ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 18

 

மெல்ல இருள் சூழ  தொடங்கியது. இரவு நேர வண்டுகள் ரீங்காரம் பாட ஆரம்பிக்க, பன்னீர் மரமும் முல்லைப்பூக்களின் நறுமணமும் அந்த இடத்தையே இன்னும் ரம்மியமாக மாற்றியிருந்தது.

 

செந்தூரனின் நெஞ்சில் சாய்ந்திருந்த முல்லை, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

 

“சின்னையா… வீட்டுக்குப் போலாமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

 

அவளது காதோரம் தன் மீசையை உரசியபடி,

 

“இப்படியே இந்த ராத்திரி முழுக்க… இந்த நம்ம தோட்டத்துல, முல்லைப்பூ வாசத்துல… என் பொண்டாட்டி முல்லையை என் நெஞ்சுல சாய்ச்சுக்கிட்டு இருக்கணும்னு ஆசையா இருக்குடி…” என்றான்.

 

அவன் பேச்சைக் கேட்ட முல்லையின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.

 

“சும்மா இருங்க சின்னையா… அத்தை நம்ம ரெண்டு பேரையும் காணோம்னு தேடுவாங்க…” என்று சிணுங்கினாள்.

 

“இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் முல்லை. சில நேரம் இங்கயே வந்து படுத்துத் தூங்கிடுவேன். ஆனா… இப்போ என் மனசுக்குப் பிடிச்சவளோட இதே இடத்துல இருக்கற சந்தோஷமே தனி சந்தோஷம் தெரியுமா?” என்றவன், அவளது கழுத்தோரம் மென் முத்தம்  ஒன்றை பதித்தான்.

 

“சின்னையா… கூசுதுங்க…” என்று வெட்கத்தில் கழுத்தை சாய்த்துக் கொண்டாள்.

 

“அப்படியா…? அப்போ இங்க தொடவா?” என்று குறும்பாகக் கேட்டவன், அவளது இடையை லேசாகக் கிள்ளினான்.

 

“ஆஹா…! நீங்க ரொம்ப மோசம்… போங்க… சேட்டை ரொம்ப பண்ணுறீங்க” என்று செல்லக் கோபத்தோடு அவனது தோளில் மெதுவாக அடித்தாள்.

 

“ஏதே… நான் இன்னும் என் சேட்டையையே ஆரம்பிக்கலையேடி, என் செல்லப் பொண்டாட்டி…” என்று குறும்பாகச் சிரித்தவன், அவளது நெற்றியில் ஆடிய ஒற்றை முடிக்கற்றையை விரல்களால் ஒதுக்கிவிட்டான்.

 

அந்த நேரம் அவனது கைப்பேசி சிணுங்கியது.

 

“அம்மா தான் கூப்பிடுறாங்கன்னு நினைக்கிறேன்…” என்று முணுமுணுத்தபடி போனை எடுத்தவன்,

 

“ஹலோ அம்மா… இதோ வந்துட்டு இருக்கோம்…” என்று குணவதி பேசுவதற்குள் சொல்லிவிட்டு அழைப்பை முடித்தான்.

 

போனை வைத்தவன்  “போலாம்டி… இல்லன்னா, நம்ம முதலிரவையே இந்த பன்னீர் மரத்துக்கீழ, இந்தப் பூவாசத்துல வச்சுக்கலாம்னு நான் முடிவு பண்ணிடுவேன்…” என்று கண் சிமிட்டினான்.

 

“அச்சோ… சின்னையா…” என்று வெட்கத்தில் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டாள் முல்லை.

 

அவளது வெட்கத்தை ரசித்த செந்தூரன், “நான் இன்னும் ஒண்ணுமே பண்ணல… அதுக்குள்ள இவ்வளவு வெட்கமா? செந்தூரா… உன் பாடு இனிமே திண்டாட்டம் தான் போல…” என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவன், தன் மனைவியை மீண்டும் மெதுவாக  தூக்கிக்கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தான்.

 

இரவு உணவாக சப்பாத்தியும், சுண்டல் குழம்பும் சமைத்து வைத்திருந்தார் குணவதி. சூடான சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு தட்டில் அடுக்கி வந்து முல்லையிடம் நீட்டினார்.

 

“நானே ஊட்டிவிடுறேன் குடுங்கம்மா…” என்று அவரிடமிருந்து தட்டை கையில் வாங்கிக் கொண்டான் செந்தூரன்.

 

குணவதியோ, “ரெண்டு பேரும் நல்லாச் சாப்பிடுங்கப்பா. நான் அப்படியே சமையல்கட்டுப் பாத்திரங்களை சுத்தம் பண்ணிட்டு வரேன்.” என்று சிரித்தபடியே இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

 

குணவதி  சென்றதும், முல்லை லேசாக முகம் சுளித்து, “சின்னையா… எனக்குக் கால்ல தானே அடிபட்டிருக்கு? கைக்கு என்ன? நானே சாப்பிட்டுப்பேன். அத்தை என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்றாள்  செல்லக் கோபத்தோடு…

 

“என் அம்மா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பாங்கடி. உன்னை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நான் மட்டும் இப்போ உன் பக்கம் இல்லைன்னா இந்நேரம் என் அம்மாவே உனக்கு ஊட்டி விட்டிருப்பாங்க!” என்றான் குறும்புச் சிரிப்புடன்.

