நிலவு 11
சீட்பெல்ட் கழட்டும்போது கண்விழித்துவிட்டாள் தேன்மொழி! “மாமாஆஆ கம்பி” என்று அவள் வாயை திறக்கும் முன் தேன்மொழியை தன்னோடு இறுக்கி அணைத்து குனிந்து விட்டான் சந்தனபாண்டியன்.
கார் கண்ணாடிகள் சில்லு சில்லாய் உடைந்து போய் காருக்குள் சிதறியது. ஒரு துளி பீஸ் கண்ணாடித்துண்டு கூட தேன்மொழியின் மீது படாதவாறு பார்த்துக்கொண்டான் சந்தனபாண்டியன்.
லாரிக்குள் இருந்த டிரைவர் காரை எட்டிப்பார்த்து விட்டு இனி காருக்குள் ஆள் உயிரோட முடியாது என்று தனக்குள் சிரித்துக்கொண்டு போனை தென்னரசுவுக்கு போட்டான்.
நாகப்பனும் தென்னரசுவும் அருள்பாண்டியனும், தங்கப்பாண்டியனும் அவமானப்பட்டு போவதை பார்த்து ஆனந்தப்பட்டு கொண்டவர்கள் பொன்மணியிடம் “இனி உன் மச்சான்களை வீட்டுக்குள்ள சேர்க்காத! ரிசப்சன் உன்பொண்ணுக்குத்தான் நடக்குது. நீ அங்க போனா உன் கௌரவம் என்னாவது! நீ போகாத..! என்று சந்தனபாண்டியன் மீது கோவத்தில் எரிந்துக் கொண்டிருக்கும் பொன்மணியை தூண்டிவிட்டு வீட்டுக்கு வந்தார் நாகப்பன்.
“தென்னரசு உன் எதிரி க்ளோஸ் புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் போட்டாச்சு! சந்தோஷமா! இந்த ஆண்டனிகிட்ட ஒரு வேலையை கொடுத்தா முடிச்சிட்டுதான் மறு வேலை பார்ப்பான். பேசினபடி பணத்தை செட்டில் பண்ணிடு இல்லைனா உனக்கும் இதே கதிதான் தெரியும்ல” என்று கடகடவென சிரித்தான் ஆண்டனி.
“ஹான் ஆண்டனி உன் அக்கௌண்ட்டுக்கு பணம் அனுப்பிட்டேன் செக் பண்ணிக்கோ!” என்றான் குரல் நடுங்க. சந்தனபாண்டியனை உள்ளூரில் ஆட்களை வைத்து போடச்சொன்னால் “முடியாது தென்னரசு நான் கொஞ்ச நாள் இன்னும் உயிரோடு வாழணும். சந்தன பாண்டியன் மேல ஒரு கீறல் போட்டுட்டு இந்த ஊருக்குள்ள நான் நடமாட முடியுமா என்ன! அண்ணன் தம்பி மூணு பேரும் சேர்ந்துட்டானுங்க நாங்க செத்தோம் உரு தெரியாம அழிச்சிடுவானுங்க ஆளை விடு சாமி” என்று ஓடி விடுவார்கள்.
வெளியூரில் பெண்கள் குழந்தைகளை கூட பாவம் பார்க்காமல் போட்டு தள்ளும் ஆண்டனியை தேர்ந்தெடுத்தான் தென்னரசு.
அகௌண்ட்டில் பணத்தை சரி பார்த்தவன் “எல்லாம் சரியா இருக்கு அடுத்து யாரை போடணும்னு போட்டோ அனுப்பு அதுக்கும் தனி ரேட்” என்று பேரம் பேசிச் சென்றான் ஆண்டனி.
‘அடியே தேன்மொழி எனக்கு கிடைக்காத நீ இந்த உலகத்துலயே இருக்க கூடாதுடி! அந்த சந்தனபாண்டியன் கூட உன்னை ஜோடியா பார்க்கும்போது பத்திக்கிட்டு வந்துச்சு. இப்போ எனக்குள்ள எரியும் நெருப்பு அணைஞ்சு போச்சு! அடேய் சந்தனபாண்டியா உன் நொண்ணன்கள் உனக்கு ரிசப்சன் வைக்க உன் மாமன் வீட்டுக்கு வந்திருக்கானுங்க. ஆனா உனக்கு நான் சங்கு ஊதிட்டேன்’ என்று எக்காளமாக சிரித்தான்.
