8 .மோக முத்தாடு அசுரா
“ஹ. ஹலோ குட்டிஇஇ” என்றான் ஆசை குரலில்…
“இ…இது சிம்மா குரல் இல்லையே…
“நீங்க யாரு… சிம்மாவ பேச சொல்லுங்க” என்று மழலைமொழியில் பேசியது இனியா.
“ஏன் சக்கரே என்கிட்ட பேசமாட்டியா. உன்கிட்ட பேச ஆசையா இருக்கு. காளிங்கனுக்கு பெண் பிள்ளை மீது ரொம்ப ஆசை”
இனியா புதிய ஆள் என்று பேச தயங்கியது.
“பேசு சக்கரே… நானும் உன் அப்பாவோட ப்ரண்ட்தான்”
அவன் பேச்சும் புரியாமல் இருக்க இனியா போனை காதில் வைத்தபடி அமைதியாக பேசாமல் இருந்தது.
அதே நேரம் சமையல்கட்டிலிருந்து தட்டில் தோசையுடன் வெளியே வந்த முல்லை “யாருக்குடி போன் பேசுற கொண்டா போன”… என்று போனை வாங்கி பார்க்க சிம்மன்கிட்ட பேசுறா என்று தெரிந்ததும்
“ஏய் அவர ஏன் தொந்தரவு பண்ணுற” என்று மிரட்ட.
“கொடும்மா போனை” என்று முல்லையிடமிருந்து போனை வாங்கிக்கொண்டது.
சிம்மன் வந்துவிட “இந்தாங்க உங்க பொண்ணு போல” என்று போனை நீட்ட.
“ஹா !என்பொண்ணுதான்” என்று பதட்டத்துடன் போனை வாங்கி “தங்ககுட்டி என்னடா செல்லம்”
“நீ எப்ப வருவ சிம்மா”என்று சிணுங்களுடன் கேட்டது.
“உன்னை ஈவ்னிங் ஸ்கூல்லயிருந்து நான் தான் கூட்டிட்டு வர வருவேன்… நீ சமத்தா பொம்மன் அங்கிள் கூட ஸ்கூல்க்கு போய்க்க தங்கம்” என்று போனை வைத்துவிட்டான்.
“யாரு உங்க பொண்ணா?”
“ ஆமா என் பொண்ணுதான்” என்று கூறிவிட்டு இதற்கு மேல் காளிங்கனை தன்னிடம் கேள்வி கேட்க விடக்கூடாதென
“நான் இப்ப கிளம்பினாதான் ஈவ்னிங் வீட்டுக்கு போக முடியும்” என்றுசொல்லி அவன் கேட்கும் கேள்விக்கு பதில் கூறாமல் குளிக்கச் சென்றான்… சிம்மனுக்கு, இப்போதைக்கு அவனுக்கு தன்னைப் பற்றி எதுவும் தெரிய வேண்டாம்… என்று நினைத்து தப்பித்து குளிப்பதற்கு ஓடினான்.
“என்ன இவன் என்ன தொழில் பண்ணுறாருன்னு தெரிஞ்சிக்கலாம்னு பேச்சு கொடுத்தா… மலுப்பி ஓடுறானே என்று தலையை ஆட்டியவன் கையிலிருந்த கேஸ் பைலை பார்க்கத் துவங்கினான்.
குளித்து ரெடியாகி வந்து நின்றவன் “நான் கிளம்புறேன் காளிங்கன் …என்று கையில் இருந்த பேக்கை தூக்கி தோளில் போட்டு நிற்க.
“ம்ம் கிளம்புங்க… உங்களைப் பத்தி எதுவும் சொல்லலையே” என்று எழுந்து நின்று அவனருகே வந்து நின்றான்.
“நீங்க இன்னும் ரெண்டு வாரத்துல சென்னை வரப்போறீங்கள்ள… அப்ப என்னைப் பத்தி நீங்களே தெரிஞ்சிக்குவீங்க” என்று புன்னகைத்தான்.
“ம்ம்” தெரிஞ்சுக்குறேன்… என்று அவனை தோளோடு அணைத்தான்… இப்படித்தான் சிம்மன் எங்காவது வெளியே போகும்போது வர்மனும் கட்டிபிடிப்பான்.
சிம்மனும், காளிங்கனை அணைத்து விடுவிக்க… “சீக்கிரம் சென்னைக்கு வாங்க”என்று கண்ணை சிமிட்டிச் சென்றான் சிம்மன்.
