மோகனம்-8
நடுநிசி நேரத்தைய.. இரகசிய பிறந்தநாள் விழாவும்… இனிமையாக முடிந்து அனைவரும்… நிரோஷனா வீட்டிலிருந்து… எப்படி சப்தமின்றி உள்நுழைந்தார்களோ… அது போலவே… சப்தமின்றி.. வெளிக் கிளம்பவும் தயாரானார்கள்.
ஆனால் கிளம்பத் தயாரான மதுராக்ஷி மாத்திரம்.. தோழிகள் அனைவரும் கிளம்பிய பின்னரும் கூட அவசரப்பட்டு கிளம்பி விடாமல்…நேரம் காத்து… நிரோஷனாவின் அறையில்… மீந்திருந்த கேக் துண்டுகளையெல்லாம்..
அதன் அட்டைப்பெட்டியோடு… பத்திரப்படுத்தி கையோடு எடுத்துக் கொண்டே கிளம்பலானாள்!!
நேரே ஸ்கூட்டில் தன் உடன்பிறப்போடு ஏறிக் கொண்டவள்.. அங்கிருந்தும் ஜெட் வேகத்தில்.. தந்தை விழித்து தேடக்கூடுமென்ற படபடப்புடன் வீட்டை நோக்கி பயணப்பட்டிருக்கக் கூடுமென்று நீங்கள் எண்ணியிருந்திருப்பின் அது தவறு!!
மாறாக, வழியனுப்ப வந்த நிரோஷனா… உள்ளே சென்று கதவடைத்துக் கொள்ளும் வரை.. அமைதியாய் காத்திருந்து.. தன் நாசகார திட்டத்தையும் தான் செயற்படுத்த தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தாள் அவள்!!
ஸ்கூட்டியை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டு போய்.. சரியாக மதுராக்ஷி நிறுத்தியது.. அவன் வீட்டு தாழ்வார மதிலின் எல்லையில் தான்!!
பைஜாமாவும்.. தலையைச் சூழ ஒரு ஸ்கார்ப்பும் அணிந்து.. தன் ஆளங்கத்தையெல்லாம் மறைத்து.. தன்னைத் தானே தயார்ப்படுத்திக் கொண்டு.. ஸ்கூட்டியை விட்டும் தன்னந்தனிமையில் இறங்கலானாள் தலைவி!!
பின்னிருக்கையில்… ஜிம்மியுடன்… தேமே என… உட்கார்ந்திருந்த திவ்யாவோ.. தன்னை தனிமையில் விட்டுச் செல்லும் தமக்கையின் வதனம் நோக்கி,
“அக்கா என்ன பண்ற? இப்போ எதுக்கு வண்டியை நிறுத்தின?? எங்கே போயிட்டிருக்க??”எனப் பற்பலக் கேள்விகளைப் புரியாதவளாய் தான் கேட்கவாரம்பித்தாள்!!
மதுராக்ஷியோ.. தங்கையைப் போல பதற்றமேதும் அடையாமல்… ஸ்கூட்டியில் நின்றும் மீந்திருந்த கேக் துண்டுகளை.. அதன் பெட்டியோடு கையிலெடுத்தவளாக,
பழிவெறி மூண்ட வைராக்கியம் கமழும் குரலில், “எனக்கொரு சின்ன வேலை இருக்கு”என்றாள் விட்டத்தை குரூரமாக வெறித்துப் பார்த்தபடி.
பிறகு.. தங்கையைக் கூட கூட்டுச்சேர்க்காமல்.. தாழ்வார மதிலில்… இடை வரை குனிந்து குனிந்து பதுங்கிப் பதுங்கி.. திருடி போல அவள் நடக்கவாரம்பிக்க… பாவம் திவ்யா!!
தமக்கையின் செயல்களுக்கான தலையும் புரியாமல், வாலும் புரியாமல் விழி பிதுங்கி நின்ற வண்ணமே வாய் திறவலானாள்.
“என்னக்கா… எதுவாயிருந்தாலும் சொல்லிட்டு செய்”என்று கூறிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கி… ஜிம்மியைக் கையிலேந்திய வண்ணமே… தமக்கையை போலவே பதுங்கிப் பதுங்கி மதுராவின் பின்னால் செல்லலானாள் கடும் இருளினில்!!
மதுராக்ஷிக்கோ.. இன்று நேர்முகப்பரீட்சையில் நிகழ்ந்த விபரீதங்கள் எல்லாம் கண்முன்னாடி நிழற்படம் போல அத்தனைத் தெளிவாகத் தான் விழலாயிற்று.
