ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 14

அத்தியாயம் 14

   ஜீவிகா, வலியில்… முகம்  சுனங்கியவள், ஆமா… காட்டி தான் கொடுக்கல, இப்ப என்ன அதுக்கு? சொல்லுங்க…?காட்டி கொடுத்தா மட்டும்.. ஒரு வாரத்தில்,  சிபாரிசுல, வெளிய,வந்துருவீங்க,சந்தோஷமா இருப்பீங்க, ஆனா… நீங்க கேக்குற,மன்னிப்புல…நான் பட்ட வலியும்,வேதனையும்,போயிருமா?சொல்லுங்க..? சொல்லுங்க?… சார்…?

     சக்தி,அமைதியாக இருந்தான். ஜீவி தொடர்ந்தால், கடத்திட்டு போற எல்லா பொண்ணுங்க கிட்டயும்,இப்படித்தான், உங்க ஆம்பளங்கிற, வீரத்தை… காட்டுவீங்களா??..வன்முறையை பயன்படுத்தி, 

    எத்தனை தடவை, கெஞ்சி இருப்பேன், நான் தப்பு பண்ணல.. என்னன்னு..சொல்லுங்கனு, எதுக்காக கடத்தினீங்கன்னு?.., கதறினேன்…,

    ஆனாலும்,நீங்க மனசு இறங்கல என அழுதவள், ஒரு விஷயம், தெரியுமா? ஒரு பொண்ணு அவ புருஷனுக்கு மட்டுமே, தன் உடம்ப காதலோட, காட்டணும்னு… நினைப்பா…,ஆனா நான் இனி அப்படி பண்ண முடியாது?…ல, ஏன்னா?…நான்,உங்களால… களங்கப்பட்டு, நிற்கிறேன்… என்றாள்,தன் கைகளை விரித்து,

   கடைசியா,என்கைய அறுத்துட்டு செத்து போடின்னு சொன்னீங்க இல்ல?… அன்னைக்கு கையை அறுத்ததுக்கு பதிலா…,கழுத்த அறுத்திருந்தீங்கன்னா?.. ரொம்ப சந்தோஷமா? போய் சேர்ந்து இருப்பேன். அதே மாதிரி, எனக்கு யாரையும், மயக்கவும் தெரியாது, சொக்குப்பொடி, போடவும் தெரியாது. 

   ‘ப்ளீஸ்’… இனி  எதையும் விசாரிக்காம பண்ணாதீங்க.. என்றவள்  நடக்க அடி எடுத்து வைத்தாள்.

   சக்தி முடிவெடுத்தவனாய்,அவள் கையைபிடித்தான்.அவள்,’ப்ளீஸ்’ தயவு செய்து,என் கையை விடுங்க பார்க்கிறவன் நான் உங்களை மயக்குறேன்னு நினைக்க போறாங்க…..?என்றாள்.

    சக்தி, அவளை இன்னும் தன் பக்கம் இழுத்தவன், (தன் மனதில் ஆமாடி என்னை மயக்கி தான் வச்சிருக்க)என நினைத்தவன்,வா கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான். 

   அதில் வெறுமையாக சிரித்தவள், ம்ம்..என்ன சார்? தண்டனைக்கு பிராயசித்தமா.., போங்க சார்…உங்க தகுதிக்கு ஏத்தவளா? பார்த்து கட்டிக்கோங்க..பயப்படவேண்டாம் நான் உங்கள பத்தி வெளியில எதுவும் சொல்ல மாட்டேன், என்றாள் நிமிர் உடன்.

சக்தி,அதில்,புன்னகைத்தவன், அவள் காதில்,இதுவரைக்கும் எந்த பொண்ணுகிட்டயும் இப்படி..? நடந்துகிட்டது இல்ல, இனிமேல் யார்கிட்டயும் இப்படி நடந்துக்கவும் மாட்டேன். நான் தொட்ட முதல் பொண்ணும் நீ தான்…கடைசி பொண்ணாவும், நீ தான் இருக்க போற, நீ என் பொண்டாட்டின்னு (தன்  நெஞ்சை  தொட்டு… காட்டியவன்)இங்க பதிஞ்சிட்ட,       இப்ப போ.. ஆனா மறுபடியும் உன்னை நான் பார்த்தேனா?.. அப்ப நீ எனக்கு பொண்டாட்டியா?. தான்,இருப்ப,. என்றவன்,

 வரட்டா.. பொண்டாட்டி, என்று அவளை விடுவித்தான். இந்த முறை,அதிர்வது ஜீவிகாவின் முறையானது.

     அதுக்குள்ளே சந்தியா, எங்க இவள காணோம்!..டைம் ஆச்சு.., அம்மா கிட்ட பேசிட்டு,வரவா இவ்வளவு நேரம்.

   அர்ஜு, நீ போய் என்னனு பாரு என்றாள்.

     இங்கே சக்தி, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள்,நடக்க முடியாமல், நடந்து கொண்டே,ஒருமுறை திரும்பி, அவனை பார்த்தாள். 

    சக்தி, அவள் திரும்பியதும், அவளைப் பார்த்து, சிரிப்புடன் கண்ணடித்தான். அதில் பயந்த ஜீவி, படபடப்புடன், வேகமாக நடந்தாள்..இல்லை ஓடினாள்… 

   அவள், ஓடி வருவதை பார்த்த அர்ஜுன், மச்சி,..என்ன ஆச்சு?ஏன் ஓடி வர, என்றான். ஜீவி, ஒன்னும் இல்ல,மச்சி,வா…போலாம்… என்றவள், வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

   நித்தி,ஏன் பேபி லேட் என்றான். ஜிவி ரெஸ்ட் ரூம் போயிருந்தேன் டால் என்றவள் அவள் தன்னை  ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

   சந்தியா, கொஞ்சம் தண்ணீர் கொடுடி.. என்றாள்.அவள் கொடுத்ததும், முழு பாட்டிலையும் காலி செய்து இருந்தாள்.