இனியாவை, வஞ்சி ஸ்கூலுக்கு கூட்டிச்செல்ல… நானும் வரேன் வஞ்சி என்று முல்லையும் கிளம்ப.
“அக்கா நீங்க ரெஸ்ட் எடுங்க நான் பாப்பாவ கூட்டிட்டுப் போறேன்”என்று கிளம்பிவிட்டாள்.
“என்னோட வர்மன் உயிரோடதான் இருக்காரா… டிவியில வந்தாரே!!! மறுபடியும் அவர பார்ப்பேனா… இல்லையே நான் அவரோட உயிரற்ற உடம்ப பார்த்தேனே… வேற யரோகூட இருக்கலாம் சிம்மன் அண்ணா வரட்டும் கேட்கணும் கேட்கலாம்.. ஒருத்தர் போல ஏழு பேர் இருப்பான்னு கூட சொல்வாங்க.. இது என்னோட வர்மாவை இருக்காது என்று குழம்பி கொண்டு தலையை பிடித்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
சிம்மன் அண்ணா கேரளாவுக்கு ஏன் போனாங்க அவருக்கு கேரளாவுல ப்ரண்ட் யாரு இருக்கா… எனக்கு தெரிஞ்சு யாரும் இல்லையே… என்று யோசித்துக்கொண்டிருக்க… இனியாவை ஸ்கூலில் விட்டுட்டு வீட்டுக்குள்ள வஞ்சி வர… தலையில் கைவைத்து அமர்ந்திருக்கும் முல்லையை கண்டு “அச்சோ என்னாச்சுக்கா தலை வலிக்ககுதா”என்று தவிப்புடன் முல்லையின் அருகே உட்கார்ந்தவள்… “அக்கா நான் தைலம் எடுத்துட்டு வந்து தேய்ச்சு விடவா… இல்லை இஞ்சி டீ போட்டு எடுத்து வரவா… தலைவலி பறந்து போகும் என்று மூச்சுவிடாமல் பாசமாக கேட்க.
“வஞ்சி நான் சும்மா தான் தலையில கை வச்சிருந்தேன்… நீ நினைக்குறத போல தலைவலி இல்லமா… சும்மாதான்” என்று சோபாவில் கண்மூடி அமர்ந்துகொண்டாள்.
வஞ்சி ஓடிச்சென்று இஞ்சி தட்டி போட்டு டீயை எடுத்துக்கொண்டு வந்து “அக்கா இந்தாங்க டீ குடிங்க” என்று முல்லையிடம் நீட்ட.
“உன்னோட அன்பு தொல்லை தாங்கலமா” என்று குறுநகையுடன் வஞ்சி கொண்டு வந்த டீயை வாங்கிக்குடித்தாள்… முல்லைக்கும் இப்போது டீ குடித்தால் நன்றாக இருக்குமென தோணியது… வாங்கிக்குடித்து விட்டு எழும்ப.
“அக்கா நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசலாமா?” என்று புருவம் உயர்த்தி சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்தாள்.
மெல்லிய சிரிப்புடன் “என்கிட்ட என்ன பேசணும் வஞ்சி” என்று முல்லையும் உட்கார்ந்தாள்.
“அக்கா அன்னிக்கு டிவியில ஒருத்தர பார்த்து மயங்கினீங்க… எதனால… உங்க லைப்ல அண்ணா” என்று மெல்ல கேட்க.
“ம்ம்.. அவரு இப்ப இல்ல… மூணுவருசம் ஆச்சு” என்று சொல்லும் போதே முல்லைக்கு கண் கலங்கியது.
கண் கலங்கியதை கண்ட வஞ்சி மனம் சுணங்கி போய்… “அக்கா உங்க மனசு சங்கடப்படுத்திட்டேனா? நீங்க இப்ப எதுவும் சொல்ல வேணாம்” என்று அவளது கையை பற்றிக் கொள்ள…
“விடு வஞ்சி எல்லாம் என் விதி .. நான் இப்ப உயிரோட இருப்பதே என்னோட பொண்ணு இனியாவுக்காக தான்” என்று கண்ணீர் விட்டாள்.
“அக்கா நீங்க எதையுமே மனசுக்குள்ள போட்டு அடைச்சு அழுத்தி வைச்சீங்கன்னா அது கொஞ்ச நாளுல மனநோயா மாறிடும்… என்கிட்ட உங்க மனசுல இருக்கற ஆதங்கத்தை வாய்விட்டு சொன்னீங்கன்னா உங்க மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடும்” அதான் நான் உங்க லைப்ல நடந்தது பத்தி கேட்டேன் என்றாள் வஞ்சி.