அவன்.. அவளது முரட்டு பாஸ்.. திட்டிய திட்டல்கள் எல்லாம் ஞாபகம் வரவே…. குத்துச்சண்டைக்குத் தயாராவது போல.. தன்கைக்கு தானே மறுகையால் குத்திய வண்ணம்,
தனங்கள் ஏறியிறங்க மூச்சு வாங்கியவாறே, , “இன்னைக்கு கார்க்கண்ணாடி முன்னாடி நின்னு.. மேக்கப் போட்டதுக்கு… என்னை செம்மையா திட்டிட்டான் தெரியுமா??”என்று கூற, திவ்யாவோ ஏதும் முறியாமல் சட்டென்று பாய்ந்து கேட்டாள்
“யாரு”என்று.
“என்னோட பாஸ்!! சைப்ரஸ் குரங்கு.. வ்வெள்ளப்பன்னி… அவனை இன்னைக்கு சும்மா விட மாட்டேன்.. செவிட்டு மிஷின் வாங்கித்தரவான்னா கேட்குற??.. இர்றா.. உன் கார டேமேஜ் பண்றேன்”என்று கறுவிக் கொண்டே…
அவள்… படலையின் பக்கம் இரகசியமாக விரைந்து கைவைக்க… என்னேவொரு ஆச்சரியம்!!
அவள் அந்தப்பக்கம் எகிறி குதிக்கத் தேவையற்று திறந்து கொண்டது மெல்லமாக!!
இது தான் சந்தர்ப்பமென்று.. படலைத் திறந்து நுழைந்தவாறே.. தனக்குத் தானே கேட்கும் குரலில், “இவ்ளோ பெரிய பங்களா மாதிரி வீட்டை கட்டிட்டு.. கூர்க்கா வைக்காம போயிட்டான் தத்தி.. அட்லீஸ்ட் நல்ல கேட் கூட போடல.. கஞ்சூஸ்” என்று அவன் மீது வசைமாரி பொழியவும் செய்தாள் அவள்.
அந்தோ பரிதாபம்!!
அவ்வீட்டின் கூர்க்கா.. படலையைச் சரிவரக்கூட மூடாமல்… திருட்டு குவாட்டர் கட்டிங் அடிக்க… பின்பக்க தோட்டத்துப்புறம் நுழைந்திருப்பதை அவள் அறியாமல் தான் போனாள்!!
மதுராக்ஷி அச்சமென்பது ஒரு அணுவுமற்று… உள்ளே நுழைந்திருக்க… இரவினில்.. உறைபனியில்… தனிமையில்.. அதுவும் நடுத்தெருவில் நின்றிருப்பது பெரிதும் அச்சத்தைக் கொடுக்கலானது தங்கை திவ்யாவுக்கு.
சுற்றுமுற்றும் விழிகளைத் திருப்பி.. அப்பாதையில் மனித வாடை கூட இல்லாதிருப்பதறிந்து.. பயத்தில் கைகால்கள் உதறவும் செய்தது அவளுக்கு.
ஆகையால் தமக்கைப் பின்னாலேயே நுழைய முனைந்தவள், படபடக்கும் குரலில்,
“ஐயோ அர்த்த ராத்திரியில தனியா விட்டுப் போறீயே… என்னையும் கூட்டிட்டுப் போஓஓ.”என்று கத்தியவாறே.. தமக்கையின் பின்னாலேயே ஓடலானாள் திவ்யா.
மதுராவும்.. தங்கை தன் பின்னால் தொடர்ந்து வருவதை ஏனோ தடுக்கவில்லை. எதற்கும்.. தான் செய்யப்போகும், “மிஸன் இம்பாஸிபிள்”ளுக்கு… கூடப்பிறந்தவளும் ஒத்துழைப்பாய் இருக்கட்டுமென்று நினைத்தாளோ.. என்னவோ??
உள்ளே நுழைந்ததும்… சட்டென்று குந்திட்டு அமர்ந்தவள்.. கைகளால் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு… தோட்டத்துக்கும், போர்ட்டிக்கோ பாதைக்குமான ஓரத்தில்… வாத்து போல நடக்கவாரம்பித்தாள் கள்ளமாக!!
எது?? வாத்து நடையா??
ஆம், பாலர்பள்ளிப் பிள்ளைகள்.. விளையாடுவதற்காக நடப்பது போல!!
தன்னைத் திட்டியவனை பழிவாங்க வேண்டுமென்ற வெறி இரத்த நாளமெல்லாம் ஊடுறுவிப் பாய…
கறுவும் குரலில், “இ… இருபது கோடி ரூபா கார்னா சொன்ன?? இரு இரு உன் காரை என்ன செய்கிறேன் பார்” என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டே… வீட்டுக்குள்ளிருந்து யாரும் பார்த்தால்…
கண்பார்வை மட்டத்துக்கு தெளிவாகப் புலப்படாத வண்ணம் குத்திட்டு அமர்ந்து கொண்டே செல்லலானாள் கையில் கேக் பெட்டியை ஏந்திய வண்ணம்.
