ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ

கள்ளோ காவியமோ – 2
கருப்பு நிற சொகுசு கார், சென்னை புறநகரில் இருந்த பெரிய பிரம்மாண்ட பங்களாவிற்குள் சீறிப் பாய்ந்து நுழைந்தது. சுற்றிலும் மின்சாரக் கம்பி வேலி அமைக்கப்பட்ட உயரமான மதில் சுவர்கள், நவீன ரகத் துப்பாக்கிகளுடன் காவல் காக்கும் முரட்டு ஆட்கள் என அந்த இடமே அரசாங்கத்தின் கண்ணில் படாத ஒரு தனி ராணுவக் கோட்டை போலக் காட்சியளித்தது. அதுதான் ராஜதேவாவின் சாம்ராஜ்யம். அந்த பங்களாவின் வாசலில் நின்றிருந்த பெரிய இரும்பு கேட், கார் உள்ளே நுழைந்ததும் பயங்கர சத்தத்துடன் மூடப்பட்டது.
 
காரின் பின் இருக்கையிலிருந்து இளவேனில் கீழே இறக்கப்பட்டாள். அவளது கைகள் இன்னும் கயிறால்  கட்டப்பட்டிருந்தன. துறைமுகத்தில் நடந்த கைகலப்பில் அவளது கூந்தல் கலைந்து, முகத்தில் வியர்வை துளிகள் அரும்பியிருந்த போதிலும், அவளது முகத்தில் அச்சத்தின் நிழல் கூட இல்லை. அவளுக்குப் பின்னால் கார் கதவைத் திறந்து கொண்டு கம்பீரமாக இறங்கினான் ராஜதேவா. அவனது விரல்களுக்கு நடுவே எரியும் சிகரெட்டின் புகை, அந்த நள்ளிரவு காற்றில் அவனோடு கூடவே பயணித்தது. அந்த சிகரெட் புகை நள்ளிரவுக் காற்றில் கலந்தது போல, அவனது நிழல் உலக அதிகாரமும் அந்த இடம் முழுக்கப் பரவியிருந்தது.
 
தேவா அவளை கட்டி வைக்க சொல்லவில்லை. மாறாக, அவளது கயிறுகளை அவிழ்க்க சொல்லி, ஹாலில் இருந்த ஒரு சோபாவில் அமர வைத்தான். 
 
அவள் சோபாவில் அமர்ந்ததும் “விடியட்டும்… காலைல 6 மணிக்கு உன் ஆபீஸிலிருந்து நியூஸ் வருதான்னு பார்ப்போம். அப்படி வரலனா… நீ பொய் சொன்னதுக்காக உன்னை என்ன பண்ணலாம்னு நான் முடிவு பண்றேன். அதுவரைக்கும் இங்கேயே இரு…” என்று தேவா அதிகாரமாக சொல்லிவிட்டு, சோபாவில் அமர்ந்து மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
 
இளவேனில் தன் மணிக்கட்டுகளை தடவிக்கொண்டே, “நீங்க என்னை அடைச்சு வச்சிருக்கிறது வெளியே தெரிஞ்சா, உன்னோட சாம்ராஜ்யமே தரைமட்டமாகிடும். முக்கியமா, என் பிரண்டு ஜீவாவுக்கு ஏதாவது ஆச்சு… நான் உன்னை இந்த உலகத்துல நிம்மதியா வாழ விடமாட்டேன். மீடியாவை சும்மான்னு நினைச்சீங்களா?” என்று சிங்கப்பெண் போல ஆக்ரோஷமாக கர்ஜித்தாள்.
 
ராஜதேவா அவளது பேச்சை கேட்டு லேசாக புன்னகைத்தவன், சிகரெட் புகையை காற்றில் ஏவியபடி,
“உன் உசுரே இப்போ என் கைலதான் இருக்கு. ஆனா, நீ இன்னும் உன் பிரண்டைப் பத்தியே பேசிட்டு இருக்க? யார் அவன்? உனக்கு அவ்வளவு முக்கியமானவனா? இல்ல  உன் காதலனா?” என்று இதழ் வளைத்தபடி, அவளது முகத்திற்கு மிக அருகில் குனிந்தான்.
 
அவனது கூர்மையான பார்வையின் வீச்சு இளவேனிலின் மூச்சை ஒரு நொடி ஸ்தம்பிக்க வைத்தது. அந்த நெருக்கம் அவளைப் பின்வாங்கச் சொல்லியும், அவளது பிடிவாத குணம் அவனை நேருக்கு நேர் எதிர்கொண்டது.
 
ஜீவாவையும் தன்னையும் இணைத்து பேசியதில் அவள் முகம் கோபத்தில் மின்னியது.
 
“ஜீவா என் பிரண்டு மட்டும் இல்ல… இந்த உலகத்துல எனக்கு இருக்குற ஒரே சொந்தம்! அனாதை இல்லத்துல யாரும் இல்லாம, ஆதரவற்று வளர்ந்த எனக்கு அவன்தான் எல்லாமே…” என்றாள் உயர்ந்த குரலில் இளவேனில்.
 
அவளது குரலில் கோபம் இருந்தாலும், ஜீவாவை நினைத்து அவளது கண்கள் லேசாகக் கலங்கி, ஒரு துளிக் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.
 
இளவேனில் அனாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்று சொன்ன அடுத்த நொடி, ராஜதேவாவின் முகத்தில் இருந்த முரட்டுத்தனம் ஒரு கணம் மட்டுப்பட்டது. அவனது கூர்மையான கண்கள் பழைய கடந்த கால வலியின் நினைவில் நிலைகுத்தி நின்றன. அவன் முகத்தில் சட்டென காரிருள் வந்து சூழ்ந்தது போல இருந்தது. அவளது ஒற்றைத் துளிக் கண்ணீர், அவனது நெஞ்சுக்குள் எப்போதோ ஆறிப்போன ஒரு பழைய ரணத்தை மீண்டும் கீறிவிட்டது போல, அவன் உடல் லேசாக சிலிர்த்தது.
 
