இழை-4
ஒரு கும்பலே குடிசையின் வாயிலில் நின்று அவனைச் சுட்டெரிக்கும் விழிகளுடன் பார்த்திருக்க.. அஞ்சா நெஞ்சினனாகவே அவர்களைப் பார்த்து எதிர்ப் பார்வை வீசியவனாக நின்றிருந்தான் சித்தார்த்தன்.
அவனது பக்கத்திலே, மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக வெலவெலத்துப் போனவளாக.. தன் துணிப்பையை நெஞ்சோடு இன்னும் இன்னும் இறுக்கிச் சேர்த்தணைத்தவாறு, துணுக்குற்றவாறு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள நின்றிருந்தாள், மகிழினி.
உண்மையில், சித்தார்த்தனுக்கு அந்தக் கும்பலைப் பார்த்து பயம் என்பது அணுவும் இருக்கவில்லை.
மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயமிருக்கும்??
ஆனால், அக் கும்பலைப் பற்றி நன்கே தெரிந்திருந்த மகிழினிக்கோ.. மூச்சுக் கூட தடைப்பட்டு நின்று விடும் போல தேகம் பதறிக் கொண்டிருந்தது.
அக்கணம், கோதண்டத்தின் ஆட்களுள் ஒருவனோ.. சித்தார்த்தை நோக்கி, பெருங்குரலில் கத்தலானான்.
“இவன் தான்ணே.. வழியில நாம செக் பண்ண கார்க்காரேன்.. அப்போ ஒண்ணும் தெரியாத ஆளு மாதிரி இருந்துட்டு.. இவன் தான்.. அந்தப் பொண்ண இங்க கூட்டி வந்திருக்கான்!” என்று அரிவாளும் கையுமாக கத்திக் கொண்டிருக்க.. சித்தார்த்தனுக்கோ இவர்களது பேச்சின், ‘தலையெது.. வாலெது?’ என்று ஒன்றும் புரியாத நிலை!!
அதனால், சித்தார்த்தனோ நெஞ்சு நிமிர்த்தியவனாக.. அவர்களைப் பார்த்து ஆளுமையான குரலில், பின்வருமாறு பகர்ந்தான்.
“இதைப் பாருங்க.. நீங்க எதைப் பத்தி பேசிட்டிருக்கீங்கன்னு புரியலை.. எதுவா இருந்தாலும் நிதானமா பேசிக்கலாம்!” என்று நாயகனும் சொல்லிக் கொண்டிருந்த கணம் அது.
பெண்ணின் கொடுமைக்கார சிற்றன்னையோ .. விட்டால் அங்கேயே.. அச்சிறு பெண்ணை வெட்டி பொலி போட்டு விடும் கண்களோடு பார்த்திருக்கலானாள், மகிழினியை. மகிழினிக்கும் கூட.. தன் குரூரச் சித்தியை ஏறிடவே.. முரண்டியது மனம்.
அவளது சித்தியும்.. அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்ததும்.. மகிழினிப் பெண்ணோ.. தன் மெல்லிய தேகம் நடுநடுங்க நின்றாள்.
உள்ளூற இருதயத்திலும், தன்னருகே நின்றிருந்தவன் தன் ஆபத்பாந்தவன் என்று தோன்றியதோ?
அவளையும் அறியாமல்.. பட்டென்று.. நாயகனின் முழங்கையைப் பிடித்துக் கொண்டவள்.. மருண்ட மான்விழிகளுடன்.. அவனையே தன்னைக் காக்கும் அரணாகக் கொண்டு.. நாயக்கர் மஹால் தூணின் பின்னால் சற்றே பதுங்கிக் கொண்டாள்.
அவள் தன்னைப் பற்றியதும் ஒரு சிலிர்ப்பு ஓட.. பட்டென்று அவளைத் தான் திரும்பிப் பார்த்தவனின் முகம் விறைத்து இறுகியது.
அவளது விழிகளோ நில்லாமல் கண்ணீரை உகுக்க.. இதழ்களோ.. தன்னையும் மீறி, தட்டுத் தடுமாறி.. சிற்றன்னையிடம் இறைஞ்சியது.
“வே.. வே.. வேண்டாம் சித்.. சித்தி..எ..என்னை விட்டுருங்க… ப்ளீஸ்” என்று அழும் தோரணையில் குழறிக் கொண்டிருந்தாள்.
சித்தியோ..அங்கு நின்றிருந்த புதியவனைப் பற்றிக் கணக்கில் கொள்ளாமல்.. ஈரெட்டில் மகிழினியிடம் பாய்ந்து.. அவளது பிடரிமயிரைக் கொத்தாக.. இறுகப் பிடித்து கொண்டாள்.
