ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 29

அத்தியாயம் 29                              சக்தி, அவளை வாரி அணைத்துக் கொண்டான், அழாதடி செல்லம், குட்டிமா… அழாதடி…, இனி உன் கண்ணுல, இருந்து கண்ணீரை நான் பார்க்க கூடாது, சரியாடி அம்மு, என்னை மன்னிச்சிடு ‘ஐ லவ் யூ’ டி பட்டு….என்றவன் முகம் முழுவதும் முத்தாடினான். 

அதன் பிறகு, என்ன அவளை மொத்தமாக கொள்ளை இட்டு, பயத்தை போக்கி, தன் மொத்த காதலயும், அவளுக்கு கொடுத்து அந்த இடத்தையும் இரவையும் இனிமை யாக மாற்றினான். ஜீவியின் சக்தி. 

அன்று, வலிகளை மட்டுமே.. கொடுத்தவன் இன்று காதலை, மட்டுமே கொடுக்கிறான் அவளுக் கு மட்டும்.

 காலை, அழகான விடியல் இருவ ருக்கும். சக்தி, ‘குட் மார்னிங் டி பொண்டாட்டி’ என்றான். 

அவளும், ‘குட் மார்னிங்  புருஷா’ என அவன்,கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.

அதில் சிரித்த, சக்தி அம்மு..வா டைம் ஆச்சு. வீட்டுக்கு போகணும், சாப்பிட்டு கிளம்பலாம் என்றான். அதன்படி இருவரும் சாப்பிட்டனர். கிளம்பும் போது, வேணியிடம் சென்றவள், அக்கா நான் கிளம்பு றேன் என்றாள். 

 வேணி,நல்லபடியா? போயிட்டு…. வாங்கமா என்றவர், ஜீவிமா என்றார் .

ஜீவிகா, சொல்லுங்க அக்கா என்றாள் 

வேணி,நான் உங்கள அன்னைக்கு கேட்டேன்ல, ஐயா, உங்கள காதல் பண்றாங்களானு, அதுக்கு தான், கடத்தி வெச்சிருந்தாங்களான்னு… 

 ஜீவிகா,ஆமாகா, கேட்டீங்க தான், நான் கூட இல்லைனு.. சொன்னே னே… என்றாள்.

வேணி, ஜீவிமா, நான் ஐயா கிட்ட, ஒரு நாள் கேட்டேன்.அய்யா, நீங்க போனதுக்கு அப்புறம், அடிக்கடி, இங்க வருவாங்க, தாடி எல்லாம் வச்சுக்கிட்டு,சோகமா உட்கார்ந்து இருப்பாங்க.ஒரு நாள்,சாப்பாடு கொண்டு போகும் போது, அழுது  கிட்டு இருந்தாங்க. கையில கத்திரி க்கோல் இருந்தது. 

என்னை பார்த்ததும், அத கீழே போட்டுட்டு கண்ண,தொடச்சிக்    கிட்டாக…. 

அப்ப நான், உங்க கிட்ட, கேட்ட மாதிரி, ஐயா கிட்ட கேட்டேன். அதுக்கு ஐயா,ஆமா வேணியக்கா ரொம்ப…காதலிக்கிறேன். அதான்.. கடத்திக்கொண்டு வந்து வச்சேன் அப்படின்னு, சொன்னாங்க.

கொஞ்சம் பதமா…., சொன்னா…. புரிஞ்சு இருப்பாங்க..,தம்பி. அடிச்சி இருக்க வேணாம்னு..பயந்துகிட்டே சொன்னேன்

தம்பி,என்கிட்ட ஆமாக்கா.. அடிச்சி இருக்க கூடாது தான். பெரிய தப்பு பண்ணிட்டேன், அவ என்னை விட்டுட்டு.. போயிட்டா.. அக்கா.  ரொம்ப வலிக்குதுன்னு…. சொல்லி கண் கலங்குச்சுமா. 

 நான் சொன்னேன் ஏன்?!…தம்பி கவலைப்படுறீங்க, உண்மையா அன்பு வெச்சா அதுவே, அவங்கள சேர்த்து வெச்சிடுமாம். அதனால கலங்காதீங்க…. தம்பி. ஜீவிமா, உங்கள புரிஞ்சி ஏத்துப்பாங்கன்னு சொன்னேன். 

 நான் சொன்ன மாதிரியே, நடந்து ருச்சு. ரெண்டுபேரும் சேர்ந்துட்டீங் க. நீங்க ரெண்டு பேரும், நல்லா இருக்கணும் என்றார் .

