ATM Tamil Romantic Novels

பச்சை அரக்கனின் நீலப்பாவை

பாவை  1
 
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
 
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி
 
மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
 
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 
 
 
பூஜையறையில் பாட்டு பாடி முடித்து நெற்றியில் திருநீறை பட்டை போட்டுக்கொண்டு வெளியே வந்த வாணியோ  மகளின் அறையை பார்த்தார். இன்னமும் திறக்கவில்லை தூங்கிக்கொண்டிருந்தாள் வாணியின் செல்ல புதல்வி ஜானவி. போன ஜென்மத்துல கும்பகர்ணனுக்கு தங்கச்சியா பிறந்திருப்பா போல மணி ஒன்பது ஆனா கூட கண்ணு விழிக்க மாட்டா போல” என்று சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு “ஏய் ஜானவி இன்னுமா உனக்கு விடியாம இருக்கு” என்று மகளின் அறைக்கதவை தட்டினார் வாணி.
 
வாணியின் குரல் ஜானவியின் காதில் கேட்டாலும் ‘ம்ம் இந்தம்மாவோட டார்ச்சர் தாங்க முடியலை பேசாம கனடாவுலயே இருந்திருக்கலாம்’ என்று காதை அடைத்துக்கொண்டு புரண்டு படுத்தாள்.
 
வாணியோ விடாமல் “ஏய் ஜானவி இப்ப கதவை திறக்கல கதவை உடைச்சு உள்ளே வந்துடுவேன்டி” என்று தாயின் மிரட்டலில் 
 
‘அச்சோ அம்மா கொஞ்சம் நேரம் தூங்க விட மாட்டியா’ என்று காதை குடைந்துக் கொண்டு சலித்தபடி கட்டிலிலிருந்து எழுந்து கொட்டாவி விட்டபடியே கதவை திறந்தாள் ஜானவி.
 
அவள் வந்த நின்ற கோலம் கண்டு கோபப்பட்டவர் “அடிக்கழுதை உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சுடி பொட்டப்புள்ள காலையில நேரமே எழுந்து குளிச்சிட்டு சாமி கும்பிடணும்னு தோணாதாடி உனக்கு? இப்படியா தூங்கி வழிஞ்சு வருவ?” என்று அவள் கையில் ஒரு அடி போட்டார்.
 
ஜானவியோ “எனக்கும் சேர்த்து தினமும் பூஜையறையில அரைமணி நேரம் சாமி பாட்டு பாடி கும்பிடுறீங்கல்ல ம்மா நான் வேற தனியா சாமி கும்பிடணுமா என்ன!” என்றாள் ராகமாக கண்ணைத்தேய்த்தபடி.
 
“ஆமாடி இந்த வெட்டிப் பேச்சுக்கு குறைச்சல் இல்ல உனக்கு! நாளைக்கு புகுந்த வீட்டுல போய் பூஜை பண்ண சொன்னா என்னடி பண்ணுவ! அதுக்கும் மாப்பிள்ளை வீட்டுல உன் அம்மா பூஜை பண்ண கூட சொல்லித்தரலையானு என்னைத்தான் ஏசுவாங்க!” என்று மகளை தாளித்தார்.
 
“என் மாமியாருக்கு மந்திரம் போட்டு என் பேச்சு கேட்குறது போல என் கைக்குள்ள வச்சிப்பேன்!” என்று தலையை சாய்த்து கண்ணைச் சிமிட்டினாள்.
 
“சரியான அறுந்த வாலுடி நீ மாப்பிள்ளை வீட்லயிருந்து முகூர்த்தப்புடவை எடுக்க உன்னை அழைச்சிட்டு போக வரேன்னு சொல்லியிருக்காங்க. வைதேகி அண்ணி  காலையிலிருந்து ரெண்டு முறை போன் பண்ணிட்டாங்க நானும் ஆபிஸ் வேலையா இருக்கா சம்பந்தினு சமாளிச்சு வச்சிருக்கேன் சோம்பேறி பொண்ணா நிற்காம போய் குளிச்சிட்டு வாடி” என்று மகளின் முதுகில் கை வைத்து தள்ளினார்.
 
“ஏன்மா குளிக்காம போனா கடைக்காரன் புடவையை காட்டாம போயிருவானா காசை கொடுத்தா புடவையை காட்டப்போறான்” என்று விதண்டாவதம் பேசி இதழை சுளித்தாள் ஜானவி.
 