அவளது புறமுதுகுக்குப் பின்னால்.. தாய் வாத்தைப் பின்தொடரும்.. குஞ்சு வாத்தைப் போல.. கையில் ஜிம்மியை ஏந்திக் கொண்டு.. அதே போல வாத்து நடை நடந்து வந்த வண்ணமிருந்தாள் திவ்யா!!
பெரியவளுக்கு.. நிலைமையில் அபாயகரம் ஏதும் புரியவில்லையாயினும்.. இளையவளுக்கோ… வியர்த்து விறுவிறுத்து.. பிபி, சுகரெல்லாம் சின்ன வயதிலேயே வந்து பொட்டுன்னு போய் விடுவாள் போலிருந்தாள் மருளும் விழிகளுடன்!!
நள்ளிரவில் கூர்க்கா கூட இல்லாத வீட்டு முற்றத்தில், தங்கையுடன் கேக், துண்டுகளுடன் நின்று கொண்டிருக்கும் அவளுக்குள் நினைத்த காரியத்தை முடித்து விட வேண்டுமென்ற வெறி!!
வைராக்கியம்!!
அதே சமயம்… மதுராவின் மனதிற்குள்.. திடும்மென்று மின்னில் மின்னி மறைந்தாற் போல சின்ன சந்தேகம் வந்து போகவே பட்டென்று திரும்பி.. தங்கையைப் பார்த்து திரும்பினாள் வாத்து போலவே!!
அவர்களிருவரையும் கேடயம் போல மறைத்து அவனின் நவீன காரும்.. இதர கார்களும் வரிசைக்கு தரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்க… அது அவளுக்கு மறைவிடமாகவும் தான் போயிற்று.
அவளிடமே தன்னுள் தோன்றிய சந்தேகத்தைக் கேட்க நாடி, குசுகுசுக்கும் குரலில், “ஹேய் திவ்யா… எத்தனையோ வாட்டி… நான் மிட்நைட்ல வெளியே போயிருக்கேன்… அப்போல்லாம் கண்டுபிடிக்காத நீ… இன்னைக்கு மட்டும் எப்டி கரெக்ட்டா கண்டுபிடிச்ச..???” என்று.. நகத்தினைக் கடித்துக் கொண்டு… பெரும் யோசனையில் தான் மூழ்கிப் போனாள் மூத்தவள்!!
அவளைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்த திவ்யா, மதுராவை நோக்கி,
அதே போல மிகமிக இரகசியமான தொனியில், “அதான் பூனைக்கு மணிக்கட்டினது போல.. உனக்கு கொலுசு போட்டு வைச்சிருக்காங்கல்ல.. தண்ணி குடிக்கலாம்னு ஹாலுக்கு வந்தேன்.. உன் கொலுசு சப்தம் கேட்டிச்சு..நீ வெளியே போறேன்னு புரிஞ்சிக்கிட்டேன்”என்றாள் தோள் குலுக்கி சர்வசாதாரணமாக!!
அவளையும் மீறி தலையில் கைவைத்துக் கொண்ட மதுராக்ஷியோ… பெண் பார்க்க வந்ததையொட்டி.. இன்று மாட்டிக் கொண்ட கொலுசை.. கழற்ற மறந்து போனதை எண்ணி,
“இவ்வளவும் பண்ணிட்டு.. கால்ல இருக்க கொலுச கழட்ட மறந்துட்டேனடா”என நொந்து நூடில்ஸாகித் தான் போனாள்!!
அந்த கணமே.. பாதக் கொலுசைக் கழற்றி விடலாமா என்றெண்ணம் தோன்றத் தான் செய்தது அந்த வாலுக்காரிக்கும்!!
ஆனால் அசிரத்தையான மனமோ, ‘…தேவையில்லை உடனேயே வேலையை முடித்துக் கொண்டு கிளம்புவது தானே’ என்று கட்டளையிட… அவ்வெண்ணத்தைப் பின்தள்ளியது தான்.. மதுராக்ஷி தன் வாணாளில் செய்த ஆகப்பெரிய தப்பு!!
எண்ணம் துளிர்த்த நொடியே.. சர்வஜாக்கிரதையாக.. கொலுசைக் கழற்றி… பைஜாமா பையுள்ளே வைத்திருந்தால் அவ்வளவு பெரிய சோதனை பின்னாளில் வந்திருக்காது.
