ATM Tamil Romantic Novels

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18

மோகனம்-17

அவ்விரவு நேரத்தில்… சென்னையிலிருந்து கூர்க் என்னும் குடகுமலைக்கு… அவனுக்கேயென்ற சொந்தவிமானத்தில் வந்து சேர… கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களே பிடித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால்… கர்நாடகா மாநிலத்தின் எல்லைக்குள் வந்து விழுந்த…மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பிரதேசம் தானது.

ஆங்கிலேயர்களால் “கூர்க்” என்றும்.. கன்னடமொழி பேசும் மக்களால் “கொடகு”என்றும் அர்த்தப்படும் வகையில்.. அமர்ந்திருந்த குடகுமலை… இயற்கை அன்னை தந்த ஓர் அரிய பொக்கிஷம் என்று… அங்கு வந்து சேர்ந்த முதல்நாளிலேயே அறிய முடியாமல் தான் போயிற்று குறும்புக்காரியான மதுராக்ஷிக்கு!!

என்ன?? குடகின் அழகை அறிய முடியாமல் தான் போனதா??

ஆம், அவர்கள் அங்கு வந்து சேர்ந்த போதே இரவாகியிருக்க…இருளில் எப்படி குடகின் எழிலையும் தான் இரசிக்கவும் முடியும்??

அது போக, அவனின் கெஸ்ட் ஹவுஸில் தங்கி… பிரயாணக்களைப்பு தீர.. அடித்துக் களைத்து.. தூங்கவே அன்றைய இரவும் தீர்ந்து போனது.

மறுநாள் காலை அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து… அவர்கள் வந்த வாணிப நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக… காலில் சக்கரத்தைக் கட்டிக் கொள்ளாத குறையாக சுழன்றோடவே… இருவருக்கும் நேரம் சரியாகிப் போன போது எவ்வாறு தான்… கூர்க்கினை இரசிக்கவும் முடியும்??

உண்மையில், அஜய்தேவ்… அங்கே போய்ச் சேர்ந்த இரண்டு நாட்களும்… ஹிட்லராகவே தான் நடந்து கொண்டான். அவள் தன் அந்தரங்கக் காரியதரிசி என்னும் ரீதியில் மட்டுமே அவளை நெருங்கியவன்… அவள் பென்டு கழறும் வகையில் ஆயிரத்தெட்டு… வேலைகளையும் தான் வாங்கினான்.

இதுவே மதுராக்ஷி இருக்க வேண்டிய இடத்தில்.. இன்னொரு பெண் அவனது அந்தரங்கக் காரியதரிசியாக இருந்திருப்பின்… ஹிட்லரின் ரோதனை தாங்காமல் அங்கிருந்து ஓடியே போயிருக்கக் கூடும்!!

ஆனால், தன் ஜிம்மி மற்றும் ஆதாரங்களையெல்லாம் அவனிடம் கொடுத்து விட்டு… திருதிருவென விழித்துத் தவிப்பவள்… அவனது அத்தனைத் தொல்லைகளையும்… உதடுகளை.. “ஈஈ” என இழுத்து வைத்துத் தான்… தாங்கிக் கொண்டாள்.

ஒருவாறு அவர்கள் கூர்க் வந்து சேர்ந்த இரண்டாம் நாளில்… அவர்கள் வந்ததற்கான காரணமும் இனிதே நிறைவேறியது.

ஆம், கர்நாடகாவைச் சேர்ந்த.. கட்டுமானக் கம்பெனியுடனான.. இவன் கம்பெனியின் வியாபார ஒப்பந்தமும் தான் கைச்சாத்திடப்படவே…அதன் பின்னர் தான் வதனத்தின் இறுகிய தோரணை அகன்று… சுமூகமான நிலைக்குத் திரும்பலானான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!!

அன்று மாலை…

இடைக்கிடை வளர்ந்திருந்த ஃபைன் மரங்களும் கூடவே… அவற்றினூடு ஒல்லி தண்டுகளைக் கொண்டு வளர்ந்திருக்கும் இறப்பர் மரங்களையும் ஊடறுத்து.. வளைந்து நெளிந்து சென்றிருந்தது அப்பாதை!!

பாய்ந்து முட்டி சிலிர்த்துக் கொண்டு நிற்கும்.. தங்கநிறக் காட்டெருதின் அடையாளமிடப்பட்ட.. கறுப்பு நிற லம்போர்கினி வண்டி… பாதையிலே…வளைவுகளில் லாவகமாக நுழைந்து நுழைந்து சென்று கொண்டிருக்கலானது.

அதிநவீன ரக லம்போர்கினி ஹூராகேன் வகையைச் சார்ந்த வண்டியை.. ஓட்டி வந்து கொண்டிருந்தான் நாயகன்!!

காரின் மேல்த்தளம் முழுவதும் திறந்திருக்க.. அதன் வழியாக.. ஊடுறுவித் தழுவிப் போனது மேற்குத்தொடர்ச்சி மலைக்காற்று!!

அவனுடைய வழமையான காஸ்ட்யூமான கோர்ட்டும், சூட்டும் எங்கோ காணாமலாகியிருக்க… கேஷூவல் டீஷேர்ட் மற்றும் டெனிமில்.. க்ளாஸிக் கட் தலையலங்காரமொன்றையும் போட்டுக் கொண்டு… மாடலொன்றைப் போலத் தான்… அமர்ந்திருந்தான் அவன்.

ஸ்டியரிங் வீலில்.. தன் நரம்போடிய முரட்டுக்கைகள்… இறுகிப் பதிந்திருக்க…கண்களில்… பாதையின் இருமருங்கிலும் முளைத்திருந்த மரக்கிளைகளின் விம்பம் பிரதிபலிக்கும் கூலர்ஸ் அணிந்திருந்தான் அவன்.

அவன் கண்களின் கூலர்ஸ்… அவனுக்கு ஒரு ராயல் லுக்கைப் பரிசளிக்க.. அதுவும் கூட அவனுக்கு அதீத அழகைத் தான் சேர்க்கலானது.

இன்முகமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வரலானான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!!

அவனருகாமையில்… அவனைப் போலவே ஆயினும் பெண்கள் அணியும் டீஷேர்ட் மற்றும் ஜீன்ஸில்… முத்துமூரல்கள் மிளிர மிளிர புன்னகைத்த வண்ணமே… இருக்கையில் நின்றும் எழுந்து நின்றிருந்தாள் அவள்.

திறந்திருந்த காரின் மொட்டைமாடி வழியாக… தன் ஒல்லி உடலை வெளியில் நீட்டி…

வாயில் இரு கைகளையும் கேடயம் போல வைத்து, “ஊஊஊஊஊ!!”என்று குமரிக் குழந்தையாய் இரைந்து கத்திக் கொண்டே வரலானாள் மதுராக்ஷி.

அதிக வாகன நடமாட்டமில்லாத சாலை வேறு!!

 மலையினைக் குடைந்து குடைந்து அமைக்கப்பட்டிருந்தமையினால்… பாதையின் பள்ளத்தாக்கு எங்கும்… அவள் கத்தல் ஒலி எதிரொலித்து.. மும்மடங்காக அவள் கத்தியது போல எதிரொலியும் தான் கேட்கலானது.

அஜய்தேவ்வுக்கோ.. தன் மனத்தினை கொள்ளை கொண்ட இராக்ஷசசி செய்யும் குறும்புகளை எல்லாம்.. இரசித்து நயந்த வண்ணம்… இரகசியப்புன்னகையும் உதிர்ந்தது.

மதுராக்ஷிக்கோ இரண்டு நாட்களும் வேலை வேலையென்று திரிந்து விட்டு.. இன்று இப்படி உல்லாசமாக பயணம் மேற்கொள்வது நிரம்ப நிரம்பப் பிடித்தும் போனது!!

அதனால்.. பாதி உடலை வெளியில் நீட்டியதோடு அல்லாமல்.. தன் ஒரு கையையும் கூட காற்றில் நீட்டி… மேனியெங்கும் தழுவிச் செல்லும் கூதல்க்காற்றையும் தான்.. இதமாக சுகித்துக் கொண்டே…. கண்கள் மிருதுவாக… வரலானாள் மதுராக்ஷி!!

அவளது சுயாதீனமான மறுகையோ… கேமராவை ஏந்திப் பிடித்துக் கொண்டே.. குடகுமலையின் அழகினை எல்லாம் பதிவு செய்யவாரம்பிக்க…. எல்லாவற்றையும்… இன்புற்று நயந்தாள் மதுராக்ஷி!!

எங்கும் பார்க்க முடியாதவாறு மூடுபனி… அவ்விடம் தனைப் போர்த்திப் படர்ந்திருக்க…. காரினை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் ஆரம்பித்தது சின்ன நெருடல் காலம்!!

நெருடல் காலமா??

ஆமாம், அவள் வாகனத்திற்குள் இரு கால்களையும் ஊன்றி ..மேல் பாகத்தை காற்றுக்கு காட்டி நிற்பவளின் டீஷேர்ட்டும் தான்… இடையை விட்டும் மேலுயர்ந்திருக்க.. அங்கே தெரிந்தது குட்டித் தொப்புள்!!

கூடவே வெண்ணையில் குழைத்துக் குழைத்துச் செய்தாற் போன்ற ஒல்லி இடையும்… அவன் கண்களில் விழுந்து.. அவன் மனத்தினை நெருடவே.. தொப்புள் குழிக்குள் நாவு நிமிண்டி.. அவளை உடல் எக்க வைத்து… அங்கேயே தன் முகத்தை புதைத்து… மூர்ச்சையாகிப் போகும் எண்ணமும் தான் வலுத்தது அவனுக்கு.

‘உன் அனுமதியில்லாமல்… சுண்டுவிரல் கூட படாது’என்று அவனளித்த வாக்குறுதி.. காதோரம் அசரீரி போல ஒலிக்க… அவளது தொப்புளையே இமையாமல் பார்த்திருந்தவனும் .. பட்டென்று ஞானோதயம் பெற்று… அவளில் நின்றும் வலுக்கட்டாயமாக தன் விழிகளைத் திருப்பிக் கொண்டான் அவன்!!

தன் எஜமானன்.. காதல் கமழக் கமழப் பார்த்திருந்தது அறியாதவளோ… மீண்டும் தன்னிருக்கையில் அமர்ந்தவளாக, “நாம இப்போ எங்கே போறோம் சார்??”என்று தான் கேட்கலானாள்.

அவனோ.. அவளைப் பார்த்து அர்த்தம் பொதிந்த புன்னகையை உதிர்த்துக் கொண்டே… வண்டியை இடதுபுற வளைவில் திருப்பியவன்…“பார்க்க தானே போற மதுராக்ஷி”என்றான் அதீத ஆவல் விழிகளில் மின்ன.

இவளோ இதழ்களை கீழ்நோக்கி வளைத்தவளாக.. முணுமுணுக்குத் குரலில், “ம்ம்.. பீடிகையெல்லாம் பலமா இருக்கு… பார்க்கலாம்… எங்கே தான் கூட்டிப் போறாருன்னு”என்று பதிலிறுத்தது கூட… அஜய்தேவ்வின் செவிகளை அடையவே செய்தது.

இருப்பினும், அவளறியாமல் உள்ளுக்குள்ளேயே மந்தகாசமாக நகைத்த வண்ணம்… ஒரு பிரம்மாண்டமான கறுப்பு நிறப் படலை கொண்ட வீட்டிற்குள் வண்டியை விட்டான் அஜய்.

அவள் விழிகளின் முன்னே… விஸ்தாரமாக.. உயர்ரக ஹோட்டலைப் போன்ற.. எழிலுடன்… மிளிர்ந்து கொண்டிருந்தது அவ் வீடு!!