அந்த நேரம், தேவாவின் மடியில் இருந்த பிரத்யேக சாட்டிலைட் போன் பெரிய சத்தத்துடன் ஒளிரத் தொடங்கியது. திரையில் நடராஜன் என்ற பெயர் மின்னியது. வெளியில் பெரிய தொழிலதிபராக அறியப்படும் அவன், மறைமுகமாக வெளிநாட்டு மாஃபியாக்களுக்கு பாரம்பரிய கலை பொக்கிஷங்களையும் பழங்கால சிலைகளையும் கடத்தி விற்கும் சர்வதேச கும்பலின் நிழல் உலகத் தலைவன்.
 
தேவா சிகரெட்டை அஸ்ட்ரேயில் அணைத்துவிட்டு, போனை காதில் வைத்தவன், “சொல்லு நடராஜன்…” என்றான் கரகரப்பான குரலில்.
 
மறுமுனையில் நடராஜனின் குரல் பதற்றமாகவும் ஆத்திரமாகவும் வந்தது.
 
“தேவா! நான் சொன்ன வேலை என்ன ஆச்சு? தொலைக்காட்சி புலனாய்வு பத்திரிகையாளர் இளவேனிலை தூக்கிட்டியா இல்லையா? அவ என்னோட சிலை கடத்தல் நெட்வொர்க்கை பத்தி ரகசியமா நியூஸ் சேகரிச்சு வச்சிருக்கா. அந்த ஆதாரங்கள் நாளைக்கு வெளிய வந்தா என் பிசினஸும் கௌரவமும் எல்லாம் க்ளோஸ்! அவளை உடனே கடத்தி கொண்டு வந்து என் முன்னாடி நிறுத்த வேண்டியது உன் பொறுப்பு!”
 
போனில் வந்த வார்த்தைகளை கேட்ட தேவா, அதிர்ச்சியோடு தன் முன்னால் அமர்ந்திருந்த இளவேனிலைப் பார்த்தான். அவள் கழுத்தில் தொங்கியிருந்த ஐடி கார்டில் இளவேனில் என்று பார்த்தவன்,
“இளவேனில்…” என்று மெதுவாக உச்சரித்தான்.
 
மறுமுனையில் நடராஜன், “ஆமா! அவ பேர் இளவேனில்தான். அவளை தூக்கிட்டியா?” என்றான்.
 
தேவா தன் பார்வையை இளவேனிலிடமிருந்து விலக்காமல், உதடுகளில் ஒரு குரூரமான புன்னகையை வரவழைத்துக் கொண்டவன், “நடராஜன்… நீங்க தூக்க சொல்லுற பொண்ணு, இப்போ என் கோட்டைக்குள்ள என் கஸ்டடில இருக்கா!” என்றான்.
 
நடராஜன் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, “அப்பாடா! செம தேவா. அவகிட்ட இருக்குற சிலை கடத்தல் ஆதாரங்கள் அடங்கிய ஃபைல் எங்கன்னு அவகிட்ட கேட்கணும். அவளை அப்படியே என் ஆளுங்ககிட்ட ஒப்படைச்சிடு…” என்றான் அதிகாரமாக.
 
தேவா நிமிர்ந்து அமர்ந்தவன், “நடராஜன்… அவ உங்களை வேணா மிரட்டியிருக்கலாம். ஆனா இப்போ அவ என் எல்லைக்குள்ள இருக்கா. அவளை உன்கிட்ட ஒப்படைக்கணுமா இல்லையா, அந்த ஆதாரங்களை வச்சு என்ன பண்ணணும்னு இந்த ராஜதேவாதான் முடிவு பண்ணுவான். நான் வச்சதுதான் இங்க சட்டம்!” என்று கணீர் குரலில் முழங்கிவிட்டு, நடராஜனின் பதிலை எதிர்பாராமல் போனை கட் செய்தான்.
 
தேவா போனை கட் செய்த அடுத்த நொடி, மறுபுறம் இருந்த நடராஜன் ஆத்திரத்தில் பற்களைக் கடித்தான்.
 
“இந்த தேவா ரொம்பவே பண்ணுறான்… இவனை புரிஞ்சுக்கவே முடியல!” என்று மேசையை குத்தியவன், பதற்றமாக அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
 
“நான் கடத்துற சிலைகள்ல பாதி வழியிலேயே காணாம போகுது. அது எங்க போகுதுன்னே இன்னும் கண்டுபிடிக்க முடியல. இவன் என்ன பண்ணுறான்னும் தெரியல. அந்தப் பொண்ணை பிடிச்சு தருவான்னு பார்த்தா, இப்போ அவளையே வச்சு எனக்கே எதிரா ஏதாவது விளையாட நினைக்கிறானோ?” என்று மனதிற்குள் கொதித்தான்.
 
அடுத்த நொடி, அவனது கண்கள் சந்தேகத்தில் சுருங்கின. “இல்ல… வெளிநாட்டு மாஃபியாக்களுக்கு சிலைகளை இவனே தனியா அனுப்பி, அதிக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறானோ?” என்று சந்தேகமாக முணுமுணுத்தவன், தன் ஆட்களுக்கு அவசரமாக போன் செய்யத் தொடங்கினான்.
 
ஹாலில் இப்போது அமைதி நிலவியது. இளவேனில் தேவாவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சொல்லு நடராஜன் என்று பேசிய நொடியே, சிலைக் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருக்கும் பெரிய புள்ளி நடராஜன்தான் என்பதை அவளது பத்திரிகையாளர் மூளை ஊகித்துவிட்டது. அதே சமயம், தன்னைத் தேடி ஒரு ஆபத்து கார்ப்பரேட் முகமூடியோடு வந்திருப்பதையும், அதை இந்த தாதா தேவாதான் தடுத்து நிறுத்தியிருப்பதையும் அவள் உணர்ந்தாள்.
 
தேவா எழுந்து நின்றவன், “ரகு… இவளை மாடியில இருக்குற கெஸ்ட் ரூம்ல தங்க வை. இவளுக்குத் தேவையான சாப்பாடு, தண்ணி எல்லாம் குடு. ஆனா ரூம் கதவை வெளிய பூட்டி வைச்சுடு. என் அனுமதி இல்லாம இவ இந்த பங்களாவை விட்டு ஒரு அடி கூட வெளிய போகக் கூடாது. தப்பிக்க நினைச்சா, நம்ம பாணியில என்ன செய்யணுமோ அதைச் செய்…” என்று உத்தரவிட்டுவிட்டு, இளவேனிலை ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு வேகமாக ராஜநடையுடன் மாடிப்படிகளில் ஏறிச் சென்றான்.
 
