ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 14&15 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா 

[14]

யௌவனா வீட்டின் நடுக்கூடத்தில் இருக்கும், சொகுசான ஒற்றை சோபாவில், தன் முள்ளந்தண்டு முதுகு கூனாமல், அமர்ந்து, 

கைகளில் புத்தகத்தை ஏந்திப் பிடித்திருப்பதைப் போல ‘ஐபேட்டினை’ ஏந்திப்பிடித்த வண்ணம்.. அசத்தலான வெள்ளை வேஷ்டி, சட்டையில்… 

பார்ப்பவர் கண்களை கவரும் வகையில்.. வெகு வெகு ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்தான் சத்யாதித்தன்.

அவன் அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்க்கும் பொழுதினிலே, ‘ராம்ராஜ’வேஷ்டிகள் விளம்பரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் போல.. அத்தனை நேர்த்தியாக இருந்தது சத்யாதித்தனின் ஒவ்வொரு அங்க அசைவுகளும். 

‘ஐபேட்டினை’ ஏந்திப் பிடித்திருந்த அவனது விரல் நகங்கள் அளவாக வெட்டப்பட்டு, ஒரு அப்பழுக்கில்லாத சுத்தமும் சரி, 

இங்கு அவளைத் தேடி வந்த போது.. அவன் வளர்த்திருந்த அடர்ந்த தாடியை சுத்தமாக மழித்து.. ‘க்ளீன் ஷேவ்’ கன்னங்களின் இறுக்கமும் சரி.. 

இன்னும் ஏன்.. முறுக்கிவிட்ட மீசையும் அடர்த்தியும் சரி.. 

 சத்யனின் அழகுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாகவே இருந்தது. 

என்ன தான் அவன்.. தன் மேல் ஊடல் கொண்டிருக்கும் யௌவன மனைவியைத் தேற்றுவதற்காக, தன்னிலையை விளக்கி.. அவள் மேல் இவன் வைத்திருக்கும் காதலை நிரூபிப்பதற்காக, கடல் கடந்து வந்திருந்த போதிலும் கூட, 

சத்யாதித்தன்.. தன்னுடைய வணிகத்தையும்.. கனகச்சிதமாக கவனித்துக் கொண்டு தானிருந்தான். 

மனையாள் மீதிருக்கும் காதல்… அவனை.. அவளிடம் ஒரு குழந்தை நிலைகுலையச் செய்தாலும் கூட, அவனது இதர விடயங்கள் அனைத்தையும்.. தன் மேற்பார்வையில் வைத்திருந்து.. அதனை நிலைகுலையச் செய்யும் சூத்திரதாரியாகவே இருந்தான் அவன். 

 

அவன் தன் ஆளுமையையும், செல்வாக்குப் பலத்தையும் காட்டாது..ஒரு டீன்ஏஜ் பையன் போல அவளை உசுப்பேற்றுவதும், சீண்டுவதும்..அந்த சீண்டல்களில் தன் காதலை உணர்த்த முயல்வதும் என எல்லாமே.. அவளிடம் மட்டும் தான். 

அவன் தன் அழுத்தமான காலடி எட்டுக்கள் எடுத்து வைத்த வண்ணம், ஒரு கையை வேஷ்டிப் பாக்கெட்டில் இட்டவாறு, அவனது ஆபிஸ் ரூமில் நடந்து வந்தானேயானால்..அந்த ஆளுமையில் மொத்த ஆபீஸூமே ஸ்தம்பித்து நிற்கும். 

அவனது கடைக்கண் பார்வைக்காக.. அவன் கீழ் பணிபுரியும் இளங்கன்னியர்களும் சரி, மாற்றான் மனைவிகளும் சரி தம் அறநெறிகளை மறந்து.. தவமாய் தவமிருக்க… 

இப்பேர்ப்பட்டவனையும் ஸ்தம்பிக்க வைக்கும் ஒரே பெண். அவனது மனைவி யௌவனத்தமிழ்ச் செல்வி. 

தில்லியில் இருக்கும் போது காலுறைகள் இன்றியோ, பாதணிகள் இன்றியோ தன்னில்லத்தில் நடமாடாதவன், யௌவனாவின் வீட்டிலோ… சகமனிதர்களைப் போல.. வெற்றுப் பாதங்களோடு நடமாடுவதுவும் அவனுக்குப் பிடித்திருந்தது. 

தரையின் குளிர்ச்சி உள்ளங்காலில் பதிந்து, உச்சந்தலைக்கு ஏறும் போது.. உடல் முழுவதும், விரவிப் பரவும் அந்த குளுகுளு உணர்வும் அவனுக்கு இலயிப்பைக் கொடுக்கவும் செய்தது. 

கண்டியின் ஒரு குக்கிராமமான தம்பதிவனத்தில் அமர்ந்து கொண்டே, தில்லியில் செய்து முடிக்க வேண்டிய கருமங்களை, தன் செயலாளார் “ஜனார்த்தனனுக்கு”, ஃபேஸ்டைம் மூலம்.. ‘காணொளி அழைப்பு’ எடுத்துத் திறம்படக் கூறிக் கொண்டிருந்தான் சத்யாதித்தன். 

தொழில்நுட்ப வசதி வளர்ந்து விட்ட இந்த காலம், யாருக்கு வசதியாக அமைந்ததோ இல்லையோ.. அவனுக்கு வசதியாகவே போயிற்று. 

அதனால் அல்லவோ.. ஊடல் கொண்டு.. தாய்வீடு வந்திருக்கும் அவனது தாரத்தையும், கடல் கடந்து அவன் கண் மறைவில் நடந்து கொண்டிருக்கும் வணிகத்தையும்.. அவனால் ஒருசேர கவனிக்க முடிகிறது.

ஜனார்த்தனனுக்கு ஆற்றி முடிக்க வேண்டிய கருமங்கள் தொடர்பில், சகலதையும் தெளிவுறுத்தி விட்டு, தன் காணொளி அழைப்பினை அவன் துண்டித்த போது.. வெகுநேரம் ஐபேட் திரையைப் பார்த்திருந்ததாலோ என்னவோ கண்கள் சொக்குவது போல தோற்றமயக்கம் எழுந்தது அவனுக்கு. 

கைமறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றிக் கொண்டே, கண்களைக் கசக்கியவாறே, இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, அவன் சோம்பல் முறித்தவாறே நிமிர்ந்த போது, 

எதிரே தான் திகட்டக் திகட்டக் காதலிக்கும் யௌவனப் பெண் நின்றிருப்பதைக் கண்டான் சத்யன். 

வீட்டுக்கு அணியும் சாதாரண சேலையாகவே இருப்பினும் கூட, தோல் சீவிய பப்பாளிப் பழம் போன்ற பளபளப்பான கைகளுடனும், சின்ன அளவான.. ஆனால் அவன் விழிகளை சொக்க வைக்கும் இடையுடனும், கழுத்தில் தங்கத் தாலி சங்கிலியுடனும் நின்றிருக்கும் மனைவி.. சத்யனின் கண்ணையும், கவனத்தையும், கருத்தையும் கவர்வதாகவே நின்றிருந்தாள். 

அதிலும் சேலையை மீறித் தெரிந்த அவளது முன்னழகுகளின் ஒரு பாதியழகை இரசிக்க விடாமல், அவள் தோள்களிலே உள்பாவாடையும், டவலும், இதர உடைகளும் தொங்கிக் கொண்டிருப்பதையும் சற்றே கண்கள் இடுங்கவே அவளைப் பார்த்திருந்தாம் சத்யாதித்தன். 

யௌவனாவோ… அது அவள் சத்யனை நாடி வந்த பயணமே அல்ல. 

மாறாக.. ‘வீடியோ கால்’ பேசுவதிலேயே பிஸியாக இருக்கும் தன்னவனைக் கண்டும், காணாதது போல தாண்டிச் செல்ல எத்தனித்த வேளை…

 அவளின் கொண்டான், தன் செயலாளருடன் பேசி முடித்ததும் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி… சோம்பல் முறித்ததும், 

முறுக்கேறித் தெரிந்த அவனது கைத்தசை நார்களின் வனப்பில் அவளையும் மீறி.. 

 விழிகள் பதித்தவளின் நடை.. அவன் எதிரிலேயே தடைப்பட்டு நின்று போயிற்று. 

யௌவனாவின் நயனங்களோ.. அவளையும் அறியாமல்.. கணவனின் வனப்பில் இமைகள் விரித்து.. கண்கள் அவனிலேயே நிலைக்குத்தி நிற்க.. இவளும் ருசி கண்ட பின் விரதம் காக்கும் சைவப்பூனையல்லவா?? 

அந்த கைகள்.. தன் சிற்றிடையை வலிமையாக சுற்றி வளைத்து ஆக்கிரமித்து, தன் பெண்மையை முழுவதுமாக சுவீகரித்துக் கொண்ட தருணங்கள் ஞாபகத்துக்கு வந்து போக, ஒரு கணம் படபடத்து அடங்கியது அவள் மனம். 

‘மீண்டும் அந்த தருணங்கள் கிட்டாதா?’ என்று பாழும் மனம் கிடந்து ஏங்க, ‘அத்தகைய இனிய தருணங்களை திரும்பவும் சுகிக்காமல்.. அவனை தவிக்க விடுவதுவும் நீ தானே பெண்ணே?’ என்று இடித்துரைக்கவும் செய்தது அது. 

ஆனால், ‘அவன் மட்டும் செய்தது ஞாயமாக்கும்??’ என்று வீம்புச்சண்டையும் முகிழ்த்தது மனதுக்குள். 

வெட்கமேயற்று.. அவனது கைச்சந்துகளின் வனப்பைப் பார்த்திருந்தது, அவனது பார்வையை நேருக்கு நேர் சந்தித்த கணம்.. அவனது விழிகளில் தெரிந்த குறும்புப் புன்னகை.. பறைசாற்ற, அவனது பார்வையின் வீரியம் தாளமாட்டாமல் அசடுவழியும் படி நிற்கவேண்டியதாகிப் போயிற்று அவளுக்கு. 

மேற்கொண்டு நில்லாமல்.. அவனைப் புறக்கணித்தவாறு, அவள் முன்னோக்கிச் செல்ல, அவளது புறமுதுகுக்குப் பின்னாடி கேட்டது கொண்டானின் வலிமையான குரல். 

அவளது நாடி, நரம்பெங்கும் பரவி.. இதயத்தின் ஆழம் வரை சென்று.. அவளது அங்க அசைவுகளைக் கட்டிப் போடச் செய்யும் அவன் குரல். 

அவன் குரலில் இரும்பு சக்தி ஏதேனும் இருக்கிறதோ?

இந்தளவுக்கு உறுதிமிக்கதாக இருக்கிறதே? என்று சந்தேகமும் கொண்டது அவள் மனம். 

அவனோ, அவளை நோக்கி“நில்லு..” என்ற ஒற்றை வார்த்தை தான் சொன்னான். 

யௌவனாவுக்கோ அந்த ஒற்றை வார்த்தையில்.. தன் மயிர்க்கூச்செறிந்து.. குத்திட்டு நிற்பது புரிய, அப்படியே விறைத்துப் போய் நின்றாள் அவள். 

ஆனால் தன் கொண்டானின் முகம் நோக்கி அவள் திரும்பவேயில்லை. 

அவள் தன்னைத் திரும்பிப் பாராமல் நிற்பது.. சத்யாதித்தனுக்கு ஒரு அவமரியாதையாகத் தோன்ற, சின்ன சீற்றமமும் அவனுள் கிளறிவிடப்படவே, அதே கடினமான குரல் மாறாமல், “எங்கே கெளம்பிட்ட..?”என்று கேட்டான் சத்யன். 

ஒருவேளை தன் மனைவி.. அவனைத் திரும்பிப் பார்த்திருப்பின்.. இந்த கோபம் அவனுள் நிலைத்திருந்திருக்காது. 

அவள் மதிமுகம் முன்னாடி.. அவன் கோபம் புஸ்வானமாகிப் போய், ஓர் மழலைப் போல மாறும் விந்தையை அவனும் அறிவான்.

யௌவனா அப்போதும் கணவனை நோக்கித் திரும்பாமலேயே பதில் சொல்ல நாடினாள் போலும். 

உண்மையில்.. அவனைப் பார்க்கப் பார்க்க.. அவன் விழிகளில் இருந்து வெளிவரும்.. ஒருவகையான காந்த சக்தி, அவளை கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கிறது. 

‘அந்த ஈர்ப்பில் ஊடல் மறந்துவிடுவோமோ?’ என்ற அச்சம் தான் இந்தப் புறமுதுக்கு காரணம். 

ஆயினும், ‘இல்லவேயில்லை.. அவன் மேல் அவள் கொண்டிருக்கும் ஊடல் தான் காரணம்’ என்று அறுதியிட்டுச் சொல்வாள் அந்த அழுத்தக்காரி. 

தனது சீற்றக்குரலை இழுத்துப் பிடித்துக் கொண்டவள், அழுத்தமான குரலில், “ந்நான் ப்பீலி வ்வரை ப்போயிட்டு வ்வந்துர்றேன்..”என்று மட்டும் சொன்னாள் அவள். 

யௌவனாவுக்கு வேண்டுமானால்.. அவன் முகத்தைப் பாராமல் பாராமுகம் காட்டி நிற்க முடியும். 

ஆனால் அவள் மேல் பித்துப் பிடிக்கும் வகையில் அன்பு கொண்டிருக்கும் அவனால் தான் அவ்வாறு இருக்கவும் முடியுமோ? 

தன் வெற்றுப் பாதங்களை தரையில் அழுத்தி நடந்தவனாக, அவள் முன்னே வந்து நின்றவன், மனையாளின் முகத்தை ஒரு சில கணங்கள் ஆசை தீரப் பார்த்தபடி நின்றிருந்தான். 

