பூ 15
மயூரன் தன் மகள் தன்னுடன் வந்துவிட்டாள் என்று குதுகலத்துத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
நேகாவோ தந்தையின் சந்தோசத்தை காணாமல் தாயை பிரிந்து வந்துவிட்டோமென்ற கவலையில் ஜன்னல் பக்கம் கண்களை வைத்திருந்தது. நேகாவின் வகுப்பில் கிளாஸ் டீச்சராக இருந்தமையால் நேகாவுக்கு மான்வியை பிரிந்திருக்கும் நேரம் அதிகம் இருக்கவில்லை. மாலையில் பள்ளி விட்டு வந்தாலும் அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றித் திரியும் சுட்டிப் பெண். நேத்ரன் அப்படியில்லை அவனுக்கு உறங்கும்போது மட்டும் மான்வி பக்கம் இருந்தால் போதும். தனக்கு தாயும் வேணும் தந்தையும் வேண்டுமென்று ஆசைப்பட்டு மயூரனுடன் வந்துவிட்டது.
ஆனால் நேகாவோ “அம்மா! அம்மா!” என்று உதடுகளை அசைத்துக் கொண்டேயிருந்து.
பெண்குழந்தைகளுக்கு அப்பா தானே பிடிக்கும் என்னோட பொண்ணுக்கும் நான் பிடிச்சுப்போய்விட்டேன் என்று பெருமைப்பட்டு மனதில் புதுவித ஆனந்தத்தோடு ஸ்டேரிங்கில் தாளம் போட்டவன் மகளை திரும்பி பார்த்தான். நேகாவோ இப்போது விசும்பத்தொடங்கியது.
குழந்தையின் இதழ் பிதுக்கலில் குழந்தைக்கு மறுபடியும் உடம்பு சரியில்லையோ என்று பதட்டப்பட்டு காரை ஓரமாக நிறுத்தியவன் அவசரமாக நேகாவின் சீட் பெல்ட்டை கழட்டி “அம்முக்குட்டி என்னாச்சுடா தங்கம் பாப்பாவுக்கு என்ன பண்ணுது. என் பொண்ணோட கண்ணுல தண்ணி வரக்கூடாது எப்பவும் சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கணும்” என்று குழந்தையின் தலையை ஆதுரமாய் நீவிவிட்டான்.
“எ.எனக்கு அம்மாவை பார்க்கணும் அம்மாகிட்ட கூட்டிட்டு போங்க” என்று மயூரனின் நெஞ்சை நேகாவின் கண்ணீர் நனைத்தது.
மயூரனுக்கு உயிரே நின்று விட்டது குழந்தையின் அழுகையில்.
“சரி சரி அழாதே செல்லம்… இ…இப்ப இப்பவே அம்மாகிட்ட அழைச்சிட்டு போறேன்” என்றதும்தான் குழந்தையின் அழுகை சற்று மட்டுப்பட்டது.
குழந்தை மயூரனின் சட்டையில் மூக்கை தேய்க்கவும் அவனோ பேண்ட் பாக்கெட்டுக்குள் இருந்து கைக் குட்டையை எடுத்து மகளின் கண்ணீரை துடைத்து விட்டு மூக்கில் வழிந்த நீரையும் மெதுவாய் சுத்தப்படுத்தி நேகாவை தூக்கிக்கொண்டு இறங்கி நிற்க வைத்து காருக்குள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மகளின் முகத்தை கழுவிவிட்டு காரில் இருந்த பூதுண்டால் மகளின் முகத்தை மெதுவாக துடைத்துவிடவும் தந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்க்க “அப்பாவை பிடிச்சிருக்கா பாப்பா?” என்று மகளின் கன்னத்தை பிடித்தான்.
மயூரன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் “நாம எப்போ அம்மாவை பார்க்க போவோம்?” என நேகா அடுத்த வார்த்தை பேசியதும் மயூரன் உடைந்தே போய்விட்டான்.
“இப்பவே போகலாம் அதுக்கு முன்ன அப்பா உன்னை பீச்சுக்கு அழைச்சிட்டு போறேன் அப்பா கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு அம்மாகிட்ட அழைச்சிட்டு போகவா செல்லம்” என்று குழந்தையின் உயரத்துக்கு குனிந்து கெஞ்சலாக கேட்டான் மயூரன்.
“கொஞ்ச நேரம் தான் சரியா” என்றது மெல்லிய குரலில் நேகா.
“அப்பாடா” என்று பெரும்மூச்சு விட்ட மயூரனோ தன் மடியில் வைத்தே காரை ஓட்டினான்.