 

அவன் சொன்னதைக் கேட்டதும் முல்லையின் முகம்  லேசாக மாறியது. “எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என் அம்மாவோட முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை சின்னையா. எல்லாமே அப்பா தான் எனக்குப் பண்ணுவாங்க. அம்மா இல்லாத குறையே தெரியாம என்னை வளர்த்தாரு…” என்று சொன்னவளின் தொண்டை அடைத்தது.

 

“ஆனா, இன்னைக்குக் காலையில இருந்து அத்தை எனக்குக் கால்ல தண்ணீர் படாம குளிக்க வச்சு, தலை வாரி விட்டு, பொட்டு வச்சு அவங்க சொந்தப் பொண்ணு போலப் பார்த்துக்கிட்டாங்க. ஒருவேளை என் அம்மா உயிரோட இருந்திருந்தா என்னை அத்தை போலத்தான் பார்த்திருப்பாங்களோ?” என்று விம்மினாள் முல்லை.

 

செந்தூரன் அவளது கைகளைப் பற்றி, “ஏய்!… இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்கே? உன் அம்மா ஸ்தானத்துல நின்னு என் அம்மாவும் உன்னைப் பார்த்துப்பாங்க. நானும் உன்னை கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன்டி. முதல்ல சாப்பிடு…” என்று சப்பாத்தியை அவளுக்கு  ஊட்டி முடித்தான்.

 

“நீங்களும் சாப்பிடுங்க… நான் என்னைப்பத்தி மட்டும் பேசி உங்களைக் கஷ்டப்படுத்திட்டேன்…” என்று குற்ற உணர்வோடு சொன்னாள் முல்லை.

 

“அப்போ எனக்கு நீ ஊட்டி விடுடி…” என்று குழந்தை போல முகம் சவைத்தான் செந்தூரன்.

 

“ஊட்டி விடுறேன் சின்னையா…” என்று சிரித்தபடியே ஹாட்பாக்ஸிலிருந்து சப்பாத்தியை எடுத்து தட்டில் வைத்து, சிறுசிறு துண்டுகளாகப் பிய்த்து அவனுக்கு ஊட்டத் தொடங்கினாள்.

 

ஆனால் அந்தச் சேட்டைக்காரனோ, சப்பாத்தியை மட்டும் சாப்பிடாமல், அவளது விரல்களையும் செல்லமாக கடித்தான்.

 

“அய்யோ… என்ன இது? நாம டைனிங் ஹால்ல இருக்கோம்!” என்று அவனது தோளில் லேசாகத் தட்டி செல்லக் கோபம் காட்டினாள்.

 

“இங்க யாரும் வர மாட்டாங்கடி…” என்று குறும்பாகச் சிரித்தபடியே அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் செந்தூரன்.

 

அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த முல்லை, “ஏய் சேட்டைக்காரரே… உங்க பார்வையே சரியில்ல!” என்று வெட்கத்தோடு தன் சேலையைச் சரி செய்துகொண்டாள்.

 

“ஏய்… உன் புருஷனுக்கு உன்னைப் பார்க்க உரிமை இல்லையாடி?” என்று போலிக் கோபத்தோடு கேட்டான்.

 

முல்லை வெட்கத்தில் சிவந்த முகத்தோடு, “ஹலோ புருஷரே… என்னைப் பார்க்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா… அது நம்ம ரூமுக்குள்ள மட்டும். இங்க இப்படிச் சேட்டை பண்ணாதீங்க…” என்று மெதுவாகக் கிசுகிசுத்தாள்.

 

அவள் சொன்ன விதத்தில் செந்தூரன் சிரித்துவிட்டான்.

 

அந்த நேரத்தில், அரண்மனைக்குள் நுழைந்த பெரியசாமியின் பார்வை டைனிங் ஹாலை நோக்கித் திரும்பியது. மகனும் மருமகளும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவருடைய முகம் இறுகிப் போனது.

 

“ம்ம்… சாப்பிடுற இடத்துல என்ன கூத்து வேண்டிக் கிடக்கு?” என்று கரகரத்த குரலில் சொல்லிவிட்டு, விறுவிறுவென உள்ளே சென்றார்.

 

அவரது வார்த்தைகள் முல்லையின் மனதை சுருக்கென்று குத்தின.

 

“நான் தான் சொன்னேன்ல… உங்க சேட்டையை நம்ம ரூம்ல வச்சுக்கணும்னு. இப்போ பாருங்க…” என்று அவள் முகம் வாடியது .

