- அத்தியாயம்
தீப்தி “சார் இது எங்க அத்தை வீடு” என சங்கோஜபட்டு கூறி தலைகுனிந்து கையை பிசைந்து நின்றாள்.
“தீப்தி என் ஆபிஸில் அக்கவுன்டெண்டா இருக்கா.. வெரி பிரிலியண்ட் கேர்ள்.. ஒரு தடவை சொன்ன கற்பூரம் போல புரிஞ்சுக்குவா ” என்று சுந்தரத்திடம் தீப்தியை பற்றி பெருமையாக கூற
பாஸ்கர் கூறியதை கேட்டு கிருஷ்ணாவிற்கு லேசாய் சிரிப்பு வந்தது.
தீப்தி பாஸ்கர் சொல்வதை கேட்டு மென்னகையுடன் “சார் நான் ஜானுவ பார்க்க போறேன்” என ஜானவியின் அறைக்கு சென்று விட்டாள்.
“சுந்தரம் இன்று மட்டும் தான் உங்களுக்கு டைம் தருவேன்.. நாளைக்கு என் வீட்டுல இருந்து இரண்டு பெரியவங்கள கூட்டி வந்து முறைப்படி பொண்ணு கேட்பேன்” என்று தாய்மாமாவிடம் பொண்ணை கேட்பது போல கேட்டு விட்டு.. வசந்தயிடம் திரும்பி “வரட்டுமா அத்தை” என கண்ணில் ஸ்கூலரை மாட்டிக் கொண்டு கிளம்பினான் கிருஷ்ணா ..
வசந்தி தன்னை அத்தை என அழைத்ததை எண்ணி பூரித்துப்போனார்.. தன் மகள் வாழ்க்கையில் வெளிச்சம் வரபோகிறது என நிம்மதியும் அடைந்தார்.
கிருஷ்ணாவும் பாஸ்கரும் வெளியே சென்றவுடன்
“ஏய் வசந்தி உனக்கு அறிவிருக்காடி.. நாம ஒத்தை பிள்ளைய பெத்து வைச்சிருக்கோம்.. கிருஷ்ணா சார் போடும் கன்டிசனுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.. ஜானவிக்கு குழந்தைகள் பிறக்க வேண்டாமா.. அதுவும் மூணு குழந்தைகளுக்கு தாயா இருக்கணும்.. ஜானவி இன்னும் சில சமயங்களில் சிறுபிள்ளைத் தனமா நடத்துக்குறா அவ எப்படி குழந்தைகளை கவனிச்சுக்க முடியும்.. அவங்க வேற இடம் பார்க்கட்டும்” என சற்று கோபமாக பேசி துண்டை உதறி தோளில் போட்டு அறைக்குள் சென்று கட்டிலில் கண்ணை மூடி அமர்ந்தார் சுந்தரம்.
வசந்தி சுந்தரத்தின் பின்னே சென்று அவரின் காலடியில் அமர்ந்து.. சுந்தரத்தின் காலில் தலைசாய்த்துக் கொண்டு
“என்னங்க நம்ம பொண்ணுக்கு வயது ஏறிட்டு போகுது.. நம்ம பொண்ணு வயசுல இருக்கறது எல்லாம் வயத்துல ஒண்ணு.. கையில ஒண்ணு வைச்சுருக்காங்க.. நல்லா யோசிச்சு பாருங்க.. கிருஷ்ணா சார் நல்ல வசதியான குடும்பம்.. நம்ம பொண்ணு அங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு போனா மகாராணி மாதிரி வாழ்வா.. இப்ப குழந்தை வேண்டாம்னு சொல்றவங்க.. நாளைக்கு நம்ம ஜானவியோட தங்கமான குணத்தை பார்த்து .. குழந்தை பெத்துக்கலாம்னு முடிவெடுப்பாங்க பாருங்க.. நல்ல வரனை வேண்டாம்னு தட்டிக் கழிக்காதீங்க..என் பொண்ணு கூரைப்பட்டுடுத்தி.. அவ கழுத்துல தாலி கட்டிக் கொள்வதை நான் கண்ணாற பார்க்கணும்ங்க ” என கண்ணீருடன் பேசினார்.
சுந்தரத்தின் வேட்டியில் ஈரம் பட வசந்தி அழுகிறார் என தெரிந்து வசந்தியை எழுப்பி தன்னருகே அமர வைத்து தலையை வருடியவாறு
“எனக்கும் கிருஷ்ணா சார் முதல்ல நம்ம ஜானவிய கல்யாணம் செய்துக்குறேன் சொன்னதும் சந்தோஷமாத்தான் இருந்துச்சு .. அவர் சொன்ன இரண்டு கன்டிசன்ல மாப்பிள்ளையோட அண்ணன் குழந்தைகளை பார்த்துக்க சொன்னது கூட பெருசா தெரியல.. ஜானவிக்கு குழந்தை பிறக்க கூடாதுனு சொல்றாரே.. அது தான் மனசுக்கு ஒப்ப மாட்டேங்கிது வசந்தி.. தெரிஞ்சே நம்ப பொண்ண பாழும் கிணத்துல தள்ள முடியுமா” என்று வசந்தியை கன்னத்தை பிடித்து கேட்டார்..