ஆனால் யௌவனாவோ.. அவனைத் தாண்டி விட்டத்தை வெறித்தும் பார்த்தாளே, ஒழிய, அந்தக் காதலன் முகம் பார்க்க நாடவேயில்லை. கல்நெஞ்சுக்காரி!! 

மனைவி முன்னிலையில்.. வேண்டுமென்று வரவழைக்கப்பட்ட கடிய குரலில், “பீலியா?.. அது எங்கே இருக்கு? எந்த ஊரு அது? பக்கத்து ஊரா என்ன?”என்று, மெய்யாலுமே ‘பீலி’பற்றி அறியாதவனாகக் கேட்டான் சத்யன் . 

அவன் கேட்ட தினுசில்.. தன் ஊடல் கூட மறந்து.. உள்ளுக்குள் குபீர் சிரிப்பு பொங்கியது அவளுக்கு.

இலங்கை தான் அவனின் பூர்வீகமாக இருந்த போதிலும், இலங்கையில் பிறந்து வளர்ந்திராததால்.. சிங்களவர்களின் பதப்பிரயோகத்தையும், அது இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து போயிருப்பதையும்.. சத்யாதித்ததன் அறிந்திராமல் போனான். 

இருந்தாலும் வெடுக்கென முகத்தைத் திருப்பி, கணவனை வெறித்தவள், அதே தெனாவட்டான குரலில், “பீலின்னா குட்டி நீர்வீழ்ச்சின்னு அர்த்தம்..ஊர் கிடையாது!! சம்ஜா?? ”என்று அவனுடன் இருந்த காலப்பகுதியில் கற்றுக் கொண்ட கொஞ்சம் தெரிந்த ஹிந்தியிலேயே பிகு பண்ணினாள் அவளும். 

 மனைவி விளக்கம் சொன்ன கணம்.. வளைந்தாடிய சிவந்த இதழ்களையே இரசித்துப் பார்த்திருந்தான் சத்யாதித்தன். 

அவள் திமிரிலும் கூட ஓர் அழகு இருப்பதைக் கண்டான் அவன்.

இதைத்தான் வைரமுத்துவும், “அழகிகளுக்கு எல்லாம் திமிர் அதிகம்.. அழகியின் திமிரில் ருசி அதிகம்”என்று உணர்ந்தே தான் சொல்லி வைத்தாரோ?? 

 இருந்தாலும் அந்த திமிர்ப் பிடித்த நயனங்களால்.. அவனை அன்பாக ஓர் அற்பப் பார்வையாவது பார்க்கக் கூடாதா?இந்த இராட்சசி.. என்றிருந்தது அவனுக்கு. 

தன் எண்ணங்களின் போக்கை சட்டென மாற்றிக் கொண்டவன், மனைவியின் தோளில் தொங்கும் ஆடைகள் மற்றும் அவள் தோரணைப் பார்க்கும் போது அவள் சொன்ன, “பீலி” என்னும் குட்டிநீர்வீழ்ச்சியில்.. குளிக்க செல்வது ஊர்ஜிதமாகி விட, 

தன் இளகிய தன்மையை காட்டாமல், விறைப்புப் பேர்வழி போல முகத்தை வைத்துக் கொண்டு, தன் முதுகுக்குப் பின்னே கைகளைக் கட்டிக் கொண்டவன், 

இராஜதோரணையுடன், “ஏன் பீலி வரை போகணும்?.. அதான் இங்கே பாத்ரூம்லயே குளிச்சிக்கலாமே..?”என்று கேட்டான் சத்யன். 

தன்னை எதிர்க்கேள்வி கேட்கும் சத்யன் மேல் சுள்ளென்று கோபம் போக, செர்ரிப் பழம் போல சிவந்த, புது இரத்தம் பாய்ந்த கன்னங்களுடன், 

“எப்போவுமே நாலு சுவத்துக்குள்ளேயே குளிச்சிட்டிருக்கக் கூடாது. கொஞ்சம் காத்தாட ஆத்துலயோ, குளத்துலயோ இல்ல கடல்லயோ குளிக்கணும்.. அப்போ தான் உடம்புக்கு ஒட்டும்.. நாலு சுவத்துக்குள்ள ஒரு தண்ணித் தொட்டிக்கட்டி.. அதுக்குள்ள தண்ணியை நிரப்பி.. அதுல குளிக்குறவுங்களுக்கு எங்கே.. இந்த இயற்கை தண்ணியோட சுகம் தெரியப் போவுது?? அப்பப்போ.. குளம், ஆறு கடல்னு குளிச்சிருந்தா தானே தெரியும்?” என்று எகத்தாளமாகவே அவன் ‘இயற்கையின் சுகம் அறியாத பட்டிணத்தான்’ என்று குத்திக் காட்டிச் சொன்னாள் அவள். 

‘நாலு சுவத்துக்குள்ள ஒரு தண்ணீர்த்தொட்டி கட்டி.. அதுக்குள்ள தண்ணியை நிரப்பி..’ என்று மனைவி சொன்னது தன் வீட்டில் இருக்கும் ‘இன்டோர் ஸ்விம்மிங்க்பூலை’ என்பது புரிந்தாலும், நீச்சல் தடாகத்துக்கு அவள் கொடுத்த வரைவிலக்கணம் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது இராஜசிங்கனுக்கு. 

அவனா ஆறு, கடல், குளத்தில் குளித்தது கிடையாது?? 

இவளாவது உள்ளூர் நீர்நிலைகளைத் தாண்டி.. வேற்றுத் தண்ணீர் பார்த்திருக்காமல் இருந்திருக்கக் கூடும்? 

ஆனால் சத்யாதித்தன்..? 

அவன் ஒவ்வொரு கோடைகால விடுமுறைக்கும் நீந்துவது.. சர்பிங் செல்வது கூட சுறாக்கள் நிறைந்த அவுஸ்திரேலிய கடற்கரை பகுதியில் என்பதை இவளறிந்தால்?? 

சீனாவில் ‘மஞ்சள் நதி’ என்னும் ஹூவாங்கோ நதியின் வெள்ளப்பெருக்கைப் பார்க்கவே, அந்தப் பருவத்தில் ‘சீசன் டிக்கெட்’ வாங்கி சீனாவுக்கு பறப்பவன் என்பதையும் தான் அவள் அறிந்தாள்?? 

இன்னும் ஏன்..? ஒவ்வொரு விடுமுறைக்கும்.. வேடந்தாங்கல் பறவை போல கண்டம் விட்டு கண்டம் பறப்பவன்.. தேடியலைவது நீர்நிலைகளைத் தேடித் தான் என்பதையும் அவள் அறிந்தாள்?? 

மொத்த வாழ்க்கையையும் இவள் சத்யாதித்தனோடு தானே வாழப் போகிறாள்?? அவனோடு அவளும் வரக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் போது.. அவன் வாய்திறந்து சொல்லாமலேயே.. அவளது எண்ணம் மாறட்டும் என்று எண்ணிக் கொண்டவன்.. அதைப்பற்றி மூச்சு கூட விட நாடவில்லை. 

மனைவி தன்னை குறைத்து மதிப்பீடு செய்வது..செய்வதாகவே இருக்கட்டும் என்றே எண்ணியவனுக்கு, 

அவள் சொல்வது போல ஒன்றுமே தெரியாதவனாக அவளிடம் காட்டிக் கொள்வதனாலும் கூட.. சில, பல நன்மைகள் விளையலாம் என்பது அவன் எண்ணம். 

அவளை உற்றுக் கவனித்தவனாக, உறுதியான தொனியில், “சரி.. அப்போ நானும் உன் கூட வரேன்..”என்று அவன் சொல்ல, அவன் வருகையை துளியும் விருப்பப்படாதவளோ, 

“நீ.. நீயெதுக்கு?”என்று படபடப்பாக கேட்க, அவளது பதற்றத்தை வேடிக்கைப் பார்த்ததவனாக, தன் கேலிப்புன்னகையை மறைத்துக் கொண்டான் சத்யன். 

கனவில் என்ன தான் கருத்தொருமித்த தம்பதியர்களாக வாழ்ந்த போதிலும், நனவில்.. எதிரும், புதிருமான தம்பதியர்களாக இருப்பதுவும்.. இந்த சீண்டலும், படபடப்பும் கூட மகிழ்ச்சியையே கொடுத்தது. 

“ நீ தான் ஆத்துல, குளத்துலன்னு இயற்கை நீர்நிலையில் குளிக்கணும்னு இப்போ தானே சொன்ன? அதுக்குள்ள மறந்துட்டியா என்ன? எனக்கும் தண்ணீர்த்தொட்டியில குளிச்சு குளிச்சு போரடிச்சுப் போச்சு.. அதான்!! அதுவுமில்லாமல்.. வாசுகி அக்கா வீட்டு கல்யாணத்துக்கு கிளம்பிப் போன.. உங்கண்ணா.. ‘தங்கச்சி… கூடவே இருந்து பார்த்துக்குங்க மாப்பிள்ளை’ன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போனாருல்ல? அதான் பாதுகாப்புக்கும் சேர்த்து வர.. நான் முடிவு பண்ணிட்டேன்”என்று அவன் சொல்லி விட, கணவன் தன்னுடன் வருவதை பிரியப்படவேயில்லை அவள். 

ஆம், சத்யாதித்தன் சொன்னது உண்மை தான். 

இன்று காலை.. வேல்பாண்டியும், வாசுகி அண்ணியும்.. ஒரு திருமண வீட்டு விசேஷத்துக்கு சென்றிருக்க, செல்லும் முன்னர்.. இவள் காதுபடவே, ‘தங்கச்சி கூடவே இருந்து பார்த்துக்குங்க மாப்பிள்ளை’என்று சொன்னது எல்லாம் உண்மையே தான். 

அதையே தான் மீள வலியுறுத்திச் சொன்னான் அவன். 

அதிலும் யாருமில்லாமல் இருவர் மட்டும் என கிடைத்த தனிமையை.. எப்படியாவது இனிமையாக மாற்றிக் கொள்ளும் திருட்டு எண்ணம் அவனுக்கு. 

தன் சுதந்திரத்தில் இடையிடும் அவனிடம் சினம் கொண்டவள், காற்றில் கைகளை அழுத்திப் பிழிந்தவளாக, “ உன்னையெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது!! நீ ஏன் வர்ற?நீயில்லாம இத்தனை வருஷமா தனியா தானே போயிருக்கேன்.. இப்போ மட்டும் என்ன? புதுசா?? பாதுகாப்பு அது, இதுன்னுக்கிட்டு?”என்று சிடுசிடுத்தாள் அவள். 

அவனோ எமகாதகன். அதற்கும் அசத்தலான பதில் வைத்திருந்தான். 

என் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்பது போன்ற குரலில், “அது அப்போ.. நீ.. வ்வெறும் யௌவனத்தமிழ்ச்செல்வி.. இப்போ நீ திருமதி. சத்யாதித்த இராஜசிங்கன்.. உன் பாதுகாப்பு.. கணவனான எனக்கு முக்கியம்.. உன் கூட நானும் வர்றதுன்னா.. வா.. ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.. இல்லைன்னா நீயும் போக முடியாது..” என்று விட,

தன் கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யௌவனா. 

அவனுடைய அமர்த்தலான மற்றும் தீவிரக் குரல்.. அவனது ‘முடிவு தான் இறுதியானது’ என்பதை உணர்த்த, நெற்றியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டவளைக் கண்டு, இவனுக்கோ, ‘தன்மேல் இத்தனை வெறுப்பா இவளுக்கு’ என்று உள்ளே மனம் கசக்கவும் செய்தது. . 

மனம் வாடிப் போனவனாக உள்ளுக்குள் நின்றிருந்தாலும் கூட.. வெளிக்கு அதைக்காட்டாமல்.. அவளையே பார்த்திருந்தான் அவன்.

யௌவனாவோ…’அப்படியொரு குளியல் தனக்குத் தேவையில்லை’ என்று சென்றிருக்க முடியும். இருப்பினும் பீலியில் குளித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தவள், இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.. கணவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல், முன்னாடி வாசல்பக்கம் தாண்டி நடந்தாள்.

அவனுடைய மனைவியின் மௌனக் கோபமாக இருந்தாலும் கூட, ‘மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி’ என்று அவள் வாய்விட்டு சொல்லாமலேயே புரிந்து விட.. அவளது மௌனக்கோபத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டவன்,

ஆத்திரத்தில் செல்லும் மனைவியின் பின்னழகு அபரிமிதமாக ஆடி ஆசையுமாற்றை, உரிமை மீதூற இமைக்காமல் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் அவன். 

இந்த ஊருக்கு முதன்முறையாக வேல்பாண்டியாலும், அவனது கையாளாலும், ‘பஞ்சாயத்துக்காக’அழைத்து வரப்பட்ட போது.. 

இந்த ஊர் எல்லையில்.. இரு பக்கமும் காடுகள் அடர்ந்த ஒரு இயற்கை செழுமை மிகுந்த பாதையில்.. வேல்பாண்டியும், அவன் கையாளும், ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு, ‘பிஸ் அடிக்க’ சென்ற ஞாபகம் சிந்தையில் வந்து போனது. 

அந்த கணம், தண்ணீர் உயரத்தில் இருந்து பாய்ந்து விழும் சப்தம் கேட்க, இவனும் அந்தக் கையாளிடம், “தண்ணி சப்தம் வருது? வோட்டர்ஃபோல்ஸ் ஏதாச்சும் இருக்கா என்ன?”என்று கேட்க, 

ஆங்கிலப்பயன்பாட்டுப் பெயர்கள் சரிவர அறியாத அந்தக் கையாளும், அவனது கேள்வியை சரிவர உள்வாங்காமல், “அது பீலிங்க” என்ற வண்ணம் வண்டியை எடுத்த ஞாபகமும் வந்து போனது. 

