4 – புள்ளி மேவாத மான்
மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த எழிலரசி வீட்டார் சாப்பிட்டு விட்டு கிளம்பினர் . மதிய விருந்து என்பதால் சாப்பிடும் போது
தனஞ்ஜெயனை “சாம்பார்ல சாப்பிடுங்க… ” “ஸ்வீட் இன்னொன்னு சாப்பிடறிங்களா…” “கூட்டு இன்னும் கொஞ்சம் வைச்சுக்கறிங்களா…” என இவள் சாப்பிடுவதை விட்டு அவனையே கவனித்து கொண்டு இருந்தாள்.
தனஞ்ஜெயன் “ஏய்…என்னை கவனிக்கறத விட்டுட்டு நீ சாப்பிடு. நீ தான் விருந்தாளியா வந்துருக்க … நான் தான் உன்னை கவனிக்கனும் அமைதியா சாப்பிடு “
“என்னைய நீங்க எழிலு தான கூப்பிடுவிங்க மறந்துட்டிங்களா என்னைய எப்பவும் அப்படியே கூப்பிடுங்க மாமா எனக்கு அது தான் பிடிக்கும் “
இதுவரை அவன் இவளை பேர் சொல்லி கூப்பிடதில்லை போனில் பேசும் போது ‘என்ன சொல்லு’ ‘சரிடி’ சில சமயம் கிண்டலாக ‘அம்மணி’ என்று அழைப்பான் பேர் சொல்லி கூப்பிடகூடாதுனு இல்லை அவனுக்கு அது வரலை அவ்வளவு தான். இவளோடான ஞாபகங்களை அவன் இவளை போல மனதில் சேமித்து வைக்கவில்லை.
“சரிடி சாப்பிடு”என்றவனையே விடாமல் பார்க்க….
“சரி எழிலு சாப்பிடு” என சிரித்து கொண்டே சொல்ல ,
தன் மாமன் தன் பேர் சொல்லி கூப்பிட்டதில் மகிழ்ந்தவள்..
“மாமா நான் விருந்தாளி இல்ல நான் இந்த வீட்டுக்கு உடமைப்பட்டவ எப்பவும் உங்களை கவனிச்சுகறது தான் எனக்கு சந்தோஷம்”என்றாள்.
கிளம்பும் போது இவனைப் போல இல்லாமல் எல்லோர் முன்பும் கொஞ்சம் சத்தமாகவே “போயிட்டு வரேன் மாமா”என சொல்ல , அனைவரும் சிரித்து விட்டனர். தனஞ்செயனுக்கு தான் வெட்கமாகிவிட்டது.
எழிலரசி கிளம்பி சென்ற பிறகு கருணா தான் தனஞ்ஜெயனை ரொம்பவே கிண்டல் செய்தான் .
“டேய் மாப்புள்ள அன்னைக்கு என் தங்கச்சிகிட்ட போயிட்டு வரேன் சொல்ல எவ்வளவு அலம்பல் பண்ண..அந்த புள்ள முகத்தை கூட பார்க்காம சொல்லிட்டு வந்த….. “
“ஆனா இன்னைக்கு என் தங்கச்சி எல்லோர் முன்னாடியும் நெத்தியடியா சொல்லிட்டு போகுது பார்த்தியா …”
“பொட்டபுள்ள அது தைரியமா சொல்லிட்டு போகுது நீ வெட்கப்பட்டு நிக்கற… ஆனாலும் உன் வெட்கம் அழகா தான் இருக்கு மாப்புள்ள..”
“போடா போய் ஆலைல வேலைய பாரு” மிடுக்காக சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
“டேய் உங்கண்ண குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைங்கற மாதிரியே பில்டப்பு கொடுக்கறான்டா வாங்கடா போய் வேலையை பார்ப்போம் ” என தனஞ்ஜெயனின் தம்பிகளை கூட்டி கொண்டு சென்றான்.
வீட்டினுள் வந்தவன் சோபாவில் அமர்ந்து கொண்டான். வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தன் வீடு நிறைந்திருந்தது போல உணர்ந்தான். தன் தாய் லட்சுமிக்கு பிறகு வீடே பொலிவிழந்தது போல தோன்றும். இன்று எழிலரசியின் வருகையால் மீண்டும் பொலிவு பெற்றதாக எண்ணினான்.
