ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

 

10.நேசம்

 

திருமண மண்டபம் முழுவதும் அந்த ஒரு சம்பவம் தான் பேசுபொருளாக மாறியிருந்தது.“இப்படி நடக்கும்னு யாரு நினைச்சாங்க…”

 

“விக்ரமாதித்யா நேராக மேடையிலேயே தாலி கட்டிட்டாராமே…”

 

“அந்த பெண்ணோட குடும்பம் என்ன மனநிலையில இருக்கும்…”

 

என்று ஒவ்வொரு மூலையிலும் கிசுகிசுக்கள் ஓடியது.

சிலர் அதிர்ச்சியோடும் .,சிலர் பயத்தோடு…ஒரு சிலர் விக்ரமின் செல்வாக்கை நினைத்து அமைதியாக விலகினர்.

 

மணமேடையில் சில மணி நேரங்களுக்கு முன் இருந்த நாதஸ்வர சத்தம் கூட இப்போது கனமான அமைதியாக மாறியிருந்தது.

 

ராகவன் மட்டும் அந்த அவமானத்தையும் வேதனையையும் உள்ளுக்குள் தாங்கிக்கொண்டிருந்தார்.மகளின் திருமணத்தை சந்தோஷமாக நடத்த வேண்டும் என்று கனவு கண்ட மனிதர்…

ஆனால் இறுதியில் தன் மகள் கண்ணீரோடு வேறொருவரின் வீட்டிற்கு சென்றதை பார்த்து நிற்க வேண்டியதாகி விட்டது.

அவரின் மனைவி மதியழகி அமைதியாக அழுதுகொண்டே காரில் ஏறினார்.

வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் என்ன சொல்லுவது என்று யாருக்கும் தெரியவில்லை.

நிலாவின் அண்ணன் இந்தர்  கோபத்தில் கை முட்டியை இறுக்கியபடி நின்றான்.

 

“அவனை இப்படி விடக்கூடாது…”

என்று அவன் கடுப்பாக சொன்னாலும், ராகவன் சோர்வாக தலையசைத்தார்.

 

“இப்போ எதுவும் பேசாதே…

 

 

“என்ன…?”

இந்தரின் முகம் ஒரு நொடியில் வெளிறி போனது.

அவன் கையில் இருந்த டம்ளர் கீழே விழப் போனதைப் போல நடுங்கியது.

 

ராகவன் மெதுவாக சுவாசம் விட்டார்.

“நான் முதல்ல நம்பல டா… ஆனா ஒரு அப்பாவா என் பொண்ணு மனசுல என்ன இருக்கு தெரியாம இருக்க முடியுமா…?”

 

“அப்போ… நிலாவும் அந்த விக்ரமாதித்யாவை…”

இந்தரால் அந்த வார்த்தையை முழுசாக சொல்லவே முடியவில்லை.

 

“ம்ம்ம்…”

ராகவன் தலை குனிந்தார்.

“அவ கண்களில் இருந்த அந்த வலி… சாதாரணமில்லை.

ஒரு பெண் யாருக்காகவும் அப்படி உடைஞ்சு போக மாட்டா…”

அந்த வீட்டில் சில நொடிகள் அமைதியே நிலவியது.

 

“நாம டெல்லில இருந்து வந்த நாள்ல இருந்து… டிவியிலோ, நியூஸ்லோ விக்ரமாதித்யா பெயர் வந்தா… முதல் ஆளா ஓடி போய் பார்த்திட்டு இருந்தா…

 

அப்போ நான் சாதாரணமா எடுத்துக்கிட்டேன்.

ஆனா ஒரு நாள்… அவளோட மொபைல் என் கிட்ட இருந்துச்சு…”

இந்தர் பதட்டமாக பார்த்தான்.

“திறந்து பார்த்தேன்…

அதுல அவனோட போட்டோக்கள்… பேட்டிகள்… அவன் சிரிச்சது… கோபப்பட்டது… எல்லாமே சேமிச்சு வைச்சிருந்தா.

ஒரு இரண்டு இல்ல… நூற்றுக்கணக்கில்…

 

“அய்யோ…”

இந்தர் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டான்.

 

“அப்பா… இதெல்லாம் நிலா ஏன் யாரிடமும் சொல்லல…?”