அழகான முறையில்..அளவாகக் கத்தரித்து வெட்டப்பட்ட பூஞ்செடிகளைக் கொண்டு செம்மையாகப் பராமரிக்கப்பட்டிருந்த தோட்டமே… அவளின் கண்ணைக் கருத்தை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலானது.

போர்ட்டிக்கோவின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த செயற்கைப் பாத்திகளில் அலங்காரப் பூந்தாவரங்களான ரோஜா, டேய்லியாஸ், சூரியகாந்தி மற்றும் டெஃபோடில்ஸ் (Daffodils) என்னும் மலர்கள் எல்லாம்… பேரழகாய் வளர்ந்திருக்கலானது.

போர்ட்டிக்கோவில் வண்டி நிற்க… வண்டியை விட்டிறங்கியவள்.. சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, வீட்டின் முகப்புத் தோற்றத்தைக் கண்டே… “வாவ்…சூப்பர்ப்”என்று சிலாகித்தவாறு தான் நின்றிருக்க…

அவள் அவ்விடத்தைக் கண்டு மெர்ஸலாகிப் போனது அவனுள் ஒரு ஆனந்தமே!!

இருவரும் வீட்டை நோக்கி வருவதைக் கண்டதும்… சேலையின் மேலாக சட்டை அணிந்திருந்த பெருத்த உடல் கொண்ட ஓர் அம்மா… அநேகமாக பணியாளினியாக இருக்க வேண்டும்!!

மலர்ந்த முகமாக அவர்கள் அருகே வந்து, “வாங்க சார்.. வாங்கம்மா” என்று கன்னட மொழியிலோ குடகு மொழியிலோ அழைக்காமல் தமிழ் மொழியிலேயே அழைக்கவும் செய்தார்.

‘இவளின் வருகை ஏற்கனவே… இவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த ஏகபோக கவனிப்பு’ என்று புரிந்து போனது அவளுக்கு!!

அதனைத் தெரிவித்தது தன் எஜமானன் அஜய்தேவ் சக்கரவர்த்தி என்பதை அறியாமல் போனாள் மதுராக்ஷி!!

அவன் வீட்டுப் படிகள் மூன்றை ஓரெட்டில் தாவியடைந்தவனோ… இன்னும் போர்ட்டிக்கோவில் நின்றிருப்பவளைப் பார்த்து,

இடைவரைக் குனிந்து நோக்கி… “ வெல்கம் மிஸ். மதுராக்ஷி!!” என்றபடி அவளை… மலர்ந்த முகத்துடன் உள்ளே வரவேற்றான் அவன்.

‘ஓ.. ஹிட்லருக்கு இப்படியெல்லாம் பேரழகாய் புன்னகைக்கவும் வருமோ’ என்று எண்ணி உள்ளூற வியந்து நின்றவளோ,

“தேங்க்ஸ்” என்றபடி வீட்டிற்குள் உள்நுழைய.. மறுகணம் அவளது உடம்பு முழுவதையும் ஆட்கொண்டது இதமான காற்று .

அவ்வீட்டின் முகப்புக் கூடத்தை நிமிர்ந்து பார்த்த போது அதிசயித்த விழிகள் அகலமாக விரிய.. அதன் பிரம்மாண்டத்தைக் கண்டே… திகைத்துப் போனாள் மதுராக்ஷி.

‘கடல் போல இல்லம்!!’ என்பது இதனைத் தானா??

தரை முழுவதும்… மண்ணிறத்தில் டைல்ஸ் பதிக்கப்பெற்றிருக்க… ஹாலின் பாரிய இடத்தை அடைக்கப் போடப்பட்டிருந்தது மூன்று செட் சோபாக்கள்.

மூன்று சோபாக்களும்… ஆறு துண்களால் பிரிக்கப்பட்டிருக்க.. சோபாவின் வடிவமைப்புக் கூட… அத்தனை லாவண்யமே!!

அதன் ஒரு சோபாவின்.. டீபோயின் கீழே… குடுகுடுவென நில்லாமல் ஓடும் தங்கமீன்கள் கொண்ட மீன்தொட்டியொன்று.. தெளிவான தண்ணீர் கொண்டு அமைக்கப்பட்டிருக்க… அனைத்துமே ‘வாவ்’ ரகம் தான்!!

அதற்கு அப்பால்.. நீண்ட ஒற்றைப் படி தாண்டி.. கண்ணாடியிலான வட்ட மேசையையும், நாற்காலிகளும்… என ஒரு சாப்பாட்டறை.. நடுக்கூடத்தை எதிர்நோக்கியவாறு அமைக்கப்பட்டிருந்தது.

அதன் சுவரோடு மறைத்து.. இணைந்த வண்ணம் அமைந்திருந்தது… அதிநவீன பொருட்கள் கொண்ட புத்தம் புதிது போன்ற சமையலறை!!

சாப்பாட்டறையின் வலப்புறமாய்.. இன்னொரு சோபா செட்டுடன்… சுவற்றின் உச்சத்தில்… நவீன ரக தொலைக்காட்சி…பொருத்தப்பட்டிருக்கலானது.

அதன் பக்கத்திலே இரு கதவுகள் தெரிய.. அவையெல்லாம் அறைகள் என்று புரிந்தது அவளுக்கு.

 ஹாலிலே மாட்டப்பட்டிருந்த.. ஆறடி உயர புகைப்படச்சட்டத்தில், சிவப்பு நிற டீஷேர்ட்டும், கடும்நீல வண்ண டெனிமும் அணிந்து..ஒருபக்கமாய் சரிந்து நின்று…. கைக்கட்டி சிரித்தபடி.. ஒரு போஸ் கொடுத்திருந்தான் அஜய்.

எனில், இது அஜய்தேவ் சக்கரவர்த்தியின் குடகுமலையில் அமைந்திருக்கும் இல்லமா இது??

இவனுக்கு புகைப்படங்களில் மட்டும் தானா நன்றாய் சிரிக்க வரும்?? என்று ஏக்கமும் உண்டானது அவளுக்கு.

 வீட்டிற்கு மேல்மாடிக்கு செல்லும் படியோ பளிங்குக் கற்களால்.. செய்தது போல வளைந்து… கலைநுட்பமாய்… இருந்தது கண்டு.. வீட்டின் படிகள் கூட ரொம்பப் பிடித்திருந்தது அவளுக்கு.

கூடத்தின் இடதுபுறம்.. ஒரு குட்டி பார் அமைக்கப்பட்டிருக்க.. சுவரோடு பொருத்தப்பட்ட இராக்கைகளில், அடுக்கடுக்காய் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன மது வகையறாக்கள்!!

பழைய ஆயிரத்து எண்ணூறாம் ஆண்டுகளைச் சேர்ந்த ஒயின்களும், ரம்களும், ஜின்களும், பீர்களுமென வகைவகையாக பிரித்து அடுக்கப்பட்டிருக்க.. பார் கவுன்டர் போன்ற மேசைக்கு இப்புறமாய் அமைக்கப்பட்டிருந்தது அமர்வதற்கான நாற்காலிகள்!!

அவற்றையெல்லாம் பார்த்து மலைத்து நின்று போனவளோ, “ஹப்பப்பா.. இந்த வீடு… சூப்பரா இருக்கு சார்!!”என்று வியந்து அதனைப் பாராட்டவும் செய்தாள்!!

அவளின் விழிகள்… அத்தனையையும் விட.. பாரின் குடி பாட்டில்களைப் பார்த்த வண்ணம்.. நாக்கைச் சுழற்றி நாவூறிய வண்ணமே நின்றிருந்த மதுராக்ஷிக்கும் ஆசை வந்ததுவோ அதனைப் பருகுவதற்கும்!!

அவள் தொண்டையில் மிடறு விழுங்கிக் கொண்டே பீர் பாட்டில்களைப் பார்ப்பது அறிந்து.. தலை சிலுப்பி நகைத்தவனோ,

அவளினருகே வந்து.. அவள் காதோரம் குனிந்து..அவளது தேகவாசனையை முகர்ந்த வண்ணம், ஹஸ்கி குரலில்

“ பிடிச்சிருக்கா?”என்று தான் கேட்டான்.

இரசனை கலைந்து.. திரும்பி…அவன் தன்னை குறுகுறுவெனப் பார்ப்பதைக் கண்டு… நாணத்துடன்… அவன் முகத்தைப் பார்த்தவள், “உங்க வீடா சார் இது… ரொம்ப அழகா இருக்கு சார்” என்று கூறவும் செய்தாள்.

அவனோ… மனம் மயக்கும் வசீகரப் புன்னகையுடன்.. இரு கைகளையும் காற்றில் நீட்டி.. ஹாலைக் காண்பித்து விட்டு,

“ என் வருங்கால மனைவிக்காக… பார்த்து பார்த்து கட்டிய வீடு இது” என்றதும்..அவளது விழிகளும் தான்… விரிந்தது அகலமாக!! அதிர்ச்சியின் வெளிப்பாடாக!!

என்ன?? வருங்கால மனைவியா??

எனில், இவனுக்கும் திருமணம் நடக்கப் போகிறதா???

 பாவம், அந்தப்பெண்!!

யாரோ இவனுடைய மிலிட்டரி கேம்ப்பில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மான்குட்டி!! என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள்… அவனுடன் சகஜமாகவும் தான் உரையாடவும் தலைப்பட்டாள்.

“நமெக்கெல்லாம்….நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லவேயில்லை… பார்த்தீங்களா பார்த்தீங்களா சார்?? குளோஸா பழகிட்டு… கல்யாணத்துக்கு கூட சொல்லலேன்னா எப்படி?? சுத்த மோசம் சார் நீங்க” என்று விட்டு.. பதிலுக்காக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த போது…

அவனோ அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் வேறு சொன்னான்.

அங்கிருந்த பாரினருகே சென்றமர்ந்ததாக இருக்கட்டும்!! ஜின் பாட்டிலை எடுத்து கண்ணாடிக்குவளையில் ஊற்றியதாக இருக்கட்டும்!! குவளையை அவன் கைகளில் ஏந்திய விதமாக இருக்கட்டும்!!

ஒரு சிப் அவன் பருகியதாக இருக்கட்டும்!! அனைத்திலும் அவன் உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதை கட்டியங்கூறும் எலைட்னஸ் மிளிர்ந்து கொண்டிருந்தது.

குளிருக்கு இதமாக மீண்டுமொரு ஜின் சிப்பியவனாக, “இங்கே பார் மதுரா.. முதல்ல என்னை.. சார்… மோர்னு கூப்பிடுறதை நிறுத்து..ஆபீஸ் வொர்க் சக்ஸஸ்புல்லா முடிஞ்சதுல்ல.. ஸோ இந்த நிமிஷத்தில் இருந்து நோ பாஸ்-ஸ்டாஃப்!!! இன்னைக்கு நீ என் கெஸ்ட்….. நீ என்னை ப்ரென்ட்டா நினைச்சிக்க.. ஒரு ப்ரென்ட்டை.. இப்படித்தான் சார்மோர்ன்னு கூப்டுவீயா.? ஜஸ்ட் கால் மீ அஜய்…” என்றான் தோள்களை சாதாரணமாகக் குலுக்கியவனாக!!

அவள் அசடுவழியப் புன்னகைத்து வைக்க… இவனோ தொடர்ந்து சொல்ல நாட்டங்கொண்டவனாக, “அப்படியில்லேன்னா.. உனக்கு எப்டி கூப்பிட தோணுதோ… அப்டி கூப்பிடு.. ஃபீல் ப்ரீ வித் மீ”என்று இறுதியில் ஆங்கிலத்தில் முடித்தது கூட மனோரம்மியமே!! .

எனில், எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாமா?? என்று சிந்தித்தவளுக்குள் ஒழிந்து கொண்டிருந்த பழைய குறும்புக்கார மதுராக்ஷியும் தான் வெளியே எட்டிப்பார்க்கலானாள் குபுக்கென்று!!

சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே, பேராசை ததும்பும் விழிகளுடன், “எப்டி வேணா கூப்டலாமா சார்?? அப்படீன்னா குண்டுபூசணிக்கா..ஹிட்லர்.. உம்மணாம்மூஞ்சினு எல்லாம் கூப்பிடலாமா சார்..??” என அவனுக்கு அவள் வைத்திருக்கும் பட்டப்பெயர்கள் அனைத்தையும் ஒன்று விடாமல்… அவள் தன்னையுமறியாமல் கூறி விட்டு…

சட்டென நாக்கைக் கடித்து உச்சந்தலை மீது கை வைத்துக் கொண்டாள்.

‘ஐயோ இதற்கும் திட்டுவானா?? உன் வாய் தான்டீ உனக்கு எமன்’ – இடித்துரைத்தது பெண் மனம்!!

‘அட.. அவள் பாஸான தனக்கே இத்தனை பட்டப்பெயர்களா?’ என்று.. இரசித்துச் சொன்னது ஆண்மனம்!!

ஜின் குவளையை வைத்து விட்டு… ஒற்றைப்புருவமுயர்த்தி நோக்கியவனோ, “.. குண்டுபூசணிக்கா ஓகே.. காலேஜ் டைம்ல குண்டா இருந்தப்போ வைச்சது.. பட்… அது என்ன ஹிட்லர்?? நானென்ன ஹிட்லரைப் போல குஞ்சு மீசை வைச்சிக்கிட்டா இருக்கேன்??” என்று தன் முறுக்கு மீசையை… கம்பீரமாக நீவி விட்டுக் கொண்டே கேட்க.. அவளுக்கோ என்ன பதில் சொல்வதென்றே புரியாமல்.. திருதிருவென விழித்துக் கொண்டே தான் நிற்கலானாள்!!

அவள் செய்யும் குறும்புகளையும், தகிடுதத்தங்களையும் கையும், களவுமாக பிடித்து… சதாவும் அவளைத் திட்டுவதால்… அவள் வைத்த பெயர் தான் “ஹிட்லர்”என்று கூறவா முடியும்??

அதனால் கதையை மாற்றுமுகமாக எதைச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவனே பெரிய மனது பண்ணி.. அதை கணக்கெடுக்காமல் டீலில் விட நாடினான் போலும்!!

அவன்.. நாற்காலி விட்டெழுந்தவனாக, அவளையே காதலாடி.. மனம் கனியக் கனியப் பார்த்தவன், “பரவாயில்லை.. ஹிட்லர்ன்ற பெயர் கூட நல்லா தான் இருக்கு.. ஏன்னா ஹிட்லரும்.. என்னை மாதிரியே.. அவரோட காதலியை.. அளவு கடந்து நேசிச்சார் தெரியுமா..அவரோட இறப்பு கூட.. தன் காதலியோட ஒண்ணா தான் இருந்தது” என்று கூறினான்.

அவன் கூறுவதை வைத்துப் பார்த்தால் அவன்…. அவளது காதலியை அளவு கடந்து நேசிக்கிறான் போலும் என்றெண்ணியவளோ… ஆரம்பத்தில், அவனை மணக்கப்போகும்.. ‘பெண் பாவம்’ என்றது எவ்வளவு தப்பென்று எண்ணிக் கொண்டாள்.

தான் காதலித்த பெண்ணுக்காக பார்த்து பார்த்து.. இவ்வளவு கலைநயம்மிக்க இல்லம் கட்டியிருப்பவனின் காதல்… தூய பெருங்காதலாகவும் தோன்றிற்று.

அப்பெண் யாரென்று அறியாமலேயே..

“சா.. சார்..” என்று பழக்க தோஷத்தில் அழைத்தவள்.. அவனுடைய முறைப்பையே பரிசாகப் பெறவும்… தன்னைத் தானே தத்தளிக்கும் குரலில் திருத்திக் கொண்டு, “அ.. அ.. அஜய் சீனியர்” என்றாள் அவள்.. அவனை காலேஜ் நாட்களில் அழைக்கும் விதத்திலே!!

அவனும்.. பழைய கல்லூரி நாட்களின் நினைவில் மென்மையாய் முகம் மாற, “வாட்?” என்று கேட்க… இவளுக்கோ அவன் காதலியையும், கல்யாணத்தையும் பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ளும் ஆர்வமும் பிறக்கலானது.

அதனால் மறுபடியும்… கல்யாணம் பற்றிய பேச்சை எடுத்தவளோ, “எ… எப்போ கல்யாணம் அஜய் சீனியர்??”என்று கேட்க… தன்னிடம் திருமணத்தைப் பற்றிக் கேட்பவளின் கண்களையே.. காரணமே கண்டுபிடிக்க முடியாத வண்ணம் தான்… ஆழ்ந்து நோக்கிக் கொண்டேயிருந்தான் அஜய்தேவ்.

இந்த உணர்ச்சிகள் சிந்தும் பார்வைக்கும் என்ன அர்த்தம்!

அவனோ… விழிகளில் என்றுமில்லாதவாறு ஒரு சில்மிஷப் புன்னகையை சிந்த, “கவலைப்படாதே மதுரா.. என் கல்யாணம் நீயில்லாமலா?? கண்டிப்பா என் பக்கத்துல நீயிருப்ப??”என்று சொல்லியவனுக்கு… அவள் தன்னை யாரென்று கண்டு பிடித்து விடுவாளோ என்ற எண்ணம் மேலிட.. தான் சொன்ன கூற்றையே தான் தலைகீழாகப் புரட்டி போடவும் செய்தான்.

“ ஐ.. மீன்… கண்டிப்பா.. என் கல்யாணத்தப்போ நீயிருப்பன்னு சொல்ல வந்தேன்” என்று சொல்ல… அரைப் பைத்தியம் போல குறும்புகளைச் செய்த வண்ணமே வளைய வருபவளுக்கு..நேரிடையாக சொன்னாலே புரியாது!!

இதில், அவன் ஜாடைமாடையாகச் சொன்னதா புரியப் போகிறது??

“சரி வா.. உன் ரூமை உனக்குக் காட்டுறேன்”என்று அழைத்துச் சென்று காட்ட.. முழு வீடும் பிடித்துப் போனவளுக்கு அவளுக்கென்று அவன் தாராளமாக ஒதுக்கியிருந்த அறையா பிடிக்காமல் போகும்??

அவளும் குடகின் குளிர்காலநிலைக்கு இதமாக… இளஞ்சூடான நீரில் கீஸரைத் திறந்து குளித்து விட்டு…இரவுணவுக்காக கீழே சாப்பாட்டுக்கு வந்த போது..

கண்ணாடி மேசையெங்கிலும் அழகழகான போஸிலீன் பாத்திரங்களில் நிரம்பி வழிந்தது கர்நாடகா தேசத்தின் ஸ்பெஷல் உணவுகள்!!

அவள் வரும் வரை.. கண்ணாடி மேசையில்.. பழைய காலேஜ் மாணவன் போல தாளம் தட்டிக் கொண்டே காத்திருந்தவன்… அவள் வந்ததைக் கண்டதும் பூவாய் தான் முகம் மலரலானான்.

பட்டென்று அவளை நாடிச் சென்று அவள் கையை.. ஒரு நண்பனைப் போல… தேவையில்லாத எண்ணங்கள் ஏதுமற்றுப் பிடித்தவனோ… “வா.. வா மதுரா..உனக்காக எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது… இந்த பொண்ணுங்க குளிக்க போனாலே இப்டி தான்.. விடிஞ்சிரும்… சீக்கிரம் வா… சாப்பிடணும்ல??” என்று அவளை இழுத்துக் கொண்டு போய்… அருகிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவளை மகாராணி போலத் தான் அமரவும் வைத்தான்.

அவனின் உச்சபட்ச கவனிப்பில்… அதிசயித்துப் போன விழிகளுடன் அவள்.. தன் எஜமானனையே பார்த்திருக்க… இவனோ… தன் இரகசிய காதலிக்கு.. உணவு பரிமாறும் சேவையாளனாகவும் மாறிப் போனான்!!

அருகே இருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றிலுமுள்ள உணவுகளையெல்லாம் காட்டியவனாக, “இது அவ்வளவுமே கர்நாடகா ஸ்டேட்டின் ஸ்பெஷல் ஃபூட்… கொடகு வரை வந்துட்டு… இந்த மாநிலத்தின் ஸ்பெஷல் ஃபூட் சுகிக்காமல் போனால் எப்படி?? அதான் உனக்காக..ஸ்பெஷலா ஆர்டர் பண்ணேன்.. ஆரம்பிக்கலாமா?? யூ ரெடி மதுரா” என்று அவள் பெயரை அஜய் மதுரமாய் உச்சரித்த விதமும் தான் ஈர்த்தது அவளை!!

அவளது விழிகள்… தன்னருகே அரண் போல நின்றிருந்த ஆஜானுபாகுவான உடல் கொண்டானையே… இரசித்துப் பார்த்திருக்க… அவளுடைய பார்வைகளும் தான் மோகனம் மூட்டியது ஆடவனுக்குள்.

சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளை அடக்கி நின்றவனோ.. அவளைப் பாராமல், உணவுகளில் கவனம் இருப்பது போலவே காட்டிக் கொள்ளலானான்.

அவனில் நின்றும்.. அவன் ஏந்தும் உணவுத் தட்டில் அவள் பார்வை பதிய.. உணவையும், பெயரையும் எடுத்தியம்பிக் கொண்டே,

அவளுக்குப் பார்த்துப் பார்த்துத் தான் பரிமாறலானான்!!

“இது பிஸிபேளேபாத்.. கர்நாடாகாஸ் மோஸ்ட் பாப்புலர் ஃபூட் ரைஸ், வெஜிட்டபிள்ஸ் போட்டு… சும்மா நாக்குல நச்சுன்னு பதியுற மாரி அ ஃப்ளேவர்புல் ஆல் இன் ஆல் டிஷ்” என்று கூறியவன்.. பிஸிபேளேபாத்தை அவன்… அவள் தட்டில் வைத்து.. அவளைச் சுவைத்துப் பார்க்கவும் வைத்தான்.

மூவிரல்களால் அள்ளி நாக்கில் வைத்தவளுக்கு.. அதன் தானியச் சுவை… நாக்கை நர்த்தனமாட வைக்க… “சூப்பரோ சூப்பர்”என்றவளின் விழிகள் காட்டி அபிநயங்களில் தொலைந்து போனான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!!

அடுத்து.. மைசூர் பாகினை எடுத்து.. அவள் தட்டில் வைத்தவன், “இது கர்நாடகாஸ் வெல் நோன் ஸ்வீட்… இது முதன் முதல் தயாரிக்கப்பட்டதே… மைசூர் பேலஸ்ஸில் தான்…எப்டியிருக்கு மதுரா?”என்று கேட்க.. அதனை எடுத்துச் சுவை பார்த்தவளின் விழிகளும் தான் அதீதமாகப் பளிச்சிடலானது.

நாவில் கரையும் இனிப்புச் சுவையில்… மொத்தமும் கரைந்து நெக்குருகிப் போய்… பேசக் கூடத் தோன்றாமல்… வாயினை முழுமையாக மூடி மென்மையாக.. மென்மையாக மென்று தின்றாள் மதுராக்ஷி!!

அவளது முகம் காட்டும் இன்ப இரசவாதங்களைக் கண்டு… ஏதோ அவளோடு கூடாமலேயே கூடிய.. கோடி கோடி இன்பங்களையும் பெற்றான் அஜய்தேவ்!!

