நிலவு 13
திருவிழா முடிந்து ரிசப்சன் நாளும் வந்தது. பொன்மணியோ சந்தனபாண்டியன் மீது இன்னும் அதே கோபத்துடன்தான் இருந்தார்.
‘மூத்தவ பொன்னி கல்யாணத்தை எப்படி எல்லாம் செய்து பார்க்க ஆசைப்பட்டேன்! அதிலயும் மண்ணை அள்ளிப்போட்டான். இப்போ என் ரெண்டாவது பொண்ணு கல்யாணத்தை என் இஷ்டப்படி நடத்தணும்னு இருந்தேன்! அதிலையும் குறுக்கே வந்து நின்னு கட்டையை போட்டு என் பொண்ணு கழுத்துலயே தாலியும் கட்டிட்டான் இந்த சந்தனபாண்டியன்! உனக்கும் பொண்ணு பொறக்கும்லடா உன் பொண்ணுக்கு இப்படியொரு திருமணம் நடந்தா அப்பத் தெரியும் என் வலியும் வேதனையும் உனக்கு’ என்று சந்தனபாண்டியன் மீது தீரா ஆத்திரத்துடன் கரித்துக்கொட்டி கொண்டிருந்தார்.
தலைவலி வந்ததுதான் மிச்சம். தலையை பிடித்துக்கொண்டு “தேவி காபி கொடு” என்று அதட்டல் போட்டார். அவருக்கிருக்கும் கோபத்தை எல்லாம் தேவி மேலதான் காட்டுவார். அவரும் மகள்களுக்காகத்தான் திட்டு வாங்குறோம் என்று கணவன் பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொள்வார்.
தலையை பிடித்துக்கொண்டிருந்த பொன்மணியிடம் காபியை நீட்டி “என்னங்க இன்னிக்கு சாய்ந்தரம் நம்ம பொண்ணுக்கு ரிசப்சன் நா.நான்” என்று அவர் ஆரம்பிக்க தேவியின் கையிலிருந்து காபி டம்ளரை வாங்கி சுவற்றில் விசிறி அடித்து “நான் உயிரோட இருக்கணும்னா நீ ரிசப்சனுக்கு போகக் கூடாது” என்று அந்த ஹாலே அதிரும்படி கத்தினார்.
“ச.சரிங்க நான் போகலை. நீங்க கோவப் படாதீங்க” என்று தடுமாறி பேசியவர் கீழ விழுந்து ஒடுங்கிப்போன டம்ளரை எடுத்துக்கொண்டு சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார் தேவி.
‘என்னதான் இந்த மனுசனுக்கு ஈகோவோ தெரியலை. நானும் ரெண்டு பொண்ணுங்களை பெத்து ஒரு பொண்ணு கல்யாணத்தை கண்ணார பார்க்க கொடுத்து வைக்கல!’ என்று மனம் கலங்கி ஒரு தாயாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும் ரெண்டு பொண்ணுங்களுக்கும் அவளுங்க மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையைத்தான் கடவுள் அமைச்சு கொடுத்திருக்காரு என்று மனம் ஒரு வித நிம்மதியாக இருந்தது.
பொன்னி கர்ப்பமாக இருப்பதால் ட்ராவல் பண்ண கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்க பொன்னி குழந்தை பிறந்ததும் ஊருக்கு வரேன் என்று சொல்லிவிட்டாள் தனபாக்கியத்திடம்.
தேன்மொழி அரக்கு பச்சை நிறத்தில் வானிலிருந்த வந்த தேவதை போல ஜொலித்துக்கொண்டிருந்தாள். கழுத்தில் சந்தனபாண்டியன் கட்டிய மஞ்சள் கயிறும் ஒரு டைமன் நெக்லஸ், ஆரமும் போட்டிருந்தாள். இதழில் லேசான புன்னகை அரும்பியிருந்தாலும் தந்தையும் தாயும் தன்னுடன் இல்லாமல் இருக்க அவள் மனதுக்குள் பெரும் குறையாய் இருந்தது.
சிரிப்பு அவளிடம் இல்லாமல் மறைந்திருக்க அவள் பக்கம் பச்சை நிற கோட் சூட்டில் ஆணழகனாய் நின்றிருந்த சந்தனபாண்டியனோ தேன்மொழியின் மனதை படித்தவன் “அக்கா இல்லைனு உன் மனசு தவிக்கும்னு எனக்கு தெரியும்டி அதுக்காக இப்படி முகத்துல சிரிப்பே இல்லாம நின்னா ஊர்சனங்க உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் போலனு நினைக்கறப்போறாங்கடி. அதுமட்டுமில்லாம அம்மாச்சி மனசும் ரணப்படும்” என்று அவளிடம் சாதாரணமாக பேசுவது போல புன்முறுவலுடன் பேசியபடியே அவளது கையை ஆதரவாக பற்றிக்கொண்டான்.
சந்தனபாண்டியனின் கையை பிடித்துக்கொண்டு “மா.மாமா எனக்கு இப்பவே அம்மாவை பார்க்கணும் போல இருக்கு!” என்றவளின் கண்கள் கலங்கியது. காலேஜ் படித்துக்கொண்டிருந்தாலும் அவள் இன்னும் தான் சிறுபிள்ளை என்பதை காட்டிவிட்டாள்.
“கண்ணை துடை குட்டிப் பொண்ணு எல்லாரும் நம்மளைத்தான் பார்க்குறாங்க” என்று சிறு அதட்டல் போட அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
‘ம்ப்ச் இவ ரொம்பத்தான் பண்ணுறா’ என்று சலித்துக்கொண்டாலும் தோளில் சாய்ந்தவளை அணைத்துக்கொண்டு அங்கிருந்த பெரிய நாற்காலியில் உட்கார்ந்தான்.
ரிசப்சனுக்கு வந்த சொந்தங்களோ பொண்ணுக்கு கால் வலிக்குது போல அதான் அவ மாமன் மேல சாஞ்சுக்கிட்டா போல என்று கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனால் ஒரு சிலரோ இந்த பொண்ணுக்கு சந்தனபாண்டியனை பிடிக்கலை போலயே என்று கிசுகிசுத்தனர்.
சொந்தங்களிடம் பேசிக்கொண்டிருந்த அருள் பாண்டியனும் தங்கபாண்டியனும் மேடையை பார்க்க அங்கே தேன்மொழி சந்தனபாண்டியன் தோளில் சாய்ந்திருப்பதை பார்த்து ரொம்ப நேரமா நிற்குறா மயக்கம் வந்திருக்குமோ என்று அச்சம் கொண்டு எதிரே வந்த வளர்மதியிடம் “ஜுஸ் எடுத்துட்டு வா வளரு” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான் அருள்பாண்டியன்.
அருள்பாண்டியனும் தங்கபாண்டியனும் மேடையில் ஏறி தேன்மொழி பக்கம் போனவர்கள் அங்கிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து “என்னாச்சு சந்தனபாண்டி தேனுகுட்டி அழறா நீ ஏதாச்சும் சொன்னியா?” என்று தங்கபாண்டியன் சந்தனபாண்டியனை முறைக்க.
சந்தனபாண்டியனோ “அச்சோ அண்ணா உங்க அக்கா மககிட்ட என்ன நடந்துச்சுனு முழுசா கேளுங்க” என்றான் தேன்மொழியை முறைத்துக்கொண்டு. முறைத்தாலும் அவளை தன் தோளிலிருந்து விலக்கி விடவில்லை சந்தனபாண்டியனும். அவன் தோளிலிருந்து தேன்மொழியும் விலகவில்லை.