அவளோ பட்டென்று.. கேக்பெட்டியை திறந்து கேக் துண்டினை எடுத்து அவனது காரின் பானட்டில் பூசுவதற்குச் சென்று.. உள்ளங்கை முழுவதும் அப்பிய கேக் க்ரீமினால்,
காரைத்தொட்டதும் தான் தாமதம்!!
காரோ பிரசவத்திற்கு வந்த பெண் போல, ‘குய்யோ முய்யோ’ என்று அவளுமே எதிர்பார்த்திராத சமயம் அகோரமாகக் கத்தத் தொடங்க… நிஜமாலுமே அடிவயிறு கலங்கி பீதியானது இரு அக்கா, தங்கைளுக்குமே!!
கூடவே அவர்கள் அழைத்து வந்த கேடி ஜிம்மிக்கும்!!
மூத்தவள் ஸ்தம்பித்து நின்று விட….. தங்கை தான்.. உடலெல்லாம் வெலவெலத்துப் போய்.. பயந்தவளாய், “ஹேய்.. வந்துருக்கா..”என்று கத்திக் கொண்டே எகிறி ஓட.. சப்தம் கேட்ட பதற்றத்தில்.. கீச்சுக்குரலில், “வள் வள்”என்று கத்திக் கொண்டு… எகிறிப் பாய்ந்து… ஏதோ ஒரு காரின் டயருக்குள் ஒளிந்து கொள்ளலானது ஜிம்மி!!
மதுராவிடம்.. காரின் அலறல் சப்தம் கேட்டு ஸ்தம்பிப்பு வந்ததெல்லாம் ஒரு சில கணங்களுக்கும் தான். ஆனால் அவளுள் அச்சமென்பது எள்ளளவும் வராது போகவே… எடுத்த காரியத்தை மூடித்தே தீருவேனென்ற எண்ணம் கேக்கினை அள்ளியெடுத்து…
காரின் முன் பானட்டெங்கும் தன் உள்ளங்கை பதித்துப் பதித்து நன்றாக பூசி விடலானாள்… கார் கத்துவதைக் கூட கணக்கில் கொள்ளாமலேயே.
கூடவே பழிவெறி மிளிரும் குறும்புக் கண்கள் வேறு.. மழலை போல, “உன்காரப் பார்த்து மேக்கப் பண்னேன்னு திட்டினேல்ல?? இப்போ… உன்காருக்கே மேக்கப் பண்ணி விட்றேன்டா… என்ன பண்ண முடியும்… உன்னால என்ன பண்ண முடியும்??”என்று அவள் காருக்கு நழுங்கு வைத்துக் கொண்டிருந்த
அந்த நேரம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தேறியது.
யாரோ ஒரு ஆண்குரல், அவள் புறமுதுகுக்குப் பின்னாலிருந்து.. “ஹேய் திருடன்!!! ”என்று கேட்க.. அந்தக் குரல்???
அது!!
அவளுடைய முரட்டு முசுட்டு பாஸ்!! அஜய்தேவ் சக்கரவர்த்தியின் குரலல்லவா??
உள்ளுக்குள் டப்பா டான்ஸ் ஆட… ஒட்டுமொத்தமாக கிலியெடுக்க, “எது திருடனா?? இவன்ட்ட மாட்டினா கைமா தான்.. வேலையும் போச்சு… மானமும் போச்சு” என்று தனக்குத் தானே முணுமுணுத்தவாறே…. திரும்பிப் பாராமல் ஓட முனைந்தாள் அவள்.
ஆனால் சர்வ வலு கொண்ட ஜிம்பாடிக்காரனான அஜய்தேவ்வா.. தன் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த கள்வனை அத்தனை இலகுவில் விட்டுவிடவும் கூடும்!!
“ஹேய் நில்லு… எங்கே ஓடப்பார்க்கிற..”என்ற படியே… அவளை ஓரெட்டில் தாவிப் பிடித்துக் கொண்டவனின் வலிய திடகாத்திரமான முன்னுடல்…
அவளது பஞ்சுக்குவியல் போன்ற பின்னழகுப் பெட்டகங்களைத் தன்னதோடு இழுத்து அணைத்துக் கொண்டது.
வன்மையான கரங்களிலொன்று… இடையூடாக நுழைந்து வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள…. இன்னொன்று முதுகூடாகத் தழுவி… அவளது அளவுக்கு மீறி வளர்ந்திருக்கும் பெண்மைப்பந்துகளையும் அமுக்கிப் பிடித்துக் கொள்ள…
முழுதும் முந்தானையினால் போர்த்தி நின்றிருந்தவளோ… ஒருகணம் மூச்சுப்பேச்சற்றுத் தான் போனாள்.