விழிநீரை சுட்டு விரலால் துடைத்து கொண்ட முல்லை “உன்கிட்ட சொல்றதுக்கென்ன வஞ்சி… நான் என்னோட வர்மனை உயிருக்குயிரா எவ்ளோ நேசிச்சேன்.. தெரியுமா? அதை வார்த்தையால் சொல்ல முடியாது? முல்லையின் முகத்தில் வெட்கம் வந்து போனது.
“யாருக்கா முதல்ல லவ் சொன்னா?” என்று ஆர்வமாய் தாடையில் வைத்து கேட்டாள் வஞ்சி.
முல்லையும் தன் வாழ்வில் நிகழ்ந்த பசுமையான நாட்களை வஞ்சியிடம் விருப்பப்பட்டு கூற ஆரம்பித்தாள்.
மூன்று வருடத்திற்கு முன்னே கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி… ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ். ஆர்ட்ஸ் என்றாலே ஜாலிதான்… முல்லை துறுதுறுவென சுட்டியாய் சுற்றும் பெண்… அவளைச் சுற்றி பெண்கள் ஆறுபேர் எப்போதும் இருப்பர்… முல்லையின் பர்ஸை காலி செய்துவிட்டு தான் ஓய்வர் அவளது நண்பிகள்… கிளாஸ் கட் அடித்து விட்டு சினிமா, பார்க், பீச்… என்று ஜாலியாக சுற்றும் பெண் முல்லை… அவளது அப்பா எம்.எல்.ஏ என்பதால் அவளிம் யாரும் கேள்வி கேட்டு வம்பு செய்யமுடியாது.. முல்லை வானம்பாடி பறவை போல சுந்திரமாக இருந்தாள்.
ஒருமுறை ஒருவன் முல்லையிடம் லவ் லட்டர் கொடுக்க “யூ சீட் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கு லவ் வட்டர் கொடுப்ப” என்று லவ் லட்டர் கொடுத்த பையனை ஓங்கி அறைய அவளது கையை பிடித்துக்கொண்டது ஒரு இரும்புக் கை.
“யா. யாருடா நீ” என்று பக்கவாட்டில் திரும்பி பார்க்க… கடோத்கஜன் தம்பி போல நின்றிருந்தான் வர்மன்… அவன் உயரத்தை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு கண்ணைக்கட்டிக்கொண்டு வந்தது… ஆனால் வர்மனிடம் அதை வெளிக்காட்டாமல் “யாருடா பெரிய பருப்பா நீ.. என் கையை விடுடா நான் யாரோட பொண்ணு தெரியுமா … என்று வர்மனிடம் சவடாலாக பேச.
“அடிங்கொப்பன் மவளே கையை எடுடி நீ யாரா இருந்த எனக்கென்ன… என்று நாக்கை மடித்து இரண்டு கெட்ட வார்த்தைகள் பேச அவளை சுற்றி நின்ற நண்பிகள் அனைவரும் தெறித்து ஓடிவிட முல்லைக்கும் உதறல் எடுத்தது… அவளது கையை இழுத்துப் பிடித்து லேசாக முறுக்கி “ஒரு ஆண்பிள்ளை பையனை கைநீட்டி அடிப்பிடியா” அவளை மிரட்ட
“உங்க வீட்டு பொண்ணுக்கு லட்டர் கொடுத்தா நீ இப்படித்தான் ரவுடீசம் பண்ணுவியா” என்று அவள் கையை விடுவித்துக்கொள்ள பார்க்க.
அவன் விடாமல் கையை பிடித்து “ஏய் அவன் லட்டர் கொடுத்தா கிழிச்சி போட்டு எனக்கு விரும்பம் இல்லைனு சொல்லணும்… அதை விட்டுட்டு அவனை அடிப்பியோ” என்று தலையை சிலிப்பிக்கொண்டு கேட்டவன் பக்கத்தில் அடிவாங்கியிருந்தவனை முறைத்துப் பார்த்து “டேய் உனக்கு லவ் லட்டர் கொடுக்க தைரியம் இருந்தா மட்டும் கொடு.. இல்லனா மூடிகிட்டு இருக்கணும் முதல ஓடிப்போடா… தொடை நடுங்கிப் பயலே நாளை பின்னே என்கிட்ட உதவின்னு வந்து நின்னு தொலைக்காதே”என்று அவனை விரட்டி அடித்துவிட.
அவனோ விட்டால் போதும் சாமி என்று ஓடி விட்டான்.