அன்று அந்தக் கையாள் சொன்னது சத்யனுக்கு அவ்வளவாக புரியவில்லையாயினும் கூட, இன்று அந்த ‘பீலிக்கான’ அர்த்தம் புரிந்தது. 

அப்படியானால் அவள் சொன்ன பீலி.. அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டவன், பீலிக்கு செல்ல நடைபயணம் ஒத்துவராது. ஏதாவது வாகனங்கள் இருந்தால் தான் தோதுப்படும் என்று தோன்றியது. 

அடுத்த நொடி.. வேல்பாண்டியின் ‘ஜீப்’ சிந்தனைக்கு வந்து போக, வேல்பாண்டியின் ஜீப் தான் சரிவரும் என்று தோன்ற, நேரே வீட்டுக்குள் சென்று ஜீப் சாவியையும், தன் கேமராவையும் எடுத்துக் கொண்டவன்.. 

ஷெட்டிற்குச் சென்று.. ஜீப்பை எடுத்து வந்தவன், அவன் வருகைக்காக வீட்டு முற்றத்தோரம்.. மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிய வண்ணம் பழைய கோபம் மாறாமல் நிற்கும் மனைவியின் முன்பாக நிறுத்தி,

கட்டளையிடும் தொனியில், “ஏறு” என்று பணிக்க, அதற்கும் கூட சுரீரென்று கோபம் போனது அவளுக்கு. 

அவனைப் பார்த்து ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவள், முகத்தில் பாயும் குரலில், “நான் ஒண்ணும் உன் வீட்டு வேலைக்காரி இல்லை.. நீ ஏவுறு குரல்ல சொன்னதும் அடிபணியுறதுக்கு.. நான் உன் பொண்டாட்டி. திருமதி. சத்யாதித்த இராஜசிங்கன்.. ஆஸ்க் நைஸ்லி வாட் யூ வோன்ட்.. பட் டோன்ட் டிமான்ட் இட்..”என்றவுடன் தான் தாமதம். 

தன் விறைப்பு முகம் மறந்து.. பட்டென தன் முத்துமூரல்களை அழகாக காட்டிய வண்ணம்.. நகைத்தானே ஓர் புன்னகை!! 

கோபம் கொண்ட ஆண்களின் முகத்தில் சட்டென்று தோன்றும் புன்னகை அழகோ அழகு!! 

மெல்ல தலைகுனித்துக் கொண்டவன், புருவங்கள் நீவி விடுவது போல தன் புன்னகையை மறைக்கவும் செய்தது இன்னும் அழகு!!

 அவளது கோபம் சத்யாதித்தனை ஒரு துளியும் கோபமூட்டச் செய்யவில்லை. 

மாற்றமாக, ‘நான் உன் பொண்டாட்டி. திருமதி. சத்யாதித்த இராஜசிங்கன்..’ என்றதிலேயே மனம் குஷியாக வட்டமிட, அவளைப் பார்த்து தன் விறைக்கும் குணத்தை மறந்து, 

அவளைக் கையெடுத்துக் கும்பிட்டவன், புன்னகையுடன், “அம்மா பொண்டாட்டி.. ப்ளீஸ் வண்டியில வந்து ஏறுறீங்களா? நாம கெளம்பலாம்?”என்று சொல்ல, 

அது அவனது போலி பாவமாக இருந்தாலும் கூட, அவளுக்கு அது இதத்தைக் கொடுக்கவே, கண்களாலேயே, ‘அது’ என்பது போல ஒரு சலித்துக் கொள்ளும் பார்வை பார்த்தவளாக வண்டியில் ஏறி அமர்ந்தாள். 

சத்யாதித்தனின் ‘ஸ்மூத் டிரைவிங்’குடன் ஆரம்பமானது பீலியை நோக்கிய அழகான பயணம். 

அதிலும் அவள் அவனுடன் ஒற்றை வார்த்தை கூட உரையாடாது அமைதியாக வந்தாலும் கூட, வழிநெடுகிலும் அவளது சிந்தையை நிறைத்திருந்தது என்னமோ அவன். 

‘பீலி’என்றால் என்ன என்று தெரியாத அவளுடைய தலைவன், பீலிக்கு செல்ல நடைபவனியாக வராமல், ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்தது.. அவனது சாமர்த்தியத்தை பட்டும் படாமல் உணர்த்த, உள்ளுக்குள் தன்னவனை மெச்சிக் கொள்ளவும் செய்தாள் யௌவனா. 

கனவில் காதலித்த அவன் மனைவி.. நனவிலும் அவனுடன் அருகாமையில் உடன் வர ஓர் பயணம். அவள் பக்கம் பார்வையை திருப்பாதது போலவே பாவ்லா காட்டிக் கொண்டு வந்தான் அவன். 

இருவரும் ஒருவர் புறம் ஒருவர் திரும்பாமலேயே… தத்தம் இணைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டே வரலாயினர். 

ஆனால் யௌவனாவுக்கோ.. கணவன் சிரித்து வைத்த சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மட்டுப்பட்டிருக்க, பக்கத்தில் அமர்ந்திருப்பவனின் பிரத்தியேக நறுமணம் வேறு நாசியை நிரட.. மெல்ல அவனைக் கடைக்கண்ணால் பார்த்தாள் கள்ளி. 

அவளது கண்களுக்கு காட்சியில் விரிந்தது அவனது நீண்ட கைகள்.

ஸ்டியரிங் வீலில் பதிந்திருந்த வாளிப்பான கைகளின் வன்மையில்.. ‘இவன் என் புருஷன்’ என்று ஒரு கர்வம் வந்து போனது என்னமோ உண்மை. 

வெள்ளை வேஷ்டி சட்டையில், நெற்றிமத்தியில் சின்னதாக குங்குமக் கீற்றுடன், சைச்சந்தில் காப்புப்பட்டயத்துடன் வரும் கணவனின் கம்பீரம் அவளை ஆட்டுவித்தது. 

ஊடல் மறந்து போனவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க, அந்த பத்து நிமிட நேரப் பயணம்.. அவளுக்குள் புயலடிக்க வைத்த பயணம். 

இருபுறத்திலும் மலைக்காடுகள் அடர்ந்து வளர்ந்திருக்க, வளைந்து, நெளிந்து ஒரு பெரிய மலைப்பாம்பு போல செல்லும் , மலைப்பாதைகளின் ஊடே, வளைவு சுழிவாகச் சென்ற ஒரு பயணம். 

சரியாக பீலிக்கான இடம் வந்ததும், அவள் நிறுத்தச் சொல்லாமலேயே.. பீலியின் காட்டுவழிப் பாதையில் அவன் வண்டியைத் தரிக்க, கணவனை ஆச்சரியக் கண்களூறப் பார்த்தவள், “இங்கே தான் பீலி இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?”என்று கேட்டாள். 

ஜீப்பிலிருந்து லாவகமாக குதித்து இறங்கியவன், தன் சட்டையின் மடிப்புக்களை இழுத்து விட்டவன், உடனடியாக அவளுக்கு பதிலேதும் சொல்லிவிடவில்லை. 

மனைவி தன் முகத்தையே பார்த்திருப்பது புரிய, அவளுக்கு புறமுதுகிட்டு நின்று தன் பிடரி மயிரில் இரு கரங்கள் கோர்த்து, அதன் திண்மை இன்னும் முறுக்கித் தெரியக் காட்டியவனாக,

 “அதான் உன் அண்ணனும், அவர் அடியாளும்.. பஞ்சாயத்துக்காக.. என்னை குண்டுகட்டா தூக்கிட்டு வந்தப்போ… பிஸ் அடிக்க இங்கே தானே நிறுத்தினாங்க.. அதை சுத்தமா.. மறந்துட்டீயா?”என்று கேட்க, 

அவளுக்கோ சட்டென்று சிந்தையில் ‘பஞ்சாயத்து நாளின் தாக்கம்’ வந்து போனது. 

அந்தப் பஞ்சாயத்தையும் கூட, ‘அது தருவேன்.. இது தருவேன்’என்று ஆசைகாட்டி மயக்கியதும் ஞாபகம் வர, “அதெப்படி மறக்க முடியும்?என் தலைவிதியையே தீர்மானிச்ச நாள் இல்லையா அது? ” என்று சளைத்துப்போன குரலில் சொன்னவளாக, அந்த குளிர்மை நிறைந்த காட்டுவழிப்பாதையில் விடுவிடுவென்று முன்னேறி நடந்தாள் அவள். 

மனைவியின் முகம் சளைப்பைக் காட்டியதை அறியாதவன், காட்டுக்குள் சருகுகள் மிதிபடும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கே காணக் கிடைத்தது தன் பின்னழகு ஆட ஆட செல்லும் மனைவி. 

இதுகாறும் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவளைப்பற்றி அறியக்கிடைத்ததில்… கனவில் வந்த யௌவனாவுக்கும், நனவில் அவனுடன் வாழும் யௌவனாவுக்கும் பல வேற்றுமைகள் இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது. 

அதில் முக்கியமான ஒன்று.. அவனது மனைவி, அவனை ‘நீ’ என்று ஒருமையில் அழைத்தால், அவள் இன்னும் தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்றும், ‘நீங்கள்’ என்று மரியாதைப் பன்மையில் அழைத்தால் அவளுள்இருக்கும் மென்மை, அவனுக்கான கிளர்ந்தெழுகிறது என்றும் ஆகும்.

ஆனால் இந்த மாறுபாடான அழைப்புக்கு காரணம்.. நந்தினி என்னும் மாயப்பிசாசின் செயல் தான் என்பதை அவன் முன்கூட்டியே அறியாமல் போனது அவனது துரதிர்ஷ்டம் 

நடக்க நடக்க.. தூரத்தில் கேட்ட தண்ணீர் விழும் சத்தம்.. வர வர பேரிரைச்சலாக மாறி.. வெகுவெகு அருகாமையில் கேட்டுக் கொண்டிருந்தது. 

மனைவியின் அடிகளையொற்றி நடந்து கொண்டிருந்தவனின் கண்கள்.. அவளது எடுப்பான பின்னழகை விட்டும் இம்மியளவும் நகராமல் போக, அவற்றைப் பார்த்து ஏக்கக் கண்களுடன் எச்சில் விழுங்கிக் கொண்டே நகர்ந்தான் அவன். 

கணவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதை அறிந்தாலோ, அந்த யௌவன மங்கையும்?? 

 சட்டென அவள் எதிர்பாராமல் திரும்ப..அவளோடு ஒட்டி வந்து கொண்டிருந்த சத்யனின் பரந்து விரிந்த மார்புடன்.. பட்டென்று மோதி நின்றது அவள் பெண்மைக்கலசங்கள்;அவனுடைய இதழ்கள் இடித்தது அவள் நெற்றியை. 

ஏறத்தாழ அது.. அவன் எச்சில் அவளில் பதிந்த ஓர் ஈர முத்தம் போல. 

அவளது பஞ்சன்ன தேகம் தந்த கிறக்கத்தில் அவன் நிற்க, இவளோ சினத்தில் அவனைச் சுட்டெரிப்பது போல நோக்கினாலும், அவனது உஷ்ணமூச்சுக்காற்று அவள் மேனியில் மோதிய தினுசில் நா திக்கவாரம்பித்தது. 

 “நீயெதுக்கு இங்கேயும் வர??.. நீ அங்கேயே நில்லு.. நான் போய் குளிச்சிட்டு வரேன்..”என்று கணவனை ஒரு காவல்க்காரனாகக் கொண்டாளோ அவளும்? 

அவனா அதை ஆமோதிப்பான்?? 

அவளோடு இன்னும் ஒட்டி நின்றவன், தன் முகம் குனித்து அவள் விழிகளை தின்பது போல் பார்த்தவனாக, 

“ம்ஹூஹூம் முடியாது.. நான் அங்கே உனக்காக காவல் காத்து நிற்க.. இங்கே உனக்கு ஏதாவது ஆச்சுன்னா?? என்னால் அது மட்டும் முடியாது.. நான் உன் கண்பார்வை மட்டத்தில் தான் இருப்பேன்.. அப்படி இருக்க சம்மதம்னா குளி.. இல்லை வா வீட்டுக்குப் போயிடலாம். ”என்று மறுத்துவிட.. இரும்புக்குரலுக்கு மறுத்துப் பேச முடியவில்லையாயினும் தயங்கியது உள்ளம். 

அவளுக்கோ அவள் குளிக்கும் இடத்தில் அவனை வர விடுவது உள்ளுக்குள் ஏதோ மனமுரண்டலைக் கொடுத்தது. “முடியாது.. நீ.. நீ.. தப்புத் தப்பா நடந்துக்க ட்ரை பண்ணுவ..”என்று அவள் தயங்கித் தயங்கி சொல்ல, 

அவளது ரோதனை தாளமாட்டாமல் மீண்டும் ஒருமுறைக் கையெடுத்துக் கும்பிட்டவன், “அம்மா பொண்டாட்டி.. நான் உன் பக்கமே வரலை.. நானும், என் கேமராவும்.. என் பாட்டுக்கு வீடியோ எடுத்துட்டு இருக்கோம்.. நீ உன் பாட்டுக்கு குளிச்சி முடிச்சிட்டு.. சிக்னல் கொடு… வர்றேன்.. போதுமா?? ”என்றவன்.. அவளுக்கு புறமுதுகிட்டவனாக, 

முணுமுணுக்கும் குரலில், “பேசாம கனவிலேயே வாழ்ந்திருக்கலாம் போல இருக்கு.. இந்நேரம் மூணு குழந்தைக்கு இவளை அம்மாவாக்கியிருப்பேன்.. நிஜத்திலேயும் இவளை தேடி வந்து நான் பட்ற பாடு.. ஸப்பா.. முடியல’ என்றவனாக தன் வீடியோ கேமராவை ஆன் செய்தவனாக சுற்றுச்சூழலை படம் பிடிக்கச் சென்றான் அவன். 