அவனது மனதில், இளவேனில் தான் அனாதை என்று கூறிய வார்த்தையும், அவளிடம் இருக்கும் சிலைக் கடத்தல் ஆதாரங்களும் சேர்ந்து ஒரு பெரிய புயலை கிளப்பி கொண்டிருந்தன.
 
தேவா சென்றதும், ரகு இளவேனிலை பார்த்து, “வாம்மா… மாடிக்கு போகலாம்,” என்றான் மரியாதையுடன்.
 
இளவேனில் அவனுடன் நடக்கும்போது, அந்தப் பங்களாவின் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கால ஓவியங்களையும், ஆங்காங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அபூர்வமான வெண்கலச் சிலைகளையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள். ஒரு கடத்தல் தாதாவின் வீட்டில் இவ்வளவு கலை நயமிக்க பொருட்கள் இருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.
 
படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே இளவேனில் ரகுவிடம், “யார் போன்ல பேசினது? நடராஜன்தானே? அவன் சிலை கடத்தல் கும்பலோட தலைவன்னு எனக்கு நல்லாத் தெரியும். அவனோட ரகசியங்கள் என்கிட்ட இருக்குன்னு உங்க அண்ணன் அவன்கிட்ட காசு வாங்கிட்டுதான் என்னை இங்க கடத்தி வச்சிருக்காரா?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.
 
ரகு அவளைப் பார்த்து ஒரு கசப்பான புன்னகையை வீசியவன், “ரொம்பத் துள்ளாதம்மா… நீ வெளியில இருந்து எங்க அண்ணனை பார்த்துட்டு, அவர் காசுக்காக எல்லாரையும் கடத்துற ரவுடின்னு தப்பா நினைச்சிட்டு இருக்க. நடராஜன் காசுக்காக நம்ம நாட்டுச் சிலைகளை வெளிநாட்டுக்கு விக்கிறவன். ஆனா எங்க அண்ணன்… அந்தச் சிலைகளை அவன்கிட்ட இருந்து கடத்தி, நம்ம மண்ணோட பொக்கிஷங்களை வெளிநாட்டுக்கு போக விடாம தடுக்குறவர்!
 
இப்போ உன்னை நடராஜன் கேட்டப்பவும் அண்ணன் உன்னை அவன்கிட்ட கொடுக்கல. ஏன்னா, எங்க அண்ணன் காசுக்காக எதையும் செய்யுற தரம் கெட்ட ஆள் இல்லை. அவருக்குன்னு ஒரு கொள்கை இருக்கு,” என்று கூறியவன், அவளை ஒரு பெரிய  அறைக்குள் அழைத்து சென்று கதவை மூடினான்.
 
அறைக்குள் தனியாக நின்ற இளவேனில், ஜன்னல் வழியே விடியற்காலையின் வெளிச்சத்தைப் பார்த்தபடி நின்றாள். ஜன்னல் கம்பிகளைத் தொட்டபடி, தூரத்தில் கேட்கும் கடல் அலையின் சத்தத்தை கவனித்தாள். அவளது மனம் பலவாறாகக் குழம்பியது.
 
ஒருபுறம், தன்னை நம்பி வந்து ஆபத்தில் சிக்கிய தன் உயிர் நண்பன் ஜீவா என்ன ஆனானோ என்ற பதற்றம் அவளை வாட்டியது. அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் தீயாக எரிந்தது.
 
மறுபுறம், ரகு சொன்ன வார்த்தைகள் அவளது சிந்தனையை கலைத்தன. சமுதாயத்தின் பார்வையில் கள்ளனாகத் தெரியும் ராஜதேவா, உண்மையில் அந்த மாஃபியா தொழிலதிபருக்கு எதிரானவனா? இல்ல வெளிநாட்டுக்குச் செல்லும் சிலைகளைத் தடுத்து நிறுத்தும் நிழல் உலகக் காவலாளியா இவன்?
 
அவனது கம்பீரமான பார்வையும், தான் ஒரு அனாதை என்ற வார்த்தையைக் கேட்டதும் அவனது கண்களில் தோன்றி மறைந்த அந்த ஆழமான வலியும், அவளுக்குள் ஒரு புதிய விடுகதையைப் போல தோற்று வித்ததது . தேவாவை பற்றிய சுவாரசியம் அவளுக்குள் இன்னும் அதிகமானது.
 
ஒரு பத்திரிகையாளராக அவனது முகமூடியைக் கிழிக்க நினைத்தவள், இப்போது அந்த மனிதனின் அசல் முகம் என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவலில் திகைத்து நின்றாள்.
 
கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அவளது மனதோ  ராஜதேவா என்னும் இருண்ட மனிதனின் ரகசியப் பக்கங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருந்தது.
 
ராஜதேவாவின் இருண்ட உலகத்தில், இளவேனிலின் காவியம் முதல் அடியை எடுத்து வைத்திருந்தது.
 
கள்ளோ காவியமோ  – 3
 
கிழக்கு வெளுத்து, சூரியனின் இளஞ்சூட்டு கதிர்கள் பங்களாவின் ஜன்னல் வழியே இளவேனிலின் முகத்தில் விழுந்தன. அவளது கண்களில் தூக்கம் வரவில்லை. ஒருபுறம் ஜீவாவின் பாதுகாப்பு, மறுபுறம் ராஜதேவாவை பற்றி ரகு சொன்ன மர்மமான வார்த்தைகள் என அவளது மூளை விடை தெரியாத கேள்விகளால் நிறைந்து கிடந்தது. படுக்கையில் அமரக்கூடத் தோன்றாமல், பெரிய அறையின் இரும்பு ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, பங்களாவின் பின்புறத் தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தின் நிழலில், வெறும் கறுப்பு நிற ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்து, மேலுடம்பில் ஆடையில்லாமல் வேர்க்க விறுவிறுக்கத் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான் ராஜதேவா. அவனது இரும்பு போன்ற கைகளும், ஏறி இறங்கும் தோள்களும் அவனது அசாத்திய உடற்பயிற்சியின் தீவிரத்தைக் காட்டின. இரவு பார்த்த அந்த முரட்டுத்தனமான தாதா, இப்போது அதிகாலைப் பனியில் தன் உடம்பை இரும்பாக செதுக்கிக் கொண்டிருப்பதை அவளது கண்கள் வியப்போடு பார்த்தன. அவனது ஒவ்வொரு அசைவிலும் கட்டுக்கோப்பான, கம்பீரம் வெளிப்பட்டது. 
 