பீச்சில் சில குழந்தைகள் தந்தையுடனும் தாயுடனும் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். மகளை தூக்கிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றவன் கடல் அலையில் மகளை இறக்கி விடவும் “பயமா இருக்கு” என்று மயூரனுடன் கைக்குள் அடக்கிக்கொண்டு “அம்மா கடல் தண்ணி இழுத்துட்டு போயிடும் என்னை தண்ணில நிற்க விடமாட்டாங்க ஓரமா உட்கார்ந்து கடல் அலையை பார்த்துட்டு கிளம்பிடுவோம்” என்றது கண்ணை உருட்டி.
“அப்பா உன்கூடவே இருப்பேன் அம்மு வா தண்ணியில காலை நனைக்கலாம்” என்று மகளின் பிஞ்சு பாதத்தை தண்ணீரில் நனைய விடவும் நேகா கண்ணை மூடிக்கொண்டது பயத்தில்.
“கண்ணை திறந்து பாரு அம்மு உன் காலுல குட்டி அலை படுது பாரு” என்றான் உற்சாக குரலில்.
நேகாவோ கண்ணை திறந்து கீழே பார்த்ததும் தன் கால்களில் அலை அடித்து அடித்துச் செல்லவும் குட்டி வாண்டுக்கு இந்த விளையாட்டு பிடித்துப்போனது. “ஐ நல்லாயிருக்கு” என்று தந்தையுடன் கையை பிடித்துக்கொண்டு கடல் அலையோடு விளையாண்டதில் நேகா போட்டிருந்த ஆடைகள் நனைந்து விட்டது.
“அச்சோ அப்பா என்னோட ட்ரஸ் நனைஞ்சுடுச்சு அம்மாகிட்ட திட்டு வாங்கப்போறேன்” என்று தலையில் கையை வைத்தது. மான்வி ஏதும் தவறு செய்து விட்டால் தலையில் கையை வைத்துக்கொள்வாள். “தலையில கை வைக்க கூடாதுடி மக்கு பொண்ணு” என்று மயூரன் பல முறை அவளை செல்லமாக கண்டித்து இருக்கிறான்.
ஆனால் மகளை கண்டிக்க அவனுக்கு மனம் வருமா! குழந்தையின் தலையில் வைத்த கையை எடுத்து விட்டு “இப்படி தலையில கையை வைக்ககூடாது சரியா” என்று பதமாய் கூறி மகளை பக்கத்தில் இருந்த மாலுக்கு கூட்டிச்சென்று குழந்தைக்கு தேவையான ட்ரஸ் எடுத்து ஈரமான உடையை மாற்றிவிட்டு புது ட்ரஸ் போட்டுவிட்டான். மஞ்சள் நிற ஃப்ராக் அடுக்காக அடுக்காக இருந்தது.
நேகாவிற்கு ட்ரஸ் எடுக்கும்போது மறக்காமல் நேத்ரனுக்கும் வாங்கிவைத்துவிட்டான் மயூரன் அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
மான்விக்கு மஞ்சள் நிறம் என்றால் அலாதிப்பிரியம். மகளோடு அணைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டான். மயூரனின் தாடையை பிடித்து “அப்பா அம்மாகிட்ட போலாம்” என்று மறுபடியும் தாயை தேடியது நேகா.
‘இந்த அப்பாகூட இருக்குறேன்னு சொல்லமாட்டியா குட்டி!’ என்று மகளை ஏக்கமாக பார்த்தான்.
“போகலாம் எனக்கு பசிக்குது அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவாங்க நான் சாப்பிட்டதும்தான் அம்மா சாப்பிடுவாங்க” என்று நேகா சிணுங்கியதும்
நேகாவிற்கு வாங்கிய பொம்மைகளை மாலில் வேலை பார்க்கும் 60 வயது மதிக்கத்தக்க செக்கியூரிட்டியிடம் பொம்மைகளை கொடுத்து கார் டிக்கியில் வைக்க சொல்லிவிட்டு நேகாவுடன் காரில் ஏறினான். பொம்மைகளை கார் டிக்கியில் வைத்த நபருக்கு ஐநூறு ரூபாய் தாளை கொடுக்க அவரும் புன்னகையுடன் வாங்கிக்கொண்டு நேகாவிற்கு கையை அசைத்தார். நேகாவும் “பை தாத்தா” என்று கையசைத்தது.
காரை மெதுவாக தேர் அசைவது போல ஓட்டினான். இன்னும் சில மணித்துணிகள்தானே மகள் தன்னோடு இருப்பாள் என்று எச்சிலை விழுங்கிக்கொண்டான்.
“சீக்கிரமா போங்க” என்று நேகா மயூரனின் கையை பிடித்தது.
