Post Views: 2,094
நிலவு 26
மகேஷ்வரன் அவரது தொழில் வட்டாரத்தில் அவருக்கு தெரிந்த நண்பர்களிடம் பணம் கேட்டுப்பார்த்துவிட்டார். நேத்துதான் பணம் கை மாத்தி விட்டேன் மகேஷ்வரன் இப்போ இல்லையென்று நொண்டி சாக்கு சொன்னார்கள். ராகேஷ்தான் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி போனது என்று தெரிந்தும் அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.
சங்கரியிடம் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை பற்றி சொல்லவேண்டாம் தானாக சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்த மகேஷ்வரனுக்கு இப்போது மனைவியிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அவருக்கு சங்கரியிடம் விசயத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நெஞ்சு வலிப்பது போல உணர்வு வந்துவிட்டது.
தங்கபாண்டியனிடம் உதவி கேட்க அவருக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. மூச்சு முட்டுவது போல இருந்தது. சங்கரியோ கணவனின் கஷ்டம் புரியாமல் சென்னையில் உள்ள அவரது ப்ரண்ட்ஸிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
மகேஷ்வரனுக்கு கடனை நினைத்து நெஞ்சுக்குள் அழுத்தம் வருவது போல இருக்க சங்கரிக்கு போன் போட்டு விட்டார். “என்னங்க நீங்க ரெண்டு நாளுல மதுரைக்கு வரேனு சொல்லிட்டு இன்னும் வரலையே” என்று கோபம் கொண்டு கேட்டார்.
மகேஷ்வரனோ தனக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தை பற்றி தடுமாறி கூறியவர் “எனக்கு ஏதோ நெஞ்சு அடைக்குறது போல இருக்கு சங்கரி” என்று அடுத்தவார்த்தை பேசாமல் மயங்கி போனார்.
“அச்சோ என்னங்க என்னாச்சு உங்களுக்கு! என்கிட்டே பேசுங்க” என்று கத்தி கூச்சல் போட்டு அழுதார் சங்கரி. அருள் பாண்டியன், தங்கபாண்டியன் இருவரும் வேலையை முடித்து சாப்பாட்டில் அப்போதுதான் கையை வைத்திருந்தனர். சந்தனபாண்டியனும் தேன்மொழியும் ஒரு விருந்திற்குச் சென்றிந்தனர்.
சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்த ஆர்த்தியோ சங்கரியின் அழுகையை பார்த்து சங்கரியின் பக்கம் வேகமாக வந்தவள் “என்னாச்சும்மா ஏன் அழறீங்க?” என்று பதறி அவரின் தோளை தொட “அந்த ராகேஷ் பையன் அப்பாவை ஏமாத்தி பிஸ்னெஸ்ல நஷ்டம் பண்ணிட்டானாம்டி உங்கப்பா நெஞ்சு வலிக்குதுனு சொன்னாரு. இப்போ பேசமாட்டேன்கிறாரு!! நானும் இப்ப இங்க இருக்கேனே!! என் புருசனுக்கு என்னாச்சுனு தெரியலையே ஆர்த்தி!! உன் வீட்டுக்காரரை சென்னைக்கு என்னை கூட்டிட்டு போக சொல்லுடி” என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார் சங்கரி.
தங்கபாண்டியனோ சென்னையில் உள்ள அவனது நண்பன் குமாருக்கு போன் செய்து ஆர்த்தியின் அப்பாவை போய் பார்க்க சொல்லிவிட்டான். குமார் ஆர்த்தியின் வீட்டுப்பக்கம் இருப்பதால் உடனே ஆர்த்தி வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
“மச்சான் ஆர்த்தி அப்பா மயங்கி இருக்காரு” என்றான் பதட்டத்துடன்.
“டேய் அவரை உடனே ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணு. நான் இப்போ சென்னைக்கு கிளம்புறேன்” என்றவன் “ஆர்த்தி நீ அம்மாவை கூட்டிட்டு புறப்படு. நாம இப்ப சென்னைக்கு கிளம்பலாம்” என்று அவசரப்படுத்தியவன் புறப்பட ஆயத்தமானான்.
“தங்கம் நாங்களும் வரோம்” என்ற அருள்பாண்டியனை
“அண்ணா நீங்க இங்க பாருங்க. நான் மேனேஜ் பண்ணிக்குறேன். நம்ம எல்லாரும் கிளம்பிட்டா இங்க யாரு பார்க்குறது. அதான் ஆர்த்தியை கூட்டிட்டு போறேன்ல. அப்பத்தா நான் சொல்றது சரிதானா” என்று கேட்டான் தங்கபாண்டியன்.
“ம்ம் சரிதான் இப்ப கோழிப்பண்ணையும் நாம பார்க்கணும் சென்னைக்கு போய்ட்டு நிலவரம் என்னனு சொல்லு… நாங்க வரோம்” என்றிருந்தார் தனபாக்கியம்.
ஆர்த்தியோ அழுக ஆரம்பித்தாள். “அப்பாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது அழாத ஆர்த்திபொண்ணு! நீயும் அழுதினா உன் அம்மாவுக்கு யாரு ஆறுதல் சொல்வாங்க?” என்ற தனபாக்கியம் ஆர்த்தியின் கண்ணீரை துடைத்து விட்டு தைரியம் கூறினார்.
“பாட்டி அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது” என்று கண்கலங்கியவளை கட்டி அணைத்து “அழாம போ அப்பாவுக்கு பெரிய பாதிப்பு ஒன்னும் இருக்காது” என்று அவளின் தோளை தட்டி காருக்கு அழைத்து வந்தார்.
வளர்மதியோ குழந்தையை உறங்க வைத்து வந்தவள் ஆர்த்தி அழுவதை கண்டு “அழாதப்பா அப்பா சும்மா கூட மயங்கி இருக்கலாம் நீ மனசை போட்டு குழப்பிக்காம கிளம்பு” என அவளுக்கு நம்பிக்கை வார்த்தை கொடுத்தாள்.
சங்கரியோ மயக்கத்திலேயே இருந்தார். அவரது புத்தி கோணலாக இருந்தாலும் கணவர் மீது பாசமாகத்தான் இருப்பார். மகேஷ்வரன் போனில் பேச பேச பேச்சை நிப்பாட்டியதும் உள்ளம் பதறித்தான் கூச்சல் போட்டார். தங்கபாண்டியன் காரில் ஏறியதும் ஆர்த்தியும் சங்கரியும் பின்னால் ஏறிக்கொண்டனர் மயங்கிய சங்கரியை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள் ஆர்த்தி.
“கடவுளே! அப்பா உயிர்க்கு எந்த ஆபத்தும் வந்திரக்கூடாது காப்பாத்துங்க” என்று கடவுளை வேண்டியபடி கலக்கத்துடன் இருந்தாள்.
குமார் மகேஷ்வரனை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்துவிட்டான். மகேஷ்வரனை செக் பண்ணிய டாக்டர் “ரெண்டு இடத்துல அடைப்பு இருக்கு… நல்லவேளை உடனே கூட்டிட்டு வந்திட்டீங்க ஆன்ஜியோ பண்ணிடலாம் அவங்க ரிலேசனா நீங்க?” என்றதும் “ஆமாங்க என் சித்தப்பாதான் அவங்க பொண்ணு மதுரையில இருக்காங்க புறப்பட்டு வந்திட்டிருக்காங்க” என்று சொல்லிவிட்டான் குமார்.
தங்கபாண்டியன் ஹாஸ்பிட்டலில் மகேஷ்வரன் அவனுக்கு சொந்தம் என்று சொல்ல சொல்லியிருந்தான். விடியற்காலையில் மகேஷ்வரன் அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிட்டலுக்குச் சென்றுவிட்டனர். சர்ஜரி காலையில் தான் என்று சொல்லியிருந்தனர்.
சங்கரியோ அழுதுக்கொண்டே மகேஷ்வரன் அட்மிட் செய்திருந்த ஐ.சியுவின் முன்னேச் சென்றவர் மகேஸ்வரன் மயக்கத்தில் இருப்பதை பார்த்து மயங்கியே விட்டார்.
“கோல்ட் அம்மா மயங்கிட்டாங்க” என்று கதறியவளை
“அம்மு அழாத அவங்க அதிர்ச்சியில மயக்கம் போட்டுட்டாங்க நீ பயப்படாதடா” என்று சங்கரியை அந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தனர்.
ஆர்த்தியோ சோர்ந்து போய்விட்டாள். தாயும் தந்தையும் இப்படி ஹாஸ்பிட்டலில் மயக்க நிலையில் இருப்பது அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“கோல்ட் அப்பா பாவம் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவாரு. இந்த ராகேஷ் நம்ம மேல உள்ள கோவத்தை அப்பா மேல திசைதிருப்பி பிஸ்னஸ்ல லாஸ் பண்ணியிருக்கான் ராஸ்கல்” என்றவளை தன் தோளில் சாய்த்தவன் அங்கே நின்றிருந்த குமாரிடம் “ரொம்ப தேங்க்ஸ் குமார் தக்க சமயம் நீ செய்த உதவி சாலப்பெரியதுடா நீ நைட்டெல்லாம் கண்விழிச்சிருக்க கிளம்பிடு” என்றதும் குமாரோ “டேய் மச்சான் என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனதும் நீ ஓடிவந்து எனக்கு உதவி செய்தலடா இப்ப என்ன மச்சான் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு நான் மதியம் வரேன்” என்று கிளம்பிவிட்டான்.