அவனை ரசிக்கவில்லை அவனை பற்றி ஆராய துடித்தாள்.
 
 “யார் நீ ராஜதேவா? உன் அசல் முகம் தான் என்ன?” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள் இளவேனில்.
 அதே நேரம், அறையின் வெளிக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ரகு கையில் ஒரு தட்டோடு உள்ளே வந்தான். ஆவி பறக்கும் இட்லியும், சாம்பாரும் இருந்தன. “இந்தாம்மா, காலைல டிபன். அண்ணன் உன்னை சாப்பிடச் சொன்னாரு” என்றான் ரகு, தட்டை மேஜை மேல் வைத்தபடி.
 
இளவேனில் தன் பார்வையை ஜன்னலிலிருந்து திருப்பி ரகுவை பார்த்தாள். “எனக்கு உங்க அண்ணன் போடுற பிச்சை எதுவும் வேண்டாம். முதல்ல என் ஃபிரண்டு ஜீவாவை எங்க வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க? அவனை பார்க்காம நான் ஒரு சொட்டுத் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக கூறினாள்.
 
“ஏம்மா!, அண்ணன் சொன்னா சொன்னதுதான். ஒழுங்கா சாப்பிடு…” என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாசல் கதவருகே தேவாவின் நிழல் விழுந்தது. உடற்பயிற்சியை முடித்துவிட்டு, உடம்பில் இருந்த வியர்வையை ஒரு துண்டால் துடைத்தபடி, கறுப்பு நிற டீசர்ட் ஒன்றை மாட்டியபடி வாசலில் வந்து நின்றான் தேவா.
 
“அவதான் வேண்டாம்னு சொல்றால்ல ரகு… தட்டை எடுத்துட்டுப் போ” – தேவாவின் கரகரப்பான குரல் அந்த அறைக்குள் நுழைந்தது. அவன் கைகளை கட்டிக்கொண்டு, வாசலில் கம்பீரமாக நின்று இளவேனிலைப் பார்த்தான். ரகு தட்டை எடுத்துக்கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான். இப்போது அந்த பெரிய அறையில் தேவாவும், இளவேனிலும் மட்டுமே நேருக்கு நேர் நின்றிருந்தினர்.
 
“என்ன!… பெரிய தாதான்னு காட்டிக்கிறதுக்காக ஒரு பொண்ணைப் பட்டினி போட்டுப் பார்க்க போறீங்களா?” என்று இளவேனில் தன் கைகளை கட்டிக்கொண்டு, அவனை நேருக்கு நேர் முறைத்தாள்.
 
தேவா மெல்ல அவளருகே நடந்து வந்தான். அவளது முகத்தில் இருந்த  அஞ்சாத திமிர் அவனுக்குள் ஒரு மெல்லிய புன்னகையை கொடுத்தது. “பட்டினி கிடக்கிறது உன் இஷ்டம்மா. ஆனா, இந்த ராஜதேவா கோட்டையில இருக்குறவங்க யாரும் பசியோட இருக்கக் கூடாதுன்னு ஒரு விதி இருக்கு. அதை நீ மீறுற” என்றான் நிதானமாக.
 
“விதியை பத்தி பேசுற தாதாவே! என் ஃபிரண்டு ஜீவாவை என்ன பண்ணீங்க? அவனுக்கு எதாவது ஆச்சு…” அவளது குரல் பதற்றத்தில் லேசாக நடுங்கியது.
 
தேவா அவளது பதற்றத்தைக் கண்டு, தன் பாக்கெட்டில் இருந்த சாட்டிலைட் போனை எடுத்தான். ஒரு நம்பரை அழுத்தி ஸ்பீக்கரில் போட்டான். மறுமுனையில் ஜீவாவைத் தன் கஸ்டடியில் வைத்திருந்த தேவாவின் முக்கிய ஆள் பாண்டியின் குரல் கேட்டது. “சொல்லுங்கண்ணே…”
 
“அந்த பிரஸ் காரப் பையன் இப்போ எங்க இருக்கான்?” என்று கேட்டான் தேவா.
 
“அவன் ஆபீஸ் வாசல்ல தான் அண்ணே நம்ம பசங்க அவன பத்திரமா கூட்டிட்டு வந்து இறக்கி விட்டோம். ஆனா அவன் இப்போ வரைக்கும் போலீஸுக்கோ, பிரஸுக்கோ போகல. அந்த பொண்ணு நம்ம கஸ்டடில இருக்கிறதால பயந்து போய் நம்ம வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்கான் அண்ணே” என்றான் பாண்டி.
 
“சரி, போனை அவன்கிட்ட குடு” என்றான் தேவா.
 
அடுத்த நொடி, போனில் ஜீவாவின் பதட்டக் குரல் கேட்டது. “இளா… இளா… நீ நல்லா இருக்கியா இளா? அவங்க உன்னை எதுவும் பண்ணலையேடா?” என்று பதறினான் ஜீவா.
 
இளவேனிளோ “ஜீவா! நான் நல்லா இருக்கேன்டா. நீ பயப்படாத, போலீஸுக்கெல்லாம் போகாத. நான் சீக்கிரம் வந்துடுவேன். நீ பத்திரமா இரு” என்றாள் வேகமாக. 
 
தேவா போனை சட்டென்று கட் செய்து தன் பாக்கெட்டில் வைத்தான். “இப்போ நிம்மதியா? உன் ஃபிரண்டு உசுரோட, பத்திரமா இருக்கான். இப்போவாவது உன் திமிரைக் குறைச்சுட்டு சாப்பிடலாமே?” என்றான் தேவா, அவளது முகத்தை பார்த்தபடி.
 