 

செந்தூரன் அவளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தவன் “என் பொண்டாட்டியை நான் கொஞ்சுறதுக்கு யார்கிட்டயும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்ல…” என்றான்  உறுதியான குரலில்.

 

அந்த நேரம் முகம் கழுவிவிட்டு மீண்டும் ஹாலுக்குள் வந்த பெரியசாமியின் பார்வை, நேராக அவர்கள் மீது விழுந்தது.

 

அதைப் பொருட்படுத்தாத செந்தூரன், முல்லையின் நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றையை விரலால் ஒதுக்கிவிட்டு, அவளது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான்.

 

எதிர்பாராத அந்த அன்பில் முல்லை வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள். பெரியசாமியின் முகமோ கோபத்தில் சிவந்து இறுகியது.

ஆனால், செந்தூரன் அவரை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல், தன் காதல் மனைவியையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கோபம் முழுவதும் மகன் மீது இருந்தாலும், அதை நேரடியாகக் காட்ட முடியாத பெரியசாமி, தன் எரிச்சலை மனைவியிடம் திருப்பினார்.

 

“குணவதி…!” என்று என்றார் உரத்த குரலில்…

 

சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த குணவதி, அவரது குரலைக் கேட்டதும் அவசரமாக வெளியே வந்தார்.

 

“என்னங்க…?” என்றார்  பணிவோடு.

 

“எனக்குச் சப்பாத்தி எல்லாம் வேண்டாம். ராத்திரிக்கு சாதமும் காரக் குழம்பும் தான் சாப்பிடுவேன். அதை எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வா…” என்று கடுகடுப்பாகச் சொன்னவர், மகனையும் மருமகளையும் ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, வேகமாக அறைக்குள் சென்றார்.

 

அவர் சென்ற திசையையே சில நொடிகள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த குணவதி, மெதுவாக ஒரு பெருமூச்சு விட்டு, “மகனும் மருமகளும் சந்தோஷமா இருக்காங்களேன்னு நான் மனசார சந்தோஷப்பட்டா… இந்த மனுஷனுக்கு அதுகூடப் பிடிக்கல. வயசு ஆக ஆக கோபமும் பிடிவாதமும் தான் கூடிக்கிட்டே போகுது…” என்று மனதுக்குள் வருந்தினார்.

 

பூஜை அறையை ஒரு கணம் பார்த்தவர், “கடவுளே… என் வீட்டுக்காரருக்கு நல்ல புத்தியைக் கொடு. பிள்ளைகளோட சந்தோஷத்தைப் புரிஞ்சுக்கிற மனசையும் கொடு…” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

 

அவருக்காக தனியாகச் செய்து வைத்திருந்த சாதத்தையும் காரக் குழம்பையும் ஒரு தட்டில் எடுத்து வைத்து, தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டு கனத்த மனதோடு தங்கள் அறையை நோக்கி நடந்தார் குணவதி.

டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த முல்லையின் மனமோ மிகவும் சங்கடமாக இருந்தது.

 

“என்னால தான்… பெரியசாமி மாமா  அத்தைகிட்ட கோபமா பேசுறாரோ?…” என்று குற்ற உணர்வோடு தலையைக் குனிந்தாள்.

 

அவளது முகத்தைப் பார்த்தவுடனேயே, அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணத்தைப் புரிந்துகொண்டான் செந்தூரன்.

 

“ஏய்… என்னோட அப்பா எப்பவுமே இப்படித்தான். அம்மாகிட்டதான் கோபத்தைக் காட்டுவாரு. நீ இதுக்காகக் கவலைப்படவே கூடாது. அம்மா அதுக்கெல்லாம் பழகிட்டாங்க. அவரால அம்மாகிட்ட கோபத்தைக் காட்டத்தான் முடியும். வேற எதுவும் பண்ண முடியாது…” என்று சிரித்தவன், “சொல்லப்போனா… என் மேல அவருக்கு  கொஞ்சம் பயம் இருக்கு!” என்று குறும்பாகக் கண் சிமிட்டினான்.

 

அவன் பேசிய விதத்தில் முல்லையின் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

 

இருவரும் சாப்பிட்டு முடித்ததும், “சரி… கை கழுவிட்டு வா…” என்று சொல்லிவிட்டு, செந்தூரன் தட்டுகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றான்.

 

அரண்மனையின் வெளியே தோட்டம், பண்ணை, மாட்டுக் கொட்டகம், காவல் எனப் பல வேலைகளுக்காக ஏராளமான ஆட்கள் இருந்தாலும், வீட்டுக்குள், குறிப்பாக சமையலறைக்குள் மட்டும் யாரையும் குணவதி அனுமதிக்க மாட்டார்.

 

அதற்குக் காரணம் ஆட்களை நம்பாதது அல்ல… பெரியசாமியின் கோபத்துக்கு யாரும் ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான்.

