- அத்தியாயம்
சுந்தரமும் வசந்தியும் இந்த முறையும் நம்ம பொண்ணுக்கு திருமண பேச்சு நின்று போனதே.. ஜானவியோட வாழ்க்கையில வெளிச்சமே வராத என வேதனைபட்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்து கண்ணீர் விட்டனர்..
கிருஷ்ணா கதவை தட்ட.. கதவு தட்டும் ஓசை கேட்டு.. வசந்தி எழுந்து சேலையின் முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவை திறக்க வெளியில் நின்றிருந்த கிருஷ்ணாவையும் பாஸ்கரையும் கண்டு “யாருங்க நீங்க என்ன வேணும்” என்று கேட்க
“எங்களுக்கு பட்டுப்புடவை தேவைப்படுது.. அது விஷயமா நாங்க சுந்தரத்தை பார்க்க வந்திருக்கோம்” என புருவத்தை உயர்த்தினான்
“ஓ அப்டிங்களா! அவர் உள்ள தான் இருக்காங்க வீட்டுக்குள்ள வாங்க” என இருவரையும் உள்ளே வர சொல்ல..
இருவரும் உள்ளே சென்று விட.. வசந்தி கதவை லாக் செய்ய போக அவ்வழியே சென்ற பக்கத்து வீட்டு மூதாட்டி..“என்னடி வசந்தி இந்த முறையும் உன் பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களாமா”என குமட்டில் கை வைத்து கவலை படுவது போல கேட்டு விட்டு.. நம்ம ஊரு மாகாளிம்மன் கோவிலுக்கு மாவிளக்கு போடுறேன்னு வேண்டுதல் வைடி.. ஆத்தா அடுத்த வருஷமே நம்ம ஜானவிக்கு கல்யாணத்தை நடத்தி வைச்சுருவா ”என அருள்வாக்கு சொல்வது போல கூறினார் ..
இதுவரை கவலையிலிருந்த வசந்தி மூதாட்டியின் பேச்சால் முகத்தில் சிறிது மகிழ்ச்சி வந்தது.. ஆனால் அதைக்கெடுக்கும் விதமாக..
இரண்டு பெண்மணிகள் அந்த கிழவி சொல்வதை போய் வசந்தி கேட்கிறா.. அந்த கிழவி பேத்தியே வாழாவெட்டியா இருக்கா.. கிழம் சொல்வது போல் ஜானவிக்கு கல்யாணம் நடக்கவா போகுது என நரம்பில்லாத நாக்கு என்னவேணா பேசும் என்பது போல பேசி சிரிக்க. வசந்தி தன் பொண்ணை ஏசுபவர்களை முறைக்க மட்டுமே முடித்தது.
ஜானவி மாப்பிள்ளை வீட்டார் தன்னை ராசி இல்லாத பெண் என்று பேசி போனதை எண்ணி கவலைப்படாமல்.. வசந்தி செய்து வைத்த பலகாரங்களை பதம் பார்த்து ஐ!! லட்டு சூப்பாராயிருக்கு என்று இரண்டு லட்டுகளை எடுத்து வாயில் போட்டு அதக்கினாள்.
சுந்தரம் இருவரையும் பார்த்து “வாங்க சார்” என்று ஷோபாவில் அமர வைத்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
சுந்தரம் பாஸ்கரிடம் ஓரிரு முறை பட்டுப்புடவை டீலிங் செய்துள்ளார் “என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க பாஸ்கர் சார்” என பணிவாக கேட்டார்.
சுந்தரம் நாங்க பட்டுப்புடவைக்கென பிரத்யேகமான ஷோரூம் ஆரம்பிக்க போறோம்.. அதுக்கு நீங்கதான எங்களுக்கு பட்டுப்புடவைகள் நெய்து தரணும்”
“கண்டிப்பா நான் நெய்து தரேன் சார்.. என் பொண்ணு ஜானவி கூட நல்லா பட்டுபுடவை டிசைன் போடுவா.. அவளையே உங்களுக்கு டிசைன் போட்டு தரச்சொல்லுறேன்” என தன் மகளின் திறமையை பற்றி பெருமையை பேசினார்.