” தே****… வே*** மவளே.. உன்னை கௌரவமா கட்டிக் கொடுக்க நான் ஏற்பாடு பண்ணா.. இப்டி நம்ம குடும்ப கௌரவத்தையே சிதைச்சிட்டியே.. இப்படியொரு காரியத்த பண்ண உனக்கு வெட்கமாயில்ல.. தூ..” என்று காறி உமிழ்ந்தவளாக.. சிற்றன்னை சொல்ல.. கண்ணீரோடு இருகரம் கூப்பி நின்றாள் அப்பாவிப் பெண், மகிழினி.
“ சி.. சித்.. தி.. நீ.. நீங்க நினைக்கற மாதிரிலாம் ஒண்ணுமில்ல சித்தி.. நம்புங்க”
அவள் கண்ணீரைக் கண்டும் கூட இரங்கவேயில்லையே சிற்றன்னையின் கல்நெஞ்சம்.கர்ண கொடூரமான குரலில் வெளிவந்தது சிற்றன்னையின் வார்த்தைகள் யாவும்.
“இன்னும் என்னத்தடி நம்பச் சொல்ற.. வெட்கங்கெட்ட கழுத.. நாங்க தான் எங்க ரெண்டு கண்ணாலேயும் பார்த்தோமே!!”
என்றதோடு நில்லாமல்.. சித்திக்காரியோ.. மகிழினியைப் பேசக் கூட விடாமல்.. அடுத்து ,’பளார் பளார்’ என்று கன்னம் கன்னமாக அறையத் துணிந்தாள்.
மகிழினியோ வலி பொறுக்க மாட்டாமல்.. “ஆஆஆ.. ஆஆஆ… விவிட்..ருங்க சித்தி.. நான் ஏ.. தும் த.. தப்பு பண்ணல… ஆஆ” என்று கத்தினாள், பரிதாபத்திற்குரியவளாக.
மகிழினியின் சிவந்த கன்னங்கள் எரிய.. அவளது நிலையோ, ‘அந்தோ பரிதாபம்’ என்று சொல்லும் நிலைக்குரியது.
அங்கு சிறு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறையியலைக் கண்டு.. சித்தார்த் ஒரு கணம் திகைத்து நின்றிருக்கலானான்.
ஒரு பெண்ணின் சொந்த சின்னத்தாயே.. இப்படி வன்கொடுமைச் செய்வதை.. கண்கூடாகக் கண்டவனின் விழிகள்.. அதை ஏற்றுக் கொள்ளவே.. முடியாமல்.. அதிர்ந்து ஸ்தம்பித்திருந்தது. மெய்!!
மறுகணம், ஸ்தம்பிப்பிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொண்டவனது கைமுஷ்டியும் இறுகியது; தேகம் விறைத்தது; மென்னிழையாளைத் தாக்கும் அவளது சிற்றன்னையை அடித்து கன்னத்தைச் சிவக்கச் செய்து விடும் எண்ணமும் பிறந்தது.
அதற்குள்.. அவள் வீட்டை விட்டு ஓடியது முதற்கொண்டு கண்ணில் விளக்கெண்ணெய் விட்ட குறையாகத் தேடிக் கொண்டிருந்த கந்து வட்டி கோதண்டமும் இடையிட்டிருந்தான்.. சீற்றத்துடன்.
“உன் சித்தி வாங்கன கடன கட்ட வக்கில்லாம.. போனா போகுதுன்னு உன்னை கட்டிக்கலாம்னு பார்த்தா.. எவன் கூடயோவா ஓடிப் போகுற? கழுதக்கி சரச சல்லாபம் கேட்குதோ சல்லாபம்??.. என்னடி ஆத்தாளும், மகளும் சேர்ந்து.. கல்யாண ஏற்பாடு பண்ற மாதிரி பண்ணி.. ஓடுற மாதிரி ஓடி.. என் காதுல ரீலு சுத்தலாம்னு பார்க்கறீங்களோ?? அது நான் இருக்கற வர நடக்காதுடீ.. மரியாதையா என் பணம் பத்து லட்சத்த எடுத்து வையிங்கடீ.. !!”என்று ரகளை செய்ய.. மூத்தாளின் மகளை திருமணம் செய்து கொடுத்து.. கடனைக் கழிக்க எண்ணிய கொடுமைக்காரச் சிற்றன்னைக்கும்.. கோதண்டத்தின் மொழிகள் கேட்டு வயிற்றைக் கலக்கியது.
‘போட்ட திட்டமெல்லாம் வீண் தானோ?’ என்று முகத்தில் பட்டவர்த்தனமாக ஏமாற்றமும் வந்து குடியமர்ந்தது.
சிற்றன்னை பரிமளத்தின் ஒட்டுமொத்த கோபமும்.. தற்சமயம் மகிழினியின் மேல் திரும்ப.. அவளின் விழிகள் விரிந்தது பிசாசினைப் போல.
ஆகையால், கோதண்டத்தின் புறம் திரும்பாமல்.. மகிழினியின் பின்னல் ஜடையை சட்டென்று பிடித்து ஆட்டி நின்றாள் வலிக்க. வலிக்க.
