்க மகளை வேலை செய்ய சொல்ற நேரம் நானே செய்துப்பேன் என்று கண்ணைமூடிக்கொண்டு வேலையை செய்துவிடுவார்.
 
டீவியில் கண்ணழகா காலழகா என்று பாட்டு வர சந்தோஷின் காந்தகண்கள் அவளின் நினைவில் வந்தது. அப்பப்பா அவர் முறைக்கும்போது கூட செமயா இருக்காரு என்று சந்தோஷின்  எண்ணங்களில் மூழ்கி இருந்தவளின் கையை தொட்டு “சப்பாத்தி சுட்டு வச்சிருக்கேன் சாப்பிட்டு கதவை மூடி படுத்துக்கோ அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன்” என்று வீட்டை ஒட்டினதாற் போல இருக்கும் கார்மென்ட்ஸிற்குச் சென்றார் உமா.
 
ஆனந்தனும் உமாவும் தைக்க வரும் நபர்கள் தைத்து மடித்து வைத்து பாவாடை பீஸ்களை பேல்லாக கட்டி வைத்துவிட்டு வருவதற்கு மணி பதினொன்று கூட ஆகிவிடும் அதனால்தான் மகள் சாப்பிட்டு படுக்கட்டும் என்று சமைத்து வைத்துச் செல்வார் உமா.
 
“சப்பாத்தி செய்துட்டியா ரொம்ப பசியா இருக்கு” என்று சமையல்கட்டுக்கு ஓடியவளை பார்த்து ‘இவ வயசுல எனக்கு இவ பொறந்துட்டா இவளோ பசிக்குதுனு சின்னபிள்ளையாட்டம் ஓடுறா நாளைக்கு கல்யாணம் ஆகி என்ன பண்ணப்போறாளே’ என்று கவலையுடன் சென்றார் உமா.
 
சாப்பிட்டு முடித்து தட்டை கழுவி வைத்து விட்டு கதவை லாக்செய்து விட்டு தன் அறைக்குள் வந்து படுத்ததும் சந்தோஷின் ஞாபகம்தான் வந்தது. கனவில் பேசிக்கொண்டிருந்தவனை இன்று நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன் என்றது போல சந்தோஷுக்கே தெரியாமல் அவனை தன் போனில் போட்டோ எடுத்து வைத்திருந்தாள் சிற்பிகா.
 
கட்டிலில் படுத்துக்கொண்டு போனில் சந்தோஷின்  போட்டோவுக்கு முத்தம் கொடுத்தவள் “டேய் பச்சை மிளகாய் என்னடா பண்ணுற இத்தனை நாளாய் என் கனவுல வந்து தூக்கத்தை கெடுத்துட்டு இன்னிக்கு என் கண்ணு முன்னால வந்து நின்னு என்னை கவுத்துட்டியாடா எப்போ உன்கிட்ட நான் லவ் சொல்லி என்னை நீ கல்யாணம் பண்ணுறது. ரொம்ப எக்ஸைன்ட்மெண்டா இருக்கு சந்தோஷ்  உன்கிட்ட லவ் சொல்ற தருணம் நான் பொக்கிஷமா வச்சிப்பேன்” என்று போட்டோவில் இருந்த அவனது இதழில் முத்தமிட்டாள்.
 
அமுதவள்ளி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சந்தோஷிற்கு புரையேறியது. சந்தோஷ் பக்கம் உட்கார்ந்திருந்த சண்முகமோ “உன்னை யாரோ நினைக்குறாங்கப்பா” என்று தண்ணீரை எடுத்து கொடுத்தார் மகனிடம்.
 
“நான் என் மகன் பக்கம் இருக்கும்போது யார் என் மகனை நினைப்பாங்க. என்னை தவிர யார் என் பையன் மேல அக்கறையா இருக்க முடியும். கண்ணா நீ மெதுவா சாப்பிடு அவசரமா சாப்பிட்டா புரை ஏறத்தான் செய்யும்” என்று சந்தோஷின்  தலையை மெதுவாய் தட்டிவிட்டு கணவனை முறைத்தார் அமுதவள்ளி.
 