9 .மோக முத்தாடு அசுரா
“இந்தாப் பொண்ணு இனி எந்த ஆம்பிளையும் கைநீட்டி அடிக்காத… எல்லாரும் இந்தா இப்ப ஓடிப்போனானே சொம்பன் இவன மாதிரி இருக்க மாட்டானுங்க… ஒண்ண கிடக்க ஒண்ணு பண்ணிப்புடுவானுங்க” என்று அவள் விழிகளை பார்க்க அவள் விழிகளில் போதை தெரிய “ச்சப்பா என்ன கண்ணுடா” என்று அவளது கையை விட… முல்லை யோசிக்காமல் வர்மன் கன்னத்தில் அறைவிட்டு கொஞ்ச தூரம் போய் “போடா டேய் பருப்பு” என்று பழிப்புக் காட்டி ஓடினாள்.
“மவளே தனியா என்கிட்ட மாட்டுவ அன்னிக்கு உனக்கு சங்குதாண்டி” என்று அவளை விரட்டிச் செல்ல முல்லை சிட்டாக பறந்துவிட்டாள்… கன்னத்தை தேய்த்தவன் என்னடாது நானே ஒரு ரவுடி… என்னையவே அடிச்சுபுட்டா இவ… என்று கன்னம் தேய்த்து நல்ல வேளை யாரும் பார்க்கல என்று பெருமைப் பட்டு திரும்ப.
சிம்மன், மார்புக்கு குறுக்கே கை கட்டி வர்மனை முறைத்து நின்றிருந்தான்… “அ. அது சும்மாடா அந்தப் புள்ள எனக்கு தெரிஞ்ச பொண்ணு சும்மா பேசிட்டியிருந்தேன்” என்று தாடையை சொறிந்து அசடு வழிந்தான்.
“நம்பிட்டேன் நண்பா..நீயெல்லாம் சிம்மனோட நண்பனு வெளியில சொல்லிடாத எனக்குத்தான் கேவலம்” என்று நக்கலாக சிரித்து வர்மனின் தோளில் ஒரு அடிப்போட்டு தலையில் அடித்து கொண்டான்.
“என்ன நண்பா பொசுக்குணு இப்படி சொல்லிபுட்டே” என அவனை இறுக்கி கட்டிப்பிடிக்க…
“டேய் உனக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டிவைக்கணும்… சும்மா சும்மா என்னை கட்டிபிடிச்சிக்கிட்டே இருக்க… ச்சே” தள்ளி நில்லுடா” என்று அவனை பிரித்து நிறுத்தி “போயும் போயும் ஒரு பொண்ணுகிட்ட அறை வாங்குற” …என்று அவனிடம் போலியாக கோவித்துக்கொண்டான் சிம்மன்.
“டேய் நாளைக்கு பாருடா அவள என்ன பண்ணுறேன்னு… என்னையவே அறைஞ்சுபுட்டாள… நாளைக்கு அவள கண்டம் பண்ணுறேன்” என்று நம்பியார் போல கையை தேய்த்தான்.
“டேய் பொம்பள புள்ள விவகாரம் எதாவது தப்பு பண்ணிராத… என்னை போல இலைமறை காய் மறையா பண்ணிக்க… அந்தப் புள்ள எம். எல். ஏ சந்தானத்தோட பொண்ணு னு கேள்விபட்டேன்… கொஞ்சம் பார்த்து பண்ணு ராசா”என்று அவனிடம் எச்சரிக்கை செய்தான்.
“டேய் நண்பா நீ இருக்கும் போது எனக்கு என்னடா கவலை… எனக்கு ஆபத்துனா நீ வரமாட்டியா என்ன?” சிம்மன் தோளில் சாய்ந்தான்.
“கண்டிப்பா, என் உசிர கொடுத்து உன்னை காப்பாத்துவேன் நண்பா” என்று வர்மன் தோளில் இடிக்க… ஆனால் காப்பாத்த வேண்டிய நேரத்தில் சிம்மன் இல்லாது போனது என்னவோ காலத்தின் கோலம் தான்.
“டேய் வாடா இன்னிக்கு நைட் ஒரு வேட்டை இருக்கு அதற்கான வேலையை பார்ப்போம்”என்று வர்மனை இழுத்துக்கொண்டு வந்தான்.