இவளோ பின்புறம் வளைந்து.. தன் கூந்தலை வேதனையோடு பற்றி.. விடுவித்துக் கொள்ளப் போராட.. கண்களில் வழிந்தது நீர்.
சிற்றன்னயோ, நறுநறுவெனப் பற்களைக் கடித்தபடி, “ஊருக்குள்ள எம்புட்டு கவுரமா வாழ்ந்த குடும்பம்.. உன்னால எப்படி பேரு கெட்டுப் போயி நிக்கோம் பார்த்தீயா?? சொல்லு.. அவன் உன் கூட படுக்க.. எவ்ளவு பணம் குடுத்தான் சொல்லுடீ!!”என்று பின்னந்தலையைப்
பிடித்து மீண்டும் உலுக்கினாள்.
சித்தியாகப்பட்ட பெண்ணும், ஊரில் ரகளை பண்ணித் திரியும் இந்த நடுத்தர வயது ஆடவனும் இணைந்து.. அவளை மனதளவில் கல்லெறிகளாலும், சொல்லெறிகளாலும் குத்திக் குடைந்து காயப்படுத்துவது.. அவளை உயிரோடு எரியூட்டிக் கொண்டிருந்தது.
“இ.. இல்ல சித்தி.. நீங்க நினைக்கறது போல எதுவும் நடக்க.. ல.. நம்புங்க.. தயவு.. செ.. ய்து.. நம்புங்க!!” என்று கேவிக் கேவி அழுதும் பலனில்லையே?? அவளை நம்புவார் தான் யாரும் இல்லையே??
அவளின் ஈனமான அழுகை.. ஏனோ எள்ளளவும் உவப்பைக் கொடுக்கவில்லை சித்தார்த்தனிற்கு.
தன் தோள்புஜங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் ஏறித்தாழ.. ‘மூசு மூசு’ என்று மூச்சு வாங்கி நின்றவன்.. சிறுகச் சிறுக தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான்.
நடக்காத ஒரு குற்றத்தை நடந்தது போல திரித்துப் பேசி.. தன்பக்க விளக்கங்கள் கூறக் கூட சந்தர்ப்பம் நல்காத பட்டிக்காட்டு ஜனங்கள் மீது.. சித்தார்த்தனின் சீற்றம் பெருகிக் கொண்டே போனது.
மறு விநாடி, அங்கு நின்றிருக்கும் அத்தனை ஹிருதயங்களும் அதிர்ந்து நிற்கும் வண்ணம்.. இராஜ க்ஷத்திரிய தோரணையில் கர்ஜித்திருந்தான், சித்தார்த்தன்.. சப்தமாக.
“ப்போஓஓ… தும்!”
அவனது விழிகள் அவனது மனம் காட்டும் ரௌத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் செஞ்சாந்து பூசியிருந்தது.
அவன் போட்ட கர்ஜனையில்.. எதிரிப்படையும் ஒரு கணம் மூச்சுப் பேச்சற்றுத் தான் போனது.
“நீங்கலாம் நினைக்கற மாதிரி.. அந்தப் பொண்ணு தப்பானவளும் இல்ல.. எங்களுக்குள்ள தப்பாகவும் ஏதும் நடக்கலை!!”என்று தீர்க்கமான குரலில்.. அத்தனை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவனும் அவன் தானா?
அதற்குள் சற்றே ஸ்மரணை வரப்பெற்ற அவளது சித்தி தான்.. இன்னும் கொஞ்சம் கீழிறிங்கிப் போய்.. கதை கட்டி விடலானாள்.
பற்களை கடித்துக் கொண்டு.. மீண்டும் ஓரெட்டில் தாவி.. அபலைப் பெண்ணான மகிழினியின் முன்னங்கையை கத்தியபடி பிடித்து முறுக்கினாள், தயவு தாட்சண்யம் பாராத குரூரியாக.
“ஓஓ.. ஒரே நைட்ல.. இவனையும் மயக்கிட்டீயாடி.. மாய்மாலக்காரீ.. அப்டியே அவ ஆத்தா புத்தி.. உன்னை இன்னிக்கு என்ன பண்றேன்னு பாருடீ!!” என்று கறுவியும் கொண்டவளாக.. மங்கையை இழுக்கவும் முனைந்தாள்!
அக் குரூரப் பெண்மணி.. மகிழினியை இழுப்பதற்கு முன்னம்.. தன் இராஜாளி கழுகு போன்ற நீளமான கைகளை அகல விரித்து.. அவளுக்கு அரணாக.. தடுத்து நின்றான் சித்தார்த்.
சுட்டுப் பஸ்பமாக்கும் அவனது கனல் பார்வை சித்தி மீது பதிய.. வார்த்தைகளோ கணீர்க்குரலில் வெளிவந்தது.
