ATM Tamil Romantic Novels

காவியம்  – 20

வெளியே பார்க்க பெரிய முரடனாக, வலம் வரும் தேவா, குழந்தை போலத் தன் குடும்பத்தை இழந்து அழுது கொண்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. அவனைத் மார்போடு அணைத்துக்கொண்டு அவனது கண்ணீரை துடைத்து விட்டாள்.

அவன்  மருத்துவமனையில் நடந்த மீதிச் சம்பவங்களைத் தொடர்ந்தான்.

“அன்றைக்கு அந்த விபத்துக்கு அப்புறம், அங்கே ரகுவுக்கும் மலர்விழிக்கும் சிகிச்சை நடந்துட்டு இருந்தது. என் தலையில மட்டும் லேசான காயம் இருந்ததால, எனக்கு கட்டுப் போட்டுட்டு நான் வேணியோட உடம்பு பக்கத்துலேயே அழுதுட்டு நின்றிருந்தேன்.

அப்போதான் அங்கே இன்னொரு விபத்துல அடிபட்டு, உயிருக்குப் போராடிட்டு இருந்த ஒரு பொண்ணை அவசரமா  கூட்டிட்டு வந்தாங்க. அந்தப் பொண்ணுதான் வேனில் நீ! நீ ரொம்பவே கிரிட்டிக்கலான நிலைமையில இருந்தப்ப, அங்கே இருந்த டாக்டர் என்கிட்ட ஓடி வந்து, ‘உங்க வேணியோட இதயம் இப்போ இந்தப் பொண்ணுக்குத்தான் பொருத்தப்படப் போகுது’ என்று சொன்னார்.

‘உங்ககூட வாழணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் மாமா… அடுத்த ஜென்மத்துலயாவது உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று வேணி சாகுறதுக்கு முன்னாடி சொன்ன அத்தனை வார்த்தைகளும் என் காதுக்குள்ள அப்போ ரிங்காரமிட்டது. என் அத்தை மகள் வேணி இன்னும் சாகலை, அவ உனக்குள்ள இன்னும் உயிரோடத்தான் இருக்கான்னு என் மனசுக்குத் தோணுச்சு.

உனக்கு ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சு, உன்னை ஐ.சி.யுவில கொண்டு வந்து படுக்க வச்சதும், நான் டாக்டரிடம் அனுமதி கேட்டுட்டு உன்னைப் பார்க்க உள்ளே வந்தேன். நீ மயக்கத்துல படுத்திருந்த. நான் உன் பக்கத்துல வந்து நின்றபோது… உன்னோட இதயம் லப்டப்னு துடிக்கிற சத்தம் என் காதுல விழுந்தது. அது என் வேணியோட இதயத்துடிப்பு!

என் கண்ணுல இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டுச்சு. ‘வேணி… அத்தையும், மாமாவும் என்னை விட்டு போய்ட்டாங்க. நீ எனக்காக என்கிட்ட திரும்பி வந்துட்டியாமா…’ என்று மனசுக்குள்ள அழுதுட்டே உன்னை உற்றுப் பார்த்தேன். நீ பார்க்க அப்படியே அச்சு அசல் என் வேணியோட சாயல்லயே இருந்த!என் வேணி திரும்ப வந்துட்டான்னு சந்தோசப்பட்டேன். 

அன்று முதல் நீ ஹாஸ்பிட்டல்ல இருந்த ஒவ்வொரு நாளும் உனக்குத் தெரியாம தினமும் வந்து உன்னைப் பார்த்துட்டுப் போவேன். இன்னொரு பக்கம், ரகுவுக்கும், மலர்விழிக்கும் ட்ரீட்மென்ட் முடிஞ்சு, அவங்க உடம்பு தேறுனதும் அவங்களை டிஸ்சார்ஜ் செஞ்சு அவங்களை அனுப்பிட்டு, உன்னைப் பார்க்கிறதுக்காக நான் மறுபடி ஹாஸ்பிட்டல் வந்தப்போ… அங்கே இருந்த நர்ஸ், ‘அந்தப் பொண்ணு டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பிப் போயிட்டாங்க’ என்று சொன்னாங்க. எனக்குக் கோபம் தலைக்கேறிடுச்சு.” என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லாம அவளை ஏன் அனுப்புனீங்க?!’ என்று அங்கே இருந்த நர்ஸிடம் சண்டைக்குப் போயிட்டேன்.

என் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த டாக்டர், “நாங்க உங்களைத் தேடிப் பார்த்தோம் தேவா, நீங்க அங்கே இல்லை. அவங்க நல்லா குணமாயிட்டதால கிளம்பச் சொல்லிட்டோம். அவங்க வீட்டு அட்ரஸ் எங்ககிட்ட இருக்கு, நீங்க போய் பார்க்கலாம்’ என்று ஒரு முகவரியைக் கொடுத்தார்.

நீ இருந்த அந்த அட்ரஸைத் தேடி நான் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஓடினேன் வேனில். ஆனா, நான் அங்கே போய் பார்க்கும்போது நீ இல்லை. நீ அந்த வீட்டை காலி பண்ணிட்டுப் போயிட்டதா அங்கே இருந்தவங்க சொல்லிட்டாங்க. நீ அங்கே இருந்து நேரா ஆதரவற்றோர் காப்பகத்துக்குப் போன விபரம் அன்னைக்கு எனக்குத் தெரியாமலே போயிடுச்சு. உன்னைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்.