“உன்னை கனடாவுக்கு வேலைக்கு அனுப்பியே இருக்க கூடாது. திமிரும் கொழுப்பும் அதிகமா போச்சு! படிப்பு முடிச்சதும் உன்னை ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்திருக்கணும் இன்னேரம் கையில ஒண்ணு வயித்துல ஒன்னுனு இருந்திருக்கும். குழந்தைங்களுக்கு மூக்கு சிந்தவே நேரம் இருந்திருக்காது இப்படி என்கிட்ட வாயாடாம இருந்திருப்ப” என்று மகளை அடிக்க கையை ஓங்கியவரிடம் “உன் கையில சிக்க மாட்டேன் போ” என்று பழிப்பு காட்டி குளியலறைக்குள் ஓடினாள் ஜானவி.
 
ஹாலில் மாட்டியிருந்த கணவர் முரளியின் போட்டோ முன்னால் நின்ற வாணியோ “அப்பா சாமி பிள்ளையை பெக்காம தொல்லையை பெத்து வச்சிருக்கேன். கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னவளை எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வச்சிருக்கேன். வயசுதான் 25 ஆச்சு இன்னும் எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்குறா. நீங்கதான் நம்ம பொண்ணு வாழ்க்கையில எந்த வித இடைஞ்சலும் இல்லாம காத்து நிற்கணும்” என்றார் கண் கலங்கியபடி.
 
ஜானவியின் மாமியார் வைதேகி போனில் வர “அண்ணி  ஜானவி ரெடியாகிட்டிருக்கா” விழியோரம் கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார். 
 
வாணியின் கணவன் முரளி பேங்கில் மேனேஜராக இருந்தார். காலையில் வாணியிடம் நன்றாக பேசிவிட்டு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஜானவியை கொஞ்சி விட்டு பேங்கிற்குச் சென்றவர் மாலையில் உயிரற்ற நிலையில்தான் வீடு திரும்பினார். பேங்க் வேலை நேரம் முடிந்து கிளம்பும் நேரம் திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவரின் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்திருந்தது.
 
வாணியும் முரளியும் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். முரளி இறந்த போது பெயருக்கு வந்து நின்றவர்கள் காரியம் முடிந்ததும் வாணியை என்ன ஏது என்று கூட கேட்கவில்லை. வாணி நொடிந்து போனார் கணவனின் இறப்பால். பக்கத்தில் இருந்தவர்கள்தான் வாணிக்கு ஆறுதலாக இருந்தனர். முரளியின் வேலை வாணிக்கு கிடைத்து விட்டது. மகளுக்காக வாழ ஆரம்பித்தார் வாணி. ஜானவிக்கு தந்தை இல்லாத ஏக்கம் தெரியக்கூடாதென செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார். அவள் ஆசைப்பட்டது உடனே கிடைத்து விடவேண்டும் என்று பிடிவாதம் குணம் கொண்டவளாக வளர்ந்தாள் ஜானவி.
 
ஜானவி விருப்பப்பட்ட படிப்பைத்தான் படித்தாள். மெடிக்கல் கோடிங் கற்றுக்கொண்டவள் வேலைக்கு கனடாவுக்குத்தான் போவேன் என்று அடம் பிடித்தவளை ஜானவி அம்மா உன்னை விட்டு எப்படி இருப்பேன் நம்ம ஊர்லயே உன் படிப்பிற்கேத்த வேலை இருக்கேடி தங்கம் என்றெல்லாம் மகளை மூளை சலவை செய்து பார்த்தார்.
 
“ம்மா என்னோட ஆம்பிஷன் கனடா போகணும். வேணும்னா கல்யாணம் வேணா நம்ம ஊர் மாப்பிள்ளையை பாரு அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா பார்த்துடு காலம் முழுக்க உன்னை நான் பார்த்துக்குவேன். நீயும் என்னை உன் கைக்குள்ள வச்சி பார்த்துக்கிடலாம்” என்ற சூட்சூமமாக பேசி கனடா சென்றுவிட்டாள்.
 
ஒருவருசமாக “ஜானுமா உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன் இந்தியா வா” என்று மகளை தினமும் கேட்காத நாள் கிடையாது. அவளோ எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தவள் திடீரென ஒரு மாசம் முன்னே வந்தவளிடம் அஜய்யின் போட்டோவை காட்டி “இவர் ஐடி கம்பெனியில் ஹெச்ஆரா இருக்காருடி கை நிறைய சம்பளம் நல்ல குணமான பையன் விசாரிச்சுட்டேன் ப்ளீஸ் அம்மாவுக்காக” என்று ஜானவியின் கன்னம் பற்றி கேட்க அவளோ முதலில் மறுத்தாலும் தாயின் கண்ணீரில் கரைந்து திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டாள்.
 