அதற்குள் வளர்மதி ஜுஸ் கொண்டு வர தனபாக்கியமோ தூரத்து சொந்தங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் வளர்மதி ஜுஸை வேகமாக எடுத்துக்கொண்டு போவதை பார்த்து “ஒரு நிமிசம் இதோ வந்துடறேன்” என்று மணமேடை பக்கம் போனார்.
அங்கே குட்டி கலவரம் செய்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. மூன்று மலைகளுக்குள் குட்டி குன்று போல அமர்ந்திருந்தவளை மேடைக்கு கீழ் இருப்பவர்களுக்கு தெரியாமல் போனது.
“அக்கா பொண்ணுனு இப்படி இவளை கையில் வைச்சு தாங்குறாங்க மூணு மாமனுங்க” என்று வயதான பெண்மணி ஒருவர் பேசி சிரித்துவிட்டுச் சென்றார்.
ரிசப்சன் முடியும் நேரம் என்பதால் கூட்டம் குறைந்துக் கொண்டு இருந்தது. நெருங்கிய சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தனர்.
வளர்மதி ஜுஸுடன் மேடைக்கு போனவள் அரண் போல தேன்மொழியை மறைத்துக்கொண்டிருப்பதை கண்டு “ரெண்டு பேரும் இப்படி மலையாட்டம் உட்கார்ந்திருந்தா. நான் எப்படி தேன்மொழிக்கு ஜுஸ் கொடுக்கறது. கொஞ்சம் தள்ளி உட்காருங்க” என்று இருவரையும் அதட்டல் போட!
“ஏய் சும்மாயிரு வளரு தேனுக்குட்டி அழுகறானு நாங்களே அவளை சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கோம்!” என்றவன் வளர்மதி கையிலிருந்த ஜுஸை வாங்கி “தேனுகுட்டி உனக்கு பசிக்குதுனு அழறயா இந்தா ஜுஸ் குடி” என்று அவள் கையில் கொடுத்தான்.
தேன்மொழிக்கும் பசியாக இருக்க சந்தனபாண்டியன் தோளிலிருந்து விலகி ஜுஸை வாங்கி குடித்துவிட்டு இப்போது அருள்பாண்டியன் தோளில் சாய்ந்து “மாமா எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு” என்றாள் விசும்பலுடன்.
“ஹான் உங்கப்பன் நீ போனவுடன் வாடா ராஜாத்தினு கட்டியணைச்சுக்குவாரு பாரு! போடி வெளியேனு கழுத்தை பிடிச்சு வெளியே அனுப்புவாரு உன்னை. சும்மா அழுது எல்லாரையும் டென்சன் பண்ணாத தேனு” என்று சந்தனபாண்டியன் அவளிடம் மிரட்டல் போட்டான்.
“அடடா என் பேத்திக்கு என்னாச்சு கொஞ்சம் வழி விடுங்கடா!” என்று தேன்மொழி பக்கம் போக “அம்மாச்சி எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்குனு சொன்னேன்! சின்ன மாமா என்னை திட்டுறாரு நீ என்னனு கேளு” என்று சந்தனபாண்டியனை மாட்டி விட்டாள் தேன்மொழி.
“ஏன் டா அவளை திட்டுற. அருள் நீங்க மூணு பேரும் தேன்மொழியை கூட்டிக்கொண்டு உன் அக்கா வீட்டுக்கு போங்க! என்னதான் நாம தேனுவ தங்கமா தாங்கினாலும் அவளுக்கு பெத்தவங்க கூட இல்லைனு தவிப்பாதான் இருக்கும். ஒருவேளை இப்படி அழற மகளை பார்த்தாலாவது உன் மாமன் மனசு மாறுதானு பார்ப்போம்” என்று பெரும்மூச்சு விட்டார் தனபாக்கியம்.
“அப்பத்தா மூணு பேரும் போனா மூக்கறுபட்டுத்தான் வரணும். உன் பேத்திக்கு ஒண்ணும் தெரியாது பாரு. இப்போ நாங்க அக்கா வீட்டுக்கு போனா அங்க இவ அப்பா வானத்துக்கும் பூமிக்கும் தைய்யா தக்கானு குதிப்பாருனு இவளுக்கு தெரியாது பாரு! ஒழுங்கா சாப்பிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் உங்க பேத்தியை” என்று எழுந்துவிட்டான் சந்தனபாண்டியன்.
“என்ன பேசி பழகுற சந்தனபாண்டி! தாலி கட்டின பொண்டாட்டி அம்மாவை பார்க்கணும்னு அழறா! நீ என்னமோ அவளை கூட்டிட்டு போறேனு சொல்லாம திட்டிக்கிட்டு இருக்க! பொண்டாட்டி விருப்பத்தை நிறைவேத்தி வைக்கறதுதான் ஒரு புருசனோட கடமை! தெரிஞ்சுக்கோ” என்று கோபமாக பேசியவர்
“யாரும் தேன்மொழி கூட போக வேண்டாம் சந்தனபாண்டி நீ மட்டும் தேனுவை கூட்டிட்டு போய்ட்டு வா” என்றார் கட்டளையாக.
“உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு கூட்டிட்டு போறேன்” என்றவனோ
விசும்பிக்கொண்டிருந்த தேன்மொழியை பார்த்து “சும்மா அழறத நிறுத்திட்டு எழும்பி வா” என்று வேகமாக முன்னே நடந்தான் சந்தனபாண்டியன்.
தேன்மொழியோ “அச்சோ அருள் மாமா தங்கம் மாமா நீங்களும் என்கூட வாங்க சின்ன மாமா நான் தனியா போனா திட்டும்” என்று இதழ் பிதுக்கினாள்.
“ஏய் ரொம்ப சீன் போடாத தேனு. என் கொழுந்தன் நல்ல பையன் நீதான் ஓவரா வாய் பேசி அவனை கோபப்படுத்துவ எழுந்து போடி” என்றாள் சின்னச் சிரிப்புடன் வளர்மதி.
‘எல்லாரும் சேர்ந்து என்னை சிங்கத்து கிட்ட தனியா மாட்டிவிட்டாங்க. நான் பாவம்’ என்று நினைத்தாலும் அம்மாவை பார்க்க போகிறோம் என்ற சந்தோசத்தில் சந்தனபாண்டியன் பின்னால் சென்றாள்.
தன் பின்னால் வந்தவளை “சாப்பிட்டு போகலாம் வா தெம்பா சாப்பிட்டு உங்க அப்பன் திட்டுறதை போய் வாங்கலாம் வா” என்று அவளை சாப்பிடும் இடத்திற்கு கூட்டிச்சென்றான் அவள் பசியறிந்தவனாக.
சாப்பிட ஆரம்பிக்க போட்டோகாரர்களின் தொந்தரவுகளில் இது ஒண்ணுதான் குறைச்சல் என்று தட்டில் இருந்த குலோப்ஜாமூனை தேன்மொழியின் வாயில் ஊட்டிவிட்டான். அவளும் வாயை திறந்து வாங்கிக்கொள்ள “நீங்களும் மாப்பிள்ளைக்கு ஊட்டுங்க” என்றதும் “ஒருத்தர் ஊட்டினா போதும்” என்றான் சந்தனபாண்டியன்.