அதுக்கப்புறம், சஸ்பெண்ட் ஆன ஆத்திரத்துல போலீஸ் ஆபீசர் ருத்ரன் எங்க குடும்பத்துக்குப் பெரிய லெவல்ல டார்ச்சர்  கொடுக்க ஆரம்பிச்சான். எங்களை வாழவே விடக் கூடாதுன்னு அலைஞ்சான். அவங்ககிட்ட இருந்து என் ரகுவை, மலர்விழியை, காப்பாத்தணும்னா நான் சும்மா இருந்தா பத்தாதுன்னு எனக்குப் புரிஞ்சுது.

வெளி உலகத்துக்கு நான் சிலைகள் செஞ்சு கொடுக்குற மாதிரி காட்டிக்கிட்டு, நடராஜன் கூடக் கை கோர்த்தேன். நடராஜன் கடத்திட்டு வரச் சொல்ற சிலைகளை எல்லாம் கடத்திக் கொண்டு வந்து கொடுத்து, அவன்கிட்ட நல்ல பேரை எடுத்தேன். ஆனா, அவனுக்கு தெரியாமலேயே பாரம்பரியமான சிலைகளை எல்லாம் ஒரு ரகசிய இடத்துல மாத்திப் பாதுகாப்பா வச்சுக்கிட்டேன். எப்படியாவது ஒரு நாள் இந்தச் சிலைகளை எல்லாம் முறைப்படி கவர்மென்டிடம் ஒப்படைக்கணும்ங்குறதுதான் என்னோட உண்மையான பிளான்.

என்னைச் சுத்தி யாரும் நெருங்க முடியாத அளவுக்குப் பெரிய கோட்டையை அமைச்சு, இந்த இடத்துக்கு நான் ராஜாவா மாறினேன்.  ருத்ரனைப் பழிவாங்கவும், என் ரகசியங்களைப் பாதுகாக்கவும் தான் நான் இந்த முரட்டு அவதாரத்தை எடுத்தேன் வேனில்…” என்று தேவா தன் கதையைச் சொல்லி முடித்தான்.

தேவா பட்ட அத்தனை கஷ்டங்களையும், அவனது கடந்த கால வேதனைகளையும் கேட்ட இளவேனிலின் மனம் பாகாய் உருகிப் போனது.

வெளியே பார்க்க முரடனாகவும், ஜங்கிள் கிங்காகவும் வலம் வந்த அந்த மனிதன், உள்ளுக்குள் இவ்வளவு காயங்களையும், இவ்வளவு வலிகளையும் சுமந்து கொண்டு வாழ்ந்திருக்கிறான் என்பதை நினைக்கும்போதே அவளது நெஞ்சு கனத்துப் போனது.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய, சட்டென்று அவனருகே சென்று தேவாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளைத் தன் கரங்களுக்குள் பாதுகாப்பாகச் சிறைபிடித்துக் கொண்டான்.

பல வருடங்களாகத் தன் நெஞ்சுக்குள் புதைத்து வைத்திருந்த காயங்களை, இன்று அவளிடம் இறக்கி வைத்த நிம்மதி அவனது முகத்தில் தெரிந்தது.

ஆனால்… அந்த அணைப்புக்குள் இருந்த இளவேனிலின் மனதில் மட்டும் நிம்மதி இல்லை.

தேவாவின் மார்பில் சாய்ந்திருந்தாலும், அவளது எண்ணங்கள் வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தன.

மெதுவாகத் தன் மார்பின் மீது கை வைத்தாள். அங்கே துடித்துக் கொண்டிருந்தது…வேணியின் இதயம்.

தேவா இப்போது சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது நினைவில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

“வேணி திரும்பி வந்துட்டான்னு சந்தோசப்பட்டேன்…”

“உன்னோட இதயம் என் வேணியோட இதயம்…”

“உன்னை தினமும் வந்து பார்த்துட்டுப் போவேன்…”

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது.

ஒருவேளை… ஒருவேளை… தேவா காதலித்தது என்னை இல்லையா? எனக்குள் உயிரோடு துடித்துக் கொண்டிருக்கும் வேணியையா? அந்த எண்ணமே இளவேனிலின் உடலை நடுங்க வைத்தது.

காட்டுக்குள் தன்னோடு காதலாய் உருகி நின்றதும்…

தன்னை உயிராகப் பாதுகாத்ததும்… தன் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டதும்… அத்தனையும் உண்மையிலேயே தனக்காகவா? இல்லை… வேணியின் நினைவுகளை மீண்டும் இழக்கக் கூடாது என்பதற்காகவா? அவளது தொண்டைக்குள் ஏதோ ஒன்று சிக்கிக் கொண்டது போல மூச்சு முட்டியது.

தேவாவின் மார்பில் சாய்ந்தபடியே கண்களை இறுக மூடிக்கொண்டாள். கண்ணீரின் வெப்பம் அவளது கன்னங்களை நனைத்தது.

“நான் இல்லாமல் வேற எந்தப் பெண்ணுக்குள்ள வேணியோட இதயம் பொருத்தப்பட்டிருந்தாலும்…ஜங்கிள் கிங் அவங்களைத்தான் காதலிச்சிருப்பாரா? அவங்களைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பாரா?” என்ற கேள்வி அவளது மனதில் எழுந்தது.

அந்த ஒரு கேள்வியே அவளது இதயத்தைத் துண்டு துண்டாகக் கிழித்தது. தேவாவின் அணைப்பு அவளுக்குப் பாதுகாப்பையும், நிம்மதியையும் கொடுத்தது.

ஆனால்…அதே அணைப்பு இப்போது அவளது மனதுக்குள் ஒரு பயத்தையும் விதைத்திருந்தது. தான் உயிராக நேசிக்கும் மனிதனின் இதயத்தில்… உண்மையாக வாழ்வது இளவேனிலா? இல்லை… இன்னும் வேணிதானா? என்று நினைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் அமைதியாக வழிந்தது.