 

சிறிது நேரத்தில் மீண்டும் அறைக்குள் வந்த செந்தூரன், முல்லையை மெதுவாகத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவளுக்கான மாத்திரையை எடுத்துக் கொடுத்து, தண்ணீர் குடிக்க வைத்தவன்,

 

“இந்தச் சேலையை மாத்திட்டு ஃப்ரீயா ஒரு நைட்டி போட்டுக்கோ. காயம் இருக்கிற கால்ல சேலை கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்…” என்றான்.

 

“நை… நைட்டியா…? என்கிட்ட இல்லையே…” என்று இதழைப் பிதுக்கி கேட்டாள் முல்லை.

 

செந்தூரன் புன்னகைத்தபடி, அருகிலிருந்த கவரை எடுத்துத் திறந்தான்.

 

“அதான்… நான் வாங்கிட்டு வந்திருக்கேன்…” என்று அழகான வெளிர் மஞ்சள் நிற நைட்டி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

 

நைட்டியை ஆச்சரியமாக வாங்கிப் பார்த்த முல்லை, “இது… எப்போ வாங்கீங்க சின்னையா?” என்று வியப்போடு கேட்டாள்.

 

“மதியம் வெளியே போனேன்ல… அப்போத்தான். நீ  ராத்திரி கம்ஃபர்ட்டா தூங்கணும்னு நினைச்சேன். அதான் டவுனுக்குப் போயி ஒரு டஜன் நைட்டியும், சில புடவைகளும் வாங்கிட்டு வந்தேன்…” என்றான் இயல்பாக.

அவன் சொன்னதைக் கேட்டதும் முல்லையின் கண்கள் மீண்டும் அன்பால் நெகிழ்ந்தன. தன்னுடைய தேவையை, தான் சொல்லும் முன்பே புரிந்து செய்து வைக்கும் அந்த அக்கறை, அவளது மனதை இன்னும் ஆழமாக செந்தூரனிடம் கட்டிப்போட்டது.

முல்லை கையில் இருந்த நைட்டியைப் பார்த்தபடியே சங்கடமாக நின்றாள்.

 

“என்னடி?” என்று செந்தூரன் கேட்டான்.

 

“கால்ல இன்னும் வலி இருக்கு சின்னையா… நைட்டியை நானே மாத்திக்க முடியுமான்னு தெரியல…” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

 

அவளது முகத்தை ஒரு கணம் பார்த்தவன், “அதுக்காக ஏன் இவ்வளவு யோசிக்கிற? உனக்குச் சிரமம் வராம நான் உதவி பண்றேன்,” என்றான் இயல்பாக.

 

“அச்சோ… வேண்டாம்… நானே பார்த்துக்கறேன்…” என்று வெட்கத்தில் தடுமாறினாள்.

 

“பிடிவாதம் பிடிக்காதே. உனக்கு வலி அதிகமாகிடக் கூடாது. நீ நிம்மதியா நில்லு… நான் பார்த்துக்கறேன்,” என்று அவளுக்கு தைரியம் கொடுத்தான்.

 

அவனது அக்கறை நிறைந்த குரலைக் கேட்டதும், முல்லை அமைதியாகத் தலையசைத்தாள்.

 

அவனோ நைட்டியை போட்டு விடுகிறேன் என்ற பெயரில் அவள் மேனியை தொட்டு தடவியபடி நைட்டியை மாத்திவிட்டான்.

 

“இப்போ ஓகேவா?” என்று செந்தூரன் புன்னகையுடன் கேட்டான்.

 

“ம்…” என்று வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள் முல்லை.

 

“இனிமே உனக்கு எந்தக் கஷ்டமும் வர விட மாட்டேன்,” என்றவன், அவளது தலையை மெதுவாக வருடினான்.

 

செந்தூரனின் அருகில் இருந்தால் எந்தக் கஷ்டத்தையும் தாங்கிவிடலாம் என்ற நிம்மதி முல்லையின் மனம் முழுவதும் பரவியது.

முல்லையின் காலில் இருந்த காயம் இன்னும் முழுமையாக ஆறாததால், அவளால் தரையில் கால் ஊன்றிக் நடக்க முடியவில்லை.  செந்தூரன் அவளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான்.

அவளை படுக்கையிலிருந்து தூக்குவது, சோபாவில் அமர வைப்பது, சாப்பிட அழைத்துச் செல்வது என எல்லாவற்றையும் அவனே முன்னின்று செய்தான்.

 

“சின்னையா… நானே மெதுவா நடந்துப்பேன். உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்?” என்று முல்லை தயக்கத்தோடு சிணுங்கும் போதெல்லாம்,

 

“என் பொண்டாட்டியைக் கஷ்டப்படாம பார்த்துக்கிறதுல எனக்கு என்னடி சிரமம்?” என்று குறும்போடு அவளது வாயை அடைத்துவிடுவான்.