“யாரும்.. யாரையும்.. அடிக்க முடியாது.. ஃபிஸிக்கலி..அபியூஸிங் இஸ் அ கிரைம். இப்போ.. இந்த பொண்ணை விட்டு நீங்க எல்லாரும் வெளிய கிளம்பலேன்னா.. கண்டிப்பா போலீஸ் அந்த வேலையை செய்யும்.. ஐ வில் கால் தி போலீஸ்!!” என்று அவர்களை மிரட்டி நிற்க.. மகிழினியின் ஒட்டுமொத்த மயிர்க்கால்களும் கூச்செறிந்தது.
இந்த அந்நியன்.. இருட்டில் சரிவர வதனம் கூட பரிச்சயம் கண்டிராத ஆடவன்.. இவர்களை எதிர்த்து நிற்பதுவும் அவளுக்காகத் தானா??
இவ் அவனியில்.. சிற்றன்னையின் கொடுமையை அனுபவித்து அனுபவித்து.. ஊமையாகிப் போன.. அவளுக்காகவும் ஒலிக்கிறது ஒரு உரிமைக்குரல்!! அநியாயத்துக்கு எதிரான ஒரு குரல்!!
நாயகனின் கூற்றைக் கேட்டதும், முதலில் எருது எக்காளமிடுவது போல நமுட்டுப் புன்னகை வெளிப்பட்டது கோதண்டத்திடமிருந்து.
“ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுகுதோ?..ஆசை தீர அதான் இவளை ஒரு நைட்டு அனுபவிச்சிட்டேல்ல.. அப்றம் என்ன இங்கன நிற்கறவ.. போ.. போ.. கெளம்பிப் போய்ட்டே இரு.. போலீஸ கூப்பிட்டா..உனக்கு தான் சேதாரம் ஜாஸ்திப்பு.. இது அம்மா – புள்ள குடும்பச் சண்ட.. அவெங்க பார்த்துப்பாய்ங்க..” என்ற கோதண்டம் தற்போது சித்தியைப் பார்த்தான்.
“ஏன்டீ பரிமளம்.. அந்த முண்டய வெளிய இழுத்துட்டு வா.. ஊரார் முன்னாடி.. இவளை பெற்றோல போட்டு.. கொழுத்தணும்.. விடிஞ்சா கல்யாணம்னு இருக்கறப்ப.. எவன் கூடயா படுத்துட்டு வந்தவள நான் கட்டிக்கணுமோ..? கோதண்டத்த.. தண்டமா ஏமாத்துனா என்ன தண்டனைன்னு ஊருக்கு புரியணும்!!” என்று மனிதாபிமானம் என்பது சிறிதும் இல்லாமல்.. வேட்டியை முழங்காலுக்கும் மேலே மடித்துக் கட்டிக் கொண்டு கத்தினான் கோதண்டம்.
என்ன பெற்றோல் ஊற்றிக் கொளுத்த முனைகின்றனரா??
தனக்கு நேரப்போகும் கதியை எண்ணி.. மகிழினியின் இதயம் துடித்துத் தவித்தது.
பத்தொன்பது வயது பருவ மங்கை. அந்த வயதுக்குரிய.. இன்பங்களை அனுபவித்திருக்கவில்லையாயினும், வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்த அனுபவப் பாடங்கள்.. வயதுக்கு மீறியவை!!
இப்படியான நிர்கதியாக்கப்பட்ட பெண்ணின் அழுகுரல் சித்தார்த்தனின் காதுக்குள் தெளிவாகக் கேட்டது.
அவன் நிமிர்ந்து செயலாற்றத் துணிவதற்குள், இவளது சித்தி பரிமளமும்.. அவளின் பிடரி மயிர் பற்றி இழுத்துச் செல்ல முனையலானாள்.
இவளோ இயலாமை நிறைந்த கண்ணீருடன், “சித்.. தி” என்று முனகினாள், வேதனையோடு.
சித்தார்த்தன்.. பாவப்பட்ட விதி எழுதப்பட்ட பெண்ணைத் தான்.. உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்து நின்றான்.
யாரிவள்? இவன் வாழ்வில் எந்த இணுக்கிலும் சம்பந்தப்படாதவள் எதற்கு.. அவன் வாழ்வில் குறுக்கிட்டாள்? குறுக்கிட வேண்டிய அவசியமும் என்ன??
இவன் இடித்த புளி போல குடிசையிலேயே நிற்க, அங்கே அவள் கண்ணெதிரிலேயே.. அவள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டாள் வெளியே.
“வாடீ.. இன்னிக்கு தான்டீ உனக்கு இருக்கு கருமாதி.. அதுக்கு முன்னால நீ பண்ண கேவலத்துக்கு.. மொட்டை அடிச்சு.. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி.. நெத்தியில.. தே***.. ன்னு பச்சக்குத்தி.. ஊர சுத்த விடறேனா இல்லையான்னு பாரு!!” என்று சீறினாள் சித்தி.
மகிழினியோ சத்தமாக அழுதவளாக.. இரு கரம் கூப்பிக் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ்.. ப்ளீஸ் சித்தி.. சத்தியமா தப்பா எதுவும் நடக்கல சித்தி.. விட்டிருங்க சித்தி.. இனி உங்க கண்ணுல கூட பப.. ட மமாட்டேன் சித்தி.. எங்கேயாவது போயிட்றேன் சித்தி!!”என்று மாற்றாந்தாயின் மனமோ, ஒரு சிறிதும் இரங்கவேயில்லை.