அடுத்து… அவள் தட்டில் இன்னோர் வகை உணவை வைத்தவனோ, “இது கர்நாடகாவுக்குன்னே.. மோஸ்ட் ஃபேமஸ் ஃபூட்.. மத்தூர் வடை… மத்த வடை போல இல்லாமல்.. ரொம்ப பெருசா.. வட்டமா… மெதுமெதுன்னு சூப்பரா இருக்கும்… மாவு, ஆனியன், செமோலினா.. எல்லாம் போட்டு க்ரிஸ்ப்பியா..”என்னும் போதே…

அவன் வர்ணிக்கும் விதத்திலேயே நாவூற…மத்தூர் வடையை எடுத்துக் கடித்ததும்.. அதன் மொறுமொறுப்பில்… சூட்டில்.. இதமாய்… உணர்ந்தவளோ, “ம்ம்ம்… ம்ம்ம்..”என்று சுவையில் எழுப்பியதோ.. ஒருவித மோகன ஒலிகள்!!

அவளுக்கே இதுவரை எல்லாமும் எடுத்து எடுத்து வைத்திருப்பவன்… அவன் முதலாளியா?? இல்லை தொழிலாளியா??

ஆனால் அதைப்பற்றி சிந்திக்கத் தோன்றாமல்… விரல்களின் நுனியைச் சூப்பியவளாக, “ஆமா.. அஜய்சீனியர்.. நீங்க சாப்பிடல?”என்று கேட்க..

‘அம்மா.. இப்பயாச்சும் கேட்கணும்னு தோணுச்சே’ என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டே, “ம்ஹூஹூம்… நான் பேலியோ டயட் மேன்டைன் பண்றேன்… நீ சாப்பிடு”என்று சொல்லியதும் தான் தாமதம்.

மத்தூர் வடையை சட்னி தொட்டு வாய்க்குள் அதக்கியவளாக… ஈயென்று இளித்தவள், “ஆமால்ல.. திரும்பவும்… குண்டுபூஷணிக்கா மாதிரி வெயிட் போட்டா கஷ்டம் தான்ல சீனியர்?” என்று கிடைக்கும் கேப்பில் கூட அவனை கலாய்த்தாள் அவள்.

என்ன தான் கலாய்த்தாலும்.. “குண்டு பூஷணிக்கா”என்னும் அவளின் அழகு வார்த்தைகள் மைசூர்பாகினை விடவும் இனித்தது நாயகனுக்கு.

அதன் பிறகு… இன்னொரு பாத்திரத்திலிருந்து… ஒருவகையான உணவினை இட்டவனாக, “இட்லியோட கர்நாடகா வர்ஷன் “தட்டே இட்லி””என்று தட்டையான தட்டைப் போன்ற இட்லியை எடுத்து வைக்க… திகைத்துப் பார்த்தாள் அவள்.

“என்ன இது அஜய்?? நம்ம ஊர்ல.. ரவை இட்லி தொடங்கி.. பொசுபொசுன்னு குஷ்பு இட்லி வரை கேள்வி பட்டிருக்கேன்.. இது தட்டையா.. தட்டே இட்லி??”என்றவள்.. சுடச்சுட இருந்த இட்லியை விண்டு சட்னியில் தொட்டு… வாய்க்குள் இட்டு… கண்கள் மூடி நின்று சுவையில் ஆரோகணித்துப் போனாள்!!

அவனோ… அவளது அவசரம் பார்த்து சிரித்துக் கொண்டே, “தட்டே ன்னா.. கன்னடத்துல தட்டு ன்னு அர்த்தம்.. கிட்டத்தட்ட தமிழ் போலத் தான்!! கன்னட மொழியின் ஆதி மொழி கூட தமிழ் தான்…”என்று சொல்லிக் கொண்டே,

தட்டில் சப்பாத்தி போல ஒருவகை ரொட்டியை இட்டவன், “இது சிரோட்டி ரொட்டி.. இது வடகர்நாடகாவில் பாப்புலர்”என்று அதனை வைக்க.. ரொட்டியை.. அதற்குரிய குழம்போடு அவள் அள்ளி சாப்பிட….

“ஹாஹா… மகாரசனைக்காரன்யா நீ… இன்னாமா வாழ்ற மேன் வாழ்க்கைய?”என்று ஆனந்தத்தில் ஒருமைக்குத் தாவி சொன்னதைக் கூட பொருட்படுத்தாமல்… இரசித்துப் புன்னகைத்தான் அஜய்தேவ்.

கூர்க் என்னும் குடகுமலை வரும்போது கூட இத்தனை சந்தோஷத்தில் திளைக்காதவனுக்கு… அவளருகில் வந்த போது.. குடகுமலையும், மேற்குத் தொடர்ச்சி மலைக்காற்றும் புத்தம் புது பூமியாய் ஆனது போல பிரம்மை!!

அங்கே கர்நாடகாவின் சிக்னேச்சர் உணவுகளாக பதினாறு வகை உணவுகள்… வைக்கப்பட்டிருக்க.. அன்று அவளுக்கு சமபந்தி போஜன விருந்துக்கு இணையான விருந்தாகவும் ஆகிப் போயிற்று.

அவள் உண்பதை… இவன் ஒரு தாயாய் உருமாறி.. மேசையில் கையூன்றி..கன்னம் தாங்கியவனாக… மென்மையான க்யூட் விழிகளுடன்… பார்த்திருக்கலானான்.

இவளோ தன் பாஸ் தன்னைப் பார்த்திருப்பதைக் கூட சட்டை செய்யாமல் அத்தனை வகையறாக்களையும் ஒரு வெட்டு வெட்டி விட்டு… விரல்களை சூப்பிக் கொண்டே… தன் மன்னவனை நோக்கியவள்,

“நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம் அஜய் சீனியர்??”என்று தான் கேட்டாள்.

நாயகனோ.. அவளை தன்னையும் மீறி.. இரசித்து இரசித்துப் பார்த்திருக்கும் தன் முகபாவத்தினை சற்றே டெரராக மாற்றிக் கொண்டவனாக,

“வேறென்ன?? இவ்வளவும் சாப்பிட்டுட்டு.. காலாற நடக்காம இருக்கலாமா?? வாக்கிங் தான்”என்று மேசையில் இருவிரல்களால் நடப்பது போல பாவ்லா காட்டி செய்தவண்ணம் சொன்னான் அவன்!!

வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு இருப்பவளுக்கு… நடப்பது என்பது முதுகு மேல் மலையேற்றி வைத்தது போல வெகுசிரமத்தைக் கொடுக்க,

“சீனியர்… இருட்டுல வாக்கிங் போய்த்தான் ஆகணுமா? இருட்டுன்னா எனக்கு பயம்!!” என்று வாக்கிங்க்கை ஒத்திவைக்கத்தான் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ளலானாள் அவள்.

அவளின் கேடித்தனங்கள் ஒவ்வொன்றையும் சொற்பம் விடாமல் அறிந்து வைத்திருந்தவனா.. அவளிஷ்டத்துக்கு அவளை விடக்கூடும்??

நாற்காலியில் நின்றும் தன் முழு உயரத்துக்குமாக எழுந்து கொண்டவனோ.. டெனிம் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த மப்ளரை எடுத்து,

தன் கழுத்தினைச் சூழ குளிருக்காக அணிந்து கொண்டவனாக,அவளைத் தான் நோக்கினான்.

இளமைத்தனங்களெல்லாம் மறந்து.. பழைய பாஸாக அதிகாரம் பட்டையைக் கிளப்பும் குரலில், “நான் இருக்கும் போது உனக்கும் தான் என்ன பயம்?? நான் வெளியில் வெயிட் பண்ணிட்டிருப்பேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்வெட்டர போட்டுக்கிட்டு.. நீ வெளிய வர!!”என்று விட்டு… அழுத்தமான காலெட்டுக்கள் பதித்து.. வாசற்கதவைத் தாண்டி சென்றும் மறைந்து விட்டிருந்தான்!!

அவள் சென்ற பிறகு… இயலாமைத்தனத்தில்… விழிகளில் உண்ட மயக்கத்தில் தூக்கம் சொக்க.. அழாத குறையாக.. தரையில் பாதங்களை உதைத்துக் கொண்டு தான் நிற்கலானாள் அவள்.

அவன் சென்ற திசை பார்த்து, “முண்டம்.. முண்டம்.. ஹிட்லர்.. ஹிட்லர்…!!ஐய்யோ ராமா… விதம் விதமா வாய்க்கு ருசியா சாப்பாடு வாங்கிப் போட்டு… வயிறு புடைக்க சாப்பிட வைச்சு… இப்போ நடக்க சொல்லி கொல்றானே… நூதனமா இருக்குய்யா உன் தொல்ல” என்று தன் புடைத்த வயிற்றை.. கைகளால் தேய்த்து விட்டுக் கொண்டவளுக்கும் தான் வேறு வழி??

ஆகையால், அவன் சொன்னது போல தன் டீஷேர்ட்டுக்கு மேலாக ஸ்வெட்டரையும், காதுவரை மூடும் கம்பளி தொப்பியையும் அணிந்து கொண்டு… வீட்டின் பாரினைக் கடக்க முற்பட்ட போது தான் தோன்றியது… திருட்டு யோசனை!!

அவளுக்கும் தான் தோன்றியது மது அருந்தும் ஆசை!!

“வகைவகையா வைச்சா… குடிக்காதவனுக்கும் தான் ஆசை வரும்.. நான் எம்மாத்திரம்டா..”என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டே… பாரின் கவுன்டர் மேசை மீது எம்பிக் குதித்து அமர்ந்தவள்…

உள்ளே கைவிட்டு எடுத்தது… முழுதும் உலோகத்தினால் மறைக்கப்பட்டிருந்த ஒரு குட்டிபாட்டிலை!!

எதை எடுத்து கடகடவென அருந்தியவளுக்கு… அதன் வோட்காவின் சுவை நாவில் சுருசுருவென ஏறி… தொண்டையினை… அழகாக நனைக்கவே… இன்னும் இன்னுமென குபுக் குபுக்கென சரித்துக் கொண்டே தான் போனாள் அவள்!!

அச்சமயம் வெளியிலிருந்து.. “மதுராஆஆஆஆ…. வர்றீயா.. இல்லையா இப்போ?”என்று அஜய்யின் குரல் கேட்க,

பட்டென்று பாட்டிலை வாயிலிருந்து எடுத்தவள், “தோ… வந்துட்டேயிருக்கேன்”என்றவளாக… மீண்டும் மீண்டும் கடகடவென இரண்டு மூன்று மிடறு பருகி முடித்தவளுக்கு… அதை எடுத்த இடத்தில் வைக்கத் தான் மனம் வராமல் போனது!!

“எதுக்கும்… நீ என்கிட்டயே பத்திரமா இரு” என்று பாட்டிலை நபராக எண்ணி… உளறியவள்.. ஸ்வெட்டரைத் திறந்து.. உள்பாக்கெட்டுக்குள் தான் அதனைப் போட்டு விட்டு…

இரண்டாம் முறையாக, “தோ…. வந்துட்டேன்”என்றவளாக… அவனை நாடி குடுகுடுவென ஓடிப் போனாள் குறும்பின் லீலாவதி!!!

மோகனம்-18

பாதையோ…பள்ளத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருக்க… ஆங்காங்கே ஈசல்கள் சுற்றித் திரியும்… தெருவிளக்கும் ஒளிர்ந்து கொண்டிருக்க… மின்மினிப்பூச்சிகள் இரையும் சப்தமும் தான் கேட்டுக் கொண்டிருக்கலானது.. அந்தகாரம் கமழும் இரவு தனில்!!

இருளுக்கு துணையாக… அவளும், அவனும் நடைப்போட்டுக் கொண்டிருக்க… அவன் கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த மப்ளர் ஆணழகனை இன்னும் அழகனாக காட்டியது.

டெனிம் பாக்கெட்டில் கைகளையிட்ட வண்ணமே தான்… அவளையே கடைக்கண்ணால் பார்த்த வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தான்.