தேன்மொழியின் முகம் வாடியதும் “ம்ம் ஊட்டு” என வாயை திறந்தான். அவளோ புன்னகை பூத்து குலோப்ஜாமூனை சந்தனபாண்டியனுக்கு ஊட்டிவிட்டாள். போட்டோகிராபர் போட்டோவை எடுத்து முடிக்க சாப்பிட்டு முடித்த தேன்மொழியின் கைபிடித்து காருக்கு கூட்டிச்சென்றான் தங்கபாண்டியன்.
குடும்பம் மொத்தமும் காரின் முன்னே தான் நின்றது போருக்கு போகிறவனை வழி அனுப்புவது போல.
“உன் மாமன் கோபப்பட்டாலும் நீ நிதானமா இருக்கணும்” என்றார் தனபாக்கியம்.
“சரி அப்பத்தா நான் பேசமாட்டேன்” என்று காரை எடுத்துவிட்டான் சந்தனபாண்யடின்.
“அப்பத்தா நாங்க வேணா இப்ப கிளம்பி போகட்டுமா? அங்க மாமா ரொம்ப கோவமா இருப்பாரு. தம்பியை பார்த்ததும் சாமி ஆடுவாரு சந்தனபாண்டி ஒருத்தனால சமாளிக்க முடியாதுல்ல” என்றான் தவிப்பாய் அருள்பாண்டியன்.
“சின்னவன் பார்த்துப்பான் பிரச்சனை பெருசானா உன் அக்கா போன் போடுவா வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்று தனபாக்கியம் காரில் ஏறி உட்கார்ந்துக் கொண்டார். மொத்த குடும்பமும் காரில் ஏற ஆர்த்தி தான் இப்படியொரு குடும்பத்தில் வந்து மாட்டிக்கொண்டேனே என இவர்களை விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘மாமா என்ன பேசினாலும் நாம எதிர்த்து பேச்கூடாது அக்காவுக்காக நாம அமைதியா இருக்கணும்! ஆனா நம்மளால மாமா பேசுறதை கேட்டு சும்மா இருக்கு முடியுமா?’ என்று யோசித்தபடியே காரை ஓட்டினான்.
தேன்மொழியோ ‘நாம பாட்டுக்கு மாமாவை கூட்டிட்டு போறோம் அங்க சண்டை நடக்க கூடாது! என்னை பார்த்தா அப்பா மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.’ என்ற அசட்டு நம்பிக்கையில் சந்தனபாண்டியனுடன் வந்துக் கொண்டிருந்தாள் அவள்.
சந்தனபாண்டியன் தன் கழுத்தில் தாலி கட்டியதும் பொன்மணி தாலியை கழட்டி விட்டு தன்னுடன் வருமாறு கூப்பிட்டதை மறந்து போனாளோ என்னவோ! அவளுக்கு தன் தந்தையின் ஒரு முகம் மட்டுமே தெரியும். பொன்மணியின் இன்னொரு ஈகோ முகத்தை பற்றி அறியாது போனாள் தேன்மொழி.
தேன்மொழியை திரும்பி பார்த்தான். அவளோ கண்ணை மூடியபடிய கடவுளை வேண்டிக்கொண்டு வந்தாள். ‘உனக்காகவும் தான் டி வரேன். ஆயிரம்தான் நானும் அப்பத்தாவும் அண்ணாக்களும், உன்னை கையில வைச்சு தாங்கினாலும் அம்மாவை பார்க்கணும்னு சொல்லிட்டியே. அதான் என்ன நடந்தாலும் பரவாயில்லைனு கூட்டிட்டு வரேன்’ என்றான் தேன்மொழியை பார்த்துக்கொண்டே.
தன்னை பார்ப்பது போல அவளுக்கு தோன்ற தலையை திருப்ப அவனோ காரை ஓட்டுவது போல பாவ்லா காட்டிக்கொண்டான்.
தேவியோ பொன்மணி தன்னுடன் கோவித்துக்கொண்டு வெளியேச் சென்றவர் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் வாசலில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து காத்திருந்தார் கணவனுக்காக.
இந்நேரம் ரிசப்சன் முடிஞ்சிருக்கும் எனக்குத்தான் என் பொண்ணையும் என் தம்பியையும் பார்க்க கொடுத்து வைக்கலையே என்று கண்ணீருடன் அமர்ந்திருந்தார் தேவி.
சந்தனபாண்டியன் காரை வாசல் முன்னே நிறுத்தினான். ‘அட சந்தனபாண்டியன் காரு வந்திருக்கு. இவன் ஏன் இந்த நேரம் இங்க வந்தான். அச்சோ இவரு வந்தா வம்பா போய்டுமோ. ஏன் இங்க வந்திருக்கான்?’ என்று தேவியின் மனம் பதைபதைத்தது.
தேவி வாசலில் உட்கார்ந்திருப்பதை பார்த்த தேன்மொழியோ சந்தனபாண்டியன் காரை நிறுத்தியதும் கதவை திறந்துக் கொண்டு தேன்மொழி தேவியிடம் ஓடிவந்தாள் பட்டுச்சேலை சரசரக்க.
சந்தனபாண்டியனோ தன்னை நிதானப்படுத்திக்கொண்டு காரை விட்டு இறங்கினான்.
“அம்மா என்னை பார்க்க நீ வரலைல. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?” என்று தேவியை அணைத்துக்கொண்டு விம்மினாள் தேன்மொழி.
“இப்போ என்னடி உனக்கு என்னைய பார்க்கணும்னு தோணுச்சு. அதான கோவில் தேர் அன்னிக்கு பார்த்தோம்ல. இந்த நேரம் தம்பியை கூட்டிட்டு வந்திருக்க. என்னை பார்க்கணும்னு அடம்பிடிச்சியா. இல்லைனா அப்பத்தா இந்த நேரம் உன்னை அனுப்பி வைக்காதே!” மகளின் குணம் அறிந்து பேசினார் தேவி.
“ம்ம் தேர் அன்னிக்கு நீ என்கிட்ட பேசலையே அம்மா. நான் அப்படி என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன். அப்பா என் மேல இன்னும் கோவமா இருக்காரு. அந்த தென்னரசுக்கு நிறைய பொண்ணுங்க கூட காண்டாக்ட் இருக்கு தெரியுமா! அவனுக்கு போய் அப்பா என்னை கல்யாணம் பண்ணிக்கொடுக்க பார்த்தாரே அம்மா” என்று கண்ணீருடன் கேட்டாள்.
“நான் என்னடி பண்ண முடியும்!” என்று சொல்லிக்கொண்டிருக்க. எங்கிருந்து வந்தாரோ பொன்மணி சரியான சமயத்தில் வந்துவிட்டார். சந்தனபாண்டியன் கையை கட்டிக்கொண்டு நிற்பதையும் தேன்மொழி தேவியை அணைத்துக்கொண்டு நிற்பதையும் பார்த்தவருக்கு பற்றிக்கொண்டு வந்தது.
‘நான் அவ்வளவு தூரம் சொல்லிட்டு போயிருக்கேன் இவ அவ பொண்ணை கட்டிப்பிடிச்சு கொஞ்சிட்டு இருக்கா’ என்ற அதிக சினத்துடன் காரை நிறுத்தி விட்டு இறங்கி வேகமாக வந்து தேன்மொழியை கையை பிடித்து இழுத்து விட தடுமாறி விழப்போனவளை சந்தனபாண்டியன் தாங்கிக்கொண்டான்.