“அப்பா நம்ம ஆண்டனி சந்தனபாண்டியனை போட்டுதள்ளிட்டேன்னு இப்போதான் எனக்கு போன் போட்டு சொன்னான்” என்று உற்சாக குரலில் தோட்டத்தில் ஊஞ்சலில் ஆடியபடி இருந்த நாகப்பனிடம் செய்தியை சொன்னான் தென்னரசு.
“சுந்தரபாண்டியன் குடும்பத்து ஆளுங்க அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டானுங்கடா! அவன் அப்பன் சுந்தரபாண்டியனை போட்டு தள்ள நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்” என்று பெருமூச்சு விட்டு “நீ போய் சம்பவம் நடந்த இடத்துல என்ன நடக்குதுனு பார்த்துட்டு வா. அப்புறம் அந்த ஆண்டனிக்கு பணத்தை அனுப்பிட்டியா! ஏன்னா என்னோட கணக்குபடி சந்தனபாண்டியன் செத்திருக்க வாய்ப்பு இல்லை. அதான் கேட்டேன்” என்றவர் “அப்படியிருந்தா ஆயிரம் பேருக்கு கெடா வெட்டி கறிசோறு போடலாம்” என்றார் நாகப்பாம்பின் விஷத்தை விட கொடிய எண்ணம் கொண்ட நாகப்பன்.
“அப்பா ஆண்டனி சொன்னான்பா காருக்குள்ள இருந்த சந்தனபாண்டியனும் தேன்மொழியும் க்ளோஸ்னு” என்றான் தென்னரசு.
“நீ ஸ்பாட்டுக்கு போய்ட்டு வந்து என்கிட்ட பேசு” என்று ஊஞ்சல் ஆடுவதை நிறுத்தி இறங்கியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை “வா நானும் உன் கூட வரேன்” என்று நாகப்பன் தென்னரசுவை கூட்டிக்கொண்டு சந்தனபாண்டியனுக்கு ஆக்ஸிடன்ட் நடந்த இடத்திற்கு வந்தனர்.
அப்படியொரு சம்பவமே நடந்த அடையாளம் அங்கே இல்லை. சாலை பராமரிப்பு வேலை நடக்கிறதென அந்தப்பக்கம் சிறு வாகனங்கள் மட்டும் சென்றுக் கொண்டிருந்தது. ஆக்சிடெண்ட் நடத்த அறிகுறி ஒன்றுமே அங்கே தெரியவில்லை.
“பார்த்தியா மகனே நான் தான் சொன்னேல் சுந்தரபாண்டியன் மகன்கள் ஜெகஜால கில்லாடி பயல்கள். அவனுங்களை போட வேகம் மட்டும் இருந்தா பத்தாது விவேகமும் வேணும் தென்னரசு உனக்கு அந்த வள்ளல் பத்தாது என்கிட்ட விட்டிரு நமக்கு ஆள்பலம் இல்லைனாலும் புத்திபலம் இருக்கு. அந்த ஆண்டனிக்கு போன் போடு” என்றதும் தென்னரசுவும் ஆண்டனிக்கு போன் போட்டான்.
“சொல்லு தென்னரசு அடுத்து வேலை வந்துடுச்சா?” என்று வாயில் பீர்பாட்டிலை ஊற்றிக்கொண்டிருந்தான்.
போனை வாங்கிய நாகப்பனோ “என்னடா ஆண்டனி உனக்கு தொழில் பாதிதான் தெரியுமா என்ன? இப்படி அரைகுறையா பண்ணிட்டு போயிருக்க. சந்தனபாண்டியனும் அவன் பொண்டாட்டியும் உயிரோடதான் இருக்காங்க” என்றார் கோபமாக நாகப்பன்.
“வாட் என்ன சொல்றீங்க நாகப்பன். நான் இது வரை குறி வச்சு அடிச்சது தப்பினதே இல்லை தெரியுமா! இதுதான் முதன் முறை” என்றவன் தான் செய்த காரியம் தவறி விட்டதே என்ற கோவத்தில் காலியான பீர்பாட்டிலை சுவற்றில் ஓங்கி அடித்தான்.
“நீ ஏப்ப சாப்ப ஆளை போடலை ஆண்டனி சந்தனபாண்டியன் மேல கைவச்சிருக்க. இனி நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ! சந்தன பாண்டியன் உன்னை சும்மா விடமாட்டான்” என எச்சரிக்கை படுத்த.