உண்மையில் அவன் உருகி உருகி நேசிக்கும் பேரழகுப்பெண்ணொருத்தி அருகிலிருக்கவே… ஆண்மையின் உணர்ச்சிகள் சீறியெழும்ப… அதனை அடக்கிக் கொண்டிருக்க.. பெரும்பாடு பட்டிருப்பவனின் நிலை அந்தோ பரிதாபம்!!!

அவளோ… அடிக்கும் குளிரில் கன்னங்களும், இதழ்களும் வெளிறிப் போய்… செர்ரிப்பழம் போல சிவந்திருக்க… இன்னும் கொஞ்சம் அதிசௌந்தர்யமாகத் தான் தெரிந்தவள்… கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவைத் தான் இழந்து கொண்டிருந்தாள்!!

தள்ளாடித் தள்ளாடி.. வாய்க்குள் முணுமுணுத்தவாறே.. விக்கிக் கொண்டே, “கண்ணதாசன் காழைக்குடி..அஃ… பேரைச்சொல்லி ஊத்திக்குடி.. அஃ..”பாடிக் கொண்டே போதை ஏற ஏற வளைந்து நெளிந்து நடந்து வரலானாள் அவள்!!

அவனோ… தன்னவளின் சிலையழகு காதல் போதையை அதிகமாக்க நின்றிருக்க.. இவள் நின்றிருந்ததுவோ வோட்கா போதையில்!!

பாதையின் ஓரங்களில் வளர்ந்திருந்த செடிகொடிகளை எல்லாம்… வழிநெடுகப் பிய்த்து பிய்த்துக் கொண்டே நடந்து வந்தவள்..பாதி வோட்கா ருசி கண்ட பூனையாயிற்றே!!

ஸ்வெட்டரிலிருந்த பாட்டில் அவள் நடக்கும் போது வயிற்றோடு உரச.. உரச.. இன்னும் கொஞ்சம் ஆசையாய் கேட்டது மனம்!!

அதனால்.. அஜய்யை முன்னாடி போக விட்டு நின்று கொண்டவளோ… அவன் கண்மறைவில் ஸ்வெட்டரைத் தூக்கி முகத்தை மறைத்துக் கொண்டு, வோட்கா பாட்டிலை எடுத்து கடகடவென திரும்பவும் அதனைச் சரித்துக் கொள்ளலானாள்!!

அவளோடு இயைந்து நடப்பதாக.. முன்னே நடந்து கொண்டிருந்தவனோ.. அந்த ஏகாந்த தனிமையில்.. தன் உள்மனம் மட்டுமே அறிந்திருக்கும் இரகசியங்களை எல்லாம் அவளிடம் மனம் விட்டு சொல்லி விடவும் எண்ணங் கொண்டான்.

குரலை செருகிக் கொண்டே, “மதுரா… இந்த தனிமையான பாதை..ஏகாந்த இரவு… பளிச்சின்னு ஒளிரும் நிலா..உன்கூட நடந்துட்டு வரும் நான்… இதையெல்லாம் பார்க்கும் போது உனக்குள்ள என்ன தோணுது..?? மதுரா??”என்றவன்…

அவளை நோக்கி.. அழகான மோகனப்புன்னகையுடன் திரும்ப.. அங்கேயும் தான் அவளில்லை.

விழிகள் இடுங்க.. அவளைக்காணாது பதறி, “மதுராஆ?”என்று கத்திக் கொண்டே திரும்ப… இவளோ.. இப்போது தான் பாட்டிலை உள்ளே மீண்டும் வைத்து விட்டு நிமிர்ந்தவளுக்கு பக்கென்றானது.

அவள் அங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “அங்கே என்ன பண்ணிட்டிருக்க??”என்று இவனும் தானிருந்த இடத்தை விட்டு.. மீண்டும் அவளை நோக்கி நகர்ந்தவனாகக் கேட்க.. அதற்குள் கடகடவென மேட்டிலிருந்து பள்ளத்திற்குள் இறங்கி வந்து சேர்ந்து கொண்டாள் அவள்.

குழறும் குரலில், நிற்கக் கூட சற்றே தடுமாற்றம் கண்டு, “இழ்ழ.. இழ்ழ… பூச்சி… இழ்ழ.. இழ்ழ.. பாம்பூ… இழ்ழ. இழ்ழ.. எதுன்னு தெரியழ… ஏடோ போற மாடிழி இருந்ததா..அதான் நின்னு பார்த்தேன்..”என்று சொல்ல… அவனது நாசியைப் பொத்தச் செய்யும் வண்ணம் குப்பென்று அடித்தது மதுவின் நெடி!!

மூக்கைப் பொத்தியவாறு.. உடலை பின்தள்ளியவனோ, “குடிச்சிருக்கீயா??”என்றதும்.. தன்னிடம் கேட்கக் கூடாததை கேட்டதைப் போலத் தான் பதறிப் போனாள் அவள்!!

“ஒழு.. ஜென்ட்டிழ்வுமனப் பாத்து.. கேட்கற கேழ்வியாய்யா இது…”என்று பெரிதும் விசனப்பட்டவள்.. கையுயர்த்தி.. அவன் தலை மீது வைத்தவளாக,

“உன். ம்மேழ சத்தியமா அஜய்!!.. இத்தனூண்டு தான் குட்ச்சேன்”என்று பெருவிரலையும், ஆட்காட்டி விரலையும் சேர்த்து வைத்து அளவு காண்பித்தாள் அவள்!!

அவனுக்கோ.. இதழோரம் ஓர் சின்னச் சிரிப்பு வந்து போக, “உன் பேச்சை பார்க்கும் போது புரியுது..இத்தனூண்டு தான் குடிச்சிருப்பேன்னு..”என்று அவளைப் போலவே விரல்கள் காட்டிச் சொல்லிவிட்டு திட்ட வாயெடுத்த போது தான்… அவள் விழிகள் கண்டு கொண்டது அதனை!!!

சந்தோஷத்தில் பற்கள் தெரிய.. துள்ளிக்குதித்தவள், “ஹை… கிழிக்கெட்… கிழிக்கெட்!!!”என்று சொல்ல.. அஜய்க்குத் தான்.. வாலும் புரியாமல், தலையும் புரியாமல் படுபேஜராகிப் போனது அவளை வைத்துக் கொண்டு!!

அவளை அரைமென்டலென எண்ணி பார்வைப் பார்த்தவளாக, “கிரிக்கெட்டா… நாம ரெண்டு பேரும் தானே இருக்கோம்.. இந்த நேரத்தில் கிரிக்கெட் விளையாடணுமா உனக்கு??” என்று சொல்ல..இவளோ பளிச்சிடும் வதனத்துடன் அவனை ஏறிடலானாள்.

குறும்பு மிளிரும் குரலில், “ யாழு சொன்னா.. நாம ழெண்டு பேழு தான்னு.. ஸ்ட்ரீட் கிரிக்கெட்..அதுவும் நைட்டுழ.. இந்த ஏரியா பசங்க ஆடுறாங்கழே!!.. இடுவும் கூட தனி கிக்கு தான்” என்றவள்.. அஜய்யின் கைகளை ஏக உரிமையுடன் பிடித்துக் கொண்டவள்,

“வா.. வா அஜய்… போழாம்.. போழாம்” என்று இழுத்துக் கொண்டே தான்.. அந்த சிறுவர்களை நாடிப் போனாள் குழந்தை மதுராக்ஷி.

பள்ளத்திற்கு இறங்கிச் செல்லும் பாதையின் முடிவில்.. ஒரு சமதரையான வெற்று நிலம் வரவே… அவ்விடத்தைச் சூழ இரட்டைமாடிக் குடியிருப்புக்களாக அமைக்கப்பட்டிருந்தன வீடுகள்!!

இருளில் குட்டி மின்விளக்குகள் மாத்திரம் ஒளிர.. இரவுநேரத்தில்… யார் தொந்தரவுமில்லாமல் மங்கி குல்லா அணிந்து கொண்டு.. துடுப்பு மட்டையும், விக்கெட் ஸ்டம்ப்பும், பந்துமாக… தீவிரமாகக் குதூகலித்து குதூகலித்து விளையாடலாயினர் சிறுவர்கள்!!

அனைவருக்கும் பத்து, பன்னிரண்டு வயதினை விடவும் தாண்டியிருக்காது.. ஒரு குழுவுக்கு ஐந்து பேர் மேனி… அணி பிரித்து.. உலக சுமைகள் ஏதுமின்றி.. சுதந்திரப் பறவைகளாக விளையாடிக் கொண்டிருந்தனர் கன்னட சிறுவர்கள்!!

கன்னடம் தெரியாமல் அவர்களிடம் போய், “வீ போத் கேம் டூ ப்ளே கிரிக்கெட்.. ஹா?”என்று தலையாட்டிக் கேட்க… அவர்களும்… அவளின் ஆங்கிலம் புரியாமல் தான் விழிக்கலாயினர்!!

இடையே புகுந்த அஜய்யோ… தன் மன்னவளிடம், “நீ இரு.. இரு… நான் பார்த்துக்கறேன்”என்றவன்.. தங்களைச்சூழ நின்ற சிறார்களிடம், “நாவு.. கிரிக்கெட் ஆடலு பருத்தேவே… நானு மட்டு நிம்ம அக்கா.. கிரிக்கெட் ஆடுத்தேவே.. அதுக்கு நின்னு சரியே?? (நானும், அக்காவும் கிரிக்கெட் விளையாட வந்திருக்கோம்.. உங்களுக்கு ஓகேயா பசங்களா?)”என்று சரளமாக கன்னடத்தில் பேசியவனைக் கண்டு.. இம்ப்ரஸ்ஸாகி.. மெச்சும் பார்வை தான் பார்த்து நிற்கலானாள் மதுரா.

அந்த சிறுவர்க்குழுவுக்கு தலைவன் போலிருந்த.. துடுப்புமட்டையைத் தூக்கி தோளில் அடித்திருந்த நிறுவனோ, “ஹாவுது..சரி” என்றவனாக..அவர்களையும் விளையாட்டில் விளையாட இணைக்க.. அன்றைய இரவு ஆட்டத்தின் சுவாரஸ்யம்..

“இந்திய – பாகிஸ்தான்” இரவு ஆட்டத்தினைப் பார்க்கும் போது கூட அவன் அடைந்திராத ஒன்று!!!

அவன் குழுவுக்கு சிறுவர்கள் ஐந்து பேர்!! இவன் குழுவுக்கு சிறுவர்கள் ஐந்து பேரென…இவர்களிருவருடன் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பேரும் இணைந்து.. அந்த ஆள்நடமாட்டம் குன்றிய தெருவை.. சேப்பாக்கத்தின் விளையாட்டு மைதானமாகவும் மாற்றலாயினர்.

ஹப்பப்பா?? சிரிப்பினையும், சுவாரஸ்யத்தையும் கொட்டித்தரும் அன்றைய இரவு ஸ்ட்ரீட் கிரிக்கெட்!! என்னேவொரு ஆட்டம் அது!!

அது அத்தனை சுவாரஸ்யமானதும் கூட பெண்ணாலே!!

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவளின் அணியே!!

அவளும்.. கன்னடம் தெரியாமல்.. தெரிந்த தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு என திராவிட மொழிகளையும் கலந்து கட்டி பேசியவாறு… போதையில் விழி பிதுங்கப் பிதுங்கத் தான் நின்றிருந்தவளைக் கண்டு…

விழிமூடி நகைத்துப் பார்த்திருந்தான் அவன்.

அவன் அணியிலிருந்த மற்றப்பொடிசுகள் எல்லாம் ஒழுங்காக பந்து வீசியதோ?? இல்லையோ??

