ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே… 3

3

 

 

 

 

“என்னது லெக்சரரா?” என்று முதலில் அதிர்ந்து கூவியது ஹரிஷ் தான் … 

 

சந்துரு மெல்ல தலையை அசைத்து, ” ஆமாம் .. அவங்க நேம் வைசாலி” என்றான். 

 

அங்குள்ளவர்களுக்கு எப்படி இதற்கு ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.. அப்படியொரு அமைதி அங்கே.. சந்துரு தலையை அசைத்து விட்டு நழுவி விட்டான்

நந்தன் ஒன்றும் பேசவில்லை.. நெற்றி சுருக்கமும், தாடை இறுக்கமும் தான் அவனின் யோசனையை அனைவருக்கும் தெரியப்படுத்த, அல்லக்கைகள் அமைதியோ அமைதி..

 

நந்தனின் முகத்தில் சட்டென்று பல்ப் எரிய, அவசரமாக அவ்விடம் விட்டு காரை நோக்கி சென்றான்.

 

 

காரை ஓட்டியவனின் சிந்தனை முழுவதையும் அம்மயில் வண்ண புடவைக்காரியே ஆக்கிரமித்திருந்தாள்.. மதியமே வந்த மகனை கேள்வியாய் நோக்கினார் ரூபாவதி.

 

 ” பிஜி செமினார் இன்னைக்கு, காலையில் இருந்து அந்த ஹாலில் உட்கார்ந்து இருந்தது, தலைய வலிக்குது மா.. அதான்..” என்று கூறிய மகனை பார்த்து அவரும் உருகி விட்டார். 

 

இந்த ஒரு வருட காலமாக மகன் இது போல சொன்னது இல்லையே.. ” சரி.. கண்ணா.. நீ போய் ரெஸ்ட் எடு” என்று மகனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டார்.

 

நந்தனும் விட்டால் போதும் என்று அவன் அறைக்கு பறந்து விட்டான். வாட்ச், வாலெட், ஃபோன் அனைத்தையும் மெத்தையில் எறிந்தவன், அறையை தன் கால்களால் அளக்க ஆரம்பித்தான்.

 

 

இவ்வளவு வருடத்தில் தன் மொத்த மூளையையும் இப்போது தான் உபயோகித்து இருந்தான். மீண்டும் மீண்டும் அதே வழி மட்டுமே புலப்பட்டது.. ‘தேவா வா இருந்தா இன்னும் நிறைய வழி யோசிச்சு இருப்பானோ ’ என்று அசந்தர்ப்பமாக எண்ணி கொண்டான்.

 

நமக்கு தெரிந்த வழியிலேயே செல்வோம் என்று ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி பிடித்து வைசாலி பற்றிய விவரங்கள் வேண்டும் என்று கூறி அவர்கள் கேட்ட பணத்திற்கும் மேலயே கொடுத்து மாலைக்குள் கையில் இருக்கணும் என்று என்று நிர்பந்தித்தான்.

 

பின் மாலை வரை அவனுக்கு வழக்கம் போல தூக்கம் வேற வரவில்லை.. ஒரு வழியாக அவனை டென்ஷன் படுத்தி, அவன் கை விரல் நகங்கள் எல்லாம் கடித்து மென்று தீர்த்த பிறகு, கால் விரல் நகங்களை காப்பற்ற வந்து சேர்ந்தது வைசாலி பற்றிய விவரங்கள்..

 

கண்கள் தவிப்புடன், அவன் பார்த்தது அவளுடைய பிறந்த தேதியையும் வருடத்தையும் தான். பின் தான் அவனுக்கு மூச்சு சரியாக வந்தது.

 

நந்தன் பிறந்த அதே வருடத்தில் தான் அவளும் பிறந்திருந்தாள். ஆனால் என்ன ஒரு மாதம் முன்னதாக பிறந்து விட்டாள்.

பரவால்லை ஒரு மாதம் தானே என்று நினைத்து சிரித்தவன், பின் அவன் மனதில் நினைத்ததை நினைத்து திகைத்து விட்டான். 

 

 

ஏதோ ஒரு ஆர்வத்தில் அவளைப் பார்த்து தெரிந்துக்கொள்ள நினைத்தான் தான், ஆனால் இன்று வயதைக் கணக்கிடும் வரை அதுவும் ஒரு மாதம்தான் என்று அவன் சொல்ல அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்.  