“என் வேலையில எப்போ சரியா பண்ணலையோ உங்க பணம் எனக்கு வேணாம்! இப்பவே நீங்க அனுப்பின பணம் உங்க அக்கௌண்டிற்கு வந்துடும்! என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என வெடுக்கென பேசி போனை வைத்தவனோ ‘எப்படி தப்பிச்சிசாங்க’ என்று குமட்டில் குத்திக்கொண்டான் ஆண்டனி.
இரண்டு பக்கமும் கார்கள் முன்பக்கம் லாரியிலிருந்த கம்பிகள் போவதையும் அடுத்து என்ன நடக்கும் இது எதிரிகளால் தங்களுக்கு விட்ட சவால் என்பதை ஊகித்த சந்தனபாண்டியன் நொடிபொழுதில் தேன்மொழியை அணைத்துப்பிடித்ததில் சந்தனபாண்டியன் கைகளில் மட்டும் கண்ணாடித்துண்டுகள் கீறி ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.
தங்களை சுற்றியுள்ள வாகனங்கள் புறப்படும் சத்தம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு “குட்டி பொண்ணு எழும்புடி” என்றான் மெதுவாக.
தேன்மொழியோ மயங்கியே விட்டாள். ‘பாவம் பயந்திருப்பா’ என்று அவளை தனக்குள் அணைத்தப்படியே இருந்தான் காருக்குள். கண்ணாடி துண்டுகள் அவன் கைக்குள் இருந்ததுதான். இரத்தம் வேறு வந்துக் கொண்டிருந்தது. மேலே எழுந்தால் இரும்பு கம்பிகள் இருவரையும் பதம் பார்த்துவிடும் அப்படியே வலியை பொறுத்துக்கொண்டு பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து தங்கபாண்டியனுக்கு போன் போட்டான்.
“அண்ணா தம்பி தான் பேசுறான்” என்று சிரித்த தங்கபாண்டியன் “சொல்லுடா பர்சேஸ் எல்லாம் முடிஞ்சுதா! தேனு உன் பாக்கெட்டை காலி பண்ணிட்டாளா?” என்று கேலி செய்து கேட்டான்.
“அண்ணா ஒரு சம்பவம்” என அவன் குரல் வலியுடன் வந்தது. நடந்த விசயத்தை அச்சு பிசகாமல் சொல்லி “அருள் அண்ணாவுக்கு தெரிய வேண்டாம்ணா இது ஆக்ஸிடன்டாவே இருக்கட்டும் அவனுங்களை என்ன பண்ணலாம் அண்ணா சொல்லு” என்றான் கோபம் கொப்பளிக்க.
அருள்பாண்டியன் தங்கபாண்டியன் முகத்தை பார்க்க இப்போதைக்கு அண்ணா அங்கே வரவேண்டாம் என்று எண்ணியவனோ “உனக்கு கைவலியா இருக்கும்ல மதினிகிட்ட சொல்லி ஒத்தடம் கொடுக்கச் சொல்லு! கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடறேன்” காரை கேட் தாண்டும் வரை மெதுவாய் ஓட்டியவன் கேட்டை தாண்டியதும் புயலை போல ஓட்டினான் தங்கபாண்டியன்.
வீட்டுக்குள் போன அருள்பாண்டியனுக்கு தோள்பட்டை வலியாக இருக்க வளர்மதியை தேடி சமையல்கட்டை எட்டிப்பார்த்தான். ஸ்கூலிலிருந்து வரும் மகன் நந்தனுக்காக முளைகட்டின பாசிபயிறை தாளித்துக்கொண்டிருந்தாள். “வளரு” என்றவனின் குரல் பிசிறி தட்டியது. என்றைக்கும் சமையல்கட்டுக்கு அதிகம் தேடி வந்ததில்லை அருள்பாண்டியன். இன்று அதுவும் இந்த மாலை வேளையில் தன்னை தேடி வந்திருக்கும் கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு ஏதோ பொறி தட்ட “என்னாச்சுங்க ஏதும் உடம்புக்கு பண்ணுதா?” என்று பதட்டத்துடன் அடுப்பை அணைத்துவிட்டு வேகமாக கணவனின் அருகே வந்தாள் வளர்மதி.