கிருஷ்ணா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என நினைத்து மௌன புன்னகை சிந்தினான்.
வசந்தி வந்தவர்களுக்கு காபி போட கிச்சனுக்குள் செல்ல.. அங்கே ஜானவி லட்டுவை லபக்கென்று வாயில் போட போகும் முன் அவள் கையை பிடித்து
“ஏண்டி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உன்னை ஏசிவிட்டு போனாங்க அந்த கவலை கூட இல்லாம.. இன்னும் கட்டிய பட்டுபுடவையை கூட கழட்டாம கிச்சன்ல லட்டை திண்ணுகிட்டு இருக்கிற”என்று கோபமாக ஜானவியின் தலையில் ஒரு கொட்டு கொட்டி லட்டு குண்டாவை அலமாரியில் வைத்து காபி போட ஆரம்பித்தார்.
“வசும்மா எதுக்கு என் தலையில கொட்டுனீங்க” என்று கொட்டிய இடத்தை நிவிக்கொண்டு..
“அந்த அண்டா சைசில் இருந்த மாப்பிளையோட அம்மா பேசுனதை கேட்டு நான் ஏன் கவலைப்படணும் வசு.. அந்த அண்டா பெத்த குண்டா ரோட்டை பாக்காம வண்டியை ஓட்டிட்டு என்னை ராசியில்லாதவனு பட்டம் கொடுத்தா.. அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன் டார்லிங்”என வசந்தியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு.
“நான் இந்த வீட்டு தேவதையாகவே காலம் முழுக்க இருந்துக்குறேன் வசு” என்று செல்லம் கொஞ்சினாள்.
வசந்தி ஜானவியின் பேசியது கேட்டு அதிர்ச்சியுற்று அடுப்பை அணைத்துவிட்டு திரும்பியவர் ஜானவியின் வாயை கையால் பொத்தி “இன்னொரு தடவை இப்படி பேசாதடி.. வாயை திருகிப்புடுவேன்.. நாங்க நல்லா இருக்கும் போதே உனக்கொரு கல்யாணத்தை பண்ணி பார்த்துப்புடணும்னு ..நானும் உங்க அப்பாவும் போகாத கோயில் இல்ல தெரியமாடி உனக்கு” என மூச்சு முட்ட பேச..
“அம்மா ரொம்ப எமோஷனல் ஆகாதிங்க.. எனக்குன்னு இன்னொருத்தன் பிறக்கவா போறான்.. இன்னேரம் எங்க இருக்கானோ.. ம்ம் என்ன வச்சி எப்படி சமாளிக்க போறானோ தெரியலை.. இப்ப நான் பசங்க கூட விளையாட போகப் போறேன்” என ஓட பார்க்க.
“அடியேய் பட்டுப்புடவையை மாத்திட்டு போ..” மழை வர போல இருக்கு.. நான் மாடில துணி காய வச்சேன் அதை எடுக்க போறேன்.. நீ இந்த காபியை வெளியில் ரெண்டு பேர் அப்பாவ பார்க்க வந்திருக்காங்க அவங்களுக்கு கொண்டு போய் கொடுத்துட்டு கட்டியிருக்குற பட்டு புடவைய கழட்டி வைச்சுட்டு வெளியே போடி ” என அவள் காபி ட்ரேயை திணித்து விட்டு மாடிக்கு சென்றார்.
ம்ம். இந்த அம்மா வெளியில போக கூடாதுனு வேலை வைக்குறாங்க.. சரி வீட்டுக்கு வந்தவர்களுக்கு காஃபிய கொடுப்போம் என ஹாலுக்கு சென்றாள் ஜானவி.
சுந்தரத்திற்கு போன் வர.. அவர் போன் சிக்னல் சரியாக கிடைக்காததால்
“தம்பி போன்ல சிக்னல் கிடைக்கல நான் வெளியே போய் போன் பேசிட்டு வரேன்.. நீங்க அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்றவரிடம்
பாஸ்கர்.. “சரிங்க சுந்தரம் நீங்க பேசிட்டு வாங்க.. நாங்க வெயிட் பண்ணுறோம்” என்றதும்
“சரிங்க தம்பி” என சுந்தரம் வெளியே சென்றதும் இருவரும் பிஸ்னஸ் விஷயமாக பேசிக்கொண்டிருக்க.
