ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

  1. மோக முத்தாடு அசுரா

இனியாவை தூங்க வைத்திருந்த சிம்மன் வஞ்சியின் வரவிற்காக காத்திருந்தான்.. மொட்டை மாடியில் நின்று பௌர்ணமி நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.. வந்த வேலை முடிகிறது அல்லவா? சிம்மனை பற்றிய இரகசியங்களை ஆராய்ந்து எடுத்துவிட்டாளே? காதல் எனும் நாடகத்தை நடத்திய பெண்ணவள்.. ஆனால் காதல் நாடகத்தில் அவள் உண்மையாக நடித்து விட்டாளே.. எந்த பெண்ணும் இழக்ககூடாத கற்பை சிம்மனிடம் இழந்துவிட்டாளோ?  தப்பு செய்துவிட்டோம்? என்று அவள் மனம் உறுத்திக்கொண்டிருந்தது.. வஞ்சிகொடியின் மனதில் சிம்மன் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான் என்பதை பெண்ணவள் மறந்துவிட்டாள் பாவம்.. சிம்மனிடம் இத்தனை நாள் பழகியதில் அவனின் குணத்தை அறிந்து கொள்ளாமல் போய்விட்டாள் வஞ்சிக்கொடி.. அவள் எடுக்க போகும் விபரீத முடிவால் அவளது வாழ்க்கையை கேள்விகுறியாக இருக்கும் என்பது அறியாமல் போனாள் வஞ்சிக்கொடி.

வஞ்சிக்காக காத்திருந்த சிம்மன் அவள் வரவில்லையே.. என்று எண்ணியவன் இனியாவின் அருகே தலையணையை எடுத்து வைத்து அணைப்போட்டு விட்டு வஞ்சியை தேடி சமையல்கட்டுக்கு போக அங்கே இல்லையென்றதும் தோட்டத்துப்பக்கம் போய் பார்க்க.. அங்கேயும் இல்லை என்றதும் ஒருவேளை மொட்டை மாடியில் இருப்பாள் என்று அங்கு போய்பார்க்க அங்கே அவள் நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. என்னாச்சு இவளுக்கு சில சமயம் இப்படித்தான் பித்து பிடிச்சவ போல இருக்காளென.. “வஞ்சி” என்று அவள் தோளைத் தொட சட்டென்று கண்ணீரைத்துடைத்து விட்டு திரும்பியவள் இதழில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு “மாமாஆஆ” என்று சிம்மனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.. “என்னடி மாமானு மார்க்கமா கூப்பிடுற” என்று அவள் கன்னத்தில் மீசை  உரசிக் கேட்க.

“ம்ம்” எதுக்கு.. எல்லாம் நீங்க என்னை எதுக்கு கொஞ்ச நேரம் முன்னே வரச்சொன்னீங்களோ.. அதுக்குத்தான்” என்று அவன் மூக்கோடு மூக்கை உரசி காதலாக கசிந்து உருகினாள்.

 

“ம்ம்” எல்லாத்துக்கும் ரெடியா இருக்க.. அப்படித்தானே” என்று அவள் முகத்தை கையிலேந்தி அவள் இதழை கவ்விக்கொண்டான்.. பெண்ணவள் ஆணவன் கொடுக்கும் முத்தத்தையும் விட ஆசையுடன் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.. அவளது முத்தத்தின் அளவை கண்மூடி ரசித்தான் நரசிம்மவர்மன்.. அவனது கையை எடுத்து அவளது இடுப்பில் வைக்க.. அவனது விரல்கள் சும்மா இருக்குமா.. அவளது நாபியில் ரங்கோலி கோலம் போட ஆரம்பிக்க.. அவளோ வீட்டுக்குள்ள போகலாம் என்றிட வஞ்சியை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றவன் கட்டிலில் படுக்க வைத்தான்..

வர்மனின் அறைக்குள் இருப்பதை போலவே தன் அறையிலும் குட்டி கட்டில் போட்டிருந்தான்… குழந்தை எந்த அறையிலும் தூங்கட்டுமென்று.. இனியாவை தூக்கி பக்கத்து மெத்தையில் படுக்க வைத்து இனியாவின் கன்னத்தில் மென் முத்தம் பதித்து சித்தாவோட எண்ணம் உனக்கு தெரியும்ல தங்கம்.. என்றவன் கட்டிலுக்கு கொசுவலை போட்டுவிட்டான்.. இடையில் ஸ்கிரினை போட்டவன்.. தனது சட்டையை கழட்டி வெற்று மார்பில் கட்டிலில் படுக்க.. சிம்மனின் எய்ட்பேக் கண்டு அகல கண்விரித்தாள் பெண்ணவள்.. என்னடி முட்டைகண்ணை இன்னும்  விரிக்குற.. என்று அவளை தூக்கி தன் கேடய மார்பில் படுக்க வைத்துக்கொள்ள.. அவளது கைகள் சிம்மனின் எய்ட் பேக்கை தடவ அவளது கைளை பிடித்து முத்தம் வைத்து அவளை ஆட்கொள்ள துடித்தான்.. இம்முறை நான் தான் எல்லாம் பண்ணுவேன் என்றவள் இன்று சிம்மனை ஆள ஆரம்பித்தாள்.. ம்ம்” இதுவும் நல்லாயிருக்குடி என்றவன் அவளிடம் காதில் காதல் பேச.. ச்சீ என்றவள் அவன் சொன்னதை எல்லாம் செய்தாள்.. சொல்லாதையும் செய்தாள் பெண்ணவள்..

ஒருகட்டத்தில் அவளை தன் வசம் கொண்டு வந்து அவளுக்குள் புகுந்து பெண் மானை வேட்டை ஆடினான்  சிம்மன்.. அவளிடம் சேயாய் மாறிப்போனான்.. அவளும் தாயாய் மாறிப் போனாள்.. அவன் விடும் அனல் மூச்சு காற்றில் பெண்ணவளின் பொன் தேகம் உருகியது.. இருவரும் கலவியில் பாடத்தில் பி.எச்டி முடித்து பட்டம் பெற்றனர்.. ஆனால் வாழ்க்கை பாடத்தில் பெயிலாகி நிற்பர் என்று இருவருக்குமே தெரியவில்லை.. விடிய விடிய அவளது சத்தம் வராத சிணுங்கல்.. அவனும் மெதுவாக மூச்சுவிட்டு கொண்டே அவளை விடிய விடிய ஆண்டுமுடித்தான்.. இன்று இருவரும் ஒரு நொடிகூட பிரியவில்லை.. பிண்ணிப்பிணைந்து கிடந்தனர்.. வெள்ளிமுளைக்கும் நேரம் தான் பிரிந்தனர்.. “என்னடி இன்னிக்கு என்னை விட்டுப் பிரியவே மாட்டிங்கிற” என்று அவன் இதழில் முத்தமிட்டு.. அடுத்த வாரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்டி.. இப்பவே நாம சேர்ந்தது உன் வைத்துல என் பையன் வந்திருப்பானோனு எனக்கு சந்தேகம் வருது என்று அவளிடம் கூறியவன் .. உன்கிட்ட நான் நிறைய பேசணும்டி.. அதுக்கான நேரம் இதுவல்ல.. என்றவன் அவளை மீண்டும் ஆழ துவங்க.. அவளை இறுக்கி கட்டி அணைக்க