“ஹேய் ஒண்ணுமில்லை அரிசி ஆலையில் மூட்டை கைமேல விழுந்துருச்சு கொஞ்சம் தைலம் எடுத்துட்டு வந்து தேய்ச்சுவிடறியாடா” என்றவனின் குரலில் வலி அப்பட்டமாக தெரிந்தது. காய்ச்சல தலைவலி என்றால் கூட படுக்காதவன் இன்று பொன்மணி தள்ளிவிட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தென்னரசுவின் முன்னே தன் குடும்பம் அவமானப் படவேண்டியதாய் போச்சே. தன் தந்தையின் உயிரை பறித்தவன் இன்னும் ஜம்மென்று இருக்கிறானே என்ற ஆதங்கமும் அவனை பலவீனம் அடையச் செய்தது.
“நீங்க வாங்க நா.நான் தைலம் தேய்ச்சு விடறேன்! எப்பவும் ஜாக்கிரதையா இருப்பீங்கல்ல இன்னிக்கு என்னாச்சு ஏன் கவனத்தை எங்கே வைச்சிருந்தீங்க!” என்று ஆற்றாமையோடு கேட்டவள் அருள்பாண்டியனின் கையை பிடித்துக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றதும் “கதவை லாக் போடேன் மதி” என்றான் கண்ணை மூடி திறந்து.
அருள் பாண்டியன் வளர்மதி இருவருக்கும் கல்யாணம் ஆன நாளிலிருந்து கணவனின் கண்ஜாடையை வைத்தே அதன்படி நடப்பவள் வளர்மதி. இருவரும் தங்கள் காதலை வெளியே எப்போதும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அறைக்குள் மட்டுமே காதலை காட்டிக்கொள்ளும் தம்பதிகள். அருள் பாண்டியன் தங்கள் திருமண நாளில் வளர்மதியை கோவிலுக்கு கூட்டிச்செல்வான் பூ புடவை வாங்கித்தருவான் அவ்வளவே.
கல்யாணம் அன்று முதல் இரவிலேயே “உனக்கு என்ன வேணுமோ என்னை கேட்க வேண்டிய அவசியமில்லை. உனக்காக ஒரு அக்கௌவுண்ட் ஓபன் பண்ணியிருக்கேன்! இந்தா ஏடிஎம் கார்ட்! நீ உனக்கு வேண்டியதை வாங்கிக்க! என்னை எதிர்பார்க்காதே! அப்புறம் தம்பிங்க இருக்காங்க அவங்க முன்னாடி நாம பார்த்து நடந்துக்கணும்! அவங்களை உன் தம்பிகளா நினைச்சு பார்த்துக்கோ! அப்பத்தா என்னதான் பாசமாக பார்த்துக்கிட்டாலும் அவனுங்களுக்கு அம்மா இல்லாத குறையை நீ தீர்த்து வைப்பேனு நினைக்குறேன்! அதுக்காக உன்னை வயசானவனு சொல்லலைடி” என கண்ணைச்சிமிட்டி அன்று அவள் கண்ணில் முத்தம் இட்டு அவள் இதழில் முத்தமிட்டு அவள் மென்மலர்களை இதழ் கொண்டு பூஜை செய்து அவளை தங்கமாய் பூஜித்தான். இன்று கணவன் மாலை வேளையில் கதவை அடைக்க சொல்கிறான் என்றால் எவ்வளவு அவன் மனதில் வலியும் வேதனையும் இருக்கும் என்பதை புரிந்துக் கொண்டவளாக தைலத்தை எடுத்துக்கொண்டு அவன் அருகே உட்கார்ந்தாள்.
சட்டையை கழட்டியதும் அவனது தோள்பட்டையில் இரும்பு தூணில் இடித்தது செக்கச் செவேலாக சிவந்து கன்றிப்போயிருந்தது கொஞ்சம் வீக்கமும் இருந்தது.
“அச்சோ என்னங்க இது இப்படி வீங்கியிருங்கு ஹாஸ்பிட்டல் போனீங்களா? இ.இது மூட்டை விழுந்தது போல தெரியலையே. எதிலயோ இடிச்சிக்கிட்டீங்களா இல்லை யா.யாராவது?” என்று தயங்கினாள். ஏனென்றால் அருள்பாண்டியன் சென்றதும் பொன்மணியின் வீட்டுக்கு சரியாக யூகித்து கேட்டுவிட்டாள்.
மனைவியிடம் மறைக்காமல் மாமன் வீட்டில் நடந்ததை கூறியதும் “நீங்க சூதானமா இருந்திருக்கணும்ல. அவங்க பெரியவங்க தேன்மொழி கழுத்துல நம்ப தம்பி சந்தனபாண்டியன் தாலி கட்டினதால கோவத்துல இருக்காரு! அதை பெரிசு பண்ண வேண்டாம்” என சொன்னவளை அணைத்துக்கொண்டு உச்சி முத்தம் கொடுத்தான்.
