ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 19

அத்தியாயம் 19
   சந்து, உன்னை…?பாவம், என் மச்சி? அழறா பாரு.. எல்லாம் உன்னால..தான். என்றவள், ஜிவியிடம் சென்றவள்,மச்சி.. அந்த நெடுமரம் கட்டின தாலியை, கழட்டி  அவர் கையில கொடுத்து ட்டு,வாடி!.. நாம வீட்டுக்கு.. போகலாம்..என முடிக்கவில்லை..

     சக்தியின் “ஏய்” என்ற குரலில் பயந்து நடுங்கி விட்டாள் சந்தியா. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன், தாலியை கழட்டு என்ற உடன் கோபம் கொண்டவன் என்ன? சத்தம், பலமா இருக்கு?.. மரியாதை இல்லாம பேசுற? ஹூம் எவ்வளவு தைரியம் இருந்தா…, நான் கட்டின தாலியை கழட்ட சொல்லுவ?!… “ஹாங்” எவ்வளவு தைரியம் உனக்கு?!…

   இப்ப சொல்றேன், கேட்டுக்க, எப்ப இவள.. தொட்டு தாலி… கட்டினேனோ?.. அப்பவே என் பொண்டாட்டி ஆகிட்டா, இதை மாத்த, எந்த… கொம்பனாலும் முடியாது?? உன்னால,முடிஞ்சத பாத்துக்க? என்றவன்,

 ஜீவிகாவை பார்த்து, அழுது முடிச்சாச்சின்னா?.. வீட்டுக்கு போலாமா? என்றான் .

  ஜீவிகா, அது.. வந்து, ஏன்? இப்படி பண்றீங்க? தப்பு பண்றோம்னு தோணலையா?.. என்றாள்.

    சக்தி, இப்ப, நீயா?.. வர்றியா?.. இல்ல, தூக்கிட்டு போகட்டுமா?!.. சொல்லு.., என  உறுமினான்.

   அதில் பயந்த ஜீவி,இல்ல…இல்ல.. நானே வரேன். என விசும்பியவள், சந்தியாவிடம், நான்.. நான் போறே ன்டி? நீ வீட்டுக்கு போ?.நான் பாத்துக்குறேன்.. என்றாள் சந்தியா வை பார்த்தபடி,காரில் அவனோடு ஏறி புறப்பட்டாள்.

   சந்தியா,அவள் போவதை அழுகையுடன் பார்த்திருந்தாள். சந்தியா, பின் சுதாரித்தவளாய், அர்ஜு, நித்தினுக்கு போன்செய்து , விஷயத்தை கூறினாள்.

   அவர்கள், அவளை வண்டி, வண்டியாக, திட்டி தீர்த்தார்கள். சந்தியா, என்னை திட்டாதிங்கடா. வலிக்குது, நான் போறதுக்குள்ள எல்லாம்….முடிஞ்சிடுச்சுடா? என்றாள்.

 

நித்தீன்,டேய்,மச்சான்!” எல்லா பிளான், பண்ணி செய்து இருக்கான் டா… அவன். அவன…, என்னோட கையால கொன்னாதா ண்டா!?.. எனக்கு…. ஆத்திரம், அடங்கும், என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

 

 அர்ஜுன், ஆமா மச்சி, இவ மட்டும் என்ன பண்ணுவா?.. மச்சான்.. நாமளும் போய் இருந்திருக்கனும். தனியா,இவளால ஒன்னும் பண்ணி,இருக்க முடியாதுடா?..

   இந்த தடவையும், ஜீவிகா நம்பள ரொம்ப.. எதிர்ப்பார்த்து…இருப்பா டா?!…, மாப்ள… என்றவனின் குரல், தோய்ந்து காணப்பட்டது.

