10.காதல்
“உங்க ஆசைக்காக வேணும்னா… உங்க கூட ஒரு நாள் இருக்கேன்… ஆசை தீர்த்துக்கோங்க…” என்று சந்தியா கண்ணீருடன் கூறினாள்.
பளார்!அவளது கன்னத்தில் மாறனின் கை பதிந்தது.
சந்தியா அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள்.
“என்ன டி நினைச்சுட்டு இருக்க…?!” என்று அவன் கோபத்தில் கர்ஜித்தான்.”நான் உன்னை அப்படி நினைக்கிறவனா…? என் காதலுக்கு நீ கொடுக்கிற மதிப்பு இதுதானா?”
சந்தியா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“அப்போ வேற என்ன பண்ண சொல்றீங்க…?எல்லாரும் நான் உங்களை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றாங்க.. நான் என்ன தான் பண்றது..?” என்று உடைந்து போன குரலில் கேட்டாள்.
மாறன் ஒரு நொடி கண்களை மூடிக் கொண்டான்.அவளது வார்த்தைகள் அவன் இதயத்தை கிழித்தது.
“நான் உன்னை காதலிக்கிறேன் தியா… உன்னோட மனசை தான் வேண்டும்… உன் உடம்பு இல்ல…” என்று வலியுடன் கூறினான்.
“நீயே உன்னை இவ்வளவு கீழ்த்தரமா நினைச்சு பேசுறதை என்னால தாங்க முடியல டி..”
என்று கூறிவிட்டு அவளை விட்டு விலகி சென்றான்.
சந்தியா அங்கேயே தரையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.
முதல் முறையாக…மாறனின்
உண்மையான காதல் உணர ஆரம்பித்தாள்.
மாறன் அறையை விட்டு வெளியேறிய பிறகும் சந்தியா அதிர்ச்சியிலேயே அமர்ந்திருந்தாள்.
கன்னத்தில் இருந்த வலியை விட, அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவளை அதிகமாக காயப்படுத்தின.
“நான் உன்னோட மனசை தான் கேக்கிறேன் . உன் உடம்பு இல்ல…”
அந்த வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
இதுவரை அவனை தவறாக புரிந்து கொண்டோமோ என்ற எண்ணம் முதல் முறையாக அவள் மனதில் தோன்றியது.அதே நேரம் வெளியே நின்றிருந்த மாறன் கோபத்தில் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டிருந்தான்.”நீ என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டியா தியா…” என்று தனக்குத்தானே வேதனையோடு கூறினான்.
அவன் கண்களிலும் கண்ணீர் மின்னியது.
மாறனை தேடி சந்தியா செல்ல அவளை தவிர்த்தான். இரு தினங்கள் பேசவே இல்லை அவளிடம் தினமும் வருவான் போவான்..ஆனால் அவளை கவனிக்காமல் இல்லை.. நீயே வந்து பேசு டி என்று இருந்தான்..சந்தியாவுக்கு தான் இந்த நிலை அவளை ரொம்ப சங்கடப்படுத்தியது..பல நாட்களுக்கு பிறகு சந்தியாவின் தாய் வள்ளி கால் செய்திருந்தார்..
தாயின் குரல் கேட்டதும் தான் தாமதம்..மம்மாஆஆ என்று அழ தொடங்கினாள்..
அம்மாடி எதுக்கு அழற..
எப்படிம்மா இருக்கீங்க..எங்க இருக்கீங்க.. என்று சந்தியா கேட்க.
சந்தியா ..,அந்த ராஜபாண்டி உன் தங்கச்சி வித்யாவை கட்டி தர சொல்லி அவளை கடத்திட்டு போய்ட்டான்….
என்னமா சொல்றிங்க..?
ஆமா ம்மா..ரொம்ப பிரச்சனை பண்ணான்.. மாறன் தம்பி தான் வந்து அவனை ஜாமீன் கிடைக்கவே முடியாத அளவு கேச போட்டு உள்ள தள்ளுனார்..அது மட்டுமில்ல சந்தியா அந்த அரக்கன் கிட்ட இருந்து எங்களை காப்பாத்தி நம்ம பழைய வீட்டை நமக்கே வாங்கி கொடுத்துட்டார்..நம்ம விவசாய நிலம் கூட நம்மகிட்ட வந்துட்டு..அது மட்டும் இல்ல டி..சரியா சாப்பாடு கூட இல்லாம இருந்தோம் இப்போ நினைச்சது எல்லாம் சாப்பிட்டுட்டு இருக்கோம்..தேவையான எல்லாமே நம்ம வீட்டுல இருக்கு சந்தியா..என்று வள்ளி கூற
அம்மா இவ்வளவு நடந்துருக்கு என்கிட்ட ஏன் சொல்லல..