“நீ எனக்கு பொண்டாட்டியா கிடைக்க நான் தவம் செய்திருக்கணும்டி! வீட்ல இருக்க அத்தனை பேரையும் அனுசரிச்சு போற. ஏன் ஆர்த்தி உன் கிட்ட விவாதம் பண்ணி பேசினதும் நான் பார்த்தேன். நீ என்கிட்ட ஒரு வார்த்தை ஆர்த்தியை பத்தி பேசலையே! நீ இந்த வீட்டோட மூத்த மருமகளா நடந்துக்கிட்ட உன் இடத்துல வேற யார் இருந்தாலும் உன்னை போல எல்லா விசயத்துலயும் விட்டுக்கொடுத்து போவாங்களா தெரியலைடி” என்று வளர்மதியை அணைத்தபடியே இருந்தான்.
ஒரே நேரத்தில் பத்து பேரை அடிக்க கூடிய பலம் அருள்பாண்டியனிடம் இருந்தாலும் தன் மனக்காயங்களை மனைவியிடம் கூறி அவனின் மனபாரத்தை இறங்கி வைத்துவிடுவான்! மனைவி கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் பெரியவர்கள். அருள் பாண்டியன் உண்மையில் கொடுத்து வைத்தவன்தான்.
“ரொம்ப வலிக்குதாங்க” என்று அவன் கன்றி போன காயத்தில் மென் முத்தம் பதித்தாள் பெண்ணவள். “இன்னுமொரு முத்தம் கொடுடி இதமா இருக்கு” என்றான் குறும்பாக கண்ணைச்சிமிட்டி.
“யோவ் கை வலிக்குது கதவை மூடி தைலம் தேய்ச்சி விடுனு சொல்லிட்டு. நீ பார்க்குற பார்வையே சரியில்லை. நந்துக்குட்டி வர நேரமாச்சு. நைட் நந்துகுட்டியை சீக்கிரம் தூங்க வைக்குறேன்” என்றாள் வெட்கம் கலந்த புன்னகையோடு. அவளின் இதமான பேச்சு அவனுக்கு எப்போதும் பிடிக்கும்.
“நந்து வர இன்னும் ஒருமணிநேரம் இருக்கு, என் வலியை போக்கமாட்டியா” என்றான் தாபத்துடன் அவளது நெற்றியில் முட்டி
“என்ன வம்பா இருக்கு உங்களோட. நான் இப்போ தைலம் தேய்ச்சி விடறேன்” என்று தைலத்தை தேய்த்து விட்டாள்.
“இப்போல்லாம் உன் புருசனை கவனிக்கவே மாட்டேங்கிறடி” என்றான் காதல் பார்வையுடன்.
தைலத்தை மெதுவாக போட்டு விட்டு “இதுக்குதான் கதவை மூடச் சொன்னீங்களா! இந்த நேரம் அப்பத்தா வயலிலிருந்து வந்துடுவாங்க. இப்போ போய் நம்ம அறை கதவு தாழ் போட்டிருந்தா என்ன நினைப்பாங்க” என்று அவள் எழும்ப பார்க்க.
“அப்பத்தா பேரன் சந்தோசமா இருக்கான்னு அமைதியா போயிடுவாங்க! இருடி போகாத” என்று அவள் கைபிடித்து உட்காரவைத்தவன் சட்டென்று அவளது மடியில் படுத்துவிட்டான். மடியில் படுத்தவனை எழும்பி விட மனமில்லை வளர்மதிக்கு. அப்படியே தலை முடியை கோதிக்கொடுக்க அவளது வயிற்றில் முகம் புதைத்துக்கொள்ள அவனது மீசை அவளுக்கு குறுகுறுப்பை ஊட்ட “அருளு உன் வேலையை காட்டாதேடா! எனக்கு இன்னும் பல வேலையிருக்கு” என்று கணவனின் தலைமுடியை கோதுவதை அவள் நிறுத்தவில்லை.