 

“அதான் எனக்கும் புரியல டா…

அவ மனசுக்குள்ளேயே புதைச்சு வச்சிருக்கா

 

 

“தான் முழுசா வெறுக்கிற ஒரு ஆண் மேல… எப்படி காதல் வரும் பா…?”

இந்தரின் குரல் உடைந்து போனது.

“அவன பெயர் கேட்டாலே கோபப்பட்டா… அவனை பார்த்தாலே சண்டை போட்டா… அப்படி இருந்த நிலா எப்படி…?”

 

ராகவன் ஆழமாக மூச்சை விட்டார்.

“அதான் எனக்கும் புரியல டா இந்தர்…

சில நேரம்… வெறுப்புக்கும் காதலுக்கும் நடுவுல ஒரு மெல்லிய கோடு தான் இருக்கும்…”

 

இந்தர் அமைதியாக அவரை பார்த்தான்.

 

“அந்த கலவரம் நடந்த இரண்டு நாள்…நிலாவை அவன் கூட இருக்க வச்சது…இப்போ நினைச்சா தப்பா தோணுது டா…”அவரின் குரலில் குற்ற உணர்வு தெளிவாக இருந்தது.

 

“அப்போ அவள பாதுகாப்புக்காகத்தான் அனுப்பினோம்…

அவன் பெரிய ஆள்… பாதுகாப்பா பார்த்துப்பான்னு நினைச்சேன்…”

“ஆனா…?”

இந்தர் பதட்டமாக கேட்டான்.

“அந்த இரண்டு நாள்ல என்ன நடந்துச்சுன்னு தெரியல…

ஆனா அதுக்கப்புறம் என் பொண்ணு முழுசா மாறிட்டா.”

அவரின் கண்கள் கலங்கின.

“முன்னாடி விக்ரமாதித்யா பேரே கேட்டா எரிஞ்சு விழுவா…

ஆனா அந்த நாளுக்கப்புறம்…

அவன் பற்றி யாராவது பேசினா கூட அமைதியா கேட்பா…”

“…”

 

சில நேரம் தனியா அழுவா…

சில நேரம் அவன் மேல கோபப்படுற மாதிரி பேசுவா…

 

இந்தர்“அப்பா… அவன் நிலாவை ஏதாவது…”

 

“இல்ல!”

ராகவன் உடனே தடுத்தார்.

“அப்படி ஏதாவது நடந்திருந்தா என் பொண்ணு அவனையும் கொன்னுட்டு தைரியமா வந்துருப்பா..

 

“அப்போ…?”

 

“ஏமாற்றம்… ஏக்கம்… காதல்…“சில நேரம்…

ஒருத்தரை நம்ம வெறுக்கிறோம் ன்னு நினைப்போம்…

ஆனா உண்மையில…

அவங்க நம்ம மனசுக்குள்ள எவ்வளவு ஆழமா போயிட்டாங்கன்னு நமக்கே தெரியாது…”

 

 

“அப்படின்னா…

நிலா அவன் மேல இவ்வளவு காதல் வைச்சிருந்தா…

அவனே தாலி கட்டும்போது ஏன் ‘வேண்டாம்’ன்னு கதறினா…?”

இந்தரின் கேள்வியில் தீராத குழப்பம் இருந்தது.

 

 

 

“அது காதல் இல்லன்னு அர்த்தமில்லை டா…”

அவர் மெதுவாக சொன்னார்.

 

“அப்போ…?”

“சில காதல்கள்… நமக்கு சந்தோஷம் தருவதற்கும் முன்னாடி பயம் தரும்.”

இந்தர் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.

 

“நிலா விக்ரமாதித்யாவை காதலிச்சிருக்கலாம்…

ஆனா அவன் வாழ்க்கை… அவன் கோபம்… அவன் அதிகாரம்…

இதெல்லாம் அவளை பயமுறுத்தி இருக்கலாம்.”

“…”

“ஒரு பெண் காதலிக்கிறதுக்காக உடனே கல்யாணத்துக்கு தயாரா ஆகிட மாட்டா டா.

குறிப்பா… அந்த ஆள் அவள வாழ்க்கையையே தலைகீழா மாற்றிடுவான்னு தோணிச்சுன்னா…”

ராகவனின் குரல் கனத்தது.