“கொஞ்சி ஒரு பிரயோஜனமும் இல்ல.. அது நீ தப்பு பண்ண முன்னாடி யோசிச்சிருக்கணும்.. வாடீ!!” என்று இழுக்கலானாள் சித்தி.
அவளோ.. சிற்றன்னையோடு ஓரெட்டு நகரவில்லை. நகராமல் இருந்தவளை பரிமளம் மேலும் வலு கூட்டி இழுக்க.. மகிழினியும் தரையில் தொப்பென விழுந்திருந்தாள் பாதங்கள் தள்ளாடி!!
அக்கணமும்.. ‘பரிமளம் தயை காட்டமாட்டாளா?’ என்ற ஏக்கத்துடன்.. சிற்றன்னையின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சவாரம்பித்தாள், மகிழினி.
“ப்ளீஸ் சித்தி..வி..வி..விட்ருங்க சித்தி!!”
“எந்திருடீ.. நாயே.. பண்றத பண்ணிட்டு இப்ப வந்து அப்பாவி வேஷம் போடுறீயோ?” என்று அவளின் முடியைப் பற்றி எழ வைத்த பரிமளம்.. தரதரவென இழுத்துக் கொண்டு போய்.. சடாரெனத் தள்ளி விட்டாள் கோதண்டைத்தை நோக்கி.
சுற்றி வளைத்து கோதண்டத்தின் ஆட்கள் நிற்க.. நடுநாயகமாக அவள் தரையில் வீழ்ந்து கிடக்கலானாள். அரக்கியாக.. கோதண்டத்தைப் பார்த்துக் கத்தினாள் சிற்றன்னை, பரிமளம்.
“இங்க பாரு கோதண்டம்.. நான் உன்கிட்ட கடன் வாங்கினது உண்மத்தான்.. அதுக்கு நேர்க்கணக்கா இதோ இவள உன்கிட்ட விட்டுட்டேன்.. இனி இவளை என்ன பண்றதுன்னாலும்.. உன் இஷ்டம்!!” என்று விட்டேற்றியான குரலில் மொழியலானாள், பரிமளம்.
கந்து வட்டிக் கோதண்டமோ.. கொலைவெறி மூளும் விழிகளோடு பார்த்தவனாக, அவளை நெருங்கி வந்து அமர்ந்தான் முழந்தாளில்.
இவளோ தரையில் அமர்ந்தாற் போலவே.. இரு கரம் கூப்பி நின்றாள் அச்சத்துடன்.
“இல்லை! நான் எதுவும் செய்யல! எனக்கு அவரு யாருன்னே தெரியாது.. என்னை நம்புங்க..!ஆஆ” என்று அவள் தன்னை நம்பும்படி அவர்களிடம் கெஞ்சியபடியே.. வெடித்து அழுதாள்.
முழந்தாளிட்டு அருகில் அமர்ந்து அவளை வெறித்துப் பார்த்த கோதண்டமோ, “உன் சின்னாத்தாளால.. வாங்கன கடன கட்ட முடியாது.. இருக்கற ஒரே வழி நீ தான்.. களங்கமானவள கட்டிக்கிட்டு.. ஊர்ல அவனவன் மெல்ல (சாப்பிட) நான் என்ன அவலா?? உன்னை உயிரோட எரிக்கறேன்டீ.. அப்ப தான் கோதண்டம்னா யாருன்னு.. இந்த சிறுமலைக் கிராமத்துக்குப் புரியும்..” என்று தனது பயங்கரமான குரலில் இவளிடம் சொன்னவனின் பார்வை மகிழினியிடமே இருந்தது.
இருப்பினும் கூற்றுக்கள் யாவும்.. தன் ஏவலாளிக்கானதாகவே வெளிவந்தது.
“ஏய்.. வண்டியில இருக்கற பெட்ரோல எடுத்து வாங்கடா!!” என்று கோதண்டம் இட்ட கட்டளையில்.. மகிழினியின் மூச்சு நின்றே விட்டிருந்தது.
அச் சிறு பெண்ணின் சிந்தையடுக்கிலோ.. சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் நடந்த சம்பவம் நினைவில் வந்து போனது.
சாதீயத்தை எதிர்த்து திருமணம் செய்து ஓடிப்போன பெண்ணை.. ஊருக்கு அழைத்து வந்து எரித்திருந்தனர் அக்குரூரர்கள். மனிதாபிமானம் அற்றவர்கள்!!
அதே போலத் தான் அவள் கதியும் நிர்க்கதியோ!! காக்கும் ஆதிமூலனும் அற்ற.. பிச்சியாய் அவள்.
தன் இழிநிலையை எண்ணி மனம் வலித்தது அவளுக்கு.
