ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

26 மோக முத்தாடு அசுரா

இந்தப் பொண்ணு கர்ப்பமாயிருக்காங்க என்று டாக்டர் கூறியதை கேட்ட வஞ்சிக்கொடிக்கு அத்தனை சந்தோசம் அவள் மனதில் ஏற்பட்டது.. உலகத்தையே வென்றுவிட்டதான ஒரு உணர்வு.. என் சிம்மனோட உயிர் எனக்குள்ள வளருது இதுவே எனக்கு போதும்.. காலம் முழுக்க என் குழந்தையோடவே வாழ்ந்திடுவேன் என்று வயிற்றை தடவிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. (ஆமாடி நீ செய்த தப்புக்கு உன் வயித்துல வளர சிம்மனோட வாரிசை வாங்கிட்டு உன்னை வீட்டை விட்டு  அனுப்பிடுவான் அதானா பிரண்ட்ஸ் நீங்க நினைக்கிறது.

முல்லை குழந்தைகளை வைத்துக்கொண்டு மருத்துவரின் அறைக்குள் நிற்காமல் வெளியே வந்துவிட்டாள்.. வர்மன் மட்டும் வஞ்சியுடன் நின்றிருந்தான்.. தன் குழந்தையையும் மனைவியையும் தான் இல்லாத போது உயிராய் பாதுகாத்தவனின்  குழந்தை இந்த உலகத்தில் உதிர்க்க தோன்றியது..  அதை பத்திரமாய் பாதுகாக்க காவலனாய் இந்திரவர்மன் வஞ்சியின் அருகே நின்றான்.

சிம்மன், வர்மனுக்கு போன் போட.. வர்மன், சிம்மனின் எண்ணை கண்டதும் கட்செய்துவிட்டான்.. அந்த கிறுக்கச்சி கூட இருப்பான் போல.. என்று மூக்கு வியர்க்க கோவம் கொண்டு அவனோட உயிரை கொல்ல பார்த்தவ அவளுக்கு சேவகம் செய்யாறானா.. என்று பல்லைக்கடித்தவன் மீண்டும் வர்மனுக்கு போன் போட்டான்.

“ம்ப்ச்” இவனோட தொல்லை தாங்கல.. என்றவன் போனை எடுத்து ஆன் செய்து “கொஞ்ச நேரம் இருடா வந்துடறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்க..

“டேய் நீ இன்னும் ஐந்து நிமிசத்துல இங்க இருக்க.. இல்ல நானே நடந்து வந்திருவேன்”

“திமிரு புடிச்சவனே வரேன்டா போனை வை” என்று மெதுவாக பேச..

டாக்டர் சரியாக வஞ்சியிடம் “உன் வீட்டுக்காரர் பேரு சொல்லுமா.. பைல் போடணும்” என்று கேட்க.. அவளோ கண்ணீருடன் பேசாமல் விரக்தியாக அமாந்திருந்தாள்..

டாக்டர் பேசுவது சிம்மன் காதிலும் விழத்தான் செய்தது.. கண்ணை மூடித்திறந்த சிம்மன்.. என்னோட குழந்தையையும் என்னை போல அனாதையா வளர விடமாட்டேன்.. என்றவன் பெருமூச்சுடன் “வர்மா டாக்டர் கிட்ட குழந்தைக்கு அப்பா நான்தான்னு அவபேர் கூட என்பேர சேர்த்து போடச் சொல்லு” என்றான் சிம்மன்.. வர்மன் போனை ஆன் செய்த போதே ஸ்பீக்கரில் போட்டிருந்தான்

“ரொம்ப சந்தோசம்டா.. எனக்குத் தெரியும் உனக்கு வஞ்சிமேல ரொம்ப காதல்..அதுவும் வஞ்சி மாசமா வேற இருக்கு.. இப்படியே இருந்துருடா.. எல்லாத்தையும் மறப்போம் மன்னிப்போம்..” என்று வர்மன் வசனம் பேச.

 “அடச் சை.. ரொம்ப சந்தோசப்படாதடா.. என்னோட குழந்தைக்கு அப்பா ,அம்மா ரெண்டு பேரும் இருக்கோம் அவ்ளோதான்.. அவள நான் எப்போதும் மன்னிக்க மாட்டேன்.. வஞ்சிக்கொடி நரசிம்ம வர்மன் பைல் போடச் சொல்லு என்றவன் போனை பட்டென்று வைத்துவிட்டான்.