அவனது தெளிவான முணுமுணுப்பு அவள் காதுகளில் விழுந்து விட, அதைக்கேட்டு சின்ன சிரிப்பும் வந்து போனது அவளுக்கு. 

வாய் விட்டு அவள் கிளுக்கிச் சிரிக்க, அந்தச் சின்ன சத்தத்தில் பட்டென அவன் அவளைத் திரும்பிப் பார்த்து, மேலிருந்து கீழ்வரை ஆராய, இவள் மீண்டும் கடுப்புப் பேர்வழி போல முகத்தை வைத்துக் கொண்டு, 

ஒற்றைப் புருவம் மாத்திரம் உயர்த்தி, ‘என்ன?’ என்பது போல சைகை மொழியில் கேட்கலானாள் அவள்.

அவனோ உடனடியாக, ‘எதுவும் இல்லை’ என்பது போல மறுப்பாகத் தலையாட்டினாலும்.. அவளே அறியாமல் கேமரா லென்ஸைத் திருப்பி.. மனைவியை படம் பிடித்துக் கொண்டே தான் அங்கிருந்து நகர்ந்தான் அவன். 

அவளோ மெல்லமாக பீலியை நாடிப் போனாள். 

இயற்கையின் எதுவுமே அழகு. 

அந்தப் பாறாங்கற்களுக்கு இடையில்.. எந்தக் கல்லின் நுண்துளையில் இருந்து நீர் வழிகிறது என்று புரியாதளவுக்கு, சீறிப்பாய்ந்து.. நிலத்தை வெள்ளமாக்கி.. ஓடிக் கொண்டிருந்தது தம்பதிவனத்தின் பீலி!! 

கொட்டுவது பாலா? நீரா? இல்லை நீரென்னும் அமுதா? என்று ஐயுறத்தக்களவுக்கு, ஆக்ரோஷத்துடன் தெறித்து ஓடிக் கொண்டிருந்தது தண்ணீர். 

 சுற்றி எங்கிலும் காட்டுச்செடிகளும், நானாவித மரங்களும் வளர்ந்திருக்க, இடம்மெங்கிலும் பசுமை. 

மனித சஞ்சாரமேயற்ற தனிமையுடன் இணைந்த சுதந்திரம்!! 

அங்கே அவளது உயரத்தைத் தாண்டி அடர்ந்து வளர்ந்திருக்கும் பசுமையான புதர்மறைவில் சென்று குளிப்பதற்கான உடுத்தாடை மாற்றியவள், கரண்டைக்கால் அளவு வரை இருந்த ஜில்லென்ற தண்ணீரில் இறங்கிச் சென்று.. தண்ணீர் கொட்டும் மையத்தில் போய் நின்று கொண்டாள். 

மேனியெங்கும் நனைத்த நீரின் குளிர்மையில்.. உள்ளமும் குளிர்ந்து போக, கண்கள் மூடி நின்றவளுக்கு சுற்றமும் தான் மறந்து போனது. 

கணவனும், தென்றலும் மட்டும் தீண்டிய இடத்தைத் தீண்டிய பெருமையை அடைந்ததாலோ என்னவோ, சந்தோஷ இரைச்சலுடன் பள்ளம் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது பீலித் தண்ணீர். 

இவனோ தன் கேமராவை எடுத்துக் கொண்டு, அருகாமையில் அவன் மனம் மயக்கும் சுந்தரி இருந்தும், ‘சாமிக்கு மாலை போட்டவன்’ போல இன்னும் பிரம்மச்சரியம் காக்க வேண்டிய நிலைமையை நொந்து கொண்டே இருந்த வேளை, கடவுளாகவே பார்த்து வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது தான் அற்புதம். 

தம்பதிவனத்தின் குளிர்வலய காட்டின் அழகினை வீடியோ செய்து கொண்டே அவன் நின்றிருந்த வேளை, 

திடீரென்று அவள் கத்தும் சத்தம் கேட்க, அந்த சத்தத்தில் உடலில் நாடி, நரம்பெங்குமெ ஓர் அச்சம் எழுந்து பரவ, தன் சொல்லினை மறந்து அவளை நாடி விரைந்தான் சத்யாதித்தன்.

மனைவி நீர் கொட்டும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் கரையோரம் எதையோ ஒன்றைப் பார்த்தவளாக விதிர் விதிர்த்து நிற்பது புரிய, 

மனைவிக்கு என்னானதோ? ஏதானதோ? என்ற அச்சம் இன்னும் இன்னும் அதிகமானது. 

ஓரெட்டில் நீரில் கால் பதித்தவன் அவளை நாடிப்போய், அவளோடு தண்ணீரில் நின்று கொண்டு, “என்னாச்சி..?”என்று அவள் பதற்றத்தை இவனும் கடன்வாங்கியவனாகக் கேட்க இவளுக்கோ பேச கூட நா எழவில்லை. 

நாவு போய் மேல் அன்னத்துடன் ஒட்டிக் கொண்டது போல, கணவனின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவள், உடல் வெடவெடத்து நடுங்க.. அவனோடு இன்னும் இன்னும் என்பது போல ஒட்டி நிற்கலானாள் அச்சத்தில். 

நீரின் கரையோரம் இரண்டடி நீளத்தில்.. தரையில் வளைந்து, நெளிந்து ஊர்ந்து செல்லும் சின்ன சர்ப்பத்தைச் சுட்டிக் காட்டியவள், 

நாவு திக்கித் திணற, “பா.. பா.. பாம்பு” என்று அவள் குரல் அவளுக்கே கேட்காதது போல அவள் சொல்ல,ஒரு சின்ன பாம்பு கரையோரம் ஊர்ந்து செல்வதைப் பார்த்து மனைவி ஐயுற்றதைக் கண்டு…. சிரிப்பு வந்தது இவனுக்கு.

அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருந்தவனுக்கு, அவள் நடுக்கம் இன்னும் கூட தெள்ளத் தெளிவாக புரிந்தது. 

அவளைத் தன் அணைப்பிலிருந்தும் உதறி விட நாடாதவன், அவளோடு இன்னும் ஒன்றியவனாக, குறும்புக் கொத்தளிக்கும் குரலில், “நீ கிராமத்துல வளர்ந்தவ தானே.. பாம்பைப் பார்த்ததும் சிட்டி பொண்ணு மாதிரி பயப்பட்ற?”என்று அவன் கேட்க, இன்னும் அந்த நடுக்கம் மாறாமலேயே, நின்றிருந்தாள் பாவம் யௌவனா. 

அவளது நடுக்கத்துக்கும் மேலதிகமாக, தண்ணீரில் நனைந்த அவள் தேகத்தின் குளிர்மை.. அவளை ஏடாகூடமாக அணைத்திருந்தவாற்றில், அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக.. உடலுக்குள் நாடி, நரம்புகளை எல்லாம் குத்திட்டு நிற்க வைக்கலானது. 

அவளது மூச்சுக்காற்று.. அவன் கழுத்துவளைவில் பட்டுத்தெறித்து ஏதோ செய்ய, அவன் கைகள் அப்போது தான் அவளது பிருட்டத்தைத் தழுவி நிற்பதையே உணர்ந்தது. 

கணவன் மெல்ல மெல்ல உணர்ச்சியின் வசம் ஆட்படுவது அறியாத யௌவனாவோ, சிறு குழந்தைகள் போல, “அ.. அது எனக்கு பாம்புன்னா.. பயம்..சின்ன வயசுலயிருந்து..இ..இது கட்டுவிரியன் வேற.. கடிச்சா அம்புட்டு தான்.”என்று தங்களைக் கடந்து சென்ற பாம்பைப் பார்த்துச் சொல்லி விட்டுத் திரும்பியவளின் பார்வை.. அப்போது தான் கணவனின் சொக்கி நிற்கும் பார்வையை அவதானித்தது. 

அந்தப் பார்வையின் பின்னர்.. அவனது செயல்கள் எவ்வாறு இருக்கும் என்று அனுபவித்து இருந்தவளுக்கு, இதயம் தூக்கிவாரிப்போட்டது. 

அந்தப் பாம்பின் அச்சம் தீர்ந்து, தன்னைப் பார்த்து உஷ்ணப்பெருமூச்சு விடும் இந்தப்பாம்பை எண்ணி புது அச்சம் பிறந்தது அவளுக்குள். 

அதிலும் ஆதரவாக அணைத்துப் பிடித்திருந்த கைகள், தற்போது அவள் அங்கங்களை வருடுவது புரிய, அவனிலிருந்தும் விலக எத்தனித்த சமயம்.. அதற்கு விடாமல் வன்மையான பிடியாக இழுத்துப் பிடித்திருந்தவன், 

ஆவேசமாக அவனது இதழ்களைக் கவ்விக் கொண்டான் அவன்.

 அவள் அணிந்திருந்த.. கூடலுக்கு துணைபுரியும் ஈரமான உடுத்தாடை வேறு… அவள் அங்கங்களோடு ஒட்டி.. உடையே இல்லாதது போல அனைத்தையும் ஒட்டிக்காட்ட அதுவும் கூட.. அவனை ஓர் உன்மத்த நிலைக்குத் தள்ளலானது. 

யௌவனாவுக்கோ தன் இதழில் அவனது வேக உறிஞ்சுதலில் மொத்த சக்தியும் சென்றாற் போல தோன்ற, அவனது தோள்புஜத்தை நகங்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றாள். 

அவனுக்கோ இத்தனை நாளைய விரகதாபம் தாங்கமாட்டாதவனாக அவளை ஒட்டுமொத்தமாக சுகித்து விடும் எண்ணம் தோன்ற, அவளது பருத்த, யானைத் தந்தம் போன்ற வளவளப்பான தொடைகளை ஏந்தித் தூக்கி, தன் இடுப்போடு அணைத்துப் பிடித்துக் கொண்டே தேன் உறிஞ்சும் வேலையை செவ்வனே செய்யலானான் சத்யன். 

அவனுள் அனல்மலை அடித்தது.யௌவனாவும் தன் மாய உணர்வுகள் கடந்து, மன்மதனின் மலர்க்கணைகளில் சிக்குண்டு தவித்த நேரம்.. தலைவனே தன்னை செதுக்கட்டும் என்று அவனிடம் முழுவதுமாக தஞ்சமடைந்தாள் பெண். 

அவனது ஆயத்த நிலையை ஊகித்தறிந்தவன், அவளை அப்படியே தன் தோள்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு.. அவளது பின்னழகின் பஞ்சு மென்மை தன் ஒரு பக்கத்தில்.. தண்ணீரின் ஜில்லிப்புடன் பட்டுமோத மோத.. சற்றே வரண்ட நிலம் நோக்கிப் போனான் அவன். 

அங்கே… சத்யாதித்தனின் இந்தக் கூடல் மட்டும் நிகழ்ந்தேறினால், சத்யனுடன் மட்டும் முடியவிருக்கும், “இராஜசிங்க” வம்சம்.. மீண்டும்முளைவிட்டு தழைத்து விடுமோ என்ற அச்சம்.. அந்த மாயநந்தினிக்குள் ஊற்றெடுக்கலானது. 

அவளுள் எரிந்து கொண்டிருந்த தீய எண்ணம்.. இதனை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வெறியை அவளுள் கிளறிவிட, அந்த பாழும் நிலவறையே அதிர இரைந்து கத்தினாள் நந்தினி. 

“க்கூஊஊடாதூஊ!! க்கூஊஊடாதூஊ!! இது நடக்கக் கூடாஆஆதூ… ராஜசிங்கனின் வம்சம் தழைக்கவே க்கூஊஊடாதூஊ!!”என்று எரிச்சலில் கத்தினாள் நந்தினி. 

அவளுக்குள் ஏதாவது செய்து நடப்பதை தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும் என்று தோன்ற, நிலவறையில் தன் தனங்கள் மேலும், கீழும் ஏறி இறங்க, மூசு மூசு என்று மூச்சு வாங்கியவள், 

தனக்கேற்ற எதையும் இறைவன் தனக்கு கண்களில் காட்டிவிடமாட்டாளா என்று ஆவேசத்துடன் அங்குமிங்கும் தேடலானாள். 

அவள் கண்களுக்கு தேவதா தட்டுப்படாதது அதிமித தைரியத்தைக் கொடுக்கலானது. 

அதே கணம் அவள் விழிகளில் தட்டுப்பட்டது யௌவனாவை சொற்பநாழிகைகளுக்கு முன்னர் ஐயுறுத்திய அதே சர்ப்பம். 

தன் மாய சக்தியால்.. அந்த சின்ன சர்ப்பத்தின் விழிகளை.. ஒரு சில கணங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தாள் நந்தினி. 

அவள் ஏதோ சர்ப்பங்கள் மட்டும் அறியும் ஒருவித ‘ஸ’கர வரிசையில் அமைந்த மாய வார்த்தைகளை வன்மத்துடன் ஹஸ்கி குரலில் உச்சரித்தாள். 

அவளைப் போலவே உடல் முழுவதும் கொடிய விஷம் கொண்ட சர்ப்பத்துக்கு.. நந்தினியின் ஏவல் புரிந்ததோ?? 

, சட்டென தன் பாதையை மாற்றிக் கொண்ட அந்த பாம்பு, தலைதூக்கி எம்பி, யௌவனாவைக் கைகளில் ஏந்திக் கொண்டு செல்லும் சத்யனைப் பார்த்தது. 

சாந்தியடையாத ஓர் ஆத்மா…. தன் மனையாளைப் பழிவாங்க ஒரு திண்ணிய விஷம் கொண்ட அரவத்தை ஏவி விட்டது அறியாத சத்யாதித்தன், காதலின் பிடியில்.. அதன் ஆலகால மழையில் நனைந்து கொண்டிருந்தான். 