“இ.. ல்.. ல!” என்று அவள் தொண்டைக்குழிக்குள் உயிர்ப்பந்து வந்து அடைக்க.. ஈனஸ்தாயியில் முனகி நின்றாள் அவள்.
இறுதி நிமிடத்திலாவது மனம் மாறி.. தன்னை இந்தக் கயவர்களிடம் நின்றும் பரிமளம் காப்பாற்ற மாட்டாளா? என்ற நப்பாசையுடன்.. திரும்பத் திரும்ப சித்தியைப் பார்த்து இறைஞ்சி நின்றாள் பெண்பாவை.
“இ.. இல்ல நான் தப்பு பண்ணல சித்தி.. நீங்களாவது சொல்லுங்க சித்தி.. இல்ல.. நா.. நான் அப்டி பட்ட பொண்ணு கிடையாது!!” என்று கெஞ்ச.. அது, ஈவிரக்கமற்ற இதயம் கொண்டவர்களின் இதயத்தைக் கரைக்கவில்லை.
இதுகாறும் குடிசைக்குள்.. சிற்பமாக சமைந்து போன சித்தார்த்தனுக்கும், அவளது அழுகையில் தான் உயிர்ப்பு வந்ததுவோ!!
அக்கணம் இறுகி விறைத்த தேகத்துடன்.. வெளியே வந்து
நின்ற சித்தார்த்தன்.. மீது விழுந்தது அவள் பார்வை.
‘சிறுமலை கிராம மக்கள்.. இத்தனை குரூரமாக இருக்கக்கூடும்’ என்று நாயகன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.இங்கு என்ன நடக்கிறது என்பதை அவனாலும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
அவனைக் கண்டதும்.. இரு கரம் கூப்பி நின்றவளோ.. கண்ணீர் மல்க, “ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க சார்.. எனக்கு நீங்க யாருன்னே தெரியாதுன்னு அவங்க கிட்ட சொல்லுங்க சார்! எங்களுக்குள்ள எதுவும் நடக்கலைன்னு சொல்லுங்க சார்! தயவுசெய்து ஏதாவது சொல்லுங்க சார்!” என்று அவள் அலற.. அப்போதும் அவன் கற்சிற்பமாய் உறைந்த நிலையிலேயே நின்றான்.
‘அந்தப் பொண்ணு உன் டைப் கிடையாது.. அவளைப் பார்த்ததும் உனக்கு பிடிக்கலை.. ஓகே.. பட் அவ சாகணும்னு எதிர்பார்க்கறீயா.. ஹெல்ப் ஹர்!! கோ..வாயைத் திற சித்தார்த். !’ என்று மனசாட்சி வேறு அவனிடம் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிக்கு எதையும் காட்டாமல் நின்றான் அவன்.
ஆம், அவர்கள் அவளைக் கொல்ல.. அவனால் அனுமதிக்க முடியவில்லை. அவனுக்கும் ஓர் இதயமுண்டு. இதயத்திலும் ஈரமுண்டு!!
அதில் சிறிது தயவு தாட்சண்யமும் ஜீவித்திருக்கிறதே? அது அவனை வாளாதிருக்க விடவில்லை.
கோதண்டம் தனது ஆட்களை நோக்கி சைகை செய்ய.. அவர்களும் பெற்றோல் கலன்களுடன்.. அவளை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தனர்.
தனக்கு நிகழப் போகும் அசம்பாவிதம் கண்டு.. என்ன செய்து விட முடியும்? எழுந்து ஓடி விட முடியுமா? காற்றாய் கரைந்திட முடியுமா?
பூமியும் இரண்டாய் பிளக்க.. உள்ளே புதையுண்டு போகத்தான் முடியுமா??
அவள் கண்களை மூடினாள். மரணத்தையும் ஏற்கத் தயாரானாள்.
இப்படிப்பட்ட கயவர்களுடன் வாழ்வதைக் காட்டிலும்.. மரணத்தை ஆரத் தழுவிக் கொள்வதே.. சாலவும் சிறந்ததாகத் தோன்றியது அவளுக்கு.
இதோ இவள் மீது பெற்றோல் திரவமும் ஊற்றப்பட்டது. விழிகள் திறவாமல் அமர்ந்திருந்த நிலையிலேயே அவள் விழிகளை மூடிக் கொணடிருந்த தருணம் அது.
அவர்களில் ஒருவன் தீப்பெட்டியுடன் முன்னோக்கி வந்திருந்தான்.
அக்கணம்.. அக்குளிர்வலயக் கானகமெங்கும்.. எதிரொலிக்கும் வகையில் கேட்டது ஒரு ஆணாதிக்கக் குரல்!!
அது சித்தார்த் கார்த்திக்கேயனின் குரல்!!
“நிறுத்துங்க!!”
அவனது சிம்ம கர்ஜனையில்.. காற்றும் கூட நின்று போனதோ..? தூரத்தில் காட்டாறொன்று சலசலத்து ஓடும் சப்தம் மாத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது. அதுவும் துல்லியமாகக் கேட்டது.