ஆப்ரேசன் முடித்து மதியம் போல கண் திறந்து விட்டார் மகேஷ்வரன். அன்று முழுவதும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டனர் டாக்டர்ஸ்.
தனபாக்கியம் தங்கபாண்டியனுக்கு போன் போட்டு மகேஷ்வரன் நிலவரம் கேட்டார். “இப்போ மாமா நல்லாயிருக்காரு அப்பத்தா நீங்க கவலைப்படாதீங்க…” என்றவனிடம் “நாங்க கிளம்பி வரட்டுமா ஆர்த்தி இன்னும் அழறாளா. சம்மந்தியம்மா எப்படி இருக்காங்க?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டவரிடம் தங்கபாண்டியன் போனை ஆர்த்தியிடம் கொடுத்தான்.
“அப்பத்தா அப்பா இப்போ நல்லாயிருக்காரு!! அப்பா சரியானதும் நாங்க கிளம்பி வரோம்!! நீங்க யாரும் கிளம்பி வரவேணாம். நீங்களெல்லாம் சொந்தமா கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்கணும் அப்பத்தா” என்று பெரும்மூச்சுவிட்டவள் “நான் அப்புறம் போன் பண்ணுறேன்” என்று போனை வைத்துவிட்டாள்.
அடுத்த இரண்டு நாள் கழித்து தங்கபாண்டியன் மகேஷ்வரனிடம் ஆர்த்தியை பக்கம் வைத்துக்கொண்டு “மாமா நீங்க யார் யாருக்கு பணம் கொடுக்கணும்னு சொல்லுங்க… நான் செட்டில் பண்ணிடறேன்” என்றவனிடம் கைகூப்பினார் மகேஷ்வரன்.
“என்னங்க மாமா பெரியவங்க நீங்க என்னை போய் கையெடுத்து கும்பிட்டுக்கிட்டு… நானும் உங்களுக்கு பையன் போலத்தான்” என்ற தங்கபாண்டியன் அவரது கையை பிடித்துக்கொள்ள கண்ணீர் விட்டார் மகேஷ்வரன்.
சங்கரியை மகேஷ்வரன் பக்கத்தில் விடவில்லை. மகேஷ்வரன் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார் என்று தெரிந்ததும் ‘எப்படித்தான் இந்த மனுசன் இப்படி பணத்தை ஏமாந்தாரோ தெரியலையே’ என்று புலம்பியவரை மகேஷ்வரன் பக்கத்தில் விடவில்லை ஆர்த்தி.
மகேஷ்வரன் வாங்கிய பணத்தையெல்லாம் செட்டில்மெண்ட் செய்து விட்டு ஐந்து நாட்களில் மகேஷ்வரனை வீட்டுக்கு கூட்டிச்சென்று அந்த நாள் மட்டும் மகேஷ்வரன் கூடவே இருந்து பார்த்துக்கொண்டான். சங்கரி குணம் மாறவில்லை. “எப்படி இத்தனை கடன் வாங்குனீங்க?” என்று கணவரை திட்டியே தீர்த்தார்.
ஆர்த்தியையும் மகேஷ்வரன் பக்கத்தில் இருக்க சொல்ல முடியவில்லை. இன்னும் இரண்டு நாளில் மன்த்லி செக்கப் போகவேண்டும்.
“ஆர்த்தி உங்க அப்பாவையும், அம்மாவையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்றவனை “தேங்க்ஸ் கோல்ட்” என்று கட்டிக்கொண்டாள் ஆர்த்தி.
மகேஷ்வரனிடம் “அப்பா நாம மதுரைக்கு போகலாம் இங்க உங்களை தனியே விட்டு போகமுடியாது. அவராலையும் பிஸ்னஸை விட்டு இங்க இருக்கவும் முடியாது” என்று அவருக்கு மெதுவாய் எடுத்துக்கூற “அங்கே வந்து தங்கினா நல்லாயிருக்காதுடா. அம்மா இருக்கா நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம் நீ மாப்பிள்ளையோட கிளம்பு” என மதுரைக்கு வர மறுத்துவிட்டார் மகேஷ்வரன்.
“மாமா இப்ப நீங்க இருக்க நிலமை சரியில்லை ஒரு ஆறுமாசம் மதுரையில வந்து தங்குங்க. எங்க வீட்ல தங்கவேண்டாம் எங்களுக்கு சொந்தமான வீடு இருக்கு அதுல வந்து தங்கிகோங்க.” என்று பணிவாய் எடுத்துச் சொன்னதும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டார் மகேஷ்வரன்.
அன்றே மகேஷ்வரனுடன் மதுரைக்கு கிளம்பியிருந்தான் தங்கபாண்டியன்.
சங்கரியோ நல்லவேளை மாப்பிள்ளை மதுரைக்கு நம்மை கூட்டிட்டு போறார் காசு இல்லாம எப்படி இவரை சாமாளிப்பேன் என்று நிம்மதியானார் சங்கரி.
மதுரையில் நெல்மூட்டைகள் அடுக்கி வைத்திருக்கும் வீட்டில் நெல்மூட்டைகளை வேறு ஒரு இடத்திற்கு மாற்றச்சொல்லி அந்த வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தனர். தங்கபாண்டியன் நேராக அந்த வீட்டிற்குதான் சென்றிருந்தான். ஆர்த்தியை அன்று மகேஷ்வரனுடன் தங்க சொல்லிவிட்டு வந்தான். சமைக்க தேவையான பொருட்கள் முதல் தேவையான அனைத்தும் வாங்கிப்போட்ட தங்கபாண்டியன் மீது காதல் இன்னும் மலையளவு கூடிப்போனது.
அடுத்த ஒருவாரம் தாய் தந்தையரை பார்க்க ஓடிக் கொண்டிருந்தாள். தனபாக்கியம் மகேஷ்வரனை பார்க்க வந்திருந்தவர் “தொழில் போயிடுச்சுனு கவலைப்படாதீங்க சம்பந்தி… மறுபடியும் நீங்க தொழில் பண்ணுவதற்கு என் பேரனை உதவி பண்ண சொல்லுறேன் நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்க” என்று ஆறுதல் கூறியவரிடம் “ரொம்ப நன்றிங்கம்மா என் நண்பர்கள் எல்லாரும் நான் பணம் கேட்டப்ப கையை விரிச்சிட்டாங்க. மாப்பிள்ளை மட்டும் இல்லைனா… என் உயிர் எப்பவோ போயிருக்கும்” என் பெருமூச்சு விட்டார் மகேஷ்வரன்.
“என்னப்பா இப்படி பேசுற உன் பேரப்பிள்ளை உன் முகத்துல உச்சா போக வேண்டாமா” என்று மகேஷ்வரனை கிண்டல் செய்தவரை காபி கொண்டு வந்த சங்கரியோ “க்கும் இந்த கிழவி பேசியே எல்லாரையும் மயக்கிடும்” என்று இதழை கோணியவர் “அம்மா காபி எடுத்துக்கோங்க” என்று வேண்டா வெறுப்பாய் நீட்டியவரின் காபியை ஆர்த்திக்காக எடுத்துக்குடித்தார்.
நாகப்பனோ மல்லிகா தப்பித்துவிட்டாள் என்று தெரிந்ததும் ச்சே என் திட்டம் எல்லாம் தவிடு பொடியாய் போகுதே என்று நெற்றியை தட்டிக்கொண்டிருந்தார். மல்லிகா தென்னரசுவின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்ற உண்மை நாகப்பனுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான் தென்னரசு.
“ஐயா நான் உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்” என்று தலையை சொறிந்தவனிடம் “சொல்ல வந்ததை சொல்லுடா எதுக்கு தலையை சொரியிற?” என்று எரிந்து விழுந்தார்.
“ஐயா தங்கபாண்டியன் மாமனாருக்கு பிஸ்னஸ்ல நஷ்டம் வந்து அவருக்கு ஹார்ட் ஆப்ரேசன் பண்ணற அளவு போயி… நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க. தங்கபாண்டியன் மாமியார் கொஞ்சம் பணத்தாசை பிடிச்சவங்கனு பார்த்தாலே தெரியுது அவங்க கிட்ட நீங்க பேசினா ஏதாவது நமக்கு சாதகமா நடக்க சான்ஸ் இருக்கு” என்றான் தயங்கியபடி.
“சபாஷ் என்கூட இருந்ததுல இன்னிக்குத்தான் உருப்படியா பேசியிருக்க” என்றவர் “அந்தம்மாவை கூட்டிட்டு வா உனக்கு பணஉதவி பண்ணுறேன்” என்றதும் “நாளைக்கே கூட்டிட்டு வரேன்” என்றான் அந்த கூலிப்படையாள்.