தேவாவோ, அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தபடி நின்றான்.

தன் கரங்களுக்குள் நின்றிருக்கும் பெண்ணே இப்போது தன் உலகம் என்று நினைத்து அவன் நிம்மதியாக இருந்தான். ஆனால்… அவனது மார்பில் சாய்ந்திருந்த இளவேனிலின் மனம் மட்டும், அந்த ஒரு சந்தேகத்தால் ஆயிரம் துண்டுகளாக உடைந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவில்லை.

…………

தேவாவோ, பல வருடங்களாகத் தன் நெஞ்சுக்குள் அடைத்து வைத்திருந்த பாரத்தை தன் மனைவியிடம் இறக்கி வைத்த நிம்மதியில் இருந்தான்.

இளவேனிலிடம் தன் கடந்த காலத்தின் காயங்களையும், வேணியின் இழப்பையும், ருத்ரனின் துரோகத்தையும் சொல்லிவிட்ட பிறகு, அவனது மனம் ஓரளவு லேசாகியிருந்தது.

ஆனால் அவனது பயணம் இன்னும் முடிந்து போகவில்லை. தன் குடும்பத்தை அழித்த ருத்ரனுக்கான கணக்கு இன்னும் பாக்கி இருந்தது.

அதற்கு முன்பாக, ரகுவுக்கும் மலர்விழிக்கும் தங்களது குலதெய்வக் கோவிலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, திருமண ஏற்பாடுகளில் தேவா முழு மூச்சாக இறங்கியிருந்தான்.

கோட்டைக்குள் இருந்த நம்பிக்கையான ஆட்களை மட்டும் அழைத்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ரகசியமாக ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினான்.

மலர்விழியோ இளவேனிலின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

“அக்கா… அக்கா…” என்று நிழல் போல அவளைத் தொடர்ந்தவள், இளவேனில் எந்த வேலையைச் செய்ய முயன்றாலும் உடனே ஓடி வந்து தடுத்துவிடுவாள்.

ஒருநாள் சமையலறைக்குள் நுழைந்த இளவேனில், அங்கே இருந்த காய்கறிகளை எடுத்து நறுக்க முயன்றாள்.

அடுத்த நொடியே மலர்விழி ஓடி வந்து அவளது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு “அக்கா! நீங்க ஏன் இப்போ வேலை பார்க்குறீங்க? நாங்க எல்லாரும் இருக்கோம்ல? உங்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு ஜீவா அண்ணா சொல்லியிருக்காரு. நீங்க பேசாம ஓய்வெடுங்க. நான் எல்லாம் பார்த்துக்கிறேன்.” என்று கூறியவள்,‌இளவேனிலை சமையலறையில் இருந்து வெளியே தள்ளிக் கொண்டு வந்து ஹாலில் அமர வைத்துவிட்டாள்.

இளவேனிலுக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் மலர்விழியின் அந்த அக்கறை கூட அவளது மனதில் இருந்த குழப்பத்தைப் போக்கவில்லை.

அன்று மாலை…  கோட்டையின் பின்புறத் தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சின் அருகே நின்று கொண்டிருந்தாள் இளவேனில்.

மரக்கிளைகளில் அமர்ந்திருந்த இரண்டு கிளிகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன.

அந்த கிளிகளின் காதல் கொஞ்சல்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் மட்டும் எங்கோ அலைந்து கொண்டிருந்தது.

அப்போது…

“அக்கா…” என்று அழைத்துக் கொண்டே மலர்விழி அங்கே வந்தவளின்  கையில் ஆவி பறக்கும் டீ கோப்பை இருந்தது.

“உங்களுக்கு இஞ்சி டீ பிடிக்கும்னு ஜீவா அண்ணா சொன்னாரு. சூடா போட்டுட்டு வந்திருக்கேன். குடிங்க…” என்று புன்னகையோடு கோப்பையை நீட்டினாள்.

இளவேனில் அதை வாங்கிக் கொண்டு மெதுவாகப் பருக ஆரம்பித்தாள்.

மலர்விழியோ அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், இளவேனிலைப் பார்த்து புன்னகைத்த படி

“அக்கா…”

“ம்ம்…”

“உங்களைப் பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” இளவேனில் புரியாமல் அவளைப் பார்த்தாள்.

“என் வேணி அக்காவும் உங்களை மாதிரியே தைரியமா இருப்பாங்க. யாருக்கும் பயப்பட மாட்டாங்க. எந்தச் சூழ்நிலையிலும் கலங்க மாட்டாங்க.” சொல்லிக் கொண்டிருந்தவளது குரல் மெல்ல தழுதழுத்தது.

“உங்களைப் பார்க்கும் போதெல்லாம்… என் வேணி அக்காவே திரும்பி வந்து என் முன்னாடி நிக்கிற மாதிரி இருக்கு அக்கா…” என்று பாசமாகச் சொன்னாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் இளவேனிலின் இதயம் வலித்தது. மலர்விழியின் பாசம் போலியானது இல்லை. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையான அன்பும், ஏக்கமும் இருந்தது.

ஆனால்… இளவேனிலின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

‘என்னை யாரும் நேசிக்கல… எல்லாரும் வேணியைத் தான் நேசிக்கிறாங்க… நான் அவளைப் போல இருக்கிறதால் தான் இவ்வளவு அன்பு…’ என்ற எண்ணம் அவளை உள்ளுக்குள் கொன்று கொண்டிருந்தது.

கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைக்கத் திரும்பியவள், திடீரென மலர்விழியைப் பார்த்தாள்.