“அமுதா நீ பேசறது உனக்கே ஓவரா தெரியலையாடி. ஏன் எங்கப்பா எங்கம்மாகூட அவங்க பேரனை நினைக்க மாட்டாங்களா நீ மட்டும்தான் உன் பையனை நினைப்பியா?” என்று கேட்டுவிட
 
“ஹான் உங்கப்பா உங்கம்மாவும் காலையிலதானே போன்ல பேசினாங்க. அதுக்குள்ள எப்படி நினைப்பாங்க நான் இப்பவும் என் பையன் பக்கத்துல நிற்குறேன். என் நினைப்பு முழுவதும்  என் மகன் மேல தான் இருக்கு இனிமே என் பையனுக்கு புரை ஏறுனா உங்கம்மாதான் நினைச்சுட்டானு சொல்லுங்க” என்றார் முரட்டுத்தனமாக மகன் மீது பாசம் வைத்த அன்னை அமுதவள்ளி.
 
அமுதவள்ளியின் பேச்சு முன்னே பொட்டிபாம்பாய் அடங்கிப்போனார் சண்முகம்.
 
சந்தோஷோ தாயின் பாசத்தில் நெகிழ்ந்து போய் “ப்பா எனக்கு பர்ஸ்ட் அம்மாதான் அதுக்கப்புறம்தான் பாட்டியும் தாத்தாவும்” என்றதும் அமுதவள்ளியின் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது.
 
“ம்ம் பார்த்துக்கோங்க” என்று பெருமை கொண்டு மகன் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையல்கட்டுக்குள் சென்றார்.
 
“இவ பாசம் ஒருநாள் எங்கே கொண்டு போய் முடியப்போகுதே தெரியலையே நாளைக்கு உனக்கொரு ஒரு பொண்டாட்டி வரும்போது தெரியும்” என்று பெரும்மூச்சு விட்டு எழுந்தார்.
 
“ப்பா அதுக்குத்தான் நான் உஷாரா அம்மா பார்த்து வைக்குற பொண்ணை கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்கேன்” என்று சிரித்தான் சந்தோஷ்.
 
“ம்ம் பார்க்கலாம்” என்று அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.
 
அறைக்குள் வந்து படுத்த சந்தோஷிற்கு நாளைக்கு என்ன என்ன வேலைகள் இருக்கு என்று அசைப்போட்டபடி படுத்திருந்தான். இன்று என்ன என்ன வேலைகள் முடித்து வைத்தோம் என்று நினைவு படுத்த அவன் நினைவில் வந்து நின்றது சிற்பிகாதான் அவள் பேசுவதை கேமராவில் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். ‘சரியான சில்வண்டா இருப்பா போல’ என்று சிரித்தபடி உறங்கிவிட்டான் சந்தோஷ். அவன் நெஞ்சில் வண்டு போல குடையப்போகிறாள் என்று தெரியாமல் உறங்குகிறான்.
 
 

5 thoughts on “உயிரை உரசாதே உறவே”

  1. купить кокаин, мефедрон, бошки, марихуану По репе получил! Еще раз увижу безобразный флуд во всех ветках, будет тебе БАН!Заказывал 200й, прислали с приятным бонусом! Конспирация- чудесна! В общем все супер! ребята как-то странно работают,но надеюсь,что честно

  2. Нужен удобный способ заказать справку срочно и без посещения поликлиники? На сайте [url=https://romashkaclinic.ru]https://romashkaclinic.ru[/url] доступен огромный выбор справок: от справки 001-ГС/у, 027/у, 086/у до документов для плавания, ВНЖ и КЭК-заключений — всё выполнено официально и с курьерской доставкой. Оформление занимает считанные минуты, ссылка ведёт прямо к нужной форме. Это без хлопот, официально и без заломов. Узнайте подробности — справка онлайн, быстрое оформление, https://romashkaclinic.ru доставка справки.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top