 இது ஜீவிகாவிற்கு, புது தகவல் தன்னவனை,திரும்பி பார்த்தாள்.  அவன் கண்சிமிட்டி,முத்தமிட்டு… போலாமா!? என்றான் சைகையில்.

 ஜீவியும், அவன் காதலை, கண்டு வியந்தவள், அழுகை அடக்கிய படி, வரேன்கா.. என்று கூறியவள் அவனோடு பயணப்பட்டாள்.

 வரும் வழியில், எல்லாம் அவனை பார்த்துக்கொண்டே வந்தாள் ஜீவி. சக்தி, என்னடி.. அம்மு.. அப்படி பாத்துட்டே,வர ஏதாவது என்கிட்ட சொல்லனுமா?…  என்றான். 

அவள் இல்லை…எனக் கூறியவள், உங்க காதல்,என்னை மூச்சடைக்க வைக்குது.., என்றாள். அவள் அப்படி கூறியதும், காரை ஓரமாக நிறுத்தினான் சக்தி.

சக்தி, வேணியக்கா,சொன்னாங்க ளாடி என்றான். ஜீவிகா ஆமா.. என தலை யாட்டியவள் தாவி.. அவன் இதழோடு, இதழ் பொருத்தி க்கொண்டாள் ,

  வெளியே.. லேசான, மழை தூறல்.. ரேடியோவில், இளையராஜா பாடல், 

 

“முகிலினங்கள் அலைகிறது முகவரிகள் தொலைந்தனவோ,

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ,

முகிலினங்கள் அலைகிறது முகவரிகள் தொலைந்தனவோ,

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”

 

“நீல வானிலே, வெள்ளி ஓடைகள்

ஓடுகின்றதே, என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்”

“இளைய நிலா பொழிகிறதே”

 

 மனையாளின் முத்தம், என வேறு உலகத்தில் இருந்தான் சக்தி. அவளின் மென்மையான முத்தத் தை, வன்மையாக மாற்றிக் கொண்டான்.அவள், மூச்சிக்கு ஏங்கியதும் தான்… அவளை விட்டான் 

 ஆனாலும், ஜீவிகாவிற்கு அவன் மீதான ஆசை குறையவில்லை. அவன் சட்டையை பிடித்து இழுத்தவள், அவனை வெளியே அழைத்து வந்தாள்.சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

மழைச்சாரல்.. அவர்கள் இருவர் முகத்திலும் பட்டது. அழகான சூழ்நிலை சில்லென காற்று.. சுற்றிப் பார்த்தால் யாரும் இல்லை.

 அவனைப் பார்த்து ரசித்தவள், என்னை ஏன்? இவ்வளவு லவ் பண்றீங்க.. அப்படி…? நான்…. உங்களுக்கு ஒன்னும் பண்ணல யேங்க.. ஏன் சண்டியரே?.. எனக்கு மூச்சு அடைக்குது, என்னால முடியல..  என்றவள் சத்தமாய்… 

‘ஐ லவ் யூ’உங்கள ரொம்ப.. ரொம்ப காதலிக்கிறேன். என்று  அவள் கையில் இருந்த மோதிரத்தை, கழட்டி முழங்கால் இட்டு,அமர்ந்து அவன் சுண்டு, விரலில் தன் மோதிரத்தை அணிவித்து முத்தமிட்டாள்.

 பின் எழுந்தவள், இதுக்கு மேல என் காதலை சொல்ல…., நல்ல சிச்சுவேஷன் அமையும்னு எனக்கு தோணலங்க.. என்றால் உணர்ச்சி பெருக்கில்.

சக்தி, அவளை அணைத்துக் கொண்டவன், ரொம்ப, தேங்க்ஸ்டி அம்மு…, எங்க, நீ என் காதலை, புரிஞ்சுக்காம.. போயிடுவியோனு… பயந்துட்டேன்டி இப்ப ரொம்ப…  “ஹாப்பியா ” இருக்கேன்…. டி கத்தனும்.. போல இருக்குடி அம்மு என்றான். 

ஜீவிகா, அவன் தோளில் கை போட்டவள் கத்துங்க,.. என்றாள் கண்ணடித்து, 

சக்தி, உடனே  “ஹே ஹூ” ‘ஓ’ ‘ஊ’ ‘ஏ’ … என கத்தியவன், “ஐ லவ் யூ” டி பொண்டாட்டி என்றவன் அவளை முத்தமிட்டு கட்டிக் கொண்டான். அந்த அழகான நினைவுகளுடன், வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

அன்று,லல்லியின் வளைக்காப்பு. வீடு விழாக்கோலம்,பூண்டிருந்தது ஜீவி, எல்லா வேலையும், இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.