“மலரு…”

“சொல்லுங்க அக்கா…”

“நான் உன் அக்கா மாதிரி இருக்கிறதால் தான் என் மேல இவ்வளவு பாசமா இருக்கியா?” என்று நேராகக் கேட்டுவிட்டாள். மலர்விழி ஒரு நொடி அதிர்ச்சியாக அவளைப் பார்த்தாள்.

“அச்சோ அக்கா!” அப்படியெல்லாம் இல்லக்கா… உங்களைப் பார்த்த முதல் நாளே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஏன்னு கேட்டா எனக்கே சரியா சொல்லத் தெரியல. சில பேரைப் பார்த்த உடனே மனசுக்குப் பிடிச்சுப் போயிடும் இல்லையா? அந்த மாதிரிதான் நீங்களும். அதுவும் ஜீவா அண்ணா உங்களைப் பற்றி எவ்வளவு சொல்லியிருக்காரு தெரியுமா? நீங்க ரொம்ப நல்லவங்க… தைரியமானவங்க… யாருக்காகவும் யோசிக்கிறவங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு அவ்வளவு கேட்ட பிறகு உங்களைப் பார்க்கும்போது எப்படி பாசம் வராம இருக்கும்? அதனால்தான் உங்களை இவ்வளவு பிடிக்குது அக்கா…” என்று குழந்தைத்தனமான புன்னகையோடு கூறினாள்.

இளவேனில் உதட்டில் ஒரு புன்னகையை வரவழைக்க முயன்றாள்.

ஆனால் அந்தப் புன்னகை அவளது இதழ்களில் மட்டுமே நின்றது. மனம் வரை சென்று சேரவில்லை.

மலர்விழி சொன்ன வார்த்தைகள் அவளுக்குச் சிறு ஆறுதலைக் கொடுத்தாலும், நெஞ்சின் ஆழத்தில் புதைந்து கிடந்த சந்தேகம் மட்டும் இன்னும் விலகவில்லை.

மலர்விழி காலியான டீ கோப்பையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பிறகும்… தோட்டத்தில் தனியாக நின்றிருந்த இளவேனிலின் மனதில் ஒரே கேள்விதான் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

“மலர்விழி மட்டும் இல்ல..  தேவாவும் என்னை இளவேனிலாகத்தான் காதலிக்கிறாரா?இல்லை… இன்னும் வேணியைத்தானா காதலிக்கிறாரா?” இந்த கேள்விக்கான பதில் இன்னும் அவளுக்குக் கிடைக்கவில்லை.

தெரியாத அந்த பதில்தான் இப்போது அவளது நெஞ்சை அதிகமாக வலிக்க வைத்தது.

“இந்த ஜீவா லூசு எங்க போனான்? என்னைப்பத்தி எக்ஸ்ட்ரா பிட் போட்டு எல்லார்கிட்டயும் பேசிட்டுத் திரியறானா?” என்று தன் நண்பன் மீது கோபப்பட்டவள், உடனே அவனுக்கு போன் செய்தாள்.

அந்த நேரத்தில்…

ஜீவாவோ சமையல் கட்டில் “நளினி… எனக்கு ஒரு டீ கிடைக்குமா?” என்று  கேட்டான்.

நளினி திரும்பிக் கூட பார்க்காமல், “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே டீ போட்டுக் கொடுத்தேன்? நைட்டு சமையலுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க!” என்று அவனை விரட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பார்த்து ஜீவாவின் போன் அடித்தது.

திரையில் ‘நண்பி காலிங்’ என்று மின்னியது.

போனை எடுத்தவன், “ஹலோ…” என்று சொல்ல,

“எங்கடா இருக்க? உடனே தோட்டத்துப் பக்கம் வா!” என்றாள்  இளவேனில்.

ஜீவாவின் முகம் உடனே மலர்ந்தது. “அடடா! என்னைப் பத்தின நினைப்பு இப்போதாவது உனக்கு வந்துச்சா? உன்னை மட்டுமே நம்பி இருக்குற ஒருத்தனை இந்தக் கோட்டைக்குள்ள கைதியா கூட்டிட்டு வந்து போட்டுட்டு, இப்பதான் நினைப்பு வருதா?” என்று அலட்டிக் கொண்டவன், “இருடி… வரேன்!” என்று சொல்லி போனை வைத்தான்.

காய் நறுக்கிக்கொண்டிருக்கும் நளினியைப் பார்த்து, “என் ஃபிரண்ட் கூப்பிடுறா. என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன். ஒரு டீ மட்டும் போட்டு வை!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து கிளம்பினான்.

தோட்டத்துக்கு வந்த ஜீவா, அங்கே நின்றிருந்த இளவேனிலைப் பார்த்ததும் சற்று வியந்தான்.

கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, ஆழ்ந்த யோசனையில் மூழ்கியபடி நின்றிருந்தாள் இப்படி பித்துபிடித்தது போல அவளை ஜீவா பார்த்ததே இல்லை.

எப்போதும் கையில் லேப்டாப்… அல்லது ஃபோன்… எங்கே என்ன குற்றம் நடக்கிறது, எந்த தகவல் கிடைக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருப்பவள்… இன்று ஏதோ பெரிய பாரத்தை மனதில் சுமந்தவள் போல நின்றிருந்தாள்.

“இளா…” என்று மெதுவாக அவளது தோளைத் தொட்டான்.

சட்டென்று திரும்பியவள்,

“வாடா…” என்று மட்டும் சொல்லிவிட்டு அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்த ஜீவாவுக்கு, ஏதோ சரியில்லை என்பது புரிந்துவிட்டது.

 

காவியம்  – 21

தோட்டத்தில்… கைகளைக் கட்டியபடி சிந்தனையில் மூழ்கி நின்றிருந்தாள் இளவேனில்.