“அந்த நாள் மண்டபத்துல…

நிலா கண்களில் காதல் இருந்தது…

ஆனா அதைவிட அதிகமா குழப்பம் இருந்தது.”

 

“குழப்பமா…?”

 

“ம்ம்ம்…

அவ மனசு ஒருபக்கம் அவனை விட்டுப் போக முடியலன்னு சொல்லி இருக்கலாம்…

ஆனா மூளை… ‘இது சரியா…? இந்த வாழ்க்கை நிம்மதி தருமா…?’ன்னு கேட்டு இருக்கலாம்.”

 

ராகவன் சற்று தயங்கினார்.

“என்னப்பா…?”

 

“அந்த விக்ரமாதித்யா…

காதலிக்க தெரிஞ்சவனா இல்ல…

அடைய தெரிஞ்சவன் மாதிரி தான் எனக்கு தோணுது.”

 

இந்தரின் கண்கள் விரிந்தன.

“அவன் நிலாவை உண்மையா நேசிச்சிருக்கலாம்…ஆனா அவன் செயல் முறை…

அவளை காதலிக்க வைப்பதற்குப் பதிலா…பயந்து ஒத்துக்க வைக்குற மாதிரி இருந்துச்சு.”அந்த வார்த்தைகள் இருவருக்குள்ளும் கனமான அமைதியை விட்டுச் சென்றன.

“அதனால்தான்…”ராகவன் மெதுவாக சொன்னார்.

“அவள் மனசு அவன்கிட்ட ஓடினாலும்…வாய் மட்டும் ‘வேண்டாம்’ன்னு கத்தி இருக்கும்…”

 

 

 

 

அந்த ஒரு நாளில் அவர்களின் குடும்பத்தின் நிம்மதியே உடைந்துவிட்டது.

 

வீட்டிற்கு திரும்பியதும் அந்த வீடு கூட வெறுமையாக உணரப்பட்டது..

இனிமே அவர்களது கைகளில் தங்கள் ஆசை மகள் அருகில்  இல்லை என்ற உண்மை ராகவனின் இதயத்தை நொறுக்கிக் கொண்டே இருந்தது.

 

 

 

 

 

மும்பை வீட்டில்

 

 

 

 

திருமணம் முடிந்து அந்த வீட்டுக்குள் காலடி வைத்த ஒரே நாளில்…

நிலாவின் வாழ்க்கையே மாறிப் போனது. நேற்று வரை எல்லாராலும் மென்மையான பெண்ணு சொல்லப்பட்டவள்…இன்று ஏகப்பட்ட பெயர்களால் அழைக்கப்பட்டாள்.

“பணத்துக்காக பெரிய இடம் பார்த்துட்டா…”

“முன்னாடியே பழக்கம் இருந்திருக்கும்…”

“அதான் அவன் இவ்வளவு பைத்தியமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்…”

“அந்த கார்த்திக்  பையனை ஏமாத்திட்டா..ஒவ்வொரு வார்த்தையும் நிலாவின் மனசை கிழித்தது.

 

அந்த வீட்டில் வேலைக்காரர்கள் பேசுற சத்தம் கூட அவள் காதில் விழுந்தது.

 

வெளியில் மீடியா…

சோஷியல் மீடியால அவள் போட்டோவுக்கு கீழே ஆயிரம் விமர்சனங்கள்…

“விக்ரமாதித்யாவை மயக்கிய பெண்…”“பவர் காக கல்யாணம்…”

“டிராமா குயின்…”

நிலாவால் போன் கூட திறக்க முடியவில்லை.

அவள் அமைதியா ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

கழுத்தில் இருந்த தாலி கனமாக உணர்ந்தது.

அந்த நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.உள்ளே வந்த விக்ரமாதித்யா…அவள் கண்ணீரால் சிவந்த முகத்தை பார்த்ததும் நின்றுவிட்டான்.

 

“யாராவது ஏதாவது சொன்னாங்களா…?”

அவனின் குரல் தாழ்ந்தது.

நிலா உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

“பதில் சொல்லு நிலா.”

அவள் சிரிக்க முயன்றாள்.

ஆனால் அந்த சிரிப்பு உடைந்து போனது.

“ஒரே நாள்ல…

 

எத்தனை பெயர் வந்துருச்சு தெரியுமா…?”