வஞ்சிக்கோ சிம்மனை பிரிய வேண்டுமே என்று வருத்தம் அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது.. அவள் கண்ணீர் சிம்மனின் கையில் பட “என்னடி அழுகிறயா? ஏதாச்சும் வலிக்குதா.. இன்னிக்கு ரொம்ப படுத்திட்டேன்ல.. என பதட்டப்பட்டவன் எழுந்து சென்று ஆயிட்மெண்ட் எடுத்து அவளது காயத்திற்கு மருந்து போட்டுவிட்டான்..

 வஞ்சிக்கொடியோ சிம்மனை அணைத்துக்கொண்டு அவன் இதழில் ஆவேசமாய் முத்தம் கொடுக்க துவங்கினாள்.. இருவரும் இன்னோரு கூடலை முடித்துக்கொண்டே விலகினர்.. கூடல் முடித்து சிம்மன் உறங்கிவிட பெண்ணவளுக்கு தூக்கம் தொலைந்துதான் போனது.. பக்கத்தில் படுத்திருந்த சிம்மனை விடாது பார்த்திருந்தாள்.. சிம்மன் பேச நினைத்ததை அவன் அப்போதே பேசியிருந்தால் வஞ்சி சிம்மனை விட்டு பிரிந்து இருக்க மாட்டாள்.. விதியென்னும் மாய வலைக்குள் சிக்கிக்கொள்வது தெரியாமல் இருவரும் மஞ்சத்தில் கொஞ்சி கிடந்தனர்.

அடுத்தநாள் காலையில் வர்மனின் அணைப்பிலிருந்து எழுந்த முல்லை கணவன் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து குளிக்கச் சென்றாள்.. குளித்துவிட்டு பூஜையறைக்குச் சென்று விளக்கேற்றி பூஜை செய்து குங்குமம் எடுத்து நெற்றி வகுட்டில் வைத்தவள் மறக்காமல் தாலியிலும் குங்குமத்தை வைத்தாள்.. வஞ்சிக்கொடி வழக்கம் போல எழுந்து குளித்து வாசலில் கோலம் போட்டு காலையில் சமையல் வேலையை ஆரம்பித்திருந்தாள்.. சமையல் கட்டுக்கு வந்த முல்லையும் அவளுடன் சேர்ந்து சமைத்தாள்.. எப்போதும் லொட லொடவென்று பேசிக்கொண்டிருக்கும் வஞ்சி இன்று அமைதியாய் இருந்தது முல்லைக்கு ஆச்சரியமாய் இருந்தது.. “வஞ்சி” என்று அவளிடம் பேசப் போக.. அதற்குள் இனியா எழுந்து வந்து முல்லையை கட்டிக்கொண்டு “ம்மா எனக்கு பூஸ்ட் வேண்டும்” என்று கேட்க.

“பல்தேய்ச்சிட்டு தான் எல்லாம் வா” என இனியாவை தூக்கிக்கொண்டு அறைக்குள் போக.. வர்மன் குளித்துவிட்டு அஜயை குளிக்க வைத்துக்கொண்டிருந்தான்.. குளியலறைக்குள் சென்ற இனியா அஜயை குளிக்க வைப்பதை பார்த்து “அப்பாஆஆ.. எனக்கும் குளிச்சிவிடுங்க” என்று தான் போட்டிருந்த ட்ரசை கழட்டிவிட்டு ஜட்டியுடன் நின்றது இனியா.

“வாடி சக்கரே! உன்னையும் குளிக்க வைக்குறேன்” என்று இனியாவையும் குளிக்க வைத்தான்.. அஜக்கு யூனிபார்ம் போட்டுவிட்டு புறப்படவைத்தாள் முல்லை.. இனியாவும் குளித்துவர.. இனியாவையும் புறப்பட வைத்து இருவரையும் தூக்கி வந்தனர் வர்மனும். முல்லையும்.

குளித்து வந்த சிம்மன் வர்மன் குடும்பமாக வந்து நின்றதை கண்டு ஆனந்தமாக பார்த்து நின்றான்.. அதை குரூரத்துடன் பார்த்து நின்றாள் வஞ்சிக்கொடி..

அனைவரும் சாப்பிட்டு முடிக்க வர்மன் ஸ்டேசனுக்கு கிளம்பினான்.. சிம்மனுக்கு போன் வர.. “சொல்லுங்க பாஸ்” என்றான்..

“இன்னிக்கு கப்பலில் சரக்கு வருது.. நீதான் போலீஸுக்கு தெரியாம கொண்டு வரணும்” என்று தங்கதுரை  கூற.. தங்கதுரை முகேஷின் நண்பன்.

“ஓ.கே பாஸ்” என்று போனை வைத்தவன்

மறுநிமிடமே தனது ஆட்களுக்கு போன் செய்து “இன்னிக்கு சம்பவம் இருக்கு சீக்கிரம் வாங்கடா” என்றவன் லொகேஷனை சேர் செய்தான்.

சிம்மன் போன் பேசியதை அவனுக்கு ஒட்டுக்கேட்டுக்கொண்டவள் வீடியோவாக எடுத்திருந்தாள்  வஞ்சிக்கொடி.

சிம்மன் சென்றதும் அந்த நிமிடம் அவளுக்கு போன் வர.. போனில் வந்த நெம்பரை பார்த்தவள் ஆன் செய்து “கண்ணா எப்படியிருக்க”

“அக்கா என்ன பார்க்க எப்ப வருவ.. உன்னை பார்க்கணும் போலயிருக்கு” என்று 7 வயது சிறுவன் சித்தார்த் அழும் குரலில் பேச

 

“அக்கா சீக்கிரம் உன்ன பார்க்க வரேன்டா.. அடுத்த முறை உன்னை பார்க்க வரும்போது என்னோட கூட்டிட்டு வந்துடுவேன் அழக்கூடாதுடா செல்லம்” என்று அழும் சித்தார்த்துக்கு ஆறுதல் கூறி போனை வைத்தாள் வஞ்சிக்கொடி.