இளவேனில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். ஜீவா பத்திரமாக இருக்கிறான் என்ற செய்தி அவளுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது. அதே சமயம், நேற்று இரவு ஜீவாவை அடித்து துரத்தச் சொன்ன இந்த தாதா, இன்று அவனைத் தன் ஆபீஸ் வாசலில் பத்திரமாக இறக்கிவிடச் சொல்லியிருக்கிறான் என்ற உண்மை அவளுக்குள் ஒரு விசித்திரமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
 
தேவா அவளையே உற்று நோக்கியவன் , “என் பிசினஸ் என்ன?, நான் யாருன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாத இளவேனில். அது உனக்குத் தான் ஆபத்து. இங்க சத்தம் போடாம அமைதியா இரு. நடராஜன் கிட்ட இருக்குற மத்த சிலைகள் எங்க இருக்குன்னு எனக்குத் தெரியணும். அதுவரைக்கும் நீ என் கஸ்டடிதான்” என்று கூறிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறி சென்றான். அவனது அசைவில் ஒரு அசாத்திய திமிரும் ,கம்பீரமும் இருந்தது.
 
தேவா சென்றதும், இளவேனில் தன் கலைந்த கூந்தலையும், நேற்றிலிருந்து மாற்றாத ஆடைகளையும் பார்த்துக் கொண்டாள். உடல் முழுவதும் ஒரு சோர்வு தட்டியது. அப்போது வாசலில் நின்ற ரகுவை நோக்கி நடந்தாள். “ரகு… எனக்கு குளிக்கணும். நேத்துல இருந்து இதே டிரஸ்ஸோட இருக்கேன். எனக்கு மாத்திக்கிறதுக்கு வேற டிரஸ் வேணும்” என்று லேசான தயக்கத்துடன், ஆனால் உறுதியான குரலில் கேட்டாள். ரகு அவளைப் பார்த்து, “சரிம்மா… நம்ம வீட்டு வேலைக்கார பொண்ணுகிட்ட உன் டிரஸ் கொடுத்து விடுறேன் ” என்று சொல்லிவிட்டுப் படிக்கட்டுகளில் இறங்கப் போனான்.
 
ஆனால், ரகு கீழே இறங்குவதற்குள், பங்களாவின் வரவேற்பு அறையிலிருந்து சலசலப்பு சத்தம் கேட்டது. வாசலில் நின்ற காவலாளிகளின் குரல்கள் பதற்றமாக ஒலித்தன. “ஏய்! உள்ள போகாதம்மா… இது அண்ணனோட கோட்டை உன்னை உள்ள விடக்கூடாதுனு சொல்லிருக்காங்க?” என்று மிரட்டினர் காவலாளிகள்.
 
“உங்க அண்ணன் கோட்டையா இருந்தா எனக்கு என்ன? நான் நேரா ரகுவை பார்க்கணும். அவன்கிட்ட நியாயம் கேட்கணும். என்னை வழி மறிச்சா… நடக்குறதே வேற!” என்று ஒரு கம்பீரமான, அதிரடியான பெண் குரல் பங்களா முழுவதும் எதிரொலித்தது.
 
தன் பெயரை சொல்லி கூப்பிடுவதையும் கேட்டு படிக்கட்டில் நின்ற ரகு அதிர்ச்சியோடு கீழே குனிந்து பார்த்தான். மாடி வராண்டாவில் நின்ற இளவேனிலும் அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க சுவரோரம் வந்தாள். அங்கே… இருபத்தி மூன்று  வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், கைகளில் எந்த ஆயுதமும் இல்லாமல், தன் கண்களில் அசாத்தியமான கோபத்தோடு காவலாளிகளைத் தள்ளிக்கொண்டு ஹாலுக்குள் சீறிப் பாய்ந்து வந்துக் கொண்டிருந்தாள். அவளது பெயர் மலர்விழி. ராஜதேவா மற்றும் ரகுவின் சொந்த அத்தை மகள்!
 
அவள் நேராக ரகுவை நோக்கித் தன் விரலை நீட்டி, “ரகு! நீங்க பெரிய தாதாவோட தம்பின்னு இந்த ஊரே உங்களை பார்த்து பயப்படலாம். ஆனா நீங்க பண்றது கொஞ்சமாவது நியாயமா இருக்கா? காலத்துக்கும் எங்களை உங்க சொந்த காரங்கன்னு ஏத்துக்காம தள்ளி வச்சிருந்தாலும்… சாகுறப்போ எங்க அம்மா தன் கைல இருந்த பரம்பரை நகையைக் கொடுத்து, இது உங்களுக்கு சேர வேண்டிய பரம்பரைச் சொத்து, அவங்ககிட்ட ஒப்படைச்சிடுன்னு சொன்னாங்களே… அந்த அம்மாவோட கடைசி ஆசையைக் கூட மதிக்காம, உங்க அம்மாவோட எந்த ஞாபகமும் எங்களுக்கு வேண்டாம், தூக்கிட்டுப் போன்னு என் கைலயே திரும்பக் கொடுத்துட்டீங்க! உறவுகள் வேணாம்னு நீங்க இருக்கலாம், ஆனா எங்க அம்மாவோட ஆசையை நான் நிறைவேத்துவேன்! இந்த பரம்பரை நகையை இங்க வச்சுட்டுப் போறேன். நாங்க உங்ககிட்ட காசு பணம் கேட்டு வரல ரகு! பெத்த அம்மாவோட பாசத்துக்காகவும், உரிமையிக்காகவும் தானே தேடி வந்தேன்?” என்று மலர்விழி தன் கண்களில் கண்ணீரோடு நியாயம் கேட்டாள். அவளது அழுகையையும், கோபத்தையும் பார்த்த ரகுவின் கண்களில், அவளைத் தாங்கிப் பிடித்து ஆறுதல் சொல்லத் துடிக்கும் தவிப்பும், நெஞ்சுக்குள் ஒளித்து வைத்த பாசமும் கலந்த காதல் கசிந்து மின்னியது.
 