 

“ஹஸ்பண்ட் வொய்ப்குள்ள ப்ராப்ளம் மேடம்” என்று வர்மன் டாக்டரிடம் மெதுவாய் கூற.

 

டாக்டரோ.. “குழந்தை வந்திருச்சுல்ல எல்லாம் சரியாப்போய்டும்” என்று புன்னகைத்தவர் பைல் போட்டுவிட்டு வஞ்சிக்கொடியிடம்  கொடுத்து நீங்க 2 வீக் ரெஸ்ட் எடுக்கணும்.. கொஞ்சம் அனிமிக்காவும் இருக்கீங்க.. என்று கூறியவர் அவளுக்கு தேவையான மருந்துகளை மருந்துசீட்டில் எழுதிக்கொடுத்து நெக்ஸ்ட் மன்த் செக்கப்புக்கு வாங்க.. என்று வஞ்சியை அனுப்பி வைத்தார்.

வர்மன், வஞ்சிக்கொடியுடன் வெளியே வர.. என்னை ஏத்துக்கமாட்டீங்களா மாமா.. பரவால நான் செய்த தப்புக்கு எனக்கு இந்த தண்டனை சரிதான்.. நம்ம குழந்தைக்கு நான் தான் அம்மானு சொன்னதே எனக்கு போதும்.. உன்கிட்ட நான் சீக்கிரம் வந்துடுவேன் எனக்கு நம்பிக்கையிருக்கு என்று எண்ணிக்கொண்டே வெளியே நின்ற முல்லையின் அருகே போய் நின்றாள்.. சிம்மன் அவ்ளோ சீக்கிரம் அவளை மன்னிக்கமாட்டான் என்பது வஞ்சிக்கொடிக்கு தெரியவில்லை..

“முல்லை நான் மெடிசன் வாங்கிட்டு வந்துடறேன்.. நீ வஞ்சியை பார்த்துக்க” என்று பார்மஸி சென்றுவிட்டான் வர்மன்.

வஞ்சியின் சோர்வை கண்டு குழந்தைகளுக்கு கொண்டு வந்த பழச்சாறை வஞ்சிக்கொடிக்கு எடுத்து கொடுக்க.. வயிற்றில் இருக்கும் கருவுக்காக பழச்சாறை வாங்கிகுடித்தாள் வஞ்சி.

பழச்சாறு குடித்தவுடன் “என்ன வஞ்சி இப்பாவது என்கிட்ட உண்மையை சொல்லு.. உனக்கு யாரு இருக்காங்க உன் வீட்ல கொண்டுபோய் விடுறேன்” என்று அவள் தோள் பட்டையை பிடித்து கேட்க.

“எனக்கு சித்தி இருக்காங்க” என்றவள் அவள் வீடு விலாசத்தை விலாசத்தைக் கூற..

“அப்பாடி இப்பவாவது உண்மையை சொன்னியே மகராசி ரொம்ப சந்தோசம் வா போகலாம்” என்று வஞ்சியை கூட்டிக்கொண்டு குழந்தைகளுடன் வெளியே சென்றாள்.

வர்மன் மருந்துகளை வாங்கிக்கொண்டு வர.. “என்னங்க வஞ்சியை அவங்க சித்தி வீட்ல விட்டுட்டு நான் நம்ம வீட்டுக்கு கிளம்புறேன்”

“ம்ம் அதுவும் சரிதான்… நாங்களே ரெண்டு நாள் கழிச்சு வஞ்சியோட சித்திய போய் பார்த்து கல்யாணம் பத்தி பேசணும்னு இருந்தோம்.. ஆனா அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் மேடம் அவசரப்பட்டுட்டா என்ன பண்றது” என்று சிறு கோபத்துடன் வஞ்சியை பேசிய வர்மன்..

“வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணு முல்லை.. பார்த்துப்போ” என்று கண்ணால் சைகை செய்தான் முல்லையிடம்.

 

ம்ம்” என தலையை ஆட்டிய முல்லை குழந்தைகளுடன் வஞ்சியை கூட்டிச்சென்றாள்.. கார் வஞ்சி வீட்டு முன்னே நிற்க.. சாந்தி கார் நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்..

