நிலவு 6
ஒரு நாளில் பாதி நேரம் சமையல் கட்டிலேயே போய்விடும் வளர்மதிக்கு. முகம் சுளிக்காமல் ஒவ்வொருக்கும் என்ன சாப்பாடு பிடிக்குமென்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். இன்றும் அப்படித்தான் சமையல் வேலைகளை முனைப்போடு செய்துக் கொண்டிருந்தாள்.
தங்கபாண்டியன் ஆர்த்தியை வளர்மதிக்கு சமையல் வேலையில் உதவி செய்ய போகச்சொன்னதால் வேண்டா வெறுப்பாக அன்னநடை போட்டு சமையல்கட்டுக்குச் சென்றாள் ஆர்த்தி. அங்கே எப்போதும் போல வேகமாக காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வளர்மதி.
‘என்ன வேகமாக வேலை செய்யுறாங்கப்பா வளரு அக்கா! நமக்கு சுட்டுப்போட்டாலும் இவங்க ஸ்பீடு வராதுபா!’ என்று பெருமூச்சு விட்டவள் ‘இவங்களுக்குத்தான் இந்த வீட்ல யார் யார் என்ன சாப்பிடுவாங்கனு தெரியும். அதான் ஈசியா சமைச்சிடறாங்க. நாம வருசத்துல ஒருநாள் வரோம்! வந்தோமா சமைச்சு கொடுத்ததை சாப்பிட்டோமானு போய்டணும். அதைவிட்டு என்னோட புருசன் என்னடானா சமையல்கட்டுல வேலை செய்னு துரத்தி விட்டாச்சு. இந்த அக்காவே வேகமாக வேலை செய்யுறாங்க. நாம சும்மா நின்னு வேடிக்கை மட்டும் பார்ப்போம்.’ என்று கையை கட்டி நின்றாள் ஆர்த்தி.
வேலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் ஆர்த்தி வந்திருந்தால் வளர்மதியிடம் அக்கா நான் காய்கறியை வெட்டுற வேலையை பார்க்குறேன். நீங்க அடுப்பு வேலையை பாருங்கனு வேலையை பகிர்ந்துக் கொண்டிருப்பாள். வேலை செய்வதற்கு முடைப்பட்டு வந்திருப்பவளை என்னவென்று சொல்வது. இதற்காகத்தான் தங்கபாண்டியன் ஆர்த்தியை அதட்டிக்கொண்டேயிருக்கான்.
காய்கறியை வெட்டி முடித்து நிமிர்ந்து பார்த்த வளர்மதியோ “வா ஆர்த்தி காபி போட்டு தரவா?” என்று கேட்டுக்கொண்டே வெட்டி வைத்த காய்கறிகளை பாத்திரத்தில் போட்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள் வளர்மதி.
“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்க்கா! ஆனா நீங்களே எல்லாம் வேலையும் முடிச்சிட்டீங்க போல! முன்னமே நீங்க என்னை சமைக்க கூப்பிட்டிருக்கலாம்ல! உங்க வேலையை குறைச்சிருப்பேன்” என இழுவையாக பேசினாள் ஆர்த்தி.
“இல்லமா நீயே ஏதோ ஒருநாள்தான் ஊருக்கு வர. ஃப்ரீயா இருக்கட்டும்னுதான் கூப்பிடலை! எனக்கு சமையல் வேலை பெருசா தெரியலைப்பா! தினமும் நான் செய்யுற வேலை தானே!” என்ற புன்முறுவலுடன் பேசிக்கொண்டே காபியை போட்டு ஆர்த்தியின் கையில் கொடுத்தாள் வளர்மதி.
“அக்கா நீங்க பேசாம டிவியில நடத்துற சமையல் காம்படீசன்ல கலந்துக்கலாம் போல! என்கிட்ட பேசிக்கிட்டே வேகமாக வேலை செய்யுறீங்க!” என்றவள் காபியை குடித்துக்கொண்டே “ஏன் வீட்டு வேலை செய்ய ஆள் போட்டுக்கலாம்ல! நீங்க ஒரு ஆளா எத்தனை வேலையை தனியா செய்வீங்க! எங்க அம்மா வீட்டுல எல்லாம் வேலை செய்ய ஆள் வச்சிருக்கோம். இங்க இவ்வளவு வசதியிருந்தும் வீட்டு வேலைக்கு ஆள் ஏன் போடாம இருக்கீங்க? நீங்க மட்டும் என்ன மெஷினா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்ய! ஒரு நாள் நீங்க உடம்பு முடியலைன்னு படுத்துக்கிட்டா யாரு இந்த வேலை எல்லாம் செய்வாங்க! நீங்க என்ன இந்த வீட்டுக்கு வாய்த்த கொத்தடிமையா! வேலை செய்ய முடியாதுனு ஸ்ட்ரைக் பண்ணுங்க அக்கா! அப்பத்தான் இந்த வீட்டு கிழவி வேலை செய்ய ஆள் போடும். நானும் சென்னைக்கு போனாலும் உங்க வீட்ல வேலைக்கு ஆள் போட்டிருக்காங்க நாமளும் வீட்டு வேலைக்கு ஆள் போடுவோம்னு தங்கபாண்டியன் கிட்ட சொல்லுவேன்” என்றாள் ஆர்த்தி.
