- அத்தியாயம்
வசந்தி தீப்தியின் அம்மா சுகந்திக்கு போன் செய்து “அண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க திடுமென இன்னிக்கு நிச்சயம் செய்துடலாம்னு சொல்லிட்டாங்க உன்கிட்ட சொல்ல முடியாம போச்சு என்று வருத்தப்பட்டு பேச..
“அதுனால என்ன வசந்தி நம்ம ஜானவிக்கு நல்லது நடந்தா சரி..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்னால வரமுடியாது..நான் தீப்தியை மட்டும் அனுப்பி வைக்கிறேன்.. ” என்று கூற.
“சரிங்க அண்ணி தீப்தியை அனுப்பி வைங்க”.. என்று போனை வைத்தார்.
தீப்தி, வசந்தி போன் செய்யும் போது அருகிலிருந்து அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு அறைக்கு சென்று புறப்பட்டு வந்தாள்..
“ப்ரண்டுக்கு நிச்சயம்னு சொன்னதும் புறப்பட்டு நிக்குற.. அங்க போக உனக்கு நான் பெர்மிஷன் கொடுக்கலையேனு சொல்ல.. தீப்தியி முகம் வாடுவதை கண்ட சுகந்தி சிரிப்புடன் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. போய்ட்டு வாடி.. ” என்று தீப்தியை அனுப்பி வைத்தார்.
தீப்தி பாஸ்கர் வந்திருப்பான் என்று எண்ணி.. முன் வாசல் வழியே செல்லாமல் பின் வாசல் வழியே சென்று ஜானவியின் அறைக்குள் நுழைய அங்கே அப்சரஸாக இருக்கும் தன் தோழியை அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்ககளை தெரிவித்தாள்.
பாஸ்கர் மாயாவை அழைத்துக்கொண்டு சுந்தரத்தின் வீட்டுக்குள் வர.. மாயா சுந்தரத்தின் வீட்டை ஏளமான பார்த்தார்.. கல்யாணமே முடிந்தாலும் இந்த வீட்டு பெண்ணை கிருஷ்ணாவின் வீட்டை விட்டு ஓட வைத்து விடலாம் என்று கெட்ட எண்ணத்தோட காலடி எடுத்து வைத்தார்.. ஆனால் மாயாவை ஓட ஓட விரட்ட போகிறாள் ஜானவி என்பதை அறியாமல் போனார்.
“இவங்க என் அத்தை” என மாயாவை சுந்தரத்திடம் அறிமுகப்படுத்தினான் கிருஷ்ணா..
சுந்தரம் புன்னகையுடன் மாயாவிற்கு வணக்கம் சொல்ல.. அவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமல தலையை மட்டும் அசைத்தார்.
கிருஷ்ணா மாயாவின் ஜம்பத்தை கண்டு அவரை நோஸ் கட் செய்ய எண்ணி “அத்தை தாம்பூலம் எடுத்து வைங்க” என்றதும் முகத்தை இறுக்கத்துடன் பூ பழம் பட்டுப்புடவையும் தாம்பூலத்தில் எடுத்து வைத்தார்.
கிருஷ்ணா தன் பாகெட்டிலிருந்து இரு வைர மோதிரத்தை எடுத்து மாயாவை ஒரு பார்வை பார்த்தபடி தாம்பூலத்தில் வைத்தான்.
கிருஷ்ணா தாம்பூலத்தட்டில் வைத்த வைர மோதிரத்தை பார்த்து மாயாவின் வயிறு தீயாய் எரிந்தது.. ம்ம் என் அப்பா வீட்டு சொத்து எப்படியெல்லாம் கரைகிறான் பாரு என புலம்பினார்.
தீப்தி ஜானவியை ஹாலுக்கு அழைத்து வர.. கிருஷ்ணா ஜானவியை வானிலிருந்து இறங்கிய தேவதையை போல மெய்மறந்து பார்த்தான் .
காபி டிரேயை நீட்டி “காபி எடுத்துக்கோங்க” என மெல்லிய குரலில் சொன்னாள்.
கிருஷ்ணா புன்னகையுடன் காபி எடுத்துக் கொண்டு “பொம்மை இந்த சேலைல செமயா இருக்க.. இப்பவே உன்ன எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிறணும் போல இருக்கு” என்று கண்ணை சிமிட்டினான்.
“ம்ம்.. ப்ர்ஸ்ட் தாலிகட்டுங்க அத்தான்.. அப்புறம் உங்க வீட்டுக்கு வரேன்” என்று கூறி மாயாவிடம் திரும்பி சிரிந்த முகமாக அவரிடம் காபியை நீட்டினாள்..
“விளக்கி வைச்ச வெண்கல சிலை மாதிரி இருக்கா.. அதான் பையன் இவக்கிட்ட மயங்கிட்டான்” என ஜானவியை முறைத்துக்கொண்டு காபி டம்ளரை எடுத்தார்.
மாயா முறைப்பதை பார்த்து “என்ன இந்த அம்மா நம்மள முறைக்குது தப்பாச்சே..” என்று தலையை ஒரு பக்கம் சாய்த்து நாக்கை கடித்து மாயாவை மிரட்டினாள் ஜானவி.
“நாக்கையா கடிக்கற எப்படியும் எங்க வீட்டுக்குதானே வரத் போற உன்னை அங்க வைச்சு கவனிச்சுக்குறேன்” என முணுமுணுக்க.
“யாரு யாரு கவனிக்குறாங்கனு அப்ப பார்த்துக்கலாம்” என்று ஜானவி மாயாவை முறைத்தாள்.
பாஸ்கர் வழக்கம் போல தீப்தியை பார்க்க அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இருடி நாளைக்கு ஆபிஸ் வருவதானே.. அப்ப உன்ன வச்சுக்குறேன் என தனக்குள்ளே பேசினான்.
“மாமா மோதிரத்தை மாத்திக்கலாம் என்று கிருஷ்ணா கூற
கிருஷ்ணா கூறியதை கேட்ட ஜானவி.. மோதிரமா அதுக்குள்ள எல்லாத்தையும் வாங்கிச் வச்சுட்டாங்களா.. என ஆச்சரிய பட்டு ..ஏதோ பெரிய ப்ளான் போடுறார் போல என சிங்கத்திடம் புள்ளி மான் பயந்தது.
சுந்தரம் இரண்டு மோதிரத்தையும் கையிலெடுத்து ஒரு மோதிரத்தை கிருஷ்ணாவிடம் கொடுத்து ஜானவி கையில் போட சொன்னார்.. சுந்தரத்திடம் இருந்த மோதிரத்தை கையில் வாங்கி ஜான்வியின் கையை நீட்டச் சொல்ல.. அவள் தயங்கி நிற்பதை கண்டு தானே அவளின் கைகளை பிடித்து வெண்டை பிஞ்சு விரல்களில் மெதுவாக மோதிரத்தை போட்டுவிட்டான்.. மோதிரம் அவள் விரல்களுக்கு அளவெடுத்தது போல கச்சிதமாய் பொருந்தி இருந்ததை கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் விழி விரித்தனர்.