அவளது முகத்தில் இருந்த வாட்டத்தைப் பார்த்ததும் ஜீவாவுக்கே ஏதோ சரியில்லை என்று புரிந்தது.

மெதுவாக அவளருகே சென்று, “இளா…” என்று கூப்பிட்டான்.

“வாடா…” என்றவள் அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

அவள் அருகிலேயே அமர்ந்த ஜீவா சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்தான்.

“என்னடி பிரச்சனை?”

இளவேனில் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு “ஜீவா… நான் ஒண்ணு கேட்டா உண்மையா பதில் சொல்லுவியா?”

“நீ கேட்குறதுக்கு எனக்கு பதில் தெரிஞ்சா சொல்றேன்.”

“இந்த வீட்டுல இருக்குற எல்லாரும்… என்னை நிஜமாவே இளவேனிலா பார்க்குறாங்களா? இல்ல வேணியா பார்க்குறாங்களா?” அவளது கண்கள் லேசாகக் கலங்கின.

ஜீவா புருவம் சுருக்கி அவளை பார்த்தான்.

“மலர்விழி என்னைப் பார்க்கும்போதெல்லாம் வேணி அக்கா மாதிரி இருக்கீங்கன்னு சொல்றா. ஒருவேளை…‌ தேவாவும் காதலிக்குறது என்னை இல்லையா? ” அவளது கண்களில் கண்ணீர் திரண்டது.

“நான் இல்லாம வேற எந்தப் பொண்ணுக்குள்ள வேணியோட இதயம் பொருத்தப்பட்டிருந்தாலும்… அவரு அவங்களைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பாரோ?” என்று கேட்டவள் தலை குனிந்தாள்.

சில நொடிகள் ஜீவா எதுவும் பேசவில்லை.

“இந்த சந்தேகம் எப்போ இருந்து?”

“நேத்து ராத்திரி இருந்து.”

“ஹ்ம்ம்…”  தலையசைத்தான்.

“சரி… இப்போ நான் ஒண்ணு சொல்றேன். கவனமா கேட்டுக்கோ.” என்றதும் இளவேனில் அவனைப் பார்த்தாள்.

“தேவா அண்ணா மனசுக்குள்ள என்ன இருக்கு என்று எனக்குத் தெரியாது. அதை நானும் சொல்ல முடியாது. அதை சொல்ல வேண்டிய ஒரே ஆள் தேவாதான்.” என்றான்.

இளவேனில் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆனா…” என்று நிறுத்தியவன் அவளை நேராகப் பார்த்தான்.

“நீ இப்போ பயப்படுற இந்த வேளைல முடிவு மட்டும் எடுக்காத. ஏன்னா, நம்ம மனசு காயப்பட்டிருக்கும் போது இல்லாத விஷயத்தைக் கூட இருக்குற மாதிரி நம்ப ஆரம்பிச்சிடும்.” என்றதும்.

இளவேனில் மெதுவாக நிமிர்ந்தாள்.

“ஒரு விஷயம் தெரியுமா?” என்றதும்..

“ம்ம்…”

“மலர்விழி உன்னைப் பார்த்து வேணியா நினைக்கலாம். அது அவளோட அக்கா மேல இருக்குற பாசம்.” அதுல தப்பு எதுவும் இல்லை. நீயும் அவளோட இடத்துல இருந்தா அப்படித்தான் உணர்வ.” என்றான்.

இளவேனில் அமைதியாகத் தலையசைத்தாள்.

“ஆனா அதையே தேவா அண்ணாக்கும் பொருத்திப் பார்க்காத. ஏன்னா ஒவ்வொருத்தரோட உணர்வும் வேற. மலர்விழி என்ன நினைக்கிறான்னு எனக்கு புரிஞ்சுக்க முடியும். ஆனா தேவா அண்ணா  என்ன நினைக்கிறார்னு தேவா அண்ணாவுக்குதான் தெரியும்.” என்றான் நிதானமாக இளவேனில் அவனை உற்றுப் பார்த்தாள்.

ஜீவா புன்னகைத்தபடி  “மகாபாரதத்துல திரௌபதி எல்லாத்தையும் இழந்து நின்னப்போ, கிருஷ்ணன் அவளுக்கு என்ன சொன்னான் தெரியுமா?”

“என்ன?”

“நீ இப்போ பார்க்குறது இருட்டு மட்டும். ஆனா இந்த இருட்டே உன்னோட வாழ்க்கை இல்லைன்னு.”

“ஒருத்தரோட வாழ்க்கையில கடந்த காலமும் இருக்கும், நிகழ்காலமும் இருக்கும். கடந்த காலத்தை நேசிச்சவன், நிகழ்காலத்தை நேசிக்க முடியாதுன்னு எந்த சட்டமும் இல்லை.”

இளவேனிலின் கண்கள் மெதுவாக நனைந்தன.

“நீ இப்போ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு.”

“என்ன?”

“உன் சந்தேகத்தை வளர்க்காத. உன் மனசுக்குள்ள கற்பனை பண்ணி பதில் சொல்லிக்காத. நேரா தேவா அண்ணாகிட்ட கேள்.அவரு பதில் சொல்லட்டும்.” அவன் கூறிய  வார்த்தைகள் இளவேனிலின் நெஞ்சுக்குள் ஆழமாக இறங்கின.

இதுவரை யாரும் அந்தக் கோணத்தில் அவளிடம் பேசவில்லை.

“ஒருவேளை… நான் தேவையில்லாம பயப்படுறேனோ?” என்று அவள் மெதுவாகக் கேட்டாள்.

“அதுதான் நானும் சொல்றேன்.” என்று சிரித்தான் ஜீவா.