ஜானவி அலங்காரத்தில் காபியை கிருஷ்ணனிடம் நீட்டினாள்.. கிருஷ்ணா அவளின் சிவந்த மருதாணி பாதம் கண்டு மெல்ல நிமிர்ந்து பார்க்க செப்பு சிலைபோல நின்ற ஜானவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் மாயக்கிருஷ்ணன்
பாஸ்கர் இவன் இந்த பெண்ணை விழுங்கி விடுவது போல பார்க்குறான்.. பிசினஸ் பேச வந்த இடத்துல என் மானத்தை வாங்குறான் என கோவப்பட்டு “ம்க்கும்” என்று குரலை செரும
பாஸ்கரின் செருமலில் கிருஷ்ணா சுயம் வந்து ஜானவியின் வெண்டை பிஞ்சு மோதிர விரலை தடவி கொடுத்தவாறு உதட்டை வளைத்து லேசாக புன் சிரிப்புடன் காபியை எடுத்தான்.
கிருஷ்ணாவின் லீலைகளை தெரியாத பேதை பெண் கண்ணை அகலமாக விரித்து “இந்த மோதிரம் நல்லாயிருக்கா.. எங்கப்பா போன வருசம் என் பிறந்த நாளுக்கு எனக்கு ஆசையா பரிசா கொடுத்தாங்க உங்களுக்கு பிடிச்சிருக்கா” என கிருஷ்ணாவின் காதருகே சென்று வெகுளியாக பேசினாள் ஜானவி.
ஜானவி பேசியதை கேட்டு பக்கென்று சிரித்து விட்டான் பாஸ்கர்.
கிருஷ்ணா பாஸ்கரை எதுக்குடா சிரிக்குற என்று முணுமுணுத்து.. ஜானவியை பார்த்து “உன் மோதிரம் ரொம்ப உன்னை போலவே ரொம்ப அழகாக இருக்கு” என்று கண்ணடித்தான்.
கிருஷ்ணா கூறியதை கேட்டு சூரியனை கண்ட தாமரை மலர்ந்து போல வெட்கப்பட்டு.. களுக்கென்று சிரித்து நிலமகளுக்கு வலிக்காத வண்ணம் மெல்ல முயல் குட்டியை போல தாவி குதித்து அறைக்கு சென்றாள்.
ஜானவி சென்றதும் “பாஸ்கி எனக்கு இந்த பொண்ணு வேணும்”என மொட்டையாக கேட்க
“கிருஷ்ணா! ஜானவி அந்த மாதிரி பொண்ண இல்லடா!” என நண்பனை எச்சரிக்கை செய்ய.
“ம்ச்ச்! எனக்கு இந்த பொம்மை காலம் முழுக்க பொண்டாட்டியா வேணும்” என காலை ஆட்டிக்கொண்டு பேசினான்.
“அதுக்கு சுந்தரம் ஒத்துக்கணும்டா”
“ஒத்துக்க வைப்பேன்”என்று நெற்றியை சுருக்கி காபியை குடித்தான்.
தர்மரின் தங்கை மாயா சொத்து விவகாரத்தில் தன் பிறந்த வீட்டுக்கு வராமலிருந்தார்.. மாயாவிற்கு ஒரு மகள் கீதா அவள் கிருஷ்ணாவை விட ஒரு வயது மூத்தவள்..
மாயன் இறந்த பொழுது கிருஷ்ணாவிடம் போனில் துக்கம் விசாரித்ததோடு சரி.. மாயன் வீட்டுப்பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை.
இப்பொழுது கிருஷ்ணா தனக்கு கல்யாணம் செய்வதற்கு பொண்ணு தேடிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தவர்.. தன் மகளை ப்யூட்டிபார்லர் கூட்டி சென்று கிருஷ்ணாவை விட மூத்தவளாக தெரியக் கூடாது என்று எண்ணி கீதாவை அடையாளம் தெரியாதவாறு மேக்கப் போட வைத்தார்..
