அத்தியாயம் 18
ஹோட்டல், அறையை காலி செய்தவர்கள் சாப்பிட்டு விட்டு, கோவிலுக்கு,சென்றனர்.கோவிலுக்கு செல்வதால் ஜீவிகா, இன்று புடவை கட்டி இருந்தாள் .
தலையில் பூ, கை நிறைய…,கண் ணாடி வளையல்…, புடவை.., என அழகாய் இருந்தாள்.முகத்தில் சிறு புன்னகை.
சங்கரும்,சக்தியும்,கூட கோவிலுக் கு, வந்திருந்தனர், மீனாட்சி சொன்னதின் பெயரில், பூஜை செய்து விட்டு,அன்னதானம் கொடுக்க.
ராஜேஷ்,ஜிவி…நீங்க புடவைல ரொம்ப அழகா இருக்கீங்க “வாவ்” என்றான்.ஜிவி,தேங்க்ஸ் ராஜேஷ் என்றவள்,கோவிலுக்குள் சென்றாள்.
ராஜேஷ், மனதில், இன்றைக்கு எப்படியாவது? என் லவ்வ ஜீவி கிட்ட சொல்லிடணும். (வீட்ல பொண்டாட்டி, தொடப்பக்கட்ட யோட வெயிட்டிங்)
அவன் டீம் பையன், சார் கனவு காணாம சீக்கிரம், வாங்க,சார்… பூஜை,, முடிஞ்சிற போகுது… என்றான்.
ராஜேஷ்,’ஓ’சாரிமேன்,வா,போலாம் என்றவன், கண்கள், ஜீவிகாவை யே பார்த்துக் கொண்டிருந்தது.
இங்கே, ஜீவிகாவின், இதயம் படப்படவென,அடித்துக்கொண்டது ஜிவி, என்ன?இன்னைக்கு ஒரு மாதிரி படப் படன்னு, வருது. சந்தியா, எருமைய வேற, இன்னும் காணோம்?!… கடவுளே?!,என்னை,காப்பாத்துங்க!?..தப்பா…எதுவும் நடக்க கூடாது.(மன்னிக்கவும் சாமிக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருப்பதால் அங்கு சென்றவிட்டார்) என கண்களைமூடி,வேண்டிக்கொண்டாள். உள்ளே, பூஜை நடந்து கொண்டிருந்தது. இன்றைக்கும் யாரோ தன்னை பார்ப்பது போல உள்உணர்வு, ஆனால்? கண்களை திறக்கவில்லை.
(திறந்திருந்தா?..நல்லா,இருந்திருக்கும். விதி யாரை விட்டது)
ஜீவியின்,பக்கத்தில் நிழல்….. ஆடுவது போல், இருந்தது. ராஜேஷ் ஆக இருக்கும், என் நினைத்து… விட்டுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து, கழுத்தில் ஏதோ ஊறுவது போல், இருந்தது. பட்டென்று, கண்களை திறந்து பார்த்தாள்.சக்தி தான் அவளுக்கு “மாங்கல்யம்…”அணிவித்துக் கொண்டு இருந்தான். ஜீவிகாவின் கண்களில் அதிர்ச்சி!!…அவள் கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்தது.
அதே நேரம், கோவில் மணியும் அடித்தது. அவளோடு… வந்த, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி!!..
ராஜேஷ் “ஏய்”?! “கண்ட்ரி மேன்” யாரு நீ?
என்ன பண்றன்னு, தெரிஞ்சு தான் பண்றியா?! “இடியட் “என்றான் சத்தமாய்,
சக்தி, பார்த்த பார்வையில்…. பயபுள்ள, ‘கப் சிப் ‘. அங்கிருந்து அனைவரும் என்ன நடக்கிறது?… இங்கே என்ற, ரீதியில் நின்று கொண்டிருந்தனர்.
அவன் செய்யும் காரியத்தை, கண்ட ஜீவிகா, அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்.