மீனாட்சி, போட்டுக் கொள்ள நிறைய நகையை, ஜீவிகாவுக்கு கொடுத்தார். ஆனால், அவள் லேசான, ஒரு சில நகைகள்,மட்டும் எடுத்துக்கொண்டு, இதுவே, அதிக ம் தான் அத்தை, உங்களுக்காக, தான் போடுறேன் என்று சென்று விட்டாள்.

 வந்தவர்கள், ஜீவிகாவை பார்த்து, இதுதான். மீனாட்சி மருமக…, சக்தி யோட பொண்டாட்டி, சென்னைல இருந்து கட்டிகிட்டு… வந்தானாம். நிறைய படிச்சிருக்கலாம் என்றார்கள். 

மீனாட்சியின்,நெருங்கிய சொந்தம் ஒருவர், என்ன மீனாட்சி.. உன் மருமக…. கழுத்துல, ஒன்னும் காணோம். வீட்டுக்கு மூத்த மருமக, கழுத்து நிறைய போட்டா தானே.. உனக்கு மதிப்பு என்றார்.

மீனாட்சி,, நான் சொல்லிட்டேன்…. பெரியம்மா, எனக்கு இதுவே, போதும்னு சொல்லிட்டா.அவங்க வீட்ல இருந்து, வேற நகை, சீர்,  எல்லாம் கொடுத்து இருக்காங்க என்னவோ…., இந்த காலத்து பிள்ளைங்க, போட மாட்டேங்குது… என்றார் மருமகளை விட்டுக் கொடுக்காமல்… 

சரி மீனாட்சி,, கல்யாணத்துக்கு தான் சொல்லல, இந்த மாதிரி பெரியவன் பொண்டாட்டிக்கு, நடக்கும்போது சொல்லு என்றார்.  இப்படியே, பேசிக்கொண்டு சாப்பிடும் நேரமும் வந்தது. 

சக்தி, அவளைக் கூட்டத்தின், நடுவே பிடித்து  இழுத்து, தனியே தள்ளி சென்றான்.. ஜிவி,அவன் மீசையை, பிடித்து இழுத்தவள், என்ன “சண்டியரே” பொண்டாட்டி ய… தள்ளிட்டு வந்து இருக்கீங்க…. என்றாள் வாய்க்குள் நாக்கை சுழற்றி.. புருவம் உயர்த்தி,

சக்தி, என் பொண்டாட்டிய… நான் தள்ளிட்டு,வரேன், எவன் கேட்பா ன்? என்றான், அவளை தன் கை வளை விற்குள் வைத்த படி, ஜீவிகா ம்ம்..அதுவும் சரிதான், என்றாள் மார்க்கமாய் 

அவள் உதட்டை பிடித்து, இழுத்த வன் என்னடி.. பொண்டாட்டி.. இன்னைக்கு ரொம்ப.. அழகா.. இருக்க என்றான். 

ஜீவிகா, அங்க மட்டும்,என்னவாம்.. நீங்களும் தான், ஹீரோ கணக்கா, அழகா…,  இருக்கீங்க. எல்லார் கண்ணும்…, உங்க மேல தான், ஃபங்ஷன் முடிஞ்சு,சுத்தி போடணு ம்,என்றவள் அவள் கண்மையை எடுத்து, அவன் காது பின்னாடி, வைத்து விட்டாள்.    

அதில் சிரித்தவன்,  அவளை இறுக்கி அணைத்து, சரிடி…., பொண்டாட்டி வந்த, வேலைய  பாக்கலாம் என்றான் அவள் உதட்டை, பிடித்துக் கொண்டே. 

 என்ன வேலை, பார்க்கணும்.. அதான் செஞ்சுட்டு இருக்கேனே என்றாள் , தன் கையில் இருந்த பொருளை காட்டி . அடியே! மக்கு பொண்டாட்டி.. புருஷனுக்கு கொஞ்சம், எனர்ஜி.. ஏத்தி விட்டு ட்டு போடி…, என்றவன் அவள் இதழை, இழுத்து.. உறிஞ்சி கொண் டான். அவள் உதட்டை கடித்து சுவைத்து, கொண்டு இருந்தான். மதுவின் சத்தத்தில், இருவரும் மூச்சு…வாங்க பிரிந்து நின்றனர், கள்ளச் சிரிப்புடன். 

  

தொடரும்….

 

  

 

   

  

 

 

 

   

   

 

  

  

 

 

2 thoughts on “முகவரிகள் தவறியதால் 29”

  1. Кабины для спецтехники в наличии: защита, комфорт и надежность
    кабина на спецтехнику [url=https://xn—–6kceqhatfamjizg3a7au2dr1h5d.xn--p1ai/]кабина на спецтехнику[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top