ஆர்த்தியை டாக்டரிடம் செக்கப் அழைத்துச்சென்றிருந்தான் தங்கபாண்டியன். தனபாக்கியம் “நானும் உங்க கூட வரேன்” என்று சொன்னவரை “ஹாஸ்பிட்டல கூட்டம் அதிகம் இருக்கும் அப்பத்தா உனக்கு மூச்சு முட்டும்” என்று சொல்லி அவரை அழைத்துச் செல்லவில்லை. “ஆர்த்திக்கு ஓவலேசன் பீரியட் கான்ட்டாக்ட் இருங்க” என்றவர் சில மாத்திரைகளை எழுதிகொடுத்து அனுப்பினார்.
வெகுநாட்கள் கழித்து நிம்மதியாய் இருந்தனர் தங்கபாண்டியனும் ஆர்த்தியும். சாப்பிட்டு தங்கபாண்டியன் அறைக்கு முன்னே ச் சென்றிருந்தான். கையில் பாலுடன் அறைக்குள் சென்றவளுக்கு வெட்கம் வந்து தலையை குனிந்துக் கொண்டாள்.
“அடடே புது கல்யாணப்பொண்ணு போல வெட்கப்படுற என் அம்மு எப்பவும் அழகுதான்” என்று அவள் கையிலிருந்த பாலை வாங்கிவைத்தான்.
அவளின் முகவடிவை விரலால் அளந்தவனை “கோல்ட் நான் இப்ப பேஸ் க்ரீம் கூட போடறது இல்லை. தலை கூட சீவ நேரம் இல்லாம சும்மா வீட்ல கொண்டை தான் போட்டுக்குறேன்” என்றவளை தன்பக்கம் இழுத்து மடியில் உட்கார வைத்து “இதுதான் அழகுடி பொண்டாட்டி காலையில குளிச்சு முடிச்சு சமையல்கட்டுல வேலைபார்த்து மதியம் துணி துவைச்சு, நைட் சமையல் பண்ணி ரூம்க்கு வந்தா உன்னோட வியர்வை வாசம் எனக்கு ஜவ்வாது போல மணக்குது” என்று மூச்சை இழுத்து விட்டு அவளது கழுத்து வளைவில் முகம் பதித்து கண் சொருகினான். வெகுநாட்கள் கழித்து இருவரும் மோகத்தில் இருந்தனர்.
“கோல்ட் இப்பவும் நான் அழகா இருக்கேனா!” என்று தலைசாய்த்து கேட்டவளை “உனக்கென்னடி கண்ணு ரெண்டும் திராட்சை போல இருக்கு. கன்னம் ரெண்டு நாயர் கடை பன்னு போல உப்பி இருக்கு. அதுவும் குட்டி மெத்தை ரெண்டு ஜம்முன்னு இருக்கே அதுல தலை வைச்சு படுத்தா சும்மா கும்முனு தூக்கம் வருமே” என்று மார்க்கமாய் பேசி கண்ணடித்தவனை மார்பில் செல்லமாய் அடித்து அவனது நெஞ்சிலேயே சாய்ந்துக் கொண்டவள் அவனது நெஞ்சில் உள்ள சுருள் முடியை விரலால் அளந்துக் கொண்டே இருந்தவளின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து
“என்னடி இன்னிக்கு ஓ.கேவா” என்று அவள் முகத்தை தாங்கி இதழோடு உரசியவனை பார்த்தவள் “கண்டிப்பா சேரணும் கோல்ட்“ என்றவளை “என்னடி ஏதோ கடமைக்கு சொல்றது போல பேசுற” என்று அவள் கண்ணை பார்த்தான் காதலுடன்.
“கோல்ட் நமக்கு கல்யாணம் ஆகி பலவருசம் ஆச்சு!! ஆனா நமக்கு ஹாஸ்பிட்டல் போயி ஓவலேசன் பிரியட் பார்த்து சேர வேண்டிய கட்டாயம் பாருங்க!! எத்தனை பேர் குழந்தை வேணாம்னு என்னை மாதிரி பில்ஸ் எடுத்தாங்களோ தெரியலை” என்று வருத்தப்பட்டவளை கன்னம் தாங்கி “இதுதான் ஆகாதுங்கறது சரியா இப்போ நாம” என்று ஆரம்பிக்க அவனது இதழில் தன் இதழை நுழைத்துக்கொண்டாள்.
ஆணவனை எப்போது போல முத்தம் கொடுத்தே சாய்த்து விட்டாள். மேனி தழுவல்களும்… அனல் மூச்சுகளும்… பெண்ணவளின் சிறு சிணுங்கலும் அந்த அறையை அழகாக்கிக் கொண்டிருந்தது.
கூடல் முடிந்து தன்னவளை மார்பில் போட்டுக்கொண்டு “நாளைக்கும் சேரணும்டி” என்றவனிடம் “இதுகூட நாள் பார்த்து சேரவேண்டியிருக்கு” என்று சலித்தவளின் கன்னத்தில் லேசாய் அடிப்போட்டு “நீ திருந்தவே மாட்டே அம்மு” என்றவன் அவளை பேச விடாது அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான்.
நாட்கள் ஒடியது அருள்பாண்டியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா விமர்சையாக நடந்தது. கொள்ளு பேரனுக்கு ஐந்து பவுனில் தங்க செயின் போட்டார் தனபாக்கியம். பூபாலன் என்று பெயரிட்டனர்.
“பார்த்தியாடி இந்த கிழவி இப்போ பிறந்த பையனுக்கு ஐந்து பவுன் செயின் போடணுமா என்ன? பணத்திமிரை காட்டுது பாரு. கடைசியில உன் பையனுக்கு செய்ய எதுவும் இல்லாது போகப்போகுது” என்ற சங்கரியை முறைத்து பார்த்தாள் ஆர்த்தி.
“எனக்கென்னடி நான் சொல்றது என் கடமை சொல்லிட்டேன்!! நீதான் சூதானமா இருக்கணும்” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார் சங்கரி.
வளர்மதிக்கும் வைர தோடு வாங்கி கொடுத்திருந்தார். “பார்த்தியாடி வைர தோடு” என்றதும் “ம்மா” என்று அவரை அடக்கினாள் ஆர்த்தி.
அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க தேன்மொழியோ பரிமாறிக்கொண்டிருந்தவள் கரண்டியை போட்டு மயங்கிவிட்டாள்.
சந்தனபாண்டியன் “ஏய் தேனு” என்று பாதி சாப்பாட்டிலே எழுந்தவன் தேன்மொழியை தாங்கிக்கொண்டான்.
தனபாக்கியம் தேன்மொழியின் கையை பிடித்து நாடி பார்த்தவர் “தேனு உண்டாகியிருக்கா” என்றதும் அங்கே வந்த ஆர்த்தியோ தானும் இதுபோல வாந்தி எடுக்கமாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருக்க அவளுக்கும் தலையை சுற்றிக்கொண்டு வர “கோல்ட்” என்று மயங்கியிருக்க தங்கபாண்டியன் கையை கழுவிக்கொண்டு ஓடிவந்து தாங்கினான்.
“அடடா என் பேத்திங்க ரெண்டு பேரும் மாசமாய் இருக்காங்களே” என்று சந்தோசப்பட்டு ஆர்த்தியின் கையை பிடிக்க அவளும் கன்சீவ் என்று தெரியவர ரெட்டிப்பு மகிழ்ச்சி குடும்பத்தில் அப்போது வளர்மதி, பூபாலன் தவிர குடும்பம் அனைத்து ஹாஸ்பிட்டலில்தான் குடியிருந்தனர்.
ஆர்த்தி, தேன்மொழி இருவரையும் செக் பண்ணிய டாக்டர் “ரெண்டும் பேரும் கன்சீவ்தான்… ஆனா ஆர்த்தி ரொம்ப வீக்கா இருக்காங்க… அவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் எமோசனல் ஆகக்கூடாது” என்றவரோ, “தேன்மொழி ஹெல்த் ஓ.கே” என்று இருவருக்கும் தனிதனித்தனியே மாத்திரை கொடுத்து அனுப்பினார்.
ஆர்த்தியை அறையைவிட்டு வெளியே வரக்கூடாதென உனக்கு என்ன தேவையோ அது எல்லாம் அறைக்கே கொண்டு வர சொல்லுறேன் என்று தனபாக்கியம் கூறிவிட்டார்.
அதே நேரம் தேன்மொழியையும் “நீ பார்த்து நடந்துக்கடி உன்னை கவனிக்கலைனு நினைக்க கூடாது ஆர்த்தி ரொம்ப வருசம் கழிச்சு உண்டாகியிருக்கா தங்கம் நீதான் அவளை பார்த்துக்கிடணும்” என்று தேன்மொழிக்கு தனியாக சொல்லியிருந்தார்.