கீதா மாநிறமாக பார்க்க சுமாராக இருப்பாள்.. ப்யூட்டி பார்லரில் இருப்போர் இனி இந்த பக்கம் வந்திராதீங்க என இருவரையும் விரட்டி விட்டனர்.
மாயா தன் மகளை கூட்டிக்கொண்டு வெகுநாட்களுக்கு பிறகு தன் தந்தை வீட்டுக்கு செல்கிறார்..
சுந்தரம் போன் பேசிவிட்டு ஹாலுக்கு வந்தவர் கிருஷ்ணாவை பார்த்து “சார் உங்களுக்கு எவ்ளோ புடவைகள் தேவைபடுது என சொல்லிட்டீங்கனா.. அதற்கு தகுந்தாற் போல பட்டு நூல்கள் வாங்கி வைத்துடுவேன்” என்று புன்னகையுடன் கேட்க
“எங்களுக்கு சோரூம் ஆரம்பிக்க ஆயிரம் புடவைகள் தேவைப்படும்..” என நெற்றியை நீவினான் கிருஷ்ணா.
சுந்தரம் தயங்கியவாறு “சார் நூறு புடவைகள் னா நானே புடவை நெய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கிருவேன்.. ஆனா நீங்க ஆயிரம் புடவை கேட்கும் போது..கொஞ்சம் முன் பணம் கொடுத்தீங்கனா தான் நான் பட்டு நூல் வாங்குவதற்கு வசதியாக இருக்கும்” என்றார் தயங்கியபடி.
“கிருஷ்ணா செக்கை எடுத்து எவ்ளோ அமௌண்ட் வேணா எழுதிங்குங்க” என செக்புக்கில் கையெழுத்திட போக
சுந்தரம்.. “சார் எனக்கு செக் வேண்டாம் பணமா கொடுத்திடுங்க”
“அப்படியா நான் இப்போ கேஷ் எடுத்துட்டு வரலை.. நாளைக்கு நானே பணத்தை கொண்டு வரேன்” என்றான் கிருஷ்ணா.
“இவன் பெரிய மூளைகாரன்தான்.. உலகமகா நடிப்புடா சாமி”என்று பாஸ்கர் தன் நண்பனை மெச்சி கொண்டான்.
கிருஷ்ணாவிடம் இல்லாத பணமா.. அவன் ஒரு போன் அடித்தால் 1 கோடி ரூபாய் கூட கொண்டு வருவார்கள்.. ஜானவி பார்க்க ஒரு சாக்கு வேணும்ல அதான் கிருஷ்ணா நாளைக்கு கேஷ் கொண்டு வரேன்னு சொல்றான்.
“சுந்தரம் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து தருவீங்களா” என்று பட்டென்று கேட்டு விட்டான்.
சுந்தரத்திற்கு கிருஷ்ணாவை முதல் தடவை பார்த்ததும் அவன் மேல் மதிப்பு ஏற்பட்டது கிருஷ்ணா ஜானவியை கல்யாணம் செய்துக்கறேன் கேட்டதும் சுந்தரத்திற்கு சந்தோஷம் உண்டானது.. ஆனால் அந்த சந்தோசம் இன்னும் சிறிது நேரம் மட்டுமே இருக்கும் என்று தெரியாமல் இருந்தார் சுந்தரம்.
கிருஷ்ணா தன் வீட்டின் சூழ்நிலையையும் .. தனது நிபந்தனைகளை சுந்தரத்திடம் கூறினான்.
கிருஷ்ணா கூறியதை கேட்டசுந்தரம் முகம் சுணங்கி.. “சார் நீங்க வேற இடம் பாருங்க.. நான் கருவேப்பிலை கொத்து போல ஒரு பொண்ண பெத்து வைச்சிருக்கேன் .. அவ குழந்தை குட்டின்னு வாழுறத பார்க்கணும்னு ஆசைங்க சார் ” என்று ஆதங்கப்பட்டு பேசினார்.