விரிந்த விழிகள்.. விரிந்தபடியே நிற்க… உள்ளிழுத்த மூச்சு வெளிவர மறுத்து நிற்க… அவள் அன்று அகலிகை சிலையாகித் தான் போனாள்.
அஜய்தேவ்வும்.. உண்மையில்… காரின் அலறல் சப்தம் கேட்டு வெளியே வந்தவன்.. அங்கே முழுதும் மறைத்து ஓர் ஆளிருப்பது கண்டு…. ‘திருடி’ என நினையாமல் “திருடனென” நினைத்துப் பிடித்திருப்பான் போலும்.
அதனாலோ என்னவோ… அவன்.. திருடன் தன் பிடியை விட்டும் அகன்று விடக்கூடாதென்று.. உடும்புப் பிடியாய் இறுக்கிப் பிடித்திருக்க… உண்மையில் தொட்டதும் மென்னங்கங்களின் ஸ்பரிசத்தில் தரை நழுவும்.. சங்கோஜ உணர்வு தான் அவனுக்கும்!!
அவளோ… சுயநினைவு வரப்பெற்றவளாக.. அவனது வலுவான பிடியை விட்டும் விலகி ஓட முயல… புலியின் பிடியைத் தடுக்க.. மான்குட்டியாலும் தான் முடியுமோ??
கத்திக் கூப்பாடு போட்டு உதவிக்கு ஆள் கூப்பிடவும் முடியாமல் தான் போனது. அப்படி கூப்பாடு போட்டு அவள் குரலைக் கண்டுபிடித்தானேயால் அவள் நிலை??திருடனுக்குத் தேள்கொட்டிய நிலையோ??
அவளோ சட்டென்று ஏதோ தோன்ற..உள்ளங்கையிரண்டிலும் அப்பியிருக்கும் கேக்கின் க்ரீமினையெடுத்து.. அவள் தலைக்கு மேலாக உயர்த்தி.. பின்புறமாக நின்ற வண்ணமே அவனது தாடியடர்ந்த முகமெங்கணும் பூசி விட்டாள் மதுராக்ஷி.
அவளது அதிரடியை ஒரு சிறிதும் எதிர்பார்த்திராதவனுக்கு.. கேக் க்ரீம் கண்களில் பட்டதும்..கண்கள் காந்தத் தொடங்க.. “ராஸ்கல்!!! ”என்று சினத்தில் கர்ஜித்தவன் தன் முகத்தை கைகளாலும் மூடிக் கொண்டு எரிச்சலை மட்டுப்படுத்திக் கொண்டு நிற்கலானான்.
அவளோ இதுதான் தக்க தருணமென.. அவனில் நின்றும் கழன்று கொண்டு.. அங்கிருந்தும் ஓட முனைய.. முரடனோ. அப்பொழுதும் விடுவதாயில்லை கையில் அகப்பட்டவளை.
காந்திய கண்களை பாதியில் திறந்து ஓரெட்டில் தாவி… அவள் முக்காட்டினை பின்புறமாய் நின்றிழுத்து.. அவளை மீண்டும் பிடிக்க முயல… அவள் முன்தள்ளப்பட்டு… இரண்டெட்டு தள்ளி போர்ட்டிக்கோவின் தார்ப் பாதையில் விழுந்தாள்.
ஒரு பக்க நெற்றி, கன்னம்.. பற்வரிசை முதற்கொண்டு.. கொங்கைகள்.. இடைகள்.. முழங்கால்கள்.. கால்விரல்களென.. அவளது உடலின் ஒருபக்கம் முழுவதும்… எழவே முடியாத நிலையில் பலத்த அடி !!.
இருப்பினும் அவன் கையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற வெறியில்.. வலியுடன் தட்டுத்தடுமாறி.. எழவே முடியாமல்.. பாதங்களை இழுத்து இழுத்து… ஒருவாறு எழுந்தோடி, வெளியே வந்தவள் கண்கள் தேடியது தங்கையை
திவ்யாவோ.. என்ன தான் பயந்து அலறி ஓடியிருந்தாலும்.. மதுராவை விட்டும் முழுமையாக அவள் எஸ்ஸாகியிருக்கவில்லை தான்!!
திவ்யாவோ…வண்டியை செலுத்தத் தயாராய் வைத்திருக்க, விந்தி விந்தி வந்து பின்னிருக்கையில்.. சடாரென ஏறிக்கொண்டவள், “சீக்கிரம் கோ… கோ..கோ”என்று வண்டியை பாதையில் விடுமாறு துரிதப்படுத்தினாள் மதுரா!!