யௌவனாவை அந்தக் கானகத்தின் கட்டாந்தரையில் கிடத்தியவன், சட்டை பட்டன்களைக் கழற்றும் பொறுமை அற்றவனாக, சட்டையை தலைக்கு மேலே கழற்றியவன், அவள் மேல் படர்ந்தான். 

யௌவனாவுக்கும் கூட இடம், பொருள், ஏவல் மறந்த நிலை.. இத்தனை நாளைய பிரிவு கடந்து.. அவன் பாரத்தை தன் மேல் சுமந்து, அவனைத் தனக்குள் ஏந்திக் கொண்டால் போதும் என்பது போல ஏதேதோ எண்ண அலைகள் எழுந்தது அவளுள். 

அவனோ அவளது மேனியெங்கும் இடைவிடாமல் முத்தாடிக் கொண்டிருந்த சமயம், தரையில் ஊர்ந்து ஊர்ந்து யௌவனாவை நாடிச் சென்ற சர்ப்பத்தைப் பார்த்து, “ப்போ.. ப்போஓஓ.. இன்னும் அருகில் ப்போஓ.. சீக்கிரம்!!”என்று கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டேயிருந்தாள் நந்தினி. 

அதிலும் தன் கணவனின் வெண்ணிற புரவி இல்லாதது கூட, அவளை இன்னும் கொஞ்சம் உற்சாகப்படுத்த, பாம்பு சத்யாதித்தனின் மனைவியை தீண்டும் நொடிகளுக்காக.. விழி விரித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் மாய நந்தினி. 

ஏவப்பட்ட சர்ப்பமும், நந்தினியை நாடிப்போன நேரம் தான்.. அந்த எதிர்பாராத நிகழ்வும் நடந்தது. 

சர்ப்பம்.. யௌவனாவை நாடிப் போன கணம், அவள் மேல் படர்ந்து கொண்டிருந்த சத்யாதித்தனின் உடலில் இருந்து, அன்று நந்தினியை அருகே வர விடாமல் செய்தது போலவே, 

வட்டவடிவ கூடாரம் போல தரையில் இருந்து ஒரு பனிவளையம் எழுந்து நிற்க.. அதன் சக்தியைத் தாண்டி தீய சர்ப்பத்துக்கு நுழைய முடியாமல் போனது. 

சர்ப்பம்.. அந்த வட்டம் தாண்டி செல்ல முடியாமல் பின்தங்கி நின்றுவிட, நந்தினியோ அந்த சர்ப்பத்தை இன்னும் இன்னும் ஏவலானாள். 

“ப்போஓஓ… சர்ப்பமே போஓஓ.. உனக்கிட்ட கட்டளையை ந்நிறைவ்வேற்று.. அந்தப் பெண்ணின் கதையை ம்முடித்து வ்விடூஊஊ”என்று உந்த, திரும்பவும் வளையத்துக்குள் நுழைய முற்பட்ட சர்ப்பம், முடியாமல் பின்வாங்கலானது. 

அதனால் முடியவில்லை. அது தன் தோல்வியை ஒத்துக் கொண்டு திரும்பி வர எத்தனித்த போது தான், சத்யனின் வேகத்தைத் தாங்க மாட்டாத யௌவனா அந்த வளையம் தாண்டி கைநீட்டி.. மண்ணோடு முளைத்து வளர்ந்திருந்த புல்லை உணர்ச்சிகள் கரைபுரண்டோ.. இதழ்கள் கடித்த வண்ணம் கண்கள் சொக்கிப் பிடுங்கலானாள். 

யௌவனாவின் உடலோ வளையத்துக்குள். கை மட்டும் வளையத்துக்கு வெளியே. 

சர்ப்பத்துக்கு கடிக்க, யௌவனாவே வழி ஏற்படுத்திக் கொடுக்க, நந்தினி அந்த பாழும் நிலவறையே அதிர சிரித்தாள். 

“ஹஹஹா.. சத்யாதித்தாஆஆ.. நீ ஆசைவைத்தது.. மண்ணோடு மண்ணாகிப் போகப் போகிறது” என்றவண்ணம் கண்களால், அந்தக் கட்டு விரியனை ஏவ, 

அதுவும் கடிக்கத் தயாரான கணம், மனைவியின் கையோடு.. தன் கை பிணைத்தவன், அவளது விரல்களை தன்னதோடு கோர்த்துக் கொள்ள, யௌவனாவைக் குறிவைத்த தீண்டல், சத்யாதித்தனில் முடிந்தது. 

அங்கே நந்தினிக்கோ.. எதிர்பாராமல் நிகழ்ந்ததாயினும் கூட, அங்கு நிகழ்ந்த கூத்தில்.. ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்!! 

எவனொருவனை தன் கணவன் காவல் தெய்வமாக நின்று காத்து வந்தானோ? எவனொருவனை இனி நெருங்கவே முடியாது எண்ணியிருந்தாளோ??

 அவனே தெய்வாதீனமாக சர்ப்பத்துக்கு பலியானதில்.. அவள் கண்கள் ஆனந்தக்கண்ணீரைச் சொறியவாரம்பித்தது. 

அவள் கலகலத்துச் சிரித்தாள். தன் பழிதீர்ந்ததை எண்ணி கலகலத்துச் சிரித்தாள். 

“தன் வம்சம் அழித்த இராஜசிங்க வம்சம் இன்றோடு அழியப் போகிறதூஊஊ… ஹஹா.. ஹஹஹஹாஆஆஆஆ..” என்ற அந்தப்பெருஞ்சிரிப்பு ஓயவேயில்லை. 

ஆனால் காதலில் சொக்கிப் போயிருந்த சத்யாதித்தனுக்கு மனைவியில் மூழ்கி முத்தெடுக்கத் தோன்றியதே ஒழிய, அரவம் தீண்டியது கூட புரியாதளவுக்கு ஒரு காதல் மயக்கம். 

அந்த கணம் தான்.. இதுகாறும் மாய நந்தினியின் கூத்துக்களை.. அவள் கண்ணில்படாமல் அவதானித்துக் கொண்டிருந்த தேவதா.. சட்டென தன் ரூபத்தைக்காட்டி வெளியே வந்தான். 

அதிலும், தன் அரசரைத் தீண்டிய சர்ப்பத்தின் மேல் பொல்லாத கோபம் எழ, வானத்தை அவன் இருவிழிகளாலும் பார்த்தான். அந்த விழிகளின் ஈர்ப்பில்.. மேகம் திரட்சியாகக் கூடி, கொடுமையாக அகோர இடியொன்று இடிக்க, 

வானிலிருந்து தீப்பிளம்பொன்று கிளம்பி.. அந்த சர்ப்பத்தை சுட்டெரித்து பஸ்பமாக்கியது. 

கணவனைக் கண்டதும் அச்சத்தோடு அதிர்ச்சி மிகுந்தாலும்.. இனியும் சத்யாதித்தனைக் காப்பாற்றி…. நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று தோன்ற.. சிரிப்பு சப்தம் அதிகமானது நிலவறைக்குள். 

அந்தக் கொடூர இடியில் காதல் மயக்கம் களைந்து யௌவனா நடப்புக்குத் திரும்பிய வேளை, யௌவனாவின் கண்களில் எதேர்ச்சையாகப் பட்டது 

அவனது கையில் இருக்கும் பற்தடம். 

அவளை விலக்கிக் கொண்டு எழுந்தவள், தானாகவே கண்ணீர் வழிய, “ஐயோ.. சத்… சத்யா உங்க கை.. ய்யில் பற்தடம்.”என்று பதற, அப்போது தான் அதைப் பார்த்தவன்.. அந்த பற்தடம் ஏதோ புழுபூச்சியுனுடையதாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, 

பதறும் அவளைத் தேற்றும் முகமாக, “இது சும்மா ஏதாவது கடிச்சி.. ருக்கும்..”என்று சொல்ல.. அவள் இன்னும் கொஞ்சம் பதறிப்போனாள். 

அவனது முன்னங்கையைப் பிடித்துக் கொண்டவள், “இல்லை புழுபூச்சி கடிச்சா இப்படி பற்தடம் பதியாது.. இது பாம்பு.. தான்..”என்றவள்..தன் உணர்ச்சிகளைத் தூரத் தூக்கியெறிந்து விட்டு, சுற்றுமுற்றும் தேட, எரிந்த நிலையில் ஓர் பாம்பு இருப்பதைக் காணவும் ஜீவனற்றுப் போனது போல நடுங்கியது உள்ளம். 

அடுத்த கணம் எதையும் யோசிக்காமல், சட்டென தன் உடுத்தாடை கரையைக் கிழித்து எடுத்தவள்.. பாம்பு கடித்த இடத்துக்கும் மேலான ஓர் இடத்தில் இரத்தவோட்டம் விரவிப் பரவாத வண்ணம் கட்டிட்டவள்.. அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்.. பற்தடம் பதித்த இடத்தில் தன் வாய்த்தடம் பதித்து.. ஒட்டுமொத்த விஷத்தையும் உறிஞ்சலானாள். 

இவனோ, மனைவி விஷ இரத்தம் உறிஞ்சுவது ஆபத்து என்று கொண்டு, , “ஹேய் என்ன பண்ற?கொஞ்சம் அசந்தாலும் விஷம் வாய்க்குள்ள போயிரும் யௌவனா”என்று கத்த.. அவள் அதைக் கேட்டால் தானே?? 

நந்தினிக்கோ பற்றியெரிந்தது. தன் திட்டம்.. வெற்றி எல்லையைத் தொடப்போன கணம், இப்படி ஆனதை எண்ணி ஒரு அற்ப சந்தோஷம் தோன்றி அது அற்பமாகவே போனதில் கசந்தது உள்ளம். 

சத்யாதித்தனோ தன் உயிரைத் துச்சமாக மதித்தவளாக, யௌவனா அவன் உயிரைக் காப்பாற்ற ஈடுபடுவதைக் கண்டு, அன்பில் கரைந்துருகிப் போனான் ராஜா.

 ஊடல் கொண்டிருந்தாலும் கூட தன் மேல் இந்தப் பெண்ணுக்கு இத்தனை அன்பா? என்று அவன் மெய்சிலிர்த்துப் போய் நிற்க, 

அவளோ, கணவன் தன்னை மிருதுவான விழிகள் கொண்டு பார்ப்பதை அறிந்திராதவளாக, “நான் டிரஸ் மாத்திட்டு வந்துர்றேன்.. சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம்.”என்று சொல்லியவள்.. அவனை விட்டும் எழ, இவனோ, “இல்லை யௌவனா.. நான் நல்லா தான் இருக்கேன்” என்று சொல்ல, 

இவளோ, “நீங்க வாங்க சத்யன்” என்று பிடிவாதமாக அவளை அழைத்துச் செல்லலானான் அவன். 

மனதுக்குள்ளோ, “இந்த பாம்பு மட்டும் வந்திருக்கலைன்னா.. தன் அன்பை இன்னும் கொஞ்சம் அவளுக்கு உணர்த்தியிருக்கலாம்.” என்று எண்ணிக் கொண்டவன்.. மனைவி இமைக்க மறந்து பார்த்திருக்க, 

அங்கே மற்றுமொரு காதல் ஜோடியோ.. தம் மாய சக்தியில்.. ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றிருந்தது. 

தேவதா, நந்தினி மேல் பொல்லாத சீற்றத்தில் நின்றிருந்தான். 

 

ஏகாந்த இரவில் வா தேவதா 

[15]

பீலியில் வைத்து ஒரு ‘கட்டுவிரியன் பாம்பு’ கடித்து வைத்த குளறுபடியினால், சத்யாதித்தன் முழுமையாக இருபத்திநான்கு மணி நேரத்தை மருத்துவமனையில் கழிக்கும் படியானது. 

சத்யனின் தாய்க்கும், திருமண வீட்டு விஷேசத்துக்காக சென்றிருக்கும் அவளது அண்ணன், அண்ணிக்கும் விஷயத்தை சொல்லவே கூடாது என திட்டவட்டமாக மறுத்து விட்ட சத்யாதித்தன், மனைவியை மேற்கொண்டு பேச வாயே திறக்க விடவில்லை. 

‘கட்டுவிரியன் பாம்பின்’ விஷத்திற்கு எதிரான விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டு, பாம்பின் பற்தடத்தைச் சுற்றி அழுத்தமான அசையா கட்டும் கட்டப்பட்டு, முழுமையாக ஒரு நாள் மருத்துவர்களின் கண்பார்வையில் இருந்த பின்னரே தான், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனான் சத்யாதித்தன். 

பாவம், யௌவனா தான்.. அந்த இருபத்திநாலு மணிநேரத்தில் ஒரு தாயாக மாறி அவனை சேய் போல் கவனித்துக் கொண்டாலும் கூட, மனம் தான் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது ஆற்றாமையில். 

யௌவனா ஹாஸ்பிடலில் வைத்து அனைவரின் கண்ணை, கருத்தைக் கவரும் வகையில் அழுது வடித்து வைக்கவில்லையாயினும் கூட அவள் கண்களில் துளிர்விட்ட சோகம் தனக்கானது என்னும் போது, 

ஒருபுறம் சந்தோஷம், மறுபுறம் கவலை என இரு உணர்ச்சிகளுக்கு இடையில் ஆட்பட்டிருந்தான் சத்யன். 

அதிலும் அவள் முன்னே பின்னே யோசிக்காமல் விஷத்தை உறிஞ்சியது அத்தனை புத்திசாலித்தனமான செயல் இல்லையானாலும் கூட, அதுவும் அவளது அன்பினால் விளைந்தது என்னும் போது அவளை கண்டிக்க மனம் வரவேயில்லை. 