வஞ்சி காரில் இருந்து இறங்குவதைக் கண்டவர் முகம் சுருக்கி அவள் வந்த கோலம் கண்டு பதறி அவள் பக்கம் சென்று “வஞ்சிமா என்னாச்சு கார்ல வர உன்னோட ஸ்கூட்டி எங்க” என்று அவர் பரிதவிப்பாய் கேட்டார்..

இத்தனை நாள் வஞ்சி, சாந்தியிடம் வெளியூர் கேம்ப் போட்டிருக்காங்க நான் போகணும் என்று சாந்தியிடம் பொய் சொல்லித்தான் சிம்மன் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.. அவளுக்கு போலீஸ் குவாட்டர்ஸும் கொடுத்திருந்தார்கள்.. டியூட்டி முடிச்சு லேட் ஆகும் போது குவாட்டர்ஸ்லையும் தங்கிக்கொள்வாள்..

“சித்தி” என்று அழுது கொண்டே ஓடியவள் சாந்தியை அணைத்துக்கொண்டாள்..

“ஏய் என்னாச்சு வஞ்சி எதுக்கு அழற” அவள் முதுகை தடவிகொடுக்க

அஜய் தூங்கிவிட இனியா மட்டும் வஞ்சி அழுவதை பாவமாக பார்த்திருந்தது.. சிம்மனை, வஞ்சி சுட்டு விட்டாள் என்பது இனியாவிற்கு தெரிந்தால் இனியா வீட்டுக்குள் கூட விடாது.. நல்லவேளையாக குழந்தைகளுக்கு எந்த விசயமும் தெரிந்திருக்கவில்லை.

“அம்மா வஞ்சியை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போங்க உள்ளார போய் பேசிக்கலாம்” என்ற கூறிய முல்லை காருக்கு வெளியே நின்றிருந்த பொம்மனிடம் திரும்பி “அண்ணா அஜய் காருக்குள்ள தூங்குறான் பார்த்துக்குங்க ஐந்து நிமிசத்துல வந்துடறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.. சாந்திக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முல்லையுடன் வீட்டுக்குள் சென்றார்.. பின்னே வந்த முல்லையை சோபாவில் உட்கார சொல்ல இனியா புது இடம் என்பதால் முல்லையின் மடியில் உட்கார்ந்து கொண்டது.

வஞ்சியை சோபாவில் உட்கார வைத்து விட்டு சமையல்கட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்துவந்து முல்லைக்கு கொடுக்க தண்ணீரை குடித்துவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்த வஞ்சியிடம் “நடந்ததை நீ சொல்றயா இல்ல.. நான் சொல்லட்டுமா வஞ்சி” என்று பீடிகை போட்டாள் முல்லை.

வஞ்சி ஏதோ பிரச்சனையோடுதான் வந்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட சாந்தி, வஞ்சியின் அமைதி கண்டு கொஞ்சம் பயந்துதான் போனார்..

27 மோக முத்தாடு அசுரா

வஞ்சிக்கொடி இப்படி தலைகுனிந்து அமரமாட்டாள்.. யாரைக்கண்டும் அஞ்சி நடுங்குபவள் இல்லையே.. நடு இரவேயானாலும் துணைக்கு கான்ஸ்டபிள் கூட வேண்டாம் என்று தனியாக வீட்டுக்கு வருபவள்.. போலீஸ் என்று திமிருடன் இருந்த பெண் இன்று இப்படி தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள் என்றால் அவள் எந்த பெண்ணும் செய்யகூடாத தவறை செய்துவிட்டாளோ.. என்று எண்ணிய சாந்திக்கு மனது துடியாய் துடித்துப்போனது.

சாந்தி, வஞ்சியை இதுவரை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசியது இல்லை.. ஆறுமுகம் இறந்த பிறகு குடும்பத்திற்கு மூத்த பெண் என்ற ரீதியில் குடும்பத்தை ஆண்பிள்ளை போல தன் தோளில் தாங்கி காத்து நின்றவள் வஞ்சிக்கொடி.

“வஞ்சி என்னாம்மா நடந்துச்சு சொல்லு” என்று அவள் கையை பிடித்தார் சாந்தி..