  நித்தீஷ், ஆமா மச்சான். என்ன    பண்றாள் னு தெரியல, என் பேபி. பாவம்டா அவ ரொம்ப கஷ்டப்பட் டு,இருக்கா?..ரொம்ப…பயமா…. இருக்குடா.. திரும்பவும் அவளை ஏதாவது  பண்ணிடுவான்னோனு, பயமா..,இருக்கு டா?? என்றான்.

    அர்ஜுன், தப்பா யோசிக்காத, மச்சான் தேடுவோம்.. ரெண்டு நாள் நல்ல திருச்சி போவோம்… அதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்கு, இன்பார்ம் பண்ணனும் டா என்றான்.

  சந்தியா, அழுதுக்கொண்டே…. திருச்சியில் இருந்து கிளம்பினாள்.

    இங்கே, காரில் சக்தி ஜீவிகாவை அழைத்துக் கொண்டு தன் வீடு நோக்கி சென்றான்.

  திருச்சியில், அவன் வீட்டில், மீனாட்சி,பாக்கியம்!..பலகாரம், காபி, சமையல்,எல்லாம் ரெடியா?? மது அண்ணாக்கு, போன் பண்ணு மணி ஆகிடுச்சு, பொண்ணு வீட்ல இருந்து,வந்துட்டாங்கன்னு…சொல்லி சீக்கிரம் வர சொல்லு என்றார்.

மது, தன் தாய் சொன்னபடி,அவன் போனுக்கு கால் செய்தாள். “ரிங்” போனதே தவிர,போன் கால் எடுக்க ப்படவில்லை. இரண்டு மூன்று தடவை ட்ரை பண்ணினாள்.

 

மதி,அம்மா,அண்ணா..எடுக்கலமா வந்துகிட்டு இருக்கார் னு நினைக்கிறேன் என்றாள்.

 

 மீனாட்சி,சரி நீ போய் விளக்குல எண்ணெய், ஊத்தி வை. பேசி முடிவு பண்ணிட்டு, விளக்கு போட்டுக்கலாம். 12 மணிக்கு ஏத்த வேணாம்,என்றாள்.

   பாக்கியம்,அனைவருக்கும் காபி பலகாரம்,கொடுத்துக்கொண்டிருந்தார்.

   அப்போது,வாசலில் கார் வந்து நிற்கும்,சத்தம்,கேட்டது.அனைவரும், மாப்பிள்ளை வந்துட்டார்…. மாப்பிள்ளை வந்துட்டார்… என்று பேசிக் கொண்டனர்.

  காரில் இருந்து இறங்கிய,சக்தி அவளையும், இறங்கச் சொல்லி, அவள் கையை இறுகப்பற்றிக் கொண்டான். ஜீவிகா, அவன் வீட்டை பார்த்து மிரண்டு முழித்தாள்.

   கார் சத்தம் கேட்டதும் , மதுமதி, “ஹையா” அம்மா.. அண்ணா.. வந்துட்டாங்க?!.. நான் போய் கூட்டிட்டு வரேன்?..என்று வாசலை நோக்கி ஓடினாள்.

  வாசலை நோக்கி போனவள், சில நிமிடங்களில்,அம்மா?!!… இங்க கொஞ்சம் வாங்களேன்?!… என்று ஹை டெசிபிலில் கத்தினாள்.

 

அந்த சத்தம் கேட்டு, மீனாட்சி என்னவோ? ஏதோ?என மனம் பதறியவராய், வெளியே வந்தார்.

   மீனாட்சி,என்னடி?என்ன? ஏன் இப்படி?கத்துற,வந்தவங்க என்ன நினைப்பாங்க? என்றார்.

 மதுமதி,அம்மா…?!அங்க பாருமா  என்றாள் வாசலை நோக்கி,

  மீனாட்சி, வாசலில் சக்தியும், ஜீவிகாவும்,ஜோடியாக நிற்பதை பார்த்தவர், அதிர்ச்சி அடைந்தார்.