அவள் பெற்றோல் திராவகத்தில் நனைந்து போனவளாக.. விழிகளை மூடி நடுங்குவதை அவனால் பார்க்க முடிந்தது. அவளுடைய முகத்தில் அவளது கண்ணீர் இடைவிடாது வழிந்து கொண்டிருந்தது.
அழுத்தமான எட்டுக்களுடன்.. அவளை நோக்கி..நெருங்கி வந்தவன்..தரையில் அமர்ந்திருந்தவளின் கைப்பற்றித் தூக்கி தனக்கு இணையாக நிறுத்தினான்.
“அவ மேல ஒரு துரும்பு படவும் நான் அனுமதிக்க மாட்டேன்.. நான் அவளை என்கூட அழைச்சுட்டுப் போறேன்.. அவ என்கூட வர்றா.. இனி ஒரு போதும் இந்தப் பொண்ணு உங்களுக்கு சுமையா இருக்க மாட்டா.. ஷீ இஸ் கம்மிங் வித் மீ!!” என்று அவன் கட்டளையிடும் தோரணையில் சொல்ல.. மகிழினி பட்டென்று இதயத்தில் காற்று புகுந்த இன்பத்துடன்.. அவனைத் தான் நிமிர்ந்து பார்த்தாள்.
தன்னைச் சூழ ஏற்பட்டிருக்கும் ஆபத்தைக் கூட அறியாமல் அவளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சித்தார்த்தனை..அந்தக் கடவுளின் மறு அவதாரமாகவேப் பார்த்தாள் அவள்.
முதன்முறையாக இந்தக் கொடுமையான உலகத்திலிருந்து அவளைப் பாதுகாக்க முயலும் ஒரு ஆபத்பாந்தவன். ஆதிமூலன்.
பரிமளத்தின் பார்வை.. நாயகனைத் தான் உச்சாதி பாதம் வரை ஏறிட்டது. வெற்று மார்போடு இருந்தாலும்.. சித்தார்த்தனின் ஒவ்வொரு அங்கத்திலும் செல்வச் செழுமைத் தெரிவதையும் அவதானித்தாள் அவள்.
கழுத்தில் மாலை.. கைகளில் பிளாட்டின மோதிரம்!! தோள்புஜத்தில் தங்கக் கங்கணவில்லைகள். பாதங்களில் விலையுயர்ந்த ஷூ!!
அனைத்தும் இவன் பணக்கார வீட்டுப் பையன் என்பதையுணர்த்த.. அவள் மனமும் வேக வேகமாக சில பல திட்டங்களை உருப்போட்டுக் கொள்ளலானது.
பரிமளத்தின் உதடுகளில் ஒரு பொல்லாதப் புன்னகை உதிக்க.. சித்தார்த்தனை ஏறிட்டாள் நரிக் கண்களோடு.
“அழைச்சுட்டுப் போகப் போறீயா? அவள் மேல என்ன உரிமை இருக்குன்னு அழைச்சுட்டுப் போகப் போற?நீ என்ன அவன் புருஷனா? மாமனா? மச்சானா?” என்று எகத்தாளத்துடன் கேட்டாள் சித்தி.
பரிமளத்தின் எகத்தாளப் பார்வையை.. வீழ்த்திவிடும்.. வேட்டையாடும் புலிக்கு ஒப்பான கூரிய பார்வை பார்த்தவனாக மறுபதில் சொன்னான் நாயகன்.
“உங்களைப் போல ஈவிரக்கமற்ற கயவர்களிடமிருந்து காப்பாற்ற.. மனிதாபிமான உரிமை போதாதா?? உங்களுக்கு தான் இவ வேணாம்ல?என்கிட்ட தந்துருங்க.. நான் அவளை அழைச்சுட்டுப் போறேன்!!” என்று திட்டவட்டமான குரலில் கூற, பொறுமையிழந்தான் கோதண்டம்.
“அவன் கூட என்ன பேச்சு.. அவள இழுத்துட்டு வந்து கதைய முடிங்கடே!” என்று கோதண்டம் ஊளையிட.. அவனது ஆணையை ஏற்ற ஒரு சில அடியாட்கள் அவளை நோக்கி நகர.. அவன் கை அவளை அழுத்தமாகப் பற்றியது.
பரிமளமோ.. கோதண்டத்தை பேராசை விழிகளோடு ஜாடை காட்டியவளாக, “ நீ கொஞ்சம் சும்மா இரு கோதண்டம்” என்று அவனையே அதட்டியவளாக.. நாயகனைப் பார்த்தாள்.
“இங்க பாரு தம்பி..பார்க்க வெளியூரு மாதிரி தெரியுது.. அதனால தான் எங்க ஊரு வழக்கம் தெரியல.. இந்த கம்பி கட்டுற கதையெல்லாம்.. இங்க வேண்டாம்.. ஒண்ணு அவளை எங்க கிட்ட ஒப்படைச்சுட்டு நடைய கட்டு.. இல்ல.. தாலி கட்டி.. பத்து லட்சம் பணத்த எடுத்து வைச்சுட்டு.. அவள அழைச்சுட்டுப் போ” என்று கடன் பணத்தையும் சித்தார்த்தனிடமே வசூலிக்கவும் முயன்றாள் இவள்.