“ம்ம் போகலாம் பாப்பா” என்றவனோ “அப்பாவுக்கு ஒ.ஒரு முத்தம் கொடுக்குறியா?” அத்தனை ஆசையோடு கேட்டிருந்தான் மயூரன்.
“நீங்க என்னை அம்மாகிட்ட அழைச்சிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க அப்போதான் முத்தம் கொடுப்பேன்” என்று கண்ணை உருட்டியது நேகா.
மயூரன் மான்வியிடம் முத்தம் கேட்டால் “உங்களுக்கு முத்தம் கொடுத்தா என்னை அவுட்டிங் அழைச்சிட்டு போகணும் ப்ராமிஸ் பண்ணுங்க” என்று கண்ணை உருட்டுவாள் மான்வி. ஒரு கணம் மான்வி மயூரன் கண்முன்னே வந்துச் சென்றாள்.
“ப்ராமிஸா அம்மாகிட்ட அழைச்சிட்டு போறேன்” என்று கண்ணைச் சிமிட்டி மெலிதாய் இதழ் விரித்து குழந்தையிடம் முத்தம் கொடுக்கச்சொல்லி கன்னத்தை காட்டினான்.
மகளின் முதல் முத்தம் மயூரனுக்கு ஐந்து வருடங்கள் கழித்து கிடைத்திருக்கிறது. தந்தையின் கன்னத்தில் ஈர முத்தத்தை பதித்தது நேகா. மயூரனுக்கு கண்ணில் ஆனந்தக் கண்ணீர் கன்னம் வழியாக கடகடவென வழிந்தது.
“எதுக்கு அழறீங்கப்பா?” என்று கண்ணீரை துடைத்து விடும் மகளின் முகத்தை பார்த்தான்.
மான்வியின் குழந்தை ஆயிற்றே நேகா. கைக்குட்டையை எடுத்து மயூரனின் கண்ணீரை துடைத்து விட்டு “கண்ணுல தூசி விழுந்துடுச்சா அம்மாகிட்ட சொன்னா எடுத்துவிடுவாங்க” என்று மகள் கூறியதும் மயூரன் மகளை அணைத்துக்கொண்டு விசும்பினான்.
அன்று இரவு நேரம் தோட்டத்தில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் நின்று வானத்தில் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை இரசித்துக்கொண்டிருந்த மான்வியின் கழுத்தில் முகம் புதைத்து “மானு டார்லிங் என்ன பண்ணுறீங்க மாமாவுக்காக காத்திருக்கீங்க போல” என்று அவளது கழுத்தில் மீசையால் உரசவும்
“மாமு கூசுது தள்ளி நில்லுங்க” என்று மயூரன் புறம் திரும்பி “நான் உங்க மேல கோபமா இருக்கேன் தெரியுமா?” என்று மூக்கை சுருக்கினாள்.
“சாரி! சாரி! மானு டார்லிங் அடுத்த வாரம் இன்ஸ்பெக்ஷன் வராங்கல்ல பைலில் சைன் வாங்க ஸ்டாப்ஸ் வந்துட்டாங்க நாளைக்கு நேரமே வந்துடறேன் என் டார்லிங்கை அவுட்டிங் அழைச்சிட்டு போக இப்ப இந்த அத்தானை மன்னிச்சு ஒரு முத்தம் கொடேன்” என்று அவளது கன்னத்தை கையால் தாங்கினான்.
“நோ நோ நான் கொடுக்கமாட்டேன் மாமு இன்னிக்கு முழுக்க நான் ஒரு முத்தம் கூட கொடுக்க மாட்டேன்” என்று முகத்தை தாடையில் வெட்டி திரும்பி நின்று கண்ணைச்சிமிட்டி சிரித்தவள் ‘நான் இரண்டு மணிநேரமா உங்களுக்காக காத்திருந்தேன் தெரியுமா! இப்போ கொஞ்ச நேரம் நீங்க என்கிட்ட கெஞ்சி நில்லுங்க’ என்று கோபமாய் இருப்பது போல நின்றுக் கொண்டாள்.
அந்த நேரம் காற்று தென்றலாய் வீச பக்கத்திலிருந்த மல்லிகை பந்தலில் இருந்த பூக்கள் அவர்கள் மீது பூச் சாரலாய் அவர்கள் மீது பூ மழை தூவியது. அதில் ஒரு மல்லிகைப் பூ மயூரனின் கண்ணில் பட்டு விட “ஆஆ மானு என் கண்ணுல ஏதோ விழுந்துடுச்சு வலிக்குது” என்று ஒற்றை கண்ணை மூடிக்கொண்டு அலறினான் நடிப்பாய்.