அடுத்த நாள் மதியம் டிஸ்சார்ஜ் ஆகி, இவள் ஜீப்பினை ஓட்ட, பக்கத்தில் கட்டிடப்பட்ட கையுடன் அமைதியாக வந்தவனின் பார்வை, அவளது முகத்தை விட்டும் இம்மியளவேனும் அசையவில்லை. 

எப்போதும் மனைவியின் அழகை பார்த்து இரசிப்பவன், அன்று தன் தாரத்துள் இருக்கும் தாய்மையை இரசித்தபடி வந்தான். 

வளைவு நெளிவுடன் கூடிய அந்தப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தது ஜீப். 

தன் மனைவி வண்டியோட்டுவதன் இலாவகத்தை அவதானித்தவனுக்குள் இன்னும் கொஞ்சம் வியப்பு. 

அவளோ கணவன் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது உணர்ந்ததும் ஒருவித அவஸ்தையை உள்ளுக்குள் உணர்ந்தவள், அவனது சிந்தையை கலைக்க நாடியவளாக,

ஊடல் மறந்த மென்மையான குரலில், “சத்யா.. அந்த பீலியில் ஏன் மனிதநடமாட்டமே இல்லைன்னு தெரியுமா??”என்று கேட்க, 

இவனும் அந்த மதுரக்குரலில் கவரப்படத் தான் செய்தான். 

வண்டி அசையும் போது முகத்தில் பட்டுத் தெறித்த குளிர்க்காற்று இருவர் உடலையும் உருக்கி எடுத்துக் கொண்டிருந்தது. 

அந்த எதிர்க்காற்றில், அவளது அடர்ந்த கண்ணிமைகள் சுருங்க, காதணிகள் ஆட, நெற்றியை மறைத்து கூந்தல் வீழ்வதும் கூட அழகு!! மெய்யும் கூட. 

அந்த பட்டுக்கன்னங்கள் உரசி.. முத்தமிட்டால் என்ன? சின்ன சிந்தனையும் தோன்றியது அவனுள். 

அந்த இரசனை பாவம் மாறாமலேயே இவனும், “ஏன்??”என்று கேட்டான். 

அவளோ அதற்குப் பதிலாக சுவாரஸ்யமான கதை சொன்னாள்.

வண்டியை ஒரு மலைப்பாதை வளைவில் திருப்பி, ஊர்க்குடிகள் இருக்கும் சமவெளியான பாதையில் மெல்ல ஓட்டிக் கொண்டே அவனைப் பார்த்தவள், 

“அது.. எங்க ஊர்ல சிவானந்தம் தாத்தான்னு ஒரு தாத்தா இருந்தாரு.. அவருக்கு எண்பது வயசுக்கு மேலே இருக்கும்.. போன வருஷம் தான் இறந்து போனார்.. சின்ன வயசில் என்னை, என் ஃப்ரண்ட்ஸ்ஸையெல்லாம் உட்கார வைச்சு.. பல கதைகள் சொல்வாரு… இந்த கதைகள் எல்லாம் அவரோட தாத்தா சின்ன வயசில் சொன்ன.. இந்த ஊரில் நடந்த உண்மைகதைன்னு சொல்வாரு.. அதுல ஒண்ணு தான்.. ‘இருநூறு வருஷத்துக்கும் மேலா பழியுணர்ச்சியோட காத்திருக்குற நந்தினியோட கதை”என்று அவள் சொல்ல, சத்யன் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாது நின்றிருந்தான். 

அவனுக்குத் தான் இந்த ‘நந்தினிக் கதையில்’ எல்லாம் நம்பிக்கை இல்லையாயிற்றே? 

அதனால் உள்ளுக்குள் இது எல்லாம் சுத்த பம்மாத்து என்று தோன்றினாலும், தன் உள்ளம் கவர்ந்தாளுக்காக அமைதியாக காது தாழ்த்திக் கொண்டு வந்தான் அவன். 

இவளோ தொடர்ந்து சொன்னாள். 

“சின்ன வயசுல அந்தக் கதைகள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.. அந்த ‘ராஜா வம்சத்துல வந்த ராஜகுமாரன் எனக்காக வந்தா எப்படிருக்கும்?’னு தோணும்.. வளர்ந்து பக்குவம் வந்த பின்னாடி.. இலங்கையோட கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுடைய வாரிசு உயிரோட இருக்கறதாவது?? தம்பதிவனத்துக்கு வர்றதாவது??’ன்னும்

நெனச்சிருக்கேன்.. பட் அன்பிலீவப்ளி.. யூ கேம் ஹியர்” என்று அவள் அவனைப் பாராமல் பாதையில் கவனம் பதித்தவளாகச் சொன்ன போது அவனில் ஒரு சின்ன சந்தோஷம். 

அவனையும் மீறி அவள் காதோரம் தன் இதழ்கள் நுழைத்தவன், கிசுகிசுக்கும் குரலில், “உன் கனவு நனவாயிருச்சு.. ராஜகுமாரன் உனக்காகவே வந்தான்.. உனக்காவே மட்டும்”என்று சொன்னவன், அவள் கன்னத்தில் முத்தமிட, 

அந்த ஒற்றை முத்தத்தில் கொஞ்சம் தடுமாறி நிலையானது அவள் வண்டி. 

அந்த முத்தத்தால் அவள் முகம் நாணத்தால் சிவந்ததா? கோபத்தால் சிவந்ததா? 

முகம் என்னமோ சிவந்தது நாணத்தில்.. ஆனால் வார்த்தைகள் வெளிவந்ததோ சினத்தில். 

கணவனை முறைத்துப் பார்த்தவள், “சத்யா? நான் தான் வண்டியோட்டிட்டு இருக்கேன்ல?சும்மா வர மாட்டியா? ” என்றபடி இதழ்களை அழுந்த மூடியபடி அவனை விழிகள் சுருக்கிப் பார்க்க, இவனோ தன் முத்து மூரல்கள் பளிச்சிட சட்டென்று நகைத்தான். 

“ஓகே ஸாரி… நீ சொல்லு.. ஏன் பீலியில் மனிதநடமாட்டமே இல்லை?”என்று அவளை மீண்டும் கதைக்குள் இழுக்க, அவளும் கோபம் நிமிடத்துள் மறந்து கதை பேசலானாள். 

சுவாரஸ்யம் நிறைந்த விழிகளுடன், “சிவானந்தம் தாத்தா சொன்ன ஒரு கதை இருக்கு.. இந்த பீலியில் ஏதோஒரு.. இடத்தில் பழைய மன்னர்களோட புதையலறையோட நுழைவாயில் இருக்காம்.. அதை ஒரு தேவதா காவல்காத்துட்டு இருக்காம்.. அந்த தேவதா தீய எண்ணத்தோடு வர்றவங்களை கொன்றுமாம்..”என்று சொல்ல, அடுத்த நொடி நிமிடமும் தாமதியாமல், 

“அதை நீ நம்புறியா என்ன..?”என்று இருபுருவமுயர்த்திக் கேட்டான். 

இவளோ குழம்பிப் போன முகபாவத்துடன், “தெரியலை.. ஆனால் நிறைய அமானுஷ்ய முறையில் இறந்துகிடந்த பல சடலங்களை.. பீலியில் நான் பார்த்திருக்கேன்..”என்று சொல்ல, இவனோ வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினான். 

இவளோ, புருவங்கள் இடுங்க, “இப்போ ஏன் நீ.. ஹாஸ்யம் பேசினது போல சிரிக்குற?”என்று புரியாது கேட்க, இவனோ அப்போதும் தன் நகைப்பை நிறுத்தாமல், 

“ஹஹா… யாரோ ஒருத்தன் பேய் மேல பழிய போட்டுட்டு இத்தனை கொலைகளையும் அசால்ட்டா பண்ணிட்டு.. எஸ்ஸாகிட்டே இருக்கான்.. இந்த ஊர் அப்பாவி மக்களும், நீயும்.. அது தேவதா பண்ணதுன்னு நெனச்சிட்டிருக்கீங்க.. அத நெனச்சேன்.. சிரிச்சேன்.. ..”என்றான் சத்யான். 

ஆனால் படித்த பெண்ணான யௌவனாவுக்குமே, கணவன் சொன்னது அத்தனை ஏற்புடையதாக இல்லை. 

“இல்லை சத்யன்.. ஏன்னா அத்தனை டெட்பாடீஸ்லேயும் கொலைக்கான எந்த தடயமும் இருந்ததில்லை.. ஒரு கைவிரல் அடையாளம் கூட பாடியில் இருந்தோ, அந்த ஏரியாவிலிருந்தோ கிடைச்சதேயில்லை?? எனக்கென்னமோ.. தாத்தா சொன்ன கதை உண்மையா இருக்கப்போய் தான் இப்டியெல்லாம் நடக்குதுன்னு தோணும்”.. என்று சொன்னவள், அவனது முகபாவத்தை ஆராய்ந்துணரும் நோக்கில், அவன் விழிகளையேப் பார்த்திருந்தாள் அவள். 

இந்தப் புதையல் கதை வழிவழியாக வாய் வழி வந்த கதை அல்லவா? அதனால் மூலக்கதையுடன் பல வதந்திக்கதைகளும் சேர்க்கப்பட்டிருந்தது என்பது எத்தனைக்கு எத்தனை உண்மையோ? 

அதே போல.. அங்கு நிகழ்ந்த கொலைகளுக்கு எல்லாம் தேவதா அல்ல. பொல்லாத மாய நந்தினி காரணம் என்பது மேன்மையான உண்மை. 

தன் அமைதியைக் குலைக்கும் யாரையும் நந்தினி ஈவிரக்கமேயின்றி கொன்று வீசும் இடம் தான் அந்தப் பீலி. 

அப்படி வீசப்பட்டிருக்க வேண்டிய சத்யாதித்தன்.. இன்னும் பிழைத்திருப்பது காவல் தெய்வமான தேவதாவின் கைங்கரியம். 

இவற்றை அறியாத, தில்லி போன்ற ‘ஹைடெக் சிட்டியில்’ வளர்ந்திருக்கும் இளம்வாலிபனான சத்யாதித்தனுக்கோ.. மனைவியின் கருத்தை ஏற்பது அத்தனை உவப்பாக இல்லை. 

இருந்தாலும் அவள் தன் விழிகளையே குறுகுறுவென பார்த்திருப்பதைக் கண்டவன், ‘எவனோ சாமர்த்தியமான சைக்கோ சீரியல் கில்லர் தான் காரணம்’ என்று சொல்ல வந்தவன், அதை சொல்ல வந்ததை விடுத்து அமைதியாகிப் போனான். 

சரியாக அவர்களின் ஜீப் வண்டி குடிமக்களின் இருப்பிடம் தாண்டி, பாதையின் இருபுறமும் இருந்த.. ஒரு சின்னக்காட்டின் கிளைப்பகுதியைத் தொட்டவேளை, சத்யாதித்தனின் கண்களும் சரி, யௌவனாவின் கண்களும் சரி கொஞ்சம் ஆச்சரியத்தைக் கடன்வாங்கியது போல ஸ்தம்பித்துப் போனது. 

ஜீப் வண்டியை பாதியில் நிறுத்திய யௌவனாவோ, குழம்பிய முகத்துடன் “இங்கே என்ன கூட்டமா இருக்கு சத்யா”என்று கேட்க, 

இவனோ மெல்லிய குரலில், தாடையை நீவிவிட்டவனாக, “அதான் எனக்குமே புரியல..”என்றான். 

யௌவனாவின் கைகளோ அனிச்சை செயல் போல, சாவியின் அருகே சென்று ஜீப்பின் இயக்கத்தை நிறுத்த, இப்போது அந்த இளம் தம்பதியினர் தாராளமாகவே நடப்பது அனைத்தையும் உள்வாங்கலாயினர். 

அடர்ந்த மராமரங்கள் வானை நோக்கி வளர்ந்திருக்கும் காட்டின்.. இடது மருங்கில், 

குளிர்வலய காட்டு மரங்களின் ஒவ்வொரு தண்டுகளிலும் , மஞ்சள் லேபல் கட்டி, அந்தக் காட்டின் நடுமத்தியில் இருந்த சமவெளிதரை சுத்தமாக்கப்பட்டு.. ஒரு அகழியொன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. 

தம்பதிவன கிராமத்தின் குடியானவர்களும் சரி, அடுத்த கிராமத்தின் நாள்க்கூலித் தொழிலாளர்களும் சரி.. அந்த சமவெளித் தரையில் வெட்டப்பட்ட அகழிக்குள் நுழைந்து மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் சத்யாதித்தன். 

அங்கே அந்த அகழிக்குள் இருந்து எடுக்கப்பட்ட மண், அகழியின் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை.. தாழியினூடாக கைக்கு கை மாறி, ஓரிடத்தில் கொட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 

அந்த அகழிக்கு சற்றே தள்ளி.. மஞ்சள் நிறத்தில்.. ஒரு கூம்பக வடிவ கூடாரமொன்று கட்டப்பட்டிருப்பதுவும், செய்மதியிலிருந்து துல்லியமான தரவுகள் பெற, சின்ன ஆன்டனாவும் கூடாரத்தின் மேற்பரப்பில் கட்டப்பட்டிருப்பதையும் கூட அவதானித்தான் அவன். 

அந்த அகழியில் வேலையில் இருந்த கூலியாட்களுக்கு எல்லாம், வேலை ஏவும் தலைமையாளனாக இருந்தது என்னவோ யௌவனாவை பால்ய பருவத்தில் இருந்தே காதலித்த பகீரதன்!! 