“நம்ம அக்கா அம்மாச்சி நான் விட்டுக்கொடுத்து போவேன்” என்று சொல்லியவளை அணைத்துக்கொண்டார். பொன்மணி மகள் உண்டாகி இருக்கிறாள் என்று சந்தோசப்பட்டார். ஆனால் தன் ஈகோவினை விட்டுத்தந்து பார்க்கவரவில்லை. தேவியோ “நான் என்பிள்ளையை பார்க்கப்போறேன்” என்றதும் “போய்ட்டு வா நான் வேண்டாம்னு சொல்லலையே” என்றார் வீரப்பாக பொன்மணி.
“என்னோட புருசன் மனசு மாறுவதற்குள்ள நான் என் புள்ளையை பார்க்க போறேன்” என்று அதிரசம், முறுக்கு, சீடை என பலகாரங்கள் செய்துக் கொண்டு பழக்கடையை வாங்கிக்கொண்டு மகளை பார்க்க வாசலுக்கு வந்தவர் பொன்மணியை பார்த்து அப்படியே நின்று விட்டார். அவரோ “தேன்மொழிக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் இதையும் கொண்டுபோ” என்று பார்சலை கொடுத்தார். தேவியும் பிள்ளை உண்டான நேரம் நல்லா இருக்கு போல என்று சந்தோசமாக தேன்மொழியை பார்க்கச் சென்றார்.
“வாக்கா உன் வீட்டுக்காரருக்கு தெரியாம வந்தியா?” என்று சந்தனபாண்டியன் கிண்டல் செய்தான்.
“போடா உங்க மாமாதான் என்னை அனுப்பிச்சு வச்சாரு. இங்க பாரு நான் கொண்டு வந்த பாதி பலகாரம் நான் செய்தது. மத்த ஸ்வீட்ஸ் எல்லாம் மகளுக்காக வாங்கிக்கொடுத்திருக்காரு உன் மாமா” என்று பெருமையாய் பேசிய தேவியிடம்
“இது எத்தனை நாளைக்குனு தெரியலையே!! மாமா எந்த நேரம் எப்படி இருப்பார்னு யாருக்கு தெரியும்!” என்று இதழ் பிதுக்கியவனை தனபாக்கியம் “உங்க மாமா மனசு மாறிடுச்சுடா போனவாரம் கோவிலுக்கு தேன்மொழியை கூட்டிட்டு போயிருந்தேன். தேனுவை வச்ச கண்ணு எடுக்காம பார்த்திட்டிருந்தாரு தெரியுமா!! யாரு கண்டா பொண்ணை பார்க்க நம்ம வீட்டுக்கே வந்தாலும் வரலாம்” என்று சொல்லிச் சிரித்தார்.
தங்கபாண்டியன் மதியம் சாப்பாட்டிற்கு வந்தவன் தேவியை பார்த்ததும் “அடடே வராத விருந்தாளி வந்திருக்காங்களே! பொண்ணு மாசம் ஆனதும்தான் நம்ம வீட்டுக்கு வரதுக்கு வழி தெரிஞ்சிருக்கு உனக்கு. இந்த தம்பிகளை பார்க்கணும்னு நினைக்கலையா?” என்று விளையாட்டாக கேட்டு தேன்மொழிபக்கம் உட்கார்ந்தவனிடம் “என்ன தம்பி இப்படி பொசுக்குனு உங்க மேல பாசம் இல்லையானு கேட்டுப்புட்ட… உங்களை நினைக்காத நாள் இல்லை தெரியுமா. எல்லாம் உங்க வீம்பு புடிச்ச மாமனாலதான் என்னால வரமுடியாம போச்சு” என்று வருத்தப்பட்டவரை
“ஏய் தேவி பழசை பேசி என்ன பிரயோசனம்!! மாசமா இருக்க புள்ளைக்கு பலகாரத்தை ஊட்டிவிடு. ஆர்த்தி அவ அறையில தூங்குறா அவளுக்கும் சம்பிரதாயத்துக்கு பலகாரத்தை ஊட்டிவிடணும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“மாமா எனக்கு பலகாரம் ஊட்டுங்க” என்று தங்கபாண்டியனிடம் ஆசைப்பட்டு கேட்டுவிட்டாள். தங்கபாண்டியனும் தட்டில் இருந்த லட்டுவை எடுத்து தேன்மொழிக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தான் தங்கபாண்டியன்.
சிரிப்பு சத்தம் கேட்டு அறையிலிருந்து வந்த ஆர்த்தியோ அங்கே சோபாவில் உட்கார்ந்திருந்த தேவியை பார்த்து “வாங்கம்மா” என்று வரவேற்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“வா கண்ணு நீயும் மாசமாய் இருக்கனு அப்பத்தா சொன்னாங்க ரொம்ப சந்தோசம் உனக்கு சேர்த்து தான் பலகாரம் செய்து எடுத்து வந்திருக்கேன்” என்று முகம் மலர்ந்தார் தேவி.
“தேவி ஆர்த்தி இனிப்பெல்லாம் சாப்பிடக்கூடாது அவ உடம்பு கொஞ்சம் வீக்கா இருக்கு சம்பிரதாயத்துக்கு ஸ்வீட் ஊட்டி விடலாம்” என்று தனபாக்கியம் கூறியதில் தேவி முன்னால் தனக்கு உடம்பு சரியில்லை என்றதில் ஆர்த்தியின் மனம் சுணங்கியது. தேவியும் இந்த வீட்டு பெண்தான் என்று ஆர்த்தி மறந்துவிட்டாள்.
“எனக்கு ஸ்வீட் வேணாம் பாட்டி. மயக்கம் வருது போல இருக்கு பாட்டி நான் உள்ளே போறேன்” என தங்கபாண்டியனை ஒரு பார்வை பார்த்தவள் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டு “தேன்மொழி இரத்த சொந்தம் அதனால் தான் அவளை இப்படி எல்லாரும் விழுந்து விழுந்து பார்த்துக்குறாங்க! ஏன் என் கோல்ட் கூட” என்று புதிதாய் பொறாமை வந்தது அவளுக்கு.
தங்கபாண்டியன் ஆர்த்தியை பற்றி அறியாதவனா! அவளது பார்வை அவனுக்கு புரியாமல் போகுமா என்ன!
“அக்கா ஒரு நிமிசம் வந்துடறேன்” என்று அறைக்குள் சென்றான். கண்ணை மூடிப்படுத்துக்கொண்டாள்.
“என்னாச்சு அம்மு உடம்புக்கு ஏதும் பண்ணுதா?” என்று அவளருகே உட்கார்ந்து தலையை வருடிக்கொடுத்தான்.
“காலையிலிருந்து நீங்க எனக்கு ஒரு போன் கூட போடலை கோல்ட்!! மூணு முறை வாமிட் பண்ணிட்டேன் தெரியுமா?” என்று கண்ணை உருட்டியவளை பார்த்து.
“என்ன மூணுமுறையா அப்பத்தா உன்னை பார்த்துக்கத்தான் வயக்காட்டுக்குகூட போகாம இருக்காங்க. ஏன் நீ அவங்களை கூப்பிடலையா?”
“ம்ம் வந்தாங்களே! தேன்மொழி வாந்தி எடுத்ததும் ஓடிப்போய் அவளை கவனிச்சிட்டு!! அப்புறம் என்னையும் ஏதோ பார்த்துக்கிடணும்னு கடமைக்கு பார்த்துக்கிட்டாங்கதான்!! பாட்டிக்கு பாசம் நிறைய தேன்மொழி மேலதான்” என்று உப்பு சப்பில்லாமல் பேசினாள்.
அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது தெரிந்தாலும் அவள் எதுவும் எமோசனல் ஆக கூடாதென டாக்டர் சொல்லியிருப்பதை எண்ணியவன் “ஆர்த்தி நீ மெச்சூர்டுப்பா தேன்மொழி சின்னப் பொண்ணு அவளுக்கு எதுவும் தெரியாதுல்ல. அதான் அவளை கவனிச்சிருப்பாங்க. உன்னையும் பாசத்தோடத்தான் அப்பத்தா கவனிச்சிருக்கும் நீயா கற்பனை பண்ணிக்காத அம்மு! உனக்கு ஆப்ரேசன் செய்தப்ப உன்னை அப்பத்தா பார்த்துக்கிட்டாங்கதானே” என்று சற்று குரலை உயர்த்திவிட்டான்.
“நான் மட்டும் இதுக்கு முன்ன மாசமாய் இருந்தேனா! என்ன இருந்தாலும் தேன்மொழி அவங்க இரத்த சொந்தம் நான் அன்னியம்தானே” என்று அவள் மனதில் உள்ளதை பட்டென்று போட்டு விடடாள். இத்தனை நாள் அவளுக்குள் மறைந்து கிடந்த சாத்தான் புத்தி மீண்டும் எட்டிப்பார்த்தது.