“நம்ம ஜானவியோட தங்கமான குணத்தை பார்த்து கிருஷ்ணா சார் கண்டிப்பா மாறிடுவாரு ஜானுப்பா.. இந்த சம்மந்ததை விட வேண்டாமே.. என் மனசுக்கு நல்லதுனு படுது.. என சுந்தரத்தின் மனதை மாற்றினார் வசந்தி .
சுந்தரம் மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று கூறுவது போல..
“ச..சரி ஒத்துக்குறேன்.. நாளைக்கு கிருஷ்ணா சார் வரட்டும் கல்யாணப் விஷயம் பேசலாம்” என்றதும்
வசந்தி வெகுநாட்களுக்கு பின் கணவனின் கன்னத்தில் முத்தமிட்டார்..
“என்னடி முத்தம் எல்லாம் கொடுக்கற” என வசந்தியை அணைத்துக்கொண்டார்.. வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் சந்தோச மனநிலையில் இருந்தனர்.. ஜானவியின் திருமணம் நடக்க போகிறது என.
தீப்தி “ஜானு ஜானு” என ஏலம் போட்டு கொண்டு அறைக்குள் நுழைய
ஜானவி சேலையை மாற்றி விட்டு முகம் கழுவி விட்டு என் மாமனோட மனசு பொண்ணானது என்று பாடலை மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.
தீப்தியை கண்டதும் விழி விரித்து “எப்ப வந்தடி” என்று தீப்தியின் கையைப்பிடித்து டான்ஸ் ஆடினாள்.
ஜானுவை மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் சாபமிட்டு சென்றதை கேள்வி பட்டு.. தீப்தி ஜானுவை சமாதானப்படுத்தலாம்னு வந்தாள் .. ஆனால் இங்கு பாட்டு பாடி மகிழ்ச்சியாக இருக்கும் ஜானவியை கண்டு.. அவளிடம் மாப்பிள்ளை வீட்டார் பேசி போனதை பற்றி கேட்காமல்.. தீப்தியும் ஜானுவின் சந்தோசத்தில் பங்கெடுத்துக் அவளுடன் ஆடினாள்..
கிருஷ்ணாவும், பாஸ்கரும் வெளியே வந்தவுடன் பாஸ்கர் காரில் எற போக
பாஸ்கர் வெயிட் பண்ணுடா.. என் ஜானு பொம்மை வருவா” என்று காரில் சாய்ந்து ஜானவி அறையின் ஜன்னலையே பார்த்து காத்திருந்தான்..
கிருஷ்ணாவின் காத்திருப்பை வீணாக்காமல் ஜானவியும் தீப்தியும் ஆடிக்கொண்டே ஜன்னல் ஓரம் வந்தவர்கள்.. தீப்தி பாஸ்கரையும் கண்டு தலையை உள்ளித்துக் கொண்டாள்.. ஜானவியோ கிருஷ்ணாவிற்கு கையை அசைத்து டாடா காண்பித்தாள்..
ஜானவி கையசைப்பது பார்த்து மகிழ்ந்து கிருஷ்ணா கையை அசைத்து உதடு குவித்து முத்தம் கொடுத்தான்..
ஜானவி கிருஷ்ணாவின் செய்கையில் விசில் அடிக்கிறான் என் தவறாக புரிந்து கொண்டு அவளும் உதட்டை குவித்து விசில் அடிப்பது போல செய்ய ஆண்மகனுக்கு மங்கையின் உதட்டில் முத்தாட தோணியது.
இருவரின் நடத்திய பார்த்து.. என்னடா நடக்குது இங்க என ஏக்கமாக பார்த்தான் பாஸ்கர்..
மாயா வெகு நாட்களுக்கு பிறகு மகள் கீதாவுடன் தன் தந்தையின் வீட்டுக்கு வந்தார்.. தோட்ட வேலை செய்திருந்த மணி மாயாவை கண்டு
“வணக்கம்மா வாங்க நல்லாயிருக்கீங்களா” என கேட்டு மாயாவின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக்கொள்ள..
“நான் நல்லாயிருக்கேன் மணி.. உன் சம்சாரம் எங்கே.. நான் ரொம்ப தூரம் பஸ்ஸுல வந்ததால ஒரே அலுப்பாயிருக்கு.. நல்லா ஸ்ட்ராங்க காபி போட்டு கொடுக்கச் சொல்லு” என்று அதிகாரமாய் கூற
“சரிங்கம்மா உள்ள வாங்க” என இருவரையும் அழைத்து செல்ல.. ஹாலில் வருண் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்க.. ஆதினியும் கீரனும் பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது..
குழந்தைகளை பார்த்த கீதா.. மாயாவின் காதருகே சென்று
“அம்மா இந்த மூணு வானரங்களையும் தான் நான் பார்த்துக்கணுமா” என முகத்தை சுளித்தாற் போல வைத்து கொண்டு கேட்க.