நேற்று பார்த்த போதே அவள் விரல்களில் விளையாடியது பாஸ்கருக்கு நினைவு வந்து நகைத்து கொண்டான்.
பொம்மை பொண்ணுக்கு இப்போதுதான் புரிந்தது ..ஓ!.. நேத்து இதுக்குத்தான் என் மோதிர விரலை தொட்டு பார்த்தாரா.. நான் லூசு மாதிரி எதோ கதையெல்லாம் அவர்கிட்ட பேசினேன்.. இவர் பெரிய ஆளு தான்.. நாம உசார இருக்கணும் என்று பெரும்மூச்சு விட்டாள்.
“ராஜாத்தி மாப்பிள்ளை கையில் மோதிரத்தை போட்டு விடுடா” என்று சுந்தரம் சொல்ல
கிருஷ்ணா குறுநகையுடன் கையை ஜானவியிடம் நீட்ட.. அவளின் கைகள் லேசாக உதறல் எடுத்தது.
ஜானவியின் கைகள் உதறலை பார்த்து கோபம் கொண்டவன்
“ஏய் நான் என்ன சிங்கம் புலி மாதிரி தெரியுதா ஒழுங்கா மோதிரத்தை போட்டு விடுடி”என்று அவள் காதோரம் மெல்ல பேச..
பட்டென கிருஷ்ணாவின் கையை பிடித்து வேகமாக மோதிரத்தை போட்டு விட்டு நின்று கொண்டாள்.
தங்களது மகள் வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வு நடந்ததை எண்ணி சுந்தரமும் வசந்தியும் ஆனந்தம் அடைந்தனர்.
“நிச்சயம் நல்லபடியா முடிச்சுருச்சு.. இனி சாப்பாடு ரெடியா” என்று மாயா சாப்பாடு ராமி போல கேட்க..
“இந்தம்மா என்னைய விட சாப்பாடு ராணியா இருக்கும் போலவே” என்று நகைத்து கொண்டாள் ஜானவி .
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் திருமணம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று பேச்சு பேச
“கிருஷ்ணா நாளைக்கே கூட கல்யாணம் வைப்பதற்கு எனக்கு சம்மதம்” என தோளை குலுக்கி.. உங்க வீட்டு சைட்ல நாலு பேர்.. எங்க வீட்டு சைட்ல நாலு பேர் மட்டும் போதும்.. மேரேஜ் முடிஞ்சதும் சின்னதா ரிசப்சன் வைத்துக்கொள்ளலாம் ” என்று சுந்தரத்திடம் சொல்லி கிளம்பினான்
வெளியே சென்ற கிருஷ்ணா வழக்கமாக ஜன்னலின் வழியே ஜானவியின் பார்க்க நின்றிருந்தான். அவன் எண்ணத்தை பூர்த்தி செய்தாள் மங்கை.. ஜன்னலின் ஓரம் நின்று சிங்கம் போய்விட்டதா என்று மெல்ல தலையை நீட்டி பார்க்க.. அந்த சிங்கம் புள்ளிமானை பார்த்து கையசைக்காமல் போக மாட்டேன் என்று நின்றிருந்தது.
இவர் நாம டாடா காட்டாம போகமாட்டார்னு வாயெல்லாம் பல்லாக தெரிய சிரித்து கையை அசைத்தாள். அன்றைக்கு செய்தது போல உதடு குவித்து முத்தம் இட்டான்.. நாசமா போச்சு அன்னிக்கு நமக்கு இப்படிதான் முத்தம் கொடுத்தான்.. நாம விசில அடிக்குறானு நினைச்சுட்டோம்.. ஆக மொத்தம் இவரு நம்மள பார்த்த அன்னிக்கே மனைவியா நினைச்சுட்டார் போல.. இனி இதுதான் வாழ்க்கை எண்ணி கொண்டு திரும்ப எட்டிப்பார்க்க அதே இடத்தில் நின்றிருந்தான்.. ஜானவி வாயை குவித்து முத்தமிட்டுவது போல செய்கை செய்ய மெல்லிய சிரிப்புடன் காரில் ஏறினான்.
காரில் ஏறியதும் பாஸ்கரின் சோக முகத்தை கொண்டு “ஏண்டா தேவதாஸ் மாதிரி முகத்தில சோக கீதம் வாசிக்கிற”
“தீப்தி என்கிட்ட சரியா முகம் கொடுத்து பேசமாட்டேன்கிறா மச்சான் .. ஏதோ அவ லைப்ல நடந்திருக்கணும்னு நினைக்குறேன்.. எப்ப பாத்தாலும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்குறா .. இந்த சின்னவயசுல எதுக்கு இப்படி கவலைபடித்த முகத்தோட இருக்கானு தெரியலை.. ஆனா அவளை நான் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்”என்று உருகி பேசினான்.
“சரிடா நான் வேணா அந்த பொண்ணுகிட்ட பேசி பார்க்கட்டுமா”
“அப்பா சாமி! நீ ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்.. நானே என் காதலுக்கு தூது போய்க்கிறேன்”என காரை ஓட்டுவதில் கவனமானான்.
தீப்தி காலையில் பட்டுபுடவையில் பில் செக்சனில் பில்லிங் முடித்து பணம் எண்ணிக்கொண்டிருக்க..
இன்டர்காமில் பாஸ்கர் “கம் டூ மை கேபின்” என கூப்பிட
இன்னிக்கு இதற்கு முடிவு கட்டுறேன் என்று நினைத்து பணத்தை எண்ணி முடித்து ரப்பர் பேண்ட் போட்டு பத்திரப்படுத்தி டிராயரை வைத்து பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு பாஸ்கரின் அறைக்கு சென்றாள்
பாஸ்கரின் சீட்டில் இல்லாமலிருக்க.. எங்கே அவர் என தேடிக்கொண்டிருக்க.. பாஸ்கர் அவளை பின்னிருந்த அணைக்க போக.. பின்னால் நிழலாடுவது போலிருக்க..
சட்டென்று திரும்பி பாஸ்கர் நின்றிருப்பதை பார்த்து கண்ணில் நீர் வழிய “நான் உங்களை லவ் பண்ணலை பாஸ்கி.. ப்ளீஸ் என்னை போர்ஸ் பண்ணாதீங்க” என்று குரல் கம்ம பேசினாள்..