“அம்மு என்ன பேசற நீ! உன்னை கவனிக்க நான் இருக்கேன் சரியா!! வேணும்னா உன் அம்மாவையும் உன்கூட கூட்டிவந்து வச்சிக்கோ உனக்கு பணிவிடை செய்ய!! அப்பத்தாவை குறை சொல்லாத” என நறுக்கென்று சொல்லியவன் ஒரு கணம் கண்ணைமூடித்திறந்து “அம்மு நீ எமோசனல் ஆகக்கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காங்க! உன் வயித்துல இருக்க குழந்தையை பத்திரமா பார்த்துக்கிடணும் நீ!” என்றவனோ கட்டிலிலிருந்து எழும்பியவன் “எதுனாலும் எனக்கு போன் போடு” என்று எழும்பிச் சென்றுவிட்டான்.
‘குழந்தை மட்டும் வேணும்!! நான் எப்படி போனா என்னனு நினைக்குறாரு கோல்ட்!! இத்தனை நாள் இந்த குடும்பத்துக்காக நான் எத்தனை வேலை செய்திருப்பேன் என்னையும் அவங்க கூட சேர்த்தி உட்கார வைச்சுக்கலையே என்னை அவங்கிட்டயிருந்து பிரிச்சி பார்க்குறாங்க!!’ என்று அவளாக கற்பனை செய்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் முன்பு தேன்மொழியும் ஆர்த்தியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். தேன்மொழி ஒரு வாய் அள்ளி சாப்பிட்டதும் வாந்தி வந்துவிட்டது அவளுக்கு. “ஓய்!! ஓய்!!” என்று வாயை பொத்திக்கொண்டு வாஷ்பேஷன் சென்றவளின் பின்னே தனபாக்கியம் பதறி ஓடினார்.
சந்தனபாண்டியன் அப்போது ரைஸ் மில் சென்றிருந்தவன் வீடு திரும்பியிருந்தான். ஆர்த்தியும் கொஞ்சம் சாப்பிட்டதும் அவளுக்கும் வாந்தி வந்துவிட்டது. அவள் தன் அறைக்கு வாயை பொத்திக்கொண்டு ஓடினாள்.
சந்தனபாண்டியனோ ‘ஆர்த்தி மதினிக்கு வாமிட் வரும் போலயே இந்த அப்பத்தா எங்க போனாங்க’ என்று சுற்றிப்பார்த்தவன் டைனிங் ஹால் பக்கம் பேச்சு சத்தம் கேட்டு அங்கே சென்ற பார்த்த சந்தனபாண்டியன் கண்ணில் “இத்தனை முறை வாந்தி வந்தா நான் என்ன பண்ணட்டும் அம்மாச்சி!! என்னால சாப்பாடே சாப்பிட முடியலை” என்ற அழுக ஆரம்பித்தாள் தேன்மொழி.
“ஒரு மூணுமாசம் அப்படித்தான் வாந்தி வரும் அப்புறம் சரியாகிடும் தேனுகுட்டி” என்று தேன்மொழியின் முதுகை தடவிக்கொடுத்து கொண்டிருந்தார் தனபாக்கியம்.
“அப்பத்தா தேனுவை நான் பார்த்துக்குறேன். ஆர்த்தி மதினிக்கு வாமிட் வரும் போல வாயை பொத்திக்கிட்டு அவங்க ரூம்க்குள்ள ஓடினாங்க போய் பாரேன்” என்றான் அவசரமாக.
“ஆர்த்தி சாப்பிட்டு அறைக்கு போயிருப்பானு தானே நினைச்சேன் அவளும் வாந்தி எடுக்குறாளா?” என்ற தனபாக்கியமோ “சரி தேனுவை இந்த ஜீஸை குடிக்க வை” என்று சொல்லிவிட்டு டம்ளரில் இருந்த பழச்சாறை எடுத்துக்கொண்டு ஆர்த்தியின் அறைக்குள் சென்றார்.
ஆர்த்தி வாந்தி எடுத்து முடித்து முகம் கழுவிக்கொண்டு முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு கண்ணில் சோர்வுடன் வெளியே வந்தாள்.
“என்ன கண்ணு ரொம்ப சிரமமா இருக்கா! ஒரு மூணுமாசம் அப்படித்தான் இருக்கும். இந்தா ஜுஸை குடி தெம்பா வந்திடும்” என்று அவள் கையில் ஜுஸ் டம்ளரை கொடுக்க எதுவும் பேசாமல் டம்ளரை வாங்கிக்கொண்டவள் “நான் குடிச்சுக்குறேன் அப்பத்தா நீங்க தேனுவை போய் பாருங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டு ஜுஸை குடிக்க ஆரம்பித்தாள்.
நல்லவேளை அவள் குடித்த ஜுஸ் உடலில் தங்கிவிட்டது. “அப்பாடா வாந்தி வரலை நின்னிடுச்சு! இந்த தேன்மொழிதான் எதை கொடுத்தாலும் வாமிட் பண்ணுறா கண்ணு… நான் போய் அவளை பார்க்குறேன்” என்று வெளியே வந்தார் வெள்ளை மனம் கொண்ட தனபாக்கியம்.
‘ம்ம் நான் உங்களுக்கு அன்னியம்தானே உங்க இரத்த சொந்தம் பேத்தியை தான் ஓடி ஓடி பார்த்துக்குறீங்க’ என்று மனதிற்குள் புகைந்துக் கொண்டாள் ஆர்த்தி.
நிலவு 27
வளர்மதிக்கு குழந்தையை பார்த்துக்கொண்டு நந்தனை புறப்பட வைத்து அவனை பள்ளிக்கு அனுப்புவதற்கே நேரம் சரியாக இருந்தது.
துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் மாரியை செய்ய சொல்லியிருந்தார் தனபாக்கியம். ஆனால் சமையல்கட்டுக்குள் மட்டும் யாரையும் வேலைக்கு அமர்த்தவில்லை. தானாகவே சமைக்க ஆரம்பித்தார். பேத்திகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வந்ததும், வயல்களை பார்த்துக்கொள்ள அவருக்கு நம்பிக்கையான இரண்டு ஆட்களை நியமித்து விட்டார். குழந்தை உறங்கும் நேரம் மதிய சமையலை வளர்மதி பார்த்துக்கொண்டாள்.
அன்று காலை ரைஸ் மில்லுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அருள்பாண்டியன் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதியின் பக்கம் செல்ல குழந்தையும் பால்குடித்து முடித்து தன் பக்கம் வந்து அமர்ந்த தந்தையை பார்த்து சொப்பு வாயை திறந்து சிரித்தது. “அடடே குட்டிப் பையன் அப்பாவை பார்த்து சிரிக்கிறான்” என்று குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து வளர்மதி கையிலிருந்த பூபாலனை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு “இப்பல்லாம் உங்க அம்மா என்னை கண்டுக்கறதே இல்லை தெரியுமாடா!” என்று ஓரக்கண்ணால் வளர்மதியை பார்த்து கண்சிமிட்டினான்.
“ம்ம் என்ன கண்டுக்கணும் அதான் தினமும் உங்களை கண்டுக்கிட்டதாலதான் இரண்டு பிள்ளை பெத்து கொடுத்திருக்கேனு சொல்லுடா தங்கம்” என்று குழந்தையின் வாயை ஈரத்துணி வைத்து துடைத்துவிட்டாள் வளர்மதி.
“எனக்கு தங்கச்சி பாப்பா வேணும். அப்பாவை கண்டுக்கிட்டாதான் தங்கச்சி வருவானு சொல்லுடா ராஜா” என்று வளர்மதியை பார்த்து இதழ் வளைத்து சிரித்தான் அருள்பாண்டியன்.
“யோவ் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா… இந்த வீட்ல ஏற்கனவே ரெண்டு பேர் மாசமா இருக்காங்க. சமையல் வேலையே அப்பத்தாதான் செய்யுறாங்கனு கவலைப்பட்டுட்டு இருக்கேன் நீ என்னமோ இன்னொரு குழந்தை வேணும்னு சொல்லுற” என்று அருள்பாண்டியன் கன்னத்தில் இடித்தாள் வளர்மதி.
“ஏய் நான் உன்னை சும்மா வம்புக்கு இழுத்தேன்டி. அப்பத்தாவை யாரு கஷ்டப்படச் சொன்னது. ஒரு சமையல்காரரை வேலைக்கு வைச்சுக்கலாம்னு சொன்னேன்டி… அப்பத்தா தான் சமையல்கட்டுக்குள் நம்ம வீட்டு ஆளைத்தவிர வேற யாரையும் விடமாட்டேன்னு அடிச்சு சொல்லிபுட்டாங்க நான் என்ன செய்ய முடியும்” என்றான் பெரும்மூச்சு விட்டு.
“குழந்தையை கொடுங்க மடியில வைச்சிருந்தா பழக்கம் ஆகிடும்” என்று குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டு விட்டு திரும்ப அவளை பின்னிருந்து அணைத்தவன் “நீ எனக்கு முத்தம் கொடுத்து மூணு மாசம் ஆச்சுடி அம்மணி கொஞ்சம் கவனியேன்” என அவள் கழுத்தில் முகம் பதித்தான்.