வண்டியைக் கிளப்ப ஆயத்தமான திவ்யாவோ… அதிர்ந்து தமக்கையை நோக்கி, “ஜிம்மி எங்கேக்கா?? ”என்று கேட்க, அதைப்பற்றி சிந்திக்கும் நிலையில் நிச்சயம் மதுரா இருக்கவில்லை தான்.
மாறாக அவள் பாஸ் வீட்டு மின்விளக்குகள் எல்லாம் பட்பட்டென்று ஒளிர… மனிதக்குரல்களும் கேட்கத் தொடங்க.. அங்கிருந்து செல்வதொன்றே குறியாக எண்ணிக் கொள்ளவும் செய்தாள் அவள்!!
“அதுக்கு நேரமில்லைடீ.. சீக்கிரம் வண்டியை எடு.. மாட்னா செத்தோம்… சீக்கிரம்.. ம்ம்”என்று துரிதப்படுத்த.. திவ்யாவும் வண்டியை மின்னல் வேகத்தில் எடுக்க… திரும்பிக் கூட பாராமல் மரண ஓட்டம் தானது!!
****
ஒருவாறு இருவரும்… அஜயிடம் அகப்படாமல்.. உயிரைக் கையில்ப் பிடித்துக் கொண்டு… வீடு வந்து சேர்ந்த போது.. அவர்களின் அதிர்ஷ்டமோ என்னமோ… தந்தையும், தாயும் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருக்கலாயினர்.
மனதார ஒருபெருமூச்சொன்றை விட்டுக் கொண்டு… திவ்யாவின் உதவியின் மூலம்.. நடக்க முடியாமல்.. கைத்தாங்கலாக நடந்து கொண்டு போய்… தன்னறை மஞ்சத்தில் சாய்ந்தவளுக்கு…
அவளிடம்… அடிபட்ட வலியைக் காட்டிலும்…தன்னைத் திட்டியவனைப் பழிவாங்கிய திருப்தியே மனதுக்குள் பெரிதும் நிறைந்து நிற்கலாயிற்று.
முழங்கையிலும், தாளிலும் நன்றாய் இரத்தம் வழிந்து கொண்டிருக்க…. அவளது அருமைத் தங்கை தான் மதுராவின் அடிபட்ட பாதத்தினை.. தலையணை மீது வைத்து.. சாய்த்து மருந்து கட்டி விடவும் முன்வந்தாள்.
மதுராவின் இடது முழங்கையை தன் மடியில் வைத்து.. இரத்தத்தை சுத்தப்படுத்தி விட்டு.. இளையவள் மருந்து கட்டி விட்ட போது…. மூத்தவளோ.. வலி தாங்க முடியாத, சின்னப்பிள்ளை போல, சிணுங்கிய குரலில், முகம் சுளித்து.. “வலிக்…. குதுடீ”என அழத் தொடங்கினாள்.
“வலிக்கட்டும்… யாருனே தெரியாதவன்.. வீட்டுக்குள்ள போய்.. இத்தனை அக்கரமம் பண்ணா” என்று தன் பங்குக்கு தாய் ஸ்தானத்தில் நின்றும் திட்டிக் கொண்டே..
மூத்தவளின் இடது முழங்காலை எடுத்து தன் மடிமேல் வைத்து கட்டிடத் தொடங்கியவள்.. அப்போது தான் மதுராவின் அந்தக் குறித்த பாதத்தின் கொலுசு மாத்திரம் இல்லாதிருப்பதை அவதானித்தாள்.
புருவங்களிடுங்க, “அக்கா… உன் ஒரு கொலுசு.. எங்கேக்கா??”என்று கேட்க, அக்கணம் தான்.. மதுராவுமே சற்றே எட்டி… தன் கால்களைப் பார்க்கலானாள்.
ஆம், அவளின் ஒற்றைக் கொலுசைக் காணவில்லை தான். அவன் ஸ்கார்ப் பிடித்து இழுத்த போது… நிலத்தில் தடாலென்று வீழ்ந்த நேரம்… கொலுசும் கழன்று வீழ்ந்திருக்கக் கூடுமென்று புரிந்தது அவளுக்கு!!
அவள் பதற முன்னர் திவ்யாவோ..கைகளை உதறியவாறே, பதற்றத்துடன், , “அச்சச்சோ… உன் ஸ்கார்ப்.. உன் கொலுசு.. நம்ம ஜிம்மி… மூணையும்… விட்டுட்டு வந்துட்டீயேக்கா”என்று கூற.. இளையவளைப் போல எல்லாம் பதற்றத்தை வெளிப்படையாக வெளிக்காட்டிக் கொள்ளத்தானில்லை மதுரா!!