நெடுநெடுவென வளர்ந்து காட்டுமரம் போலிருந்த அவன் மாத்திரம் நன்றாக பந்து வீச..இரவிலும் கூட துல்லியமாக விக்கெட் ஸ்டம்ப் எங்கேயிருக்கிறது என்று பார்த்துத் தான்.. மதுராக்ஷியின் அணியில் துடுப்பெடுத்தாடிய.. அத்தனை சிறுவர்களையும் அநாசயமாக.. ஆட்டமிழக்கச் செய்தான் அஜய்!!

இறுதியாக களமிறங்கியவளுக்கோ…அவன் பந்து வீசிய போது.. ஏற்கனவே போதையில் இருப்பவளாயிற்றே?? அதனால் பந்து எத்திசை நோக்கி வருகிறது என்று கூட சரியாகப் புரியத்தானில்லை!!

அந்தரத்தில் பறந்து வந்த வெள்ளைப் பந்து இரட்டையிரட்டையாகத் தெரிய… தலையினை சிலுப்பிக் கொண்டு…

தள்ளாடித் தள்ளாடி.. பந்தினை துடுப்புமட்டையால் தட்டிக் கொண்டிருக்க… அதைப்பார்த்து அவனும் சரி.. இதர சிறார்களும் தான்… “அக்காநன்னு நோடி… ஹஹஹா…(அக்காவப் பாருங்கடா) ”என்று வாய்விட்டுத் தான்… விழுந்து விழுந்து சிரிக்கலாயினர்.

அவர்களும், கூடவே அவனும் சேர்ந்து சிரிப்பதைக் கண்டு மூக்குககு மேலே கோபம் போனவளோ, “யோவ் சீனியழ்ழ்… நீயும் ஏன்யா அதுங்க கூட சிரிக்கழ.. இழுய்யா… அடுத்த பால்ல உன் மண்டைய பொழக்குழேன்” என்றவள்… வீராவேச டயலாக் எல்லாம் பேசியவள்.. துடுப்புமட்டையை நிலத்தில் வைத்து தட்டிக் கொண்டே தான்.. கூர்மையான விழிகளுடன்.. அஜய்யின் பந்தினை எதிர்நோக்கி நின்றாள்.

அஜய்யும் தூரத்திலிருந்து ஓடி வந்து பந்தெறிய… இவளும் பந்து தொட்ட மட்டையை தூரத் தூக்கியடித்த மறுநொடி… வானில் பறந்து பறந்து கொண்டே போனது மதுராக்ஷி அடித்த பந்து!!

உயர உயரப் பறந்து… ஆறாக போக வேண்டிய பந்து.. அஜய் தலைமேல் கைவைத்துக் கொண்டு, “போச்சுடா”என்ற வண்ணம் நின்றுவிட்டிருந்த நேரம் அது!!

இறுதித் தருவாயில் யாருமே எதிர்பார்த்திராத நொடி… அவன் குழுவிலுள்ள ஒரு பையனால் பிடிபட்டு…..” அவுட்”என்ற நிலைமையும் வர.. மறுநிமிடம் அ.. அவளுக்கு வந்ததே ஆத்திரம்!!

அவளது லூட்டி தாங்க முடியாமல் தேமே என்று ஆட்டத்தைப் பார்த்திருந்த அவளணியின் சிறுவர்கள் உட்பட.. ஆர்ப்பரித்து.. ஹைபைவ் போட்டுக் கொண்டு ஓடி வந்தனர் என்றால் பார்த்துக்கங்களேன்!!

அவள் ரோதனை!?

அவளிடமிருந்து துடுப்பு மட்டையை குழந்தைகள் பறிக்க முயல..அதனைத் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு “இழ்ழ.. இழ்ழ.. இது அவுட் காது… அதான் சொல்றேன்ழ.. இது அவுட் லேதுரா… அவுட் அல்லா!!”என்று தெலுங்கு, மலையாளமெல்லாம் கலந்து கட்டி.. அவுட்டை அவுட்டில்லையென்று கப்சா அடித்து விடலானாள்.

அஜய்யோ… அவளின் லீலைகளை எல்லாம் இரசிக்கும் முகபாவனைகளுடன்.. மூச்சிறைக்க இறைக்க.. இடுப்பு மத்தியில் கைவைத்து அவளைப் பார்க்க,

அவளோ.. தன் பாஸை குற்றம் சாட்டும் குரலில், “இழ்ழ.. இழ்ழ.. நான் ஒத்துக்க மாட்டேன்… ஒத்துக்கவ்வே மாட்டேன்.. அஜய்… நீங்க தப்பு தப்பா விளையாடுறீங்க..” என்று நன்றாய் விளையாடிக் கொண்டிருந்தவனைப் பார்த்து… திட்டத் தொடங்கினாள் அவள்.

அவள் சூழ்ச்சி அறிந்தும், அறியாதவனாக… வாயிற்குள்ளாகவே நகைத்த வண்ணம்.. அதனை ஒரு சிறிதும் வெளிக்கு காட்டிக் கொள்ளாமல், “என்ன தான் பிரச்சினை உனக்கு?” என்று கேட்க..

மதுராக்ஷியும் இது தான் தருணமென்று.. உள்ளூற நினைத்தபடி “இது அவுட் இழ்ழ.. ப்ரீஹிட்… ஏன்னா நீங்க போட்டது நோ பால்… நான் பார்த்தேன்… உங்க ழெக்… கோட்டை விட்டு முன்னாடி வந்திச்சு… அதனாழ இது அவுட் கிடையாது..”என்று பொய்யையும்.. உண்மை போலவே… ஜோடித்துச் சொன்னாள் அழகான இராக்ஷசியும்!!

“நான் போட்ட பால்.. நோ பாலா.. இல்லையான்னு எனக்கு தெரியாதா??.. நான் சொல்றேன்… நீ அவுட் தான்!!” என்று அவளிடம் விட்டுக் கொடுக்காமல் பேசியவனுக்கோ… அவளை உசுப்பேற்றி… காண்டாக்கி சூடுகாய்வது பெரும் சுவாரஸ்யம்!!

குழந்தைகளும் அஜய்க்கு சப்போர்ட்டாக களத்தில் இறங்கி, “ஹாவுது.. அவுட்டு.. நோ பால் அல்லா!!”என்று அவர்களும் கோரஸாகக் கத்தத் தொடங்க… அப்போதும் இறுதி வரை தன் தோல்வியை ஏற்றுக் கொள்ளவேயில்லையே அவள்??

“ஸ்டாஆஆப்ப்!!” என்று இரைந்து கத்தி அவர்களின் கூச்சலையெல்லாம் நிறுத்த வைத்து இடத்தையே கப்சிப்பென்று அமைதியாக்கியவளின் தனங்கள் அதீதத்துக்குமாக ஏறியிறங்க…

ஸ்லீவை சுருட்டிக் கொண்டு மல்லுக்கட்டுவது போல அஜய்யை நோக்கி முன்னேறி.. அவன் நெஞ்சோடு பட்டும்படாமல் மோதி நின்று, அவனைக் கண்ணுக்கு கண் நோக்கி,

“நான் டொடர்ந்து விழையாடினாழ் எங்கே என்கிட்ட நீ தோட்டுருவீயோன்னு பய்ந்து தானே இப்டி சொழ்ற அஜய்… நீ… என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன்.. நீந்நீ.. நீ.. நீ.. .. போ.. போட்டது நோ பால் தான்!!” என்று ஒற்றைக்கு ஒற்றையாக நின்று.. அவனுடன் சண்டை பிடித்தாள் அவள்.

அவள் தன் தேகத்தோடு உரசி நின்ற தினுசில் கோடானு கோடி செல்களும் தான் தகித்து எழ.. அவளை விட்டும் மரியாதையாக ஈரெட்டு பின்னகர்ந்தவன்,

சமாதானம் பேசும் குரலில், “சரி. நான் போட்டது நோ பால்… நீ இன்னும் அவுட்டாகல.. போய் விளையாடு.. போ” என்று கூறி.. அவளை அனுப்பி வைக்க…

சீற்றத்தில் பொங்கிய சிறார்களோ.. அவனை நோக்கி, “வாட் பிரதர்?? அக்கா அவுட்டு”என்று சொல்லி ஞாயம் கேட்க.. இவன் தான் அவர்களைத் தேற்றி ஒருவாறு அனுப்பி… பீல்டிங்கும் செய்யவைத்தான்!!

இம்முறையாகவும்… துடுப்புமட்டையை நிலத்தை நோக்கி தட்டிக் கொண்டிருப்பவளை நோக்கி அவன் ஓடி வந்து பந்தெறிய… மறுவிநாடி அவளால் உச்சத்தில் உயர உயர தூக்கி அடிக்கப்பட்டது பந்து!!

“இது கன்பார்ம் சிக்ஸூ”என்று.. அவன் அணியின் சிறார்கள் எல்லாரும்.. பரிதவித்துப் போய்.. பந்து செல்லும் வழியை, “ஆ”என் வாய் திறந்து பார்த்திருக்க..அப்போது தான் அங்கே எதிர்பாராத சிலவும் நிகழ்ந்தேறலானது.

அவளடித்த பந்து சரியாகப் போய்.. அந்த ஏரியாவிலேயே டான் போல வளைய வரும்… டர்பன் அணிந்த சர்தார்ஜீயின்.. வீட்டு மேல்மாடிக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது.

சிறார்களில் தலைவன் போலிருந்த பையனோ.. உச்சந்தலையில் கைவைத்து நின்றவனாக, “ஓ… தேவரே… கெட்ட காலா… எல்லா ஓடி.. (ஓ.. கடவுளே.. கெட்டகாலம்.. எல்லாம் ஒடுங்க)” என்று அலர்ட் கொடுத்தது தான் தாமதம்!!!

புற்றிலிருந்து கிளம்பிய புற்றீசல்கள் போல.. இருந்த இடம் தெரியாமல்… தடதடவென அங்கிருந்தும் அவசரஅவசரமாக ஸ்பாட்டை காலி செய்து விட்டு ஓடி மறைந்து போனார்கள் சிறுவர்கள்!!

சர்தார்ஜியின் வீடும் தான் அடுத்த பல நிமிடங்களில் ஒளிவெள்ளத்தில் மூழ்க… பட்பட்டென்று மின்விளக்கைப் போட்டு விட்டு…

தன் பேன்ட்டினை இடுப்பு வரைத் தூக்கி மேலேற்றிக் கொண்டே வீதி வாசலுக்கு வந்து, கொடூர குரலில், “யாரூ.. காஜூ.. உடேடாரூஊஊ? (கண்ணாடியை உடைச்சது எவம்லே) ?”என்று கத்திக் கேட்க.. போதையில் இருப்பவளுக்கும் தான் இராட்சத உடல் கொண்ட சர்தார்ஜீயை எதிர்க்கும் வலுவும் வந்தது.

துடுப்புமட்டையைத் தூக்கி தோளில் அடித்தவாறு.. வீறு நடையில் முறுக்குமீசை கொண்ட சர்தார்ஜீயை நாடிப் போனவளோ,

அவர் முகத்துக்கு அருகாமையில்.. தன் பால்வடியும் முகத்தை டெரர் முகமாக மாற்றி.. காமெடி பீஸ் போல நின்றவளோ, “நான்தான்ரா… என்னரா பண்ணுருவ…?இண்டிநா உனக்கு மட்டுமாடா… ஷொந்தம் எனக்கும்.. டான்டா.. ஜெய்ஹிந்த்..”என்று மட்டையோடு சல்யூட் அடித்தவளுக்கு.. போதையில் வந்தது தேசப்பற்று!!

பிறகு சர்தார்ஜியை நோக்கி, போதை மாறாது, “இண்ட மண்ணுல கிழிக்கெட் விளையாட எனக்கும் உழிமையிழுக்குடா.. தனிமனிதனுக்கு கிரிக்கெட் இல்லையெனில்.. ஜெகத்தினை அழித்திடுவோம் பாரத்!! ”என்று விஜயகாந்த் போல ஆவசேமாகி சொல்ல.. அவளது தோரணையிலும், மொழியிலும்… சர்தார்ஜீ காண்டாகி… ஏகத்துக்கும் முறைத்து வைக்கலானார்.