“தீப்தி நான் உன்ன போர்ஸ் பண்ணல…நான் உன்னை மனசார நேசிக்குறேன்.. நீ இல்லாமல் என்னால இருக்கமுடியாதுடி” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
பாஸ்கர் அணைத்தது கோபமுற்றவள் “விடுங்க.. விடுங்க பாஸ்கர்.. கொஞ்சம் கூட அறிவில்லையா.. உங்க கிட்ட ஒரு பொண்ணு வேலைக்கு வந்தா.. என்ன வேணா செய்வீங்களா.. உங்க அக்கா தங்கைக்கு இப்படியொரு நிலைமை வந்தா சும்மா இருப்பீங்களா.. நீங்க ஒரு பெண் பித்தன்” என்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட தள்ளாடி நின்றான் ஆணவன்.
அவள் அடிச்சதுல தள்ளாடவில்லை .. அவள் சொன்ன வார்த்தையில் தள்ளாடி நின்றான்..
தீப்தி தன்னை பெண் பித்தன் என்று சொன்னதை கேட்டு சீற்றத்துடன் “ஏய் என்னடி சும்மாவிட்டா பேசிட்டே இருக்க.. நான் உன்ன என்னோட பொண்டாட்டியா நினைச்சுத்தா கட்டிபிடிச்சேன் .. இப்பவே உன் கழுத்தில் தாலிகட்டடும்மா” என்று அவளிடம் நெருக்கமாக சென்றான்.
பெண்ணவள் அதுவரை கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள்.. அவன் தாலி கட்டுறேன் என்ற வார்த்தையை கேட்டு கண்ணீருடன்.. “ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை தாலி கட்டுவாங்க பாஸ்கர் .. எனக்கு கல்யாணமும் ஆகிட்டுச்சு.. கூடவே டிவோர்சும் ஆகிடுச்சு.”என்று கதறி அழுது மயங்கி விழுந்தாள்.
அவள் கூறிய வார்த்தையை கேட்டு சுக்கு நூறாகி விட்டான் பாஸ்கர்.. அச்சோ நான் தீப்தியின் மனதை புண்படுத்திட்டேனே என தன்மேல அவனுக்கே வெறுப்பு வந்தது.
தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க மெல்ல கண்களை திறந்தாள்..
“சாரி தீப்தி என்னை மன்னிச்சுடுடி ”என்று அவளிடம் மன்னிப்பை யாசகமாக கேட்க.
தீப்தி தன் கதையை கூறினாள்.. எங்க ஊர்ல 18 வயசு முடித்தவுடன் கல்யாணம் செய்து வைத்துவிடுவாங்க.. அப்படித்தான் என்னையும் நல்ல குடும்பம்னு பரத்துக்கு கல்யாணம் செய்து கொடுத்தாங்க.. அவன் முதல் ராத்திரி அன்னிக்கே குடிச்சுட்டு வந்து என்னை சிகரெட்டால் சூடு வைச்சான் .. தினமும் அப்படித்தான் என்னிடம் நடந்துகுவான்.. அதற்குமேல் ஒன்றும் செய்யமாட்டான்.. நாளடைவிலதா தெரிஞ்சுச்சு அவன் ஒரு ஆண்மகன் இல்லைன்னு .. அப்பா இந்த விஷயம் கேள்விப்பட்டு பொண்ணோட வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்னு நெஞ்சுவலி வந்து இறந்துட்டாரு… சுந்தரம் மாமா தான் அவன்கிட்டயிருந்து எனக்கு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்தார். அவன் எனக்கு செஞ்ச கொடுமையை பாருங்க என் ஷாலை விலக்கி காண்பிக்க
தீப்தியின் நெஞ்சில் சிகரெட்டு சூடை பார்த்து மனம் வெம்பி.. ஷாலை சரிசெய்து அவளின் கண்ணீரை துடைத்து “நானிருக்கேன் பேபி.. உன்ன முறைப்படி உன் அம்மாகிட்ட பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றதும்
“எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல.. இன்னொரு வாழ்க்கை வாழ பிடிக்கல பாஸ்கி”
“என் முகத்தை பார்த்து சொல்லு தீப்தி” என்று அவள் கன்னத்தை கையில் ஏந்தி கேட்க
பாஸ்கரின் கையை தட்டிவிட்டு “எனக்கு பயமா இருக்கு பாஸ்கர்.. அந்த ஆள் என்னை ரொம்ப சித்ரவதை பண்ணிட்டான்.. எனக்கு கல்யாணத்தை நினைச்சாலே அறுவறுப்பாயிருக்கு”என்று கையால் கண்ணை பொத்திக் கொண்டு குலுங்கி அழுதாள்.
தீப்தியை எப்படி சமாதான படுத்துவது என்று தெரியாமல்.. “உன்னோட கற்பை அவன் சூறையாடியிருந்தாலும் நா உன்ன கல்யாணம் செய்துக்குவேன் தீப்தி” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்..
“ஏன் பாஸ்கி என்னோட வாழ்க்கையில நீங்கி முன்னாடியே வராமநீங்க போய்ட்டிங்க” என்று அவன் சட்டையை பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டாள்.
- அத்தியாயம்
தீப்தி அழுவதை தாங்கமாட்டாமல் ஆதரவாக அவளின் முதுகை வருடியவன் காமமாக இல்லாமல் காதலுடன் தீப்தியின் பிறை நெற்றியில் முத்தமிட்டான்.. உன் கழுத்தில நான் தாலி கட்டுவேனடி என்று மனதில் சூளுரைத்துக் சாப்பாட்டு நேரம் ஆனதால் அவளின் டிபன் பாக்ஸிலிருந்த சாப்பாட்டை எடுத்து ஊட்டி விட்டான்.. அவளுக்கும் பசியாக இருந்ததால் பாஸ்கியின் கையால் ஊட்டுவதை வேண்டாம் என்று தடுக்காமல் தன் மனப்பாரம் நீங்கியதாக எண்ணி உணவை அமிர்தமாக வாங்கிக் கொண்டாள்.
மாயா கல்யாணத்தை நிறுத்த குழந்தைகளை பயன்படுத்த நினைத்தாள்.
“அம்மா கிருஷ்ணாவை ஏமாத்தலாம்னு நினைச்சு.. நாம இரண்டு பேரும் ஏமாந்து நிற்கிறோம்” என்று கீதா கவலைபட
“இருடி இப்பவே நாம தோத்துபோகமாட்டோம்.. இந்த கல்யாணம் நடந்தாலும் அந்த மேனா மினுக்கியை ஜானவி வீட்டை விட்டு துரத்திடுவேன்” என்று நயவச்சகத்துடன் பேசினாள்.
கிருஷ்ணாவும் பாஸ்கரும் புது பட்டு ஷோரும் ஆரம்பிப்பது பற்றிய டிஸ்கஷனில் இருந்தனர்.. குழந்தைகள் மூன்றும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க.. லலிதா மூவருக்கு சாப்பாட்டை தட்டில் போட்டு வைக்க.. அவர்களும் உணவை சாப்பிட ஆர்மபித்தனர்.