“சித்தி நான் தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க” என்றவள் தான் கர்ப்பமாயிருக்கிறோம் என்பதை போட்டு உடைத்துவிட்டாள்.. சாந்திக்கு, அவள் கூறுவதைக் கேட்டு தலையில் இடிவிழுந்தது போல இருந்தது.. என் வளர்ப்புக்கு பங்கம் கொண்டு வந்துட்டியாடி என்று முதன் முறையாக வஞ்சி மாசமாய் இருக்கிறாள் என்றெல்லாம் சாந்தி பார்க்கவில்லை.. ஓங்கி அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார்.. வஞ்சி அடியை வாங்கிக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தாள்.

இனியா வஞ்சியை அடிப்பதை தாங்காமல் சாந்தியை முறைத்துவிட்டு அவரை எதுவும் சொல்லமுடியாமல் தாயின் நெஞ்சில் சாய்ந்து கொண்டது.

 

சாந்தி வஞ்சியை அடிக்கும்போதே சித்தார்த் விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்துவிட்டான்.. “அக்காவை அடித்த சாந்தியை பார்த்தவன் கோவத்துடன் “அம்மா அக்காவ எதுக்கு அடிச்சீங்க” என்று சீறிக்கொண்டு வந்து நின்றான்.

“டேய் நீ சின்ன பையன் உனக்கு ஒண்ணும் தெரியாது அப்படி போய் உட்காரு” என்று சித்தார்த்தை மிரட்ட..

“ம்மா இன்னொரு முறை அக்காவை அடிச்சீங்க அப்புறம் நான் செய்வேனு தெரியாது” என்று வஞ்சியின் கன்னத்தை தொட்டு வருடி “அக்கா வலிக்குதா” என்று சித்தார்த் அழுவதை போல கேட்க.. “இல்லடா செல்லம்” அவனை அணைத்துக்கொண்டாள் வஞ்சி.

இனியா யார் வஞ்சிக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணுவது என்று மெல்ல முல்லை மடியிலிருந்து சித்தார்த்தை எட்டிப்பார்த்தது..

வஞ்சிக்கு யாருமில்லைனு சிம்மன் நம்மகிட்ட சொல்லுச்சு இன்னிக்கு இந்த அண்ணா வஞ்சியை அக்கானு சொல்லுறான்.. அம்மா, வஞ்சி சித்திய கோவமா பார்க்குறாங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியலை.. என்று தன் குட்டி மூளையை தட்டி யோசனை செய்தது..

“சரிங்கம்மா நான் கிளம்புறேன்” என்று முல்லை எழும்ப..

“நீங்க யாருன்னு முழுவிபரம் சொல்லுங்க அப்பதான் எனக்கு நிம்மதி வரும்.. அந்த தம்பி கையில கால் விழுந்தாவது இவள அந்த பையன் கூட சேர்த்து வைப்பேன்” என்று சாந்தி கவலையுடன் கூற.

“அம்மா கொஞ்சநாள் போகட்டும் சிம்மன் அண்ணாவோட கோபமும் குறையணும்.. அதுவரை பொறுமையா இருங்க” என்று வஞ்சியை பார்க்க.. என்னையும் கூட்டிட்டுப்போங்களேன் என்று பார்வை பார்க்க..

இப்போ முடியாது என்று பெரும்மூச்சுடன் முல்லை தலையசைத்து இனியாவுடன் வெளியே சென்று காரில் ஏற.. வஞ்சி வெளியே ஓடிவந்து இனியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “சித்தப்பா வீட்டுக்கு வந்தா முத்தம் கொடுத்திடு” என்று கூறியவள் நின்று பார்க்காமல் வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.. உப்பு தின்றால் தண்ணி குடிச்சுதான் ஆகணும்.. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆகணும்.. வஞ்சியும் தப்பு செய்து சிம்மனால் தண்டனை வாங்க போகிறாள்.

முல்லை வீட்டுக்குச் சென்றதும வர்மனுக்கு போன் போட்டு வஞ்சியை வீட்டில் விட்டதை கூறிவிட்டு குழந்தைகளுக்கு  உணவூட்டி உறங்க வைத்தாள்.

ஹாஸ்பிட்டலில் சிம்மனுக்கு இட்லி வாங்கிட்டு வந்து கொடுக்க.. அவனோ சாப்பிட்டு கண்ணை மூடிப்படுத்துவிட்டான்.. அவன் கருமணிகள் அசைந்து கொண்டு தான் இருந்தது.. வர்மனுக்கு நண்பனின் துயரம் புரியாமல் இல்லை.. அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி உட்கார்ந்திருந்தான்.