வர்மன் சரக்கடித்துவிட்டு மட்டையாகிப் போக… அவனை எழுப்பி எழுப்பி பார்த்த சிம்மன் அவனுடன் இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு அன்றிரவு வேட்டைக்கு சிம்மன் மட்டும் தான் கிளம்பிச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் முல்லை படிக்கும் காலேஜ் முன்பு உள்ள டீக்கடையில் தம் அடித்துக்கொண்டு முல்லை வருகிறாளா… என்று அவளுக்காக காத்திருந்தான் வர்மன்… அவன் கூட வந்தவன் “அண்ணே இப்படி காலேஜ் வாசல்ல நிக்கறது நமக்குத் தேவையா… சிம்மன் அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டுவாரு” பம்மிக்கொண்டு கூற.
“அவன் கிட்ட சொன்னா நான் உன்ன பொலி போடுவேன்… அதனால இதை பத்தி சிம்மன் கிட்ட வாயை திறக்காத வாயை கிளிச்சிடுவேன் பார்த்துக்க … என்று பேசிக்கொண்டிருக்க.. காலேஜ் முன்பு ஆடிகார் நிற்க அதிலிருந்து முல்லை வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல அந்த காரிலிருந்து இறங்கினாள்.
முல்லையை பார்த்ததும் சிகரெட்டை கீழே போட்டு காலில் மிதித்துவிட்டு பாக்கெட்டில் இருந்த சுவீங்கத்தை எடுத்து வாயில் போட்டு கொண்டு மென்றபடி அவள் பக்கம் ஓடினான்… வர்மன் வருவதை திரும்பி பார்த்தவள் காலேஜ் கேட்டுக்குள் வேகமாக ஓடிவிட்டாள்.
“ஏய் நீ ஓடினா என்னால காலெஜ்க்குள்ள வரமுடியாத” என்று பல்லைக்கடித்து அங்கே நின்றிருந்த வாட்ச்மேனிடன் “நான் உள்ள போகணும்”என்று சட்டைக்காலரை தூக்கி விட்டு கேட்க.
“சார் இது பொம்பபுள்ளைங்க படிக்கிற காலேஜ்… தெரியாத ஆளுங்கள உள்ள விடக்கூடாது” என்று வர்மன் நின்ற கோலம் பார்த்து பயந்து பவ்யமாய் பேச.
“அப்படியா பெரிசு. இப்ப ஓடிப்போச்சுள்ள உள்ள அதோட மாமன் நானு… அவகிட்ட கொஞ்சம் பேசணும்.. இப்ப உள்ளார விடுறீங்களா?” சுவிங்கத்தை மொட்லி விட்டு கேட்க.
“தம்பி என்னோட வேலை போய்டும்” அவர் பயந்து போய் நின்றார்.
“பெரிசு உன் வேலை போகாது நான் பார்த்துக்குறேன்”என்று வாட்ச்மேனின் சட்டை பாக்கெட்டில் ஐநூறு ரூபாய் தாளை வைத்துவிட்டு உள்ளே சென்றான் வர்மன்.
முல்லையோ அங்கே மரத்தடியில் நின்று வர்மன் வருகிறானா என்று எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள்… முதல் நாளே அவனது தெனாவெட்டையும், திமிரையும் பார்த்து பயந்துதான் போனாள்… நேற்று இரவெல்லாம் அவன் பிடித்து வைத்திருந்த கை வலியெடுத்தது அவளுக்குத்தானே தெரியும்…இப்போது அவன் காலேஜ்குள் வந்ததும் அவளுக்குள் கிலி பரவியது.
அவளோ, அவனை கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டிருக்க… அவளது சடையை பின்னிருந்து இழுத்து அவளை தன் நெஞ்சில் சாய்ந்து நிறுத்தினான்.
முல்லைக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது… அவனது பாறைபோன்ற நெஞ்சில் மோதியது வேறு தலை கின்னென்று வலித்தது அவளுக்கு.
“ஸ்ஸ்” என்று அவள் வலியில் மூக்கை சுருக்க… அவள் மூக்கில் ஒரு முத்தம் பதிக்க தோன்றியது வர்மனுக்கு… நெஞ்சோடு சாய்ந்திருந்தவளை இருகையையும் எடுத்து அவள் இடுப்போடு சேர்த்து அணைத்துப்பிடிக்க… அவளுக்கு உடலோ தூக்கி வாரிப்போட்டது.
“எ…என்ன பண்றீங்க… என்னை விடுங்க” என்று வாயெடுக்க பேச வெறும் காத்து மட்டும்தான் வந்தது.
“நேத்து சும்மா வாய்விட்ட இப்ப பேசுடி பார்க்கலாம் மாமன்கிட்ட… என்று அவளை அணைத்தவாறே ஒரு கையால் அவளது முகத்தை நிமிர்த்தி அவளது முகத்தோடு தன் முகம் கொண்டு போக.