“என்னை கவனிக்கறது உன் வேலை தானே பொண்டாட்டி” என்று தலையை நிமிர்ந்து பார்த்து பதில் பேச “வர வர நீங்க புதுசா கல்யாணம் ஆனவரு போல நடந்துக்குறீங்க. நேத்து கூட என்ன பண்ணி வச்சிருக்கீங்க. இங்க பாருங்க” என்று இடுப்பு சேலையை நகர்த்திக்காட்டினாள். அவனது பல்பட்டு காயம் ஆகியிருந்தது.
“அச்சோ அதுக்கு மருந்து போட்டு விடறேன்” என்று அவளது வெற்று இடையில் முத்தம் வைத்தான்.
“அருள்” என்று அடுத்து அவன் உதடு போகும் இடத்தை கண்டு உதடு கடித்தாள். அந்தரங்க நேரம் கணவனின் பெயரை உச்சரித்துக்கொள்வாள். அடுத்து அவனது கரங்கள் அவளது மாராப்பை தள்ளிவைக்க கணவனின் தேவையை உணர்ந்தவள் அவன் கேட்டதும் அவனுக்கு வசதி செய்து கொடுத்தாள். தாய்மடிதேடும் கன்றாக மாறினான்! அருளோ “ஐ நீட் யூ மதி!” என்று அவளை இறுக்கி அணைத்து அவனது தேடல் தொடங்கினான். கணவனின் தேவையை பூர்த்தி செய்தாலும் மகன் வந்துவிடுவானே என்று அவள் மனதில் மணி அடிக்க “அருள் நந்து வந்துருவான் ப்ளீஸ்” என்று கண்களால் கெஞ்சி “நைட் நைட்” என்று அவனிடமிருந்து பிரிந்து குளியலறைக்குள் ஓடிவிட்டாள் வளர்மதி.
அவள் குளித்து வந்ததும் “மறுபடியும் கைவலிக்குதுடி மருந்து போட்டு விடு” என்றான் முகத்தை அப்பாவிபோல வைத்து.
“போடா பின்னே நீ செய்த வேலைக்கு கை வலிக்காம மணக்குமா நான் மருந்து போடமாட்டேன். உங்க தம்பிங்ககிட்ட சொல்லி போட்டுக்கோங்க” என்று தலைதுவட்டியவள் கிளிப்போட்டு அங்கேயிருந்தால் தன்னை விடமாட்டான் என்று வெளியே ஓடிவிட்டாள் வளர்மதி.
வளர்மதியிடம் வம்பிழுத்து பார்க்கவே வலியிருப்பதாக கூறினான். அவனுக்கு அவளின் ஆறுதல் தேவைப்பட்டது. ஆறுதலும் படுத்தி விட்டாள். மீசைக்குள் சிரித்துக்கொண்டவன் குளிக்கச் சென்றுவிட்டான் அருள் பாண்டியன்.
தங்கபாண்டியனோ எவ்வளவு தைரியம் இருந்தா இந்த தென்னரசு ஆளை வச்சி என் தம்பியை போடப்பார்த்திருப்பான் என்று அடக்கமாட்டா சினத்துடன் ஸ்டேரிங்கில் குத்திக் கொண்டு காரை ஓட்டியவன் சந்தனபாண்டியன் சொன்ன இடத்திற்குச் சென்றான்.
காருக்குள் இரும்புகம்பிகள் இருந்ததை கண்டவனுக்கு உடம்பெல்லாம் பதறியது. இப்போது இருவரையும் காப்பாற்ற வேண்டுமென்று எண்ணம் மட்டுமே தங்கபாண்டியன் மூளையில் பதிவாகியிருந்தது.
சாலை பராமரிப்பு போர்ட் வைத்திருக்க அந்த வழியாக அதிகம் வாகனங்கள் வராமல் இருந்தது. சந்தனபாண்டியனை போட ப்ளான் செய்துதான் போர்ட்டை திருப்பி வைத்திருந்தான் ஆண்டனி.
கம்பிகளை அகற்றிவிட்டு “மெதுவாய் எழும்புடா. தேனுகுட்டி பத்திரம்” என்றான் தாய்மாமனாக தங்கபாண்டியன்.
“ம்ம்” என்றவனோ தனக்குள் புறாக்குஞ்சாக பொத்தி வைத்திருந்தவளை மெல்ல தூக்கிக்கொண்டு வெளியே வந்தான். தேன்மொழிக்கு ஒரு துளி கீறல் கூட அவளது உடம்பில் இல்லை.