எனக்கு குழந்தை வரப்போகுது இந்த தருணத்தை நான் எப்படி கொண்டாடனும்.. இப்படி என்னை படுக்கவச்சு  சாய்ச்சி புட்டியே வஞ்சி என்று அவளை கொன்றுவிடும் அளவிற்கு கோவம் வந்தது சிம்மனுக்கு.. ஆஆவென்று கத்தணும் போல இருந்தது.. எத்தனை ஆசையுடன் இருந்தேன்டி.. உன் வயிற்றைத் தொட்டு பார்க்கணும்.. நீ மாசமானதும் ஊரையே வளைச்சுப்போட்டு வளைகாப்பு செய்யணும்னு.. என் நெஞ்சை கூறுபோட்டு அறுத்திட்டியேடி என்றவன் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது..

எதற்கும் கலங்காதவன் இன்று அவன் கண்ணில் கண்ணீரை கண்ட வர்மன் அவன் பக்கம் வந்து “சிம்மா கலங்காதடா என்னால தாங்கமுடியல” என்று அவன் தலையை வருடி விட

கண்விழித்து எழுந்து உட்கார்ந்த சிம்மன் “டேய் நான் போலீஸ்காரன்தாண்டா.. எனக்குன்னு மனசு இருக்குடா.. அதை சுக்கு நூறா உடைச்சு புட்டாளே” என்று புலம்பித்தள்ளினான்..

“டேய் நீ சும்மா புலம்பித்தள்ளாதேடா.. அவளுக்கும் வலியிருக்கும்டா.. அந்த புள்ளையும் உடைஞ்சு போய்தான் இருக்கு.. ரெண்டு பேருக்கும் ஏதோ நேரம் சரியில்ல போல.. அதான் இப்படி நடக்குது.. உன் பிள்ளை வெளியே வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்திடுவீங்க பாரு” என்று மெல்ல சிரித்தான் வர்மன்.

 

“குழந்தை பிறந்தா குழந்தையை வாங்கிட்டு வந்துடுவேன்.. அவளை நம்பி என் பிள்ளையை அவகிட்ட கொடுப்பேனா” என்று வர்மனை முறைத்தான் சிம்மன்.

 வர்மனுக்கு போன் வர.. ஐ.ஜிதான் பேசியிருந்தார்.. அவரிடம் அனைத்தும் கூற.. “சரி சிம்மனை பார்த்துக்க.. நான் இப்ப எதுக்கு போன் பண்ணினேனா.. ராதிகா கொலைகேஸ் என்னாச்சுன்னு மேலிடத்தில பிரசர் பண்ணுறாங்க.. சிம்மன் வீட்டுக்கு போனதும் நீங்க ஸ்டேசனுக்கு வந்து கேஸ் கண்டுபிடிக்க பாருங்க என்றதும்.. சார் ஆல்மோஸ்ட் கேஸ் முடிஞ்சுடுச்சு.. அந்த சந்தானம் பையன் முகேஷ்தான் குற்றவாளி என்பது தெள்ளத்தெளிவா தெரியுது.. இன்னும் ஒருநாள் டைம் கொடுங்க கேஸை முடிஞ்சுடுறேன்” என்று போனை வைத்துவிட்டான்.

“என்னாச்சு வர்மா.. ஐ.ஜி என்ன சொல்றார்”.

“ராதிகா கேஸ் பத்திதான்டா.. முகேஷின் கம்பனிக்குள்ளதான் அந்தப் பொண்ண கொன்னுருக்கான்.. அந்த ரூம்ல சிசிடி கேமரா வேலை செய்யலைனு அசால்டா இருந்திருக்கான்.. ஆனா கேமராவை அன்று தான் பழுது பார்த்தது முட்டாள் முகேஷுக்கு தெரியாது போல.. கம்பெனிக்குள்ள மிரட்ட வேண்டிய விதத்தில் மிரட்டி அங்கே இருந்த எலக்ட்ரிசியனை மிரட்ட அவன் கேமராவை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டான்.. அந்த கேமரா என்கிட்டதான் இருக்கு.. உன்னை டிஸ்சார்ஜ் பண்ணட்டும்.. அடுத்த நாள் அந்த முகேஷை ஆதாரத்துடன் கைது பண்ணப்போறேன்” என்று வெறியுடன் கூறினான்.