 

 

ஒருவேளை நாம் அவளை காதலிக்கிறோமா? என்று நினைப்பு வந்தவுடன் தன்னை மீறி அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

 

 ‘சேச்சே லவ் எல்லாம் இல்லப்பா ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டி… நாம சைட் அடிக்கிற பொண்ணு நம்ம விட வயசு பெரியவளா இருந்தா எப்படி.. நமக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்குல’ என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.. 

 

 

 

பின் தான் அவளுடைய மற்ற விவரங்களைப் பார்த்தான் தாய் மட்டுமே இருப்பதாக என்று இருந்தது .. அவனைப் போலவே இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பின் சென்ற வருடம் தான் , எம்பிஏ டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் முடித்துவிட்டு இங்கு வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள் என்று அது கூறியது.

 

 

அப்பாடா ஆசுவாசமாய் இருந்தது அவனுக்கு . அவன் ஒரு வருடம் பயிற்சி என்று வீணடித்த காலத்தில், இந்த பெண் தனது படிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறாள். 

 

 

இனி ப்ரோசீட் பண்ண வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டு, தந்தைக்காக என்றுமில்லாமல் வெகுநேரம் வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்தான்.

 

 

 

இரவு ஏழு மணி போல் தான் வீட்டுக்குள் நுழைந்தார் மனோகரன், மகனை கண்டதும் அவருக்கு பயங்கர அதிர்ச்சி..

 

 

 

 

பின்னர் தன் அறைக்கு சென்று , தன்னை சுத்தம் செய்து வெளியே வந்தவர், மனைவியை நோக்கி ” என்னடி உன் பையன் எங்கேயும் இன்னைக்கு வெளியில ஊர் சுத்த போகலையா? அதிசயத்திலும் அதிசயமாக வீட்டில் இருக்கிறான் , அதுவும் ஹால்ல உட்கார்ந்து இருக்கான்”

 

அவர் அதனை கூறியதும் அப்பட்டமாக எரிச்சலை முகத்தில் காட்டி ” உங்களுக்கு ஏதாவது என் பிள்ளையை சொல்லைனா.. அன்னைக்கு சாப்பிட்ட சோறு ஜீரணமாகாதா? ” என்றார்.

 

 

தாய் தந்தையின் பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்த நந்தன், நாம் இப்பொழுது இடையில் புகுந்தால் தான் சரிவரும் என்று நினைத்து மெல்ல அப்பாவிடம் சென்றான்.

 

 

 

” அப்பா.. கொஞ்சம் பேசணும் உங்ககிட்ட”

 

 

 

” என்ன எப்போதும் உங்க அம்மா கிட்ட தானே எதையும் கேட்ப.. நீ என்கிட்ட கேட்கிறனா விஷயம் ரொம்ப பெருசு..” 

 

 

” அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா.. இது கொஞ்சம் படிப்பு சம்பந்தப்பட்டது ..அதான் அப்பா , அம்மாகிட்ட எப்படி போய் கேட்க..” என்றவன் பதிலில் ரூபாவதி முகம் கூம்பி விட்டது .

 

 

ஆனாலும் மகன் படிப்பை பற்றி பேசுவதை விழி விரிய ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். இனி என் மகன் நன்றாக வந்துவிடுவான் என்று நம்பிக்கையில்.

 

 

நந்தன் தன் தந்தையை நோக்கி , ” ஃபர்ஸ்ட் இயர் முடிஞ்சு செகண்ட் இயர் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க .. பர்ஸ்ட் இயரில் இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மென்ட் எடுத்திருந்தேன் .. இப்போ செகண்ட் இயர் நான் பினான்ஸ் எடுக்கலாம்னு நினைக்கிறேன்” 

 

 

” என்னடா திடீர்னு உனக்கு படிக்கிறதுல இவ்வளவு ஆர்வம் வந்தது. பார்த்துடா உலகம் தாங்காதுடா ” என்று நக்கல் அடித்தார் மனோகர்.