“நீ ரிப்போர்ட்டர் தானே?”

“ஆமா.”

“அப்போ ஆதாரம் இல்லாம நியூஸ் போடுவியா?”

“மாட்டேன்.”

“அதே மாதிரி ஆதாரம் இல்லாம உன் வாழ்க்கையைப் பற்றியும் தீர்ப்பு சொல்லாத.” இளவேனிலின் உதடுகளில் லேசான புன்னகை மலர்ந்தது.

அதைப் பார்த்த ஜீவா நிம்மதியடைந்தான்.

ஆனால்… அவளது மனதின் ஆழத்தில் இன்னும் ஒரு கேள்வி உயிரோடு இருந்தது.

அதற்கான பதில் ஜீவாவிடம் இல்லை.

அதை சொல்ல வேண்டியவன்…

அவளது ஜங்கிள் கிங் மட்டும் தான்.

கோட்டையின்‌ மறுபுறம், திருமண ஏற்பாடுகளை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த தேவாவுக்கு, தன் பார்பி டாலின் மனதில் இவ்வளவு பெரிய புயல் வீசிக் கொண்டிருப்பது இன்னும் தெரியவில்லை…

இரவு டைனிங் டேபிளில் ரகு, ஜீவா என எல்லாரும் அமர்ந்திருந்தனர். தேவாவுக்குச் சாப்பாடு பரிமாறும் போது, இளவேனில் தன் மனதிற்குள் இருந்த அத்தனை சந்தேகப் புயலையும் மறைத்துக் கொண்டு, முகத்தைச் சிரித்தவாறு வைத்துக் கொண்டு தான் இருந்தாள். எல்லாரும் சுற்றிலும் இருந்ததால், அவனால் அவளிடம் அப்போது எதையும் கேட்க முடியாமல் போனது.

சிறிது நேரம் கழித்து, இளவேனில் தங்களது அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி ஜன்னலோரம் சென்று நின்று கொண்டாள். அவளது முகத்தில் இருந்த அந்த மெல்லிய மாற்றத்தை தேவா கண்டுபிடித்து விட்டான்.

மெதுவாக அவளருகே நடந்து வந்தவன், அவளது தோள்களைப் பற்றித் தன் மார்போடு மெதுவாக அணைத்துக் கொண்டு  “என்ன ஆச்சு என் பார்பி டாலுக்கு?  என்றான் அவளது காதோரம் குழைந்த குரலில்…

அவனது அணைப்பில் சில நொடிகள் உறைந்து நின்ற இளவேனிலின் நெஞ்சுக்குள் வேணியின் நினைவுகள் வந்து முட்டின. தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, “நான் நல்லாத்தான் இருக்கேன்… நீங்கதான் இப்போதெல்லாம் என்னை கண்டுக்கிறதே இல்லை!” என்று மெதுவாகக் கூறிவிட்டு, அவளது தோள்களில் இருந்த அவனது கரங்களை மெதுவாக விலக்கிவிட்டு அங்கிருந்து தள்ளி நின்றாள்!

அவன் மீண்டும் அவளை விடாமல் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். தேவாவின் அணைப்புக்குள் நின்றிருந்த இளவேனிலின் மனம் மட்டும் அமைதியாக இல்லை. அவன் தன் கடந்த காலத்தை முழுவதுமாகக் கொட்டி விட்ட நிம்மதியில் இருந்தான். ஆனால்… அவளது நெஞ்சுக்குள் எழுந்த‌ அந்த ஒரு கேள்வி மட்டும் அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை.

மெதுவாக தேவாவின் அணைப்பிலிருந்து விலகியவள், அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் இருந்த தயக்கத்தைப் பார்த்ததும், தேவாவின் புருவம் சுருங்கியது. “என்ன வேனில்?” என்று மெதுவாகக் கேட்டான்.

இளவேனில் உதட்டைக் கடித்துக் கொண்டாள். “நான் ஒண்ணு கேட்டா… உண்மையா பதில் சொல்லுவீங்களா ஜங்கிள் கிங்?”

“உன்கிட்ட நான் பொய் சொன்னதே இல்லை.” அவன் பதில் சொன்ன விதத்தில் அவளது கண்கள் மீண்டும் கலங்கின.

சில நொடிகள் அமைதியாக நின்றவள் இறுதியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு . “நீங்க காதலிக்கிறது என்னையா…?” தேவா அவளையே உற்றுப் பார்த்தான். “இல்லை… எனக்குள்ள துடிக்கிற வேணியோட இதயத்தையா?” அவளது குரல் நடுங்கியது.

தேவாவின் முகத்தில் இருந்த அமைதி மெல்ல மறைந்தது. இளவேனிலோ கண்ணீரோடு தொடர்ந்தாள். “உங்க கதை முழுசையும் கேட்டதுக்கு அப்புறம் எனக்கு பயமா இருக்கு ஜங்கிள் கிங்…”

“என்ன பயம்?”

“நான் இல்லாம வேற எந்தப் பொண்ணுக்குள்ள வேணியோட இதயம் பொருத்தப்பட்டிருந்தாலும்… நீங்க அவங்களைத்தான் தேடி போயிருப்பீங்களா?” அறைக்குள் மயான அமைதி நிலவியது. தேவாவின் விழிகள் மட்டும் அவளை விட்டு விலகவில்லை.

“காட்டுக்குள்ள என்னைக் காதலிச்சதும்… என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதும்… என் மேல உள்ள ஆசையா இல்லை?.., எனக்குள்ள இருக்க வேணியாலதானா?” என்று கேட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சில நொடிகள்… தேவா எதுவும் பேசவில்லை. அவனது அமைதியே இளவேனிலின் இதயத்தை இன்னும் வலிக்க வைத்தது.