 

“நீ நாளைக்கே அவனை அரஸ்ட் பண்ணுடா.. எனக்கு என்ன ஒரு குண்டுதான் பாய்ச்சிருக்கு.. பெரிய காயம் இல்லை.. நாம நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகிடலாம்” என்றவனை வெட்டவா குத்தவானு வர்மன் முறைத்து.. “ஒழுங்கா மூடிட்டு நான் சொல்றத கேளு.. இல்ல இப்பவே துப்பாக்கிய எடுத்து சுட்டுபுடுவேன் படுடா” என்று நண்பனை சும்மா மிரட்டி சிம்மனை தூங்க வைத்தான்.

ஐந்து நாட்களில் தையல் பிரித்து சிம்மன் வீட்டுக்கு வந்துவிட்டான்.. வஞ்சி வீட்டுக்குள்ளயே அடைந்து கிடந்தாள்.. அழுது அழுது தலையணைதான் நனைந்து போனது.. சித்தார்த்தான், வஞ்சியை விட்டு நகரவில்லை.. சாந்தி, வஞ்சிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து சாப்பிடச்சொல்ல.. “எனக்கு வேணாம் சித்தி என்று மறுத்து காலை குறுக்கி படுத்து கொண்டாள் வஞ்சி.

“உனக்கு வேணா சாப்பாடு வேணாம்டி.. வயித்துக்குள்ள இருக்க பிள்ளைக்காக நீ சாப்பிட்டுதான் ஆகணும்” என்று கண்டிப்புடன் கூறியவர் சாப்பாட்டு தட்டை வைத்துவிட்டு சென்றார்.. அவள் கண்டிப்பாக சாப்பிடுவாள் என்ற நம்பிக்கையில்.. சாந்தி சென்றதும்.. வயிற்றை தடவி நான் சாப்பிடுறேன் செல்லம்.. என்று கருவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

சிம்மன் வீட்டுக்கு வந்து மூன்று நாள் ஆகிவிட்டது.. இப்போது காயமும் ஆறிவிட்டது.. வர்மன்.. ராதிகாவை கொன்றது முகேஷ்தான் என்று ஆதாரத்துடன் நிரூபித்து முகேஷை கைது செய்தான்..

“டேய் வர்மாஆஆ என்னையே அரெஸ்ட் பண்ணிட்டைல.. நான் கூடிய சீக்கிரம் எப்படி வெளியே வரேன் பாரு” என்று வர்மனிடம் வீர வசனம் பேச.. அவன் குறுக்கிலே எட்டி உதைத்து “நாய சாவடிச்சிடுவேன்.. பார்த்துக்கோ.. பொண்ணுங்க உன்கிட்ட வேலைக்கு வந்தா அவங்கள நாசம் பண்ணுவியோ” என்று முகேஷை அடித்து சிறையில் போட்டான்.

இன்று பிப்ரவா 14 சிம்மன் சாப்பிட்டு முடித்து இனியாவுடனும் அஜயுடனும் விளையாண்டு கொண்டிருந்தான்.. இனியா வஞ்சியை பற்றி பேச்சு எடுத்தால் தங்கம் அவளப்பத்தி பேச வேண்டாம் என்று வாதம் செய்தான் சிம்மன்.. வஞ்சி பாவம் சித்தப்பா வஞ்சியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்.. என்று இனியா கெஞ்ச.. அஜயும் ஆமா அங்கிள் அத்தைய கூட்டிட்டு வரலாம் என்று இரு குழந்தைகளும் சிம்மனிடம் கெஞ்ச.. குழந்தைகளிடம் கோவத்தை காட்ட முடியாமல் கண்ணை மூடித்திறந்தவன் “கூட்டிட்டு வரலாம்” என்று கூறி அப்போதைய நிலமையை சமாளித்தான்.

 

வெளியே சென்றிருந்த வர்மன் கையில் பூவை மறைத்து வைத்து கொண்டு வந்தான்.. குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் கண்ணில் வர்மன் ஏதோ மறைத்து கொண்டு வருவது தெரிய “என்னடா மறைச்சு கொண்டுவர.. என்று வர்மனை நக்கலுடன் பார்த்து கேட்க.

“இன்னிக்கு பிப்ரவரி 14.. ஹிஹி முல்லைக்கு ரோஸ் வாங்கிட்டு வந்தேன்டா.. என்று அசடு வலிந்தான்.