“யோவ் காலங்காத்தால பண்ற வேலையை பாரு விடுய்யா” என்று அவன் பிடியிலிருந்த விலகி அவன் முகம் பார்க்க அவனோ “ப்ளீஸ் ஒரு முத்தம் கொடுத்துக்குறேன்” என்று கண்ணைச்சுருக்க “அச்சோ உங்களோட” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க போனவளை முகத்தை திரும்பி இதழில் முத்தமிடத்துவங்கினான்.
இத்தனை மாச தேடலின் அளவை முத்தத்தில் காட்டிக்கொண்டிருந்தான். குழந்தை ஈரம் செய்து சிணுங்க முத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பெண்ணவளிடமிருந்து விலகி நின்றான்.
“அச்சோ ஈரம் பண்ணியாச்சா தங்கம்” என்று குழந்தையின் துணியை மாத்தி விட்டாள் வளர்மதி. குழந்தைக்கு டயப்பர் போடவேண்டாமென்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிருந்தார் தனபாக்கியம். காட்டன் துணிகளை குழந்தைக்கு போட்டுவிட்டிருந்தாள் வளர்மதி.
குழந்தை தூக்கத்தை தொடர “ஏய் அம்மணி இன்னொரு முத்தம் கொடேன்” என வளர்மதியை கட்டியணைக்கப்போனவனை அவனது மார்பில் கைவைத்து தள்ளிவிட்டு “காய்ஞ்ச மாடு போல வராதீங்க. எனக்கு தலைக்கு மேல வேலைக்கிடக்கு போனா போகுதுனு ஒரு முத்தம் கொடுக்க விட்டேன்ல… இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்க போங்க போய் வேலையை பாருங்க” என்றவள் அருளின் முகத்தை பார்க்காமல் குழந்தை அழுக்கு துணிகளை துவைக்க எடுத்துக்கொண்டுச் சென்றாள்.
‘டேய் அருளு இன்னும் எத்தனை நாள் ஈரத்துணியை கட்டிக்கிடணுமோ தெரியலையே’ என்று புலம்பிக்கொண்டுச் சென்றான் அருள்பாண்டியன்.
ஆர்த்திக்கு ஓரளவு வாமிட் வருவது நின்றுவிட்டது. ஆனால் தேன்மொழிக்கோ தண்ணீர் குடித்தால் கூட குமட்டிக்கொண்டு வருகிறது. வயிற்றில் எதுவும் தங்காமல் ஒரு டம்ளர் ஜுஸ் குடித்தால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்துவிடும். சோர்ந்து போய்விட்டாள். பகலெல்லாம் தனபாக்கியத்தின் மடியை விட்டு எழுந்து வரவே மாட்டாள். இரவெல்லாம் மாமா எனக்கு கைவலிக்குது கால் வலிக்குது. தலையை பிடிச்சு விடுங்க என்று சந்தனபாண்டியனை தூங்கவிடாமல் ஒரு வழி செய்து விடுவாள் தேன்மொழி.
“என்னடி உனக்கு மட்டும் இப்படி வாந்தி வருது” என்று சலித்துக்கொண்டாலும் அவள் படும்பாட்டை பார்த்தால் மனது இறங்கிவிடும் சந்தனபாண்டியனுக்கு… மடியிலேயே படுக்க வைத்துக்கொண்டு அவனும் அப்படியே உறங்கிவிடுவான்.
ஆர்த்திக்கு வாமிட் நின்றிருந்தாலும் சோர்வு இருக்கத்தான் செய்தது. வேலை செய்து பழகியவளுக்கு வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. கீழே குனிந்து அறையை கூட பெருக்கக்கூடாதென்று ஆர்டர் போட்டிருந்தார் தனபாக்கியம்.
அறையை கூட பெருக்கக் கூடாதா இந்த பாட்டி ரொம்ப பண்ணுறாங்க என்று நொந்துக் கொண்டவள் அப்பாவை பார்க்கணும் போல இருக்கு என்று தோன்ற தங்கபாண்டியனுக்கு போன் போட்டாள். அவனோ போனை அவனது கோழிப்பண்ணை ஆபிஸ் அறையிலேயே சார்ஜ் போட்டு வைத்து விட்டு கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருக்க டாக்டரை வரவழைத்து கோழிகளுடன் நின்றிருந்தான்.
“ப்ப்ச் போன் எடுக்கலையே சென்னையில மீட்டிங்ல இருக்கும்போது கூட போன் போட்டா கால் யூ பேக்னு மேசேஜ் வரும்… இப்போ என்ன கோழிகள் கூட பேசிக்கிட்டு என் கூட பேசமாட்டேங்கிறாரு” என்று கோபப்பட்டு போனை மெத்தையில் தூக்கி போட்டு கண்ணை மூடினாள். இதுவே சென்னையில் இருக்கும்போது சும்மாயிருக்க சொல்லியிருந்தால் படுத்து குறட்டை விட்டு உறங்கியிருப்பாள். இப்போ வேலை செய்த கைகள் சும்மா இருக்க முடியாமல் தவித்தது.
தேன்மொழிக்கு வாமிட் வந்துக் கொண்டேயிருக்க டாக்டரிடம் அழைத்துச் சென்றிருந்தனர் சந்தனபாண்டியனும் தனபாக்கியமும். குழந்தைக்கு தடுப்பூசி போட எடுத்துச் சென்றிருந்தாள் வளர்மதி.
ஆர்த்திக்கு துணையாக மாரியை தங்க வைத்துச் சென்றிருந்தனர். தனபாக்கியம் ஹாஸ்பிடல் போகும் முன் ஆர்த்தி கண்ணு ரெஸ்ட் எடுக்கணும் வீட்டுல யாரும் இல்லனு வேலை செய்ய கூடாது! பத்திரமா இருக்கணும் என்று பலமுறை சொல்லிச் சென்றிருந்தார் தனபாக்கியம்.
மகேஷ்வரனுக்கு காய்ச்சல் வந்திருக்க சங்கரியோ ஆர்த்திக்கு போன் போட்டு விட்டார். “ஆர்த்தி அப்பாவுக்கு காய்ச்சல் அதிகமா இருக்குடி எனக்கு என்ன பண்றதுனு தெரியல டி, இங்க எந்த ஹாஸ்பிட்டல் இருக்குனு கூட தெரியலையே… உன்னாலயும் வரமுடியாது!! உன் வீட்டுக்காரருக்கு போன் போட்டு ஹாஸ்பிட்டல் எங்க இருக்குனு கேட்டு ஒரு கேப் பிடிச்சு கொடுக்கச் சொல்லுடி! எனக்கு பயமாயிருக்கு!” என்று பதட்டப்பட்டார் சங்கரி.
ஆர்த்தியோ “இதோ போன் போடுறேன்மா காய்ச்சலுக்கு டேப்லட் எதுவும் கொடுத்தியா!” என்று சிறு பதட்டத்துடன் கேட்டுக்கொண்டே லேண்ட் லைன் போனில் தங்கபாண்டியனுக்கு போன் போட்டாள்.
தங்கபாண்டியன் போன் எடுக்கவில்லை. ஹாஸ்பிட்டல் செக்கப் போகணும்னா கார்லதானே போவோம் இப்பவும் கார்லயே அப்பாவை பார்க்க போகலாம் என்று முடிவு பண்ணியவளோ புறப்பட்டு வெளியே வர அவளுக்கு பழச்சாறு எடுத்து வந்த மாரியோ “ஆர்த்தி பொண்ணு எங்க கிளம்பிட்டீங்க. உங்களை அறையை விட்டு வெளியே வரக்கூடாதுனு அப்பத்தா சொல்லியிருக்காங்க” என்று அவள் பக்கம் வந்தார்.
“மாரியக்கா அப்பாவுக்கு காய்ச்சல் அதிகமா இருக்காம்… அம்மாவுக்கு நம்ம ஊர்ல இருக்க ஹாஸ்பிட்டல் எங்கயிருக்கனு தெரியாது நான் கிளம்பணும்” என்ற பிடிவாதமாக வாசலுக்குச் சென்றுவிட மாரியால் ஆர்த்தியை தடுக்க முடியவில்லை.
“ஆர்த்தி பொண்ணு நில்லுங்க இந்த பழச்சாறையாவது குடிச்சிட்டு போங்க” என்று அவளுக்கு பழச்சாறை கொடுக்க வாங்கி குடித்தவள் “சரிக்கா நான் கிளம்புறேன்” என்றதும் “நான் உங்க வீட்டு வேலைக்காரி தான் இருந்தாலும் சொல்றேன் தப்பா நினைக்காதீங்க நீங்களே இத்தனை வருசம் கழிச்சு மாசமா இருக்கீங்க இப்ப கார்ல போய் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுச்சுனா என்ன பண்றது! அப்பாவையும் அம்மாவையும் கார் புக் பண்ணி ஹாஸ்பிட்டல்க்கு போகச் சொல்லுங்க. இல்ல தங்கம் தம்பிக்கு போன் போட்டுச் சொல்லிட்டு போங்க” என்று ஆர்த்தியின் நலனை கருத்தில் கொண்டு கூறினார் மாரி.