 

அவளுக்கு நேரத்திற்குச் சாப்பாடு கொடுப்பது , மாத்திரைகளை மறக்காமல் கொடுக்க வைப்பது என செந்தூரனின் உலகமே முல்லையைச் சுற்றித்தான் சுழன்றது.

 

மறுபுறம், குணவதியும் முல்லைக்கு ஒரு தாயாகவே மாறிப்போயிருந்தார். தன் கணவன் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், முல்லையின் தாய் இல்லாத குறையைத் தன்னால் இயன்றவரை நிரப்ப முயன்றார்.

 

முல்லைக்கு விருப்பமான உணவுகளை சமைத்துக் கொடுப்பது, அவளது தலைமுடியை வாரி விடுவது, நெற்றியில் குங்குமம் வைத்து அழகு பார்ப்பது என ஒரு மகளைப் போலவே அவளை அன்பால் அரவணைத்தார். தாய்மையின் அரவணைப்பில், முல்லையின் மனக்காயங்களும் மெல்ல மெல்ல ஆறத் தொடங்கின.

 

ஆனால், பெரியசாமியின் கோபம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

 

அவர் யாரிடமும் பெரிதாகப் பேசவில்லை. ஆனால், அரண்மனைக்குள் செந்தூரனும் முல்லையும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் காணும் ஒவ்வொரு முறையும், அவரது விழிகளில் பகைத் தீ இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

முல்லையை தன் மகனிடமிருந்து பிரித்து அரண்மனையை விட்டு விரட்டவும்,  கொடூரமான திட்டத்தை அமைதியாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.

 

இப்படியே பதினைந்து நாட்கள் கடந்தன.

 

முல்லையின் காலில் இருந்த காயமும் முழுமையாக குணமாகிவிட்டது. கட்டு அவிழ்க்கப்பட்டு, எந்த வலியும் இல்லாமல் இயல்பாக நடக்க முடிந்தது.

 

அன்றுதான், மீண்டும் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிக்குச் செல்ல வேண்டிய நாள்.

 

மஞ்சள் நிறப் புடவையில், நெற்றி நிறைய குங்குமத்தோடும், கையில் புத்தகங்களோடும் தயாராக நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்த செந்தூரனின் முகம் பெருமிதத்தில் மலர்ந்தது.

 

“முல்லை… ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி, நாம மாமாவைப் பார்த்துட்டுப் போயிடலாம்,” என்றான் அன்போடு.

 

“நிஜமாவா சின்னையா? நானும் அப்பாவைப் பார்க்கணும்னு தான் நினைச்சேன்…” என்று முல்லையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

 

இருவரும் காரில் கிளம்பி, ஊருக்குள் இருந்த மருதப்பனின் பழைய வீட்டுக்கு சென்றனர்.

 

வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டதும், உள்ளே இருந்த மருதப்பன் அவசரமாக வெளியே வந்தார்.

 

நெற்றியில் குங்குமம், முகத்தில் நிறைந்த தெளிவு, மஞ்சள் நிறப் புடவையில் புத்தகங்களை ஏந்தியபடி கம்பீரமாக, மங்களகரமாக நடந்து வரும் தன் மகளைப் பார்த்த அந்த நொடியே, அவரது நெஞ்சம் பூரித்து பெருமிதத்தில் நிரம்பியது.

 

“முல்லைம்மா…” என்று நெகிழ்ச்சியோடு அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.

 

“அப்பா… என் கால் முழுசா சரியாயிடுச்சுப்பா. அத்தையும் சின்னையாவும் என்னை கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிட்டாங்க. இன்னைக்கு நான் மறுபடியும் ஸ்கூல்ல பாடம் நடத்தப் போறேன். உங்க ஆசீர்வாதம் வேணும்ப்பா…” என்று கூறிய முல்லை, செந்தூரனுடன் சேர்ந்து தந்தையின் காலில் விழுந்து வணங்கினாள்.

 

மருதப்பனின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. இருவரின் தலைகளிலும் கைகளை வைத்து,

 

“நல்லா இருங்கம்மா… நூறு வருஷம் மகராசியா வாழுங்க. மாப்பிள்ளை… என் பொண்ணோட முகத்துல இருக்குற இந்தச் சந்தோஷத்தைத்தான் நான் வாழ்நாள் முழுக்கப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அவளை எப்போதும் இப்படியே பத்திரமாப் பார்த்துக்கோங்க…” என்றார் நெகிழ்ச்சியுடன்.

 

“நீங்க கவலைப்படாதீங்க மாமா. என் பொண்டாட்டியைப் பத்திரமா ஸ்கூல்ல விட்டுட்டு, நான் தோட்டத்துக்கு கிளம்புறேன்,” என்றான் செந்தூரன்.

 

தந்தையின் ஆசீர்வாதத்தை மனம் நிறைய ஏற்றுக்கொண்ட முல்லை, மீண்டும் காரில் ஏறினாள்.

 

இப்போது அவள் மனதில் பயமில்லை… தன்னம்பிக்கை மட்டுமே இருந்தது.