“இல்லம்மா நம்ம வீட்டு வேலையை நாம தான் செய்யணும். உதாரணத்துக்கு என் வீட்டுக்காரருக்கு தோசையும், தக்காளி சட்னியும் பிடிக்கும். தங்கம் தம்பிக்கு இட்லியும் வெள்ளைசட்னியும் பிடிக்கும். சந்தனபாண்டி தம்பிக்கு பனியாரமும் புதினா சட்னியும் பிடிக்கும். நந்தனுக்கு காலையில அவன் என்ன சாப்பிடுவான்னு தெரியாது அந்த நேரம் விரும்பி கேட்பதை செய்து கொடுப்பேன். அப்பத்தாவுக்கு காலையில ராகி தோசை செய்யணும். மதியம் கட்டாயமா கவுச்சி செய்யணும்! இப்படியெல்லாம் வகை வகையாய் சமைப்பதற்கு ஆள் கிடைக்க மாட்டாங்க ஆர்த்தி. நாம பாசத்தோட மனசு நிறைஞ்சு சமைச்சு போட்டாத்தான் நம்ம வீட்டுக்காரங்கனை நம்ம முந்தானையில முடிஞ்சு வைச்சுக்க முடியும்” என்று அவளுக்கு புரியும்படி பொறுமையாக எடுத்து கூறினாள்.
ஆர்த்தியோ ஏன் டா வளர்மதியிடம் சமைக்க ஆள் போட சொன்னோம் என்று கடுப்பாகி விட்டாள்.
“ஹான் என்ன கேட்ட எனக்கு உடம்பு சரியில்லைனா யார் சமைப்பாங்கனு தானே அப்பத்தாவே சமைச்சிடுவாங்க தெரியுமா. இப்படித்தான் போன மாசம் கடும் காய்ச்சல் எனக்கு. அந்தநாள் முழுக்க என்னை ஒரு வேலை செய்ய விடலை தெரியுமா! அப்பத்தா எல்லா வேலையும் அவங்களே செய்தாங்க” என்றவள் “அப்புறம் அப்பத்தாவை இன்னொரு முறை கிழவினு சொல்லாத! பெரியவங்களை மரியாதை குறைவா பேசக்கூடாது! அவங்க இந்த வீட்டு தெய்வம் போல! அவங்க ஒருவார்த்தை சொன்னா பழிச்சிடும். அவங்க மனசு சங்கடப்படும்படி இந்த வீட்ல ஒருத்தரும் பேசமாட்டோம்! நீ மட்டும்தான் அப்பத்தாவை கிழவினு சொல்லியிருக்க பார்த்து பேசுமா! நாம இந்த வீட்டு மருமகள்கள் நாமளே நம்ம வீட்டு பெரியவங்களை மதிக்காம பேசினா தோட்ட வேலை செய்யறவங்க காதில விழுந்தா நம்ம வீட்டு மரியாதை என்ன ஆகும் இனி பக்கம் பார்த்து பேசணும் சரியா” என்று தன்மையாகத்தான் பேசினாள் வளர்மதி.
“வயசானவங்களை கிழவினு சொல்லாம குமரினா சொல்ல முடியும்” என்றாள் திமிராக. ‘இதுவரை உன்கிட்ட பேசியதெல்லாம் வீண்! என் கொழுந்தனாரு உன்னை எப்படி சமாளிக்கறாரோ’ என்று மனதில் நினைத்து அமைதியானாள் வளர்மதி.
“என்னக்கா எதுவும் பேசமாட்டேன்கிறீங்க” என்றதும் “ஹெல்ப் பண்ணத்தானே வந்த இந்தா இந்த வெங்காயத்தை உரிச்சுக்கொடு” என்று ஒரு தட்டு நிறைய வெங்காயத்தை போட்டுக்கொடுத்து விட்டாள் வளர்மதி.
“அச்சோ வெங்காயம் வெட்டினா கண்ணுல தண்ணி வரும் நான் மாட்டேன் வேற வேலை கொடுங்க” என்று அங்கிருந்த திண்டில் ஏறி உட்கார்ந்து கூடையில் வைத்திருந்த கேரட்டை எடுத்துக் கடித்துக்கொண்டிருந்தாள்.
ஆர்த்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “சரி நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் வளர்மதி.
“அக்கா நான் கிளம்புறேன் என் வீட்டுக்காரர் உங்ககிட்ட சமைக்க உதவி செய்தாளானு கேட்டா உதவிசெய்தேனு சொல்லிடுங்க ப்ளீஸ்” என்றதும் ‘இந்த பொண்ணு விளையாட்டுத்தனமா இருக்கே’ என்று ஆர்த்தியை பற்றி முழுதாக தெரிந்துக் கொள்ளாமல் “ம்ம் சரி சொல்லிடறேன் நீ கிளம்பு சமையல் ஆனதும் கூப்பிடுறேன்” என்றதும்
“அச்சோ நான் இங்கயே இருக்கேன். எங்க ரூமுக்கு போனா உங்க கொழுந்தனாரு ஏன் வந்துட்டனு மறுபடியும் திரும்பி அனுப்பிடுவாரு. நான் இங்கேயே இருக்கேன்” என்று திண்டிலையே சம்மணம் போட்டு உட்கார்ந்து மொபைலில் இன்ஸ்டாகிராமை பார்க்க ஆரம்பித்தாள் ஆர்த்தி.