மலர்விழியின் சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த ராஜதேவா, மெதுவாக படிக்கட்டுகளில் இறங்கி அவளை நோக்கி நடந்தான். அவனது ஒவ்வொரு அடியிலும் ஒரு அமைதியான புயல் ஒளிந்திருந்தது. தேவாவைக் கண்டதும் மலர்விழி இன்னும் ஆத்திரமடைந்தாள், ஆனால் அவளது கண்களில் இருந்த பாசப் போராட்டம் அவனையும் நிலைகுலையச் செய்தது.
 
தேவா இரக்கமில்லாதவனைப் போலத் தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “பணமோ, பரம்பரை நகையோ எதுவாக இருந்தாலும் இந்த ராஜதேவாவுக்கு எந்தச் சொந்தமும் வேண்டாம் மலர். நீ கொண்டு வந்த நகையை எடுத்துட்டு கிளம்பு. இப்போ நீ எடுத்துட்டு போகலனாலும் நீ வீட்டுக்கு போறதுக்குள்ள இந்த நகை உன் வீட்டுல இருக்கும்.” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கறாராக.
 
மலர்விழி அழுதுகொண்டே தான் கொண்டு வந்த நகையை எடுத்துக் கொண்டு பங்களாவை விட்டு வெளியேறினாள். சிறுவயதில் பாசமாக இருந்த தன் மாமன் மகன் இப்போது ஒட்டாதது போல பேசியது அவள் மனதை கொள்ளாமல் கொன்றது.
 
மலர்விழி சென்றதும், ரகு தலைகுனிந்து நின்றிருந்தான். தேவா சோபாவில் அமர்ந்து, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். “அண்ணே… அவ நம்ம அத்தை பொண்ணுண்ணே. அத்தையோட கடைசி ஆசையான பரம்பரை நகையைக் கூட வாங்க மாட்டேன்னு ஏன் இப்படி இரக்கமில்லாம அவ கைலேயே திரும்ப கொடுத்து அனுப்பச் சொன்னீங்க? அவகிட்ட ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?” என்று ரகு தன் மனதில் இருந்த ஆதங்கத்தை அண்ணனிடம் கொட்டினான்.
 
தேவா சிகரெட் புகையை ஆழமாக இழுத்துவிட்டு, ரகுவைப் பார்த்தான். “உனக்கு மலர் மேல இருக்குற பாசம் எனக்குப் புரியும்டா ரகு. ஆனா, நடராஜன் மாதிரி சர்வதேச மாஃபியா கும்பல் நமக்கு எதிரா இருக்காங்க. எப்போ வேணாலும் எனக்கு ஆபத்து வரலாம். மலர்விழியை நாம நம்ம சொந்தம்னு காட்டி, அவளை இந்த வீட்டுக்குள்ள வர வச்சா… நாளைக்கு என் எதிரிங்க அவளைப் பகடைக்காயா ஆக்குவாங்கடா. அவங்க உயிருக்கு ஆபத்து வரும். மலர்விழி நம்மகிட்ட இருந்து தூரமா இருந்தா தான்… அவளும் அவ குடும்பமும் பாதுகாப்பா இருப்பாங்க. அதுக்காகத்தான் நான் அவளை வீட்டுக்குள்ள விட மாட்டேன்றேன், அவளோட பரம்பரை நகையையும் வாங்க மறுக்குறேன். காலம் கனியுற வரைக்கும் அவ தள்ளி இருக்கிறது தான் நல்லது” என்றான் தேவா.
 
மாடி வராண்டாவின் மறைவில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இளவேனிலுக்கு உடல் சிலிர்த்தது. கள்ளன், கடத்தல்காரன் என்று நினைத்த ராஜதேவாவுக்குள், தன் குடும்பத்தைப் பாதுகாப்புடன் வைக்கத் துடிக்கும் ஒரு உன்னதமான அண்ணன் ஒளிந்திருப்பதை அவள் கண்டு கொண்டாள். தேவாவின் மீதான அவளது பகை உணர்வு மெல்லக் கரைந்து, அவன் மீதான ஒரு விசித்திரமான ஈர்ப்பும் ,பிணைப்பும் அவளுக்குள் மலரத் தொடங்கியது.
 
 
 

32 thoughts on “கள்ளோ காவியமோ”

  1. Dzień dobry wszystkim, od jakiegoś czasu miałem okazję analizować wielorakie trendy w tej branży kasynowej
    i muszę napisać, że poziom usług wyraźnie poszedł do góry.
    Zaobserwowałem, że dzisiaj coraz więcej ludzi wybiera jasne podejście i według mnie to pozytywna tendencja dla całego sektora.

    Kiedy chcecie znaleźć rzetelnych danych, polecam sprawdzić rolldorado kasyno, albowiem często
    można tam wyłapać szczerze przydatne wskazówki w kwestii bonusów.
    Co więcej myślę, że zaawansowane metody wpłat to kluczowa podstawa,
    jednak nie mała rzesza wciąż wykazują różne trudności z księgowaniem.

    Głowię się, jak wy oceniacie panującą dostępność promocyjną w
    polskim internecie? Może naprawdę duże premie stanowią główny atut zachęcający
    graczy do rejestracji, czy może wygrywa szybkość konkretnej witryny?

  2. I have been exploring for a bit for any high quality articles or blog posts in this
    sort of space . Exploring in Yahoo I at last stumbled upon this
    web site. Reading this info So i am happy to express that I’ve an incredibly good uncanny feeling I came upon exactly what
    I needed. I most undoubtedly will make certain to don?t disregard this site and give it a glance on a continuing basis.

  3. I have noticed over the past few weeks that rhythm is vital when testing digital grid titles.
    It’s truly wild how long one’s mental state moves the entire
    session following one decent run. Normally, I make an effort to stick to the conservative setup, but sometimes the itch to go high on the mines game download proves too
    strong to pass up. A major point is that watching
    your balance efficiently actually leads better sustainability to the actual chance required.
    Do most players believe that mobile apps work faster compared to online modes those times?
    Personally, I certainly would prefer to read your takes on if adjusting the mine count honestly helps the hit rate in a long perspective.