டீவி பார்த்துக்கொண்டிருந்த முல்லையிடம் “அக்கா நான் ஊருக்கு போயிட்டு வந்துடறேன்” என்றவள் முல்லையை அணைத்துக்கொண்டாள்.

“ஊருக்குத்தான போற.. சீக்கிரம் வந்துடு.. சிம்மன் அண்ணன் வந்து கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணீறீங்க தான.. எல்லாம் எனக்கும் தெரியும்டி கள்ளி” என்று அவள் கன்னத்தில் இடிக்க..

வஞ்சிக்கொடி வெட்கப்படுவதை போல தலைகுனிந்து நின்றிருந்தாள்.. முல்லையிடம் சிம்மனைப்பற்றி கேட்டிருந்தாள் கூட சொல்லியிருப்பாள்.. ஆனால் விதி யாரை விட்டது.. சிம்மனுக்கும் வஞ்சிக்கும் இடையில் விதி விளையாட ஆரம்பித்தது.

“நான் போயிட்டு வரேன்க்கா” என்று சொல்லிச்சென்றவள் சென்றது தன் வீட்டுக்குத்தான்.. வீட்டுக்குள் சென்றதும் அறையில் மாட்டியிருந்த ஐஜி ஆறுமுகம் போட்டோ முன் நின்றவள் சித்தப்பா இன்னிக்கு சிம்மனின்  கதையை முடிக்க போறேன்” என்றவளின் கண்ணீர் நிற்கவேயில்லை.. கண்ணீரை துடைத்து கொண்டவள் டேபிள் முன் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை போட்டவள் சென்றது போலீஸ் ஸ்டேசனுக்குத்தான்.. அவள் சென்றது வர்மன் இருக்கும் ஸ்டேசனுக்குத்தான்.. யூனிபார்முடன் சென்று வர்மன் முன்னே நிற்க.. “வாங்க இன்ஸ்பெக்டர் வஞ்சிக்கொடி உங்க லீவு நேத்தோட முடிச்சது.. இன்னிக்கு நீங்க வரலைனா நானே போன் பண்ணியிருப்பேன்.. என்றவன் எதுக்கு என் நண்பனை ஏமாத்தின.. உனக்கு அவனபத்தி என்ன தெரியும் வஞ்சிக்கொடி” என்று ஆத்திரத்துடன் கேட்க.

“சார் சிம்மன் பத்தி இரகசியம் கொண்டு வந்திருக்கேன்.. சிம்மன் இன்னிக்கு ஒரு கடத்தல் பண்ணப்போறார்.. சிம்மன் கடத்தல் பத்தி பேசும் போது ரெக்கார்ட் பண்ணியது “என்று சிம்மன் பேசும் போது தனது போனில் விடியோ எடுத்ததை காண்பிக்க..

ஹா ஹா என்று நக்கல் சிரிப்புடன் “அப்படியா சிம்மன் மேல ஆக்சன் எடுக்கணுமா.. என்னால முடியாது” என்று ஜம்பமாக டேபிளில் உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டிருந்தான்.

“சார் தப்பு பண்ணினவங்க தண்டனை அனுபவிக்கணும்” என்று வஞ்சிக்கொடி ஆத்திரத்துடன் கத்த

“அப்படியா சரி வாங்க போலாம்” என்று கடத்தல் நடக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்றான்.. அங்கே சிம்மன் எல்லாம் முடித்து விட்டு நின்றிருந்தான்..

சிம்மன் வர்மனை பார்த்தவுடன் சக்ஸஸ் என்று கட்டைவிரலை தூக்கிக் காட்ட.. பின்னால் போலீஸ் உடையுடன் நின்றிருந்த வஞ்சிக்கொடியை சிம்மன் கவனிக்கவில்லை.. வஞ்சிக்கொடி கடத்தல் பற்றிய விபரம் சொல்லும் முன்னே சிம்மன் வர்மனுக்கு போன் போட்டு வரச்சொல்லிவிட்டான்.. அனைத்து தங்க கட்டிகளையும் போலீஸ்  முன்பு ஓப்படைத்திருந்தான் சிம்மன்.. 

தங்கதுரைக்கு கடத்தல் பண்ணியது போலீஸ்க்கு தெரிந்து விட்டது.. கடத்தல் பொருள் அனைத்தும் போலீசிடம் மாட்டிக்கொண்டது என்று தெரிந்ததும்  சிம்மனின் போன் போட்டான் தங்க துரை .. “என்ன சிம்மன் இந்த முறை போலீஸ்கிட்ட சரக்கு மாட்டிக்கிச்சு” என்று எதிரில் இருந்த முகேஷின் முறைத்த தங்கதுரை சிம்மனிடம் அடக்கப்பட்ட கோவத்துடன் கேட்க.

“ஆமா பாஸ் தீடிர்னு போலீஸ் வந்துடுச்சு.. நான் ஒண்ணும் செய்ய முடியல” என்று கூலாக பதில் சொன்னான். சிம்மன்..

“அடுத்த முறை இது போல தப்ப விடாத சிம்மன்” என்ற தங்கதுரை கூறி போனை வைத்த தங்க துரை நிலத்தில் போனை போட்டு உடைத்தான்.

“என்னாச்சு துரை ஏன் போனை உடைச்ச” என்று முகேஷ் தங்கதுரையிடம் பதறி கேட்டான்.

“டேய் முட்டாள் முகேஷ் இத்தனை நாள் சிம்மன் யாரென்று நமக்கு தெரியாம போச்சு.. நமக்கு வரச் சரக்கை எத்தனை முறை கடத்திக்கொடுத்திருக்கான்.. என்னோட பழைய ஆள் இருக்கும் வரை கடத்தல் வேலை சரியாப்போச்சு.. அவன் இறந்து போன பிறகு உன்பேச்சை கேட்டு இந்த சிம்மனுக்கு வேலையை கொடுத்த அவன் போலீஸ்க்கு தகவல் சொல்லிட்டிருக்கான் போல பிலடி பக்கர்” என்று சிம்மனை பற்றி லேட்டாக தெரிந்து கொண்டான் தங்கதுரை.. தங்க துரையின் ஆளை போட்டதே சிம்மன்தான் என்று தெரியாமல் இருக்கின்றனர் தங்கதுரையும் முகேஷும்.

“சாரி துரை இத்தனை நாளாய் அவனை நானும் நம்பி ஏமாந்திருக்கேன்” என்று புலம்பினான்..

“இனிமேலாவது சுதாரிச்சு இருக்கணும்” என்று கூறியவன்..

“சிம்மா உனக்கு இனிமேல் இந்த தங்கதுரை யார்னு புரியும்” என்று கத்தினான்..