சமையல் முடித்த வளர்மதியோ “ஆர்த்தி நான் சமைச்சு முடிச்சிட்டேன்! சமைச்சு வச்சதை எடுத்து டைனிங் டேபிள் மேலே வச்சிடு நான் குளிச்சிட்டு வரேன்” என்று கூறியதும் “ம்ம் வச்சிடறேன் அக்கா” என்று மீண்டும் மொபைலை பார்க்க ஆரம்பித்தாள்.
வளர்மதி குளித்து வந்ததும் கூட ஆர்த்தி மொபைலைத்தான் நோண்டிக்கொண்டிருந்தாள். வளர்மதியோ நாம இவளை எதாவது பேசி இவள் மனசு காயப்பட்டா அது தங்கபாண்டியனுக்கு தெரிந்தால் அவன் மனசு சங்கடப்படுவான் என்று ஆர்த்தியை எதுவும் சொல்லவில்லை வளர்மதி. சமைத்ததை எடுத்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு ஆர்த்தியிடம் சில கேள்விகளை கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள் கேட்டுவிடலாமென்று முடிவெடுத்து “ஆர்த்தி உன்கிட்ட பேசணும்” என்றதும் மொபைலை ஆப் பண்ணி வைத்து “சொல்லுங்கக்கா” என்றாள் நெற்றியை சுருக்கி.
“ஆமா கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆகுது! ஏதாவது குழந்தை வேண்டாம்னு தள்ளி வச்சிருக்கியா?” என்றதும் ஆர்த்திக்கு முகம் முழுவதும் வேர்த்து விட்டது. தங்கபாண்டியன் தான் பில்ஸ் யூஸ் பண்ணியதை வளர்மதியிடம் சொல்லியிருப்பானோ என்று எண்ணியவளுக்கு நெஞ்சில் பாரம் ஏறியது.
“ஏ.ஏன் கேட்குறீங்க நா.நாங்க எதுவும் பிளான் எல்லாம் பண்ணலையே” என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு
“இல்லம்மா இங்க மதுரையில் நம்ம பேமிலி டாக்டர் இருக்காங்க அவங்க ரொம்ப கைராசிக்காரவங்க அவங்க கிட்ட ஒரு முறை ஜெனரல் செக்கப் போயிட்டு வந்துடலாம்லுனு கேட்டேன். நீ தப்பா எதுவும் நினைச்சுக்காத” என்றதும்தான் அப்பாடா கோல்ட் எதுவும் தங்களை பற்றிய விஷயத்தை சொல்லவில்லையென்று நிம்மதியானாள் ஆர்த்தி.
“நா.நாங்க சென்னையில் செக்கப் போயிட்டுதான் இருக்கோம் அக்கா எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்க டாக்டர்” என சமாளித்து பேசினாள் ஆர்த்தி. அன்று தங்கப்பாண்டியன் அவளுடன் சண்டை போட்டதை எண்ணியவளுக்கு இப்போதும் நெஞ்சில் திகில் இருந்தது. முகமெல்லாம் வியர்த்துப்போனது. சேலையால் வியர்வையை துடைத்துக்கொண்டே வளர்மதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.
“அடுத்த முறை வரும் போது நீ பார்த்த ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட்டை எடுத்துட்டு வா! நாம நம்ம பேமிலி டாக்டர் கிட்ட காட்டுவோம்” என்றதும் தான் தவறு செய்து விட்டோம் அது யாருக்கும் தெரியக்கூடாதென்று எண்ணியவளோ “நாங்க சென்னையில இன்பெட்டிலிட்டி ஸ்பெஷல் டாக்டர் கிட்ட பார்த்திட்டிருக்கோம்! தேவையில்லாம இங்கயிருக்க டாக்டர் கிட்ட காட்டினா அவங்க ஏதாவது மாத்தி டேப்லட் கொடுத்திருவாங்க எனக்கு இங்க ட்ரீட்மெண்ட் பார்க்க விருப்பம் இல்லைக்கா. அதுவுமில்லாம நீங்க என் பர்சனலில் தலையிடறது எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்று முகத்தில் அடித்தாற் போல சொல்ல வளர்மதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது கண்கள் கூட கலங்கி விட்டது.
“நீ என்னோட தங்கச்சி போலனுதான் உரிமையா சொல்லிட்டேன் ஆர்த்தி! தப்பா இருந்தா மன்னிச்சிடு” என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் வளர்மதி.
நந்தனுடன் விளையாடிக்கொண்டே சாப்பிட வந்த தங்கபாண்டியன் ஆர்த்தி வளர்மதியிடம் பேசியதை கேட்டுவிட்டான். நந்தன் விளையாட்டில் ஆர்வமாக இருந்தவன் பெரியவர்கள் பேசியதை கவனிக்கவில்லை. தங்கபாண்டியனோ இவளுக்கு பாசம் குடும்பம்னா என்னனு தெரியவே மாட்டேங்கிது! பாவம் மதினி முகம் சிறுத்து போறாங்க! இவளெல்லாம் என்ன பொண்ணு! நான் இவளை விழுந்தடிச்சு லவ் பண்ணி கல்யாணம் செய்தேன் பாரு என்னை அடிக்கணும் என்று ஆர்த்தியின் மேல் கடும் கோபமாகி விட்டான். நைட் பூஜை போட வேண்டியதுதான் என்று மனதில் எண்ணியவன் டைனிங் டேபிள் போய் பக்கம் போக முகம் கழுவி வந்த வளர்மதியோ “உட்காருங்க தம்பி சாப்பாடு எடுத்து வைக்குறேன்” என்று சிரித்த முகமாக கொஞ்ச நேரம் முன்னே நடந்த நிகழ்ச்சியை மறந்து பேசினாள்.