“ஆமாடி உனக்கும் கிருஷ்ணாவிற்கும் கல்யாணம் ஆகட்டும்..கிருஷ்ணாவுக்கு நீ தலையணை மந்திரம் போட்டு மயக்கிய பிறகு இந்த வானரங்களை காப்பகத்தில் விட்டு விட சொல்லலாம்” என நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்..
கிருஷ்ணனின் குணம் தெரியாமல் இதுக ரெண்டும் லூசு மாதிரி பேசிக்கிறாங்கப்பா.
இப்ப குழந்தைகளை கொஞ்சுவது போல கல்யாணம் வரை நடிக்கணும் என்று மகளை அழைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த ஆதினியிடம் சென்று “ஹாய் குட்டீஸ் என்ன பண்ணுறீங்க” என குழந்தைகள் அருகே அமர
ஆதினி இருவரையும் வெறுப்பாக பார்த்து “நீங்க ரெண்டும் பேரும் யாரு..உங்களை பார்த்தா புள்ள பிடிக்கிறவங்க மாதிரி இருக்கீங்க.. முதல்ல வெளியே போங்க” என வாசலை காட்ட
“ஆதனி பாப்பா பெரியவங்களை அப்படி பேச கூடாது.. சித்தா சொல்லியிருக்கார்ல” என வருண் லேசாக அதட்டியது.
இந்த பையன் மட்டுமாவது நம்மளை மதித்து பேசுறானே .. மத்த ரெண்டும் பாரு முறைச்சுக்கிட்டு இருக்குதுங்க என மனதில் நினைத்து யோசனையில் இருந்தவரை கண்டு
“பாட்டி கிருஷ்ணா சித்தப்பாவ பார்க்க வந்திருக்கிங்களா.. சித்தா வந்துருவாங்க வெயிட் பண்ணுங்க.. ஹோம் ஒர்க் எழுத ஆரம்பித்து விட்டான் வருண் .
ஆதினிக்கு இவர்கள் இருவரையும் பிடிக்கவில்லை.. கீரனின் காதில்
“இவங்க ரெண்டு பேரையும் உனக்கு பிடிச்சிருக்கா”
“வ்கேக் எனக்கு இந்த பாட்டியை பார்த்தாலே பிடிக்கல.. அதான் நான் பேசக்கூட இல்லை..அதுவும் அந்த பாட்டி கூட இருக்க கருப்பியை எனக்கு சுத்தமாக பிடிக்கலை” என்று கீரன் கூற ஆதனியும், கீரனும் ஹைபை அடித்துக் கொண்டனர்.
லலிதா.. “அம்மா உங்களுக்கு சாப்பாடு ரெடி செய்துட்டேன் நீங்க குளித்துவிட்டு வாங்க”
இருவரும் குளித்து சாப்பிட்டு கிருஷ்ணாவிற்காக காத்திருந்தனர்.
கிருஷ்ணாவும் பாஸ்கரும் வீட்டுக்குள் நுழைய… கிருஷ்ணா ஹாலில் மாயாவும் கீதாவும் இருப்பதை பார்த்து கண்டு முகம் சுளித்து.. இவங்க எதுக்கு இங்க வந்தாங்க..ம்ம் இவங்க வந்தது எனக்கு ஒருவகையில் நல்லதுக்குத்தான் என எண்ணினான்.
மாயா கிருஷ்ணாவை பார்த்து “உங்க அண்ணா இப்படி நம்மள அனியாயமா விட்டு போய்ட்டானே” என்று மூக்கை சிந்தி முந்தானையில் துடைக்க
“அய்யே பேட் பாட்டி” என கீரனும் ஆதியும் முகம் சுளித்தது.
“எதுக்கு இப்படி அழுது சீன் போடுறீங்க.. குழந்தைகள் முன்னால மாயன் அண்ணா இல்லையேனு அழக்கூடாது” என்று கட்டளை பிறப்பிப்பது போல சொல்லி விட்டு திரும்பியவன்
“எத்தனை நாள் இங்க இருக்க பிரியமோ அத்தனை நாள் இருந்துட்டு போங்க.. அதவிட்டு சும்மா அழுது வடிந்து சீன் போடாதீங்க அண்டர்ஸ்டேண்ட்” என்று கஞ்சியில் போட்ட சட்டை போல விரைப்பாக பேசி மாடி படியில் ஏறினான்.