அங்கே வந்த மாயா சாப்பிடும் குழந்தைகளிடம் “இன்னும் இரண்டு நாள் தான்.. உங்க மூணு பேருக்கும் சாப்பாடு கிடைக்க போகுது.. நல்லா சாப்பிடுங்க.. உங்க சித்தி வந்தா சாப்பாடு போட மாட்டா” என்று குழந்தைகளிடம் விசத்தை தூவினாள்.
மாயா கூறியதை கேட்ட கீரனுக்கு ஒன்றும் புரியாமல் விழிந்தது.. ஆதினியும் வருணும் புரிந்து கொண்டு சாப்பாட்டை சாப்பிடாமல் பாதியில் எழுந்தது.
குழந்தைகள் சாப்பிடாமல் எழுந்ததை பார்த்து “மாயாம்மா உங்களுக்கு கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லையா? குழந்தைங்க என்ன பேசுவது தெரியாம பேசுறீங்க ” என்று கோபமாக பேசினார் லலிதா.
“சமையல்காரி சமையல் வேலையை மட்டும் செய்.. அதிக பிரசங்கித்தனமா நடக்காதே”என்று லலிதா மிரட்டிச்சென்றார் மாயா..
மூன்று குழந்தைகளும் எழுந்து அறைக்குள் சென்று படுத்தது..
“அண்ணா சித்தா கல்யாணம் செய்தா நம்மள கவனிக்க மாட்டாரா” என ஆதினி அழுகையுடன் வருணை பார்த்து கேட்க..
“சித்தா நம்மை விட்டு போக மாட்டேனு.. சத்தியம் செய்து கொடுத்திருக்காரு.. காலையில் சித்தப்பாகிட்ட கேட்கலாம் ” என்று குழந்தைகள்கண்ணுறங்கியது.
கீரன் இருவரும் பேசியதை கேட்டு அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியலை.. கீரன் எழுந்து கிருஷ்ணாவிடம் சென்றது.. அவன் உறங்கிக் கொண்டிருக்க அவன் மார்பில் படுத்துக் கொள்ள.. எப்போது போல கிருஷ்ணா குழந்தையை தட்டிக் கொடுக்க..
“சித்தா”
“என்னடா செல்லம்.. தூக்கம் வரலையா”
“சித்தா நீ கல்யாணம் செய்துக்க போறீயா”
“ஆமாடா தங்கம்.. உங்களை பார்த்துக்க ஆள் வேணும்ல” என்று கீரனின் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்தான்.
“இல்ல சித்தா.. அந்த பேட் பாட்டி இன்னிக்கு நாங்க சாப்பிடும் போது சொல்லுச்சு சித்தி வந்தா சாப்பாடு போட மாட்டாங்கனு சொன்னாங்க..அப்படியா சித்து” என்று தலையை நிமிர்த்தி.. மழலை மொழியில் கேட்க
கிருஷ்ணாவிற்கு மாயாவை கொன்று விடும் அவரின் மேல் கோபம் வந்தது..
“கீரை உங்க சித்தி ரொம்ப அன்பானவங்க.. உங்க மூணு பேரையும் நல்லா பார்த்துக்குவா” என்று கூற கீரன் தூங்கிவிட்டது.
கிருஷ்ணா விடியும் வரை பொறுத்திருந்து எழுந்ததும் முதல் வேளையாக அவரின் அறைக்கு சென்று மாயா அத்தை!! கதவை நீங்குங்க!! என்று சத்தம் கேட்டு மெதுவாக கதவை திறந்தார்.
ருத்ர முகத்துடன் நின்றிருக்கும் கிருஷ்ணாவ பார்த்து பயந்து நடுங்கியது போல நடித்துக் அவன் முன்னே வந்து “என்னாச்சு தம்பி” என்று பம்மினார்.
“ம்ம் உங்க பெட்டியை கட்டிக் ஊரை பார்த்து நடங்க.. நான் ஜாக்கிங் போயிட்டு வருவதற்குள்ள.. நீங்களும் உங்க பெண்ணும் இந்த வீட்டில இருக்க கூடாது.. அப்டி மீறி இருந்தால.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவேன் என்று வாசலை நோக்கி செல்ல..
“தம்பி என்னை மன்னிச்சுடு. இனிமமீ நா குழந்தைககிட்ட வம்பு செய்ய மாட்டேன்”என்று கிருஷ்ணாவின் காலை பிடிக்க போக..
மாயா கிருஷ்ணா அவன் காலில் விழுவது கடு ஒரு அடி தள்ளி நின்று “உங்களை மாதிரி விஷ ஜந்துக்களை வீட்டுக்குள்ள விட்ருக்க கே கூடாது… நான் தப்பு பண்ணிட்டேன்..என்ன செய்றது என் அப்பா கூட பிறந்த காரணத்தால கொஞ்சம் உங்க மேல கருணை காட்டுறேன்” என்று எச்சரித்து விட்டு சென்றான்.
கண்ணீரை துடைத்து எழுந்து மாயா.. என்னையே உன் காலுல விழ வைச்சிட்டல.. உன் கல்யாணத்தை நடக்கவிடாம பண்ணுறேன் பாருடா என்று தனது குள்ளநரித்தனத்தை காட்ட நினைத்தார் கிருஷ்ணாவிடம் .மாயன் குடும்பத்தார் ஜவுளி துறையில் முதலிடத்தில் இருந்தனர்..
செல்வம் இரண்டாம் இடத்தில் இருந்தான்.. மாயனை போட்டு தள்ளிட்டா நாம முதலிடத்தில் வந்துடலாம் என்று நினைத்து .. திட்டம் தீட்டி மாயனையும் அவரது மனைவியையும் ஆக்ஸிடெண்ட் செய்தது. இந்த மகா உத்தமன் செல்வம்.
இவ்வளவு நாட்கள் கிருஷ்ணா இந்தியாவிற்கு வந்தது செல்வத்திற்கு தெரியாமல் இருந்தது.
கிருஷ்ணா புதியதாக பெரிய அளவில் பட்டு ஷோரும் ஆரம்பிக்கிறான் என்ற விஷயம் அவனது கையாள் மூர்த்தி வாயால் கேட்ட செல்வம் குடித்துக் கொண்டிருந்த காபியை மூர்த்தியின் முகத்திலேயே ஊற்றினான் செல்வம்
ஆத்திரத்தில் “பாலா” என்று கத்தினான்.
பாலா அறையில் குளித்து தலை வாரி கொண்டிருந்தவன்.. சீப்பை போட்டு செல்வத்திடம் ஓடி வந்தான்.
அண்ணனின் கோபத்திற்கு காரணம்.. என்னவாக இருக்கும் என்று அறிந்து கொண்டு வெளியே வந்தவன்
“சொல்லுங்கண்ணா” என்று கையை கட்டி நின்றான்.