ஆனால் அடுத்த நொடி… தேவா அவளது கையை வலுவாகப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான். அவள் அவனைப் பார்க்காமல் தலையைத் தாழ்த்திக் குனிந்து கொண்டாள். “என்னைப் பாரு!” என்றான் தேவா.

இளவேனில் மெதுவாக நிமிர்ந்தாள்.

அவளது கண்ணீரைத் துடைத்தவன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான். “நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுறதுக்கு முன்னாடி… நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று அவள் கண்களை பார்த்தான்.

இளவேனில் அமைதியாக நின்றாள்.

“நான் ஹாஸ்பிட்டல்ல வந்து உன்னைப் பார்த்தப்போ… உனக்குச் சுயநினைவே இல்லை.”

அவள் தலையசைத்தாள்.

“நான் உன்னைக் காதலிச்சேனா அப்போ?”

இளவேனில் அமைதியாக இருந்தாள்.

“இல்லை. அப்போ நான் தேடினது வேணியைத்தான்.” என்றான் தேவா. அவளது கண்கள் மீண்டும் கலங்கின.

“ஆனா… நீ கோட்டைக்குள்ள வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று அவன் அவளது முகத்தை மென்மையாக வருடினான். “நான் தேடின வேணி கொஞ்சம் கொஞ்சமாக் காணாம போயிட்டா.”

இளவேனில் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். “என்ன சொல்றீங்க?”

தேவா லேசாகச் சிரித்தான். “ஆமா. என்கிட்ட சண்டை போட்ட பொண்ணு வேணி இல்லை… என்னை எதிர்த்து நின்ற பொண்ணு வேணி இல்லை… நான் கோபப்பட்டப்போ பயப்படாம என் முகத்துக்கு நேரா பேசின பொண்ணு வேணி இல்லை… நான் தனியா நின்னப்போ என் கூட வந்து நின்ன பொண்ணும் வேணி இல்லை… காட்டுக்குள்ள என்னோட கூட இருந்தது வேணி இல்லை… காட்டுக்குள்ள என் காதலை முழுதாக காட்டியது வேணியிடம் இல்லை… என்று அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகச் சொன்னான். “அது இந்த இளவேனில் இந்த பார்பி டால் மட்டும்தான்!” அவனது கரம் அவளது கன்னத்தில் மென்மையாகப் பதிந்தது.

“என் வாழ்க்கையில முதல்முறையா… என்னைப் பார்த்து பயப்படாம, என்னைப் பார்த்து இரக்கப்படாம, என்னை மாற்றணும்னு ஆசைப்படாம… நான் எப்படி இருக்கேனோ அப்படியே ஏற்றுக்கிட்ட ஒரே பொண்ணு நீதான் வேனில்.” இளவேனிலின் கண்ணீர் இப்போது தாரையாக வழிந்தது.

தேவா அவளது முகத்தைத் தன் இரு கரங்களுக்குள் ஏந்தினான். இளவேனிலின் கண்கள் காதலாலும் கண்ணீராலும் நிரம்பின. தேவா அவளை இன்னும் நெருக்கமாகத் தன் மார்போடு இழுத்துக் கொண்டான்.

“வேணி என் வாழ்க்கையில ஒரு அழகான நினைவு.

“வேணி என் கடந்த காலம் வேனில்.

நான் உயிரோட இருக்கும் வரைக்கும் மறக்க முடியாத நினைவு.

ஆனா… நீ தான் என் நிகழ்காலம்…நீ தான் என் எதிர்காலம்…

“நீ என் உயிர். நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது. நான் காலையில கண் திறக்குறதுல இருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் என் மனசு தேடுற ஒரே பொண்ணு நீதான். நான் உயிரா நேசிக்கிற… இந்த இளவேனிலை மட்டும் தான்.”

அதனால இனிமே ஒரு தடவ கூட இந்த மாதிரி கலங்கி உன்னையே நீ கஷ்டப்படுத்திக்காத.

அந்த வார்த்தையைக் கேட்ட நொடி… இளவேனிலின் கண்களில் தேங்கியிருந்த அத்தனை சந்தேகக் கண்ணீரும் உடைந்து வழிந்தது. அடுத்த நொடி… அவள் தேவாவை மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“சாரி…” என்றாள் தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு வெட்கத்துடன்.

“சாரி வேணாம்… கிஸ் வேணும்.” அவன் குறும்பாக அவளது தாடையைப் பிடித்து நிமிர்த்தினான்.

“கிஸ் தானே… நிறைய கொடுக்குறேன்.” என்றாள் முகமெல்லாம் வெட்கம் சூழ.

“ஜங்கிள் கிங்…” என்று கண்கள் பனிக்க அவனது முகம் முழுவதும் முத்தங்களால் நனைத்தாள்.

அவளது முத்தங்களை ஆசையோடு வாங்கிக் கொண்டு, தன் பதில் முத்தத்தை அவளது இதழ்களில் ஒரு பேரழகுக் கவிதையாக வடித்தான் தேவா. சில நொடிகள் நீடித்த அந்த முத்தம் நிமிடங்கள் ஆனது. அவளது மூச்சுக்காற்று ஏங்க, அவளை மெதுவாக விட்டுப் பிரிந்தவன், அவளது கன்னங்களைப் பற்றி, “இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமா யோசிக்கக் கூடாது, புரியுதா?” என்று அவளது நெற்றியில் ஆழமாய் முத்தமிட்டான்.