 

அவள் குரல் நடுங்கியது.

விக்ரமின் முகம் இறுகியது.

“எல்லாரும் என்னை தப்பா தான் பார்க்குறாங்க…”தப்பு பன்னது நீங்க தண்டனை எனக்கா..

அவள் கண்களில் கோபம் இருந்தது..

 

 

“ஏன் ஆதி…?”

 

நிலாவின் குரல் உடைந்து வெளியே வந்தது.

“என்னோட சம்மதம் இல்லாம ஏன் தாலி கட்டுனீங்க…?”

 

விக்ரமாதித்யா அமைதியாக அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“உங்க அத்தை பொண்ணு உங்களுக்காக காத்துட்டு இருந்தாங்க இல்லையா…?

அவளை விட்டுட்டு… ஏன் என்னை…?”

 

அவளின் கண்களில் கண்ணீர் முட்டியது..

 

“யாராச்சும் பழிவாங்க கல்யாணம் செய்வங்களா…?”

 

சில நொடிகள் அறை முழுக்க அமைதி.

பிறகு விக்ரம் மெதுவாக அவளருகே வந்தான்.

“நா செய்வேன்.”

 

நிலா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.

“ஆமா…

உன்னை பழிவாங்கணும்னு தோணிச்சு.அந்த நாள் எல்லாருக்கும் முன்னாடி என்னை அடிச்சிட்டு போனது…என் ஈகோவையே டச் பண்ண மாதிரி இருந்துச்சு.”அவன் கண்கள் கூர்மையாயின“அண்ட்…”

அவன் சற்றே குனிந்து அவள் கண்களை நேராக பார்த்தான்.

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு.“அதை விட…”

அவன் மெதுவாக சிரித்தான்.

“உன்னோட அந்த திமிர்…

அதை அடக்கணும்னு அதிகமா தோணிச்சு.”

 

“ஆதி…”

நிலாவின் குரல் நடுங்கியது.

 

“எஸ்..உலகமே என் முன்னாடி தலை குனியும்.ஆனா நீ மட்டும்…

என்னை பார்த்து பயப்படவே இல்ல.

எதிர்த்து பேசின.அடிச்ச.”

அவன் முகத்தில் கோபமும் ஈர்ப்பும் கலந்திருந்தது.“அதான்…

உன்னை விட்டுட்டு போக முடியல.”

நிலா ஒரு படி பின்னால் சென்றாள்.

 

“அப்படின்னா இது காதல் இல்ல…”

விக்ரம் சிரிப்பு மெதுவாக மறைந்தது.

“இருக்கலாம்.

இல்லாமலும் இருக்கலாம்.”

அவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை மெதுவாக தொட்டான்.

“ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை…

இனிமே நீ என் வாழ்க்கையிலிருந்து போக முடியாது, நிலா…”

 

 

 

“அந்த ரவுடிங்கள்கிட்ட இருந்து என்னை காப்பாத்தினப்போ…”

நிலாவின் குரல் மெதுவாக உடைந்தது.“உங்க கூட ஒரே வீட்டுல தங்கி இருந்த அந்த இரண்டு நாளும்…”அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.“எனக்கு ஒரு பெரிய பாதுகாப்பு உணர்வு வந்துச்சு, ஆதி.

 

உங்க கூட இருந்தா எதுவும் ஆகாது ன்னு நம்பினேன்…”

விக்ரமாதித்யாவின் முகம் சற்றே மாறியது.“நம்பிக்கை வைச்சேன்…”

 

 

“ஆனா அந்த நம்பிக்கையை நீங்களே உடைச்சுட்டீங்க.”

அறை முழுக்க அமைதி.

“நீங்க கோபக்காரர்னு தெரியும்…

திமிரு இருக்குன்னும் தெரியும்…

ஆனா…”

அவள் கண்ணீரை துடைத்தாள்.

“என்னோட சம்மதம் இல்லாம இப்படி தாலி கட்டுவீங்கன்னு…

நா கனவுல கூட நினைக்கல.”

விக்ரமின் பார்வை மெதுவாக கீழே இறங்கியது.

“அந்த இரண்டு நாள்ல…”

“நா உங்களைப் பார்த்து பயப்படுறதை நிறுத்திட்டேன், ஆதி.”