“என்னாச்சு மாமு!” என்று பட்டென பதறி திரும்பி மயூரனை பார்க்க அவன் ஒற்றை கண்ணை பொத்திக்கொண்டு “என் கண்ணுல தூசி விழுந்துடுச்சு போல பாரு டி” என்று வெறுமனே கண்களை தேய்த்துக்கொண்டான்.
“கண்ணை தேய்க்காதீங்க மாமா நான் தூசியை எடுத்து விடறேன்” அவள் கோபம் மறந்து தன்னவனின் கண்ணில் நாவால் பூ காம்பை கண்ணிலிருந்து எடுத்து விட்டவள் அவனது மோக அம்பு பார்வையில் கண்சொருகினாள். அவனோ சோம பானம் தரும் அவளது இதழில் ஆழப்புதைத்தான் மயூரன். இருவரின் முத்தத்தை கண்டு பௌர்ணமி நிலா மேகத்தில் மறைந்துக் கொண்டது.
“மானு! மானு!” என்று சத்தம் இல்லாமல் குலுங்கி அழுதான் மகளை அணைத்தபடியே.
நேகாவோ இன்னும் முத்தம் வேணும்னு அழறாங்களோ அப்பா என்று குழந்தையாக ஏதோ புரிந்துக் கொண்டு மயூரனின் அணைப்பிலிருந்து விலகி “அப்பா அழாதீங்க பாப்பா நிறைய முத்தம் கொடுக்குறேன்” என்று தந்தையின் முகத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தது.
“பாப்பா அப்பா உனக்கு முத்தம் கொடுக்கவா ஆசையா இருக்கு” என்று தன் குழந்தையிடம் கேட்கும் முதல் தந்தை இவன்தான்.
எப்போதும் கோபத்துடன் முகத்தை உர்ரென்று வைத்து மருந்துக்கும் சிரிக்காத மயூரன் இன்று தன்னை பார்த்து சிரிக்கிறான் அதுவும் முத்தம் கொடுக்கவாவென்று கேட்டதும் நேகா சிறு குழந்தையல்லவா பெரிய மனிதர்களை போல நெஞ்சில் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாத சிறு பிஞ்சு.
“ம்ம் முத்தம் கொடுத்துக்கோங்க” என்று மயூரன் பக்கம் கன்னத்தை காட்டியது.
அவனோ நேகாவின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொண்டேயிருந்தான்.
“போதும்பா பாப்பாவுக்கு கன்னம் வலிக்குது” என்று அவன் குறுந்தாடியை பிடித்துத்தள்ளியது.
மயூரனோ மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டு “போலாமா?” என்றான் கண்ணைச் சிமிட்டி.
“அம்மாவை பார்க்கத்தானேப்பா” என்றது குழந்தை தலையைச் சாய்த்து.
“ம்ம் அம்மாகிட்டதான்டா அழைச்சிட்டு போறேன்” என்றவனோ அருணாச்சலம் வீட்டுக்கு காரை விட்டான்.
நேகாவின் முகத்தில் அம்மாவை பார்க்க போகிறோமென்று சிரிப்பு இருக்க ஐஞ்சு வருசமா இந்த சிரிப்பை மிஸ் பண்ணியிருக்கேன்டா பாப்பா இனிமே அப்பா உன் சிரிப்பை மிஸ் பண்ணவே மாட்டேன் என்று மனதில் எண்ணியவன் மகளை பார்த்து புன்னகையுடன் காரை ஓட்டினான்.
நேத்ரனுடன் வீட்டுக்குச் சென்றவளுக்கு அழுகை நின்ற பாடேயில்லை. “மாப்பிள்ளை கிட்ட குழந்தையை கொடுக்க முடியாதுனு அவரை எதிர்த்து பேசி குழந்தையை வாங்கிட்டு வந்திருக்கணும். அதைவிட்டு இப்படி அழுதுக்கிட்டேயிருந்தா மாப்பிள்ளை நேகாவை அழைச்சிட்டு வந்துடுவாங்களா… நீ அழறதை பார்த்து நேத்ரனோட முகம் எப்படி வாடியிருக்கு பாரு மான்வி… குழந்தை யார்கூட இருக்கா அவளோட அப்பாகிட்டதானே இத்தனை நாளாய் நீ கண்ணு பொட்டு தூங்காம குழந்தையை கவனிச்சிக்கிட்ட அவங்களும் கொஞ்ச நாள் பார்க்கட்டும் அப்போதான் நீ குழந்தைகளை தனியா வச்சு எவ்வளவு கஷ்டப்பட்டனு மாப்பிள்ளைக்கு புரியும். நேத்ரன் உன்னையே பார்த்துட்டு இருக்கான் அவனுக்கு சாப்பாடு ஊட்டு” என்று இட்லி தட்டை மான்வியின் கையில் கொடுத்தார்.