 

 

மகனின் இந்த பேச்சை கேட்டு அன்னையின் உள்ளத்தில் நம்பிக்கை வேர் துளிர்விட்டது. உடனே கணவனை நோக்கி “அவன் உருப்பட மாட்டான் சொல்ல வேண்டியது, அவனே வந்து ஏதாவது ஒன்னு கேட்டா அப்புறம் நக்கல் அடிக்க வேண்டியது” என்று பொரிந்தார் ரூபாவதி.

 

 

” என்னடி பண்றது பெரிய பெரிய ஷாக் கொடுத்தா… எனக்கு இருக்கிறது சின்ன ஹார்ட் . இவன் படிப்பு விஷயம் பேசுறதே ஷாக்.. இது அதுலயும் ரொம்ப பொறுப்பா இந்த வருஷம் பினான்ஸ் வேணும்ன்னு சொல்றான் , அது தாண்டி எனக்கு கொஞ்சம் இடிக்குது” என்றார் மகனை அறிந்தவராய்.

 

 

உடனே சுதாரித்த நந்தன், ” அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா.. எனக்குமே மார்க்கெட்டிங்கில் அந்த அளவு பெரிய இன்ட்ரஸ்ட் இல்ல .. அதனால தான் பினான்ஸ் எடுக்கலாம்ன்னு யோசிச்சேன்.. இப்போ சேஞ்ச் பண்ணிணா மட்டும்தான் முடியும் , அப்புறம் கிளாசஸ் ஆரம்பிச்சிட்டாங்கன்னா கஷ்டம்.. அது தான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்.. அப்புறம் உங்க இஷ்டம்” என்று தோளைக் குலுக்கி விட்டு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்.

 

 

மனோகரும் நந்தன் சொன்னதை யோசித்தவர் , ஏதோ புள்ள இந்த மட்டிலும் படிப்புக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கிறான், சரி அவன் போக்கில் தான் போய் பார்ப்போமே .. என்று நினைத்தார். ஆனாலும் தேவாவிடம் இது பற்றி கருத்து கேட்க வேண்டும் என்று நினைக்க தவறவில்லை.

 

 

” சரிடா.. ஒரு ஒன் வீக்குல நான் ஏற்பாடு பண்றேன் . ஆனா அதுவரைக்கும் நீ பழைய மாறி காலேஜிக்கு போய் வா” என்று கூறிவிட்டார்.

 

மனதில் எழுந்த மகிழ்ச்சி முகத்திற்கு காட்டா வண்ணம் அடக்கியபடி தந்தையை நோக்கி சரிப்பா என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி விரைந்தான் நந்தன்.

 

மறுநாள் கல்லூரிக்கு சென்றதும் முந்தைய நாள் பாதிப்பு எதுவும் அவன் முகத்தில் தெரியவில்லை .. அல்லகைகள் கூட கொஞ்சம் அசந்து தான் போனார்கள்.. குறிப்பாக ஹரிஷ் இவன் எந்த விஷயத்திலும் அசால்ட்டாக விடமாட்டானே.. ஏன் அந்த பொண்ண பத்தி இவ்வளோ தூரம் கேட்க சொல்லிட்டு இவ்வளவு அமைதியா இருக்கான் என்னவாக இருக்கும் ? என்றது மைண்ட் வாய்ஸ்…

 

 

 

ஒரு வருடமாக அவன் கூடவே சுற்றுகிறான் அல்லவா அதனால் அவனை பற்றி சரியாக கணித்து வைத்திருந்தான்.

 

 

அவனிடம் கேட்கவும் பயம், நண்பனாக இருந்தாலும் ஒரு எல்லை தான்.. அவர்களுக்கு எதையும் சொல்லி விட மாட்டான்.. அவர்களிடம் வேலை வாங்கி பழக்கம் மட்டுமே உள்ளது.. அவனாக நினைத்தில் மட்டுமே மனதில் உள்ளதை மற்றவர்களிடம் பகிருவான், இல்லை என்றால் அழுத்தமாக ஒரு பார்வையிலேயே தள்ளி நிறுத்தி விடுவான் நந்தன்..

 

 

மறுநாள் மனோகர் மகனை பற்றி சொல்லுவதற்கு தேவாவை பார்க்க சென்றார்.