அந்த வார்த்தை அவனை அமைதியாக்கியது.

 

 

 

“நா உன்கிட்ட கெஸ்ட் ஹவுஸ்ல…

அத்து மீறி முத்தம் கொடுத்தப்போ…

ஏன் என்ன தடுக்கல, நிலா…?”

விக்ரமின் குரல் மெதுவாக இருந்தாலும்…

அந்த கேள்வி நேராக அவள் மனசை குத்தியது.நிலா உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

“அது…”

அவளால் வார்த்தைகளை சேர்க்க முடியவில்லை.

விக்ரம் அவளை விட்டுப் பார்வையை மாற்றவே இல்லை.

 

ம்ம்ம் சொல்லு நிலா..“நீ தடுக்கணும்னா தடுத்திருக்கலாம்.

என்னை அறைந்திருக்கலாம்.

கத்திருக்கலாம்…”

அவன் ஒரு படி நெருங்கினான்.

“ஆனா நீ அப்படி எதுவும் செய்யல.”

நிலாவின் விரல்கள் நடுங்கின.

“ஏன்னா…”

ம்ம் சொல்லு டி..

 

அவள் மெதுவாக சொன்னாள்.

“அந்த நிமிஷத்துல…

என்னால  உங்களை வெறுக்க முடியல.”தப்புன்னு தெரிஞ்சும்…

உங்க அருகில் இருந்தா பாதுகாப்பா இருந்தது..நீங்க என்னை பார்த்த விதம்…பேசுன விதம்…”

அவள் குரல் உடைந்தது.

“ஒரு நிமிஷம்…

நா என்னையே மறந்துட்டேன்.”

விக்ரம் அமைதியாக நின்றான்.

“ஆனா அதுக்காக…”

நிலா தாலியை பிடித்துக் கொண்டாள்.

“என்னோட வாழ்க்கையை என் சம்மதம் இல்லாம முடிவு பண்ண உங்களுக்கு உரிமை கிடையாது ஆதி…”

 

 

அப்போ “உரிமை இல்லாதவ எதுக்கு டி என் போட்டோக்களையும் என்னோட ஆடையையும் நைட் போட்டுட்டு படுக்குற.. நீ உன் வீட்டுல வச்சு  என்ன பண்ணிட்டு இருந்தன்னு எனக்கு எல்லாம் தெரியும்..

 

 

உன்னை வேற யாருக்காவது விட்டுடுற அளவுக்கு…நான் நல்லவனே இல்ல டி, …”

 

 

நிலா கலங்கிய விழிகளோடு

“எனக்கு புரியல…

அந்த ஆதி உண்மையா…?

இப்போ என் முன்னாடி நிற்கிற ஆதி உண்மையா…?”

சில நொடிகள் கழித்து மெதுவாக அவள் அருகே வந்தான்.

“ரெண்டுமே உண்மை தான், நிலா…”

 

“உன்னை காப்பாத்தணும்னு நினைச்சதும் உண்மை.

உன்னை என் வாழ்க்கையிலிருந்து போக விடக்கூடாதுன்னு நினைச்சதும் உண்மை.”

 

“அது காதல் இல்ல ஆதி…

சுயநலம்…”

 

விக்ரம் இறுமாப்புடன்

“இருக்கலாம் டி..

ஆனா அந்த சுயநலமா இருக்கட்டும் தப்பில்லை..ஆனால் எனக்கு நீ வேணும் …நான் என்னோட வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தது உன் விஷயத்துல மட்டும் தான்..

 

 

 

13 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Online Casino, [url=https://fajarrentcar.com/index.php/2026/05/15/experience-the-thrill-of-magic-win-casino-5/]https://fajarrentcar.com/index.php/2026/05/15/experience-the-thrill-of-magic-win-casino-5/[/url] attracts many for its exciting games. Players can enjoy a variety of options, making it a perfect choice for enthusiasts.

  2. The online gambling industry is growing, and many players seek opportunities beyond the traditional platforms. Casinos UK Not on Gamstop, [url=https://www.schriftsteller.de/discover-the-best-non-gamstop-uk-casino-sites-4/]https://www.schriftsteller.de/discover-the-best-non-gamstop-uk-casino-sites-4/[/url] provide unique options for those looking to enjoy amusement. With engaging bonuses and new experiences, players can find their ideal gaming environments. In the landscape, it’s essential to choose wisely and ensure a safe and secure gaming experience.