 

“துரை என்னை எப்படியாவது ராதிகா கொலை வழக்கிலிருந்து காப்பாத்தி விடு.. புதுசா ஒருத்தன் காளிங்கனு ஏசிபி வந்திருக்கான்.. என்மேல கண்ணாயிருக்கானு எனக்கு தகவல் வந்திருக்கு” என்று தங்கதுரையிடம் கூற..

“எனக்கு இப்பதான் எல்லாம் புரிய வருது.. இந்த சிம்மன் காளிங்கன்  எல்லாம் கூட்டுக்களவாணிகள்.. கூடவேயிருந்து கழுத்தை அறுத்திருக்கான் சிம்மன்.. அவனை சும்மா விடக்கூடாது என்றவன் அப்போதே போனில் சிம்மன் கதையை முடிச்சிடுங்க” என்றதும்..

கப்பலில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த சிம்மன் வர்மன் அருகே வந்துகொண்டிருந்தான்.. “நண்பா எல்லாம் சரியா முடிச்சிட்டேன்.. இன்னும் இந்த தங்கதுரை கதையை முடிக்கணும்.. அப்புறம் கொசு பயல் முகேஷை ஜெயில் பிடிச்சு போடணும் அவ்ளோதாண்டா.. அப்புறம் என் வஞ்சியை கல்யாணம் பண்ணனும்” என்று சொல்ல அவன் வாயை திறக்க.. அதற்குள் தங்கதுரையின் ஆட்களில் ஒருவன் சிம்மனை சுட ஓடிவர.. வர்மன் துப்பாக்கியுடன் ஓடிவருபவனை தன் துப்பாக்கியை எடுத்து “யாரைடா சுட வர” என்று அவனின் காலில் சுட அவனோ அம்மா என்று கத்தி கீழே விழுந்தான்.. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

 “ச்சே தப்பிச்சிட்டான் சிம்மன் என்றவள் தன் துப்பாக்கியை எடுத்து வர்மனுக்கு குறி வைத்தாள்.. வர்மனை போட்டுத்தள்ளினாள் தான் சிம்மனுக்கு வலிக்கும் என்ற மனக்கணக்கு போட்டாள்.. ஆனால் சிம்மனை மீறித்தான் வர்மனை தொட முடியும் என்பது வஞ்சிக்கொடிக்கு தெரியவில்லை போலும்..

“சிம்மாஆஆ” என்று சத்தம் போட்டவள் கண்ணில் வஞ்சம் தெறிக்க வர்மனை நோக்கி துப்பாக்கியை அழுத்தினாள்.. சிம்மன் வஞ்சியின் குரல் கேட்டு திரும்பியவன்.. குண்டு வர்மனை நோக்கி வர.. வர்மனை தள்ளிவிட்டு அந்த குண்டை தன்நெஞ்சில் வாங்கிக்கொண்டு வஞ்சியை  வலிக்க ஒரு பார்வை பார்த்தான்.. அவனது உதடுகள் துரோகி என்று அசைந்தது.. பெண்ணவள் துப்பாக்கியை கீழே போட்டு “என்னை மன்னிச்சுடு சிம்மாஆஆ” என்று கதறினாள்.. ஆனால் அந்த கதறல் சிம்மனுக்கு கேட்கவில்லை.. அவன் மயங்கிச் சரிய ஓடிவந்து வர்மன் தாங்கி “ஏண்டா இப்படி பண்ணின.. அவளுக்கு தெரியலைடா என்னை பத்தி உன்னை சுடணும்னா என்னை சுட்டுட்டுத்தான் உன்னை கொல்லமுடியும்னு என்ற படி கண்ணைமூடுவதற்கு முன் அவ என்னை பார்க்க வரக்கூடாது.. அப்படியே அனுப்பிவிடு” என்று கண்ணை மூடினான்..

சிம்மன் மயங்கியதும் அவனருகே ஓடிவந்தவள் சிம்மனின் நெஞ்சில் சாய்ந்து நான் செய்தது தப்புஇல்ல என் சித்தப்பா ஆறுமுகம் சாவுக்கு செய்த மரியாதை என்று அவன் முன்னே மண்டியிட்டு அழ.. “நீ தப்பு பண்ணிட்ட வஞ்சிக்கொடி” என்றகடும் கோவத்தில் பேசிய  வர்மன்  நின்று பார்க்காமல் சிம்மனை தூக்கி தோளில் போட்டவன்  ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருந்தான்.. சிம்மனை செக் பண்ணிய டாக்டர் நல்லவேளை குண்டு ஹார்ட்டுக்கு பக்கம் தான் பாய்ந்திருக்கு.. ஹார்ட்டுல படல.. ஜஸ்ட் மிஸ் என்றவர் ஆப்ரேசன் பண்ண ஆரம்பித்தார்.. வெளியே கண்ணீருடன் நின்றிருந்த வஞ்சியிடம் வந்த வர்மன்.. சிம்மன்; யாருனு உனக்கு தெரியுமா? நமக்கெல்லாம் ஜுனியர் ஆபிஸர்.. ஸ்பெசல் கிரேட் ஆபிஸர்.. இத்தனைநாள் முகேஷ்க்கும் தங்கதுரையும் யாரு கூட தொடர்புல இருக்காங்கனு கண்டுபிடிச்சுட்டிருந்தான்.. அப்புறம் உன் சித்தப்பா ஆறுமுகம் நல்லவர் கிடையாது.. அவர் டிபார்ட்மெண்ட் இரகசியங்களை தங்கதுரைக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.. அதுமட்டுமா போலீஸ் டிரைனிங் முடித்தாலும் அவர்கள் கிட்ட பணம் வாங்கித்தான் கையெழுத்துபோட்டார்.. அவர் நல்லவர் நீ நினைச்சது உன் தப்புமா.. என்றதும் நான் தப்பு பண்ணிடேனா என்று நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தாள் வஞ்சிக்கொடி.

25 மோக முத்தாடு அசுரா

 “நான் தப்பு பண்ணிடேனா.. இல்லை நான் தப்பு பண்ணல.. என்னோட சித்தப்பா நல்லவர்தான்.. என்று மீண்டும் தப்பாக யோசித்தாள்.. தன்னை வளர்த்த சித்தப்பா கெட்டவர் என்பதை வஞ்சிக்கொடியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

வர்மன் ஆப்ரேசன் தியேட்டர் முன்பு அங்கும் இங்கும் கையை பிசைந்து கொண்டு பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தான்.. சிம்மனுக்கு இந்த குண்டடி ஒண்ணும் பெரிய விசயம் கிடையாது.. தன் மனம் விரும்பியவள் தன்னை சுட்டுவிட்டால் என்று தான் அவன் மனம் வருத்தப்பட்டு படுத்துக்கிடக்கிறான்.. இன்னேரம் வேற யாராவது சுட்டிருந்தால் அவன் கதி என்னாவாயிருக்கும் என்பதை வர்மனால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை..