“அக்கா நீங்க சொல்றது எனக்கும் புரியுது!! கோல்ட்டுக்கு போன் போட்டேன் எடுக்கலையே! பெத்த அப்பாக்கு உடம்பு முடியலைனு சொல்லும் போது எப்படி என்னால போகாம இருக்க முடியும்” என்று பதறியவளை “அப்போ அருள் தம்பிக்கு போன் போட்டு பாருங்களேன்” என்றதும் “அதெல்லாம் வேணாம்க்கா அவங்களுக்கு எதுக்கு தொந்தரவு” என்று சொல்லிக்கொண்டிருக்க சங்கரி போன் போட்டு விட்டார்.
“ஆர்த்தி அப்பாவுக்கு ரொம்ப முடியலடி” என்று அவர் அழுக ஆரம்பிக்க “இதோ!! இதோ!! வந்துட்டேயிருக்கேன்மா” என்றவளோ அடிவயிற்றில் ஒரு கையை வைத்துக்கொண்டு “பாப்பா அம்மா வயித்துக்குள்ள பத்திரமா இருங்க” என்று வயிற்றில் இருக்கும் கருவிடம் பேசிக்கொண்டே வெளியே வந்தவள் கார் துடைத்துக்கொண்டிருக்கும் டிரைவரிடம் சென்றவள் “அண்ணா அப்பாவை பார்க்க போகணும் வண்டியை எடுங்க” என்று காரில் உட்கார்ந்துவிட்டாள்.
அவளுக்கு மனதிற்குள் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று அவளுக்கும் இன்னும் பயம் வேறு அதிகரித்தது. அடிவயிற்றில் கையை வைத்தபடியே இருந்தாள்.
நேற்றிரவு தங்கபாண்டியன் கூறியது நினைவில் வந்து கண்ணு முன்னே நிழலாடியது. “தோட்டத்துக்கு கூட நீ நடந்து போகக்கூடாது அம்மு! பாப்பா நமக்கு ரொம்ப வருஷம் கழிச்சு கிடைச்ச அளப்பெரிய பொக்கிஷம்! பாப்பா பத்திரம்” என்று நூறு முறை சொல்லிச்சென்றிருந்தான். காரும் புறப்படத்துவங்க ‘கடவுளே என் குழந்தைக்கும் எனக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது’ என்று கடவுளை வேண்டிக்கொண்டேச் சென்றாள்.
தங்கபாண்டியன் தன் வேலைகளை முடித்துவிட்டு ஆபிஸ் ரூம் வந்து போனை எடுத்து பார்க்க ஆர்த்தி பல முறை அழைத்திருப்பது தெரிந்து ‘அம்மு இத்தனை முறை கூப்பிட்டிருக்கா!! என்னாச்சுனு தெரியலையே!’ நெற்றியில் வியர்வை வழிய துடைத்துக்கொண்டே ஆர்த்திக்கு போன் போட்டான்.
இரண்டு தெரு தள்ளியிருக்கும் மகேஷ்வரன் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஐந்து நிமிடத்தில் போய்விட்டாள். சங்கரி பதட்டப்பட்டது போலவே மகேஷ்வரனுக்கு காய்ச்சல் அதிகம் தான் இருந்தது. போர்வைக்குள் அனத்திக்கொண்டிருந்தார்.
“ஆர்த்தி உங்கப்பாவை பார்த்தியா எப்படி குளிருல நடுங்கிட்டு படுத்திருக்காரு… உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்டி” என்று பரபரத்து பேசிக்கொண்டேயிருந்தாரே தவிர அவருக்கு தலைவலி தைலம் தேய்த்து விடலாம், நெற்றியில் ஈரத்துணி பத்து போடலாம் என்றெல்லாம் நினைக்கவில்லை.
“ஏன்மா உனக்கு வயசாச்சே தவிர காய்ச்சல் தைலம் தேய்ச்சு, ஈரத்துணி பத்து போடணும்னு கூட உனக்கு தெரியலையா?” என்று சங்கரியை திட்டிக்கொண்டே நெற்றியில் தைலம் தேய்த்து விட்டு “அப்பா ஹாஸ்பிட்டல் போகலாம்பா” என்று மகேஷ்வரன் காதோரம் சென்று அவள் பேச.
“ஹான் ஆ.ஆர்த்தி கு.குட்டி நீ எதுக்குமா இங்க வந்த. இ.இத்தனை வருசம் கழிச்சு கன்சீவ் ஆகியிருக்க இப்படி வரலாமா! யாரு உங்கம்மா இங்க வரச் சொன்னாளா!! அறிவே இல்ல உங்கம்மாவுக்கு” என்று போர்வையை விலக்கி மெதுவாய் எழுந்து உட்கார்ந்தார். அவர் உடம்பு முடியாத நேரத்திலும் மகளுக்காய் யோசித்தார். சங்கரிக்கோ சிந்திக்கும் மனப்பான்மை அவரிடம் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பண்ணித்தானே பழக்கம் சங்கரிக்கு.
“அப்பா ரெண்டு தெரு தள்ளித்தானே வீடு இருக்கு… கார்லதான் வந்திருக்கேன்ப்பா நீங்க வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று மகேஷ்வரனின் கையை பிடித்தாள்.
“நீ.நீ என்னை தாங்கிப்பிடிக்க வேண்டாம் தங்கம்” என்றவரோ அப்படியே சிலைபோல நின்றிருந்த சங்கரியை இருமிக்கொண்டே திரும்பி பார்த்தவர் “ஏய் இங்க கொஞ்சம் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு. கன்சீவ்வா இருக்க பிள்ளையை இப்படியா அலைக்கழிப்ப அறிவுகெட்டவளே” என்று மனைவியை திட்டாமல் இருக்கவில்லை மகேஷ்வரன்.
“எனக்கு உதவிக்கு யாரை கூப்பிடறதுனு தெரியலைங்க அதான் நம்ம பொண்ணுக்கு கூப்பிட்டேன்” என்றவரோ சாவகாசமாய் மகேஷ்வரனின் கையை பிடித்தார்.
“இருங்கப்பா நான் டிரைவர் அண்ணாவை கூட்டிட்டு வரேன்” என்று வீட்டின் வாசற்படியில் காலடி எடுத்து வைக்கும் நொடி தங்கபாண்டியனின் போன் வர போனை பார்த்தவள் தங்கபாண்டியன் எண்ணைக் கண்டதும் அவளுக்கு பதட்டம் வந்துவிட்டது. எங்க இருக்கனு கேட்டா என்ன சொல்றது அவளுக்கு வியர்த்துக்கொட்டியது. முந்தானையில் வியர்வையை துடைத்துக்கொண்டு போனை அட்டண்ட் பண்ணாமல் போனை பார்த்திருக்க போன் கட் ஆனது.
‘ம்ப்ச் போன் எடு அம்மு! என்னடி ஆச்சு உனக்கு! கடவுளே’ என் பொண்டாட்டிக்கும் குழந்தைக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடந்திருக்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான். பைக்கை என்றைக்கும் வேகமாக ஓட்ட மாட்டான் சந்தனபாண்டியன். இன்றோ அதிவேகமாக ஓட்டிவந்தான். வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தியவன் பைக்கை ஸ்டாண்டு கூட போடாமல் அப்படியே பைக்கை போட்டு விட்டு வீட்டிற்குள் ஓடினான்.
வீட்டில் எந்த சத்தமும் கேட்காமல் இருக்க தங்கபாண்டியனுக்கோ இதயம் துடிக்க மறந்தது. இதயம் இருக்கும் இடத்தை தேய்த்துக்கொண்டான். தன் அறைக்கதவை மெதுவாய் திறந்தவனோ “அ.அம்முஊஊ” என்று உள்ளேச் சென்றான். அவனின் அம்மு அங்கே இருந்தால்தானே பைக்கில் வரும்போதே வண்டியை ஓட்டிக்கொண்டே போன் போட்டு ஓய்ந்து விட்டான் தங்கபாண்டியன். குளியலறை கதவை திறந்து பார்த்தான் அங்கேயேயும் இல்லை. சமையல்கட்டில் ஓடிச்சென்று பார்த்தான். பின்னந்தலையை அழுந்தக்கோதிக்கொண்டான்.
தோட்டத்தில இருப்பாளோ என்று எண்ணியவன் தோட்டத்திற்கு வேகமாக ஓடிச்சென்று ஒவ்வொரு இடமாக தேடியவன் மாட்டுத் தொழுவத்தில் சுத்தம் செய்துக் கொண்டிருந்த மாரியை பார்த்தவன் “அக்கா அ.அம்மு ஆர்த்தி எங்கே அறையில காணோம்?” என்றான் மூச்சுவாங்க.
“த.தம்பி அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு போன் வந்தது! கிளம்பிட்டாங்க” என்றார் தயங்கியபடி.