கிருஷ்ணாவின் பின்னால் சென்ற பாஸ்கர்.. “யாருடா இந்தம்மா ரொம்ப சீன் போடுது.. அதுவும் ஒரு பொண்ணை வேற கூட்டி வந்திருக்காங்க”
“அதுவா அவங்க எங்க அத்தை.. அப்பா காலத்துல அவங்களுக்கு வேண்டிய சொத்துகளை நிறைய வாங்கிட்டு.. மீண்டும் மீண்டும் பணம் நகை வேணும் என்று கேட்டு அப்பாவை தொந்தரவு செய்து இருக்காங்க.. ஒரு கட்டத்தில் அப்பா கோபப்பட்டு இனிமேல் இங்கே வரவேண்டாம்னு திட்டி அனுப்பிட்டாராம்.. அவர் கணவர் எங்கோ வெளிநாட்டில் வேலை செய்யுறாரு போல.. அப்பாவுக்காக இங்க இருந்துட்டு போகட்டும் என்று தான் கொஞ்சம் அதட்டி பேசி வந்திருக்கேன்.அதுவுமில்லாம மாயா அத்தை என்ன பிளானோட வந்திருக்காங்கனு தெரிஞ்சுருச்சு.. அவங்களுக்கு நான் பெரிய ஆப்பா வைக்க போறேன்டா.. என்கிட்டயே நாடகம் ஆடுறாங்க பாரு.. மாயன் அண்ணா நான் சின்ன வயசா இருக்கும் போதே இவங்களை பத்தி சொல்லியிருக்கார்.. என்று கூற
பாஸ்கர் கொட்டாவி விட்டு கொண்டு “சரிடா.. புதுசா பட்டு புடவை ஷோரூம் எங்க ஆரம்பிக்கலாம்னு யோசிச்சு வை எனக்கு தூக்கம் வருது நான் கிளம்புறேன் ” என்று வெளியே செல்ல எழுந்தான்.
இன்னிக்கு என் ரூம்ல தூங்குடா.. அய்யோசாமி உன் பசங்க வந்தாங்கனா என் மேல உருண்டு பிரண்டு வருவாங்க.. என்னால இங்க தூங்க முடியாதுப்பா.. நான் என் ரூம்க்கு போறேன் என்று ஓட்டமாய் ஓடிவிட்டான்.
பாஸ்கரனின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட.. கிருஷ்ணா பாஸ்கரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து “அண்ணா இவன் என் ப்ரண்ட் நம்ம கூடவே இருக்கட்டும்” என்று சொல்ல.. மாயனும் பாஸ்கரை தன் வீட்டில் தங்க அனுமதி தந்து படிக்க வைத்தார்.
இருவரும் படித்து பெரியவர்கள் ஆனதும்.. கிருஷ்ணா மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று விட்டான்..
“மாயண்ணா நான் உங்களை மாதிரி ஜவுளிக்கடை வச்சுக்குறேன் ” என்று கிருஷ்ணா சொல்ல.. மாயன் பாஸ்கருக்கு ஒரு ஜவுளி கடையை வைத்துக் கொடுத்தார்..
பெரும்பாலும் ஜவுளிகடையில் உள்ளே ஆபிஸில் ஒரு தனி அறை இருக்கிறது..கிருஷ்ணா வெளிநாடு சென்றதும் அறையிலேயே தங்கி கொண்டான் .. மாயன் இறந்த பொது வெளியூர் சென்றிருந்தான்.. கிருஷ்ணா வந்தவுடன் வீட்டுக்கு தங்கி விட்டான்.
இரவு சாப்பிடும் பொழுது உணவு சாப்பிடாமல் கீரன் அடம் பிடித்தது..லலிதா சமாதானப்படுத்தி உணவை ஊட்ட கீரன் போக்கு காட்டி சாப்பிட மறுத்தது.
கீரன் சாப்பிட அடம் பிடிப்பதை கண்ட கீதா “என்னடா இப்படி அடம் பிடிக்கற..இவ்ளோ பெரிய பையனுக்கு சாப்பிடத் தெரியாத என சிடுசிடுக்க.
கீதா மிரட்டுவதை பார்த்து எப்படியும் சித்தா வருவார் வந்தால் கீதா திட்டு வாங்கட்டும் என்று எண்ணி பயப்படுவது போல நடித்து கீரன் அழுக ஆரம்பித்தது ..
போச்சு இவ குடியை கெடுத்த பாரு என்று எண்ணிய மாயா.. லலிதா கீதா சின்ன பொண்ணு ஏதோ தெரியாம குழந்தையை மிரட்டிடா.. கீரனை சமாதானம் படுத்துங்க என்று சொல்ல..
கீரனின் அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த கிருஷ்ணா ” கீரன் எதுக்கு அழுறான்” என லலிதாவிடம் கேட்க
ஆடு திருடின ஆட்கள் போல இருவரும் பெவென்று விழித்துக் கொண்டிருப்பதை கண்டு.. கீரனை இவங்க ரெண்டுபேரும் தா எதோ சொல்லிருக்கணும் என எண்ணி மாயாவை பார்த்து “அத்தை கீரனை என்ன சொன்னீங்க” என சீற்றத்துடன் கேட்க.
“ஒ..ஒண்ணுமில்ல தம்பி என பம்மிக்கொண்டு கீதா சு.சும்மா கீரனை விளையாட்டுக்கு மிரட்டினா” என்று சொன்னவுடன்..