அவள் விழாதபடி, தன் கையில் தாங்கி பிடித்தான் சக்தி. அவள் மயங்கியதும்,, ஓடி வந்தவர்களை, தன் கண்களால் தடுத்து நிறுத்திய வன், சங்கர்!?…என்றான்
அவன்அப்போதுதான்,கோவிலில் இன்று,அன்னதானம்,போடுவதற்கு, காசு கட்டி, விட்டு அவனிடம் வந்தான். ( இத சக்தி பயபுள்ள தான் செய்ய சொன்னது ).
சங்கர், அதிர்ச்சியாக!!.. என்ன மச்சான்? இப்படி பண்ணிட்டா?.. இதுக்குதான்,என்னை,அன்னதானத்துக்கு பணம் கட்ட சொல்லி அனுப்புனியா?? என்னடா நீ?இப்ப அம்மாவுக்கு,எப்படி?!… பதில் சொல்றது ?..சக்தி… என்றான் ஆதங்கமாய்!.. தலையில், கை வைத்து,
சக்தி அவனிடம், அவ கிட்ட பேச போறேன் மச்சான், கூட நீ இருந்தா.. கொஞ்சம் தைரியமா, இருக்குன்னு சொல்லித்தான்,அழைத்து,வந்தான். ஆனால், தாலி கட்டுவான், என அவன் எதிர்பார்க்கவில்லை..
இன்னொரு… முக்கியமான…. விஷயம், இன்றைக்கு,அவனை போட்டோவில் பார்த்து, பிடித்து விட்டது, என்றவர்கள், இன்று கை நனைக்க வருகிறார்கள். அதனால் தான் சங்கரிடம்,சொல்லி,அவனை கோவிலுக்கு, அழைத்து சென்று, பூஜை, செய்துவிட்டு வரும்படி, அனுப்பினார்.
ஆனால்,சக்தி,இங்கே..தனக்கானவளை தேர்ந்தெடுத்து, தாலியை கட்டி விட்டான்.
மயங்கிய அவளை,ஓரமாக அமர வைத்து, தண்ணீரை…..அவள், முகத்தில் தெளித்தான். அவன் தெளித்ததில் மயக்கம் தெளிந்த ஜீவிகா,
அவனை இவ்வளவு,பக்கத்தில் பார்த்ததும், பயந்து மிரண்டு போய் பின்னால், நகர்ந்தாள் அழுகையு டன் ,
அதை கண்ட, சக்திக்கு.., ஒரு மாதிரியாகிவிட்டது. சங்கர்,என்ன மச்சான்? அந்த பொண்ணு இப்படி பயந்து… நடுங்குது, உன்னை பார்த் து ரொம்ப கஷ்டம் போலவே?…
அந்த பொண்ணு கிட்ட, லவ்வ சொல்லி,அத அந்த பொண்ணு ஏத்துகிட்டு அப்புறம், எப்போ… மச்சான்,நீ குடும்பம் நடத்துறது?….
எனக்கு, தலையே.. சுத்துதுடா மச்சான்?!… என்றான்.
சக்தி, அவன் கூறியதில்,கோபம் கொண்டவன், நீ இப்ப… வாய மூடல…., அடிக்கிற…அடியில… உனக்கு உண்மையாவே தலை சுத்தும்,பாக்கறியா?!… என்றான் பல்லை நறநறவென.., கடித்து.