நேத்ரனும் மான்வி பக்கம் வந்து உட்கார்ந்து வாயை திறந்தான். கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு நேத்ரனுக்கு இட்லி சட்னியில் தொட்டு ஊட்டினாள். மகளுக்கு ஒரு வாய் மகனுக்கு ஒரு வாய் என்று மாறி மாறி ஊட்டும் தாய் இப்போது மகன் ஒருவனுக்கு மட்டும் ஊட்டும் நிலை வர அவளது மனது நேகாவை தேடியது.
மயூரன் காரை நிறுத்தவும் மயூரனை திரும்பி பார்க்காமல் கூட கார் கதவை திறந்து ஓடியது நேகா.
மான்வியின் அறைக்குள் ஓடிச் சென்ற நேகாவோ “அம்மா நான் வந்துட்டேன்” என்று ஓடிவந்து மான்வியின் கழுத்தை கட்டிக்கொண்டது.
மான்வி தான் காண்பது கனவோ என்று ஒருநிமிடம் தடுமாறினாள்.
மகள் தன் கன்னத்தில் முத்தம் கொடுக்கவும் கனவு அல்ல நிஜம் என்று தெரிந்ததும் “யா.யாரு கூட வந்த நேகா?” என்று வாசலை எட்டிப்பார்த்தாள்.
கையில் பொம்மைகளுடன் மயூரன் நின்றிருந்தான். நேகாவின் பேச்சு சத்தம் கேட்டு அருணாச்சலமும் ஜெயசீலனும் மான்வியின் அறைக்கு வந்தனர்.
மயூரன் மான்வியின் அறைக்குள் செல்லாமல் நின்றிருப்பதை கண்ட ஜெயசீலனை “வாங்க மாப்பிள்ளை” என்று மரியாதை கொடுத்தார்.
அருணாச்சலமோ “மாப்பிள்ளையாம் யாரு மாப்பிள்ளை இவனா என் பேத்திக்கு புருசன்! அவளுக்கு நான் வேற மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்” என்றதும் மயூரன் ஷாக் அடித்ததை போல அருணாச்சலத்தை திரும்பி பார்த்தான்.
மான்விக்கும் இது புதிதான செய்தி அவளுமே மகளுக்கு ஒருவாய் ஊட்டியதோடு அப்படியே அசையாமல் இருந்தாள்.
“என்னடா நீ மட்டும்தான் கல்யாணம் பண்ணுவியா நானும் என் பேத்திக்கு கல்யாணம் பண்ணுவேன் மாப்பிள்ளை பார்த்தாச்சு!” என்று அவர் கைத்தடியால் மயூரனின் தோளில் இடித்தார்.
மயூரனோ மான்வியை பார்த்தான். “என்னடா என் பேத்தியை பார்க்குற டிவோர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து வாங்கிட்ட. அடுத்த ஆறு மாசத்துல டிவோர்ஸ் கிடைச்சிடும் நீ யாழினியை கல்யாணம் பண்ணும்போது என் பேத்தி மட்டும் ஏன் தனியா இருக்கணும். மாலதி ஸ்கூலில் பிரின்சிபலா இருக்கும் இளமாறனை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணியாச்சு. நீ கிளம்பலாம்” என்று வாசலை கைகாட்டினார் அருணாச்சலம்.
மயூரன் இதயத்துக்குள் சுருக்கென முள்ளு தைத்தாற் போல வலி விழுந்தது. தலைக்குள் இடி இடித்து மீண்டும் தலைவலி ரணமாய் ஆரம்பித்தது. தாடையை இறுக்கினான்.
மான்வியோ குழந்தைகளுக்கு இட்லியை ஊட்டி முடித்து பெரியவர்கள் பேசுவதை குழந்தைகள் இருவரும் கவனமாய் கவனிப்பதை கண்டு “ம்மா ரெண்டு பேரையும் வெளியே அழைச்சிட்டு போங்க” என்றாள்.
நேகாவோ மயூரனை பார்க்க மயூரனோ இரு கைகளையும் விரித்தான் பருந்தாய்.
நேகாவோ மயூரனின் கைவளைவுக்குள் சென்றதும் மகளை தூக்கி முத்தம் கொடுத்து நேத்ரனை பார்த்தான். நேத்ரனோ மீண்டும் தாயின் மடியில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான்.