வாணியோ மகளுக்கு பிடித்த சப்பாத்தியும் கொண்டைகடலையும் செய்து வைத்திருந்தார். 
 
ஜானவியோ ஜீன்ஸ் டீசர்ட்டில் முடியை லூஸ் ஹேர் விட்டு போன் பேசிக்கொண்டே டைனிங் டேபிளில் உட்கார்ந்தவள் “ஹாய் திவ்யா எப்படியிருக்க ஹர்சா குட்டி இன்னும் சேட்டை பண்ணுறானா! அப்புறம் நம்ம ஹெச்ஆர் ராகவன் சார் உன்னை நல்லபடியா கவனிக்குறாரா எப்படியிருக்காரு! நீ ஹேப்பியா இருக்கியா?” என்று வாயெடுக்காமல் அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள் ஜானவி.
 
திவ்யாவும் ஜானவியும் கனடாவில் ஒரே ஆபிஸில் வேலை செய்தவர்கள். 
 
“நாங்க எல்லாரும் நல்லாயிருக்கோம்டி உனக்கு கல்யாணம்னு இன்விடேஷன் அனுப்பியிருக்க… நீ பண்ணறது சரியாயில்லடி… நல்லா யோசிச்சு உன் கல்யாண முடிவை எடுத்தியா..? இல்ல உங்கம்மா கட்டாயப்படுத்தினதுனால கல்யாணம் பண்ணிக்குறியா ஜானு?” என்றாள் சிறு கோபத்துடன்.
 
“நான் இப்போதான் தெளிவா இருக்கேன் திவி. என்னோட விருப்பத்தோட என் கல்யாணம் நடக்குது… நான் என்ன ஒன்னும் தெரியாத சின்ன பாப்பாவா..? யாரும் என்னை கட்டாயப்படுத்தல. கல்யாணத்துக்கு உன்னோட பேமிலியை எதிர்பார்ப்பேன்டி நீ கண்டிப்பா ராகவன் சாரோட வந்திடணும்” என்றவளோ திவ்யா அடுத்த வார்த்தை பேசும் முன் போனை வைத்திருந்தாள்.
 
வாணியோ சாப்பாத்தியை தட்டில் வைத்துக்கொண்டு “என்னடி ட்ரஸ் போட்டிருக்க வைதேகி அண்ணி வரதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டு முடித்து பொண்ணா லட்சணமா புடவையை கட்டி தலை நிறைய பூவை வச்சிக்கோ” என சற்று குரலில் கடுமையை காட்டினார்.
 
“ம்மா ட்ரஸ் போட்டிருக்கேன்ல சேலையெல்லாம் என்னால கட்ட முடியாது. என்னோட மாமியார் வரட்டும் அவங்க வந்து ஏன் சேலை கட்டலைனு கேட்டா நான் பதில் சொல்லிக்குறேன்… நீங்க இன்னொரு சப்பாத்தியை வைங்க செம பசியில இருக்கேன்” என்றாள் அசால்ட்டாக.
 
“நீ உன் மாமியார் வீட்ல என்னை தினமும் திட்டு வாங்க வைக்கப்போறது உறுதிடி” என்று மகளை வசவு பாடிக் கொண்டே சப்பாத்தியை வைத்திருந்தார்.
 
வைதேகியின் கார் சத்தம் கேட்டு “வைதேகி அண்ணி வந்துட்டாங்க” என்று வெளியே ஓடினார் வாணி. பாசம் கொட்டி வளர்த்த மகளை வைதேகியின் பொறுப்பில் ஒப்படைக்க போகிறோமென்று அவர்கள் கேட்ட சீர்வரிசை அத்தனையும் ஒன்றுவிடாமல் செய்திருந்தார் வாணி. 
 
வைதேகி பெரிய பார்டர் வைத்த பட்டுப் புடவையின் முந்தானையை பிடித்துக்கொண்டு காரை விட்டு இறங்க “வாங்க! வாங்க! அண்ணி” என்று வாய் கொள்ளா புன்னகையுடன் வரவேற்றார்.
 
“என் மருமகள் புறப்பட்டாச்சா வாணி?” என்று அவரும் குண்டு உருவத்தை தூக்கி நடக்க முடியாமல் புன்சிரிப்புடன் வீட்டுக்குள் வந்தார். “அண்ணி மாப்பிள்ளை வரலையா?” என்று காருக்குள் எட்டிப்பார்த்தார் வாணி.
 