தங்கபாண்டியனின் தலை தெரிந்ததும் சமையல் கட்டுக்குள் சென்று அப்பளம் பொரித்து வைத்ததை எடுத்து வந்தாள் ஆர்த்தி. வேலை செய்தது போல நடித்தாள் ஆர்த்தி. தங்கபாண்டியன் ஆர்த்தியை முறைத்து பார்த்துவிட்டு “சாப்பாடு போடுங்க மதினி” என்றான் ஆர்த்தியிடம் பேசாமல்.
தங்கபாண்டியன் வளர்மதியை சாப்பாடு போடச் சொன்னதும ஆர்த்திக்கு கோபம் வந்துவிட்டது. “பொண்டாட்டி நான் இருக்கேன்ல எதுக்கு உங்க மதினியை சாப்பாடு போடச்சொல்றீங்க! நான் தான் போடுவேன்! வளரு அக்கா இந்த பக்கம் வாங்க” என்றாள் வெடுப்பான குரலில்.
தன்னால் பிரச்சனை வேண்டாமென்று எண்ணிய வளர்மதியோ “நான் நந்தனுக்கு சாப்பாடு ஊட்டுறேன்! நீயே தங்கபாண்டியனுக்கு சாப்பாடு போடு“ என்று நந்தனுக்கு சாப்பாடு தட்டில் போட்டுக்கொண்டு “வாடா ஹாலுக்கு போய் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவியாம்” என்று நந்தனை கூட்டிக்கொண்டுச் சென்றாள் வளர்மதி.
வளர்மதி சென்றதும் “நீயெல்லாம் படிச்சவ தானா! ஒருத்தவங்க கிட்ட எப்படி பேசணும்னு பண்பாடு தெரியாதா. அதுவும் மதினி நம்ம நல்லதுக்கு தானே ஹாஸ்பிட்டல் போய் ஒரு ஒபினீயன் கேட்கலாம்னு சொன்னாங்க! உன்னோட வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்னு பயம் வந்துடுச்சு அதான் கோபப்பட்டு அவங்க கிட்ட பேசியிருக்கு ஹான்! அவங்க இந்த வீட்டுக்கு வரும்போது நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன் தெரியுமா! அவங்க எனக்கு அக்கா போல. ஒருநாள் கூட எனக்கு வேலை செய்யறதை கணக்கு பார்த்ததில்லை. ஆனா நீ அவங்களை என்னோட பர்சனல் விசயத்துல தலையிடாதீங்கனு பட்டுனு முகத்துல அடித்தது போல சொல்லுற. நாக்குல நரம்பில்லாத பேசியிருக்கடி! அவங்க உரிமையா தான் டி சொன்னாங்க! உன் ஆணவத்தை எங்க மதினிகிட்ட இனிமே காட்டுனீனா நான் மனுசனா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ” என்று சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தான்.
“சும்மா பேசாதீங்க உங்க மதினி மட்டும் நல்லவங்களோ நாங்க பேசினதை கொஞ்ச நேரத்துல நீங்க வந்ததும் உங்ககிட்ட பத்த வச்சிட்டாங்க” என்று வளர்மதி மேல் குற்றம் சுமத்தினாள்.
“அடிச்சு பல்லை கழட்டிடுவேன்டி! யாரு எங்க மதினி உன்னை பத்தி என்கிட்ட குறை சொன்னாங்களா! நான் நீ பேசினதை என் காதால கேட்டுத்தான் டி பேசுறேன்” என்று பல்லை கடித்துக்கொண்டு திட்டினான்.
அருள் பாண்டியன் சாப்பிடுவதற்கு வருவதை கண்டவன் “அண்ணன் வராங்க அவருக்கும் சாப்பாடு போடு நம்ம சண்டை யாருக்கும் தெரிய கூடாது சரியா!” என்று மெதுவாய் பேசினான்.
ஆர்த்திக்கு தன் குட்டு வெளிப்பட்டு விட்டது எனவும் தங்கபாண்டியன் திட்டியதாலும் அவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது தன்மேல் தவறு இருக்க அவளால் எதுவும் பேச முடியாது போனது.
புருசன் பொண்டாட்டிக்குள்ள இருக்க சண்டை தன் வீட்டு ஆளுங்களுக்கு தெரியக்கூடாது என எண்ணினான் தங்கபாண்டியன்.
“சீக்கிரம் கண்ணைத்துடைடி” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்.