என்னது மாமனா என்று கண்ணை மூடி மூடி திறந்தவள் “சா…சாரி நான் நேத்து உங்களை அடிச்சது தப்புதான்… என்று அவளது முகத்தை வேறு பக்கம் திருப்பினாள்.
“சாரி கேட்டு முகத்தை திரும்பினா நான் உன்னை விட்ரனுமா என்ன?” அவளை பயமுறுத்த உதடு குவித்து அவள் இதழில் முத்தமிடுவது போல போக…
“சார்… சார்… என்னை விடுங்களேன் நேத்து தெரியாம பண்ணிட்டேன்… ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கண்ணைச் சுருக்கி முகத்தை பாவமாக வைத்துக் கேட்டாள்… அவளது தளிர் மேனி இன்னும் அவனது அணைப்புக்குள் நடுங்கிக்கொண்டுதான் இருந்தது.
வர்மனுக்கு அவன் செய்வது தவறு என்று தான் தெரிந்தது… ஆனால் அவன் அவளை மனைவியாக்க முடிவு செய்து வந்திருக்கிறான் அல்லவா… “இப்போ நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லபோறேன்” என்றவன்
ஆமா உன் பேரு என்ன? அவளை தன்னுடன் இன்னும் இறுக்கினான்.
அவளின் மென் அங்கம் அவன் மார்பில் அழுந்த
மூச்சு விடமுடியாமல் மெல்லிய குரலில் “முல்லைக்கொடி” என்றாள் உதடு நடுங்க
அவள் கண்களை காதலாக பார்த்து முல்லை என் பேரு இந்திரவர்மன் என்றவன் சற்றும் அவள் எதிர்பாராமல் ஐ. லவ் யூ.”. என ஒற்றை கண்ணை அடித்து “நேத்திலிருந்து இந்த கண்ணு ரெண்டும் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது” என்று அவளது இமைகளில் முத்தம் வைத்தான்.
“இன்னிக்கே லவ் அக்செப்ட் பண்ணிக்கனுமா?” என்று அவள் உதடு துடிக்க கேட்க.
“இல்ல சாய்ந்தரம் வரைக்கும் டைம் தரேன்… அதுக்குமேல உனக்கு டைம் கிடையாது”என்று அவள் இதழில் குனிந்து முத்தமிடப் போக… அவன் எங்கே முத்தம் கொடுத்துவிடுவானோ… என்று இதழை இறுக மூடிக்கொள்ள… அவள் செய்கையை பார்த்து நகைத்துக்கொண்டவன்… தலைகோதி “லவ் கன்பார்ம் பண்ணின பிறகு லிப்லாக் பண்ணிக்குறேன்”என்று அவளை தன்னிடமிருந்து பிரித்தான்.
வர்மனிடமிருந்து பிரிந்ததுதான் அந்நொடி நின்று கூட பார்க்கவில்லை அவள் புள்ளி மான் போல துள்ளிக்குதித்து ஓடிவிட்டாள்.
வர்மனோ அன்று மாலை இரண்டு முறை குளித்துவிட்டு… ஹேங்கரில் இருந்த சட்டையில் இந்த கலர், அந்த கலர் என பார்த்து பார்த்து கண்ணாடி முன்பு நின்று க்ரே கலர் சட்டைப் போட்டு சிம்மன் வாங்கி வைத்த பர்ப்யூமை சட்டையில் மேலும் கீழும் சர் சர்ரெண்டு அடித்துக்கொண்டு தலையை ஜெல் வைத்து அடக்கி நான்கு முறை கண்ணாடி முன்னே நின்று பார்த்து விட்டு முல்லை படிக்கும் காலேஜ் முன்பு வந்து நின்றான்.
வர்மன் முல்லைக்காக கால் கடுக்க காத்திருந்தான்… ஆனால், வர்மன் செய்த வம்பில் அவளுக்கு குளிர்காய்ச்சல் வந்து விட்டது… முல்லை அன்று மதியமே வீட்டுக்கு கிளம்பிபோய்விட்டாள்.