“அஜய்க்கு ஆபிஸ்ல இன்னிக்கு போர்ட் மீட்டிங் அவனால வரமுடியாது நீங்களே முகூர்த்தப்புடவை எடுத்துட்டு வந்துடுங்கனு சொல்லிட்டான் நாம மட்டும்தான் போறோம்” என்றவரின் கையை பிடித்து அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தார் வாணி.
 
ஜானவியோ சாப்பிட்டு ஏப்பம் விட்டு எழுந்து ஹாலுக்கு வந்தவள் “ஹாய் ஆன்ட்டி எப்படியிருக்கீங்க?” என்றபடியே வைதேகியின் பக்கம் போய் உட்கார்ந்தாள் அலட்டிக்கொள்ளாமல்.
 
அச்சோ கொஞ்சம் கூட மரியாதை தெரியாத பொண்ணா வளர்ந்திருக்காளே! என்று மகளை முறைத்தார் வாணி.
 
வைதேகியோ “ஜானுமா இன்னிக்கு நாம முகூர்த்தப்புடவை எடுக்க போறோம் நீ என்னடானா டீசர்ட் ஜீன்ஸ் போட்டிருக்க! எனக்கு புடவை கட்டி தலை நிறைய மல்லிகைப் பூ வச்சாதான் பிடிக்கும் போய் ட்ரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வாம்மா” என்று மூக்கு கண்ணாடியை ஏத்தி விட்டுக் கொண்டார் வைதேகி.
 
“ஆன்ட்டி எனக்கு இந்த ட்ரஸ்தான் கம்ஃபர்டபுல் நாள் முழுக்க சேலைய கட்டிக்கிட்டு கசகசனு இருக்கும்” என்று முகத்தை சுளித்தவளை கண்டு வைதேகி வாணியை பார்த்து “என்ன வாணி உன் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே என் பேச்சுக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்குறா” என்று அவர் சலித்துக்கொள்ள. 
 
ஜானவியோ “ஆன்ட்டி என்ன ட்ரஸ் போடணும்கிறது என்னோட விருப்பம் அம்மாவை ஏன் நமக்கு நடுவுல இழுக்குறீங்க இப்போ என்ன நான் சாரி கட்டிட்டு வரணும் அவ்ளோதானே ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்” என்று வைதேகியை முறைத்துக்கொண்டே அறைக்குள் சென்றவள் ‘இவங்க யாரு என் அம்மாவை திட்ட… நான் மட்டும்தான் என் அம்மாவை திட்டுவேன்’ என்று வாணியை வைதேகி திட்டியதில் கோபம் பொங்கி என்னால அம்மாவுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று சேலையை கட்டி வெளியே வந்தவளை கண்ணெடுக்காமல் பார்த்தனர் வைதேகியும் வாணியும்.
 
“இப்போதான் குடும்ப பொண்ணா லட்சணமா மூக்கும் முழியுமா இருக்கடி! கல்யாணத்துக்கப்புறம் இந்த ஜீன்ஸ் டீசர்ட் எல்லாம் மறந்துடணும் போகலாமா வாணி?” என்று அதிகாரமாக பேசி முந்தானையை கையில் பிடித்துக்கொண்டு ஓய்யார நடையுடன் சென்றார் வைதேகி.
 
ஜானவியின் தலையில் மல்லிகை சரத்தை வைத்துக்கொண்டு “உன் மாமியார் சொன்னதும் உடனே போய் சேலையை மாத்திட்டு வந்துட்டல” என்று மகளை கிண்டல் செய்தார் வாணி.
 
“நீ வேறமா சும்மா கடுப்பை கிளப்பாதே! அந்த குண்டம்மா உன்னை திட்டியதும் எனக்கு கோபம் வந்துடுச்சு அதான் சேலையை கட்டினேன் கல்யாணத்துக்கப்புறம் ஜீன்ஸ் போடக்கூடாதாமே! பேசாம இந்த கல்யாணத்தை கேன்சல் பண்ணிடுங்க அம்மா உங்களை யாரும் திட்டறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல” என்று முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டாள்.
 
“கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் தங்கம் வாடி வம்பு பண்ணாம” என்று மகளை தாஜா செய்து புடவை எடுக்க அழைத்துச் சென்றார் வாணி.
 