அவளோ சிறிதும் பதறாதவள் போல காட்டிக்கொள்ளும் முகமாக, கேஷூவலாக போர்வையை இழுத்து தன்னுடல் மூடிய வண்ணம், “போடீ.. அந்த மூணையும் வைச்சு.. அவனால… என்ன பண்ண முடியும்?? .. ஜிம்மி நாளைக்கே வீட்டுக்கு தேடி வந்துடும்.. கொலுசையும், ஸ்கார்ப்பையும் நீயும் மறந்துடு.. நானும் மறந்துட்டேன்… அப்பா கேட்டா மூச்.. விடக்கூடாது” என்று சுட்டுவிரல்க்காட்டி எச்சரிக்க…
ஏதோ மந்திரத்தின் வசம் ஆட்பட்டது போல திவ்யாவும்.., “ம்.. சரி”என்பது போல தலையாட்டிக் கொண்டே தமக்கையின் அறை விட்டும் ரோபோ போல நடக்கலானாள்.
செல்பவளின் புறமுதுகை நோக்கி அக்காவாகக் கட்டளையிடும் குரலில், “போகும் போது.. லைட்ட மூடிட்டு போடீ”என்றவளாய்… போர்வையைத் தலை வரை இழுத்து மூடிக் கொண்டு.. படுப்பது போல பாவ்லா செய்தவள்..உண்மையில் உறங்கினாளா என்ன??
உறக்கமும் அவளைத் தழுவுமா என்ன??. அன்றிரவு ஒரு பொட்டுக் கண்கூட மூட முடியாமல்.. மறந்தும் கூட தூக்கமே வரவில்லை.
ஒரு அந்நிய ஆண்மகன்… ஒரு பெண்ணின் தொடக்கூடாத இடத்தைத் தொட்டால்.. எப்பெண்ணுக்குத் தான் தூக்கம் வரும்??
இரவு பூராவும்.. அவனது பிடியும், கைத்தடமும், இன்னும் பதிந்திருப்பது போலவே இருக்க.. உடலெல்லாம் முறுக்கேறி ஏதோ செய்தது அவளுக்கு!!
இலேசாக விழி மூடினாலும்.. அரைத்தூக்கத்தின் கனவில்.. அவனது கைகள் வந்து.. அவளது தனங்களை உள்ளங்கையளவு முழுமையாகப் பொத்தி அமுக்க… திடுக்கிட்டுக் கண் விழித்து தனிமையில் அசடுவழிந்தாள் மதுரா.
அவன் தொடுகை… அருவெறுப்பைக் கொடுக்காமல்… புதுவிதமான உணர்வுகளைப் பரிசளிக்கக் காரணமும் யாதோ??
அங்கணம் யோசிக்க மறந்து போனாள் மங்கை!!
****
மறுநாள் காலை!!
அவளோ ஜாகிங் போக முடியாதவாறு கைகளையும், கால்களையும் நீட்டியபடி சோபாவில் அமருந்திருக்க… மருத்துவமனை செல்ல ஆயத்தமாகி வந்த தந்தையோ, புதல்வியின் காயம்பட்ட கோலம் கண்டு… மெய்யுருகித் தான் போனார்.
தங்கை திவ்யா மூலம்.. ‘படிக்கட்டில் விழுந்து அடி’ என்ற பொய்க்காரணத்தை அறிந்த தந்தைக்கும்.. மகளின் நிலைமை பெரிதும் வருத்தத்தைக் கொடுக்கவே செய்தது.
அவள் பக்கத்தில் அமர்ந்து.. தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தவர், “இப்போ எப்படிம்மா இருக்கு?? ”என்று கனிவாய் விசாரிக்க… இவளும் இதமாய் புன்னகைத்துக் கொண்டே பதிலிறுக்கலானாள்.
“மச் பெட்டர்ப்பா”என்று மிகவும் தேறிவிட்டது போல பதில் சொல்ல கொஞ்சம் கண்டிப்பான குரலில்,
“இனிமேல் பார்த்து நடந்து வாம்மா… படியில இருந்து மெல்ல இறங்கி வரணும்.. ஓகே… அப்பா ஈவ்னிங்க் வந்து பார்க்கிறேன்”என உச்சந்தலையில் தாய்மை முத்தம் பதித்து விட்டுச் செல்ல… மதுராவின் உள்ளமெல்லாம் குளுகுளு!!
அடிபடுவதால் எவ்வளவு நல்ல காரியங்கள் நடக்கிறது அவளைச் சூழ!!
நேற்றுவரை, ‘கல்யாணம் பண்ணிக் கொள்’ என தந்தையும், ‘பண்ணிக்க மாட்டேன்’ என்று மகளும்… இந்தியா – பாகிஸ்தான் தான் போல முறுக்கிக் கொண்டு நின்றவர்களின் பனிப்போரும் முடிவுக்கு வந்ததுவும் இந்த காயத்தினால் தானே?? என்றே எண்ணத் தோன்றியது.