“என்னடா ஏதோ உன் சத்தம் என்னோட அறை வரை கேட்குது! என்னம்மா ஆர்த்தி இவன் உன்கிட்ட சண்டை போடுறானா சொல்லு! இவனை நான் கவனிச்சுக்குறேன்” என்று ஆர்த்தியிடம் விளையாட்டாய் பேசினான் அருள் பாண்டியன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ணா குழம்புல உப்பு கம்மியா இருக்குனு கொஞ்சம் போடச்சொன்னேன்! இவ கொஞ்சம் அதிகமா போட்டுட்டா! சும்மா தான் பேசினேன்” என்று சமாளித்தான் தங்கபாண்டியன்.
“ஆர்த்தி சாப்பாடு போடுமா” என்று உரிமையாக கேட்டான் அருள்பாண்டியன்.
ஆர்த்தியோ தட்டு வைத்து சாப்பாடு போட்டு குழம்பை ஊற்றினாள். அண்ணனும் தம்பியும் தன் குடும்ப தொழில்களை பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
நிலவு 7
சந்தனபாண்டியன் மாட்டுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்தான். இன்று மாட்டைக்கவனிக்கும் மாரிக்கு உடம்பு சரியில்லையென்று அவன் வரவில்லை. மாட்டுத்தொழுவம் அதிக குப்பையாக இருக்க தொழுவத்தை கூட்டி சுத்தம் செய்தான் சந்தனபாண்டியன். இந்த வேலையை வேறு ஆளிடம் சொல்லி செய்ய சொல்லலாம். நம் வீட்டு வேலையை நாம்தான் செய்யணுமென்று என்று வரிந்து கட்டி வேலை செய்வான் சந்தனபாண்டியன். வேலை செய்ததில் உடம்பு ஒரே வியர்வையாக இருக்க! அங்கே இருக்கும் கிணத்திலேயே தண்ணீர் இரைத்து குளித்தான்.
“என்னதான் வீட்டுக்குள்ள ஷவர்ல குளிச்சாலும் இப்படி சில்லுனு கிணத்து தண்ணியில குளிக்கறது தனி சுகம்தான்” என்று பேசிக்கொண்டே குளித்து முடித்து துண்டைக்கட்டிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்.
தனபாக்கியம் இரு பேரன்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் யாரும் சந்தனபாடியனை கவனிக்கவில்லை.
தனபாக்கியமோ கொஞ்சநேரம் முன்னே தூங்கி எழுந்தவர் பக்கத்தில் இன்னும் அசந்து உறங்கும் பேத்தியை பார்த்தவருக்கு தன் சின்னவயசு ஞாபகம் வந்தது. “நான் எல்லாம் இவ வயசுல இருக்கும்போது காட்டு வேலை, வீட்டு வேலைனு மாங்கு மாங்குனு செய்ய சொல்லுவாங்க எங்க அம்மா. இவ என்னடானா கும்பகர்ணியாட்டம் தூங்கிட்டே இருக்கா! இவளை எப்படி வேலை செய்ய சொல்லி பழக்குவேனோ தெரியலை” என்று புலம்பிக்கொண்டு “தேனு எழும்பி குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்று அவளது தோளை பற்றி உலுக்கினார்.
“அம்மாச்சி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று சுருண்டு படுத்தாள் தேன்மொழி.
“அடியேய் நீ இப்ப எழும்பலைனா சந்தனபாண்டியனை கூப்பிடுவேன்” என்றதும் “என்னது மாமாவை கூப்பிடுறீங்களா நான் எழுந்துட்டேன்” என்று அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தாள் தேன்மொழி.
அவளுக்கு தூக்கம் எங்கே பறந்துச் சென்றது என்று தெரியவில்லை. “போய் குளிச்சிட்டு வா கண்ணு சாப்பிடலாம்” என்று பேத்தியின் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்தார் தனபாக்கியம்.
“ம்ம் போறேன் அம்மாச்சி! மாமாவை கூப்பிடாதீங்க” என்று குளியலறைக்குள் போய் தண்ணீரை திறந்து விட தண்ணீர் விட்டு முகம் கழுவ சில்லென்று தண்ணீர் வந்தது. ரொம்ப குளிருது சுடு தண்ணி வரலையே என்று கட்டியிருந்த சேலையை கழட்டாமல் அப்படியே வெளியே வந்தவளை பார்த்த தனபாக்கியம் “ஏன் குளிக்காம வரவ! சின்ன பிள்ளை கணக்கா அலும்பு பண்ணாத தேனு கண்ணு. குளிச்சிட்டு வா” என்று சற்று அதட்டலாக பேசினார்.
“அம்மாச்சி எனக்கு சுடு தண்ணீர் வேணும். உன் பாத்ரூம்ல சுடு தண்ணி வரலையே! அதான் குளிக்காம வந்திருக்கேன் எனக்கு பச்சை தண்ணி ஊத்தினா உடனே சளி பிடிக்கும்னு தெரியும்ல உனக்கு!” என்று சிணுங்கினாள்.
“அட வாட்டர்ஹீட்டர் நேத்துலிருந்து வேலை செய்யலடியம்மா. நீ போய் சந்தனபாண்டியன் அறையில குளிச்சிட்டு வா” என்று வெளியே போக எட்டு வைத்தார்.
“அச்சோ நான் மாமா அறைக்குள்ள போக மாட்டேன்பா சாமி” என்று தலையை வேகமாக ஆட்டினாள்.