“மாயனோட தம்பி கிருஷ்ணா அமெரிக்காவில் தான் இருப்பான் .. இங்க வரமாட்டானு சொன்னதானே.. அதை நம்பி நான் மாயனை போட்டு தள்ளி.. நாம தான் பட்டு ஜவுளி தொழிலில் முதல் இடத்தில இருப்போம்னு மாயனை கொன்னுபோட்டோம்..இப்போ அவன் தம்பி கிருஷ்ணா புதுசா ஷோரூம் ஆரம்பிக்கிறானாம் உனக்கு தெரியுமா” என்று காதை நீவிக்கொண்டு கேட்க
“கேள்விப்பட்டேண்ணா” என்ற உள்வாங்கிய குரலில் பேச
“நீயெல்லாம் நாலு பன்னிகுட்டி வாங்கி மேயு.. அதுதான் உனக்கு லாயக்கு.. என்ன பண்ணுவியோ தெரியாது.. அவனுங்க பட்டு புடவைகள் யாரு நெய்து தராங்கனு சொன்ன ஆளை பார்த்து கிருஷ்ணாவிற்கு பட்டுபுடவை நெய்து தரக்கூடாது மிரட்டி விட்டு வா.. முடியலனா சொல்லு நான் பார்த்துக்குறேன்” என தனது கடா மீசையை முறுக்கினான்.
“சரிங்கண்ணா நானே இந்த காரியத்தை முடிக்குறேன் ” என்று கையை கட்டி தலையை குனிந்தான்.
“கோமதி நான் குளிக்கணும் துண்டை எடுத்துட்டு வாடி” என குளியலறை நோக்கி சென்றான் செல்வம்.
கோமதி துண்டை எடுத்து குளியறைக்குள் செல்ல.. அவளை செல்வம் இறுக கட்டியணைத்தான்..
“ஐய்யோ என்ன இது! விடுங்கப்பா!! சேலை எல்லாம் ஈரமாகுது”..
“ஈரம் ஆனா என்ன இன்னொரு முறை சேலையை மாத்திக்கலாம்டி .. இப்ப இந்த மாமன கவனிடி” என்று அவனுக்கு தேவையான புதையலை அவளிடம் தேடினான்.
“இதுக்குத்தான் துண்டு எடுத்துட்டு வரதில்லை” என்று சிணுக்கி அவனுடனே ஒரு குளியலை போட்டு கோமதியை கைகளில் ஏந்தி வந்து கட்டிலில் அமர வைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு களவி பாடம் படிக்க ஆரம்பிக்க
“என்னங்க நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லுவேன்” கேட்பிங்களா?
அதுவரை மோகத்திலிருந்தவன் “சொல்லுடி” என்றான் எரிச்சலாக
“பார்த்திங்களா நான் சொல்லும் போதே கோப பட்டா எப்படி?”
“சரி சொல்லு கோவப்படல”
“நம்மகிட்டே இருக்கிற சொத்தே பல கோடி வரும்.. இப்ப எதுக்கு அந்த கிருஷ்ணா கூட போட்டி போட போறீங்க.”
“இங்க பாருடி தொழில் விசயத்தில தலையிடாதனு சொல்லியிருக்கேன் ” என கண்கள் சிவக்க விரலை நீட்டி எச்சரித்தான்.
செல்வம் மிரட்டியதும் முணுக்கென்று கோமதியின் விழிகளில் கண்ணீர் வந்தது ..
“சும்மா நீலி கண்ணீர் விடாதடி எரிச்சலா இருக்கு”.. என்று தலையை கோதினான்.
“இல்லங்க நீங்க செய்யற தப்புனால தான் நமக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருசம் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை” என முந்தானையில் கண்ணீரை துடைத்தாள்.
“நிறுத்துடி.. குழந்தை இல்லைனா ஆஸ்பெட்டல டெஸ்டியூப் பேபி டீரிட்மென்ட் எடுத்தா குழந்தை வரப்போகுதா.. குழந்தை இல்லைனு மூக்கை சிந்துறா..நான் என்விருப்பபடிதான் நடப்பேன்.. கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்க விடமாட்டா” என்று வேட்டியை மடித்து கட்டி வெளியே சென்றான்.
கிருஷ்ணா சிட்டியில் மெயின் ரோட்டில் மூணு ப்ளோர் கொண்ட கடையை பார்த்து கபோர்டுகள் அடிக்கும் வேலையில் வேலையில் மும்மரமாக இருந்தான்.. பொம்மை பெண்ணை கூட மறந்திருந்தான்.. இப்போது ஞாபகம் வந்தவனாக காரை எடுத்து புறப்பட்டான் சுந்தரம் வீட்டிற்கு..
ஜானவி அறையில் அமர்ந்து பட்டுபுடவைக்கான நீயூ டிஸைனை சார்ட்டில் பென்சிலை பல்லில் கடித்தவாறு யோசித்து போட்டுக் கொண்டிருந்தாள்.. சுந்தரம் பட்டுப்புடவை குடோனில் மூன்று ஆட்களை புதிதாக போட்டு அவர்களிடம் புதிய உத்தி முறைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மாப்பிள்ளை புதிதாக ஆரம்பிக்கும் பட்டு ஷோரூமிற்கு துரிதமாக பட்டுப்புடவைகளை நெய்து கொடுக்க வேண்டுமென
காலிங்பெல் அடிக்க கதவை திறந்த வசந்தி கோட் சூட்டுடன் ஆஜாகுபானுவாய் நின்றிருந்த கிருஷ்ணா பார்த்தவுடன்
“வாங்க மாப்பிள்ளை” என்று வாயெல்லாம் பல்லாக அழைக்க
கிருஷ்ணாவோ ஜானவி கதவை திறப்பாள் என்று நினைதிருந்தவனுக்கு வசந்தி வந்தது அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.
கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளே வந்தவனின் கண்கள் பொம்மை பெண்ணை தேடியது.
வசந்தி கிருஷ்ணாவின் பார்வையை புரிந்து கொண்டு
“மாப்பிள்ளை ஜானவி அவளோட அறையில பட்டுப்புடவை டிசைன் போட்டுட்டு இருக்கா ” என்றார்.
“நான் பொம்மையை பார்க்கலாமா”
“பொம்மையா யாரது மாப்பிள்ளை” அவன் கூறுவது புரியாமல் கேட்டார் வசந்தி.
“அ.அது.. அது சாரி அத்தை நான் ஜானவி வரைந்த டிசைன்ஸ் பார்க்கணும்” என்று மழுப்பினான் கிருஷ்ணா.
ஜானவியின் அறையை காண்பித்து “போங்க மாப்பிள்ளை” என புன்னகையுடன் கூறினார்.
தான் வந்தவுடன் பொம்மை பெண் கண்ணில் படாமலிருந்தை எண்ணி கோபம் கொண்டிருந்தவன் ஜானவியை பார்க்க போகிறோம் என அவனது உதட்டில் லேசாக சிரிப்பு வந்தது.
“அப்பா மாப்பிள்ளை ரொம்ப கோபக்காரர் போல.. சிரிக்கவே காசு கொடுக்கணும் போல” என நினைத்தவர் சமையல்கட்டிற்கு சென்று மருமகனுக்கு காபி போட ஆரம்பித்தார்.