 

வஞ்சிக்கொடியோ என் சிம்மனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கடவுளை வேண்டினாள் பெண்ணவள்.. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டேயிருந்தது.

 

வஞ்சிக்கொடி அழுவதை பார்த்த வர்மன் மனது கேட்காமலும்.. தன்னையே கொல்ல வந்த பெண் என்று பாராமலும் வஞ்சியின் மீது இரக்கப்பட்டவன்.. அவள் பக்கம் சென்று “எதுக்கு இங்க வந்து அழுது சீன் கிரீயேட் பண்ணிடிருக்க வஞ்சிக்கொடி..

 இங்கிருந்து பர்ஸ்ட் கிளம்புமா.. உனக்காக உன்னோட சித்தியும், உன் தம்பி சித்தார்த்தும் காத்திருப்பாங்க.. அவங்ககிட்ட போய் உன் சித்தப்பா சாவுக்கு காரணமாக இருந்த சிம்மனை சுட்டுட்டேன்னு சொல்லி சந்தோசப்படு வஞ்சி” என்று தன் நண்பனை சுட்டுவிட்டாள் வஞ்சி என்ற ஆதங்கத்தில் அவளிடம் கோபமாக பேசினான் வர்மன்.

 

“போதும் நிறுத்துங்க சார்.. எங்க சித்தப்பா சாகும்போது என்கிட்ட சிம்மன் தான் என்னை சுட்டது.. அவனை நீ பழிவாங்கனும்னு என்கிட்ட சத்தியம் வாங்கினாரு.. நானும் அவரோட சத்தியத்தை நிறைவேத்தத்தான் உங்க வீட்டுக்கு நடிக்க வந்தேன்.. ஆனா சிம்மனை என்னால ஏமாத்த முடியல.. அவன் காட்டின அன்பில நானும் அவரை மனசாரத்தான் காதல் செய்தேன் சா.. அண்ணா..” என்றவள் தொடர்ந்து “நான் எப்படி என்னோட சிம்மனை சுட்டேன்னு இன்னவரைக்கும் எனக்குப் புரியல.. ஏதோ ஒரு வேகத்துலையும்.. என் சித்தப்பா மேல இருக்க பாசத்திலையும் தான் இந்த கையால என் சிம்மனை சுட்டுட்டேன்” என்று தலையில அடித்துக்கொண்டு அழுந்தாள் பெண்ணவள்.

பாசம் ஒரு பக்கம் .. காதல் ஒரு பக்கம் என்று இருதலை கொள்ளி எறும்பாய் தவித்து நின்றாள் பெண்ணவள்.. வர்மனை குறிபார்க்க சிம்மன் வந்து விழுவான் என்று சிறிது கூட அவள் எண்ணவேயில்லையே.. சிம்மன் வர்மன் குறுக்கே வந்ததும் அவள் சுடாமல் இருந்திருக்கலாம்  ஆறுமுகம் சத்தியம் வாங்கியது அவள் கண்முன் தோன்ற துப்பாக்கியை அழுத்தி விட்டாள்.. இறுதியில் தன்னை வளர்த்த பாசமே ஜெயிக்க சிம்மனை சுட்டு விட்டாள். கைகள் நடுங்க சுட்டுவிட்டாள்..

 

“சிம்மன் மேல இவ்ளோ பாசம் வைச்சிருக்கவ.. எதுக்கு அவன சுட்ட.. அவன் பாசத்துக்கும் அன்புக்கும் மட்டும்தான் அடிபணிவான் தெரியுமா?” என்றவன் “நீ சிம்மனுக்கு துரோகம் செய்திட்ட இனி அவன் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டானே வஞ்சிமா” என்று அவளிடம் இரக்கத்துடன் பேசினான் வர்மன்.

 

“அண்ணா.. நானும் என் சித்தப்பா மேல உள்ள பாசத்துக்கு கட்டுப்பட்டுத்தான் என்னோட உசிரையே சுட்டேன்.. என்னோட அப்பா, அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க.. ஆறுமுகம் சித்தப்பாதான் என்னை படிக்க வைச்சது.. எனக்கு போலீஸ் வேலை கிடைக்கவே அவர் தான் காரணம்.. எனக்கு அவர் தான் குரு.. என்னை ரொம்ப பாசமாத்தான் பார்த்துக்கிட்டாரு.. இப்ப கூட நீங்க என்னோட சித்தப்பாவ கெட்டவர்னு சொல்றது என்னால நம்ப முடியல.. உங்கள சுட்டா சிம்மனுக்கு வலிக்கும்னு எனக்குத் தெரியும்.. அதான் சுட்டேன்” என்று முகத்தை பொத்திக்கொண்டு அழுதாள்.

 

“வஞ்சி, சிம்மன் என்மேல ஒரு தூசு படக்கூட விடமாட்டான் தெரியுமா? நாங்க அனாதைங்கதான்.. சிம்மன் யார்கிட்டயும் பேசமாட்டான்.. என்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் பேசுவான்.. அவனுக்கு தனக்கு யாரும்மில்லை என்ற வருத்தத்தில் யாரிடமும் பேசாமல் எப்போதும் புக்கும் கையுமாக இருப்பான்.. பள்ளி முடிச்சி முதல் வருடம் காலேஜ் போகும் போது ஒருமுறை கிரிக்கெட் விளையாடும் போது பால் பட்டு கீழே பெரிய கல்மேல விழுந்து அவன் மண்டை உடைஞ்சு இரத்தம் நிறைய போயிடுச்சி.. நான் தான் அவனுக்கு ரத்தம்கொடுத்தேன்.. அதிலிருந்து என்மேல அவனுக்கு பாசம் உண்டாகி என்கிட்ட பேச ஆரம்பிச்சான்.. எனக்கு ஒண்ணுனா அவன் துடிச்சிப்போயிடுவான்மா.. அவன் பாசத்துக்கு ஏங்கியவன் அவன இப்படி நம்ம வச்சி ஏமாத்திட்ட” என்று தலையை இருபக்கமும் ஆட்டியவன்.