வலி நிறைந்த புன்னகையுடன் “உங்க பே.பேத்திக்கு பிடிச்ச வாழ்க்கையை கொடுத்துடுங்க தாத்தா நான் குறுக்கே வரமாட்டேன்” என்றவனின் வார்த்தைகள் துண்டு துண்டாய் விழுந்தது.
“நான் என் குழந்தையோட வாழ்ந்திடுவேன்” அழுத்தமாய் கூறியவன் மான்வியை ஆழமாய் பார்த்துவிட்டு “போகலாமா டார்லிங்?” என்ற வார்த்தையில் மான்வி கண்களை மூடித்திறந்தாள். வார்த்தைக்கு வார்த்தை டார்லிங் டார்லிங் என்று தனக்கு முத்தம் கொடுப்பவன் இன்று எட்டி நின்று தன் மீது நெருப்பு அமிலத்தை ஊற்றிக்கொண்டிருப்பவனை வெறுக்க முடியாமல் முதுகு காட்டி போகும் தன்னவனை பார்த்துக்கொண்டிருந்தவள் மடியில் இருக்கும் மகனை கட்டிக்கொண்டு விசும்பினாள்.
ஜெயசீலனோ வேகமாக நடக்கும் மயூரன் பின்னேச் சென்றவர் “மாப்பிள்ளை” என்று கூப்பிட்டதும்
“சொல்லுங்க” என்ற விதமாய் பார்த்தான்.
“மாப்பிள்ளை நீங்களும் மான்வியும் ஒரு ஐந்து நிமிஷம் உட்கார்ந்து பேசினா ப்ரோப்ளம் சால்வ் பண்ணலாம்” என்றவரை “உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் அங்கிள் ஹாஸ்பிடல்ல உங்ககிட்ட ஹார்ஷா பேசிட்டேன் என்னை மன்னிச்சுருங்க” என்றவன் ஜெயசீலன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் தாயின் கையில் உண்ட மயக்கத்தில் உறங்கிய மகளை தோளில் போட்டுக் கொண்டு விறுவிறுவென காரில் ஏறியவனோ “என்னை விட்டு வேற ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிப்பியாடி?” என்றான் இறுகிய குரலில்.
பூ 16
“தாத்தா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு உங்களை கேட்டேனா! என்னை கேட்காம எதுக்கு கல்யாணம் முடிவு பண்ணீங்க?” என்று நெஞ்சுக்கூடு ஏறி இறங்க சிறு சிறு மூச்சுகளை இழுத்துவிட்டு கேட்டவளை பார்த்து சிரித்த அருணாச்சலமோ “என் பேத்தி வாழாவெட்டியா இருக்கறது என் மனசை அழுத்திக்கிட்டே இருந்துச்சு. மயூரனோட உன்னை சேர்த்து வைக்கலாம்னு உன்னை அழைச்சுட்டு வந்தேன்… ஆனா அந்த கம்மனாட்டி ராஸ்க்கோலு அவன் அம்மா விருப்பப்படி யாழினிய கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டான்… என் பேத்தி புருஷன் குழந்தையோடு வாழணும்னு ஆசைப்பட்டு உனக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டேன். நீ இந்த தாத்தா உன்கூட ரொம்ப நாள் உயிரோட இருக்கணும்னு நினைச்சா நான் பார்த்து வைச்சுருக்க மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கணும்” என்றார் அன்பு கட்டளையாக.
“நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… மயூரன் மாமாவை சுமந்த நெஞ்சுல வேற யாரையும் நினைக்க முடியாது… மாமா என்னை வெறுத்துட்டாருனு நீங்க வேணா நினைக்கலாம். ஆனா அவரு என்னை வெறுக்கவே இல்ல… என் மேல கோவம் மட்டும் இருக்கு. இப்ப போகும் போது என் கண்ணை பார்த்து பேசினாரு தாத்தா… மாமா யாழினியை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு பாருங்க. எங்க காதல் உண்மையானது தாத்தா… நான் தப்பு பண்ணி இருக்கேன் தாத்தா… லஷ்மணன் போட்ட கோட்டை தாண்டி போய் சீதை ரெண்டு முறை வனவாசம் போக நேர்ந்துச்சு. நான் என் புருஷன் போட்ட கோட்டை தாண்டி போய் தான் இப்போ என்னோட மாமுவோட காதலை இழந்து நிற்குறேன்” என்றாள் உடைந்த குரலில்.
“சந்திரமதி சதி பண்ணி உன் வாழ்க்கையில விளையாடிட்டா கண்ணு… அந்த எடுபட்ட பய ஜெகதீஷ் என் கண்ணு முன்னால வந்து நின்னான் அவ்ளோதான்” என ஆத்திரப்பட்டதும்
“தாத்தா ப்ளீஸ் அவனை பத்தி பேசாதீங்க” என்று அழுதுக் கொண்டே ஓடி விட்டாள் மான்வி.