ஜானவி பாவாடை சட்டையுடன் காலை ஆட்டிக்கொண்டு தலை குனிந்து சார்ட்டில் பட்டுப்புடவை டிசைன் போட்டுக்கொண்டிருக்க கிருஷ்ணா மெல்ல அடி எடுத்து அறைக்குள் நுழைய.. அங்கே அவள் மேலாடையில்லாமல் படம் வரைந்து கொண்டிருந்த ஜானவியின் முன் எழில் அழகுகள் ஆடவனின் கண்ணுக்கு விருந்தாக்க அதில் முகம் புதைக்க தோன்றியதுஞ் சிறிது நேரம் ஜானவியை ரசித்து பார்த்து நின்றிருந்தான்.
தன் முன் நிழலாடுவது போல இருக்க.. மேலே அண்ணார்ந்து பார்த்தவள்.. மின்சாரம் தாக்கப்பட்டவள் போல எழுந்து
“அம்.அம்மா.. நீ.நீங்க. எ.எப்ப வந்தீங்க” என்று பக்கத்திலிருந்த ஷாலை எடுத்து மாராப்பு போல போட்டுக்கொண்டு நிற்க. அவளது கை கால்கள் நடுங்கியது
கிருஷ்ணா மெல்ல அடியெடுத்து அவள் அருகில் சென்றவன் அவள் கண்களை அழுத்தமாக பார்த்து அவன் உள்ளே வந்த பொது மாராப்பை மறைக்க ஷாலை மேல போட்டதை எண்ணி கோபமடைந்த கிருஷ்ணா அவளின் மேலிருந்த ஷாலை உருவி எரிந்து.. தான் என்ன நினைத்தானோ அதை செய்து விட்டுதான் அவளை விட்டு விலகினான்.
பெண்ணவளோ அவன் செய்த காரியத்தில் கூனிக் குருகி விட்டாள்.. இன்னும் கழுத்தில தாலி கட்டலை . அதற்குள்ள இவர் தன்னிடம் எல்லை மீறுகிறார் என்று பயத்தில் மயக்கம் போட்டு விழும் முன் ஜானவியை கைகளில் தாங்கியிருந்தான்.
- அத்தியாயம்
காபி கொண்டு வந்தவர் ஜானவி மயங்கி இருந்ததை கண்டு பயந்தவர்
“என்னாச்சு மாப்பிள்ளை” என்ற பதறிய படி உள்ளே வர..தான் செய்த லீலைகளை மறைத்து “அவ என்னை பார்த்ததும் மயங்கிட்டா” என்று ஒரு பொய்யை நேர்த்தியாக கூறி… தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க பயந்தபடியே எழுந்து அமர்ந்தாள்.
ஜானவியின் கண் முன்னே இருந்த மாய கிருஷ்ணனை கண்டு ஷாலை நன்கு போர்த்திக்கொண்டாள்.
ஜனாவின் செயலை கண்டு கிருஷ்ணாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
சுந்தரம் கிருஷ்ணா வந்தது தெரிந்து வீட்டுக்குள் வந்தவர் “வாங்க மாப்பிள்ளை இப்பதான் வந்தீங்களா”
அவன் பதில் கூறினால் தானே.. “ மாமா நான் ஜானவியை கூரைப்புடவை எடுக்க கூட்டிட்டு போறேன் என நெற்றியை நீவிக்கொண்டான்.
“மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடியே நாங்க பொண்ணை எப்படி தனியாக அனுப்பு மாட்டோம் ” என்று தயங்கி பேச..
“மாமா எந்த காலத்தில இருக்கீங்க.. ஜானவியோட ப்ரண்ட் தீப்திய கூட அனுப்பி வைங்க.” என்றதும்
“நானும் கிளம்பி வருகிறேன்” என்று எழுந்தார் சுந்தரம் .
“காரியம் கெட்டுச்சு போ” என நினைத்து
“நீங்க வரவேண்டாம் மாமா.. அத்தையை மட்டும் ஜானவி கூட அனுப்பி வைங்க” என்றான் கிருஷ்ணா..
“சரிங்க மாப்பிள்ளை வசந்தியை அனுப்பி வைக்குறேன்” என்று போனை எடுத்து சுகந்தி போன் செய்து புடவை எடுக்கும் விபரத்தை தீப்தியை வர வைத்தார்.
வசந்தி மகிழ்ச்சியுடன் ஜானவியிடம் சென்று கூரை புடவை எடுப்பதை பற்றி கூற
“அம்மா அவர் விருப்படி எடுத்து வரட்டும்.. நான் அவர் கூட போகமாட்டேன்.. அவரு கூட போனா இன்னும் தன்னை ஏதும் செய்வானோ ” என்று பயந்தவள் கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டாள்.
“என்னடி கூத்தா இருக்கு.. எல்லா பொண்ணுங்களும் கூரை புடவை எடுக்க நான் தான் போவேன்னு என்று அடம் பிடிப்பாங்க.. நீ என்னடானா நான் வரமாட்டானு சிறுபிள்ளை போல அடம்புடிக்கிற.. மாப்பிள்ளை உனக்காக ஹாலில் காத்திருக்கார்டி சீக்கிரம் எழுந்து குளிச்சு கிளம்பு ” என்று தன் மகளிடம கெஞ்சிக்கொண்டிருக்க
“நீ வேணா அவர் கூட போ.. என்னை கூப்பிடாதா வசும்மா” என்று மீண்டும் படுத்துக்கொள்ள..
“ஜானு தங்கம் நானும் தாண்டி உன் கூட வரேன் என்றவரை நிமிர்ந்து பார்த்தவள்.. நீயும் வரீறியா அப்ப சரி” என்று குளியலறைக்கு ஓடி சென்று குளித்து பாசிப்பருப்பு கலரில் சாப்ட் சில்க் பட்டு புடவையை அணிந்து.. கழுத்தில் தாமரை லாடர் வைத்த சிவப்பு பச்சை கற்கள் பதித்த செயின் ஒன்றை மட்டும் அணிந்து கொண்டாள் .
சுந்தரம் இவர்களை வழியனுப்ப வெளியே வந்தார்..வசந்தியும் ஜானவியும் புறப்பட்டு வர கிருஷ்ணா காரை எடுப்பதற்கு வெளியே சென்றான்.. தீப்தியும் சரியாக அங்க வர..
தீப்தி “வாங்க அண்ணா” என புன்னகைக்க
மெல்லிய சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு ஜானவிக்கு முன்புறம் கதவை நீக்கிவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்துகொண்டான்.. வசந்தியும் தீப்தியும் பின்னால் ஏறிக்கொண்டனர்..