“கீதா நீ என்னைய விட மூத்தவதானே .. குழந்தை கிட்ட பாசமா நடந்துக்க உனக்கு தெரியாதா.. ” என்று கீதாவை அதட்டி பேசி..இது தான் குழந்தையை மிரட்டுவது முதலும் கடைசியாக இருக்கணும்.. இன்னொரு முறை குழந்தையை அதட்டி பேசின வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவேன் ஜாக்கிரதை என மிரட்டி.. பயந்தது போல நடித்து கொண்டிருக்கும் மாயாவை பார்த்து “ஹா அத்தை நான் மறந்துட்டேன்.. நாளைக்கு எனக்கு பொண்ணு பார்க்க போகணும் ரெடியா இருங்க” என்று மாயாவின் திட்டத்தில் மண்ணை அள்ளி போட்டுச் சென்றான்.
மாயா அதிர்ச்சியுடன் கீதா கிருஷ்ணாவை விட வயது மூத்தவள் என்பதை கண்டு விட்டானே என்று தலைமேல் கையை வைத்தார்.
கிருஷ்ணாவை கீதா திருமணம் செய்து கொண்டால் சொத்து முழுவதும் தனக்கு கிடைச்சுடும் .. நாம காலை ஆட்டிட்டு அதிகாரம் பண்ணி ராணியாக வலம் வரலாம் என்று எண்ணியது நடக்காமல் போனது.
- அத்தியாயம்
“என்னங்க காபி எடுத்துக்கங்கன்னு அன்றைய தின நாளிதழ் படித்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் கையில் கொடுத்து தனக்கென கொண்டு வந்திருந்த காபியை குடித்தவாறு இன்னிக்கு கிருஷ்ணா சார் நம்ம வீட்டுக்கு ஜானவிய பொண்ணுக்கேட்டு வரதை பத்தி ஜானவிக்கிட்ட சொல்லிடலாம்ங்க” என்று கணவரின் முகம் பார்த்தார்.
“வசும்மா எங்கயிருக்கீங்க” என்று குரல் கொடுத்து சமயலறையில் எட்டி பார்த்து வசந்தி அங்கே இல்லையென தெரிந்து ஹாலுக்கு சென்று பார்க்க அங்கே சோபாவில் இருவரும் அமர்ந்து காபி குடிப்பதை கண்டு மெல்லிய சிரிப்புடன்
“என்ன ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ணுறீங்களா ”என்று தந்தையின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.
“கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சுடி உனக்கு என ஜானவியின் காதை திருகி விட்டு.. உன்னை இன்னிக்கு பொண்ணு பார்க்க வாராங்க.. பசங்க கூட விளையாட போகாம வீட்டுல அடக்க ஒடுக்கமா இருடி” என வசந்தி மகளை சிடு சிடுத்தார்.
பொண்ணு பார்க்க வராங்க என தெரிந்தவுடன்.. தந்தையின் தோளில் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து சுந்தரத்திடம்
“அப்பா எப்படியும் இந்த மாப்பிள்ளையும் என்ன பொண்ணு பார்த்துட்டு ஏதோ தாட்டு வார்த்தை சொல்ல போறாங்க.. எதுக்கு பஜிக்கு மாவு வாங்கி செக்கு எண்ணையில பஜ்ஜி போட்டு வைப்பதை வர மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மூக்கு பிடிக்க திண்ணுபுட்டு ஐம்பது சவரன் நகை போடுங்க, பைக் வாங்கி குடுங்கனு மனசாட்சியே கேட்பானுங்கப்பா.. நான் உங்களுக்கு இளவரசியாக இருந்துட்டு போறேனே ” என்று சுந்தரத்தின் கன்னம் பிடித்து கேட்டாள்.
“ராஜாத்தி என்ன தங்கம் இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட.. எப்போதும் என் வீட்டு இளவரசி தாண்டா நீ ” என்று ஜானவியின் நெற்றியில் முத்தமிட்டு.. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ ஜானுமா.
“நேத்து பாஸ்கர் சார் கூட நல்லா வாட்டா சாட்டமா ஒருத்தர் வந்தாருல்ல அவருக்கு உன்னை பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போச்சு போல.. பட்டுபுடவையை நெய்து கொடுக்கற விஷயம் பேசி முடித்து கிளம்பும்போது என்கிட்டே உங்க பொண்ண கல்யாணம் செய்து தரீங்களானு கேட்டுட்டாரு. எனக்கும் அந்த பையனா பார்த்த நல்ல விதமா தெரிஞ்சுது ..ஆனா ஒரு கண்டிஷன் போயிருக்காரு..அவரோட அண்ணன் பசங்க மூணு பேர் இருக்காங்க.. அவங்களை நீ தான் பார்த்துக்கணுமாம்.. குழந்தை பெற கூடாது என்ற விசயத்தை மறைத்து சொல்லி.. ராஜாத்தி நான் இன்னிக்கு மாப்பிள்ளை கிட்ட முடிவு சொல்லுறேனு சொல்லியிருக்கேன்.. நீ என்னடா சொல்லுற”என்று மெல்லிய குரலில் கேட்க
“அப்பா நீங்க எனக்கு எப்பவும் தப்பான வழியை காண்பிக்க மாட்டிங்க.. அவர்கிட்ட சொல்லிடுங்கப்பா எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் என்று சுந்தரத்தை அணைத்துக்கொண்டாள்.