பகீரதனை விட பலசாலியான யௌவனாவின் அண்ணன் வேல்பாண்டியிடமும் வெளிக்காட்ட முடியாத பகட்டும், கோபமும், அவனை விட பலவீனமானவர்களிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 

மணல் தாழியைத் தவறவிட்ட ஒரு வயசான பெரியவரிடம், ஈவிரக்கமேயற்று அதிமிதமான கொடூரத்துடன் நடந்து கொண்டிருந்தான் அவன். 

பெரியவரைப் பார்த்து கடிந்து கொள்ளும் குரலில், “என்னய்யா வேல பார்க்குற? ஒரு மணல்தாழிய கூட உன்னால ஒழுங்கா தூக்க முடியல.. நீயெல்லாம் எதுக்குய்யா வேலைக்கு வர.. சாவுக்கிராக்கி..”என்று திட்டிக் கொண்டிருந்தவனை.. வெறுப்பு மீதூறப் பார்த்தாள் யௌவனா. 

தன்னுடன் பள்ளிப் பருவத்தில் பயின்ற, அவள் பின்னாடி அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு லோ லோ என்றலைந்த பகீரதனா இது?? என்றிருந்தது யௌவனாவுக்கு. 

யௌவனாவின் கண்கள் அந்த சம்பவத்திலேயே நிலைத்திருக்க, சத்யாதித்தனின் கூர்மையான கண்கள், அந்த பரப்பளவைச் சுற்றியுள்ள வளாகத்தில், 

வெட்டப்பட்ட ஓரிரண்டு மரங்களைக் கண்டு கொண்டது. 

காட்டுக்குள் புகுந்து மரம் வெட்டுமளவுக்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று தோன்ற, மனைவியைப் பாராமலேயே ஜீப்பை விட்டு இறங்கியவன், “நீ ஜீப்பிலேயே இரு. நான்… போய் என்னான்னு. பார்த்துட்டு வந்துர்றேன்..”என்றவன் கட்டிடப்பட்ட கைகளுடனேயே சென்றதும் கூட அவனது உயர்வான கம்பீரத்தை எடுத்துக்காட்டுவதாகவே இருந்தது. 

மஞ்சள் லேபலில், ‘வர்க் இன் ப்ரோக்ரஸ்..’ என்று எழுதப்பட்ட லேபலுக்கு அடியில் குனிந்து, பகீரதனை நாடிப் போனவன், “இங்கே என்ன நடக்குது..?” என்று அவன் கேட்ட படி… 

தோண்டப்படும் அகழியின் ஆழம் எத்தகையது என்பதை அவதானிக்க நடக்க, 

பகீரதனுக்கோ, தன்னை நாடி சத்யாதித்தனைக் கண்டதும்.. உள்ளூற பற்றியெரிந்தது வயிறு. 

யௌவனாவை உரித்தாக்கிக் கொண்டவனைக் காண காண கொலைவெறியில் தத்தளித்தது உள்ளம். 

பகீரதனோ.. தன்னை விட ரொம்பவும் உயரத்தில் கூடிய, கட்டுமஸ்தான உடல் தேகத்துடன், ஒரு ராஜ தோரணையில் வந்து நிற்பவன்.. தன்னைத் தாண்டி உள்ளே செல்வதை அனுமதிக்க முடியாதவனாக, 

சத்யனின் வயிற்றுப்புறமாக கை நீட்டித் தடுத்தவன், கறாரான குரலில், “அங்கேயெல்லாம் போக முடியாது..”என்று தடுத்து நிறுத்தியதும் தான் தாமதம். 

சத்யாதித்தன் கூரிய விழிகளுடன், தன் வயிற்றில் பதிந்த பகீரதனின் கன்னங்கரேர் என்ற கையைப் பார்த்தான். 

யாரும் அவன் உடலைத் தொட்டுப் பேசுமளவுக்கு வைத்துக் கொள்ளாத சத்யாதித்தனுக்கோ.. பகீரதனின் இந்த செய்கை எரிச்சலைக் கொடுக்க, அழுந்த மூடிய இதழ்களுடன் பகீரதனை தீர்க்கமான பார்வை பார்த்தான் அவன். 

ஆனால் சத்யாதித்தனைக் காட்டிலும், அங்கிருக்கும் குடியானவர்களுக்கு தங்கள் ராஜா மீது பகீரதன் கைவைத்துத் தடுத்தது பிடிக்காமல் போக, 

மணல்தாழிகளை எல்லாம் எடுத்த இடத்திலேயே ‘தொப் தொப்’ என்று போட்டு விட்டு, தங்கள் தலைப்பாகைக் கட்டையும் அவிழ்த்துக் கொண்டு ஆவேசத்துடன் ஓடி வந்தனர் சத்யாதித்தனை நோக்கி. 

அதில் ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க விடலைப்பையன், மூண்ட சினத்துடன், பகீரதனின் சட்டைக்காலரை ஓரெட்டில் பற்றி, “ய்யார் மேல கை வைக்குற? இந்த ஊருக்கே ராஜா அவரு.. அவரை எதிர்த்து பேசுறீயா?” என்று கேட்கவும் செய்தான். 

ஆம், ஊர்க்கோயில் முன்னேற்றத்திற்காக.. அவன் தானமாக கொடுத்த ஐந்து கோடியில், சிறார்களுக்கு ஆங்கிலத்தில் படிப்பிக்கப்படும் ஒரு பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு, அதில் தன் தங்கையை இலவசமாக சேர்த்து, தங்கை மழலை மொழியில் ஆங்கிலம் பேசுதைக் கண்டு மகிழ்ந்தவனுக்கு.. தன் ராஜா மேல் கைவைத்ததும் தாங்க முடியவில்லை. 

அடிக்கவே கையை ஓங்கி விட்டிருந்தான் அந்தப் பையன். 

பகீரதனின் முகத்துக்கு நேராக குத்து விடப்போனவன், சத்யாதித்தன் அவசரமாக இடையிட்டு, “விடுப்பா அவனை..” என்று சொன்ன ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு, பகீரதனின் முகத்தை பஞ்சராக்காமல் விட்டான். 

இன்னொரு பெண்ணோ, கோபாவேசத்துடன், “வேல்பாண்டிகிட்ட தினம் அடிவாங்கின பயந்தாங்கொள்ளிக்கு.. எங்க ராஜா சட்டையில கைவைக்குற அளவுக்கு மீசை முளைச்சிருச்சோ?..”என்று எகிறியவளாகக் கேட்க,

 சத்யாதித்தன் இந்த காலத்திலும் தன்னை அவர்கள் ஊர் ராஜாவாக எண்ணிக் கொண்டிருப்பதை எண்ணி வியந்து போனவனாகத் தான் நின்றிருந்தான். 

ஊர் மக்கள் அனைவரும் சட்டென ஒன்றுகூடி, “எங்க ராஜா கிட்ட நீ மன்னிப்புக் கேட்குறவரை.. நாங்க ஒரு வேலையும் பண்ணமாட்டோம்.. ஆமா பண்ணமாட்டோம்.. எங்க ராஜா கிட்ட மன்னிப்புக் கேளு.. ஆமா மன்னிப்புக் கேளு.. ”என்று கோராஸாக குரல் கொடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட, 

பரத்தோ.. யௌவனாவை பெண்டாண்ட சத்யாதித்தனை முறைத்துப் பார்த்தபடி நறுநறுவென்று பற்களைக் கடித்துக் கொண்டு நிற்க, 

அங்கு நிலவிய அரவம் கேட்டு கூடாரத்தில் இருந்தும் எட்டிப்பார்த்தான் அந்த நெடியவன். 

அந்த நெடியவனுக்கு இந்தக் குளிர்காலநிலை ரொம்பவும் புதிது என்பதை அவன் தன் சட்டைக்கும் மேலாக அணிந்திருந்த ஸ்வெட்டர் பறைசாற்றிக் கொண்டிருந்தது. 

அங்கே அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் மக்கள் கூடியிருப்பதைக் கண்டு சம்பவ இடத்தில் விரைந்தவன், மக்களின் கோரஸைக் கேட்ட படி வந்த அந்த பொல்லாத நயவஞ்சகக் காரன், 

“இங்கே என்ன பிரச்சினை? எந்த நேரத்திலேயும் மழை வரலாம்.. சீக்கிரம் வேலைய முடிக்கணும்.. இல்லைன்னா நமக்கு தான் இரண்டு வேலையாக போயிரும்.. ஹரி அப்.. எவ்ரிபடி கோ டு வர்க்!! ” என்று ஏவ, 

இடத்தை விட்டு ஒரு அணுவளவேனும் நகரவேயில்லை அம்மக்கள். 

அதில் ஒரு தைரியமான பெண்மணியோ, தில்லாக வாய் திறந்து, “ம்முடியாது.. இந்தாளு.. எங்க ராஜா சட்டை ம்மேலேயே கைவைச்சுட்டான்.. அவன்.. எங்க ராஜாக்கிட்ட மன்னிப்புக் கேட்குறவரை வேலைக்கு போக முடியாது”என்று மறுத்து விட, 

அப்போது தான், அம்மக்கள் விழித்த “ராஜா”வைப் பார்த்தான் அந்த நெடியவன். 

ஆறரையடி உயரத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில், வெள்ளை வேஷ்டி சட்டையில் நின்றிருந்த சத்யாதித்த இராஜசிங்கன், இந்த நெடியவன் தேடி வந்த ரகசியப் புதையலின் உரிமையாளன் என்பது பார்த்ததும் புரிந்து போனது. 

அவனைப் பார்த்ததில் ஓர் ஆச்சர்யமென்றால், இவனுக்காக மக்கள், இன்று மக்களாட்சி வந்த பின்னும் கூட தங்கள் தலைவனாக மதித்து, ராஜ மரியாதை கொடுப்பது கண்டு பேர் அதிர்ச்சி. 

அதிலும், இந்த வேலையாட்கள் போனால் போகட்டும் என்று விட்டு விட்டு, வெளியூரிலிருந்து ஆட்கள் இறக்கிக் கொள்ளலாம் என்றாலும் அதிக செலவாகும். ஆகையால் சமாளித்துப் போக எண்ணியவன், 

பகீரதனை யாரும் எதிர்பாராமல் ஓங்கி ஓர் அறை அறைந்தவனாக, ஆத்திரம் துளிர்க்கும் தொனியில், “புல்ஷிட்.. யாருக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது?? அவர்க்கிட்ட மன்னிப்புக் கேளு”என்று மக்கள் மனங்களை கோபத்திலிருந்து விடுவிக்க போலி நாடகமொன்றை அவன் ஆட, 

நெடியவன் அறைந்த கன்னத்தைத் தாங்கிப் பிடித்த வண்ணம், தொங்கிப் போன முகத்துடன், “ஸா..” என்று அவன் வாயெடுத்த போதே.. அதை அவசியமில்லை என்பது போல தடுத்து நிறுத்தினான் சத்யாதித்தன். 

அப்போதும் கூட அறைந்த நெடியவனைக் காட்டிலும், மன்னிப்பை உதாசீனமாக விட்டெறிந்த சத்யாதித்தன் தான் அந்த ஏழைப் பாமர மக்களுக்கு ராஜாவாகத் தோன்றினான்.

மக்களை எல்லாம் பார்த்த நெடியவன் , “ப்ளீஸ்.. இது ஒரு அரும்பணி..இதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை… போய் வேலையை பாருங்க”என்று சுமூகமாக பிரச்சினையை முடிக்க, கலைந்து சென்றது கூட்டம். 

சத்யாதித்தனை நோக்கி தன் கரத்தினை நீட்டியவன், வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “உங்களை சந்தித்ததில் ரொம்ப ஹேப்பி மிஸ்டர். சத்யாதித்த இராஜசிங்கன்… ஐ ஏம் பிரபாகர்.. பிகே க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் சிஇஓ…”என்று சொல்ல, 

இவனும் அந்தப் பிரபாகரின் உள்நோக்கம் அறியாமல்.. பாம்பு கடிக்காத வலது கையை அவனிடம் நீட்டியவன், “நைஸ் டூ மீட் யூ மிஸ்டர். பிரபாகர்.. என்னை உங்களுக்குத் தெரியுமா? ”என்றான் சத்யன். 

அந்தச் சின்ன கைகுலுக்கலுக்குப் பிறகு விஷமப் புன்னகை சிந்தியவன், “ஏன் தெரியாது? ‘இருநூறு வருடங்களுக்கு பிறகு.. கண்டியின் கடைசி மன்னனின் வாரிசு.. நாடு திரும்பிய அதிசயம்’அப்படின்னு கொட்டை எழுத்தில்.. எல்லா நிவ்ஸ்பேப்பர்லேயும் உங்களைப் பத்தி தானே பேச்சு?? என்னை விடுங்க.. முழு இலங்கைக்குமே தெரிஞ்சிருக்கும் உங்களைப் பத்தி.. இன்னும் ஏன் உலகத்துக்கே தெரிஞ்சிருக்கும்.. ”என்றான் பிரபாகர். 

சற்றே புருவங்கள் இடுங்க, “ஓ ஐ சீ..பிஸினஸ் ஷேர் மார்க்கெட் ரேட்டிங் பார்க்குற அளவுக்கு எல்லாம் நிவ்ஸ்பேப்பர்ஸ் பார்க்குறது கம்மி தான்..ஏஸ் ஐ வோஸ் போர்ன் என்ட் ப்ரோட்அப் இன் இண்டியா, ஐ ஏம் வெரி மச் கன்சர்ட் அபௌட் தில்லி பாலிடிக்ஸ் என்ட் வெல் ஏஸ் இன்டியன் நிவ்ஸ்பேப்பர்ஸ்.. அதனால தான் தெரியலை போல இருக்கு”என்று சத்யன் உண்மையை உணர்ந்து சொல்ல, 

“ம்.. இருக்கலாம்.. கைக்கு என்னாச்சு?? ” என்று கையைக் காட்டிக் கேட்டான் பிரபாகர்.