எவ்வளவு நேரம் சிந்தனையில் இருந்தானோ அவன் போனின் ஒலி அதிர்வில் சிந்தனையில் இருந்து மீண்டான் . வழக்கம் போல் எழில் தான்.
“மாமா நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீங்க என்ன பண்ணறிங்க ஆலைக்கு போயிட்டிங்களா”
“இல்ல இனிமே தான்”
“ஏங்க மாமா டையர்டா இருக்கா தூங்கிட்டு இருந்திங்களா தொந்தரவு பண்ணிட்டேனா”
“அப்படி எல்லாம் இல்ல சும்மா உட்கார்ந்து இருந்தேன்”
‘மாமா சும்மா உட்காரகூடியவர் இல்லையே’ என நினைத்து
” ஏன் மாமா, அத்தை மாமா ஞாபகம் வந்திருச்சா… கவலப்படாதிங்க நம்மள தெய்வமா இருந்து வாழ்த்துவாங்க”
தன் மனதை சரியாக அறிந்து கொண்டதை நினைத்து பெருமிதப்பட்டவன் “சரி சரி போய் ரெஸ்ட் எடு” என்றான்.
“ரெஸ்ட் எடு எழிலு சொல்லுங்க மாமா” இவள் செல்லம் கொஞ்சி கொண்டே கேட்டாள்.
“எழிலு… ரெஸ்ட் எழிலு… எடு எழிலு ….இராத்திரில எழிலு… பேசலாம் எழிலு…” என வார்த்தைக்கு ஒரு எழில் போட..
“போங்க மாமா என்னைய கிண்டல் பண்றிங்க..” என சிணுங்கினாள் .
அவள் சிணுங்களில் இவன் சத்தமாக வாய் விட்டு சிரித்து விட்டு போனை வைத்துவிட்டான் .
இவனின் சிரிப்பை பார்த்த இருளாயி பாட்டி கைநிறைய உப்பு மிளகாய் கொண்டு வந்து ,
“கிழக்கு பார்த்து நில்லு ராசா” என நிற்க வைத்து திருஷ்டி சுற்றி விட்டு ,
“இந்த மகராசி வந்த பிறகு தான் ஒன் முகத்துல சிரிப்பையே பார்க்கறேன். சீக்கிரம் இந்த வீட்டுக்கு வந்து உங்கம்மா லட்சுமி மாதிரியே இந்த வீட்டையே நெறக்க வைக்கனும்” என சொல்லி கொல்லப்புறம் சென்றார் . தான் நினைத்த மாதிரியே பாட்டியும் சொல்லவும் மனசு நிறைந்த பூரிப்போட ஆலைக்கு சென்றான் .
இப்போழுது எல்லாம் தனஞ்ஜெயனின் நாட்கள் எழிலரசயினால் தொடங்கி எழிலரசியோடு முடிகிறது . தினமும் போனில் பேசி பேசியே அவனோடு குடும்பம் நடத்தினாள் எழிலரசி . போனிலேயே வீட்டு வேலையாட்களை வேலை வாங்கி வீட்டையும் நிர்வாகம் பண்ணினாள் .
இந்த நிலையில் தனஞ்ஜெயன் பிறந்தநாள் வந்தது. அவனுடைய பிறந்தநாளுக்கு எழிலரசி தன் அண்ணன் தமிழரசுவை கூட்டி கொண்டு பொள்ளாச்சி சென்று அவனுக்கு சில பரிசுகள் வாங்கி கொண்டு வந்தாள்.
எப்போதும் தனஞ்ஜெயன் பிறந்தநாளை பெரிதாக கொண்டாடியதில்லை. புது துணி அணிவான். கோயிலுக்கு போவான். வீட்டில் அவன் தாய் லட்சுமி வடை பாயாசத்தோடு சாப்பாடு செய்வார். கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் இரவு ஓட்டலில் சாப்பிட செல்வான்.