“என்னக்கா நீங்க அவளை தனியா எங்கேயும் விடக்கூடாதுனு உங்களை பாத்துக்க சொல்லியிருந்தேன்! நீங்க எப்படி அவளை அனுப்பி வைக்கலாம்?” என்று மாரியை கடிந்துக் கொண்டான். ஒருநாளும் வீட்டில் வேலை செய்யும் யாரையும் தங்கபாண்டியன் திட்டியதில்லை. இன்று திட்டிவிட்டான்.
“தம்பி ஆர்த்தி பொண்ணு உங்களுக்கு போன் போட்டாங்க நீங்க எடுக்கலைனதும் கிளம்பிட்டாங்க” என மெதுவாய் பேசினார்.
“நீங்க போக வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும்கா. உங்க மேல உள்ள நம்பிக்கையில தான் விட்டுட்டு போனோம்” என்றவனுக்கு குரல் பிசிறி தட்டியது.
“மன்னிச்சிடுங்க தம்பி” என்றவரோ அப்போதும் நான் போக வேண்டாம்னு சொன்னேன் என்று சொல்லவில்லை. தான் அப்படி சொன்னால் இன்னும் ஆர்த்தி மேல் தங்கபாண்டியனுக்கு கோபம் வரும் என்று நினைத்து அமைதியாக கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தார்.
தங்கபாண்டியோ மகேஷ்வரன் இருந்த வீட்டுக்கு வண்டியை விட்டான். ரெண்டு தெருதானே மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டினான் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தினான்.
ரைஸ்மில்லிருந்து வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த அருள்பாண்டியனிடம் ரைஸ்மில்லில் வேலைசெய்யும் செய்யும் பெண்மணி ஒருத்தர் “அருள் அண்ணா நம்ம தங்கபாண்டியன் அண்ணா பைக்கை வேகமா ஓட்டிட்டு போனாரு” என்றதும்
“நல்லா பார்த்தியாமா தம்பி பைக் வேகமா ஓட்ட மாட்டானே? ஹான் எந்த பக்கம் மா பார்த்த?” என்று தாடையை தேய்த்தபடி
“நம்ம நெல்லு மூட்டை அடுக்கி வைப்போம்ல அண்ணா அந்த வீட்டுப்பக்கம் தான் போனாரு” என்றதும் “சரி மா நீ வேலையை பாரு” என்று கூறியவன் அடுத்த நிமிடம் பைக்கை எடுத்திருந்தான் அருள்பாண்டியன்.
ஆர்த்தி வாசற்படியிலிருந்து இறங்கியவள் தங்கபாண்டியனை பார்த்துவிட்டாள். ஆர்த்தியை பார்த்ததும் அவளுக்கு ஏதும் இல்லையென்று நிம்மதி பெரும்மூச்சு விட்டு ஆர்த்தியின் அருகே போக அவளோ தன்னை திட்டிவிடுவானோ என்ற பயத்தில் “கோல்ட் அ.அப்பாவுக்கு” என்று பேச வாயெடுக்க. ஆர்த்தியின் மீது மலையளவு கோபம் இருந்தாலும் தான் கோபப்பட்டால் அவளுக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து வந்திரக்கூடாதென எண்ணியவன் கோபத்தை திரை போட்டு மறைத்து விட்டு “அம்மு பதட்டப்படாதடி” என்று அவள் கையை பிடிக்கும் முன் வாசற்படியை விட்டு இறங்கியவளின் கால் கல் தட்டி விட்டு கீழே விழப்போனவளை பிடித்து நெஞ்சில் தாங்கிக்கொண்டான்.
ஆர்த்திக்கோ மயக்கம் வந்துவிட்டது. அருள்பாண்டியனும் அங்கே வந்துவிட்டான். மகேஷ்வரனின் கையை பிடித்துக்கொண்டு வந்தார் சங்கரி.
“என்னாச்சு மாப்பிள்ளை?” என்று மகேஷ்வரன் கடும் காய்ச்சலிலும் பதறினார். அருள்பாண்டியனும் “தங்கம் என்னாச்சுடா ஆர்த்தி மயங்கிட்டா?” என்று அவனும் பதட்டப்பட்டான்.
“அண்ணா ஆர்த்தியை நான் அவ வந்த கார்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்! நீங்க மாமாவை கார் பிடிச்சு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க” என்றவனோ மயங்கிய ஆர்த்தியை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றான்.
யாரையும் குத்தம் சொல்ல அவன் இப்போது தயாராய் இல்லை. ஆர்த்தி எமோசனல் ஆகக்கூடாதுதென டாக்டர் சொல்லியதே அவன் மனதுக்குள் மின்னலடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தது. ஏசிக்காரிலும் அவன் முகம் வியர்த்துக்கொட்டியது. காரை வேகமாகவும் ஓட்டவில்லை. ஹாஸ்பிட்டலில் காரை பார்க் பண்ணிட்டு ஆர்த்தியை தூக்கியவன் நெஞ்சு வெடித்து சிதறியது அவன் கைகளில் இரத்தம் ஆர்த்தியின் ஆடைகளை நனைத்து அவன் கைகளில் பிசுபிசுத்தது.
‘அச்சோ கடவுளே!’ என்று அவன் உள்ளம் ஆழிப்பேரலையாக ஓலம் போட்டது. ‘என் அம்மு வேணும். என் பாப்பா வேணும்’ என்று அவன் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் துடித்தது. வேகமாய் ரிசப்சன் சென்றவன் “டாக்டரை பார்க்கணும்” என்றான் மூச்சு வாங்க. டாக்டர் ரவுண்ட்ஸ் முடித்து வந்தவர் ஆர்த்தியை வைத்துக்கொண்டு துடிக்கும் தங்கபாண்டியனை பார்த்ததும் “நர்ஸ் அந்த பேஷண்டை என் ரூம்க்குள்ள அனுப்பி வைங்க” என்று சொல்லியவர் அவரது அறைக்குள் சென்றிருந்தார்.
தங்கபாண்டியன் ஆர்த்தியை கையில் ஏந்தியபடியே டாக்டரின் அறைக்குள் சென்றான். அவன் முகத்தில் இருந்த தவிப்பை பார்த்த டாக்டர் புரிந்துக் கொண்டு “ஆர்த்தியை இந்த ரூம்ல படுக்க வைங்க செக் பண்ணிடுறேன்” என்றவர் தங்கபாண்டியன் பின்னேச் சென்றார்.
தங்கபாண்டியன் ஆர்த்தியை அங்கிருந்த மெத்தையில் படுக்க வைத்து விட்டு ஆர்த்தியின் முகத்தை பார்த்தான் அவள் கண்ணில் கண்ணீர் தடம் கோடுகளாக இருந்தது. “டாக்டர் என் வொய்ப்பும் என் குழந்தையும் எனக்கு வேணும்” என்று சிறு பிள்ளை போல அழுதான் ஆறடி ஆண்மகன்.
“தங்கபாண்டியன் ஆர்த்தியை நான் செக் பண்ணிட்டு சொல்றேன் வெளியே உட்காருங்க” என்று கூறவும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் ஆர்த்தியை பார்த்துக்கொண்டேச் சென்றான்.
👌👌👌👌👌👌👌👌👌👌
zpEaBwCUeF
qYQUGwgMJtur
aIuVtolK
NGcohigQwW
pFqndIPJORfuz
FlCcnsyDajoG
❤️❤️❤️❤️❤️❤️
HABCqrcUsuJZi
LExokquQM
UNsIVrXGghDy
mirgowksnAXbL
YukIjaApiKhXOBLG
mKtHZjcxkG
tYZEuqIx
qupOHmwMDG
DFnXxRIHZsTYlf
bKqaCpdk
xWFMIoGwuYVbzcXJ
isKNGkhbg
DcUIpbjRqgQnxJFi
PeVYsoJnyIDSLN
XFvolUJMzQtVS
iupeqQrcz
kwRaTJpQAdoPcx
trpmMszPo
fJznOquTymvR
wLGpUhHjXm
sLEAaJXTybB
UFZHAhboik
kiNRZzKwMxITDdBG
xjEciAasSzVtI
lcmWnkDwsJfzIV
dpraybUJPuimO
BlvnJZQEAUDoF
HBMNpSRnA
LZfDEiCBFbgdSsXQ
nuXwTjfQeFYKzk
wRshoVPdNUMJBXS
JGFDaUdxySHtvYmB
TlSCWaikHBNO
LOMceTfdI
xmGjQBpAVCsI
jMdTfELhSJRlra
OjLcsPJI
JqSmZVyEU
ByYwkvcLa
LvomdOgTbY
pZrFYVGwW
awPdcqKBvCJAmRO
BgVrbhqpOGtF
OZqPfMzF
rtXVGIdpc
ZBDyqexFmjlhC
bdrYhOjRgmFvLpkA
gqTKNLYuJpiaxl
INQJYOwT
KEXsIBzJFMoanwlf
NCntxhMFWYyUIe
JevQhTMb
MqtFdaijPEkO
Ayyayyo
DlwUpdieIcGska