அதற்குள், விஷயம், ராஜேஷ் மூலம்,சந்தியாவிற்கு,அறிவிக்கப்பட்டது. சந்தியா, விஷயத்தை… கேட்டதும், அய்யய்யோ!!..போச்சு!, போச்சு?!..அவ சொன்ன மாதிரியே நடந்துருச்சு!…
நான், ஒரு மூளை கெட்டவ?… காலையில, சீக்கிரம்… போய் இருந்தா,.. இதை தடுத்து இருக்கலா ம். அச்சோ!..இப்ப நான் அவங்க னுங்க கேட்டா?? என்ன பதில் சொல்லுவேன்?… பேச விடாம அடிப்பானுங்களே?!…
அடச்ச….!என்ன இது??.. ஐயோ!!குழப்பத்துல,என் மச்சிய, மறந்துட் டேனே!?…என புலம்பியபடி கோவில் வந்து சேர்ந்தாள். செருப் பை கழட்டியவள்,வேகமாக கோவிலின் உள்ளே ஓடினாள்.
சந்து, ஜீவி?!.. ஜீவி?… மச்சி!!… எங்கடி?… இருக்க?…நீ எங்க இருக்க மச்சி!!..என தேடினாள் பதட்டமாய்,
அங்கே, தூணில் பக்கத்தில், தன் முழங்காலில்,முகம் புதைத்து, அழுது கொண்டிருந்தாள் ஜீவிகா. அவளைப் பார்த்த, சந்தியா, மச்சி!! மச்சி!! என்னை பாருடி?.. பாரு… என்றாள், அவள் அருகில் அமர்ந்து,
ஜீவிகா,மெதுவாக அவளை தலையை உயர்த்திப் பார்த்தாள் விசும்பலுடன், “அவள் கழுத்தில் மஞ்சள் தாலி” ஜீவிகா சந்து!!??… என அவளை தாவி…. கட்டிக் கொண்டு தேம்பி அழுதாள்.
சந்து…நான் தான், சொன்னேன் இல்ல?ஏன் சீக்கிரம் வரல?!…பாருடி என் நிலைமையை, என்னால… முடியலடி…, என்னை,இங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போய்டு டி “ப்ளீஸ்”… எனக்கு பயமா இருக்கு?என்றாள்.
இதையெல்லாம்,சக்தியும்,சங்கரும், பார்த்துக் கொண்டிருந்தனர். ஷங்கர், என்ன மச்சான்?தங்கச்சி இப்படி சொல்லுது?யோசித்து இருக்கலாமோ?..என்றான்.
சக்தி,நீ கொஞ்ச நேரம், வாயை மூடிட்டு இருடா…!? என்றான்.
அவள் அழுவதை… பார்த்து, கோபம் கொண்ட சந்தியா, இருவர் இருப்பதை பார்த்து, யார் சக்தி என்று தெரியாமல்,”ஏய்” யாருடா? என் மச்சி,கழுத்துல… தாலிய கட்டினது?… சொல்லுங்கடா?… டேய்!! குட்டி யானை, நீயா? என் பிரண்டு கழுத்துல, தாலி கட்டுன, சொல்லுடா? கருவாட்டு தலையா?.. என்றாள். சங்கரைப் பார்த்து,
அதில் அதிர்ந்த சங்கர், சுத்தம்…, யாரு? தாலி…கட்டினதுன்னே தெரியல?.. தெரியாம,சண்டை போடுது, இந்த பொண்ணு,வாயாடி தான் போல?… என எண்ணியவன்,
அய்யோ! தங்கச்சி…நீ நினைக்கிற மாதிரி,நான் பண்ணலமா? இதோ இங்க நிக்கிறான்,பாருங்க? “என் மச்சான்” அவன்தான், தாலிய கட்டினான், உன் பிரண்டுக்கு, என்றான்.
சந்தியா, அத முதல்லயே சொல்ல வேண்டியதுதானே…, தள்ளு?!… என்றவள், சக்தியிடம் வந்தவள், அவனை, அண்ணாந்து பார்த்து “ஏய்”மிஸ்டர்?… பனைமரம்?எவ்வளவு தைரியம்… இருந்தா.. என் பிரண்டு கழுத்துல தாலி.. கட்டிருப்ப… என்றாள் கோபமாய், (கொலை விழுமோ?!..)
தொடரும்…
Super story but pavam jeevi
super sis
Next epi ku waiting