  4. I blog quite often and I really thank you for
    your information. The article has really peaked my interest.
    I’m going to take a note of your website and keep checking for new details about once a week.
    I subscribed to your Feed as well.

  5. Zauważyłem ostatnio, że świat gier rozrywki online zmienia się w wyjątkowo dynamicznym tempie, a
    znalezienie bezpiecznego miejsca do zabawy jest stale bardziej
    wymagającym zadaniem. Osobiście kluczowa jest bez przerwy jasność zasad operatora
    oraz sprawność wypłat, albowiem nikt nie lubi czekać tygodniami na
    swoje wygrane. Często analizuję branżowe wpisy, takie
    jak rzetelna mama spin casino, aby dokładniej poznać dynamikę wybranych automatów oraz dzisiejsze benefity.
    Stwierdziłem również, że wiele nowych platform proponuje atrakcyjne aplikacje mobilne, co umożliwia na wygodną grę dosłownie z dowolnego miejsca na ziemi.
    Zastanawiam się, czy Wy też kierujecie tak poważną uwagę do klubów lojalnościowych,
    czy raczej wybieracie tylko szybkich okazji? Mam wrażenie, że kreowanie stałej relacji z konkretnym kasynem opłaca się w ostatecznej perspektywie czasowej.
    Jakie widnieją Wasze preferowane tytuły w tych
    miesiącach? Napiszcie, co uważacie o aktualnych trendach w branży!

  6. Mobile casinos, [url=https://www.apostolo.it/discover-the-thrilling-world-of-online-betting-at/]https://www.apostolo.it/discover-the-thrilling-world-of-online-betting-at/[/url] serve players the convenience of playing on the go. With numerous games available, clients can easily partake in their beloved activities.

  7. I migliori scommettitori cercano sempre alternative esperienze. I top casino non aams, [url=https://www.re-cereal.com/i-migliori-casino-online-stranieri-del-2023-5/]https://www.re-cereal.com/i-migliori-casino-online-stranieri-del-2023-5/[/url] offrono promozioni vantaggiosi e opzioni di gioco unici. Allo stesso modo, la tranquillitГ  ГЁ garantita, facendo un ambiente di gioco ideale. Scopri le emozioni di questi ambienti di svago.

  8. Когда хочется удивить любимого человека необычным вечером, многие выбирают [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url], потому что такой формат отлично подходит для свидания, предложения руки и сердца или годовщины.

    Для тех, кто хочет провести вечер вдвоем в красивой и спокойной обстановке, [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url] станет отличным вариантом для романтической прогулки и отдыха у моря.

  9. Everyone loves what you guys are up too. This sort of clever
    work and exposure! Keep up the good works guys I’ve incorporated you guys
    to my blogroll.

  10. Замечательная фраза и своевременно
    1xbet, [url=https://restaurant.hotel-makarim-tetouan.com/2026/03/31/1xbet-indo-official-site-your-guide-to-online-4/]https://restaurant.hotel-makarim-tetouan.com/2026/03/31/1xbet-indo-official-site-your-guide-to-online-4/[/url] предоставляет способ пари в мире азартных услуг. Сайт обеспечивает пользователям широкий выбор событий и бонусов.

  11. +1 to what you said, totally agree. If you haven’t checked it out yet, here’s the link: [url=(https://www.empowher.com/user/4826648/https://www.empowher.com/user/4826689/https://community.fandom.com/wiki/User:Galimeubja/https://giphy.com/channel/beunnasyur/https://giphy.com/channel/frazigdwta/https://giphy.com/channel/guochybjww/https://giphy.com/channel/lipinnweyu/https://giphy.com/channel/seidhegzhw/https://www.hometalk.com/member/240448336/eugene1460115/https://www.hometalk.com/member/240448561/gavin1219275/https://www.hometalk.com/member/240448993/elva1510853/https://www.hometalk.com/member/240448996/leona1223645/https://www.hometalk.com/member/240449383/christine1180469/https://www.hometalk.com/member/240449623/warren199046/https://www.hometalk.com/member/240449950/jackson1972060/https://www.hometalk.com/member/240450367/sean1434678/https://www

  12. Playing at a casino can be exciting, especially when it comes to free spins no deposit casino, [url=https://brief.alaskawebgeeks.com/unlock-the-excitement-casino-40-free-spins-no-2/]https://brief.alaskawebgeeks.com/unlock-the-excitement-casino-40-free-spins-no-2/[/url] bonuses. These deals allow players to try out games without risking their own money. Take advantage of these opportunities to receive extra spins and potentially boost your winnings.

  13. The modern gambling market is changing extremely quickly now,
    while I’m constantly searching for unique titles to
    verify the luck avoiding simply looking at auto-play slots.
    What actually hit the eye lately has been the way chickenroad provides a way deeper vibe of agency compared to classic
    casino software. This common error I usually see is becoming excessively bold behind
    one lucky rounds, that almost always finishes in the sudden loss.
    It is certainly highly regarding mental strength
    than most things else. Can you like aggressive modes
    to get it over with fast, or are you favor the slow approach more?
    Sometimes I speculate if the live elements in such platforms actually aid us win, or if the chats just distract you from following a proper
    wagering rule.

  14. This is the right webpage for anybody who wants to understand this topic.

    You realize so much its almost tough to argue with you (not that I actually
    would want to…HaHa). You definitely put a new spin on a topic which has been discussed for ages.
    Great stuff, just excellent!

  15. I siti casinГІ non aams, [url=http://www.kli.lt/i-migliori-casino-senza-autoesclusione-13/]http://www.kli.lt/i-migliori-casino-senza-autoesclusione-13/[/url] offrono diverse opportunitГ  di intrattenimento online. Questi casinГІ fanno promozioni vantaggiosi per attrarre clienti da tutto il mondo.

  16. Online casino games, [url=http://www.pleasesellmycar.ca/onlinecasinobet0154/kazino-uz-discover-the-best-online-casino/]http://www.pleasesellmycar.ca/onlinecasinobet0154/kazino-uz-discover-the-best-online-casino/[/url] present an engaging way to enjoy the landscape of gambling. With various options available, players can choose their favorite entertainments from the comfort of their home.