 

தன் கனவை நோக்கி மீண்டும் பயணிக்கும் ஆசிரியையாகவும், தன் கணவனின் அன்பும் பாதுகாப்பும் துணையாகவும், புதிய நம்பிக்கையுடன்  பள்ளிக்கு  புன்னகையுடன் சென்றாள்  முல்லை.

148 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே”

  1. КЛЬОВО)))))))
    1win зеркало, [url=https://1win-xzm67.cam/]ванвин сайт[/url] — это удобный способ получить доступ к любимым ставкам. Платформы часто блокируются, но 1win предлагает альтернативы для пользователей. Зарабатывать на 1win удобно и безопасно.

  2. Non Gamstop Casino Sites, [url=https://lachula.com.co/exploring-casinos-not-registered-on-gamstop-425751281/]https://lachula.com.co/exploring-casinos-not-registered-on-gamstop-425751281/[/url] offer a unique experience for players seeking freedom. These platforms provide a chance to enjoy diverse games without the restrictions of the UK Gamstop program. Explore your next favorite casino today!

  3. Я думаю, что Вы ошибаетесь. Могу отстоять свою позицию. Пишите мне в PM, пообщаемся.
    Испано-русский словарь, [url=https://spainslov.ru/site/word/word/%D0%91%D0%95%D0%A1%D0%A1%D0%9E%D0%9B%D0%9D%D0%95%D0%A7%D0%9D%D0%AB%D0%99]https://spainslov.ru/site/word/word/%D0%91%D0%95%D0%A1%D0%A1%D0%9E%D0%9B%D0%9D%D0%95%D0%A7%D0%9D%D0%AB%D0%99[/url] — это необходимый инструмент для познания испанского языка. Он содействует транслитерации слов и выражений, что и делает значимым ресурсом для любителей.

  4. casinos online nuevos, [url=https://hoshavitality.com/como-pagar-en-casinos-en-linea-usando-google-play-3/]https://hoshavitality.com/como-pagar-en-casinos-en-linea-usando-google-play-3/[/url] – Los plataformas de juego online nuevos ofrecen una experiencia novedosa para los fanГЎticos. Con ofertas atractivos, estos plataformas garantizan diversiГіn y tranquilidad.

  5. Choosing the best online casino, [url=https://igor.gold.ac.uk/~jspar002/keyboard_smash/2026/06/08/exploring-the-exciting-world-of-1778bet/]https://igor.gold.ac.uk/~jspar002/keyboard_smash/2026/06/08/exploring-the-exciting-world-of-1778bet/[/url] can enhance your gaming experience. Many platforms offer captivating games. Look for attractive bonuses and easy-to-navigate interfaces. Always check for certification to ensure honesty. Enjoy your game!

  6. Online Casino, [url=https://radetzkisupermayorista.com/exploring-the-benefits-of-verywell-casino-no/]https://radetzkisupermayorista.com/exploring-the-benefits-of-verywell-casino-no/[/url] represents a stimulating way to delight in games from the comfort of your space. With numerous options available, players can explore their favorite games easily.

  7. Playing within an online casino game, [url=http://maido-forum.com/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e/discover-the-magic-of-slots-charm-casino-online-9]http://maido-forum.com/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e/discover-the-magic-of-slots-charm-casino-online-9[/url] can be thrilling. You may achieve a chance to win big while enjoying your favorite activities. Experience the fun and discover new opportunities!

  8. Gamdom Casino CZ, [url=https://vaultinsuranceint.com/gamdom-casino-cz-2026-nove-vyhody-a-zabava-online/]https://vaultinsuranceint.com/gamdom-casino-cz-2026-nove-vyhody-a-zabava-online/[/url] je populГЎrnГ­ online kasino, kterГ© nabГ­zГ­ ЕЎirokГЅ vГЅbД›r her. VynikajГ­cГ­ nejen lГЎkaДЌnГЅm rozhranГ­m, ale takГ© vГЅhodnГЅmi bonusy pro novГ© sГЎzkaЕ™e. HracГ­ch automaty a deskovГ© hry jsou k dispozici pro vЕЎechny fanouЕЎky hazardnГ­ch her. NezapomeЕ€te vyzkouЕЎet Gamdom Casino CZ!

  9. If you’ve been examining your unique color selection, methods like a skin hue chart or a skin undertone test camera can be truly beneficial in determining whether you align with a vivid summer, muted winter, or even a cool olive skin tone. [url=https://test-color-analysis.top]skin color chart[/url] I realized that trying a zero-cost color analysis test or utilizing an AI color analysis no-cost app can deliver rapid feedback into what colors look ideal on you and address questions like “which season am I” or “what hues suit me” For those researching the 16 season color analysis, assessments and quizzes can narrow down your exact color scheme, whether it’s a vivid summer palette or a muted summer color palette, guiding you find your color range with certainty.