கோதண்டமோ.. கடுப்பானவளாக, “என்ன பண்ணிட்டிருக்க பரிமளம்?” என்று கோதண்டம் சத்தம் போட.. பரிமளம் அவனை முறைத்துவிட்டு பதிலிறுத்தாள்.
“ஆயிரம் தான் இருந்தாலும்.. அவ என் புருஷனோட மொத தாரத்து மக.. இத்தனை வருஷமா கஞ்சி ஊத்துனது நான் தான்.. அவளை என்ன, வேண்டும்னாலும் பண்ண எனக்கு உரிமையிருக்கு”என்று அனைவரும் கேட்கக் கத்தியவள்.. சற்றே சன்னமான தொனியில் குசுகுசுக்கலானான் கோதண்டத்திடம்.
“உனக்கு உன் கடன் பத்து லட்சம் வேணும்னா.. கம்முன்னு இரு.. நான் பார்த்துக்கறேன்..” என்று ஒத்து ஊதியவள்.. ஆனானப்பட்ட நயவஞ்சகன் கோதண்டத்தையும் கூட கப்சிப்பென்றாக்கி.. வழிக்கு கொண்டு வந்திருந்தாள், எமகாதகி.
தன் பணம் கிடைக்கும் என்றதும் அவன் கண்கள் விரிய.. அமைதியாக.. பரிமளம் நிகழ்த்தும் நாடகத்திற்கு ஜிங்கிச்சான் அடிக்கலானான் கோதண்டம்.
மகிழினியோ.. சுற்றி நிற்பவர்களை ஏறிட முடியாமல்.. தலையைத் தாழ்த்திக் கொண்டிருக்க, பரிமளமோ நாயகன் சித்தார்த்தின் பக்கம் திரும்பினாள்.
“என்னப்பா சொல்ற? கட்டிக்கறீயா? இல்ல விட்டுட்டு நடைய கட்டுறீயா?” என்று கேட்க.. அவன் முதுகுக்குப் பின் கைகளைக் கட்டிக் கொண்டு.. விட்டத்தை வெறித்துப் பார்க்கலானான்.
அவளை.. இங்கே விட்டு விட்டு சென்று விட முடியுமா? ஒரு பாவமும் செய்யாதவளை.. எரித்துக் கொலை செய்யும் அரக்கர்கள் அல்லவா? இது அரக்கர்கள் உலவும் தேசம் என்றே தோன்றியது.
ஆயினும், அவனுக்குத் தான்.. ஏற்கனவே.. மாமன் மகளோடு திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதே!!
இதோ திருமண நிச்சய மோதிரம் வேறு அவன் விரல்களில்.
‘நோ.. நோநோ..’ என்று மனம் அடித்துக் கொள்ள.. திருமணமா? ஓருயிரா?? என்ற இரண்டுதொனிப்பொருள்களுக்கிடையில் சிக்கித் தவித்தது ஆடவனின் மனம்.
அவன் முகத்தில் இருந்த தடுமாற்றமும், என்ன முடிவு எடுப்பது என்றறியாத அலைக்கழிப்பும் க்ஷணத்தில் அகன்றது!!
ஒரு உயிர் காக்க.. தன் வாழ்க்கையைக் கூட எட்ட நிறுத்த எண்ணிய சித்தார்த்தன்.. தீரமான விழிகளோடு நிமிர்ந்தான்.
அவன் அகமும் சரி, முகமும் சரி ஒருங்கே இறுகிக் கறுத்து.. விறைத்துப் போயிருந்தது.
காற்றில் எங்கனும் அவனது ஆளுமையான தொனி எதிரொலிக்க.. வெளிவந்தது அவன் குரல்.
“கட்டிக்கறேன்!”
முத்து உதிர்ந்தது அவன் வாயிலில் இருந்து. அவன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகும் சொற்களும் ஆனது அது.
(இதோ இன்றே உங்களுக்கு ஸ்பெஷல் யூடிஸ்..😘💕💖💋 Have a great time dearies.. அப்டியே கண்டிப்பா கமென்ட்டும் போட்டுட்டு போங்கோ.. 💞♥️🏃📱அப்போ தான் நெக்ஸ்ட் யூடி உடனே வரும்.ஓகே!!💐🤝🙈🏃🙈♥️💖💕)
Sariyaana kaattumiraandi koottangal 🤬🤬🤬🤬thala nee eppo kattikko pinna ottikko 😝😝😝😝🤭
Interesting sis 👌👌
👌👌👌👌👌👌👌 Sis
சூப்பர் டா அடுத்த பதிவுக்கு காத்துருக்கேன் 😘😘😘🤩🤩
Semma😍😍😍