“என்னங்க உங்களுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா புள்ளை கையை இப்படித்தான் இழுத்து விடுவீங்களா. இன்னேரம் அவ கீழ விழுந்து அடிப்பட்டிருச்சுனா என்ன ஆகுறது” என்று பொன்மணியை எதிர்த்து பேசினார் தேவி.
“இப்ப நல்லா புரியுதுடி நான் எப்ப வெளியே போவேனு காத்திருந்து உன் தம்பியையும் உன் புள்ளையையும் கூப்பிட்டு விருந்து வைக்குறியாடி. உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்” என்று தேவியை கன்னத்தில் அறைய போக அதுவரை பொறுத்துக்கொண்டு இருந்த சந்தனபாண்டியன் “மாமா என் மேல இருக்க ஆத்திரத்தை அக்கா மேல காட்டாதீங்க. தேன்மொழி அக்காவை பார்க்கணும் பேசணும் போல இருக்குனு அழுதா அதான் இப்ப கூட்டிட்டு வந்தேன் போதுமா. நாங்க இப்ப கிளம்பிடறோம்” என்றவனோ அழுதுக் கொண்டிருந்த தேன்மொழியை “வா போகலாம்! இங்க இருந்தா இந்த மனுசன் மிருகமாக மாறிடுவாரு” என்று அக்காவை அடிக்க போகிறாரே என்று ஆற்றாமையில் தேனுவின் கையை பிடித்து காருக்கு பக்கம் போனான் சந்தனபாண்டியன்.
“நான் மிருகமா மாறுனதுக்கு நீதான் டா காரணம்” என்று ஓடி வந்தவர் சந்தனபாண்டியனின் சட்டையை இழுத்துப்பிடித்தார்.
சந்தனபாண்டியனோ கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு நின்றான்.
“என்னடா உனக்கு இந்நேரம் கோபம் வந்திருக்கணுமே” என்று இன்னும் சட்டையை இறுக்கிப்பிடிக்க முதல் பட்டன் அறுந்து கீழே விழுந்தது.
“அப்பா மாமா சட்டையை விடுங்க. வீட்டுக்கு வந்த மருமகனை வானு வீட்டுக்குள்ள கூப்பிடலைனாலும் பரவாயில்லை இப்படியா! எங்களை வாசலில் நிற்க வைச்சு அவமானப்படுத்துவ. நான் நீ பெத்த பொண்ணு தானே என்னை மன்னிச்சு ஏத்துக்க மாட்டியா?” என்று சந்தனபாண்டியன் சட்டையில் கை வைத்திருக்கும் பொன்மணியின் கையை தட்டிவிட்டாள்.
“என் பொண்ணு நான் கோடு போட்டா கோடு தாண்ட மாட்டா ஆனா இப்போ என்னையே எதிர்த்து பேச வச்சிட்டீல்ல” அதற்கும் சந்தனபாண்டியனையே திட்டினார் பொன்மணி.
தேன்மொழியிடம் திரும்பிய பொன்மணியோ “உனக்கு ஒண்ணு தெரியுமா தேன்மொழி. நான் பார்த்த தென்னரசுவை பெண்களோட பழக்கம் இருக்குனுதானே அவனை நீ கட்டிக்கலை. இதோ இவன் கட்டின தாலியோட நிக்குற. இவன் மட்டும் யோக்கியனா என்ன! மல்லிகா டீச்சர் பின்னால சுத்திக்கிட்டு இருந்தவன் தானே எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சானா உன் புருசன். எல்லா ஆம்பிளையும் கல்யாணத்துக்கு முன்னால அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க” என்றதும் தேன்மொழிக்கு தென்னரசுவுடன் சந்தனபாண்டியனை ஒப்பிட்டு பேசியது கோவத்தை கொடுக்க
“அப்பா அந்த பொம்பள பொறுக்கி தென்னரசு கூட என் புருசனை சேர்த்து வைச்சு பேசாதீங்க. என் புருசன் கால் தூசி கூட அந்த தென்னரசு வரமாட்டான். என் மாமா சொக்க தங்கம். எனக்கும் மல்லிகா டீச்சர் கூட மாமா பழகினது தெரியும். ஆனா மாமா மனசுல இப்ப அவங்க இல்லை. அப்படியிருந்தா என் கழுத்துல தாலி கட்டியிருக்காது! என்னை வேற விதமா காப்பாத்தியிருக்கும் தெரியுமா. இன்னொரு முறை என் புருசனை என் கண்ணு முன்னாடி அடிக்கறதை பார்த்தா நான் மனுசியா இருக்க மாட்டேன். இப்படி உங்க பொண்ணு கல்யாணக் கோலத்துல வந்து வாசல நிற்குறேன் அப்பவும் பிடிவாதம்தான் முக்கியம்னு இருக்கீங்கப்பா! வாங்க மாமா போகலாம் மரியாதை இல்லாத இடத்துல நாம இருக்க வேண்டாம்” என்று சந்தனபாண்டியனின் கையை பிடித்துக்கொண்டு காரில் ஏறினாள் தேன்மொழி.
பொன்மணி மகள் பேசியதை கண்டு விக்கித்து போய் நின்றார்.
நிலவு 14
‘ம்ம் எலிக்குட்டி போல இருந்துட்டு என்ன வாய் பேசுறா இந்த குட்டி! என்மேல அவ்வளவு பாசமா வைச்சிருக்கடி! இல்ல நான் உன் கழுத்துல தாலி கட்டினதால உன்னோட புருசன் என்னை யாரும் அவமானப்படுத்தி பேசக்கூடாதுனு நினைச்சியாடி! ம்ம் என்ன இருந்தாலும் நீ சந்தனபாண்டியன் பொண்டாட்டினு நிரூபிச்சிட்டடி என் செல்லாக்குட்டி!’ என்று தேன்மொழியை மனதிற்குள் கொஞ்சியவன் “போலாமா!” என்று தேன்மொழியை பார்த்து தலையை அசைத்து கேட்டான்.
“போலாம் மாமா” என்று தலையை அவளும் அசைத்தாள்.
தேவியிடம் கூட போய்ட்டு வரேன் என்று சொல்லாமல் காரில் ஏறினாள் தேன்மொழி. கார் நகர்ந்ததும்
“பார்த்தியாடி உன் புள்ளையை என்ன பேச்சு பேசுறானு. இத்தனை வருசமா அவளை ஒரு வார்த்தை அதட்டிப் பேசியிருப்பேனா! அவ கேட்டு நான் என்ன வாங்கித்தராம இருந்திருக்கேன்! பெரியவ பொன்னிய விட இவமேல தானே என் உயிரையே வச்சிருந்தேன்! இவ இன்னிக்கு நான் பார்த்து வளர்ந்தவன் முன்னாடி என் புருசனை அடிக்க உங்களுக்கு உரிமையில்லைனு கை நீட்டி மிரட்டிப் எதிர்த்து பேசுறா. என்ன கொழுப்பு இருக்கணும் இவளுக்கு! உன் தம்பி பின்னாடி மகுடிக்கு மயங்கின பாம்பு போல போறா பாரு! இவ இப்படி பேசறதுக்கும் முழு காரணமே உன் தம்பி சந்தனபாண்டியன்தான் டி! கூட்டிட்டு வரும் போதே உன் அப்பாகிட்ட இப்படி பேசுனு ட்யூசன் எடுத்துட்டு வந்திருப்பான் உன் உடன்பிறப்பு. அதான் என் பொண்ணு என்னையே எதிர்த்து பேசுறா!” என்று இப்பவும் சந்தனபாண்டியனையே குற்றம்
சாட்டினார் பொன்மணி.