  பின் நினைவு வந்தவராய், இருவரையும் உற்று கவனித்தார். ஜீவிகாவின் கழுத்தில் தாலி… சக்தி தான், கட்டி இருக்க வேண்டும். சக்தி, அவள் கையை இறுகப் பற்றி இருந்தான்.

   மீனாட்சி, மனதில் சிரித்துக் கொண்டார். வெளியே, கோபமாக இருப்பது… போல், முகத்தை வைத்துக்கொண்டு, சக்தி!? என்னப்பா..? இது? என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?!.. என்றார் ஜீவிகாவை பார்த்தபடி,…

   அவர், அப்படி பார்த்ததும்,பயந்த ஜீவிகா, தன் கையை, அவனிட மிருந்து,பிரித்தெடுக்க போராடி னாள்.ஆனால்.. முடியவில்லை, அவனை,இயலாமையுடன்,ஏறிட்டுப்பார்த்தாள்.

 

   சக்தி அவளிடம் குனிந்து, இப்ப நீ விலகிப் போனனு வை, எல்லார் முன்னாடியும், உன்னை கிஸ் பண்ணிடுவேன்.. எப்படி வசதி? என்றான்,புருவங்களை உயர்த்தி காட்டி,

அதில்,அவனை மிரண்ட பார்வை பார்த்தால் ஜீவிகா.

  அதை கண்ட சக்தி, ஐயோ!! ப்பா.. ஆ என்ன கண்ணுடா?? சாமி?? கொல்றடி என்றவன், மறுபக்கம் திரும்பி, தலை கோதிகொண்டான்.

(ஆம் இரண்டு மாதங்களும் இந்த கண்கள் தானே… அவனை தொந்தரவு செய்கிறது. பின் அவளின் அழகை முதன்முறை புடவையில், போட்டோவில் பார்த்தபோது, ஈர்த்தவள்,பின் பச்சை மலையில் கோபத்தில் அவள் புடவையை,அவிழ்த்த போது அவளின் எழில் கோலம் கண்டு ஒரு நிமிடம் மயங்கியவன், பின் கோவம் கொண்டு இம்சித் தான். தன்னை மயக்குகிறாள் என நினைத்து,)

   சக்தி, அம்மா..அன்னைக்கு உங்ககிட்ட சொன்னது தான், நான் எது செஞ்சாலும் கரெக்டா…, நல்லதுக்குதான்னு நினைக்கிறீங் கல .அதுபோல, நீங்க ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட் டேன்..மா என்றான்.

 

   மீனாட்சி, பெருமூச்சு விட்டவர், உள்ளே எட்டிப் பார்த்தார். நிறைய பேர் அமர்ந்திருந்தனர்.

 

அப்போதுதான், அவனுக்கு விளங்கியது. பெண் வீட்டில் இருந்து, ஆட்கள் வந்திருக்கிறார் கள் என்று.

 சக்தி, ம்மா..ஆ, என்னை….. மன்னி ச்சிடுங்க… உங்க கிட்ட சொல்லாம, கல்யாணம், பண்ணனதுக்கு….., இன்னைக்கு.. இவளை நான் கல்யாணம் பண்ணலைனா?? அடுத்த மாசம், இவளுக்கு வேற யாரோடும்…..கல்யாணம் நடந்து        இருக்கும். அம்மா..!? இவளை எதுக்காகவும்,.. யாருக்காகவும்,.. விட்டுக் கொடுக்க, எனக்கு மனசு வரல? மா,அதான் தாலி கட்டி, கூட்டிட்டு வந்துட்டேன்,உங்ககிட்ட  சொல்லாம, எனக்கு வேற வழி தெரியலமா??.. என்றான்.

 

   அஜய், மற்றும் லல்லி, சத்தம் கேட்டு, வெளியே…..வந்தனர். இவர்கள், போவதை பார்த்த, மற்றவர்களும், வெளியே வந்து விட்டனர்.