ஏதேச்சையாக சந்தனபாண்டியனின் கைகளை பார்த்தான் தங்கபாண்டியன். “அச்சோ தம்பி கையில இரத்தம் வருதுடா! கண்ணாடித்துண்டு கைக்குள் இருக்குடா! தேனுவை என்கிட்ட கொடுத்துட்டு கார்ல உட்காரு சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றான் மனத்தாங்கலுடனும் பதட்டத்துடனும்
“இல்ல அண்ணா இருக்கட்டும் கை வலியில்லாம இல்லை. எத்தனை சண்டையில கத்தி குத்து வாங்கியிருக்கேன்! இது பெரிசா தெரியலை! கார் கதவை திறந்து விடு” என்றவனோ தங்கபாண்டியன் காரில் ஏறினான்.
கார் கதவை திறந்து விட்டு “ம்ம் உன் பொண்டாட்டிய என் கிட்ட தரமாட்ட! அடேய் அவ எனக்கும் அக்கா பொண்ணுடா” என்று வாய்விட்டு சிரித்துவிட்டான்.
“வலி உயிர் போவுது அண்ணா! இந்த குட்டி வேற ரொம்ப பயந்துட்டா. இன்னும் கண்ணை திறக்கலை! சீக்கிரம் காரை எடு” என்றான் தேன்மொழியை பார்த்துக்கொண்டே.
தேன்மொழியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை வந்தது. மல்லிகா மீது சந்தனபாண்டியன் காதல் வைத்திருந்தது தங்கபாண்யடினுக்கு தெரியும். அவனது காதல் இடையில் சரிந்துவிட்டதும் தெரியும். ஆனால் தம்பியிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை தங்கபாண்டியன். அவனும் காதலித்து திருமணம் செய்தவன் தானே.
தேன்மொழி கழுத்தில் தாலி கட்டியதும் தங்கபாண்டியனுக்கு ஒரு சந்தேகம் மல்லிகாவை வைத்திருந்த மனதில் தேன்மொழியை சற்றென்று தாலிகட்டியது தங்கபாண்டியனுக்கும் திகைப்புதான். தேன்மொழியை பிடிக்காமல் சந்தனபாண்டியன் தாலி கட்டியிருக்கமாட்டான்! என்று தன் தம்பி மேல் மலைபோல நம்பிக்கை வைத்திருந்தான்.
சந்தனபாண்டியன் வந்த காரில் இருந்த நகை, புடவை எல்லாம் தன் காருக்கு மாற்றி வைத்து காரை ஹாஸ்பிட்டலுக்கு விட்டான்.
ஹாஸ்பிட்டல் சென்று சிறிது நேரத்தில் கணிவிழித்த தேன்மொழியோ சந்தனபாண்டியன் கையில் போட்டிருந்த கட்டை பார்த்து மீண்டும் மயங்கியே போனாள்.
“இவ இப்படி சாதாரண ஒரு கட்டுக்கே பயந்து மயங்குறா இவ எப்படியண்ணா கலெக்டர் ஆகப்போறா!” என்று தலையில் கை வைத்தான்.
தங்கபாண்டியனோ “நீ எதுக்கு இருக்க அவளுக்கு தைரியம் கொடுத்து நம்ம ஊருக்கு கலெக்டர் ஆக்கி கொண்டு வருவது உன்னோட பொறுப்பு. அதுக்குத்தான் அவ கழுத்துல தாலி கட்டும்போது நானும் உன்னை எதுவும் தடுக்காம இருந்தேன்” என்றான் அவனது மெதுவாய் தோளில் தட்டி.
தங்க பாண்டியன் தோளில் சாய்ந்திருந்தவள் கொஞ்ச நேரத்தில் கண்விழித்து பார்த்து “மாமா ரொம்ப வலிக்குதா!” என்று சந்தனபாண்டியன் கைக்கட்டை தொட்டு பார்த்தாள் தேன்மொழி கண்ணீருடன்.
“இல்லை குளுகுளுனு இருக்குது! கண்ணாடித்துண்டு கைக்குள்ள ஏறினா வலிக்காம இருக்குமா என்ன!” என்று அவளை முறைத்துவிட்டு “ஏன் டி இப்படியா பயந்து நடுங்கி பொசுக்பொசுக்குனு மயங்கி விழுவ நீயெல்லாம் எங்கத்த கலெக்டர் ஆகபோற” என்று அவளை வெறுப்பேத்தி வேண்டுமென்றே திட்டினான்.