“என்னது நீங்க உங்க புள்ள மேல பாசமா இருந்தீங்களா! அப்படியிருந்தா ஒரு பொம்பளை பொறுக்கிக்கு நீங்க ஆசையா வளர்த்த பொண்ணை கட்டிக்கொடுக்க நினைப்பீங்களாங்க! கிளியை வளர்த்து பூனை கையில கொடுத்தது போல இருந்திருக்கும் நம்ம பொண்ணோட வாழ்க்கை! என் தம்பி அந்த பொம்பளை பொறுக்கிகிட்டயிருந்து நம்ம பொண்ணு வாழ்க்கையை காப்பாத்த நினைச்சுதான் நம்ம தேன்மொழி கழுத்துல தாலிகட்டியிருக்கான்! நியாயமா பார்த்தா நீங்க அவனை தலை மேல தூக்கி வைச்சு கொண்டாடணும்! நீங்க கொண்டாடுவீங்களா என்ன? அது உங்க ஈகோ இருக்கவரை நடக்காது நீங்க மாறவே மாட்டீங்க! ஆனா என் தம்பி மனசு அவன் பெயரை போலவே சந்தனம் போல வாசனையானது! உங்களை போல சாக்கடை மனசுக்கு அவனோட குணம் தெரியாது! சும்மா நான் என் புள்ள மேல பாசம் வச்சேன்! நேசம் வச்சேனு! வாய்க்கு வந்த பொய்யை சொல்லிட்டு திரியாதீங்க! உங்களுக்காக நான் சாப்பிடாம காத்திருக்கேன் எனக்கு பசிக்குது உள்ளார வாங்க!” என்று மனதில் உள்ள ஆதங்கத்தை கணவனிடம் கொட்டிவிட்டு உள்ளேச் சென்றார் தேவி.
‘நீங்களெல்லாம் பேசற நிலமையில இருக்கீங்கடி! நான் கேட்கற நிலமையில் இருக்கேன். எனக்குனு நேரம் வரும் அப்போ இருக்கு உன் குடும்பத்துக்கு!’ என்று பற்களை நறநறவென்று கடித்தவர் தான் மகளின் வாழ்க்கையில் செய்ய இருந்தது தவறென்று தெரியாமல் நான் நினைத்தது நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் பொருமிக்கொண்டுச் சென்றார் பொன்மணி.
அப்பாவை எதிர்த்து பேசிட்டோமே என்று வருத்தம் தேன்மொழியின் மனதிற்குள் வண்டாய் குடைந்துக் கொண்டிருந்தது.
‘அப்பாவும் மாமாவுக்கு மருமகன்கிற மரியாதையை கொடுத்திருக்கணும்ல. நான் என்ன வேற யாரையோவா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! உரிமையுள்ளவனை தானே கல்யாணம் கட்டிக்கிட்டேன். நம்ம வீட்டு பக்கத்துல இருக்கவங்க நடக்கும் சண்டையை எட்டி பார்க்குறாங்க! அவங்க முன்னாடி மாமாவை அடிக்க போனா என்ன அர்த்தம்! எங்க அப்பாவாவே இருந்தாலும் என் புருஷனை அடிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கு! நியாயமா பார்த்தா என்னைத்தான் நீங்க அடிச்சிருக்கணும்பா! அதைவிட்டு மாமா மேல கையை வைக்கிறதை பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலை! அதான் உங்களை எதிர்த்து பேசிட்டேன்பா! என்னை மன்னிச்சிடுங்க’ என்று மனதிற்குள் குமைந்து போனாள். அவளுக்கு கண்ணீரும் வந்து விட்டது. சந்தனபாண்டியன் பார்க்க கூடாதென கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
சந்தனபாண்டியனுக்கும் அவள் கண்ணீரை துடைப்பது தெரிந்து விட்டது. காரை ஓட்டியபடியே தலையை திரும்பி தேன்மொழியை பார்த்தான் சந்தனபாண்டியன். அவன் முகமும் கொஞ்சம் வாட்டமாக இருக்க “மாமா நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது! நான் அம்மாவை பார்க்கணும்னு அழுதேன்! அதான் நீங்க என்னை கூட்டிட்டு வந்தீங்க! வீட்டுக்கு வந்த உங்களை அப்பா அவமானப்படுத்தி பேசறதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியலை மாமா! சாரி என்னால தான் நீங்க அவமானப்பட்டு நிற்க வேண்டியதாய் போச்சு! அப்பா விருப்பப்படி அந்த பொறுக்கிப் பயலையே நான் கல்யாணம் பண்ணியிருக்கலாம்! ரெண்டு குடும்பத்துக்கு நடுவே சண்டையே வந்திருக்காது” என்றாள் வருத்தமாக.
அதுவரை தேன்மொழி தனக்காக தன் அவள் அப்பாவிடமே சண்டை போட்டதை பெருமையாக நினைத்திருந்தவன் அவள் தென்னரசுவை கல்யாணம் செய்திருக்கலாம் என்ற வார்த்தையை தேன்மொழி விட்டதும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தேன்மொழியின் கன்னத்தில் சப்பென்று அறைந்து விட்டான் சந்தனபாண்டியன்.
“ஆஆ மா.மாமா வலிக்குது” என்று கன்னத்தை பிடித்துவிட்டாள். தேன்மொழியின் கண்களில் கண்ணீர் உருண்டு வந்தது. சந்தனபாண்டியனின் ஐந்து விரல்களும் அச்சு போல பதிந்து விட்டது பெண்ணவளின் சிவந்த கன்னத்தில்.
“பொதுவா பொண்ணுங்களை அடிக்கறவங்களை கண்டாலே எனக்கு பிடிக்காது! ஏன் டி இப்படி குதர்க்கமா பேசி என்னையே உன்னை அடிக்க வச்சிட்ட!” என்று பற்களை கடித்துப் பேசினான். அவளது அழுகை அவனை ஏதோ செய்ய அழுதுக் கொண்டிருந்தவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “அந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணியிருப்பேன்னு இனிமே சொல்வியாடி! நான் உன்னை அந்த பொறுக்கி கிட்ட கொடுத்திருப்பேன்னு நினைக்குறியா! நீ என்னோட அக்கா பொண்ணுடி! நீ எனக்குனு பிறந்திருக்க!” என்று அவளது தலையை தடவிக்கொண்டே பேசினான்.
அவள் விசும்பல் நின்றபாடில்லை. “சாரிடி நான் உன்னை அடிச்சிருக்க கூடாது! வலிக்குதா?” என்று முகம் கசங்கி போய் அவளது கன்னத்தை தடவி விட்டான்.
அவனிடமிருந்து விலகியவள் “சப்புன்னு அடிச்சிட்டு! சும்மா கொஞ்சற வேலை வேணாம் மாமா!” என்று இதழ் சுளித்து முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் தேன்மொழி.