 

“வஞ்சி நீ இன்னும் ஒருநாள் பொறுமையா இருந்திருந்தினா? எல்லாம் சரியா நடந்திருக்கும்.. சும்மாவா சொன்னாங்க பெண்புத்தி பின்புத்தின்னு” என்றவன் பெரும்மூச்சுடன் “நீ ஆறுமுகம் சாரோட பொண்ணுன்னு சிம்மனுக்கு தெரியும்.. தெரிஞ்துதான் உன்னை வீட்டுக்குள்ள விட்டிருந்தான்.. நான் ஒரு வாரம் முன்ன உன்னைப் பத்தி டிபார்ட்மெண்டல பேசிக்கும்போது உன்னோட போட்டோ பார்த்து அதிர்ந்து போய் நேத்துதான் சிம்மன் கிட்ட கேட்டேன்.. அப்போது தான் சொன்னான்.. வஞ்சி யாருங்குற விசயம் அவ வந்த அடுத்த நாளே எனக்குத் தெரியும்.. அவ எவ்ளோ தூரம் போறான்னு பார்க்குறேன்டா.. கொஞ்ச நாள் கழிச்சு அவ அவ்ளோ ஒர்த் இல்லைன்னு சொன்னவன்.. உன்னை போலீஸ்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. வஞ்சி ஒரு குழந்தை போலடா.. அவ பண்ணுற சேட்டையல்லாம் ரசித்து கொண்டிருக்கேன்.. அவ மேல என்னையும் அறியாம காதல் வந்திருச்சு.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்டா.. அவன் சந்தோசமாய் கூறியது இன்னும் என் காதில கேட்டுக்கொண்டேயிருக்கு வஞ்சி.. அவன் ரொம்ப சந்தோசமாய் இருந்தான் அதில ஒரு கூடை மண்ணை அள்ளி போட்டுட்ட தாயி.. இனி அவன நான் எப்படி தெப்பு தேர்த்தி கொண்டுவரப்போறேனு தெரியல” என்றவன் வஞ்சியிடம் கையெடுத்து கும்பிட்டு அவளை போகச் சொன்னான்.

 

“சிம்மன் கண்விழிக்கட்டும் நான் பார்த்துட்டு போறேன் அண்ணா”

 

“அவன் உன்ன பார்த்தா கொன்னு போட்டிருவான் ப்ளீஸ் இடத்தை காலி பண்ணு” என்று கூறி திரும்பி  ஆப்ரேசன் தியேட்டர் கதவு பக்கம் போக.

 

கதவு திறந்து வெளியே வந்தார் டாக்டர்.. “சார் சிம்மனுக்கு எந்த ஆபத்துமில்லையே?”

 

“நத்திங் குண்டு ஆழமாத்தான் பாய்ந்திருந்தது. எடுத்துட்டோம் இனி பயப்படத்தேவையில்லை.. ஒன்னவர்ல கண்முழிச்சிடுவாரு.. வார்டுக்கு மாத்த சொல்றேன் போய் பாருங்க” என்றவர் வர்மனின் தோளை தட்டிச்சென்றார்.

 

வஞ்சி, டாக்டர் அறைக்கு வெளியே வந்ததும் அடித்து பிடித்து ஒடி வர்மன் பின்னே நின்று.. டாக்டர், சிம்மனுக்கு எந்த ஆபத்துமில்லை என்றதும்தான் அவளுக்கு நிம்மதி வந்தது பெண்ணவளுக்கு.. இப்போதுதான் நன்றாகவே மூச்சு விட்டுக்குக்கொண்டாள் வஞ்சிக்கொடி

 

சிறிது நேரத்தில் வார்டுக்கு சிம்மனை மாற்றிவிட.. சிம்மன் கண்திறந்து விட்டான்.. அவன் கண்களில் அக்னி ஜூவாலை வீசியது.. அவளது வாசம் அவன் நாசியில் ஏற.. இங்கதான் இருக்கியா.. இங்கிருந்து போயிடுடி.. உன்னைப் பார்த்தேன் கொன்னிடுவேன் பார்த்துக்கோ.. உன்னை கட்டிபிடிச்ச கையாலகழுத்தை நெறிச்சு கொல்லப்போறேன்..  என்னை கொலைக்காரன் ஆக்கிடாதடி என்றவன் உடல் விறைத்துதான் போனது.. அவனது பல்ஸ் ரேட் ஏகத்துக்கும் எகிறியது.

வர்மன் கலகத்துடன் சிம்மன் இருக்கும் அறைக்குள் சென்றான்..

 

 சிம்மனின் கண்களை பார்த்தவனுக்கு ஈசனின் நெற்றிக்கண்ணை பார்ப்பதை போலவேயிருந்தது.. “நண்பா இப்போ எப்படியிருக்க.. பெயின் இருக்கா” என்று அடிப்பட்ட இடத்தை மெதுவாக தொட.

 

“குண்டடி பட்ட காயம் வலிக்கல வர்மாஆஆ.. அந்த வஞ்சகம் பிடிச்சு வீட்டுக்குள்ள வந்தாளே நச்சு பாம்பு அவ ஏற்படுத்தின காயம்தான் வலிக்குதுடா” என்றவன்.. இதயம் இருந்த இடத்தில் தொட்டுக்காட்டி.. “இங்கதான் அவள சிம்மாசனம் போட்டு வச்சிருந்தேன்” என்று நெஞ்சை குத்திக்கொண்டான்.. அடிப்பட்ட இடத்தில் ரத்த கசிவு வர.. “சிம்மாஆஆ பொறுமையாயிருடா.. காயம் பட்ட இடத்துல ப்ளீட் ஆகுது” என்றவன் சிம்மனின் நெஞ்சை தடவிக்கொடுத்தான்.

 

“நான் சாகமாட்டேன்டா.. அவ தான் எனக்கு முதல் எதிரி.. என்னை நம்பவச்சு காதல் நாடகம் ஆடி என்கூட.. ப.. ச்சை..” என்று பெண்ணவள் அவசரசப்பட்டு செய்த செயலை எண்ணி அருவருப்புடன் பேசினான்..

 

“டேய் அவசரப்பட்டு வார்த்தையை விடாதே.. நெல்லை போட்டா அள்ளிடலாம்.. சொல்லைவிட்டா யாராலும் அள்ள முடியாது.. அவ செய்தது தப்புதான் ஒத்துக்குறேன்.. உனக்கு ஒரு அப்பாயிருந்து அவர் கெட்டவரா, நல்லவரான்னு தெரியமா இருந்து.. உன் அப்பாவ ஒருத்தர் கொன்னிருந்தானா நீ சும்மாயிருப்பியா.. அதை தான் வஞ்சியும் செய்தாடா.. அவள மன்னிச்சுடு.. அவ கூட நீ வாழ்ந்திட்டன்னு எனக்குத் தெரியும்டா.. கொஞ்சம் விட்டுக்கொடுத்து போடா.. நீயும் அவள கல்யாணத்துக்கு முன்னால தொட்டது தப்புதான்..” என்று சிம்மனை சமாதானப்படுத்த பார்க்க

 

“யாருடா சொன்னது அவள பொண்டாட்டிய நினைச்சுதான் அவள வீட்டுல தங்கவைச்சேன்.. அவளும் பிடிச்சுதான என்கூட ப.. .. அப்புறம் எதுக்குடா என் முதுகுல குத்தினா.. என்கிட்ட ஒரு வார்த்தை பேசினாலா.. பாதகத்தி அவள நம்பி வீட்டுக்குள்ள எப்படி விடச்சொல்ற.. தலையில கல்லைப்போட்டு கொள்ள கூட அவ அஞ்ச மாட்டா.. அவ என்வாழ்க்கையில இனி வரமுடியாது” என்று கண்சிவக்க கர்ஜித்தபடி கத்தினான்.