    அர்ஜு,என்னடி??அவ்ளோ தண்ணி தாகமா? என்றான்.

  இவளும்,ம்ம்..ஆம்..என்று தலையாட்டியவள்,போலாம்டா என்றாள். அவளுக்கு சோர்வாக இருந்தது. வண்டி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பி, சென்னை நோக்கி புறப்பட்டது. மருது மஞ்சுவும் கிளம்பினர்.

    இங்கே, நேரே தன் வீட்டிற்கு வந்த சக்தி, யாரிடமும் பேசாமல் மேலே சென்று தன் அறைக்குள் படுத்து விட்டான்.சாப்பிடவும் வரவில்லை இரவாகியும், வரவில்லை என்றதும், 

    மீனாட்சி,, என்னாச்சு?!.. இந்த பையனுக்கு, மதியம் வந்தவன் மதியமும் சாப்பிடல, மணி இப்ப எட்டு ஆகுது,இப்பவும் வரல,, மதுமா..உன் அண்ணா.. என்ன? பண்றான்னு பார்த்துட்டு,சாப்பிட வர சொல்லு, மணி எட்டு ஆச்சு பாரு, அம்மா கூப்பிட்டாங்கன்னு, சொல்லு என்றார்.

    அதேநேரம், அஜய்யும் லலிதாவும் சாப்பிட அமர்ந்தனர்.என்னம்மா…. மேலேயே,பார்த்துட்டு,இருக்கீங்க.. அண்ணா இன்னும் சாப்பிட வரலையா? என்றான் அஜய்.

மீனாட்சி,ஆமாப்பா மதியம் மேல போனவன், இன்னும் வரல அதான் மதியை,அனுப்பி பார்த்துவிட்டு வரச் சொல்லி இருக்கேன் பா என்றார்.

  அதேசமயம்,மதி படியில் ஓடி வந்தாள்.அவள் பின்னாடியே சக்தியும் வந்தான்.

    முகம் களைப்பாக இருந்தது, மீனாட்சி என்னப்பா உடம்புக்கு ஏதும் முடியலையா? மதியமும் சாப்பிட வரல,இப்பவும் வரல, அதான் கூப்பிட்டு அனுப்பினேன் என்றார்.

     சக்தி அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, கொஞ்சம் தலைவலி மா, அதான் என்றான். சரிப்பா சாப்பிடாம,இருந்தா தான்,இன்னும் வலிக்கும்.சாப்பிட்டு…போய் மாத்திரை போட்டு,படுத்துக்க என்றார்.சரி மா என்றவன் சாப்பிட ஆரம்பித்தான். 

       சாப்பாடு இறங்கவில்லை சக்திக்கு பாதியிலேயே எழுந்து விட்டான். தோட்டத்தில் போய் அமர்ந்து கொண்டான்.அவன் நினைவை ஜீவிகா மட்டுமே… நிறைத்திருந்தாள்.

    குளிர் உடலை ஊசி போல துளைக்கவே எழுந்து, தன் தாய் அறையை நோக்கி சென்றான்.

      அவனை தன் அறையில் பார்த்த மீனாட்சி, என்னபா இந்த நேரத்தில் தூங்கலையா??என்றார்.

சக்தி,இல்லமா தூக்கம் வரல, கொஞ்சம்..உங்க..மடியில, படுத்துகிறேன்,  என்றவன் அவர் மடியில்,படுத்துக்கொண்டான்.

    மீனாட்சி,அவன் தலையை தடவி கொடுத்தார்.அவருக்கு அவன் ஏதோ மன உளைச்சலில் இருக்கிறான் என்று மட்டும் தெரிந்தது,ஆனால் கேட்கவில்லை சக்தியாக சொல்லட்டும், என காத்திருந்தார்.

   சிறிது நேரம் கழித்து சக்தி,அம்மா உங்க புள்ள கெட்டவனா? அம்மா சொல்லுங்கம்மா என்றான், உள்ளே போன குரலில்,

     மீனாட்சி,ஏம்பா அப்படி கேக்குற என் புள்ள எப்பவும் நல்லவன் தான், கோபம் வரும் தான், ஆனா அந்த கோபம் நியாயத்துக்கு தான் வரும்,என் மகனுக்கு. 

     அதனாலதான், என் புள்ள இந்த ஊர்ல ராசாவா இருக்கான். ஒரு காரியத்தில் இறங்குறானா.. விசாரிக்காமல் இறங்க மாட்டான். தப்ப கண்டுபிடிச்சு, தண்டிக்காம இருக்கவும் மாட்டான். எனக்கு தெரியும்,..என் புள்ளைய பத்தி என்றார்.

   (ஆனா அவன் சொல்ல போகும் விஷயம் கேட்டால்)

 

தொடரும்……

     

    

     

 

 

5 thoughts on “முகவரிகள் தவறியதால் 14”

  1. Центр психиатрической помощи Петербурга: возвращение к полноценной жизни
    психиатрическая клиника петербурга [url=https://www.psihiatricheskaya-klinika-spb-0.ru/]https://www.psihiatricheskaya-klinika-spb-0.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top