தனது அறைக்குள் சென்ற மான்வியோ மயூரனின் போட்டோவை எடுத்து கையில் வைத்துக் கொண்டு “என்னை மன்னிக்க மாட்டியா மாமா! என்னை எப்போ டார்லிங்னு கூப்பிடுவ அந்த நாள் எப்போ வரும்?” என்று மயூரனின் போட்டோவை நெஞ்சில் வைத்து கதறினாள்.
முதன் முதலில் மயூரன் தன்னிடம் காதலை கூறிய நாட்களுக்கு அவளது நினைவுகள் சென்றது.
மயூரனும் நேகாவை நெஞ்சில் போட்டு முதுகில் தட்டி கொடுத்து கொண்டு கண்ணை மூடினான்.
அவனது மூளையில் “ஐ லவ் யூ மானு” என்று அவளிடம் தன் காதலை கூறியது அவன் கண் முன்னே வந்து போனது.
இருவரும் தங்கள் வாழ்வின் வசந்த காலத்துக்குச் சென்றனர்.
கல்லூரியில் ஹோலி பண்டிகை! மாணவர்களும் மாணவிகளும் கலர் பொடிகள் தூவி நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். மான்வி வெள்ளை நிற சில்க் காட்டன் சேலையில் கேட்ச் கிளிப் போட்டு அடக்கிய தலைமுடியில் இரட்டை சரமாய் மடித்து வைத்த மல்லிகைப் பூவுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த மாணவிகள் பக்கம் நின்று அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தாள்.
மயூரன் வைட் ஷர்ட் வைட் கலர் சந்தன கரையிட்ட வேஷ்டியில் காரிலிருந்து இறங்கவும் மாணவர்கள் மயூரனை சுற்றி வளைத்து நின்றனர் வண்ணங்களை பூசுவதற்கு…
மயூரன் கல்லூரிக்கு செகரெட்டரியாக இருந்தாலும் எந்த ஒரு விழாவிலும் தன்னிடமிருந்து மாணவர்களை தள்ளி நிறுத்த மாட்டான்.
மயூரனோ மான்வி எங்க நிற்கிறாள் என்று அவனின் பார்வை கூட்டத்தை சுற்றி பார்த்து அலைமோதியது.
எங்கே மாணவர்கள் நண்பன் மீது வண்ண பொடிகளை தூவி விடுவார்களோவென மயூரனுக்கு பாதுகாவலனாக மாணவர்களை தள்ளிக் கொண்டு வந்து நின்றான் வெங்கட்.
மாணவர்களோ முதலில் வெங்கட்டின் மீது கலர் பொடிகளை அள்ளி பூசி விடவும்
மாணவர்களோ “ஹாப்பி ஹோலி சார்” என்றவர்களுக்கு “ஹாப்பி ஹோலி” என்று புன்னகைத்தான் வெங்கட்.
மயூரன் வெங்கட்டின் முகத்தில் இருந்த வண்ண பூச்சை கண்டு பக்கென்று சிரித்து விட்டான்.
மாணவர்கள் கையில் வைத்திருந்த கலர் பொடிகளை வாங்கி தன்னை கேலி செய்து சிரித்த நண்பனின் மீது பூசி விட்டு “சூப்பரா இருக்கடா” என்று கண்ணடித்து சிரித்தான் வெங்கட்.
மயூரனும் சும்மா இருக்கவில்லை டேபிள் மேல் வைத்திருந்த வண்ண பொடிகளை கையில் அள்ளி வெங்கட்டின் மீது தூவி விட்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
மாணவர்களுடன் ஆசியர்களும் சேர்ந்து நடனம் ஆட மயூரனோ மான்வியை தேடிக் கொண்டிருந்தான்.
மான்வியும் மயூரனின் கண்களுக்கு சிக்காமல் மறைந்து மறைந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
மான்வி பக்கம் நின்ற பானுவிடம் “மேம் நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடறேன் என் கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ பார்த்துக்கோங்க” என்று கூறியவள் மயூரனின் கண்களில் சிக்கி விட கூடாதென சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டுச் சென்றவளின் வாயில் கை வைத்து தூக்கிக் கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
கல்லூரி முடித்ததும் மான்வியும் யாழினியும் மயூரன் காரில் தான் வீட்டுக்குச் செல்வார்கள்.