 

“டேய் வஞ்சி துடிச்சுப் போய் வெளியே நிற்குறா.. அவமட்டும் உன்ன சுட்டுட்டு போட்டு குளு குளுன்னு சந்தோசமாவ இருக்கா” என்று வஞ்சிக்கு வக்காளத்து வாங்க..

 

“டேய்! டேய்! அவ விஷம் விஷம் பாம்புக்கு பால் வார்த்து வச்சிருந்திருக்கேன் அவ முகத்துல கூட முழிக்க விரும்பல” என்றவன் உடல் அதிர காயம் பட்டு தையல் போட்ட இடத்திலிருந்து இரத்தம் வர..

 

“டேய் என்னடா இப்படி கோவப்படுற இப்ப பாரு இரத்தம் ப்ளீட் ஆகுது” என்றவன் பதறி..

 

“டாக்டர்” என்று கத்த அவரும் சரியாக சிம்மன் அறைக்குள் நுழைய “சிம்மன் என்ன பண்ணுறீங்க இவ்ளோ உணர்ச்சி வசப்படலாமா” என்று அவனுக்கு தையல் போட்ட இடத்தில் வழிந்த இரத்ததை துடைத்துவிட்டு  மருந்து வைத்து இரத்த கசிவை நிறுத்தி.. “சிம்மன் உங்களை ஐ.சி.யுக்கு மாத்த சொல்லட்டுமா.. யாரையும் பார்க்க விடாம பண்ணாத்தான் நீங்க சரிபட்டு வருவீங்க” என்று டாக்டர் கோவத்துடன் பேச.

சிம்மன் இன்னும் கோவம் குறையாமல்தான் திமிறிக்கொண்டுதான் இருந்தான்.. அத்தனை ஆக்ரோசம் வஞ்சிமேல்.. ஆனால் வஞ்சியை நேரில் பார்த்தால் அவன் மனம் இளகுமோ என்னவோ.. சிம்மன் தன் மேல் உள்ள கோவத்தில் ஆத்திரத்துடன் பேசுவதை கேட்ட வஞ்சி அப்படியே நிலத்தில் அமர்ந்து கொண்டு வாயில் கைவைத்து சத்தம் போடாமல் என்னை மன்னிக்க மாட்டியா சிம்மா என்று மனதிற்குள் எண்ணியவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

 

“டாக்டர் சிம்மனை கோவ படாம நான் பார்த்துக்குறேன்.. நீங்க கிளம்புங்க” என்றதும்

 

“இன்னொரு முறை கோவப்பட்டா தூங்குறதுக்கு இன்சக்சன் போட்டு விடுங்க நர்ஸ்” என்று சிம்மனை முறைத்துச் சென்றார் டாக்டர்..

 

இனி இங்க இருக்கக்கூடாதென்று மெல்ல எழுந்தவள் தட்டுத்தடுமாறி சிம்மன் தன்னை நச்சு பாம்பு என்று பேசினது அவளது காதுக்குள்ள ஒலித்துக்கொண்டேயிருக்க.. சரியாத்தான் என்னை பாம்புன்னு சொல்லியிருக்காரு என்றவள் கனத்த மனதுடன் தட்டுத்தடுமாறி மெல்ல நடந்து சென்றாள்.

டீவியில் கடத்தல் கும்பலை பிடிக்க போன இடத்தில் போலீஸ் ஆபிசர் சிம்மனை சுட்டு விட்டனர் என்ற செய்தி மட்டுமே வந்தது.. வஞ்சிதான் சிம்மனை சுட்டதென்று மறைத்துவிட்டான் வர்மன்.. வஞ்சி, சிம்மனை சுடும்போது நல்லவேளையாக அங்கே யாரும் இருக்கவில்லை.. கணவன் மனைவியாக இணைந்தவர்களை பிரித்து வைக்க வேண்டாம் என்று எண்ணியவன்.. கடத்தல் செய்தவர்களில் யாரோ சிம்மனை சுட்டுவிட்டனர் என்று செய்தியை மீடியாவிற்கு தகவல் கொடுத்திருந்தான் வர்மன்.

 

டிவியில் சிம்மனின் படத்தை பார்த்த முல்லை.. சிம்மனை பற்றிய நீயூஸ் வர.. வர்மனுக்கு போன் போட அவன் அனைத்தையும் கூற.. முல்லைக்கு நெஞ்சில் பாரம் ஏறியது.. தங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய சிம்மனுக்கு இப்படி நடந்து விட்டதே என்று வருத்தத்தில் அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது.. இனியாவும் , அஜயும் டிவியில் சிம்மன் போட்டோவை காட்ட “சிம்மாஆஆ க்கு என்னாச்சு? அம்மா சிம்மாகிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று இனியா அழ.. குழந்தைகளை கூட்டிக்கொண்டு பொம்மனுடன் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றாள்.

 

முல்லை குழந்தைகளுடன் உள்ளே போக.. வஞ்சி அழுதுகொண்டே நடந்து வந்தாள்.. இனியா, வஞ்சியை பார்த்து விட்டது.. “வஞ்சி சித்தி எங்க போறீங்க.. சிம்மாக்கு அடிபட்டிருச்சு வாங்க” என்று அவள் கையை பற்றி இழுக்க..

 

“நா.. நான் வரல” என்று விம்மி விம்மி அழுது குழந்தையின் கையை எடுத்துவிட்டு செல்ல.. “ஒருநிமிசம் வஞ்சி” என்று முல்லை வஞ்சியை நிறுத்த.

 

“அக்கா என்னை மன்னிச்சுடுங்க.. வேற எந்த கேள்விக்கும் இப்போது என்னால பதில் பேசமுடியாது” என்றவள் நின்று பார்க்காமல் சென்றுவிட்டாள் வஞ்சிக்கொடி..

 

குழந்தைகளுடன் முல்லை, சிம்மன் அறைக்குள் போக “சிம்மாஆஆ உனக்கு என்னாச்சு ஏன் அங்க கட்டு போட்டிருக்காங்க.. யாரு உன்ன அடிச்சா” என்று இதழ் பிதுக்கி அழுதுகொண்டே சிம்மன் பக்கம் போக..