    If you’re currently using subscription tools like Color Analysis Pro but hope to know how to discontinue color analysis pro or the quickest way to leave the program, there are useful steps and suggestions online to steer clear of frustration. To go further into these themes and find out more about deep winter color palette or gentle winter palette choices, look at this article: . Whether you’re questioning “what palette fits me” or need advice on color tests, these services and spaces deliver a reliable entry point!

  10. Между нами говоря, попробуйте поискать ответ на Ваш вопрос в google.com
    1win официальный сайт, [url=https://1win-ytu78mu.sbs/]https://1win-ytu78mu.sbs/[/url] предлагает обширный выбор игр и способов для ставок. Любой может найти нечто для себя. Создание аккаунта простая и легкая, позволяя запустить азартных игр всего за несколько минут.

  11. online casino game, [url=https://www.promedak.com.tr/en/discover-the-exciting-world-of-333bet-your/]https://www.promedak.com.tr/en/discover-the-exciting-world-of-333bet-your/[/url] features a thrilling experience for players. By utilizing advanced technology, such sites deliver enjoyment right to your screen. Join the excitement today!

  12. A vibrant Casino Platform, [url=https://inlingua2.rusovadesign.com/ultimate-guide-to-extreme-spins-casino-mobile-app/]https://inlingua2.rusovadesign.com/ultimate-guide-to-extreme-spins-casino-mobile-app/[/url] offers players an assortment of games, featuring slots to table games. By state-of-the-art technology, interaction is seamless.

  13. Casinos Not on Gamstop UK, [url=https://nkanyiso.org.za/2026/06/20/discovering-casinos-not-on-gamstop-in-the-uk-432601968/]https://nkanyiso.org.za/2026/06/20/discovering-casinos-not-on-gamstop-in-the-uk-432601968/[/url] provide players with an alternative to traditional options. These casinos enable users to gamble freely, supplying a variety of games. Various sites give entertaining bonuses and promotions, luring players worldwide. Using these platforms, gamblers can enjoy a varied gaming experience without restrictions.

  14. neue bitcoin casinos, [url=https://www.mosaic.business/news/193]https://www.mosaic.business/news/193[/url] – Los actuales bitcoin casinos han transformado el escenario del juego en lГ­nea. Estos webs permiten a los usuarios experimentar de una experiencia singular y resguardada. Nuevos bitcoin casinos ofrecen recompensas atractivas para atraer a participantes.

  15. Извиняюсь, хотел бы предложить другое решение.
    Raumgestaltung Online, [url=https://majdaj.de/]majdaj.de[/url] – Die Konzeptentwicklung fГјr Ihr Zuhause ist entscheidend. Mit digitaler Raumgestaltung kГ¶nnen Sie einfache LГ¶sungen finden. Nutzen Sie aktuelle Tools, um Farben auszuwГ¤hlen und Ihren Raum zu optimieren.

  16. play online casino, [url=https://cabindepoireland.com/7k-casino-tu-destino-de-juegos-en-linea/]https://cabindepoireland.com/7k-casino-tu-destino-de-juegos-en-linea/[/url] provides a great chance to experience thrilling action from the ease of your home. Participate in enticing promotions and rewards to enhance your gaming experience.

  17. play online casino, [url=https://atelier-recharge.fr/2026/06/20/discover-the-thrills-of-slotmonster-casino-your/]https://atelier-recharge.fr/2026/06/20/discover-the-thrills-of-slotmonster-casino-your/[/url] provides an exciting range of choices for players. Try the thrill of poker from the comfort of your home. Get bonuses and deals to enhance your experience.

  18. In the world of online gambling, gamblers are increasingly drawn to Non GamStop Betting Sites, [url=https://www.ablinfra.com/2026/06/19/discover-the-best-betting-sites-not-on-gamstop-723870171/]https://www.ablinfra.com/2026/06/19/discover-the-best-betting-sites-not-on-gamstop-723870171/[/url]. These websites offer a range of betting opportunities free from GamStop’s regulations. Players enjoy expanded freedom and options.

  19. Kartac Casino CZ, [url=https://construccionesalamopoveda.es/kartac-casino-cz-objevte-svet-online-hracich-automatu/]https://construccionesalamopoveda.es/kartac-casino-cz-objevte-svet-online-hracich-automatu/[/url] je fantastickГЅm mГ­stem pro pЕ™Г­znivce hazardnГ­ch her. NabГ­zГ­ ЕЎirokou ЕЎkГЎlu aktivnГ­ch her, od vГЅhernГ­ch strojЕЇ po stolnГ­ hry.

  20. На мой взгляд это очень интересная тема. Предлагаю всем активнее принять участие в обсуждении.
    Vulkan Vegas DK, [url=https://konkurs.kalendarzrolnikow.pl/vulkan-vegas-dk-download-din-spilleoplevelse/]https://konkurs.kalendarzrolnikow.pl/vulkan-vegas-dk-download-din-spilleoplevelse/[/url] tilbyder en unik spænding for alle gamblere. Med et stort udvalg kan man nyde spil, der passer til alle behov. Vulkan Vegas DK leverer også gode tilbud for nye og eksisterende kunder. Besøg i dag for en fabelagtig oplevelse!