மாப்பிள்ளை தான் உன்கிட்ட சொன்னா நீ பயப்படுவன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டார்..இது என் குடும்பமும் தான் அவளுக்காக இதை பண்ணல..நானும் சந்தியாவும் வேற வேற இல்ல அத்தை ன்னு சொல்லிட்டு போனார்.. தங்கமான பையன் ..உன் கோபத்தை காட்டி அந்த புள்ள மனச நோகடிச்சுராத டி
என்று வைத்தார்..வள்ளிக்கு தெரியும் தன் மகள் இந்த வாழ்க்கையை அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள மாட்டாள் என்று..ஆனால் இப்படியே விட்டால் இருவர் வாழ்க்கையும் பாதிக்கும் என்று அனைத்து உண்மையும் கூறி விட்டார்..
வள்ளியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் , சந்தியாவின் காதில் ஒலித்து கொண்டு இருந்தது .
அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லை.”எனக்காக… என் குடும்பத்துக்காக… இவ்வளவு பண்ணியிருக்காரா…?”அவள் மனம் முழுவதும் மாறனின் நினைவு நிரம்பியது.. “நான் உன்னோட மனசை தான் கேக்கிறேன்… உன் உடம்பு இல்ல…” என்று வலியுடன் சொன்ன குரல்… அம்மா இப்போது சொன்ன ஒவ்வொரு விஷயமும் ஒன்றாக சேர்ந்து அவள் இதயத்தை நொறுக்கியது.நான் அவரை எவ்வளவு தவறா புரிஞ்சுக்கிட்டேன்…”
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேகமாக மாறனின் அறைக்குச் சென்றாள்.கதவு திறந்தே இருந்தது.
மாறன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வந்ததை கவனித்தும், நிமிர்ந்து பார்க்கவில்லை.
“சா… சார்…” என்று மெதுவாக அழைத்தாள்.அவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.சந்தியா மெதுவாக அவன் அருகில் சென்று நின்றாள்.
“என்கிட்ட… பேச மாட்டீங்களா?
மாறன் லேப்டாப்பை மூடிவிட்டு அவளை பார்க்க இரண்டு நாளா நான் எதிர்பார்த்தது இதுதான்.. வா டி வா உன்னை வச்சு செய்றேன் ..என்ன பேசணும் சந்தியா என்றான் வேண்டுமென்றே ..
அது உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..
ஒஹ் அப்படியா … நான் இப்போ பேசுற மனநிலையில இல்ல.”என்று அமைதியாகச் சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றான்.அவசரமாக சந்தியா அவன் கையைப் பற்றினாள்.
“சாரி…”என்னைய மன்னிச்சுறுங்க என்று தயக்கத்துடன் அவனை அனைத்து கொண்டாள்.. முதல் முறை அவளாக அணைக்கிறாள்
அவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
“என்னை மன்னிச்சிடுங்க… உங்களை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்… உங்களை புரிஞ்சுக்காம… பேசிட்டேன்…”
மாறன் மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.அவள் முகத்தில் இருந்த கண்ணீரும், குற்ற உணர்வும் அவன் கோபத்தை மெதுவாக கரைக்க ஆரம்பித்தது.
ஆனால் அவன் இன்னும் அவளை அணைக்கவில்லை. வலுக்கட்டாயமாக அவளே அவனை அணைக்க சொல்ல தன்னை கட்டுப்படுத்தி கொண்டு நின்றான்..
அவன் இன்னும் தன்னை மன்னிகவில்லை என்று அவன் முகம் பார்க்க அவன் கண்கள் அவளை தான் பார்த்து கொண்டிருந்தது..
மன்னிக்கணுமா..
ம்ம்ம் ஆமா என்றாள்..
அப்போ மன்னிப்பை உன்னோட இதழ் வச்சு காட்டு என்றான்..சந்தியா ஒரு நிமிடம் முழித்தாலும் மாறனின் இதழ்களை சிறு பிள்ளை போல மிட்டாய் சாப்பிடுவதை போல சுவைக்க ஆரம்பித்தாள்..
ஒரு நிலையில் அவனிடம் இருந்து அவளை பிரித்து விட்டவன்..எதுக்கு இப்படி திடீர்ன்னு வந்து கிஸ் பண்ற..
அது அது…நீங்க என்று ஆரம்பித்தவள் “தியா..இங்க பாரு கட்டாயப்படுத்தி எனக்காக செய்ய வேண்டாம்..எதுவும் வேண்டாம்…
இல்ல நான் கட்டாயத்துக்காக பண்ணல..
அப்புறம்
அது..என்று தயங்கியவள் அவன் முகம் பார்க்காது திரும்ப நான்..
நீ ..ம்ம் சொல்லு டி.
எனக்கும் உங்களை பிடிச்சுருக்கு என்று கூறிய அடுத்த நொடி அவன் அணைப்பில் நின்றாள்..இம்முறை முத்தம் பழகுவது அவன் முறை ஆனது..நீண்ட நெடிய முத்தத்திற்கு பின் என்கூட வாழ சம்மதமா டி..