“ம்ம் நீயிருக்க தைரியத்துல கலெக்டர் ஆகலாம்னு இருந்தேன் எனக்கென்ன என் வண்டிக்கு பின்னால மூணு மாமன்களும் வரமாட்டீங்க. எனக்கு காவலுக்கு!” என்று உதடு சுளித்து பழிப்பு காட்டினாள்.
“அடிக்கழுதை” என்று அவளை அடிக்க அடிபடாது இருக்கும் கையை உயர்த்தினான்.
“டேய் நான் இருக்கும்போதே நீ தேனுவை அடிப்பியா” என்று நாக்கை மடித்து கடித்தான் தம்பியை பொய்யாக மிரட்டி “ரெண்டு பேரும் கிளம்பி வாங்க!” என்றவன் “தேனு குட்டி வீட்டில போய் கார் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சுனுதான் சொல்லணும் சரியா” என்று பள்ளி குழந்தைக்கு சொல்வது போல கூறிவிட்டு முன்னால் நடந்தான்.
சந்தனபாண்டியன் நாற்காலியிலிருந்து எழும்பியவன் எப்போதும் போல் வேகமாக நடக்க “அச்சோ பார்த்து மாமா மெதுவா நடங்க கைகட்டு பிரிஞ்சிட போகுது” என்று பயந்து கூறியவள் அவனது முறைப்பில் கண்ணை உருட்டி கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள் தேன்மொழி.
“கண்ணை அப்படி உருட்டாதடி” என்று அவளது கையை பிடித்துக்கொண்டு காருக்கு கூட்டிவந்தான் சந்தனபாண்டியன்.
கையில் கட்டுடன் வந்து நிற்கும் சந்தனபாண்டியனையும் தேன்மொழியையும் பதட்டத்துடன் ஆராய்ந்துக் கொண்டிருந்த தனபாக்கியத்திடம் “அப்பத்தா பெருசா ஒண்ணும் நடக்கலை பாருங்க! சின்ன காயம் தான். கட்டுதான் பெருசா போட்ருக்கான் அந்த டாக்டர். இதோ பாருங்க உங்க பேத்தி மேல ஒரு சின்ன கீறல் கூட விழாம கூட்டி வந்திருக்கேன்” என்றான் புன்னகை முகத்துடன்.
தேன்மொழியோ அம்மாச்சியிடம் நடந்ததை சொல்லிவிடுவோமா என்று சந்தனபாண்டியனை பார்க்க அவனோ அவளது கையை அழுத்தி பிடித்து சொல்ல கூடாது என்று கண்ணைக்காட்டி மிரட்டினான்.
அவளோ “அ.அம்மாச்சி எனக்கு பசிக்குது” என்றாள் தன்னை மறந்து ஏதாவது சொல்லணுமே என்று சொல்லிவிட்டாள்.
‘சரியான சாப்பாட்டு ராணி’ என்று முணுமுணுத்த சந்தனபாண்டியனின் உதடுகள் விரியத்தான் செய்தன.
தங்கபாண்டியன் தனபாக்கியத்திடம் நின்று பேசாமல் சென்றுவிட்டான். ஆர்த்தி சமையல்கட்டில் வளர்மதிக்கு உதவி செய்துக் கொண்டிருந்தாள். “அக்கா இப்போதான் குளிச்சீங்களா தலை ஈரமா இருக்கே” என்று தூண்டி துருவினாள்.
தேன்மொழி குளித்து வந்தவள் “வளரு அக்கா பசிக்குது எனக்கு” என்றவாறே டாப் ஜீன்ஸ்டனுடன் வந்து நின்றாள். ‘நாம டாப் போட்டா மட்டும் என் வீட்டுக்காரன் வரிஞ்சி கட்டி லெக்சர் அடிக்க ஆரம்பிச்சிடுவான். இவளை பாரு எவ்வளவு சுதந்தரமா இருக்கா’ என்று முகத்தை வெட்டினாள் ஆர்த்தி.
“இந்தா பச்சைபயிறு தாளிச்சி வைச்சிருக்கேன் சாப்பிடு” என்று எடுத்துக்கொடுத்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள் வளர்மதி.
இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஆர்த்தி “எனக்கு டயர்டா இருக்கு அக்கா நான் தூங்கப்போறேன்” என்று கிளம்பிவிட்டாள். வளர்மதி வழக்கம் போல சமைத்த பாத்திரத்தை எல்லாம் கழுவ ஆரம்பித்தாள்.
super
Niceeeeeeeee epii ❤️
👌👌👌👌👌👌👌👌👌👌