ஜானவி காரில் ஏறாது தயங்கி நிற்பதை பார்த்த சுந்தரம் மகளின் அருகே சென்று
“போடா ஜானு.. மாப்பிள்ளை உனக்காக காத்திருக்காரு பாரு ” என்று மகளை முன்புறம் சீட்டில் அமர வைத்தார்.
கிருஷ்ணா தங்களது கடைக்கு அழைத்து செல்வான் என்று எதிர்பார்திருக்க..
கிருஷ்ணா காஞ்சிபுரத்திற்கு காரை விட்டான்.. “மாப்பிள்ளை நாம எங்கே போறோம்” என்ற வசந்தியின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாக வந்தது..
இரும்பை முழுங்கிட்டான் போல.. வாயை திறந்து பேச மாட்டேன்கிறான் பாரு என கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்க..
“ஏய் முறைக்காதடி அப்புறம் அந்த கண்ணுக்கு தண்டனை தருவேன்” என்று ஒரு பார்வை பார்க்க.. ஜானவி ஜன்னலோரம் வேடிக்கை பார்ப்பது போல திரும்பிக்கொள்ள..
சீட் பெல்ட் போடாமலிருந்தவள் கார்னரில் காரை வேகமாக திருப்ப கிருஷ்ணாவின் மடியில் போய் அமர.. அவனின் இதழை ஜானவியின் கண்களில் அழுத்தமாக பதித்தான்.
புருவத்தை உயர்த்தி எப்படி என்னை முறைத்த கண்ணுக்கு தண்டனை போதுமா?
“ம்க்கும்” என்று இதழை சுளித்து அவன் மடியிலிருந்து விலகினாள்.
வசந்தியும் தீப்தியும் இவர்களின் செயல்களை கண்டும் காணாமலும் பேசிக்கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் வந்தவன் ஒரு பெரிய கடையின் முன் நிறுத்திய அங்கே நின்றிருந்த பாஸ்கருக்கு கையசைத்தான்
தீப்திக்கு பாஸ்கரை கண்டதும் திக்கென்று இருந்தது.
அன்று பாஸ்கரிடம் அழுதுவிட்டு வந்தவள் இரண்டு நாட்கள் ஆகியது ஆபீஸ் செல்லவில்லை..
பாஸ்கரும் போன் போட்டு அலுத்து போய்விட்டான்
பாஸ்கரின் கவலைகண்டு தான் புடவை எடுப்பதற்கு தீப்தியை வரச்சொன்னான் கிருஷ்ணா.
மூவரும் காரிலிருந்த இறங்க காரை பார்க் செய்து வந்தான்
கடையின் முதலாளி கடைக்கு வெளியே வந்து கிருஷ்ணாவை கட்டியணைத்து “தலைவரே நீங்க ஒரு வார்த்தை பட்டுபுடவை வேணும்னு சொல்லியிருந்தா வீட்டுக்கே புடவைகளை அனுப்பி வைத்திருப்பேனே” என்று புன்னகையுடன் பேச
“அது நல்லாயிருக்காது பாஸ்” என்று ஜானவியை தன்னருகே அழைத்து தோளோடு அணைத்துக்கொண்டு நடந்தான்.
பாஸ்கர் வசந்தியிடம் “அம்மா நல்லாயிருக்கீங்களா” என்று கேட்டு.. வசந்தியின் அருகில் நடந்து வந்த தீப்தியிடம் அவளுக்கும் மட்டும் கேட்குமாறு “ஏன் தீப்தி ஆபீஸ் இரண்டு நாளா வரல”
“உடம்பு சரியில்ல சார் அதான் வரலை” என்று ஒரு அடி தள்ளி நடந்தாள்.
“இவள புரிஞ்சுக்கவே முடியல ” என்று இனி அதிரடி முடிவில இறங்க வேண்டியது தான்” என்று நினைத்து கடைக்குள் செல்ல.. வசந்தி “தீப்தியிடம் நான் ஷோபாவில உட்காந்திருக்கேன்.. நீ பாஸ்கர் சார் கூட போய் ஜானவிக்கு புடவை எடுக்க உதவி செய்மா.. எனக்கு கொஞ்சம் கால் வலிக்குதுனு.. இல்லாத கால் வலியை இருப்பதாக சொல்லி. தான் அங்கு சென்றால் சின்ன சிறுசுகள் சங்கடப்படும் ” என்று அங்கிருந்த ஷோபாவில் தலைசாய்த்து கொண்டார்.
தீப்தி பாஸ்கரிடமிருந்த ஓரடி தள்ளி நடக்க அவ்வளவு நம்பிக்கை என் மேல நொந்து கொண்டு கிருஷ்ணா ஜானவி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கே கிருஷ்ணா கடையை இரண்டாக்கிக் கொண்டிருந்தான். கோல்ட் கலரில் தங்க கற்கள் பதித்த பெரிய சரிகைப்போட்ட புடவை அவனே ஜானவி மேல் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்னடி பிடிச்சிருக்கா இந்த புடவை” என்று நெற்றியை நீவியபடி கேட்க
“ம்ம்.. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒகே” என்று தரையை பார்த்து பதில் சொன்னாள்.
“ம்ப்ச்.. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு? என்று பல்லை கடித்தான்
“பி.பிடிச்சிருக்கு
25 புடவைகளுக்கு மேல் எடுத்து தள்ளிவிட்டான். இவர்களை இரு கண்கள் வஞ்சகத்துடன் பார்த்தது.
பாலா தன்னோட ஆட்களை கிருஷ்ணா எங்கு போறான் என்று கிருஷ்ணாவின் காரை பாலோ செய்ய பண்ண சொல்லியிருந்தான்..
கிருஷ்ணா காஞ்சிபுரத்தில் புடவைக் கடையிலதா இருக்கான் என்று தெரிந்தவுடன் சுந்தரத்தின் வீட்டுக்கு ஆட்களுடன் சென்றான் பாலா.
படபட வென்று கதவை தட்டும் சத்தம் கேட்டு சுந்தரம் கதவை திறக்க பாலா அடியாட்களுடன் நின்றிருந்தான்.
“யாருங்க நீங்க என்று” கேட்டுக் கொண்டிருக்கும்போது சுந்தரத்தை தள்ளிக் கொண்டு பாலாவின் ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.
“யாருன்னு கேட்டுட்டு இருக்கேன்.. நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தா என்ன அர்த்தம்” என்று சத்தம் போட்டு பேசி போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு போனை எடுக்க
“யோவ் சத்தம் போடாதாய்யா.. வயசானவர் பார்க்க மாட்டேன்.. அப்புறம் உனக்குதா சேதாரம் அதிகமா இருக்கும்” என கொக்கரித்து சிரித்து சுந்தரத்தின் மொபலை வாங்கினான்.
ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் “யோவ் பெரிசு நீ தா கிருஷ்ணாவுக்கு பட்டு புடவைகள் நெய்து தரீயா.” என்று நாக்கை கடித்தான்.