“அடியேய் உன் கழுத்துல என் பேரன் தாலி கட்டியிருக்கான்! நீ என்னடானா அவன் ரூமுக்கு குளிக்க போக இப்படி குதிக்கறவ!” என்று பேத்தியை தாளித்தார் தனபாக்கியம்.
“அம்மாச்சி எனக்கு மாமாவை பார்த்தா கொஞ்சுண்டு பயமா இருக்கு! கொஞ்ச நாள் கழிச்சு மாமா ரூமக்கு போய்க்கிறேன்! நான் அருளு மாமா ரூம்க்கு போய் குளிச்சிட்டு வாரேன்” என்று வெளியே போனவளின் கையை பிடித்திழுத்து “இப்போதான் நந்தனை வளரு தூங்க வச்சிருக்கா! நீ அங்க போய் அவனை எழுப்பி விட்டிராத அப்புறம் அவன் தூங்கவே நடுஜாமம் ஆகிடும்” என்றவர்
“இப்பதான் உன் பெரிய மாமன் அருள்கிட்ட பேசிட்டு வரேன். சந்தனபாண்டியன் பின்னால தோட்டத்துக்கு போய் இருக்கான் நீ அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடு” என்று அவளது முதுகை பிடித்து மெதுவாக தள்ளி விட்டார்.
“அட அம்மாச்சி இதை பர்ஸ்டே சொல்லியிருந்தா நான் வேகமா ஓடிப்போய் மாமா அறையில குளிச்சிட்டு வந்திருப்பேன்!” என்று துள்ளி குதித்து ஓடினாள் தேன்மொழி புள்ளிமானாய் சந்தனபாண்டியன் அறைக்குள்.
சந்தனபாண்டியனின் அறைக்குள் சென்றவள் அறையை சுற்றிப்பார்த்தாள். அருள், தங்கம் இருவரின் அறைக்குள் சென்று விளையாடியிருக்கிறாள். ஆனால் சந்தனபாண்டியன் அறைக்குள் மட்டும் அவ்வளவு சீக்கிரம் உள்ளே போக மாட்டாள். தங்கபாண்டியன் தேன்மொழியை சிறுவயதிலிருந்தே மிரட்டிக்கொண்டே இருப்பான். அதுவும் தேன்மொழி சிறுவயதாக இருக்கும்போது பாலும் நெய்யும் சாப்பிட்டு நல்லா கொழுக்மொழுக்கென புஷ்டியாக இருப்பாள். அவள் கன்னத்தை பிடித்து “ஏய் குண்டு பொண்ணு” என்று கிள்ளி வைப்பான் சந்தன பாண்டியன். இப்போதுதான் தன்னை குண்டு என்று யாரும் சொல்லி விட கூடாதென பால்,தயிர், நெய் அளவாக சாப்பிட்டு உடலை சிக்கென வைத்திருக்கிறாள் தேன்மொழி.
சந்தனபாண்டியன் அறையில் சுவற்றில் சந்தனபாண்டியன் கையை கட்டிக்கொண்டு தனி போட்டோவும் அருள், தங்கம் என் இருவருடன் சேர்ந்து எடுத்த போட்டோவும் இருந்தது. இதில் சந்தனபாண்டியன் தனியாக அவனது முத்துபல் வரிசை தெரிய சிரித்துக்கொண்டிருந்த போட்டோவை கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் தேன்மொழி.
“கருப்பழகன் மாம்ஸ் நீ” என்று அவனது போட்டோவுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்தவள் “என்ன உன்னோட மீசையை பார்த்தா தான் கொஞ்சம் ஜர்க் ஆகுது மத்த படி உன்னை கண்டா பயம் இல்லை” என்று பேசியவள் “நாளைக்கு வந்து உன்கிட்ட பேசுறேன்” என்று குளியலறைக்குள் சென்றவள் சேலையை கழட்டி முழுவதுமாக ஆடைகளை களைந்து இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தாள். பாத்ரூமிற்கு பின்புறம் மரங்கள் இருக்க அதன் கிளைகள் பாத்ரூமின் ஜன்னலில் ஒட்டிக்கொண்டிருந்தது. கிளைகளின் விழியே வந்த பாம்பு ஒன்று பாத்ரூமின் உள்ளே எட்டிப்பார்த்தது. குளித்து முடித்து ஆடை போடும் சமயம் ஏதேச்சையாக ஜன்னல் பக்கம் அவள் பார்க்க “பா.பாம்பு அ.அம்மாச்சி பாம்பு” என்று துண்டை எடுத்து இடுப்பில் சுத்திக் கொண்டு கதவை திறக்க போக கதவை திறக்க முடியவில்லை.
இவள் போடும் சத்தத்தில் பாம்பு பாத்ரூம் உள்ளே எட்டிக்குதித்து அவளது காலுக்கடியில் வந்துவிட்டது. எப்படியோ கதவை திறந்து வெளியே ஓடி வந்தவள் கிணற்றில் குளித்து முடித்து இடுப்பில் துண்டோடு வந்த சந்தனபாண்டியனின் மீது மோதிய வேகத்தில் இருவரும் கட்டிக்கொண்டு தரையில் கிடந்தனர்.
அவளது மேனியில் சுற்றியிருந்த துண்டோ அவிழ்ந்து விட்டது. அவனது மேனியில் பிசினாக ஒட்டிக்கொண்டு கிடந்தாள் தேன்மொழி.