“ஏய் சும்மா இங்க பாருடி! நீ என்கிட்டே பேசினதும் தப்பு தானே அதான் கோபம் வந்து அடிச்சிட்டேன்” என்று அவள் கன்னத்தை பற்றினான். அவளோ “போ நான் கோவமா இருக்கேன்” என்று முகத்தை திருப்பினாள். கார் ஜன்னல்கள் திறந்து இருக்க ஒரு முறை சுற்றிப்பார்த்துவிட்டு ஜன்னலை லாக் செய்து ஏசியை போட்டு விட்டான்.
“எ.எதுக்கு இப்ப ஜன்னலை மூடினீங்க அன்னிக்கு போல இப்பவும் முத்தம் கொடுத்துடுவீங்களா மாமா. நான் படிச்சு முடிக்கற வரை! என்கிட்ட வரக்கூடாது முத்தம் கொடுக்க கூடாது! அப்படி மீறி நீங்க ஏதாச்சும் பண்ணினா பாப்பா வந்திடும்ல” என்றாள் சீட்டின் நுனியில் உட்கார்ந்தவாறு
“உன்ன தொட்டா முத்தம் கொடுத்தா புள்ள வரும்னு யாரு சொன்னாங்க!” என்று சற்று கடுப்பாக கேட்டாலும் அவள் பேசிய விதம் அவனுக்கு சிரிப்பாகவும் வந்தது.
“ம்ம் காலேஜ்ல என் ப்ரண்ட்ஸ் எல்லாம் முத்தம் கொடுத்தா பாப்பா வந்துடும்னு பேசிக்கிட்டாங்க! அதான் நீங்க அன்னிக்கே முத்தம் கொடுத்தீங்கல்ல! அதுக்கே எங்க பாப்பா வந்துடுமோனு பயமா இருக்கு” என்றாள் கண்ணை உருட்டிக்கொண்டு
“தொட்டா எல்லாம் குழந்தை வராதுடி. யாரோ உன்கிட்ட தப்பா சொல்லிருக்காங்க அதெல்லாம் ரெண்டு பேரும் வேற மாதிரி நடக்கணும்” என்றான் சிரித்தபடி.
“வேற மாதிரினா எப்படி” என்றாள் பயந்த குரலில்.
“அ.அது நீ படிச்சு முடி எல்லாம் சொல்லித்தரேன்” என்றான் அவளது பக்கம் நெருங்கி உட்கார்ந்து.
இதுவரை சந்தனபாண்டியன் அவளை அக்கா மகளாகவே பார்த்திருந்தான். இன்றுதான் அவள் மனைவி என்ற உரிமையில் பார்க்க தொடங்கினான்.
அவளுக்கு இப்போது கொஞ்சம் சந்தனபாண்டியன் மீது பயம் போயிருந்தது. அவளது முகத்தை கையில் ஏந்தி “என்னை உனக்கு பிடிக்குமா குட்டிப் பொண்ணு! இல்ல அந்த பொறுக்கி கிட்ட இருந்து தப்பிக்க வேற வழியில்லாம நான் தாலி கட்டியதும் ஏத்துக்கிட்டியா சொல்லு!” என்றான் மென்மையான குரலில். அவளின் விருப்பத்தை கூட கேட்காமல் தாலி கட்டி விட்டோமென்று இத்தனை நாளாய் அவன் மனதை போட்டு அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட்டான் சந்தனபாண்டியன்.
“பர்ஸ்ட் நீ சொல்லு மாமா என்னை பிடிச்சுதான் தாலி கட்டுனியா நீ சொல்லு! ஏன்னா நீதான் மல்லிகா டீச்சரை லவ் பண்ணியிருக்க. அப்பாகிட்ட பேசும் போது உன் மனசுல நான் தான் இருக்கேன்! ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லிட்டேன்! இப்ப சொல்லு மாமா” என்றாள் அவன் கண்களை கூர்ந்து கவனித்து
ஒரு நிமிடம் கண்ணை மூடி நிதானித்தவன் “மல்லிகா என் வாழ்க்கையில் முடிஞ்சு போன அத்தியாயம் சரியா! நீ மட்டும் தான் என்னோட இறுதி மூச்சு வரை என் உயிரோட கலந்திருப்ப போதுமா” என்றான் அவளை இழுத்து அணைத்தபடி
அவள் உடலில் சிறு நடுக்கம் வந்ததை கவனித்தவன் “இன்னும் என்மேல பயமா இருக்கா குட்டிப் பொண்ணு! என் மேல நீ நம்பிக்கை வைக்கணும் ஹனி பேபி” என்றான் கிறங்கடிக்கும் குரலில்.
“நிஜமாலுமே என்னை பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டயா மாமா” என்று அவன் அணைப்பில் இருந்தவாறே அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“நிஜமா என்னோட ஹனி பேபியை மனசார விரும்பித்தான் தாலி கட்டினேன்” என்று அவளது நெற்றி முடியை விரல் கொண்டு ஒதுக்கிவிட்டு மெதுவாய் அவளது பிறை நெற்றியில் முத்தம் பதித்து அவன் காதலின் அளவை காட்டினான் சந்தனபாண்டியன்.
அவளோ “மாமா பயமா இருக்கு!” என்றாள் பட்டு போல மென்மையான குரலில் கண்ணை மூடிக்கொண்டு
“நெத்தியில தான் டி குட்டிப்பொண்ணு கொடுத்தேன் அதுக்கேவா!” என்றான் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து
“அச்சோ மாமா எனக்கு என்னமோ ஆகுது இங்க!” என்று அவளது அடிவயிற்றை தொட்டுக்காட்டினாள்.
“ச்சே படிக்கிற பொண்ணை என்ன பண்ணயிருக்கடா சந்தனபாண்டி!” என்று தலையில் அடித்துக்கொண்டு
“சாரி டி குட்டிப் பொண்ணு நீ எனக்காக உங்க அப்பாகிட்ட பேசினபாரு அப்பவே உன் மேல ரொம்ப காதல் வந்திருச்சுடி! இதுபோல யார் என்னை பத்தி தப்பா பேசினாலும் என்மேல உள்ள நம்பிக்கையை நீ இழக்ககூடாது. இந்த மாமன் உனக்கு மட்டும்தான் சொந்தம் சரியா! நீ படிச்சு முடிக்கற வரை உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்டி” என்று அவளை தன் அணைப்பிலிருந்து பிரித்து அவளது கலைந்திருந்த சேலையை சரிசெய்து விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான் பெரும்மூச்சுவிட்டு.
தேன்மொழிக்கோ சந்தனபாண்டியனின் கைகள் அவளது தேகத்தில் உரசியதும் வெட்கம் வந்து நெளிந்தாள்.
“நான் தானே தொட்டேன் எதுக்கு இப்படி கூச்ச படுற. நீ என்னோட குட்டிப்பொண்ணு! ரெண்டு பேருக்கும் புரிதல் வரணும்னு முத்தம் கொடுத்தேன்! நீ எனக்கு மட்டும் சொந்தமான ஹனி பேபி” என்று செல்லப்பெயர் வைத்தான் சந்தனபாண்டியன் தேன்மொழிக்கு.
தேன்மொழியோ சந்தனபாண்டியன் இப்படியெல்லாம் பேசுவான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. “சரி போகலாம் நம்மளை காணோம்னு அப்பத்தா தேடுவாங்கடி” என்று கண்ணைச்சிமிட்டி காரை ஓட்டினான்.