   அதில் ஒருவர்,என்ன.. மீனாட்சி அம்மா? எங்களை பரிசம் போட வர சொல்லிட்டு, உங்க புள்ள வேற, ஒரு பொண்ண கல்யாணம், கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாரு. என்னம்மா இதெல்லாம்?? என்றார்.

 

 பெண்ணின் அம்மா, இப்படி நடக்கும்னு முன்னாடியே தெரியும் னா ஏன்?? எங்களை வரச் சொல்லி அவமானம் படுத்தினீங்க..?.இத நாங்க சும்மா விட போறதில்ல..? என்றார்.

   அதில், கோவம் கொண்ட அஜய், என்ன எல்லாரும் ஓவரா பேசுறீங்க அண்ணா… அவருக்கு  பிடிச்ச… பொண்ண, கட்டிக்கிட்டாரு… அது அவருடைய இஷ்டம். உங்களை வர வெச்சதக்கு, எங்க எல்லார் சார்பாக, மன்னிப்பு கேட்கிறோம்.

  ஆனால்,அம்மாகிட்ட, குரலை உயர்த்தி, பேசுற வேலை வெச்சுக் காதீங்க..? அவங்களுக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது.எதுவும் தெரியாம பேசாதீங்க??

 

அப்புறம்,அவ்ளோதான்….நீங்க போகலாம்..என்றவன்,பாக்கியம் அக்கா, இரண்டு பேருக்கும்,ஆரத்தி எடுங்க..,மதுமா பக்கத்துல, நில்லு. நீயும் ஆரத்தி எடு…அண்ணா…! நீங்களும், அண்ணியும், சேர்ந்து நில்லுங்கண்ணா என்றான்.

   அவன் அப்படி கூறியதில், சக்தி அவனை, மெச்சுதலாக பார்த்தான். அஜய், லல்லி நீ போய், பால் பழம் ரெடி பண்ணு.பாக்கியம் அக்கா அவளுக்குகூட ஹெல்ப் பண்ணு ங்க,என்றான். மது நீ வந்து ஆரத்தி எடு என்றான்.

  அவன் சொன்னவுடன், மதுமதி தான், ஆரத்தி எடுத்தாள்.ஜீவிகா அமைதியாக,நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

   மீனாட்சி, இரண்டு பேரும் வலது கால் எடுத்து வச்சி உள்ளே வாங்க.. என்றார்.

  இருவரும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றனர்.
மீனாட்சி, வாம்மா, வந்து விளக்கு ஏத்து என்றவர், இருவரையும் நிற்க வைத்து அவளை விளக்கு ஏற்ற வைத்தார். 

சக்தி,பொண்ணோட,நெத்திவகுட்டுல, குங்குமம் வைப்பா.. என்றார்.

 சக்தி, குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில், வைத்தான். மீனாட்சி, மனம் நிறைந்துபோனார் பின்,பால்,பழம்,கொடுக்கப்பட்டது.

   மீனாட்சி, சக்தி..டிரஸ் மாத்திட்டு போய், ரெஸ்ட் எடுப்பா.., நீயும், போமா..என்றார்.

  உடனே சக்தி, மா அவ பேரு ஜீவிகாமா,என்றான்.அதில்,சிரித்தவர், சரிப்பா… இனி அப்படியே… கூப்பிட்டுறேன் என்றவர்,

 

   இரண்டு பேரும் ரூம்க்கு போங்க.. சாப்பிடும் போது கூப்பிடுகிறேன் என்றார்.

   புது இடம்,புது உறவுகள், இதில் தான் மட்டும் தனியாக இருப்பதாக உணர்ந்தாள்.உடனே அவள் கண்கள் கலந்துவிட்டது.

தொடரும்…
 
  
 
   

3 thoughts on “முகவரிகள் தவறியதால் 19”

  1. Услуги доставки алкоголя на дом: удобный и быстрый сервис
    алкоголь с доставкой на дом москва [url=http://dostavka-alcogolya-nochyu-club.ru/]http://dostavka-alcogolya-nochyu-club.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top