“ஏய் அறிவுகெட்டவளே எதுக்குடி இந்த கோலத்துல இப்படி வந்து மேல விழற எழும்புடி” என்று எரிந்து விழுந்தான் சந்தனபாண்டியன்.
“மா. மாமா பா.பாம்பு என்னை கடிச்சிருச்சு! நான் இன்னும் கொஞ்ச நேரத்துல செத்துடப்போறேன். எங்கம்மாவை வரச்சொல்லு” என்று கத்தி விட்டாள்.
“ஏய் என்னடி சொல்ற பாம்பு எங்க வந்துச்சு உன்னை கடிக்க!” என்று பதறியவன் தன் மீது படுத்திருந்தவளை சட்டென்று அலேக்காக தூக்கி நிறுத்தினான்.
பாம்பு காலுக்கருகே வந்ததும் தன்னை பாம்பு கடித்துவிட்டது என்று எண்ணி பயந்து விட்டாள் தேன்மொழி. பாம்பு அவளை கடிக்கவில்லை.
“மாமா எனக்கு கண்ணெல்லாம் சொருகுது” என்று பயத்தில் மயக்கமே போட்டு விட்டாள். ஒரு கணப்பொழுதில் சந்தனபாண்டியனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவன் உடலில் இருந்த துண்டும் நழுவியிருந்தது. தாலி கட்டிய மனைவியாய் இருந்தாலும் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை தொடுவது தவறுதானே. உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் இருக்கும் தன் அக்காள் மகளை இப்போது காப்பாற்ற வேண்டும் என் எண்ணியவன் அவிழ்ந்து விழுந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கதவை லாக் செய்தவன் அவளது உடம்பில் பாம்பு கடித்த தடயம் இருக்கிறதா என்று பதட்டத்துடன் செக் செய்தான். பாம்பு கடித்தால் வாயில் துரை தள்ளுமே! அப்படி வாயிலையும் நுரை வரலையே! என்று யோசித்தவன் அவளது உடலை முழுவதுமாக ஆராய்ச்சி செய்தான். உடம்பில் ஒரு இடத்தில் கூட பாம்பு கடித்த தடயம் இல்லை. பயத்தில்தான் மயங்கி இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டு அவளுக்கு வாட்ரோப்பிலிருந்த சட்டையை எடுத்து போட்டு முகத்தில் தண்ணீரை அடித்ததும் அடுத்த நிமிடம் கண்ணைத்திறந்து விட்டாள்.
“மாமா என்னை பாம்பு கடிச்சிருச்சு ஆனா எனக்கு ஒண்ணும் ஆகலையே நான் பொழைச்சிக்கிட்டேனா? உங்க சட்டையை போட்டிருக்கேன் யாரு போட்டு விட்டா” என்று அவளாக ஏதோ ஏதோ பேசிக்கொண்டிருக்க அவளது கன்னத்தில் ஒரு அறைவிட்டு “வாயை மூடுடி” என்றிட அவளோ வாய் மீது கையை வைத்து பொத்திக்கொண்டாள்.
“அடியேய் இந்த அடி உனக்கு தேவைதான். பேசாம அம்மாச்சி அறையிலயே பச்சை தண்ணியிலயே குளிச்சிருக்கலாம். சளிப்பிடிச்சா மாத்திரை சாப்பிட்டு சரி பண்ணியிருக்கலாம். இப்போ இந்த கிடாமீசை கிட்ட மாட்டிக்கிட்டோமே” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
தேன்மொழி சத்தம் போட்டதில் தனபாக்கியம், அருள்பாண்டியன், தங்கபாண்டியன் மூவரும் சந்தனபாண்டியனின் அறை முன்னே நின்று “தேனு கண்ணு கதவை திற. எதுக்கு சத்தம் போடுற என்னாச்சு?” என்று மூவரும் பதறி கதவை தட்டினார்கள்.
“ஏன் டி இப்ப இந்த கோலத்துல ரெண்டு பேரையும் பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பாங்க நானே படிக்குற பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டோமேனு விசனப்பட்டுக்கிட்டு கிடக்கேன். நீ என்னடானா பாம்பு என்னை கடிச்சிடிருச்சுனு புருடா உட்டு என் பெயரை டேமேஜ் பண்ண பாக்குற நீ” என்று அவளை திட்டி தலையில் லேசாக கொட்டினான் சந்தனபாண்டியன்.
“இப்ப எதுக்கு மாமா தலையில கொட்டுற! இரு வெளியில போய் அம்மாச்சிகிட்ட நீ என்னை கட்டிபிடிச்சு முத்தம்கொடுத்தேனு சொல்லப்போறேன்” என்று கதவு பக்கம் ஓடினாள்.
“ஏய் கழுதை நில்லுடி” என்று அவளுக்கு முன்னே ஓடிப்போனவன் அவளை இறுக கட்டிபிடித்து அவளது கன்னத்தில் பசக்கென்று முத்தம் வைத்தான் சந்தனபாண்டியன்.
தேன்மொழி காலேஜ் போனாலும் டிவியில் முத்தம் கொடுக்கும் சீன் வந்தாலே கண்ணை மூடிக்கொள்பவளுக்கு இப்போது சந்தனபாண்டியன் கொடுத்த அதிர்ச்சி முத்தத்தில் மயங்கிவிட்டாள்.