பெற்றோர்க்கு பிறகு கோயிலுக்கு மட்டும் சென்று வருவான் அவ்வளவே. தனஞ்ஜெயன் பிறந்தநாள் அன்று தன் பெற்றோரிடமும், சுந்தரம், கண்ணன் ஆகியோரிடம் அனுமதி பெற்றே தனஞ்ஜெயன் வீட்டிற்கு வந்தாள் எழிலரசி.
காலையில் தனஞ்ஜெயன் எழுவதற்குள் வந்துவிட்டாள். தன் வண்டியில் செல்கிறேன் என்றவளை அவள் தந்தை தான் கல்யாணத்திற்கு முன்பு தனியாக செல்வது ஊருக்குள் வேறுவிதமான பேச்சாகிவிடும் என தமிழரசனை கொண்டு போய் விட்டுட்டு வருமாறு கூறியிருந்தார்.
தனஞ்ஜெயனிடம் தன் வரவைப் பற்றி சொல்லவுமில்லை வந்தவுடனேயே சாமியறையில் விளக்கு ஏற்றி வணங்கி விட்டு சமயலறையில் புகுந்தவள்,
“ஓய் கிழவி நகரு.. நகரு… உன் வழக்கமான இட்லிச்சட்டிய தூக்கி அடுப்புல வச்சிட்டியா….”
“ஆமாண்டி யம்மா நான் இப்பவும் கிழவி தான் பத்து வயசுல இருந்தே நீ என்ன கிழவினு தான கூப்பிடற…”
“சரி.. சரி… புலம்பாத ஆயா நானே இன்னைக்கு என் கையால மாமனுக்கு ஆக்கி போடனும்னு வந்திருக்கேன் . உனக்கு இன்னைக்கு ரெஸ்ட் . ஓரமா உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாரு “
“ஏயா என்ன மாதிரி நல்லா சோறு குழம்பு ஆக்க தெரியுமா…”
“உனக்கு கொழுப்பு கூடி போச்சு கிழவி ஏதோ வேற வழியில்லாம என் மாமன் நீ ஆக்கி போடறதை திங்கறாரு… நீ என்னமோ செப் தாமோதரன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க.. நீ பரவை முனியம்மா ரேஞ்சுக்கு கூட ஒர்த் இல்ல … உங்கிட்ட பேசிட்டே இருந்தா வேலை ஆகாது தள்ளு.. தள்ளு…”
அவள் முன்பு மலையனூரில் இருந்த காலத்தில் இருந்தே அப்படி தான் இருளாயி பாட்டியிடம் கிழவி என கூப்பிட்டு ஏதாவது வம்பு வளர்த்து கொண்டு தான் இருப்பாள். அதற்காக மரியாதை தெரியாதவள் என்றில்லை. வெளிஆட்கள் முன்பு ஆயா என்று தான் அழைப்பாள். இருளாயி பாட்டியும் இவளிடம் சரிக்கு சரி வாயாடுவார்.
தனஞ்ஜெயனின் தாய் லட்சுமியும் அவளின் சேட்டைகளை கண்டு ரசிப்பார் . பெண் பிள்ளை இல்லை என்ற ஏக்கத்தை இங்கிருந்த நான்கு வருடங்களில் இவள் கொஞ்சம் தீர்த்து வைத்தாள்.
வாக்கிங் போக கீழே வந்த தனஞ்ஜெயன் இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு எழிலு குரலு மாதிரியே இருக்கே என நினைத்து கொண்டே கீழே வந்தான். சமயலறைக்கு சென்று பார்த்த போது இடுப்பில் சேலையை தூக்கி செருகிக் கொண்டு அடுப்பில் ஏதோ கிளறி கொண்டு இருந்தாள்.
தனஞ்ஜெயன் வந்ததை வேலை கவனத்தில் அவள் கவனிக்கவில்லை. ஆனால் பாட்டி கவனித்து விட்டு சத்தமில்லாமல் கொல்லைப்புறம் சென்றுவிட்டார்.
அவளின் பின்புறம் சென்று தோள் வளைவில் எட்டிப் பார்த்தவாறே ” இங்க என்னடி பண்ணிட்டு இருக்க..” என்றான்
அவனின் குரல் தீடிரென்று கேட்கவும் பயத்தில் கையில் இருந்த கரண்டியை நழுவ விட்டு துள்ளி குதித்து திரும்பினாள்.