வசந்தி ஜானவி கூறியதை கேட்டு “என் வயித்தில் பாலை வாத்தடி” என மகளை உச்சி முத்தம்கொடுத்து.. “அப்பாவும் நானும் கொஞ்சம் வெளியே போயிட்டுவரோம்.. அதுவரை நீ கதவை சாத்திட்டு இரு” என்று புறப்பட சென்று விட்டார்.
கிருஷ்ணாவும் பாஸ்கரும் வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்க.. பாஸ்கரின் போன் அடித்தது.. சுந்தரத்தின் எண்ணைக் கண்டு “கிருஷ்ணா உன் மாமனார் தான்டா போன் பண்ணுறார் என போனை ஆன் செய்து “சொல்லுங்க சுந்தரம் இவ்வளவு காலையில் போன் செய்திருக்கீங்க” என்று ஆவலாக கேட்க
“சார் நேத்து உங்க பிரண்ட் கிருஷ்ணா என் பொண்ண கல்யாணம் செய்ய கேட்டிருந்தார்ல.. அவருகிட்ட எங்களுங்கு சம்மதம்னு சொல்லி.. இன்னிக்கு சாய்ந்திரம் பொண்ணு பார்க்க வரச்சொல்லிவிடுங்க” என்றான்
“ரொம்ப சந்தோசம் சுந்தரம்.. நாங்க இன்னிக்கே பொண்ணு பார்க்க வரோம்” என்று போனை அணைத்த பாஸ்கர்.. “கிருஷ்ணா சுந்தரம் உனக்கு பொண்ணு கொடுக்க சம்மதம் சொல்லிவிட்டார்” என முகத்தில் புன்னகையுடன் கூறினான்.
கிருஷ்ணா உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு “சுந்தரம் நான் சொன்ன கன்டிசனை அவரு பொண்ணுகிட்ட சொல்லிட்டாரா” என தெரிஞ்சுக்க அவங்க வீட்டுக்கு நான் இப்ப போகணும் பாஸ்கி” என உடற்பயிற்சியை தொடர்ந்தான்.
“வாரே வா உன் பொம்மை பொண்ண பார்க்க போறேன்னு சொல்லு”என்று நையாண்டி செய்ய..
“சீரியஸ்லி நான் கல்யாணம் செய்துக்கு போற பொண்ணுக்கு என்னை பற்றிய முழு உண்மை தெரிந்திருக்க வேண்டும்டா..
“ஓஓ அப்போ நீ ப்ளேபாயா இருந்ததையும் சொல்ல போறியா”என்று புருவத்தை உயர்த்தினான் பாஸ்கர்.
“அப்கோர்ஸ் எல்லாத்தையும் சொல்வேன்டா.. என் கேரக்டர் பத்தி தேங்காயை உடைப்பதை போல உடைச்சு சொல்லுவேன்.. எனக்கொண்ணும் பயமில்லை” என்று டவலை எடுத்து வியர்வையை துடைத்தான் .
“இல்ல கிரிஷ் பர்ஸ்ட் டைம் அந்த பொண்ணுகிட்ட பேசபோற உன்ன பற்றிய எல்லா உண்மையையும் சொல்லாதடா ” என்று நண்பனுக்கு அட்வைஸ் செய்தான் பாஸ்கர்.
“எனக்கு எதை சொல்லணும் சொல்ல கூடாதுனு தெரியும்டா ” என இதழை வளைத்து புன்னகையை சிந்தினான்.
கிருஷ்ணா ஜானவிகிட்ட பேசுவதற்கு நேரம் இருக்காது என்று அறியாது போனான்.
சுந்தரமும் வசந்தியும் வெளியே சென்றவுடன் கதவை லாக் செய்து விட்டு.. ஜானவி குளியலறை சென்று கஸ்தூரி மஞ்சள் போட்டு குளித்து விட்டு பாவாடையுடன் வெளியே வர.. கதவு தட்டும் சத்தம் கேட்டு அதுக்குள்ள அம்மா திரும்பி வந்துட்டாங்களா என்று கதவை திறக்க கிருஷ்ணா நின்றிருந்தான்.
கிருஷ்ணா கண்டதும் பதறி “அச்சோ” என்று கையை மார்புக்கு குறுக்கே வைத்து கொண்டு
“அப்பா வெளியே போயிருக்காங்க ”என்று கதவை சாத்த போக
கிருஷ்ணா கதவில் கை வைத்து தடுத்து உள்ளே வந்து கதவை சாத்திவிட்டான்..
குழந்தைத்தனமாக இருந்தாலும் ஒரு ஆண் வீட்டுல யாரும் இல்லாத நேரத்துலு வீட்டுக்குள்ள வந்தா பயப்படுவாங்க.. அது போல தான் ஜானவிக்கும் கிருஷ்ணாவை பார்த்து பயம் வந்தது.
“ஏய் பயப்படாதே நான் உன்ன கடிச்சு தின்னுட மாட்டேன்.. நான் உன்ன பார்த்து பேசிட்டு போலாம்னு வந்திருக்கேன்” என்று அழுத்தமாக பேச..