ஆனால் அஜய்யோ.. விழுந்து விழுந்து சிரித்து வைக்காத ஒரே குறைதான்.

அவர் முறைப்பது கண்டு சிறிதும் அஞ்சாமல், “என்னடாஎன்னடாஎன்னடா… என்னடா??”என்று எக்கச்சக்க என்னடா போட…அவள் டா கேட்டு… இடுப்பில் கைவைத்து நின்றவருக்கும் தான்.. அவர் முறைப்பு இன்னும் கொஞ்சம் அதிகமானது!!

நிலைமை விபரீதமாகிவிடுமோ என்றஞ்சிய அஜய் தான்.. அவளைப் பிடித்திழுத்து.. அப்புறப்படுத்தியவனாக, “ஸாரி ஜீ.. ஸாரி.. ஷீஸ் டிரங்க்.. அவ நல்ல கான்ஷியா இல்ல.. ஸாரி ஜீ”என்று அவளுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்க.. அவளோ அன்று மினி ரங்கம்மாவாகவும் தான் உருமாறிப் போனாள்.

போதையில் தள்ளாடும் குரலில், “நீ ஓழமாகு சீனியழ்ழ்.. இன்னைக்கு நானா.. இழ்ழ்.. அந்த டர்பன் மண்டையனான்னு பார்த்துட்றேன்”என்று துடுப்புமட்டையைத் தூக்கிக் கொண்டு.. சர்தார்ஜீயை அடிக்கவும் தான் முயன்றாள் அவள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்!!

அதற்குள்.. அவள் கைப்பிடித்து தடுத்து நிறுத்தி.. “ஸாரி ஜீ… மனி பார்.. ப்ரோக்கின் வின்டோ கிளாஸ்”என்று உடைக்கப்பட்ட கண்ணாடிக்காக.. சிலபல ஆயிரங்களை அவர் கையில் திணித்து விட்டு… அடங்க மறுக்கும் அவளை.. அப்படியே தூக்கி தன் தோளில் அடித்துக் கொண்டே நடக்கவாரம்பித்தான் அஜய்.

அவளோ… அஜய்யின் முதுகுக்கு சரமாரியாக தாக்கியவண்ணம், “விட்றா… விடுடா.. குண்டுபூஷ்ணிக்கா.. இன்னைக்கு நானா இழ்ழ் அந்த சிங்கா?? இழ்ழ.. தமிழா.. இண்டி’ யான்னு பாத்துருவோம்… விட்றா… டேய்.. ஹிட்ழருக்கு பொழந்தவனே.. அவன் மண்டைய உடைச்சிர்றேன்!!விடுறா.. என் அனுமதியில்லாமல் என் சுண்டு விரல் கூட படாதுன்னீயேடா கிறுக்கா…எழ்ழாம் பொய்தானா?? நம்பி மோஷம் போயிட்டேனே… விட்றா… கீழே இறக்கி விடு.. ”என்று வழிநெடுகிலும் கத்திக் கொண்டே வரலானாள் ஓயாது!!

****

சர்தார்ஜீ மூச்சுக்காற்றுக்கூட தீண்டாத இடத்திற்கு.. அத்தனை தூரம் தள்ளிக் கூட்டிட்டு வந்திருந்தவனோ.. அவளை அப்போது தான் கீழே இறக்கி விட.. இருவரும் பைய்யப் பைய்ய நடந்து நடந்து…சென்று கொண்டிருந்ததுவோ.. ஒரு குட்டி பாலத்தின் மேலே!!

அதற்கு கீழே..தமிழகத்தை நோக்கி ஓடும் காவிரியாற்றின்.. பிறப்பிடமான தலைமைக் காவிரி ஆறு.. இரவு நேரத்திலும்.. எல்லையேயற்று ஓயாமல் ஓடிக் கொண்டேயிருக்க.. பாலத்தின் மேலே… முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு ஸ்வெட்டரின் முன்பாக்கெட்டில் கைகளையிட்ட வண்ணமே நடந்து வரலானாள் அவள்.

எவ்வளவு.. சுட்டித்தனம் செய்யும்.. வாலு நிறைந்த பாவையவள்!!

சர்தார்ஜீயை அடிக்கவிடாமல்.. தோளிலே தூக்கிக் கொண்டு வந்த சீற்றத்தால்.. அவனோடு பேசாமல்.. வாய்மூடி வருவதில் சோகம் மிளிரவே…

அவள் கைப்பற்றித் தடுத்து, “ஹேய் மதுரா வெயிட்”என்று கூறியவனாக,

எடுத்துச் சொல்லும் குரலில், “.. என்னாச்சுன்னு இப்படி கோபப்பட்ற… இது ஜஸ்ட் கேம் .. ப்ளஸ்.. இதையெல்லாம் அப்பப்ப விட்டுரணும்!! நான் இன்னைக்கு உன்கூட எவ்ளோ ஹேப்பியா… சிரிச்சிட்டே இருந்தேன் தெரியுமா??”என்று கூறிய… அஜய்யைத் திட்டிவிடத்தான் வாயெடுத்திருந்தாள் அவள்.

அக்கணம்… மின்னல் வெட்டினாற் போல.. அவள் மூளையில், அவனிடம் சிக்கியிருக்கும்.. அவளது ஜிம்மியின் நினைவுகளும், ஆதாரங்களும் நினைவுக்கு வரவே, திட்டினால் மீண்டும் பழிவாங்கி விடுவானோ என்ற அச்சத்தில்… ஈயென்று இளித்துக் கொண்டு இதமாகத் தான் பேசலானாள்.

பூசி மெழுகும் குரலில், “பரவாயில்லை அஜய்.. ஆ.. ஆமால்ல.. இது ஜஸ்ட் கேம் தான்ழ.. அஜய் சீனியர்.. ஹேப்பினா.. மதுராக்ஷியும் ஹேப்பி..!!” என்று படபடவென கண்களை சிமிட்டிக் கொண்டு மழலை போல அவள் கூறியதும் பேரழகே!!

அவன் புன்னகை மாறாமல் அவளை இழுத்து கட்டிக்கொள்ளும் உணர்வினை அடக்கிக் கொண்டு நடக்க… இவளோ பாலத்தின் முனையில் இருகைவைத்து.. கீழே எட்டிப்பார்த்து… குதூகலிக்கும் குரலில்,

“பாலத்துக்கு கீழ ப்ரிட்ஜ் நல்லாருக்குல்ல..??”என்று தலையாட்டிக் கேட்டவள்.. மறுவிநாடி யாருக்கும் காத்திராமல்..

நினைத்ததை யோசியாமல் செய்யும் சிறுபிள்ளை போல பாலத்தின் கம்பிகளோடிருக்கும் திட்டில் ஏறி… கைகளை காற்றில் நீட்டிக் கொண்டு… அவள் நின்றிருக்கலானாள்.

கரணம் தப்பினாலும் தவறி தண்ணீருக்குள் விழ நேரிடலாமென்ற நிலையில்.. அவள் நின்றிருக்க.. பட்டென்று கைப்பிடித்து தடுத்தவனோ, .. “என்ன பண்ற மதுரா.. விழுந்து கைகால்களை…. உடைச்சிக்கப் போறீயா??..”என்ற போது.. அவனை நோக்கி உண்மைக்கும் அழுவது போன்ற போலி அழுகையுடன் திரும்பினாள் போதைக்கோதை!!

கண்களை புறங்கையால் கசக்கியவாறே, “.. எ.. எ.. எனக்கு.. எனக்கு.. வீ..வீட்ல மாப்ள பார்த்திழுக்காங்க அஜய்.. மாப்பிள்ளைய.. பிடிக்கவேயிழ்ழ..”என்று தன் சொந்தக்கதை சோகக்கதைகளையெல்லாம் உச்சி முனையில் நின்று தான் கூறலானாள் அவள்.

“முதல்ல மாப்ள போட்டோவை நீ.. பார்த்தீயா மதுரா..??”என்று ஆழ்ந்த சிந்தனையுடன் கேட்டவனின் கைகள்.. அப்போதும் அவள் முன்னங்கையை விடாமல் தீவிரமாகத் தான் பிடித்திருக்கலானது.

இவளோ போதையில் தேம்பித் தேம்பி அழுதவளாக, “இ.. இ.. இழ்ழ… ஆனா எனக்கு கழ்ழ்யாணமே வேணாம்.. கல்யாணம்ழாம் பொய்யி… எங்க அத்தை கல்யாணம் பண்ணாங்க.. மாமா துழோகம் பண்ணிட்டு.. இன்னொழுத்தி கூட தொடுப்பு வைச்சிக்கிட்டாழு.. என் சித்தி.. பாவம்… சின்ன வயசிலயே டைவழ்ஸ் ஆகிழுச்சு.. என் ஒண்ணு விட்ட மாமா பொண்ணு.. சீடனக்கொதும… டைவர்ஸ் ஆகிழுச்சு… பெரியப்பா… பெரீம்மாவுக்கு பிள்ளைப் பெத்து தழமுடியாதுன்னு.. டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டாழு..இதுழ இழுந்து என்ன தெரியுது கோபால்… கல்யாணம்ழாம் டைவர்ஸில் தான் முடியும்… இந்த ஆம்பழங்களே வேஸ்ட்டு… கழ்யாணம் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த் சீனியர்!! அதனால் கல்யாணம் பண்ணாதீர்!! கல்யாணம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்!!”என்று வாய்க்கு வந்ததையெல்லாம் புலம்ப.. இப்போது ஏனோ அவள் சுட்டித்தனத்தில் சிரிப்பு மூளவில்லை அவனுக்கு!!

பாய எத்தனித்தவளின் கையை மேலும் பலமாக இறுக்கி.. பிடித்துக் கொண்டவனோ, “மற்ற எல்லாத்தையும் விட்ரு.. ஆனா.. உங்க அம்மா.. அப்பா.??அவங்க டைவர்ஸ் பண்ணாங்களா??இல்லைல்ல..உன்னையும், உன் தங்கையையும் அழகா முத்து போல பெத்து வளர்த்துக்கிட்டு.. இதுவரை..சேர்ந்து இருக்காங்கள்ல ?எல்லாரும் அப்படியில்லை.. நல்ல ஆண்களும் இருக்காங்க.”என்று சரியான பாயின்ட்டைப் பிடித்துக் கேட்டான் அவன்.

“அவங்க மட்டும் விதி விழக்கு சீனியழ்ழ்.. நீங்க என்ன சொன்னாலும்…என் முடிவை மாத்திக்கழதா இழ்ழ.. நான் தற்கொழ.. பண்ணிக்க போழது.. உறுடீ!! ”என்று குதிக்க எத்தனிக்க,

அவனும் கப்பென்று அவளைப் பிடித்து… ஒரேயடியாக இழுக்க.. அவளும் பூப்போல திரும்பி அவன் மார்மீது சாய. அவள் இறப்பை எண்ண முடியாமல்… அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் காற்றுக்கும் இடம்கொடாது.

அவளது தற்கொலை எண்ணம் நோவு தரவே,கண்கள் அதீதமாகக் கலங்கிப் போக, “இனி இப்டி பேசாதே மதுரா.. சாகுற வயசா உனக்கு??”என்று கூற.. அவள் அணைப்பில் நின்றும் வெளிவந்து… தாங்கமாட்டாமல்… வயிறு வலிக்க வலிக்கத் தான் சிரிக்கலானாள்.