“ஏன் மாமா இப்படி தான் சொல்லாமல் கொள்ளாமல் பின்னாடி வந்து பேசுவிங்களா…. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.”
“ஹேய்… ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்…. ஒன்னுமில்ல..” என்று சொன்னவாறே பதட்டத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கைகால் நடுங்க நின்றவளை பார்த்து அவளை லேசாக அணைத்து சமாதனப்படுத்தலாம் என நினைத்து அருகில் நெருங்க இன்னும் பதட்டம் கூடி அவள் பின்னால் நகர்ந்து செல்ல…
அது வரை அவனுக்கு ஏதும் விபரிதமான எண்ணம் தோன்றவில்லை. ஆனால் அவன் கிட்ட நெருங்க அவள் இரண்டடி தள்ளி நிற்கவும், அப்போது தான் அவனுக்கு விவகாரமான எண்ணம் எல்லாம் தோன்றியது.
அவள் மாநிறத்திற்கு எடுப்பாக பேபி பிங்க் நிறத்தில் பர்ப்பில் கலரில் சிறு சிறு பூக்கள் போட்ட சேலை உடுத்தி நீண்ட பின்னலில் மல்லிகைசரத்துடன் லேசான ஒப்பனையில் நெஞ்சு கூடு ஏறி இறங்க நின்றவளை பார்த்தவன், ஒரே எட்டில் நெருங்கி அவளை இழுத்து அணைத்து இவனுக்கு தோதாக ஒரு கையால் அவள் கழுத்தை வளைத்து நெற்றி கண் கன்னம் என தன் இதழ்களால் உலா வந்தவன் , இறுதியில் அவளின் இதழில் இளைப்பாறினான். இன்னொரு கையோ அவளின் வெற்று இடையின் குழைவை சோதித்து பார்த்து கொண்டு இருந்தது.
முதலில் மருண்டவள் பின் அவளிள் காதல் கொண்ட மனது விழித்துக் கொள்ள மாமனின் அதிரடி தாக்குதலில் மெல்ல மெல்ல கரைந்து கொண்டு இருந்தாள். தன் மாமனின் பிரத்யேகமான வாசனை அவனுக்கே அவனுக்கு உண்டான வாசனை அவளை மயக்கத்தில் ஆழ்த்தியது. தான் மட்டுமே உணரக்கூடிய தன் ஆணின் வாசனை அவளை கிறங்க வைத்தது.
முதலில் மருண்டவிழிகள் மெல்ல மெல்ல மருட்சி மறைந்து காதலில் சொக்கி விழி மூடி அவள் நிற்க பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு பித்தம் தலைக்கேற இதழில் அழுத்தத்தை கூட்டி சுவைக்க சில பல நிமிடங்கள் கழித்து அவள் மூச்சுக்கு தவிக்கவும் தான் அவளை விட்டு விலகினான்.
அவன் விலகவும் சட்டென்று மாயவலை அறுந்தார் போல முகம் வாடியது எழிலரசிக்கு . அது ஒரு நிமிடம் தான் மறுநிமிடம் நாணம் சூழ்ந்து கொள்ள திரும்பி நின்று கொண்டாள். அவளின் செயல் இவனுக்கு உல்லாசமாக இருந்தது.
தனஞ்ஜெயன் முகம் நிறைந்த புன்னகையுடன் வாக்கிங் சென்றுவிட , இவளுக்கு தான் மனம் ஒரு நிலைக்கு வர சற்று நேரமெடுத்தது.
அவனுக்கு பிடித்தமான உணவுகளாக காலை டிபனுக்கு செய்து கொண்டு இருந்தவளுக்கு ஒரே யோசனை தான் வாங்கி வந்த பரிசுகளை மாமனின் முகம் பார்த்து கொடுக்க வெட்கம் தடுக்க என்ன செய்வது என
ஒரு யோசனை தோன்ற அவனின் படுக்கையறைக்கு சென்று அவன் கண்ணில் படுமாறு படுக்கை மேலே எல்லாம் அழகாக வைத்துவிட்டு வந்து அமைதியாக வேலை செய்தாள்.