 

காரில் இருந்து இறங்கி தன் முன்னே இருந்த, அந்த பத்து மாடி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தார் மனோகர். ராஜன்’ஸ் ஸ்குயர்ஸ் என்று தங்க எழுத்துக்களில் மின்னியபடி , பிரம்மாண்டமாக உயர்ந்து நின்ற அந்தக் கட்டிடத்தை இமைக்காமல் சிறிது நேரம் பார்த்தார்.

 

 இரண்டாண்டுகளுக்கு முன் மூன்று கட்டிடமாக இருந்த இடம் என்று பத்து அடுக்கு கட்டிடம் ஆக நிமிர்ந்து நிற்கிறது. 

 

மனோகரன் வந்த நேரம் மதிய வேளை அப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அலுவலர்களை பார்த்துக்கொண்டே தேவாவின் அறையை நோக்கி லிப்டில் பயணித்தார்.

 

 

ஐந்தாம் மாடியில் இருந்த தேவா அறை முன் சற்று நின்றார். தேவேஸ்வர ராஜன் என்று பிளாட்டினம் நிறத்தில் மின்னிய எழுத்துக்களை பார்த்தவாறே அறைக்குள் நுழைந்தார்.

 

முன்னணியில் வரவேற்பறை இருக்க, அதற்கு பிறகுதான் தேவாவின் அறை இருந்தது. வரவேற்பு அறையின் ஒரு ஓரத்தில் தேவா பி.ஏ. அமர்ந்திருந்தான். 

 

மனோகரை பார்த்து அவசரமாக எழுந்து வந்தவன் , ‘ சார் வாங்க .. வாங்க .. தேவா சார், லஞ்ச் போய் இருக்கார்.. இப்ப வந்துடுவார்.. நீங்க உட்காருங்க சார்” என்று மனோகர் வரவேற்று சோபாவில் அமர வைத்தான். அவர் குடிப்பதற்கு ஜூஸ் கொண்டு வந்து வைத்தான்.

 

 

தேவாவின் கட்டளை அவனை காண வரும் விருந்தினர்களுக்கு மறக்காமல் உபசரிக்க வேண்டும் என்பது. அவர்களின் ராஜ வம்சத்தில் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பழக்கம் உபசரிப்பு.

 

 

அப்போது அறையை திறந்து கொண்டு வேக நடையுடன் வந்து கொண்டிருந்த தேவாவை பார்த்து தன்னை போல எழுந்து நின்றார் மனோகர்.

 

 

தேவேஸ்வர ராஜன்… தேவேஸ்வரன் என்றால் தேவர்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள்.. 

 

 

ஏழு அடியை சிறிது இஞ்சுகளில் தவறவிட உயரம் … உயர்த்திற்கு ஏற்ற எடையுடன் அவன் கம்பனி மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் உடற்கட்டுடன் இருந்தான்.

கூர் விழிகளுக்குள் தவழும் கர்வம் கலந்த அழுத்தமான பார்வை.. ராஜ களை தாண்டவமாடும் முகம்.. புன்னகை என்ன விலை எனக் கேட்கும் முகம் , ஆனால் தன்னை மறந்து குறிஞ்சி பூவென அவன் சிரிக்கும் பொழுது அவன் கன்னத்தில் விழும் குழி எதிராளியை அதில் வீழ்த்தும்.. எப்போதும் க்ளீன் ஷேவ்வில் இருக்கும் கன்னங்களும், தாடைகளும்… . பார்ப்பவருக்கு மிக தேர்ந்த தொழிலதிபன் என்று.. பக்கா பிசினஸ் மேன் லுக்.. 

 

தன்னை மறந்து கவிதைகளில் மூழ்கிவிடுவான்… அதற்காக மென்மையானவன் கிளாசிக் மியூசிக் கேட்பான் என்றால் இல்லை தான், பாப் சாங்கும், வெஸ்டர்ன் சாங்கும் தெறிக்க விடுவான் அவன் அறையில்.. கேட்டால் அது தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்பான். சுருங்க சொன்னால் முரண்களின் முரண் இவன்..

 

நேர் பார்வையுடன் தன் அறைக்குள் நுழைய இருந்தவனின் பார்வை வளையத்திற்குள் விழுந்தார் மனோகர்.