  21. Я конечно, прошу прощения, но это мне не подходит. Есть другие варианты?
    BWin Casino DK, [url=http://www.mmmoreiralaw.com/bwin-casino-dk-2026-en-guide-til-online-spil-143458640/]http://www.mmmoreiralaw.com/bwin-casino-dk-2026-en-guide-til-online-spil-143458640/[/url] tilbyder et stort udvalg af underholdning. Spillere kan nyde tiltalende bonusser og promoer. Med overlegen beskyttelse og problemfrie betalingsmuligheder er BWin Casino DK et ideelt valg for deltagere.

  22. Casinos Non on Gamstop, [url=https://citysdigital.com/non-gamstop-uk-casino-sites-your-guide-to-alternative-online-gambling/]https://citysdigital.com/non-gamstop-uk-casino-sites-your-guide-to-alternative-online-gambling/[/url] offer players a chance to enjoy online gaming without restrictions. These platforms provide a broad range of games, from slots to table games. Players can experience exciting promotions and rewards. With secure payments and available customer support, gaming remains convenient. Choose Casinos Non on Gamstop for an unbounded gaming adventure!

  23. Los casinos online sin licencia han crecido en popularidad en los Гєltimos aГ±os. Ofrecen una gran gama de juegos, aunque su autenticidad puede ser dudosa. Es crucial investigar antes de entrar en un casino online sin licencia, [url=https://chores4kids.com/2026/06/21/50-tiradas-gratis-tu-guia-para-disfrutar-sin/]https://chores4kids.com/2026/06/21/50-tiradas-gratis-tu-guia-para-disfrutar-sin/[/url].

  24. online casino, [url=https://dermatolog.kz/onlinecasinobet7061/betbuffoon-de-toekomst-van-sportweddenschappen-4.html]https://dermatolog.kz/onlinecasinobet7061/betbuffoon-de-toekomst-van-sportweddenschappen-4.html[/url] presents an exciting method to enjoy gaming from home. Players can select their favorite games, including slots and table games. The comfort of online play is unmatched, making it preferred among enthusiasts.

  25. Мне кажется это отличная фраза
    Ein 3D Raum zeichnen, [url=https://peter-lock.de/]peter-lock.de[/url] führt neue Möglichkeiten in der visuellenGestaltung. Dank neuartigen Technologien kann Räume echt darstellen. Verschiedene Aspekte sind verarbeitet, um eindeutige Darstellung zu schaffen. Fortgeschrittene lernen von dieser technischen Kompetenz.

  26. Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Пишите мне в PM, пообщаемся.
    1win официальный сайт, [url=https://1win-wcp77.buzz/]https://1win-wcp77.buzz/[/url] предоставляет большой выбор ставок для поклонников азартных развлечений. Сайт предлагает выгодные условия для игроков.

  27. If you’re searching for the best online casino, [url=http://inatelsc.com.mx/understanding-the-fantasybet-casino-login-process/]http://inatelsc.com.mx/understanding-the-fantasybet-casino-login-process/[/url], you’ll find an exciting world of games and opportunities. Beginning with slots to table games, gamblers can enjoy a variety of options. Bonuses add to the thrill, giving users even more chances to win big. Explore the newest platforms and discover your favorite games today!

  28. In the world of digital gaming, Online Casino, [url=https://fynexsolutions.com/experience-the-thrill-at-sagaspins-casino-online/]https://fynexsolutions.com/experience-the-thrill-at-sagaspins-casino-online/[/url] has become a successful choice for many players. With numerous games and enticing bonuses, it provides an engaging experience from the comfort of home.

  29. Kartac Casino CZ, [url=https://prefabricatedobrogea.ro/?p=632530]https://prefabricatedobrogea.ro/?p=632530[/url] je uznГЎvanГ© mГ­sto pro milovnГ­ky hazardu. UmoЕѕЕ€uje ЕЎirokou variacГ­ her, vДЌetnД› rulet. ZГЎkaznГ­ci ocenГ­ kvalitnГ­ servis a bonusy, kterГ© pЕ™itahujГ­ novГ© hrГЎДЌe. NavЕЎtivte Kartac Casino CZ a vychutnejte si jedineДЌnou zГЎbavu!

  30. Casino Sites Not on Gamstop, [url=https://www.bxcelerator.com/finding-exciting-casino-sites-not-on-gamstop/]https://www.bxcelerator.com/finding-exciting-casino-sites-not-on-gamstop/[/url] offer players a chance to enjoy gaming without restrictions. Wagering enthusiasts can find entertaining options beyond Gamstop’s reach. Many web-based casinos provide great bonuses and games. Enjoy your favorite slots and tables at these Casino Sites Not on Gamstop today!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top