கிருஷ்ணா ஜானவிய தனக்கு கொடுக்க மாட்டேன் என்று சொன்ன சுந்தரத்தின் மீது கோபப்பட்டு நிற்க..
மொட்டை மாடியில் இருந்து காய்ந்த துணிகளை மடித்து எடுத்துக்கொண்டு வந்த வசந்தி.
சுந்தரமும் கிருஷ்ணாவும் பேசியதை கேட்டு கிருஷ்ணாவின் அருகே சென்று “தம்பி என் பொண்ணு ஜானவியை உங்களுக்கு கட்டிக்கொடுக்க எனக்கு முழு சம்மதம்” என்று கூற.. சுந்தரம் வசந்தியை தீயாய் முறைத்தார்.
அந்த நேரம் “தீப்தி, வசு அத்தை” என அழைத்து கொண்டு உள்ளே வந்தவள் பாஸ்கரை பார்த்தவுடன் அதிர்ச்சியில் நின்று விட்டாள்.
அதிர்ச்சியில் ஷாக் அடித்தவளை போல நின்றிருந்த தீப்தியை பார்த்த பாஸ்கர்.
“ஹாய் தீப்தி நீ எங்க இங்க வந்திருக்க”..என பாஸ்கரின் கண்கள் தீப்தியை மேலிருந்து கீழாக வட்டமிட்டது.. சற்று முன்பு நேரத்திற்கு முன் முத்தமிட்ட உதடு தடித்து வீங்கி இருந்தது.
தீப்தி ஜவுளி கடைக்கு செல்லும் போது சேலை அணிவாள்.. வீட்டில் இருக்கும் பொது பாவாடை சட்டை மட்டும் போட்டிருப்பா.. இப்போ அத்தை வீட்டுக்குதான் போகிறோம் என பாவாடை சட்டையுடன் ஜான்வி வீட்டுக்கு வர.. பாஸ்கர் தீப்தியை அவன் கண்களால் கபளீகரம் செய்தான்.
I’m not sure exactly why but this website is loading incredibly slow for me. Is anyone else having this issue or is it a problem on my end? I’ll check back later on and see if the problem still exists.
You are my aspiration, I possess few web logs and sometimes run out from to post .
A large percentage of of whatever you assert happens to be supprisingly legitimate and that makes me wonder the reason why I hadn’t looked at this in this light previously. This particular article truly did switch the light on for me as far as this particular issue goes. But at this time there is just one position I am not too comfy with and whilst I attempt to reconcile that with the actual main theme of your point, allow me see what the rest of the subscribers have to say.Nicely done.
Normally I don’t read post on blogs, but I wish to say that this write-up very forced me to try and do so! Your writing style has been surprised me. Thanks, quite nice post.
Have you ever considered about adding a little bit more than just your articles? I mean, what you say is valuable and all. But just imagine if you added some great photos or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with pics and videos, this site could definitely be one of the best in its field. Excellent blog!
Thank you a lot for giving everyone an exceptionally remarkable possiblity to discover important secrets from this web site. It really is so kind and as well , packed with fun for me personally and my office friends to search your web site no less than thrice in one week to find out the latest things you will have. Not to mention, I’m at all times impressed concerning the incredible tips and hints you serve. Certain 3 areas in this posting are truly the most efficient I have had.
Youre so cool! I dont suppose Ive learn something like this before. So nice to find any person with some unique ideas on this subject. realy thanks for beginning this up. this web site is one thing that’s wanted on the internet, somebody with slightly originality. useful job for bringing one thing new to the web!
Merely a smiling visitant here to share the love (:, btw outstanding pattern.
I’ve recently started a blog, the information you provide on this website has helped me tremendously. Thanks for all of your time & work. “The word ‘genius’ isn’t applicable in football. A genius is a guy like Norman Einstein.” by Joe Theismann.
Thanks for sharing excellent informations. Your site is very cool. I am impressed by the details that you’ve on this web site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the info I already searched everywhere and just could not come across. What a great website.
This is a topic close to my heart cheers, where are your contact details though?