உடனே அவர் அருகில் விரைந்தவன், “வாங்க.. சித்தப்பா… உள்ள போய் பேசலாம் வாங்க” என்று அறைக்குள் அழைத்து சென்றான்.

 

 

இது முதல் தடவை இல்லை மனோகருக்கு அவனின் அறையை பார்ப்பது. ஆனாலும் அவனின் அறையின் நேர்த்தியும், வடிவமைப்பும், சுத்தமும் மீண்டும் மீண்டும் அவரை வாய் பிளந்து பார்க்க வைக்கும். இன்றும் அதே போல பார்த்தவரை , மெல்லிய புன்னகையுடன் தன் நாற்காலியில் அமர்ந்து எதிர் இருக்கையை காட்டி அமர சொன்னான்.

 

அவர் அமர்ந்தவுடன், ” சொல்லுங்க .. சித்தப்பா.. நந்தன் பத்தி என்ன பேசணும்?”

 

அது தான் தேவா, எதிர் இருப்பவர்கள் பேச விழையும் முன் அதை தான் ஆரம்பித்து அவர்களை வியப்பில் ஆழ்த்தி விடுவான். இது தெரிந்தது தானே மனோகருக்கும், ” அதானே .. உன் கண்ணில் இருந்து எதுவும் தப்ப முடியுமா? அவன் இந்த வருஷம் மார்கெட்டிங் எடுத்து இருந்தான்.. இப்போ ஃபைனான்ஸ் எடுக்க போறேன்னு சொல்லுறான்.. அதான் உன் கிட்ட சஜஷன் கேட்கலாம் வந்தேன்”

 

 

யோசனையுடன் அவரை பார்த்தவன், ” நந்தனாவே உங்ககிட்ட கேட்டானா?”

 

” ஆமாம்.. தேவா… அதான் எனக்கும் கொஞ்சம் இடிக்குது?”

 

” ம்ம்ம்.. ஒரு நாள் டைம் கொடுங்க சித்தப்பா… நான் உங்களுக்கு நாளை மதியம் ஃபோன் பண்ணுறேன்” 

 

 

” ஓகே.. தேவா… உன்கிட்ட விட்டுட்டா நானும் கொஞ்சம் ஃப்ரீ ஆஹ் பீல் பண்ணுவேன்” 

 

” தேவா.. கல்யாணத்துக்கு யோசிக்கலாம் இல்லையா… நிறைய ஆஃபர்ஸ் எல்லாம் வருதுன்னும், நீ கன்சிடர் பண்ண மாட்டேங்கிறன்னும் அண்ணன் சொன்னாங்க.. உனக்கு நாங்க சொல்ல ஒன்னும் இல்லை.. யூ நோ பெட்டர் ஃபார் யூவர் செல்ப்… டேக் கேர் ” என்று விட்டு விரைந்து விட்டார்.

 

 

சித்தப்பா சென்றதும், நந்தனின் கடந்த ஒரு மாத நடவடிக்கையை பற்றிய விவரங்களை கேட்க நினைத்தவன், அவன் அந்த அளவு வொர்த் இல்லையே என்று யோசித்து விட்டு… இவனே பிரின்சிபாலிடம் பேசி, நந்தனை ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு மாற்றி விட்டு, சித்தப்பாவிற்கு ஃபோன் செய்தான் மறுநாள் அவன் சொன்ன அதே நேரத்தில்..

 

ஃபோன் எடுத்தவரிடம், ” சித்தப்பா.. ஒன்னும் பிராப்ளம் இல்லை.. அவனை அந்த பிராஞ்ச்க்கு மாத்திடலாம்.. நம்ம கூட ஒரு ஆள் ஃபைனான்ஸ் இருக்கிறது நல்லது தான்.. நான் பிரின்சிபால் கிட்ட பேசி, எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்”

என்று கூறியனை கேட்டு, அவருக்கு மிக சந்தோசம்.. கூடவே தன் பையனை தேவா விட்டுட மாட்டான் என்ற நம்பிக்கையும் வேற..

நந்தனை அறியாமல் தேவா செய்த இச்செயலால்.. விதி என்ன செய்ய காத்திருக்கிறதோ!!!!

 

கர்வம் வளரும்..

3 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே… 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top