புடவைக்கடையிலும் வைதேகி தான் செலக்ட் செய்த சேலையை தான் எடுக்கணும் என்று ஆர்டர் போட்டு விட ஜானவியோ “முடியாது எனக்கு பிடிச்ச சேலைதான் எடுப்பேன்” என்றதும் கடைசியாக வாணி “எனக்காக ஜானுமா உங்க மாமியார் சொல்ற பட்டுச் சேலையை எடுத்துக்கோடி” என்று மன்றாட வேண்டியதாய் இருந்தது வாணிக்கு. 
 
ஒரு வழியாக புடவையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டனர். அன்றைக்கு தான் வேலை செய்த கம்பெனிக்கு கல்யாண இன்விடேஷன் வைக்கச் சென்றிருந்தாள் ஜானவி.
 
ஆபிஸிற்குள் சென்றதும் “ஹாய் கல்யாணப்பொண்ணு” என்று ஜானவியின் தோழிகள் அவளை சூழ்ந்துக் கொண்டு கலாய்த்துக்கொண்டிருந்தனர்.
 
தோழிகளுக்கு இன்விடேஷனை கொடுத்துவிட்டு “எல்லாரும் நேரமே வந்துடணும்” என்றவள் “எம்டிக்கும் இன்விடேஷன் வச்சிட்டு வந்துடறேன்” என்றவள் எம்டி கிஷோரின் அறைக்குள் சென்றாள். 
 
கிஷோர் அவசர வேலையாக அப்போதுதான் வெளியேச் சென்றிருந்தான். கதவை நாக் செய்து விட்டு உள்ளேச் சென்றவளுக்கு மின்சாரம் தாக்கியது போல் அதிர்ச்சியாய் நின்றாள் பெண்ணவள். 
 
எம்டி சீட்டில் கிஷோருக்கு பதிலாக வம்சி கிருஷ்ணா உட்கார்ந்திருந்தான் ஆளுமையோடு. யாரை பார்க்க பிடிக்காமல் வெறுத்து ஒதுக்கி வந்தாளோ இன்று அவனை பார்க்க வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டதே அவளுக்கு உடம்பெல்லாம் திகுதிகுவென எரிந்தது. அவன் பேசிய கடைசி வார்த்தை அவள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது.
 
“ஏய் போடி நீ இல்லாம என்னால வாழ முடியாதா காசைக் தூக்கிப்போட்டா ஆயிரம் பேர் வருவாங்கடி! நீ எனக்கு ஆசை நாயகி மட்டும்தான் பொண்டாட்டியா நான் உன்னை ஒருநாளும் நினைச்சு கூட பார்த்ததில்லை பெரிய ஜோக் அடிச்சிட்ட ஜானு” என்று அவன் ஹாஹாவென்று குலுங்கி சிரிக்க அவளோ அவனின் சட்டையை பிடித்து இழுத்து “என்னை உன்னோட மோகம் தீர்க்க மட்டும்தான் பயன்படுத்திகிட்டியாடா?” என்று தான் அவனிடம் எல்லாம் இழந்துவிட்டோம் என்ற ஆத்திரத்தில் அவன் கன்னத்தில் அடித்தவளின் கையை தடுத்தவன் “யாரை அடிக்குறடி? உன்னை தொட்ட பாவத்துக்கு கூலியா அடி வாங்கிட்டேன் நீ போய்ட்டே இருக்கலாம்” என்று தோளை குலுக்கி கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் பேசியவன் கார் சாவியை எடுத்துக்கொண்டுச் சென்று விட்டான் கிருஷ்ணா. அவன் முன்னே அழக்கூடாது என்று உறுதியாக இருந்தவள் அந்த கணமே இந்தியாவுக்கு பிளைட் ஏறியிருந்தாள்.
 
இன்று உடனே கதவை திறக்க வெளியே போக முற்பட்டவளின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்த பெரிய சோபாவில் அவளை மெதுவாக தள்ளிவிட அவளோ திடீரென அவனின் தாக்குதலில் நிலை குலைந்து சோபாவில் விழுந்தவள் “ஏய்” என்று அவள் பல்லை கடிக்க அவனோ “எதுக்குடி என்னை விட்டு ஓடி வந்த! நீ இல்லாம இருக்க முடியலை எனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு. தினமும் உன்னை கட்டிபிடிச்சு தூங்கி உன்னை கட்டிபிடிக்காம தூக்கம் வரலை. இப்ப எனக்கு நீ வேணும்” என்றவன் அவள் பார்வையால் எரித்து அவனை எதுவும் பேசும் முன் அவளது இதழை கவ்வியிருந்தான் வம்சி கிருஷ்ணா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top