வாக்கிங் சென்றவனுக்கோ எதற்காக இன்று வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்ற சிந்தனை அவன் பிறந்தநாள் இன்று என அவனுக்கு தெரியும் அதை தான் அவன் பெரிது படுத்துவதில்லையே . அதனால் அவளிடம் சொல்லவுமில்லை. தன் சித்தப்பா மக்களோ இல்லை கருணாவோ சொல்லியிருக்க கூடும் என நினைத்து கொண்டான்.
வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்தவன் “பாட்டி காபி” என கேட்க
எழில் அவனுக்கு பிடித்த பில்டர் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு டேபிளில் வைத்து உள்ளே சென்றுவிட்டாள். கண்கள் அவளை ரசிக்க வாய் காபியை ருசிக்க என ஐந்து நிமிடம் குடிக்க வேண்டிய காபியை அரைமணி நேரம் குடித்தான்.
பிறகு குளிக்க தன்னறைக்கு சென்றான். சென்றதும் அவன் பார்த்தது அவள் அவனுக்காக வாங்கிய பரிசுகள் தான். அதை கையில் எடுத்தப் பார்த்தான். அதில் ஒரு லைட் பிஸ்தா கலரில் காட்டன் சட்டையும் டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட்டும் கூடவே ஒரு வெள்ளை வேட்டியும் ஒரு பாஸ்ட்டிராக் வாட்சும் இருந்தது.
“எழில்….எழில்… ஒரு நிமிஷம் மேல வா” என சத்தமாக கூப்பிட்டான் .
பாட்டி காய்கறி நறுக்க அவள் அடுப்பில் வேலை செய்து கொண்டு இருந்தாள். இவனின் சத்தத்தில் திடுக்கிட்டவள் அவனின் அறைக்கு எப்படி செல்வது பாட்டி வேற இருக்காங்க என தடுமாறினாள் .
பாட்டி “தம்பி கூப்பிடுது பாரு போய் என்னன்னு கேளு”
“நான் எப்படி பாட்டீ…..”
“போ சாமி எங்க ராசாவ பத்தி எங்களுக்கு தெரியாதா….”
தயங்கி தயங்கி மேலே சென்றாள். அவனின் அறை வாசலில் தயங்கி நிற்க இவளை பார்த்தவன்
“உள்ள வா… இதெல்லாம் என்ன” என கேட்க
உள்ளே வந்தவள் கதவருகிலேயே நின்று கொண்டு “அது வந்து.. அது.. உங்க பர்த்டேகு நான் வாங்கிய கிப்ட் “
“அது ஏன் இங்க வச்சிருக்க..”
அவனை பார்க்காமல் தரையை பார்த்தவாறே ” அது … எனக்கு.. உங்களுக்கு….”
“ம்ம்ம்ம்…. இது… உனக்கு….. எனக்கு…” அவளை போலவே பேசி காட்டி “கையில கொடுக்காம இங்க வைச்சிருக்க”
“அது … நான்… கொடுக்கத் தான் நினைச்சேன். ஆனா எப்படி நான்… ச்சு போங்க மாமா…”வெட்கம் தாளாமல் அவள் ஓடிவிட்டாள். இவளின் வெட்கத்தை பார்த்து சிரித்துவிட்டான்.
‘படபடன பட்டாசு மாறி பொறிவா இவளுக்கு வெட்கமா…வெட்கத்துலயும் அழகா தான் இருக்கா…’ நினைத்து கொண்டே குளிக்க சென்றான்.
ஒட்டாமல் பேசும் வாய்க்கு
அவன் தன் வாய் கொண்டு பூட்டிட
வெட்கம் எனும் திரை கொண்டு
தன்னை மூடி கொண்டவளுக்கு
திரை விலக்கி பூட்டை திறக்கும்
சாவியும் அவன் தான்
பூட்டும் அவனே சாவியும் அவனாகி
போனது தான் விந்தை காதலில் தான்
இம்மாதிரி விந்தைகள் அரங்கேறும் !
Super sis 💞
மிக நன்றி