“இல்ல யாராவது வந்தா தப்பா போய்விடும் நீங்க கிளம்புங்க” என்று கிள்ளை மொழியில் பேசினாள் ஜானவி.
ஜானவியின் ஆடை மறைக்காத அவளின் பூ மேனி பொன்னில் வார்த்த பொற்சிலையென ஜொலிக்க.. அவனின் கைகள் ஜானவியின் பூ மேனியில் நகர்வலம் போவதற்கு ஏக்கம் கொண்டு திரும்பி நின்றிருந்தவளிடம் ஜானவியை சட்டென்று தன்புறம் திருப்பி அவனின் கேடய மார்பில் அவளின் மென்மைகள் அழுந்த இறுக்கமாக அணைத்தான்.
முதன் முறை ஆணின் நெருக்கம் குழந்தை போல இருக்கும் பெண்ணிற்கு அச்சத்தை கொடுத்து ஜானவியின் பூ உடல் சிலிர்த்து நடுங்கியது.. பெண்ணவளின் நடுக்கத்தை கண்டு தன்னிடமிருந்து அவளை மெதுவாக விலக்கி சட்டென்று அவளின் கரங்களை எடுத்து கிருஷ்ணாவின் கன்னத்தில் வைத்துக்கொண்டான்..அவள் பதறி கையை எடுக்க பார்க்க அவளது வலதுகரத்தை அவன் உதட்டில் பதித்து அதில் அழுத்தமாக முத்தத்தை கொடுக்க.. ஜானவியின் வயிற்றில் அதிர்வலைகளோடு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பது போல இருக்க இமைகளை இறுக மூடினாள்.
ஜானவியின் தேகத்தில் பூசியிருந்த கஸ்தூரி மஞ்சளின் வாசம் கிருஷ்ணாவை களிப்படையச் செய்து அவள் காதோரம் “பொம்மை” என்று ரீங்காரமான குரலில் தனது மீசையெனும் தூரிகை கொண்டு உரசி அவளது சங்கு கழுத்தில் முகம் வைத்து தேய்க்க பொம்மையின் நிலை சொல்லாவண்ணம் திணறி துடித்தது.
கிருஷ்ணா பொம்மையை சாவி கொடுத்து இயக்கினான்.. ஜானவியின் செழுமையாக கன்னங்களில் மென்முத்தம் பதித்து.. அவளின் தளிர் தேகத்தில் இருந்த நறுமணத்தை முகர்ந்து கொண்டு அவள் நாடியை பற்றி அவன் முகத்தருகே இழுக்க அவள் மெல்ல சிணுங்கி நெளிந்தாள்.
“எ.எனக்கு பயமாயிருக்கு” என்றவுடன் அவள் கண் இமைகளில் முத்தம் பதித்து.. மங்கையின் அதரங்களில் கரும்புசாறு அருந்த ஆணவனின் அதரங்களை பெண்ணவளின் அதரங்களின் மென்மையாக பொருத்தி தீஞ்சுவை அதரத்தில் தேன் உண்ட வண்டாக கிறங்கினான்.. அவளின் பூ உடலை அள்ளி எடுத்து ஆண்டுவிட நினைத்தான்.
ஜானவியின் பெண்மை விழித்துகொண்டது.. வி.விடுங்க என சொல்ல முடியாத வண்ணம் அவளின் அதரத்தில் குடிகொண்டிருந்தான்.. இப்போதே எல்லா லீலைகளையும் முடித்து விட்டால் இன்பமாக இருக்காது என்று எண்ணினானோ என்னவோ? ஆசை பொம்மையை விட்டு விலகினான் .. சிங்கத்திடமிருந்து தப்பித்த புள்ளி மானை போல தெறித்து அறைக்கு ஓடிவிட்டாள்.
ஜானவி ஓடுவதை கண்டு .. முத்தமிட்டதற்கே பொம்மை பயப்படுதே.. மத்ததுக்கெல்லாம் நான் ரொம்ப அவஸ்தை படணும் போல மெல்லிய புன்னகை பூத்தான்.
ஜானவி உள்ளே சென்றவுடன் கிருஷ்ணா கதவை திறந்து வைத்து ஷோபாவில் நல்ல பிள்ளையை போல அமர்ந்து .. பாஸ்கருக்கு போன் செய்து மாயா அத்தையை கூட்டிட்டு வாடா என பாஸ்கர் பேசும் முன் போனை வைத்துவிட்டான்..
இந்த குண்டம்மாவை நான் அழைத்துப்போகணுமா என்று கோவப்பட்ட பாஸ்கர் மாயாவின் அறைக்கு சென்று “ஆன்டி உங்களை கிருஷ்ணா இப்போ பொண்ணு பார்க்க கூட்டி வரச்சொன்னான் ரெடியா இருங்க.. நான் கிளம்பி வரேன்” என்று மேல மாடிக்கு சென்றான்.