என்னை ஏமாத்தியாடி என்று கார் கண்ணாடியில் குத்திக்கொண்டு நாளைக்கு எப்படியும் காலேஜ் வருவதான நல்ல நச்சுன்னு இங்க்லீஸ் படத்துல கிஸ் பண்ணுறாங்கள அது போல உன்னை இதழ கடிச்சு திங்கப்போறேன்டி.. நேத்து பாவம் பார்த்து விட்டது தப்பா போச்சு என்று கோபத்துடன் கிளம்பிச் சென்றான்.. ஆனால் அவன் இரண்டு நாள் வந்து காத்திருந்து பார்த்ததுதான் மிச்சம்.. வர்மனுக்கு கோபம் மண்டைக்குள் ஏறிவிட்டது.. சிம்மன் வெளியூர் சென்றிருந்தான்.. அவன் இருந்திருந்தால் அவனிடம் சொல்லி ஏதாவது வகையில் முல்லையை பார்க்க செய்திருப்பான்.. இப்போது என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.. எப்படியாவது முல்லையை பார்க்கணும் அவளை கசக்கி பிழியணும்னு அவன் மனதுக்கு கடிவாளம் போட முடியாது தவித்துப்போய் நின்றான்.
முல்லை இரண்டு நாள் காலேஜ்க்கு வரவேயில்லை… அவளது நண்பிகள் போன் செய்தால் கூட போனை கட்செய்துவிட்டாள்… அவ்வளவு போல்டாக இருப்பவள் இன்று அவன் பிடித்த உடும்பு பிடியில் பயந்து போய் ஜுரம் வந்து போர்த்தி படுத்திருக்கிறாள்.
“டேய் இங்கவாங்கடா” என சத்தம் போட்ட வர்மன் “நான் எம்.எல்.ஏ வீட்டுக்குள்ள போகணும்.. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சீறிப்பேச.
“அண்ணே சிம்மன் அண்ணா இல்ல” என்று ஒருவன் வாய் மேல் கைவைத்து நிற்க.
“அப்படியே எத்து விட்டேன் ஒடிபோய் கூவம் ஆத்துல விழுந்துருவே பார்த்துக்க.. சொன்னத செய்டா அறிவு கெட்டவனே” என்று கெட்ட வார்த்தையை அவனை சாட.
“சரிண்ணே நான் ஏற்பாடு பண்ணுறேன் எங்கே இன்னும் நின்றால் அடிவிழும்” என்று ஓடிவிட்டான்.
முல்லைக்கு இன்று உடம்பு சரியாகியிருந்தது.. முல்லைக்கு அம்மா கிடையாது.. அவள் வீட்டில் வேலைசெய்யும் பட்டம்மாதான் அவளுக்கு உதவியாக இருப்பார்.. முல்லையை சிறுவயதிலிருந்து வளர்த்ததும் பட்டம்மாதான்.. பட்டம்மாவின் கணவர் இறந்துவிட அவரை முல்லைக்கு துணையாக கூட்டிவந்தார் சந்தானம்.. இப்போது கூட பட்டம்மாதான் அவள் பக்கத்தில் துணைக்கு படுத்திருக்கிறார்.
“கண்ணு இப்ப காய்ச்சல் குறைஞ்சிடுச்சா” என்று அவள் நெற்றியை தொட்டு பார்கக.. நெற்றி சில்லென்று இருக்க..
“ம்ம் இப்ப பரவால்ல தூங்கு பாப்பா.. எதாவது வேணும்னா என்னை எழுப்பிவிடு கண்ணு” என்று கூறிவிட்டு சிறிது நேரத்தில் பட்டம்மா தூங்கிவிட்டார்.
முல்லைக்கு இன்னும் பயம் இருந்துகொண்டேயிருந்தது.. அப்போதுதான் கண்ணை மூடியிருப்பாள்.. அவள் அறையில் அன்று ஏசி வேலைசெய்யாமல் இருக்க.. ஜன்னலை மூடாமல் காத்துவரட்டும் என்று விட்டிருந்தனர்.. அவர்கள் வீட்டில் பாதுகாப்பிற்குத்தான் ஆட்கள் வீட்டை சுற்றி காவலுக்கு இருக்கின்றனர் என்று கண்ணயர்ந்து விட்டாள் முல்லை.
சிம்மனுக்கு வர்மன் சந்தானம் வீட்டுக்கு போகும் விசயத்தை அவனது ஆட்கள் கூறிவிட அடித்துபிடித்து ஓடிவந்தான்..
வர்மன் டிப்டாப்பாக புறப்பட்டு வெளியே வர சிம்மன் அவன் முன்பு வந்து நின்றான்.
“மணி பத்தாச்சு இந்த நேரத்துல எங்கடா கிளம்பிட்டே” என்று வர்மனை முறைத்து பார்த்தான் சிம்மன்.
“எட்டப்பன்ஸ் போட்டுக்கொடுத்துட்டாங்க போல.. ப்ளடி பக்கர்ஸ் தனியா மாட்டுக்கடா உங்களை தண்ணிகாட்டுறேன்” என்று மனதில் அடியாட்களை வறுத்து எடுத்து.