“ஏண்டா பொண்டாட்டிக்கு ரோஸ் வாங்கி மறைச்சா கொண்டுவர” என்று சிம்மன் நக்கலுடன் சிரிக்க.

“குழந்தைங்க இருக்காங்க அதான்” என்று நெற்றியை தேய்த்தவன் பூவுடன் உள்ளே ஓடிவிட்டான்.. முல்லை குளித்து வெளியே வர.. சரியாக அறைக்குள் சென்றவன் அவள் மீது வந்த கஸ்தூரி மஞ்சள் வாசம் அவனை மயக்கி இழுத்தது.. முல்லையருகே மெல்ல நடந்து சென்றவன் அவளது கழுத்துவளைவில் முகம் புதைத்து “ஐ.லவ்.யுடி” என்று பெண்ணவளை தன்புறம் திரும்பி இன்னிக்குத்தான் நான் உன்கிட்ட லவ் சொன்னேன்.. என்று அவளது தலையில் ரோஜா பூவை வைத்துவிட்டு அவளது முகத்தை கையில் ஏந்தி இதழை கவ்விக்கொண்டான்.. முத்தம் நீடித்துக்கொண்டே போக… பத்து நாளாக சிம்மனுடன் படுத்துக்கொண்டான்.. சிம்மன், முல்லை அறைக்குப் போகச்சொன்னாலும் அவன் கேட்க வில்லை.. இப்போது மனைவின் வாசம் பிடித்து அவள் இதழை மென்று தின்று கொண்டிருந்தான்.. இதழோடு முத்தச் சண்டை போட்டுக்கொண்டிருந்தான்.. “ஏய் கொஞ்சமா இங்க அங்க கடிச்சிக்கிறேன்” என்று அவளது மேடு பள்ளங்களில் அவனது இதழ்கள் விளையாட பெண்ணவளுக்கு பட்டாம்பூச்சி பறக்க துவங்கியது.. “எத்தனை முறை தொட்டாலும் எப்பவும் புதுசு போலவே இருக்கடி” என்று அவளது மென் அங்கங்களில் உதடு வைத்து உறிஞ்சினான்.. பெண்ணவளின் கைகள் தானாக அவனது சிகைக்குள் கோர்த்துக்கொள்ள.. அவனுக்கு இன்னும் வசதி செய்து கொடுக்க.. பூவுக்குள் தேனெடுக்கும் வண்டாய் மாறினான்.

சிம்மன், வர்மனுக்கு போன் போட.. “ச்சே இந்த நேரத்துல கரடி யாரு” என்று தன்னிலை மறந்து அவன் போனை எடுக்க.. “டேய் நண்பா என்ஜாய்டா.. நான் கரடியில்லடா  இனியாவையும், அஜயையும் நான் என்கூட படுக்க வச்சிக்குறேன்.. ஹேப்பியா வேலண்டைஸ்டே கொண்டாடு” என்று குழந்தைகளை அறைக்கு கூட்டிச்சென்று தன்னுடன் படுக்க வைத்தான்..

சிம்மனுக்கு வஞ்சியை பார்க்கணும் போல தோன்ற அவள் செய்த காரியம் அவன் கண்முன்னே தோன்ற மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தைகளை தூங்க வைத்தான்.

போனை வைத்த வர்மன், முல்லை  கழுத்து வளைவில் முகம் புதைக்க.. “என்னங்க பிள்ளைங்க என்ன கேட்டாங்களா.. போய் எடுத்துட்டு வந்திரவா” என்று அவனை விட்டு எழும்ப..

“அடியேய் நானும் தான் உன்னை தேடுறேன் என்னையும் கொஞ்சம் கவனிடி” என்றவன் அவளது ஆடைகளை களைந்து மென்அங்கம் கொய்ந்து.. நாபியில் முத்தம் வைத்து அவளை முழுதாக கொள்ளை கொண்டு காதலர் தினத்தை கொண்டாடி தீர்த்தான். 

வஞ்சிக்கொடி மருந்தை சாப்பிட்டு படுத்தவளுக்கு தூக்கம்தான் வரமறுத்தது.. அவளுக்கு துணையாய பக்கத்தில் சாந்தியும் சித்தார்த்தும் படுத்திருந்தனர்.