 

அதுவரை உலையில் இட்ட நெருப்பை போல கொதித்துக் கொண்டிருந்த சிம்மன் இனியாவின் அழுத முகம் கண்டு பனித்துளி போல குளிர்ந்தவன்.. “இனியா உன் சிம்மனுக்கு ஒன்னும் ஆகல சின்ன அடித்தான் பட்டிருக்கு கட்டுதான் பெருசா போட்டிருக்காங்க.. நாளைக்கே நான் வீட்டுக்கு வந்திடுவேன்” என்று கண்ணைசிமிட்டி வா.. என்று இனியாவை அழைக்க.. அஜயும் இனியாவுடன் சென்றது..

 

“அங்கிள் உங்களுக்கு காயம் வலிக்குதா” என்று அஜய் கண்ணை உருட்டி கேட்டது..

 

சிம்மனோ “வலிக்கல ராஜா” என்று இதழ் விரித்து சிரித்தான்.. இதற்குத்தான் குழந்தைகளை முல்லை கூட்டிட்டு வந்ததே.. இருகுழந்தைகளும் பெட்டில் ஏறி சிம்மன் பக்கம் உட்கார இருவரிடமும் பேசியதில் அவனது கோபம் குறைந்து நிதானத்துக்கு வந்தான்.. பி.பியும் குறைந்திருந்தது..

 

 குழந்தைகளுடன் அவன் பேசட்டும் என்றிருந்த வர்மன், முல்லையுடன் தனியே வெளியே வந்தான்.

 

“என்னங்க என்ன வஞ்சி இப்படி பண்ணிட்டா.. அவ என்ன முட்டாளாங்க.. இதுல அவ போலீஸ்ல வேற இருந்திருக்கா.. என்கிட்ட கூட நடிச்சிருக்கா பாருங்க.. ஆனா அவ கிளம்பும் முன்னே என்கிட்ட ஊருக்கு போறேன்.. மன்னிப்பு வேற என்கிட்ட கேட்டாங்க.. இவ தப்பு செய்ய போறான்னு எனக்கு தெரிந்திருந்தா நான் அவளை தடுத்திருப்பேங்க.. சிம்மன் அண்ணா பாவம்.. அவரால இந்த துரோகத்தை தாங்கமுடியாது.” என்று முல்லை வருத்தப்பட்டு பேச

 

“எல்லாம் கையை மீறி நடந்திடுச்சு முல்லை.. வஞ்சி அவ சித்தப்பா மேல உள்ள பாசத்தினாலையும் அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தாலையும் தான் சிம்மனை சுட்டிருக்கா..

 வஞ்சிமேல் முல்லைக்கு வெறுப்பு வரக்கூடாதென தன்னைத்தான் சுட வந்தா” என்ற உண்மையை முல்லையிடம் மறைத்தான் வர்மன்.

 

வர்மனுக்கு நண்பன் வாழ்வு சீராக இருக்கணும்.. இருவரையும் சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் இருக்கு.. இப்போது சிம்மன், வஞ்சி மேல் இருக்கும் கோவத்தால்தான் இப்படி பேசுறான்.. அவன் கோவம் தணிச்சுடுச்சுனா.. மறுபடியும் வஞ்சியை ஏத்துப்பான் என்று வர்மன் நினைத்தான்..ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பது வர்மனுக்கு தெரியவில்லை.

 

“சரிங்க குழந்தைகளுக்கு பசிக்கும் நான் கூட்டிட்டுப் போறேன் நீங்க இங்க இருங்க” என்று இருவரும் உள்ளே போக.. சிம்மன் குழந்தைகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான்..

 

“அண்ணா நான் குழந்தைகளை கூட்டிட்டுப் போறேன்” என்றதும்..

 

“ம்ம் சரிமா” என்றவன் முல்லை முகத்தில் இருந்த கவலையை கண்டவன் “அந்த கிறுக்கச்சி பத்தி நீ நினைக்காத முல்லை.. அவள நான் அப்பவே தலைமுழுகிட்டேன்” என்று அழுத்தமாக சிம்மன் கூற.

 

இனியா என்ன எண்ணியதோ தெரியலை… “சிம்மா, வஞ்சி சித்தி அழுத்திட்டே போச்சு எனக்கு பார்க்கவே பாவமா இருந்துச்சு” என்று தலையை சாய்த்து கூற.

 

“அவ நமக்கு வேண்டாம் தங்கம்” என்றவன் குரல் நலிந்துதான் வந்தது.. அத்தனை வலி அவனது குரலில் தன்னை ஏமாற்றியதை அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே வர.. வஞ்சி ஹாஸ்பிட்டலிருந்து வெளியே போனவள் மனது கேளாமல் உள்ளே வந்தாள்.. சிம்மன் தன்னை வேண்டாம் என்று சொன்னதும் அவளுக்கு உயிர் போய்விட்டது.. தலையில் யாரோ சம்மட்டியால் அடித்த உணர்வு வந்தது பெண்ணவளுக்கு.. வேரூன்றி மரம் போல நின்றுவிட்டாள்.. அவள் வாசம் வீச.. நீ இன்னும் போகலையாடி.. என்று என் வாழ்க்கையை விட்டு போய்டு என்றவன் அவள் என்றும் அவன் வாழ்க்கையை விட்டு போகாதபடி சிம்மனின் வாரிசு வஞ்சியின் வயிற்றில் உதிக்க துவங்கியது.. வஞ்சி நிற்க முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.. வெளியே வந்த முல்லை வஞ்சி மயங்கி கிடப்பதை கண்டு அவளை தூக்கி மடியில் போட.. இனியாவும், அஜயும் அறைக்குள் ஓடிச்சென்று “அச்சா, அப்பா” என்று இருகுழந்தைகளும் கோரசனுடன் “நம்ம வஞ்சி சித்தி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க” என்று கூற..

 

“சிம்மனோ நாடக்காரி அவ இப்பவும் நடிச்சு நம்மை ஏமாத்துவா வர்மன் நீ போகாத” என்று வர்மனை தடுக்க.

“டேய் அடுங்குடா” என்றவன் சிம்மனை முறைத்து விட்டு வெளியே சென்று வஞ்சியை டாக்டரிடம் தூக்கிச்சென்றான்.. வஞ்சியை செக் பண்ணிய டாக்டர் “இவங்க கர்ப்பமாயிருக்காங்க” என்று கூற.. வர்மனுக்கு ரெண்டு பேரையும் சேர்ந்து வைக்க வழி கிடைத்துவிட்டது என்று சந்தோசப்பட்டான்.. ஆனால் சந்தோசப்படுபவன் வெறுப்பைத்தான் அவளிடம் காட்டப்போகிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை.

1 thought on “மோக முத்தாடு அசுரா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top