சந்தனபாண்டியனின் கண்சிமிட்டலில் அவளுக்கு வெட்கம் வந்துவிட கண்களை இறுக்க மூடி சீட்டில் சாய்ந்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள் பெண்ணவள்.
நகைக்கடைக்கு கூட்டி வந்த அன்று பிரியாணி வாங்கிக்கொடு பசிக்குது என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்துவிட கையில் கட்டியிருந்த வாட்சில் மணியை பார்த்தான் ஒன்பது ஆகியிருக்க ‘பசியோடு தூங்கறாளே’ என்று எண்ணியவன் அதே ஹோட்டல் வந்து விட அங்கே காரை நிறுத்தி போன் போட்டான் பிரியாணி கடை முதலாளிக்கு. சிறிது நேரத்தில் பிரியாணியும் வந்து கார் திறந்து வாங்கிக்கொண்டான்.
போனில் தங்கபாண்டியனின் மிஸ்டுகால்கள் இருந்தது! தங்கபாண்டியனுக்கு போன் போட போன் போகாமல் மக்கர் செய்தது. சிக்னல் ப்ராப்ளாமா இருக்கும்! சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம் என்றிருந்தான்.
மீன்குஞ்சு போல வாயை திறந்து உறங்குபவளின் இதழுக்குள் தன் இதழை நுழைத்துக்கொள்ள ஆசை வந்தது சந்தனபாண்டியனுக்கு. ‘ச்சே மனசை அடக்குடா’ என்று தன்னையே அடக்கிக்கொண்டாலும் தன் மனைவியை இரசிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.
தேன்மொழியாக மெல்ல கண்திறக்க சந்தனபாண்டியன் பிரியாணி பார்சலை பிரிக்க ஆரம்பித்தான். பிரியாணி வாசம் அவள் நாசியை நிரப்ப “ஐ பிரியாணி எனக்காக வாங்கினியா மாமா” என்றவளோ அவன் கையிலிருந்து பிரியாணியை வாங்கிக்கொண்டவளோ “ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாமா?” என்றதும் “நீ சாப்பிட்டு மிச்சம் இருந்தா சாப்பிடுறேன்” என்றதும் “இல்லை நான் உங்களுக்கு ஊட்டுறேன்! நீங்க எனக்கு ஊட்டுங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஊட்டி விட்டுக்கலாம். இன்னிலிருந்து நாம லவ்வர்ஸ் சரியா மாமா” என்றாள் அவளது முட்டைக்கண்ணை அங்கும் இங்கும் சோளி போல உருட்டிக்கொண்டு
“நான் உன்னை லவ் பண்ணுறேனு சொன்னேனா! பொண்டாட்டிங்கிற உரிமை அதுனால வேணா ஊட்டிவிடறேன்” என்று அவளை சீண்டி பார்க்க எண்ணி பார்சலில் இருந்த பிரியாணியை எடுத்து அவளுக்கு ஊட்ட போக “நீ லவ் யூ சொன்னாதான் நான் சாப்பிடுவேன் மாமா” என்றாள் முகத்தை தூக்கி வைத்து
“அப்படியா அப்பா நீ பிரியாணியை சாப்பிட்ட மாதிரிதான்” என்றான் நெற்றியை தேய்த்த படி உதட்டுக்குள் சிரித்துக் கொண்டு
“அப்போ நீ மல்லிகா டீச்சர் கிட்ட மட்டும்தான் லவ் யூ சொல்லுவியா” என புசுபுசுவென கோபம் வந்தது அவளுக்கு.
“மறுபடியும் சொல்லுறேன் மல்லிகா என்னோட எக்ஸ் லவ்வர்தான்! ஆனா நீ என்னோட உசிரு! இப்ப நீதான் இங்க இருக்க” என்று நெஞ்சை தொட்டுக் காட்டியவன் தலையை அழுந்த கோதிக்கொண்டு “இப்ப நான் லவ் யூ சொன்னா உனக்கு முத்தம் கொடுப்பேன் பரவாயில்லையாடி” என்றான் கூர்மையாக அவள் கண்களை உற்று நோக்கியபடி
“ஹான்” என்று விழித்தவளோ “அப்படினா மல்லிகா டீச்சருக்கு லவ் சொல்லும் போது முத்தம் கொடுத்தியா” என்று அவனை முறைத்தாள் தேன்மொழி.
“மல்லிகா மேல என் விரல் கூட பட்டது இல்லை போதுமா! இவ்வளவு நெருக்கமாய் உன்கிட்ட மட்டும்தான் உட்கார்ந்திக்கேன்! உனக்குத்தான் முதல் முத்தம் கொடுத்திருக்கேன்! இதோ இப்பவும் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றேன்” என்றவன் அவள் மடியில் வைத்திருந்த பிரியாணியை எடுத்து பின் சீட்டில் எட்டி வைத்து விட்டு திரும்ப அவளோ அதிர்ச்சியில் “மாமா” என வாயை கொஞ்சமாய் திறக்க. அவள் கண்களை மையலாக பார்த்து “ஐ லவ் யூடி ஹனி பேபி” என்று அவளது கன்னத்தை மெதுவாய் தாங்கி பிடித்து அவளது இதழை கவ்விக்கொண்டான்.
இருவருக்கும் முதல் முத்தம் அதுவும் ஆழ்ந்த இதழ் முத்தமாக நீண்டுக் கொண்டிருந்தது. ரோஜா மலரில் வண்டு தேன் அருந்துமே அதுபோல அவளது மென் இதழை தன் வன் இதழ்கொண்டு வண்டாய் குடைந்துச் சென்று அவளது இதழ் பிளந்து அவள் நாவோடு தன் நாவை காதல் சண்டையிடச் செய்தான். பெண்ணவளுக்கு லேசாய் பூகம்பம் வந்தது போல இருக்க அவளது உடல் வெடவெடவென நடுங்கத்தொடங்கியது. அவளுக்கு மூச்சு வாங்கவே சிறிது விட்டவன் அவள் கண்களை பார்த்து “இன்னும் முத்தம் வேணும்டி” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
இப்போது அவளாக அவனது இதழை கவ்விக்கொண்டாள். இருவரும் முதல் முத்தத்தை அமோகமாக கொண்டாடினார்கள். முத்தம் மட்டுமே போதாது போல இருந்தது அந்த மீசைக்கார மாமனுக்கு. அத்து மீற துடித்த கைகளை அடக்கி வைத்துக்கொண்டான்.
தேன்மொழி துவண்டு போவதை கண்ட சந்தனபாண்டியனோ அவளை விட்டு மெல்ல விலகி அவள் முகத்தை தாங்கி “முத்தம் பிடிச்சிருக்கா!” என்றான் கண்ணைச்சிமிட்டி அவளோ “ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா இங்க பாருங்க உங்க மீசை குத்தி காயம் ஆகிடுச்சு எரியுது” என்று உதட்டுக்குமேல் தொட்டுக்காட்டினாள்.
“அப்போ மீசையை ட்ரிம் பண்ணிக்கவாடி” என்றான் அவளது காயத்தில் முத்தம் கொடுத்தபடி
“மீசைதான் உங்களுக்கு அழகா இருக்கு” என்று அவனது மீசையை பிடித்து இழுத்தாள். “ஆஆ வலிக்குதுடி” என்றான் பொய்யாக.