சிம்மனுடன் இருந்த நாட்களை அவளால் மறக்க முடியவில்லை.. அன்று நடந்தது எண்ணிப்பார்த்தாள்.. “மாமா ஐ.லவ்.யு.” என்று சிம்மனை கண்டிக்கொண்டு “மாமா அடுத்த காதலர் தினத்துக்கு என்னை வெளியே கூட்டிட்டுப் போகணும்… நாள் முழுக்க உங்க கைய பிடிச்சிகிட்டு ஊர் சுத்தணும்.. நீங்க எனக்கு நிறைய ரோஜாப்பூ வாங்கிக்கொடுக்கணும்” என்று சிம்மனின் தோளில் சாய்ந்திட..

“அடுத்த காதலர் தினம் எப்போ வரது.. நமக்கு எப்பவும் காதலர் தினம்தான் இப்பவே வெளியே கூட்டிட்டுப் போறேன்” என்றவன் சிம்மனுடன் அன்று நாள் முழுவதும் பார்க், பீச் என்று ஒரு இடம் விடாமல் சுற்றித்திரிந்தனர் இருவரும்.. அன்று சிம்மன், வஞ்சிக்கு கொடுத்த முத்தம் இன்றும் அவள் இதழில் ஈரம் இருப்பது போல உணர்வு வந்தது அவளுக்கு.. அந்த சந்தோசமெல்லாம் இனி கிடைக்குமா எனக்கு.. என்று கண்ணீர் விட்டாள் பெண்ணவள்..

அங்கே சிம்மனோ வஞ்சியை நினைக்காமல் இல்லை.. அவன் உயிராய் வஞ்சியை நேசித்தானே… இப்போது வஞ்சியை பார்க்க சிம்மனுக்கு ஆசை இருந்ததுதான்.. தன் மகவை சுமக்கும் வஞ்சியை கட்டியணைத்து முத்தம் கொடுத்து அவளை கொஞ்சி நூறு முத்தம் அவளுக்கு கொடுக்கத் தோன்றியது.. வஞ்சியை வெறுக்க முடியவில்லை அவனால்.. ஏண்டி என்னை தவிக்கவிட்ட.. உன் கூட எப்படியெல்லாம் நான் வாழ ஆசைப்பட்டேன்.. இன்னிக்கு காதலர் தினம்டி இந்த நாள்ல  நான் உன்னை கல்யாணம் பண்ணி ஹனிமூன் கூட்டிட்டு போலாம்னு இருந்தேனேடி.. என்னோட கனவு கோட்டையை சுக்கு நூறாய் உடைச்சுப் போட்ட.. என்று மனம் நொந்தவன் அப்படியே கண்ணை மூட வஞ்சிதான் அவன் கண்முன்னே சிரித்து நின்றாள்.

போடி என் கண்முன்னே வராத என்று கண்ணை இறுக மூடிக்கொண்டான்.. எப்படி அவன் கண்முன்னே வராமல் போவாள்.. அவன் உயிர் அல்லவா அவள்.. அவளை விட்டு பிரியவேண்டுமானால் அவன் உயிர் உடலைவிட்டு போனால் தான் அவள் கண்முன் வரமாட்டாள். காதல் கொண்ட நெஞ்சம் பரிதவிக்கத்தான் செய்தது.. இருவரும் விதி எனும் சதியால் பிரிந்து வாடினர்.

அடுத்தநாள் காலையில் வர்மனுக்கு போன் வந்தது.. வஞ்சியை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. என்று பதறி சாந்தி கூற.

சாப்பிட்டுக்கொண்டிருந்த சிம்மன் டேய் அவள், என் குழந்தையை எதாவது பண்ணியிருப்பாடா… நான் சொன்னேன்ல அவள் ரப்பு பிடிச்சவ.. ஏதாவது என் குழந்தைக்கு நடந்திருக்கட்டும் அப்புறம் அவளுக்கு சம்பவம் இருக்கு என்று சாப்பிடாமலே ஹாஸ்பிட்டலுக்கு ஓடினான்.

அதே நேரம் முகேஷ் அவனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறையிலிருந்தே தங்கதுரையிடம் பேசினான்.. தங்கதுரை கோமாவில் இருந்த சந்தானத்தை போட்டுத்தள்ளி விட்டு இறுதி காரியத்திற்கு முகேஷை ஜாமினில் வெளியே எடுத்தான்.

2 thoughts on “மோக முத்தாடு அசுரா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top