“அச்சோ தங்கபாண்டி என்னடா காரியம் செய்திருக்க. இப்போ அப்பத்தா முகத்துல எப்படி முழிக்கப்போற?” என்று கவலைப் பட்டவன் “ஏன் டி எதுக்கெடுத்தாலும் இப்படி பயந்து செத்தா நான் என்னடி பண்ணுவேன். எப்படித்தான் உன்கூட குடும்பம் நடத்தி பிள்ளை பெக்கப்போறேனோ தெரியலைடி” என்று புலம்பிக்கொண்டு மறுபடியும் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தான். அதற்குள் அருள் பாண்டியனும் தங்கபாண்டியனும் கதவை உடைத்து உள்ளே வந்து விடுபவர்கள் போல தட்டிக்கொண்டிருந்தனர்.
சந்தனபாண்யடின் உள்ளே இருப்பது யாருக்கும் தெரியாது. தேன்மொழிக்கு என்ன ஆனதோ என்று இரு மாமன்களும் பதறி போய் கதவை உடைத்து விடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டனர்.
சந்தனபாண்டியன் கதவை திறந்து விட “என்னடா ஆச்சு நீ தோட்டத்துக்கு தானே போன இங்க எப்போ வந்த” என்று தங்கபாண்டியன் கேட்டான்.
மயங்கியிருந்த தேன்மொழி கண்விழித்து எழுந்து தள்ளாடி நின்றாள். சந்தன பாண்டியன் அவளுக்கு தன் பேண்டை போட்டு விட்டுதான் கதவை திறந்திருந்தான்.
“அது. நான் மாட்டு தொழுவத்தை சுத்தம் பண்ணிட்டு கிணத்து மேட்டு குளிச்சிட்டு வீட்டுக்குள்ள வந்துட்டேன் அண்ணா, நான் வரும் போது இவ பாம்பு என்னை கடிச்சிருச்சுனு சத்தம் போட்டு என் மேல வந்து விழுந்து மயங்கிட்டா ஆனா உண்மையிலும் இவளை பாம்பு கடிக்கலை பயத்துல பாம்பு கடிச்சிருச்சினு நினைச்சிட்டா போல! கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிட்டா அண்ணா” என்று கொஞ்சம் தயங்கி பேசினான் சந்தனபாண்யடின்.
தனபாக்கியம் என்ன நடந்திருக்குமென்று ஓரளவு யூகித்தவர் “சந்தனபாண்டி நீ போய் துணியை மாத்திட்டு சாப்பிட வா” என்றவர் “தேனு கண்ணு உனக்கு உடுத்திக்க சுடிதார் எடுத்து வச்சிருக்கேன் மாத்திக்கலாம் வா” என்று தன் அறைக்கு கூட்டிச்சென்றவர் “மாமனை கண்டு பயந்துட்டியா தங்கம்” என்றார் அவளது முகத்தை ஆராய்ந்தவாறு
“இல்ல பாட்டி நான்தான் பாம்பு கடிச்சிருச்சுனு மாமாவையே பயமுறுத்திட்டேன். ஆனா மாமா முன்னால ட்ரஸ் இல்லாம இருந்தது எனக்கு ஒருமாதிரி இருக்கு” என்று உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள் சிறுபெண் போல தேன்மொழி.
“அட கிறுக்கச்சி உன் புருசன் முன்னால தானே உடுப்பு இல்லாம இருந்த தப்பில்லை. உன் உடம்பை பார்க்க உரிமைபட்டவன்தான் உன் மாமன் சந்தனபாண்டியன். இப்படி என்கிட்ட சொன்னது போல வெளியில யார்கிட்டயும் சொல்லாத” என்று பேத்திக்கு அறிவுரை கூறினார் தனபாக்கியம்.
“அப்படியா சரி பாட்டி நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்” என்று தலையை பூம்பூம் மாடு போல ஆட்டினாள்.
“உனக்கு இன்னும் ஒருவருசம் படிப்பு முடியும் வரை ரெண்டுபேரும் ஒண்ணுமண்ணா கலக்க கூடாது! தள்ளிதான் இருக்கணும் அடுத்த வருசம் படிப்பு முடிக்கற வரை நீ என்னோட அறையிலதான் தங்கணும். படிச்சு முடிச்சதும் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துக்கொடுத்துடு நான் வளர்த்துபுடுவேன்” என்றார் சந்தோசமாய் தனபாக்கியம்.
“பாட்டி நான் டிகிரி முடிச்சதும் கலெக்டருக்கு படிக்கணும் உடனே குழந்தை வந்தா என்னால படிக்க முடியாதுல” என்று விவரமாய் பேசினாள் இப்போது.
“குழந்தையை பெத்துக்கொடுத்து பால்குடி மறந்ததும் படி யாரு வேண்டாமனு சொல்றது. உன் மாமனும் நான் நினைக்கறது தான் சொல்வான்” என்றதும் “சரி” என்று தலையை ஆட்டினாள். அதற்குள் எத்தனை பிரச்சனைகள் வரும் என்று இருவரும் அறியாமல் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
super
👍👍👍👍👍👌👌👌👌🫰🫰🫰
Super sis 💞