“ஆமா நான் தா நெய்து தரேன்.. அதுக்கு என்ன இப்ப.. அதை கேட்க நீங்க யார்? மாமனா மச்சானா.. வெளியே எந்திரிச்சு போங்கடா..”
“அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது.. நீ அவன் கேட்ட நேரத்தில் பட்டு புடவை நெய்து தரக்கூடாது என்று ஏகத்தாளமாக பேசி..டேய் கிழவன் ரொம்ப துள்ளுறான்.. கொஞ்சம் கவனி” என்று அடியாட்களை பார்க்க
“சுந்தரம் பட்டு புடவை நெய்து கொடுத்தா என்னடா பண்ணுவ” என்ற சிம்மக்குரலை கேட்டு அதிர்ந்து எச்சில் விழுங்கினான் பாலா.
அதை வெளிக் காட்டாமல் கிருஷ்ணா பார்த்து “ஓ அதுக்குள்ள வந்துட்டயா” என்று கண்ணை உருட்டினான்.
பாலா பேசியதை காதில் வாங்காமல்.. பாலாவின் சட்டையை வேகத்துடன் இழுத்து பிடிக்க.. சட்டை பட்டன்கள் தெறிந்து விழுந்தது..
“யாரு வீட்ல வந்து யாரை மிரட்டுற.. அவர் என் மாமனார்டா.. அவர் பொண்ணை நான் கல்யாணம் செய்துக்க போறேன்” என்று பாலாவின் கன்னத்தில் அறைய காதில் கொய்ய்ங்க் என்ற சவுண்ட் மட்டும் தான் பாலாவிற்கு கேட்டது.
தன் அண்ணனின் சாவிற்கு செல்வம் தான் காரணம் என்று தெரிந்தவன் அண்ணனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் கட்டுப்பட்டிருந்தான்.
இப்போது வாலன்ட்ரியரா வந்து தொகை வகையா மாட்டிக்கொண்டான் பாலா..
“உன் நொண்ணனை தில்லு இருந்தா நேருக்கு நேரா மோத சொல்லுடா.. அதை விட்டு பொட்ட பசங்க மாதிரி உங்க வீரத்தை வயசானவர்கிட்ட காட்டுறீங்க.. அறிவு கெட்ட நாயே” என்று பல கெட்டவார்த்தைகளால் பேச.. சுந்தரம் காதை பொத்திக்கொண்டார்.
“என்னையே அடிச்சுட்டயா.. தடிமாடுகளா பார்த்துட்டிருங்கீங்க அவனை அடிங்கடா”..
இந்த தருணத்திற்காகத்தான் காத்திருந்தது போல ஒவ்வொருவரையும் லெப்ட் அண்ட் ரைட்டு வாங்கினான்..
அனைவரும் அடிவாங்கி பாலாவை தனியாக விட்டு ஓடி போய்விட்டனர்.
நாசமா போனவனுங்க சிங்கத்துக்கிட்ட தனியாமாட்டி விட்டு போய்ட்டானுங்க.. என்று வடிவேல் பாணியில் புலம்பியவன். “இத பாரு கிருஷ்ணா.. நீ என்னை அடிச்சது என் அண்ணனுக்கு தெரிச்சுதுன்னா உன்னை சும்மா விட மாட்டார்” என்று தள்ளி தள்ளி போக.
பாலாவின் பக்கம் சென்றவன் அவன் கையை பிடித்து முறுக்கி அவனின் கையை ஒடித்துவிட்டான்.. அந்தளவிற்கு செல்வம் குடும்பத்தின் மீது வெறியுடன் இருந்தான்.. பாலா அம்மாமா என்று கத்தும் போது கூட பாவம் பார்க்க வில்லை.
சுந்தரம் கிருஷ்ணாவின் இந்த அவதாரத்தை காண முடியாமல் “விடுங்க மாப்பிள்ளை செத்து கித்து போயிட போறான்”
கிருஷ்ணாவை பிடித்து இழுக்க அவரால் முடியலை.. வெளியே காரில் வீட்டுப் பெண்களுக்கு காவலாக இருந்தான் பாஸ்கர்.
சுந்தரம் வெளியே சென்று காரிலிருந்த பாஸ்கரை அவசரமாக வீட்டுக்குள் அழைத்து வந்தார்.
“டேய் அவனை விடுடா விடுடா” என்று கிருஷ்ணாவை இழுத்து ஒரு பக்கம் தள்ளினான் பாஸ்கர்
பாலாவை கிழிந்த நாராக தொங்க விட்டிருந்தான் கிருஷ்ணா.. ஆம்புலனஸுக்கு போன் செய்து வரச்சொல்லி அதில் பாலாவை அனுப்பி வைத்தான்.
ஜானவி உள்ளே நடக்கும் கலவரத்தின் சத்தம் கேட்டு காதை பொத்திக்கொண்டு இருந்தவள்.. பாலாவை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்ட சென்ற பின் காரை விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அங்கே நரசிம்ம அவதாரம் எடுத்தது போல நின்றிருந்தான் கிருஷ்ணா.
பெண்கள் மூவரும் உள்ளே வந்து விட்டனர் என்பதை தெரிந்து கொண்டவன் ஜானவியை மட்டும் பார்த்தவன் அவள் கண்ணில் தெரிந்த பயத்தை கண்டு வேக நடையுடன் வெளியே சென்று காரை எடுத்து கிளம்பிவிட்டான்.
கார் கிளம்பும் சத்தம் கேட்டு படுபாவி பய என்னை விட்டுட்டு போய்ட்டான்.. இப்போது இவன் செல்லும் பாருக்கு நான் தேவுடு காக்க போகணும் என்று தனக்குள் பேசியவன்
பயந்து நிற்கும் ஜானவியிடம் “தங்கச்சி கிருஷ்ணா பழாபழம் போல.. வெளிய முள் போல இருப்பவன் உள்ளே பலாப்பழம் எப்படி இனிப்பா இருக்கோ.. அது போலத்தான் பாசம் வைத்தான் என்றால் உயிரையும் கொடுப்பான்.. நீ அவனை வெறுத்துவிடாதேமா.. அதோடு அண்ணன் குழந்தைகள் மேல ரொம்ப பிரியமா இருப்பான்.. அவனோட கோவத்தை நீ தான் சரிசெய்து கொண்டு வரணும்னு நண்பனை பற்றி தவறாக நினைக்க கூடாது” என ஜானவியிடம் பேசி கிளம்பினான்.
சுந்தரம் ஒரு நிமிடம் ஆடி போய்விட்டார்.. இத்தனை கோபப்படும் மனிதனிடம் குழந்தை போல இருக்கும் மகள் நிலை என்னவாகும் என்று யோசித்து நின்றார்.
அனைத்து உடைமைகளையும் எடுத்து கொண்டு அறைக்குள் சென்றவள் தைரியத்தை வரவழைத்து கொண்டு கிருஷ்ணாவிற்கு போன் போட.