“நிஜமா வலிக்குதா மாமா! சும்மாதானே சொல்லுற” என்று அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள் அவனது நெஞ்சத்தில் உள்ள சுருள் முடிக்குள் விரலை விட்டு விளையாடிக்கொண்டே “நீ என்கிட்ட இப்படி பாசமா பேசுவனு நான் நினைக்கல மாமா! நீ என்னமோ பெரிய கோவக்காரன்னு பயந்துட்டேன்! ஆனா என்மேல இவ்வளவு நீ காதல் வச்சிருப்பேன் நான் கனவுல கூட நினைக்கலைடா மாமா” என்று அவனது மார்பில் முத்தம் கொடுத்தாள்.
“பின்ன என்னடி ஒருத்தியை ஒரு காலத்தில் காதலிச்சேன்! அதுக்காக அவளை நினைச்சிட்டு தாலி கட்டின பொண்டாட்டியை தவிக்க விடறது ரொம்ப தப்புடி குட்டிப்பொண்ணு! இப்ப கூட நாம கணவன் மனைவியா வாழ ஆரம்பிக்கலாம். உன்னோட படிப்பு முடியாம உன்னை எடுத்துக்கறதுக்கு எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. அதுவரை இப்படி சில பல முத்தம் மட்டுமே கொடுத்துப்போம்டி” என்றவனோ அவளது ஆப்பிள் கன்னத்தில் மெலிதாய் கடித்து முத்தம் கொடுத்தவன் “கொஞ்சமா இந்த குட்டி இடுப்புல சதை போடுடி பிடிக்க வசதியாவே இல்லை” என அவளது வெற்றிடையில் கையை வைத்தான்.
“மாமா கூசுது” என்று அவனது கையை தட்டிவிட்டாள் “கூச்சம் போகத்தான் தொட்டேன்டி” என்றான் மோகனக்குரலில்.
“மாமா ப்ளீஸ் கையை எடேன்!” என்றாள் சுக அவஸ்தையுடன் கண்ணை மூடிக்கொண்டு
“இன்னிக்கு இந்த பாடம் போதும் பொழைச்சு போ!” என்று அவளது இடையிலிருந்து கையை எடுத்தவனோ அவளது விலகியிருந்த மாராப்பில் கொத்து சதைகள் விளிம்பு தெரிய கன்ட்ரோல் சந்தனபாண்டி என்று அவளது மாராப்பை சரி செய்து விட்டு பின் சீட்டில் வைத்திருந்த பிரியாணியை எடுத்து தேன்மொழிக்கு ஊட்டிவிட்டான் காதலுடன்.
அவளும் அவன் ஊட்டியது அமிர்தமாக சாப்பிட்டவள் பிரியாணி எடுத்து சந்தனபாண்டிக்கு ஊட்டிவிட்டாள். அவனும் பிகு பண்ணாமல் வாங்கிக்கொண்டான் இருவரும் மாத்தி மாத்தி ஊட்டிக்கொண்டு தங்கள் வாழ்வின் முதல் படியை துவக்கி வைத்தனர். சாப்பிட்டு முடித்து காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து கையை கழுவி விட்டு அவள் முந்தானையை பிடித்துக் இழுக்க “மாமா நாம வெளியில நிற்கிறோம்” என்று அவனை பொய்யாக முறைத்தாள்.
“சும்மா வாய் துடைக்கத்தானே டி” என்றவன் வாயை துடைத்துவிட்டு “வண்டியில ஏறு” என்றதும் அவள் ஏறி உட்கார்ந்த ஐந்து நிமிடத்திற்குள் தூங்கிவிட்டாள். போனில் ஜார்ஜ் சுத்தமாக தீர்ந்துவிட வீட்டிற்கு போன் செய்து சொல்ல முடியாது போனது.
தனபாக்கியம் பேரனையும் பேத்தியையும் தனியாக அனுப்பி வைத்து விட்டார்தான். ஆனால் அங்கே என்ன நடக்கிறதோ! என்ற பதைபதைப்பும் ஆதங்கமும் அவர் மனது சஞ்சலத்தில் ஆழ்ந்துக் கொண்டிருந்தது. நொடிக்கொருதரம் வாசலை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் சந்தனபாண்டியனின் கார் வருகிறதாவென்று.
தங்கபாண்டியனோ தனபாக்கியத்தின் பதட்டத்தை கண்டு “அப்பத்தா எங்களையும் சின்னவன் கூட போக வேண்டாம்னு சொல்லிட்டீங்க! இப்ப அங்க என்ன நடக்குதோனு இப்படி கிடந்து அல்லாடுறீங்க! சின்னவன் போன் போட்டா எடுக்க மாட்டேன்கிறான்! இப்ப எங்களையும் டென்சன் ஆகவச்சு! நீங்களும் இப்படி குட்டி போட்ட பூனை போல வாசலுக்கும் வீட்டுக்குள்ளும் நடந்துட்டே இருக்கீங்க!” என்று சற்று கடுப்பாகவே கேட்டான்.
“ஆமாடா குடும்பமாய் சேர்ந்து போய் அந்த மனுசன் முன்னால நின்னு அவரை டென்சன் படுத்தி பேச வச்சி நீங்களும் அவமானப்பட வேண்டாம்னுதான் உங்களை அனுப்பி வைக்கலைடா போதுமா பேராண்டி! நம்ம ரெண்டு வீட்டுக்கும் நடுவுல பிரச்சனை நடக்குதுனா ஊருக்குள்ள இருக்குற ஒரு சில பேர்க்கு வாய்ல அவல் போட்டது போல இருக்கும். அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாதுனுதான் நினைச்சேன்! ஆனா இன்னும் சின்னவன் வராம இருக்கானேனு எனக்கு பெருத்த கவலையா இருக்கு!” என்றார் பெரும்மூச்சு விட்டு
வெளியேச் சென்றிருந்த அருள்பாண்டியன் உள்ளே வர “டேய் அருளு உன் தம்பிக்கு போன் போடு! அங்க ரொம்ப பிரச்சனையா என்னமோ எனக்கு பதட்டமா வருது நாம கிளம்பலாம்!” என்றார் தனபாக்கியம் அவசரமாக.
சந்தனபாண்டியனும் தேன்மொழியும் மண்டபத்திலிருந்து சென்று வெகுநேரம் ஆனதால் தனபாக்கியத்திற்கு கவலை வந்துவிட்டது.
“இதோ கூப்பிடுறேன் அப்பத்தா” என்றவன் சந்தனபாண்டியனுக்கு போன் போட்டான்.
சந்தனபாண்டியனின் கார் சத்தம் கேட்டு சின்ன பிள்ளை போல வாசலுக்கு ஓடினார் தனபாக்கியம். பின்னே அவரின் செல்ல கடைக்குட்டி சிங்கமாச்சே சந்தனபாண்டியன். அவனுக்கு வாய் துடுக்கு அதிகம்! அவனுக்கென்று குடும்பத்தை உருவாக்கி கொடுத்தாச்சு. இனி அவனுக்கும் பக்குவம் வரணும் என்று எண்ணியே பொன்மணி வீட்டுக்கு தனியாக அனுப்பி வைத்திருந்தார் தனபாக்கியம்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super sis
NeRskCgIj
GpxvUHtVmasYAJ
👌👌👌👌👌👌👌👌👌
Amazing sis