“ஹிஹி நண்பா நான் காலேஜ் பார்த்தேன்ல நீ கூட சொன்னியே எம்.எல்.ஏ பொண்ணுனு அந்த பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கு அவ என் பொண்டாட்டி வரணும்னு ஆசைப்படுறேன்.. நீதான் என் காதலுக்கு உதவி செய்யணும் என்று சிம்மனை அணைத்துக்கொண்டு.. நான் இப்பவே அவள பார்க்கணும் வா என்கூட” என்று அவன் கன்னத்தில் முத்தம்கொடுத்தான்.
“டேய் உனக்கு காதல் கிறுக்கு புடிச்சிருக்கு போல.. நாளைக்கு முனியப்ப சாமி கோவிலுக்கு கூட்டிபோய் மந்திரிக்கணும்.. என்னடா கருமம்பிடிச்ச காதல் காதல் அலையுறீங்க.. எனக்கு நண்பனா வந்து வாய்ச்ச பாரு செஞ்சு தொலைக்குறேன் வா போலாம்” என்று வர்மனை கூட்டிச்சென்றான் சிம்மன்.
எம்.ஏ.எல் வீட்டு காம்பவுண்ட் பின் சுவற்றில் சிம்மன் குனிந்து நிற்க வர்மன் முல்லையை பார்க்க போகும் குஷியில் சிம்மன் மீது நச்சென்று காலை வைத்து ஏறிச்சென்றான்.
ம்ம் காதல் வந்தா நண்பன் எல்லாம் கண்ணுக்கு தெரியாது.. எப்படி நங்குன்னு முதுகுல ஏறிப்போறான் பாரு என்று புலம்பிக்கொண்டு சிகரெட்டை எடுத்து பத்த வைத்து ரோட்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.
வர்மன் பால்கனி ஜன்னலை கழட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
யாரோ உள்ளே நுழைவது போல் முல்லையின் காதுக்கு கேட்க.
மெல்ல எழுந்து பார்க்க உருவம் தெரிய அம்.. முல்லை கத்த ஆரம்பிக்கும் முன் அவள் வாயை கைவைத்து அடைத்து அப்படியே தூக்கிக்கொண்டு பால்கனிக்கு வந்து நிற்க வைத்து அவள் வாயிலிருந்து கையை எடுத்து “ஏன்டி இரண்டு நாளா காலேஜ் வரல.. அன்னிக்கு நான் சாய்ந்தரம் உன்ன பார்க்க வரேனு சொன்னேன்ல.. நீ வருவேனே நான் பைத்தியகாரன் போல நின்னு காத்துகிடக்கேன்.. நீ வரல” என்று அவள் தாடையை இறுக்கிப்பிடித்து இப்படியே ஒரு லிப்லாக் பண்ணட்டுமா.. என்உதடு காய்ஞ்சு போய் கிடக்கு.. இந்த ரைட்டர் ஒரே அழுகாச்சி சீனா வைக்குது.. நான் உனக்கு முத்தம் கொடுத்து முத்த எண்ணிக்கைய துவக்கி வைக்கணும்” என்று இரு கைகளையும் இராஜாளி போல விரித்து அவளை கோழிப்பிடிப்பது போல இறுக்கி அணைத்து கொண்டு அவளது முகத்தை அழுந்தப்பிடித்து “இப்பவும் சொல்றேன் ஐ.லவ்.யு” என்று அவள் இதழில் முத்தமிடத்துவங்கினான் வர்மன்.
Купить наклейки со смолой для оформления упаковки и продукции
объемные наклейки на телефон на заказ [url=http://xn—–7kcbbyacb2akkclkqcl8a3dxf3b0a4b.xn--p1ai/]http://xn—–7kcbbyacb2akkclkqcl8a3dxf3b0a4b.xn--p1ai/[/url] .
Кредит на карту без скрытых комиссий: надёжные банки для вас
онлайн кредиты в Кыргызской Республике [url=https://www.kreditkg.ru]https://www.kreditkg.ru[/url] .
Купить камеру заднего вида для грузового автомобиля с доставкой
камера заднего вида для грузовиков купить [url=http://kamera-dlya-gruzovika.ru/]http://kamera-dlya-gruzovika.ru/[/url] .
Great post. I was checking constantly this weblog and I am inspired! Very helpful information specifically the final part 🙂 I handle such info a lot. I was looking for this particular information for a long time. Thank you and good luck.