ஆனா இந்த ஜங்கிள் கிங் என்னைச் சந்தேகப்பட்டியே!… அதுக்காக உனக்கு ஒரு தண்டனை கொடுப்பேன்.” என்று தேவா அவளை மிரட்டினான்.

“என்ன தண்டனை?” என்று கேட்டாள் இளவேனில்.

“இனிமே என்னை விட்டு ஒரு அடி கூட நீ தள்ளி நிற்கக் கூடாது!”

இளவேனில் வெட்கத்தில் அப்படியே சிவந்து போனாள். அவளது முகத்தைப் பார்த்த தேவா ஆசையாகச் சிரித்துவிட்டு, அவளது நெற்றியில் மீண்டும் ஆழமாக முத்தமிட்டான். அறைக்குள் அவர்கள் காதல் பேரழகாக மலர்ந்து கொண்டிருந்தது.

கோட்டையின் வெளியே… அந்த நள்ளிரவு இருட்டில் நின்றிருந்த ஒரு கார், மெதுவாக உள்ளே வெளிச்சம் தெரிந்த தேவாவின் அறையை நோக்கிக் கொண்டிருந்தது.

காருக்குள் அமர்ந்திருந்தவன் தன் கையில் இருந்த சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன் காலாலேயே மிதித்து நசுக்கினான்.

“தேவா… என் தம்பி பைரவனை உன் கோட்டைக்குள் அடைச்சு வச்சு ஆட்டம் காட்டிட்டு இருக்கியா? உன்னைச் சும்மா விடமாட்டேன்டா!” என்று பற்களைக் கடித்தபடி உறுமினான்.

அவன்… வேறு யாருமல்ல, இன்ஸ்பெக்டர் ருத்ரன்!

 

ஹாய் பிரண்ட்ஸ்… ❤️

நம்ம கள்ளோ காவியமோ கதை நாளை முடிந்துவிடும்! 😍✍️

மறுநாளே லிங்க் எடுத்துவிடுவேன் டியர்ஸ். படிக்க நினைப்பவர்களும், பாதியில் வைத்திருப்பவர்களும் உடனே படிக்க ஆரம்பிச்சிடுங்க! 📖✨

படித்துவிட்டு உங்களோட லைக்ஸ் கமெண்ட்ஸ்களை சொல்லுங்க 🙏🥰

 

 

 

7 thoughts on “”

  1. Choosing online casinos can be overwhelming, especially with the numerous options available. Many players seek casinos not on GamStop, [url=https://www.repalpiquiri.com.br/?p=1113074]https://www.repalpiquiri.com.br/?p=1113074[/url] for their benefits. These platforms offer various games, generous bonuses, and flexible payout options, making gameplay exciting plus. Players can enjoy an more liberating experience without restrictions. Discovering new casinos not on GamStop can lead to unique opportunities in thrilling adventures and potential winnings. As you explore, keep in mind the importance of responsible gambling and choosing licensed sites for safety and security. Enjoy the freedom these casinos offer!

  2. In the world of gambling, Bookies Not on Gamstop, [url=https://aridlahore.edu.pk/staffordshiremotorhub/exploring-bookies-not-on-gamstop-uk-a-2/]https://aridlahore.edu.pk/staffordshiremotorhub/exploring-bookies-not-on-gamstop-uk-a-2/[/url] offer diverse choices for punters in search of independence. These companies cater to those who aim to sidestep controls. Explore the benefits and potential risks when engaging with them.

  3. Что-то у меня личные сообщения не отправляются, ошибка какая то
    онлайн casino, [url=https://hoctiengtrungquoc.online/giai-nghia-huong-dan-viet-cac-net-%e4%bb%bf/]hoctiengtrungquoc.online[/url] стало невероятно популярным среди игроков. Многие ищут возможность развлечься и заработать. Многочисленные игры, от слотов, обеспечивают уникальный досуг.

  4. casina s bonusem, [url=https://genius.stepp-up.com/online-kasina-prvodce-zahraninimi-platformami-pro/]https://genius.stepp-up.com/online-kasina-prvodce-zahraninimi-platformami-pro/[/url] nabГ­zГ­ skvД›lГ© pЕ™Г­leЕѕitosti pro hrГЎДЌe, kteЕ™Г­ chtД›jГ­ zvГЅЕЎit svГ© ЕЎance na vГЅhru. MЕЇЕѕete vyuЕѕГ­t rЕЇznГ© nГЎvrhy, kterГ© zlepЕЎujГ­ hernГ­ zГЎЕѕitek. Nenechte na ЕЎance, kterГ© vГЎm nabГ­dnou vГ­ce zГЎbavy.

  5. давно хотел посматреть
    melbet официальный сайт, [url=https://melbet-ecw29.cam/]https://melbet-ecw29.cam/[/url] предлагает пользователям широкий выбор игровых возможностей и удобный интерфейс. В предложении представлены множество виды спорта и событий. Запись проходит быстро плюс легко. Игрок может оценить высоким качеством. Акции плюс бонусы делают игру сильно привлекательной. Уникальные возможности для новых пользователей предоставляются.

  6. По моему мнению Вы допускаете ошибку. Предлагаю это обсудить. Пишите мне в PM, пообщаемся.
    casino indir, [url=http://www.fitcom.com.tr/casinoslot24051/seo-gaming-rekabet-avantajnz-artrn-1577235183.html]http://www.fitcom.com.tr/casinoslot24051/seo-gaming-rekabet-avantajnz-artrn-1577235183.html[/url], oyunculara birГ§ok fД±rsat sunan online oyun platformlarД±dД±r. Bu siteler, bГјyГјk Г¶dГјller ile dikkat Г§eker. KullanД±cД± dostu arayГјzleri sayesinde, Еџans oyunlarД± oynamak son derece basit hale gelir.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top