  17. Большое спасибо за объяснение, теперь я буду знать.
    1xbet casino online, [url=https://www.gerencialadministradora.com.br/betcasino30039/ultimate-betting-guide-tips-strategies-and-6/]https://www.gerencialadministradora.com.br/betcasino30039/ultimate-betting-guide-tips-strategies-and-6/[/url] – 1xbet casino online предлагает множество РёРіСЂ, включая карточные РёРіСЂС‹. РћСЃРЅРѕРІРЅРѕРµ — это крупные Р±РѕРЅСѓСЃС‹ Рё простой интерфейс. Участвуйте РІ незабываемых турнирах Рё соблазняйте друзей!

  18. Я думаю, что это — неправда.
    In the world of digital gambling, Online Casino UK, [url=https://egs.tmal1020.com/online-casino-bass-win-your-guide-to-winning-big-2/]https://egs.tmal1020.com/online-casino-bass-win-your-guide-to-winning-big-2/[/url] stands out with its generous offers. Players can enjoy a variety of options while experiencing secure payments for peace of mind.

  19. I’ve stayed noticing lately how that
    modern casino landscape is constantly shifting to the crash-style games .
    Personally, I feel those designs are becoming
    incredibly polished these days that it’s really simple to
    forget count of the hours spent playing through those
    levels . I try to test my options at chicken road gameplay to judge whether that risk factor is consistent over a proper run .
    Another point I’ve noticed must be how staying cool makes a significant
    difference on your final outcome. I still convinced how bankroll control
    is much better important compared to each alleged lucky pattern you could find.
    However, I’m really keen to just know : would any of
    you actually believe that there are certain times at which those payouts seem highly prone to
    hit? Or could it just down to pure RNG at the end of the day ?
    Please open the talk started here , because I would like
    to share experiences among you community .

  20. Personally, scoring a massive win on modern machines really refers to luck more than most things.
    I have noticed lately that game volatility will be quite challenging during marathon playthroughs.
    It’s essential to regularly test the logic via a hot hot fruit free play before spending any real
    bankroll. A separate curious point is how mobile sites presently give so smooth gameplay relative to older web sites.
    Would the guys here reckon that payout rates really
    keep fair across multiple betting sites? Furthermore, is that stay smarter to rotate titles often or
    stick to a single favorite tactic for an whole evening?

    I would be happy to read your opinions regarding that because every player appears
    to hold a different theory on boosting results.

  21. udenlandske spillemaskiner, [url=https://inventarioarqrio.rjprocult.com/bedste-casino-uden-om-rofus-find-dine-favoritter/]https://inventarioarqrio.rjprocult.com/bedste-casino-uden-om-rofus-find-dine-favoritter/[/url] fremviser en imponerende oplevelse med varierede temaer og lyde. Spillere kan opleve dramatisk jackpots og tilbud fra hele verden.

  22. online casino, [url=https://www.e-sicase.com/unlock-excitement-with-free-20-spins-no-deposit-36/]https://www.e-sicase.com/unlock-excitement-with-free-20-spins-no-deposit-36/[/url] gives an engaging way to indulge in gaming from the comfort of your home. With countless games and lucrative bonuses, it has become a top choice for players worldwide.

  23. Been using [url=https://69casino.cc/]69 online vn[/url] for a bit now and i like how simple the whole thing is, no annoying pop-ups every 5 seconds which is awsome, only minor thing is the support chat took a while to respond but eventually they got back to me

  24. Real money gambling, [url=https://babasahibdass.in/explore-the-thrilling-world-of-it-winnita-casino-6/]https://babasahibdass.in/explore-the-thrilling-world-of-it-winnita-casino-6/[/url] – Real money gambling attracts gamblers seeking adventure. With countless games and bonuses, it provides endless opportunities. However, caution is key to fully experiencing the experience.

  25. I migliori casinГІ non aams, [url=https://myelite.fitness/guida-completa-agli-elenco-casino-non-aams-gioca/]https://myelite.fitness/guida-completa-agli-elenco-casino-non-aams-gioca/[/url] offrono un’ampia varietГ  di giochi e promozioni. In tali ambienti, i puntatori possono sperimentare un’esperienza unica. Le piattaforme online sono facili da usare e garantiscono tranquillitГ . Scegli intelligentemente per divertirti al massimo!

  26. посмотрю для разнообразия …
    Explore the exciting world of 1xbet online free casino, [url=https://gasfireplaceservices.com/understanding-odds-a-comprehensive-guide-to-24/]https://gasfireplaceservices.com/understanding-odds-a-comprehensive-guide-to-24/[/url], where players can enjoy a variety of thrilling games. Offering a vast selection of slots and table games, it’s perfect for both novices and proficient gamers alike. Create an account today and leverage amazing bonuses and promotions!

  27. С таким успехом как у тебя
    Online Casino, [url=https://asaecon.com/the-ultimate-guide-to-betblast-online-casino-uk/]https://asaecon.com/the-ultimate-guide-to-betblast-online-casino-uk/[/url] – Online Casino предоставляет шансы для заработка. Игроки РјРѕРіСѓС‚ играть РІ азартные РёРіСЂС‹ Рё получать Р±РѕРЅСѓСЃС‹. Удобство онлайн проще, чем РєРѕРіРґР°-либо!

  28. minimum deposit casinos, [url=https://www.studioraffaellapazzaglia.it/janeaustenfestival/experience-excitement-at-75-spins-casino-10846059/]https://www.studioraffaellapazzaglia.it/janeaustenfestival/experience-excitement-at-75-spins-casino-10846059/[/url] are a great way to start gambling with less risk. Players can enjoy various games while limiting their bankroll. These affordable options attract new gamblers looking to explore.

  29. udenlandsk casino uden rofus, [url=http://icloud.publiduplo.com/archives/1206379]http://icloud.publiduplo.com/archives/1206379[/url] tilbyder unikke oplevelser for spillere, som ønsker at nyde deres favoritspil uden begrænsninger. Sådanne casinoer møder et at engagere sig i forskellige spil og modtage store belønninger. Udenlandsk casino uden rofus tilbyder muligheder for spændende oplevelser.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top