காலைத்தேநீர் முதல்… குடிப்பதற்கு.. சாதாரணத்தண்ணீர் வரை கைக்கருகேயே வர… சொகுசு கூடிப் போனது அன்றைய சம்பவத்தின் பின்னர் அவளுக்கு.
இருப்பினும் என்ன பயன்.??
இன்று அலுவலகம் சென்றேயாக வேண்டுமென்று எண்ணமிட்டபடி, நிரோவுக்கு அழைப்பெடுத்து வீட்டுக்கு வரச்சொன்னாள்.
சந்தோஷமாக நண்பி வீட்டுக்கு வந்த ‘பர்த்டே கேர்ள்’ நிரோவோ…. ஹாலிலேயே… சோபாவில்… கையும், காலும் கட்டிடப்பட்டு…
கால் நீட்டிப் படுத்திருக்கும் அவள் நிலை கண்டு பதறித் தான் போனாள் உள்ளன்பினால்!!
“என்னடி ஆச்சு உனக்கு?? நேத்து மிட்நைட் கூட நல்லா இருந்தியேடீ…விடியுறத்துக்குள்ள என்ன ஆச்சு?? ”என்றபடி அவளை விசாரித்துக் கொண்டே உள்ளே வந்தவளிடம்…
நேற்றிரவு நடந்ததை ஒன்று விடாமல் மெல்லிய குரலில் கூறி முடித்தவள்.. “வெளியில் சொல்லாதேடீ… அப்பாம்மாவுக்கு படியில் ஸ்லிப்பாகி விழுந்துட்டேன் சொல்லி வெச்சிருக்கேன்…”என்றாள் விட்டால் அழுது விடும் குரலில்!!
அருகமர்ந்த தோழியின் கையைப் பற்றி, “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்னை என் ஆபீஸ்ல டிராப் பண்ணி விட்றீயா?? திவ்யா வேறய காலையிலேயே காலேஜ் போய்ட்டா…இல்லேன்னா அவக்கிட்டயே டிராப் பண்ண சொல்லிருப்பேன்… ப்ளீஸ்…என் பார்ட்னர் இன் கிரைம்ல.. ப்ளீஸ்”என்று செல்லங்கொஞ்சி ஒத்துக் கொள்ள வைக்க முயல,
தோழியோ.. அதை ஏற்றுக் கொள்ளாதவள் போல, “இந்த நிலைமையில் எதுக்கு ஆபீஸ்.. நோ வே… நீ ரெஸ்ட் எடு”என்று சொல்ல அவள் உடன்படவேயில்லை.
தோழியின் கன்னம் பிடித்துக் கெஞ்சி… “ப்ளீஸ்டீ… இன்னைக்கு தான் வேலைக்கு ஜாய்ன் பண்ற முதல் நாள்… இன்னைக்கு போகாம இருந்தால் துர்சகுனம் மாதிரி ஆகாது.. ஸோ.. அதனால நான் இன்னைக்கு போகணும்… அதுமட்டுமில்லாம நேற்றிரவு சம்பவத்தப்பத்தி இன்றைய நிலைய தெரிஞ்சிக்கணும்.. முக்கியமா என் ஜிம்மி.. பாவம் என் ஜிம்மி.. அதுக்கு என்னாச்சு தெரிஞ்சிக்கணும்…அப்பா ஜிம்மி பத்தி விசாரிச்சா நான் காலி… ”என்று ஜிம்மியை நினைத்து தற்போது தான் வருந்தியவள்… ஆபீஸ் கூட்டிப் போகச் சொல்லி அடம்பிடிக்க,….
நிரோஷனாவும் தான் தோழியின் தொல்லை தாங்காமல், “சரி ரெடியாகு.. கொண்டு போய் விட்டு வந்து தொலைக்கிறேன்” என்று அலுத்துக் கொண்டவளாக ஒத்துக் கொள்ளலானாள்.
ஆனால் அங்கோ ஆபீஸ் வாசலிலேயே போலீஸ் ஜீப் காத்திருக்க… சிஇஓ அறையில்.. அவளை நெற்றிக்கண் திறந்து சுட்டுப் பொசுக்கும் விழிகளுடன்… செஞ்சீற்றம் சிந்தும் முகத்துடன்… உர்ரென்று பார்த்திருக்கலானான் அவன்!!!
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Приобретение диплома ПТУ с сокращенной программой обучения в Москве
thecreaters.com/diplom-pedkolledzha-kupit.html
super sis