“ஹஹஹா… கழ்யாணம் பிடிக்கழேன்னா… ஹஹஹா… பாழத்திலிருந்து குதிக்கற மூஞ்சா என்து சீனியர்ர்.. ஹஹஹா… ஒண்டியா நின்னு அவனை தூக்குழ.. தொங்க வைப்பேனே ஒழிய.. மதுராக்ஷி.. இந்த தப்பான முடிவ என்னைக்கும் எடுக்க மாட்டா.. நான் சும்மா ழுழுலாய்க்கி பண்ணேன்..”என்று குறும்பாகக் கூறியவள்,

தத்தளிக்கும் குரலில், “..எனக்கு பாலத்துல மேல நின்னு குதிக்கணும்னு ஆசையா இருக்கு..அதான்.. குதிக்க போறேன்.. நீயும் வர்றீயா சீனியர்!!”என்றவள் அவனுக்காக காத்திருக்காமல்.. பாலத்தின் கைவிளிம்பு மீது ஏறி நின்று… கொண்டாள் இன்பமாக!!

அவ்வெண்ணம் அவனையும் தொற்றிக் கொள்ள, “ஹேய் வெயிட்.. நானும் வரேன்” என்று அவனும் பாலத்தின் முனையில் ஏறி நின்று.. அவள் கையைப் பிடித்த வண்ணம்.. “ஓகே” என்றவனுக்கு.. கீழே ஓடும் ஆற்றைப் பார்க்கவே படபடத்தது நெஞ்சு!!

ஆனால் இவளோ, “ரெடி ஜூட்!!” என்ற வண்ணம் தன் முதலாளியை இழுத்துக் கொண்டு.. ஆற்றை நோக்கிப் பாய்ந்திருக்க.. வளியில் கூதல்க்காற்று குளுகுளுவென மோதியது இருவர் முகத்திலும்!!

அதுவொரு சுவாரஸ்ய அனுபவம்.!!

நட்ட நடு இரவில்..ஏகாந்தக்குளிரில், தனிமையில்.. அஜய்யோடு ஆற்றில் குதித்த குதித்தலில்.. நீரை கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் பாதங்கள் தொட்டது ஆற்றின் குறுங்கற்களை!!

ஆற்றுநீர்.. மேனியெங்கும் ஊடுறுவி என்புமச்சையின் அந்திமம் வரைத் தாக்க… புதுத்தென்பு உண்டாயிற்று அவர்களிருவருக்குமே!!

கூடவே அதியுச்சக் குளிர் ஆட்டிப்படைக்க.. மீண்டும் ஆற்றின் மேல்மட்டத்திற்கு அவள்.. மூச்சினை “ஹாஹ… ஹாஹ்” என்று எடுத்து விட்டுக் கொண்டே வந்த போது… அவனோ நனைந்த ஆடைகளுடன்.. உடலை கைகளால் இறுக்கி அணைத்தவாறே.. குளிரில் நடுநடுங்கியவாறே… கரையேறிக் கொண்டிருப்பது புரிந்தது!!!

ஆற்றின் சலவைக்கற்கள் நிறைந்த கரையோரம் துணுக்குற்றவாறு நின்ற அஜய்யோ, அவள் இன்னும் ஆற்றினுள் இருப்பதைப் பார்த்தவன், “ லூசு.. வெளியே வா.. ஜலதோஷம் பிடிச்சிரப் போகுது”என்று கத்த,

அவளும் கரையேறிக் கொண்டே அவனை நோக்கி, “சொல்ட்டாரு.. லூசுக்கு வைத்தியம் பார்க்கற டாக்டரு.. போய்யா ஹிட்லரு..”என்று சொன்னவளுக்கும் கூட பற்கள் பரதமாட குளிர்ந்து கொண்டிருந்தது அதீதத்துக்குமாக!!

அவனோ…அங்கிருந்த சறுகுகள் எல்லாம் நிமிடத்தில் சேகரித்து.. சிக்கிமுக்கி கற்களை உரசி நெருப்பு மூட்டி கைகளை நீட்டி குளிர்காய… இவளும் அவனெதிரே அமர்ந்து குளிர்காயலானாள் இதமாக!!

கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகள் உலரத்தொடங்க… அவள் வதனம் தங்கமாய் மிளிர.. அப்போது தான் வோட்காவின் ஞாபகம் வந்து சட்டைப் பை திறந்து குபுகுபுவென தொண்டையில் மீண்டுமொருதரம் சரித்தாள் சரக்கை!!

“அடிப்பாவீ… பார்லயிருந்து சுட்டுட்டீயா??”என்று கேட்க.. பதில் சொல்லாது அசடுவழிய இளித்து வைத்தாள் அவள்!!

தண்ணீரில் நனைந்ததும் தெளித்த போதை.. இப்போது அடித்த போதையில் மீண்டும் உச்சத்தில் ஏகியது.

போதையில் சுகமாய் தள்ளாடி நின்றிருந்தவளோ, தீமரத்தில் உள்ளங்கை நீட்டி குளிர்காய்ந்தவளாக, “ஆமா உன் வீட்டிழ யாரும் இல்லையா அஜய்?? நான் அன்னைக்கு காருக்கு நலுங்கு வைக்க வந்தப்போ கூட… யாரையும் காணலையே?” என்று இன்னும் கொஞ்சம் வோட்கா குடித்தவாறே கேட்டாள் நாசுக்காக.

நெருப்பின் இதத்தினை எடுத்து முகத்தில் ஒற்றியெடுத்தவனாக, “அம்மா பிஸினஸ் விஷயமா.. சிங்கப்பூர் போயிருக்காங்க.. தம்பி.. வீட்டுக்கு வர்றது ரேர்.. . ப்ரென்ட்ஸ் கூட ஊர்சுற்றப் போயிருவான்..அதனால பெரும்பாலான சமயத்தில் நான் மட்டும் தானிருப்பது” என்று வீட்டில் யாருமில்லாத காரணத்தைக் கூற..அடுத்த கேள்வி வந்தது போதையில்!!

“ஏன் அஜய்.. உனக்கு யாரும் ப்ரென்ட்ஸூன்னு இல்லையா?”

அவனும் எவ்வித சங்கோஜமும் இன்றி.. “என் ப்ரென்ஸ் எங்கே இருக்காங்கன்னு உனக்கு தெரியாதா மதுரா?? எல்லாமே உன் சீனியர்ஸ் தான்… சுரேஷ், கார்த்திக், முருகன் எல்லாம் இந்தியாலயா இருக்காங்க..?? யூஎஸ்,. யூகேன்னுல செட்டில் ஆயாச்சு.. காலேஜ் கெட்டுகெதர் பாட்டி வைச்சா.. அதில் மீட் பண்ணா தானுண்டு” என்று அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவனிடம்..

“அப்போ நீங்களும் வெளிநாட்டுக்குப் போய் செட்டில் ஆகியிருக்கலாம்ல?” என்று கேட்டாள் பட்டென்று.

“குட் குவஸ்டின்..!!” என்று பாராட்டியவன், “நானும் படிச்ச படிப்புக்கும், இருக்கும் எக்கச்சக்க சொத்துக்கும் இதுதான் குட் இன்வெஸ்ட்மென்ட்னு போயிருப்பேன்.. ஆனா காசை எங்கே வேணும்னாலும் சம்பாதிக்கலாம் மதுரா.. லவ்வ? எல்லா இடத்திலும் கிடைச்சிருமா?? அவ காதல் இல்லாம என்னால வாழ முடியாது.. அதனால் தான் இங்கேயே இருந்துட்டேன்” என்று காதலுக்காக உள்ளூரிலேயே தங்கிய கதையை விளக்க அவளுக்கு ஆச்சரியமாய் போனது.

எத்தனையோ பேர் காசுக்காக காதலை தியாகம் பண்ணிவிட்டு வீர வசனம் பேசியதுண்டு!! அதைக் காதார கேட்டதுமுண்டு.

ஆனால் இவன் தன் காதலுக்காக காசை துச்சமாக மதிக்கிறானே??.. அவனைப் பார்க்கும் போது மதிப்பு கூடிக் கொண்டே போனது அவளுக்கு.

அவனுடைய காதல் கதை கேட்டறிய ஆர்வம் பிறக்கவே ஒரு மிடறு வோட்கா பருகியவளாக, “.. உங்க லவ் எப்படி சக்ஸஸ் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

“. லவ் சக்ஸஸ்னுலாம் சொல்ல முடியாது.. இன்பாக்ட் நான் அவளை காதலிக்கும் விஷயமே அவளுக்குத் தெரியாது. தெரிய வாய்ப்புமில்லை. வீட்ல அம்மா… பொண்ணு பார்த்துட்டிருந்தாங்க.. கட்டினால் அந்தப்பொண்ணை தான்.. கட்டுவேன்னு ஒத்தக்கால நின்னேன்.. அம்மாவும்பேசி முடிச்சிட்டாங்க..அவ்ளவு தான்..” என்று எளிமையாகத் தோள் குலுக்கி.. அவன் காதல்க்கதையைக் கூற.. அவளுக்கு பட்டென்று வந்து போனது அவளது வருங்கால கணவனின் நினைவுகள்.

இதே போலத்தானே அவனும்.. எங்கேயோ அவளைப் பார்த்து, ‘கட்டினால் மதுராவைத்தான்’என்று ஒற்றைக்காலில் நின்றதாக அவனது பெரிய அன்னை கூறினாள்??

இந்தக் காலத்துல பையன்களுக்கு ஒற்றைகாலில் நாரைப் போல் நின்று விரும்பியவளை அடைவதென்பது ஃபேஷனாகிப் போனதோ??

இல்லாவிடின் ஏதேனும் டிரென்ட்டோ??

“என்னைப்பத்தி போதும்.. இப்போ நீ சொல்லு.. உன்னைப்பத்தி”.. என்று அவன்.. அவளைப் பார்த்து கேட்க.. அவளும் போதையில் உளறவாரம்பித்தாள்.

“நானா?? மனசுக்கு பிடிச்சத செய்வேன் சீனியழ்ழ்.. மத்தவங்க நம்மழ பத்தி என்ன.. சொழ்வாங்களோன்னு பயமே கிடையாது.. பல்லு போன கிழவியானப்றம்.. வாழ்க்கைய திரும்பிப் பார்த்தா.. அதுல சந்தோஷமா நிறைய அனுபவங்கள் இருக்கணும்.. இதோ இப்போ கிரிக்கெட் விளையாடினது.. ஆத்துக்குள்ள குதிச்சது.. எல்லாமே பார்ட் ஆப் இட் தான்”என்று சொல்லிக் கொண்டே….

ஒரு கட்டத்தில்.. கை மறைவில் கொட்டாவியை வெளியேற்றிய வண்ணம் தூங்கி வழிந்தவளாக.. கருவறைக்குழந்தை போல கட்டாந்தரையில்.. குறுக்கிப் படுத்துக் கொள்ளலானாள் ஆற்றங்கரையோரத்திலேயே!!

இது அறியாமல் அஜய்யோ.. முழங்கால்களைக் கட்டிக் கொண்டு நிலாவைப் பார்த்து, “.. யூ நோ சம்திங்.. உனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை.. வேண்டாத மாப்பிள்ளை யார் தெரியுமா!!.. அது நான்தான்.. தான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் மதுரா” என்று உணர்ச்சிகள் கொப்புளிக்கச் சொல்லிவிட்டுத் திரும்ப.. அவள் உறங்கிக் கொண்டிருந்தது கண்டு…இனிதாய் அதிர்ந்தான்.

கூடவே… அவள் அழகையே தொடமுடியாமல் தகித்து நின்றவனுக்கு.. அது விடியா இரவாக.. தொலையா இருளாகவும் மாறிப் போனதில்.. மனதோடு முளைத்தது விரகதாப வாட்டம்!!

எனில், அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அஜய்தேவ் சக்கரவர்த்தி தானா??

அவனைக் கட்டிக்கவே மாட்டேனென்று நிற்பவளும் இது அறிந்தால்…??

 

2 thoughts on “மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top