இவனோ, “பாம்பு கடிச்சிருச்சு”என்று இவன் கேஷூவலாக சொல்ல, மெய்யாலுமே பதறிப்போனான் பிரபாகர். 

அவனது புதையல் திட்டத்தின் உயிர்நாடியே இந்த சத்யாதித்தன் அல்லவா? 

அவன் உயிருக்கு ஏதாவது ஆனால் தான்.. இவன் நினைத்த காரியமும் கைகூடுமோ? 

உடன்பிறந்தவர்கள் பதறுவது போல பதறிப்போன முகபாவனையுடன், துக்க முகத்துடன், “பார்த்து இருந்திருக்கக் கூடாது.. எப்படி ஆச்சு?”என்று கேட்க, அவனது அதிகப்படி கரிசனை நெருடலாக இருந்தது சத்யனுக்கு. 

இப்போது பார்த்த நபருக்காக இத்தனை பதற்றம் எவ்வாறு சாத்தியம்?? ஒருவேளை அது அவனது சுபாவமாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு அந்த நெருடலைப் புறந்தள்ளினான் சத்யன். 

பின்பு சட்டென விடயத்துக்கு தாவ நினைத்த சத்யாதித்தன், “அது பெரிய கதை.. ஆமா.. இங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமா? ஒரு குளிர்வலய காடு.. அதுவும் கவர்மென்ட் பராமரிப்புக்கு கீழே இருக்குற ஒரு காட்டில்.. மரங்களை வெட்ட, குழி தோண்ட யார் அனுமதி கொடுத்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”என்று கூரிய விழிகளுடன் அவன் கேட்க, 

பிரபாகரனோ, உணர்ச்சிகளே வெளிக்காட்டாத முகத்தில், கண்கள் மட்டும் கரிசனை சிந்த, மென்மையான குரலில், “ஷூர்” என்று தலையாட்டியவனாக, 

அறை வாங்கி நின்றிருந்த பகீரதனை நோக்கி கண்ணசைக்க, கூடாரம் நோக்கி விரைந்த பகீரதனும் வரும் போது சில பத்திரங்களோடு திரும்பி வந்தான். 

அதை வாங்கி சத்யாதித்தன் கையில் திணித்த பிரபாகர், துல்லியமான குரலில், “இந்த கிராமத்தில்.. மூணு மாசத்துக்கு முன்னாடி.. நீர் வடிகாலமைப்புக்காக முப்பதடி ஆழத்துல ஒரு குழி தோண்டினப்போ.. அந்த குழி முப்பதடி ஆழம் தாண்டி போயிட்டே இருந்தது… இதுக்கு காரணம் என்னான்னு அகழ்வாராய்ச்சி துறையும் சேர்ந்து தேடினப்போ.. கண்டியில் இருந்து.. ஹங்குராங்கெத்த ன்ற இடம் வரை சுரங்கப்பாதை இருக்கலாம்னு இலங்கை வரலாறு சொல்ற மகாவம்சக்குறிப்பு ஆதாரம் கிடைச்சது.. அந்த சுரங்கப்பாதை இதுவாக இருக்கலாம்ன்றது என்னோட உறுதியான நம்பிக்கை.. ஆனா இந்த ஆராய்ச்சி.. ஒன்றரை மாசத்துலேயே நின்னு போச்சு.. கவர்மென்ட்டுக்கு இந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்க போதுமான காசு இல்லை.. ஸோ அதனால் என்னோட ப்ரைவட் ஃபர்ம்மால.. என் செலவில் இந்த அகழ்வாராய்ச்சியை நடத்தலாம்னு முடிவு பண்ணியிறங்கியிருக்கேன்.. அதுக்கான சர்டிபிகேட்ஸ் தான் இது.. என்ட் அந்த மரங்கள் வெட்டப்பட்டது கூட எக்ஸ்கவேஷன் சைட்டை க்ளியர் பண்ணத்தான்.. மோர்ஓவர்.. வெட்டப்பட்ட ஒரு மரத்துக்காக பத்து விதைக்கன்றுகள் நடவேண்டியது என் பொறுப்பு…” என்று சொல்ல சொல்ல, பிரபாகரின் தனிமரியாதையே வந்தது சத்யாதித்தனுக்கு. 

எதிர்காலத்தைப் பற்றியே கவலைப்படாத இந்தத் தலைமுறையினர் மத்தியில், கடந்தகால வரலாற்றை ஆராய இப்படி ஓர் ஆர்வமா இவனுக்கு என்று கூடத் தோன்றுயது சத்யாதித்தனுக்கு. 

ஆனால் பிரபாகர் விட்டது அத்தனையும்.. சில அமைச்சர்களை கைக்குள் போட்டுக் கொண்டு ஊர் மக்களையும், உலகத்தையும் ஏமாற்ற சொல்லப்பட்ட ‘கப்ஸா’ என்பதை பாவம்.. வெள்ளந்தி சத்யாதித்தன் அறியாமல் போனான். 

இந்த அகழ்வாராய்ச்சி தன் பரம்பரைக்குச் சொந்தமான அள்ள அள்ளக் குறையாத.. பல்லாயிரக் கோடி பெறுமதியான பொக்கிஷங்களை எடுக்க போடப்பட்ட திட்டம் என்பது தெரியாமல்.. சுவாரஸ்யமான விழிகளுடன் தலையாட்டிக் கொண்டிருந்தான் சத்யாதித்தன். 

நம் நாயகனைப் பார்த்து பெருமிதப் புன்னகை சிந்திய அந்நயவஞ்சகன், “நமக்கென்னன்னு போறவங்க மத்தியில், நீங்க கேள்வி கேட்டீங்க பார்த்தீங்களா… பிடிச்சிருக்கு.. ”என்று சொல்ல, இடுங்கிய புருவங்களுடன் ஏதோ தீவிரமாக யோசித்தான் சத்யாதித்தன். 

அவன் யோசிப்பது கண்டு பிரபாகரனுக்குள்ளோ..கச்சிதமாக இத்தனை பிட்டுக்கள் போட்டும் நம்பவில்லையா இந்த இந்தியாக்காரன்? என்று படபடப்பாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவேயில்லை அவன். 

இருந்தாலும் கூர்ந்து அவதானிக்கும் விழிகளுடன், “என்ன யோசிக்குறீங்க மிஸ்டர். சத்யாதித்தன்?” என்று கேட்க, 

தாடையை நீவிக் கொண்டே நிமிர்ந்து பிரபாகரனைப் பார்த்தவன், “இல்லை ரொம்ப நாளா ஒரு டவுட்டு.. அது உங்க கிட்ட கேட்கலாமா? வேண்டாமான்னு யோசிக்குறேன்?”என்று இவன் சொல்ல, 

“எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க சத்யன்” என்று உந்தினான் பிரபாகரன். 

இவனும் சின்ன தயக்கத்தின் பின்னர், தெளிந்த குரலில், “என் முன்னோர்கள் இலங்கையை ஆண்ட மன்னர்கள்னு சொல்றாங்க..அதுவும் இருநூறு வருஷத்துக்கு முன்னாடி..அப்படின்னா அவங்க வாழ்ந்த அரண்மனைகள் இருக்கணும் இல்லையா? .. ஆனா இந்த ஊருக்கு வந்ததில் இருந்து ஒரு அரண்மனை கூட காணலையே? நிஜமாகவே இங்கே மன்னராட்சி இருந்ததா? இல்லையா? அப்படியிருந்ததுன்னா அரண்மனை எங்கேன்னு ஒரு சின்ன டவுட்.. ஆரம்பத்தில் இருந்தே இருக்கு.. ஆனால் பதில் தான் தெரியல”என்று சொன்னதும், 

சட்டென்று ஒரு இளநகை சிந்தினான் பிரபாகர். 

அது சத்யாதித்தன் அவன் எண்ணியது போல ‘உன்னை நம்ப முடியலயே?’என்பது போல கேட்ட கேள்வி இல்லை என்னும் அளவில் சந்தோஷத்தில் வந்த ஆசுவாசப் புன்னகை. 

பெருமூச்சுடனேயே, “ஏன் இல்லை.. உங்க முன்னோர்கள் வாழ்ந்தது அரண்மனையில் தான்.. அதான் “தலமா மாளிகை”.. கோயிலை வேறா.. அரண்மனையை வேறா கட்டிய மன்னர்களுக்குள்ள.. கோயிலுக்குள்ள.. அரண்மனையை சேர்த்து கட்டியிருக்காங்க உங்க முன்னோர்கள்..இப்போ அரண்மனைக் கட்டிடத்தைக் கூட புத்தவிகாரையா மாத்திட்டாங்க சத்யன்..”என்று சொல்ல, 

சத்யாதித்தனின் கண்கள் ஆச்சரியத்தில் சற்றே விரிந்தது. 

ஓ!! கனவில் வந்த தலதா மாளிகை அவன் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனையா?? என்றிருந்தது அவனுக்கு. 

இந்த சின்ன விஷயம் கூட அறிந்திராமல் மன்னர்பரம்பரை என்று சொல்லிக் கொள்வதில் என்ன சந்தோஷம் என்றும் கூட தோன்றலானது அவனுக்கு. 

சத்யனின் காதுகளை நாடிப் போனவன் இரகசியம் பேசும் குரலில், “அதுக்காக.. தலதாமாளிகை எனக்கு தான் சொந்தம்னு கோர்ட்ல கேஸ், கீஸ் போட்டிராதீங்க.. ஒட்டுமொத்த சிங்களவர்களும் சண்டைக்கு வந்துருவாங்க.. ஹியர் பீபிள் அடோர் டெம்ப்பிள்ஸ் தேன் தேயார் ஹவுஸஸ்..”என்றவன் பெரிய ஹாஸ்யம் பேசிவிட்டது போல இடிஇடியென சிரிக்க,சத்யனுக்கோ அந்தளவுக்கு அது பெரிய காமெடியாகப் படவில்லை போலும். 

அந்த ஹாஸ்யத்தில் சின்னப்புன்னகை தோன்றி மறைந்தது அவனுக்கு. அவ்வளவே, 

அந்த நேரம் பார்த்து பிரபாகர் செல்லுக்கு அழைப்பு வர, சத்யாதித்தனும் அங்கு மேற்கொண்டு நிற்பது நேரவிரயம் என்பதை உணர்ந்தவனாக, 

விடைபெறும் சாக்கில், “யூ கன்டினியு யோர் வர்க் பிரபாகர்.. நாம் அப்புறம் மீட் பண்ணலாம்.. என்ட் டோன்ட் ஹெஸிட்டேட் டு ஆஸ்க் எனி ஹெல்ப்”என்று இவன் சிநேகமாக புன்னகைக்க, பிரபாகரனும், பட்டனை அழுத்தி காதில் செல்லை வைத்துக் கொண்டே, 

“கண்டிப்பா.. உங்க உதவி தேவைப்படும் நேரம் கண்டிப்பா கேட்பேன்”என்று சூட்சுமத்துடன் சொல்ல, 

அதன் அர்த்தம் தெரியாமலேயே சின்ன தலையசைவுடன் விடைகொடுத்து விட்டு, பாதையோரம் நின்றிருக்கும் மனைவியை நாடிப் போனான் சத்யாதித்தன். 

அங்கே அவனது ஆசை மனைவியோ, அவனை நேற்று முழுக்க கண்விழித்து பார்த்துக் கொண்ட களைப்பு தாங்காமல், சீட்டில் சாய்ந்த வண்ணமே உறங்கி விட்டிருந்தாள். 

அவளது மாசுமருவற்ற பால்முகம் கண்டதும் அவனுக்குள் காதலுடன், கழிவிரக்கமும் சுரக்க, மனைவியின் துயில் களைக்காமல் அவள் நெற்றியில் முத்தமிட்டவன், 

அரவமே எழுப்பாது.. ஒற்றை கையில் வண்டியை ஓட்டத் தயாராகி ஜீப்பை எடுத்தான் இல்லம் நோக்கி. 

யௌவனாவை, இந்தியாக்காரன் முத்தமிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பகீரதனுக்கோ, உள்ளே திகுதிகுவென அசூயை கொழுந்து விட்டு பற்றியெரிய.. உள்ளங்கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தான் அவன். 

இந்த சத்யாதித்தனும், யௌவனாவும் காதலில் திளைத்திருந்தால் எத்தனை பேருக்குத் தான் வயிற்றெரிச்சல் பாருங்களேன். 

பகீரதனுக்கோ.. தான் ஒருதலையாகக் காதலித்த, தன்னுள்ளம் மனைவியாக வடித்த பெண்ணை .. சத்யாதித்தன் பெண்டாண்டதில் வயிற்றெரிச்சல். 

அந்தப் பொல்லாத மாய நந்தினிக்கோ, இருவரும் காதலில் திளைத்தால், இராஜசிங்கனின் வாரிசு இவ் அவனியில் தழைத்து விடுமோ என்ற வயிற்றெரிச்சல். 

மனித ஜந்துவும், ஒரு சாந்தியடையா ஆத்மாவும் தாங்கள் இணைவதைக் கண்டு வயிற்றெரிச்சல் படுவது அறியாத சத்யன், ஒற்றைக் கை மாத்திரம் இயங்கிய நிலையிலும் கூட பீலியில் பாதிநிலையில் விட்ட கச்சேரியை.. வீடு சென்று அரங்கேற்றும் திட்டத்துடன் விரைந்து கொண்டிருந்தான் உற்சாகமாக. 

அவன் இடரினும், தளரினும், கருமமே கண்ணாயினான் அல்லோ? 

அங்கே சத்தியனைப் போலவே.. நந்தினியும், தன் இருநூறு வருடகால பழியெண்ணத்தை நிறைவேற்ற, பொல்லாத திட்டமொன்றை தீட்டிக் கொண்டிருந்தாள். 

 

 

3 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 14&15 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top