  3. Honestly just a solid platform that does what it promises, nothing fancy but gets the job done. [url=https://24bet-onlinecasino.com/]24Bet[/url] 🙂

  4. мда , можно зделать маленький сборник
    Amid the world of Online Casino, [url=https://gasfireplaceservices.com/the-ultimate-guide-to-casinok-a-gateway-to-online/]https://gasfireplaceservices.com/the-ultimate-guide-to-casinok-a-gateway-to-online/[/url], players uncover a plethora of games and opportunities. With innovative technology, players can experience their favorite games from the comfort of home. Incentives enhance the experience, making it even more exciting.

  5. BC Game Online Crypto Casino, [url=http://mbbs.com/join-bc-game-casino-your-gateway-to-online-gaming/]http://mbbs.com/join-bc-game-casino-your-gateway-to-online-gaming/[/url] offers a thrilling gambling experience for players who love cryptocurrency. Enjoy entertaining games and fair gameplay, ensuring protection with every bet. Join immediately and explore incredible opportunities!

  6. Luna Casino, [url=http://kz-house.com/lunacasinodanmark/luna-casino-dk-det-hele-du-behver-at-vide/]http://kz-house.com/lunacasinodanmark/luna-casino-dk-det-hele-du-behver-at-vide/[/url] tilbyder en unikt underholdning med adskillige valg. Du kan opleve forskellige præmier og events.

  7. Een prachtige optie voor spelen is het online casino zonder cruks, [url=http://eldesk.lotustest.net/elmondelsnens/casino-zonder-nederlandse-licentie-pros-en-cons/]http://eldesk.lotustest.net/elmondelsnens/casino-zonder-nederlandse-licentie-pros-en-cons/[/url]. Gokkers kunnen vrije registratie ervaren van diverse spellen, waaronder slots en tafelspellen.

  8. 世界盃杯世足賽
    2026 世界盃 將由 48 支國家隊 參與本屆賽事,本屆賽事將分成 12 組分組,每個小組由 4 支球隊組成。每組排名前兩位的隊伍 可晉級 下一輪賽事,進行 16 強、8 強、4 強、季軍戰與決賽。

    這屆 FIFA 世界盃 將於 2026 年 6 月 正式開踢。開幕賽事 預計由 墨西哥迎戰南非,並在 6 月 12 日 在 Estadio Azteca 舉辦。同日後續賽程中,南韓與捷克交手。接下來一天,加拿大將迎戰波士尼亞,而美國則對上巴拉圭。

    小組賽方面,A 組 由 墨西哥、南非、韓國及捷克;B 組 包含 加拿大、波士尼亞、卡達與瑞士;C 組 則由 巴西、摩洛哥、海地與蘇格蘭同組。像是 巴西、法國、阿根廷、西班牙、英格蘭與德國等傳統強隊 已確認所屬小組。

    後續淘汰輪次 預計於 7 月初 展開,16 強賽 大約在 7 月 4 日 開踢,而冠軍戰預定於 7 月 19 日 上演,並誕生 2026 世界盃冠軍隊伍。

    歷史對戰方面,墨西哥過去曾與南非於 2010 年世界盃 交手,結果雙方踢成 1 比 1,至今未分勝負。

    此外,越位、黃牌、紅牌、VAR 與點球等規則,也是觀眾理解比賽的重要基礎,球迷對規則判定仍十分關心。

  9. casinos online chile, [url=https://alawaellab.com/?p=23479]https://alawaellab.com/?p=23479[/url] – Los sitios de azar online chile han adquirido gran popularidad en los Гєltimos aГ±os. Presentan una amplia gama de juegos, incluyendo tragamonedas, pГіker en lГ­nea y ruleta electrГіnica. Asimismo, muchos proporcionan bonos y promociones lucrativas, lo que crea la experiencia aГєn mГЎs entretenida.

  10. Отличный ответ
    1xbet зеркало, [url=https://1xbet-8s3cl.icu/]1xbet[/url] — это отличный способ избежать блокировки. С его помощью имеется шанс играть в любимые активности без трудностей. Не упустите инициативу воспользоваться 1xbet зеркало и наслаждаться процессом.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top