மாயா இன்னிக்கு சாயந்தரம் தானே பொண்ணு பார்க்க போறோம்னு எங்கிட்ட கிருஷ்ணா சொன்னான்.. அதுக்குள்ள நாம ஏதாவது கோல்மால் பண்ணலாம்னு நினைச்சிருந்தோம் ஆனா இப்பவே பெண் பார்க்க வரசொல்றானே இந்த கிருஷ்ணா பயல புரிஞ்சுக்கவே முடியாதுனு குழப்பத்துடன் பொண்ணு வீட்டுக்கு போய் அங்க ஏதாவது குழப்பம் செய்வோம் என்று புறப்பட்டார்.
வெளியே சென்றிருந்த சுந்தரமும் வசந்தியும் வீட்டுக்குள் அங்கே அமர்ந்திருந்த கிருஷ்ணாவை கண்டதும் மகிழ்ச்சியுடன் “வாங்க மாப்பிள்ளை” என தனது சம்மதத்தை பேச்சில் தெரியப்படுத்தினார் சுந்தரம்.
“எப்போ வந்தீங்க மாப்பிள்ளை” என்று வசந்தி கேட்க..
“கொஞ்ச நேரம் முன்ன தான் வந்தேன் அத்தை” என்று கம்பீரமாக பேசினான்.
சிறிது நேரம் அங்கே அமைதி நிலவ “மாமா எங்க அத்தை கொஞ்ச நேரத்தில வந்துடுவாங்க இன்னிக்கே நிச்சயத்தை நடத்திடலாம்” என்று கூற..
கிருஷ்ணா நிச்சயத்தை உடனே வைக்கலாம் என்றதும் பதட்டப்பட்ட சுந்தரம் “மாப்ள எங்க சொந்தங்காரங்ககிட்ட சொல்லாமல் எப்படிங்க நிச்சயத்தை நடத்த முடியும்” என்று வருத்தப்பட்டு பேச..
“இங்க பாருங்க மாமா எங்க கல்யாணம் சிம்பிளா நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.. சும்மா ஊரை கூட்டி செய்வதில் எனக்கு விரும்பமில்லை” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான்..
அவனது பொம்மை பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டிட்டு போவதற்கு கிருஷ்ணாவிற்கு அவ்வளவு அவசரம்.
வசந்தியிடம் கிருஷ்ணா கூறியதை சொல்ல.. “சந்தோசம் நம்ம பொண்ணை சொந்தகாரங்க வித விதமாக பேனாங்க.. இப்போ ஒரு நல்ல இடத்தில நம்ம பொண்ணை கட்டிக்கொடுக்கிறோம் என தெரிஞ்சா பொறாமை பட்டு கல்யாணத்தை நிறுத்த கூட செய்வாங்க .. அதனால மாப்பிள்ளை சொல்றத போல இன்னிக்கே நிச்சயத்தை நடத்திடலாம்..நீங்க ஆக வேண்டியதை பாருங்க.. நான் ஜானவியை ரெடி பண்ணுறேனு மகளின் அறைக்குச் சென்றார்.
அங்கே கிருஷ்ணன் நடத்திய லீலைகளில் பயந்து கோழிக்குஞ்சாய் குறுகி கட்டிலில் படுத்திருக்கும் ஜானவியை கண்ட வசந்தி
“என்ன இவ இப்படி குறுக்கி படுத்திருக்கா.. ஏதும் உடம்பு சரியில்லையா “என்று நெற்றியில் கைவைத்து பார்க்க லேசாக சூடாக இருந்தது.
காலையில நல்லாத்தானே இருந்தா.. இப்ப என்ன திடிரென்று காய்ச்சல் வந்துருச்சு என்று குழம்பி போய் அவளின் தோளை தொட்டு
“ஜானுமா எழுந்திரு.. உன்னை நிச்சயம் செய்ய கிருஷ்ணா மாப்பிள்ளை வந்திருக்காங்க.என்றதும்
ஆவென மீன் குஞ்சு போல வாயை பிளந்து “அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று பதறியபடி எழுந்து அமர்ந்தாள்.
“வெண்ணை திரண்டு வரும் நேரத்துல பானையை போட்டு உடைக்கிற மாதிரி பேசுற நீ .. காலையில என்கிட்டே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன தானே” என்று கவலைப்பட்டு கேட்க
“ஆமாம்மா..இல்லம்மா” “உங்கள விட்டு போவதற்கு எனக்கு வருத்தமாயிருக்கு”என்று கூறியவுடன் தான் வசந்திற்கு நிம்மதி உண்டானது.
“கொஞ்ச நேரத்தில் என் தலையில் இடியை இறக்கிட்ட ஜானு.. மாப்பிள்ளை எவ்ளோ தங்கமானவர் தெரியுமா”
“ஆமாமா. கொஞ்ச நேரத்துக்கு முன்ன வந்திருந்தா தெரியும் உங்க தங்கமான மாப்பிள்ளை செய்த மாயங்களை பார்த்து நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பீங்க”என்று எண்ணி பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற தயாரானாள் ஜானவி .. வசந்தி தன் மகளை ரம்பையை போல அலங்கரித்தார்.. நிறைவாக அவளின் கன்னத்தில் சிறிய அளவில் மைப்பொட்டிட்டு நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தார்.