சந்தியா தலையை குனிந்து, ம்ம்ம் சம்மதம் என்றவள் ..கன்னங்கள் சிவக்க நின்றாள்..நான் வீட்டுக்கு போறேன் ..மாறன் அவளை நீண்ட நேரம் பார்த்தான்.அவன் உதட்டில் தெரியாமல் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
தியா நல்லா யோசிச்சுக்கோ..என்கூட வாழ உனக்கு முழு சம்மதம் தான
சம்மதம் என்றாள்..
சரி என்கூட நான் கூப்பிடுற இடத்துக்கு நீ வரணும்..
வறேன் என்றாள் வெட்கத்துடன்..
நீ கீழே கார்ல வெய்ட் பண்ணு ..நான் ஒரு போன் பேசிட்டு வறேன் என்று அவளை அனுப்பி வைத்தான்…
ஆசையாக அவனை மனதில் நினைத்து கொண்டு சந்தோசமாக காருக்குள் அமர்ந்தாள்..அந்த சந்தோஷமெல்லாம் சில நொடிகளே நீடித்தது..நாயகி அவளுக்கு போன் செய்யவும் இதுவரை இருந்த .மனநிலை முற்றிலும் மாறியது..கைகள் நடுங்க போனை எடுத்தவள். ஹலோ என்றாள்..
சந்தியா நான் சொன்ன படி நீ அவன் கூட பேசாம தான இருக்க..இந்த சண்டையை காரணமா வச்சு எங்கயாச்சும் போய்டு.. நான் பணம் தந்துருவேன்..சரி சரி நான் வைக்கிறேன் என்றார்..
இதை எப்படி மறந்தேன்..என்று யோசிக்க மாறன் காருக்குள் வந்து அவளை பார்த்து கண்ணடித்து விட்டு சந்தியா நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா.. அவன் கண்களில் அவ்வளவு சந்தோசம் அவளுடன் வாழ அவளுக்கு மட்டும் வாழ ஆசை இல்லையா என்ன..ஆனால் நாயகியிடம் செய்த சத்தியம் வேறு அவளை அவனிடம் நெருங்கவே அச்சப்பட வைக்கிறது..
சார்..நான் என்று ஏதோ பேச ஆரம்பிக்க
ப்ச்..நீ ஒன்னும் பேச வேண்டாம்..பேசுன வரை போதும் என்று காரில் பயணத்தை தொடங்கினர்..
வீட்டுக்கு போறோமா சார்..
நாம வீட்டுக்கு போறோம்னு சொன்னேனா டி..என்று கேட்டான்..
எங்க போறோம்..
ம்ம்ம் சொல்றேன் ..என்றான்
ஆபிஸில் வேலைகளை எல்லாம் அர்ஜுனிடம் ஒப்படைத்து விட்டு அவளை அழைத்து கொண்டு மாறனின் எஸ்டேட்க்கு சென்றான்..காரில் செல்லும் போது கூட அவன் அவளை சீண்டவோ தொடவோ இல்லை..அவளுக்கு தான் அவன் பார்வை இம்சை ஆகியது..அவன் கண்களால் பார்த்தே கனிய வைத்தான்..சந்தியாவை பார்த்துக்கொண்டே இறங்கு டி
அவன் பார்வை வீச்சு தாங்காமல் பேச்சை மாற்றினாள். என்.என்னங்க.., நாம எங்க வந்துருக்கோம்..
ஸ்ஸ் அமைதியா இரு டி..நாம ரெண்டு பேரும் ஒரு வாரம் தனியா தான் இருக்க போறோம்..இது நம்மளோட எஸ்டேட் இதை சுற்றி இருக்குறவங்க நம்மளோட விசுவாசமான வேலைகாரங்க..அப்பாவோட நம்பிக்கைக்குரிய எல்ல தொழிலாளர்களும் இங்க உள்ள டீ பேக்டரில தான் வேலை செய்றாங்க..நாளைக்கு அங்க போலாம்..
குளிருதுங்க..என்று குளிரில் அனத்திய படி சந்தியா கூற
“நான் தான் இருக்கேன்ல இனி குளிர் தெரியாது டி என்று அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டான்..சந்தியா குளிரில் நடுங்கியபடி மாறனின் அணைப்புக்குள் சாய்ந்தாள்.
“இப்போவும் குளிருதா டி?” என்று அவன் மெதுவாக கேட்டான்.
அவள் தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள். உண்மையில் குளிர் குறைந்ததா, இல்லை அவன் அருகாமை அவளை இதமாக்கியதா என்று அவளுக்கே புரியவில்லை.
மாறன் அவளது நெற்றியில் மெதுவாக ஒரு முத்தம் பதித்தான்.
“இங்க வந்தது உன்னை தனியா கூட்டிட்டு இருக்கணும்னு ரொம்ப நாள் ஆசை தியா… நம்ம வாழ்க்கையை எந்த தொல்லையும் இல்லாம புதுசா ஆரம்பிக்கணும்னு.”
சந்தியாவின் கண்கள் மீண்டும் கலங்கின.
சூரியன் மறையும் நேரத்தில், மலைக்காற்றோடு சேர்ந்து அவர்கள் மனங்களுக்குள் இருந்த தூரமும் முழுவதுமாக கரைந்தது.