அன்று யாழினிக்கு உடம்பு சரி இல்லாமல் இருக்க அவள் கல்லூரிக்கு வரவில்லை. மயூரன் காரில் தனியே எப்படி போவது… என்னை முழுங்கி விடுவது போல் பார்ப்பானே நான் என்ன செய்வேன் பெருமாளே என்று புலம்பிக் கொண்டு நின்றிருந்த மான்வியின் பக்கம் நெருங்கி வந்த மயூரனோ “போலாமா டார்லிங்?” என்று அவளுக்கு முன் பக்க கதவை திறந்து விட்டான்.
“நா நான் பின்னாடி உட்கார்ந்து” என்று அவள் பேசி முடிக்கும் முன் மான்வியின் கை பிடித்து சீட்டில் உட்கார வைத்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தவன் காரை பீச்சுக்கு விட்டான்.
“மாமா வீட்டுக்கு போகலாம்… நான் உங்க கூட வெளியே வந்தது தெரிஞ்சா அத்தை என்கிட்ட தனி விசாரணை கமிஷன் போடுவாங்க வீட்டுக்கு போகலாம்” என்றவளை காரை ஓட்டிக்கொண்டே திரும்பி பார்த்தவன் “அம்மாகிட்ட நான் பேசிக்குறேன்டி என்கூட இருக்க உனக்கு பிடிக்கலைனு சொல்லு இப்பவே காரை வீட்டுக்கு விடறேன்” என்று கோப பார்வையுடன் காரை திருப்புவது போல ஆக்ஷன் காட்டவும் “இல்ல உங்க இஷ்டபடி போகலாம்” என்று கூறிவிட்டு அவனை பார்க்காமல் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மயூரன் பீச்சில் காரை நிறுத்தி விட்டு மான்வியை பார்த்து கண்ணடித்து “இறங்குடி” என்றான்.
இருவரும் காரை விட்டு இறங்கியதும் மான்வியின் கையை பிடித்துக் கொண்டு ஆர்ப்பரிக்கும் கடல் அலையை நோக்கிச் சென்றான் சந்தோசத்துடன் தன் காதலை அவளிடம் கூறுவதற்காக.
மான்வி மயூரன் வீட்டுக்கு தான் வந்த நாளிலிருந்து மயூரன் பார்வையை வைத்து கணித்து விட்டாள்… மயூரன் தன்னிடம் நடந்துக் கொள்ளும் விதத்தை வைத்து அவனிடம் நட்பாக பழக ஆரம்பித்தாள். அவளுக்குமே அவனை பிடித்திருந்தது. மயூரன் தன்னிடம் காட்டும் அதீத அன்பிலும் அக்கறையிலும் தனக்கு சிறுநீரகம் பழுதாகி போன நிலையில் நான் கொடுக்கிறேன் என்று வந்தவன் மீது காதல் வராமல் இருக்குமா மான்விக்கு… ஆனால் தன் மகனை மயக்கி மடியில் போட்டுக்கிட்டானு சந்திரமதியின் குத்தல் பேசசுக்கு ஆளாக கூடாது என்று மயூரன் மேல் இருந்த காதலை மனதில் போட்டு புதைத்துக் கொண்டாள் மான்வி.
அருணாச்சலத்தை பார்க்க வந்த மான்வியின் தாய் சிவகாமியும் தந்தை சிதம்பரமும் ஃபிளைட் ஆக்ஸிடெண்ட்டில் இறந்து விட்ட சமயத்தில் அருணாச்சலத்திடம் பாசத்தை எதிர்பார்த்து வந்தாள் மான்வி.
யோசனையுடன் நின்ற மான்வியின் கையை அழுத்தி பிடித்து “என்ன டார்லிங் நம்ம ஹனிமூனுக்கு எங்க போலாம்னு கனவு காணுறியா?” என்று அவளின் இடையில் கை போட்டு தன் பக்கம் நெருக்கி நிற்க வைத்தான் மயூரன்.
“பொது இடத்துல இப்படியா நடந்துப்பாங்க கையை எடுங்க மயூரன்” என்று அடி தொண்டையில் கண்ணை விரித்தாள் மான்வி.
“டார்லிங் எனக்கு சொந்தமான இடத்துல தான் கை வைச்சிருக்கேன்” என்று கண்ணைச் சிமிட்டி இன்னும் அவளது இடையில் கை விரலை அழுத்தி பிடித்தான்.
அவனது அத்து மீறலில் “உங்க கிட்னியை எனக்கு கொடுத்ததால நான் உங்களை லவ் பண்ணனுமா மாமா?” என்றாள் நலிவான குரலில்.
“காதல் ஒன்னும் பண்டமாற்று முறை இல்லடி உன்னை முதன் முதலா எப்போ பார்த்தேனோ அப்பவே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட… நீதான் என் பொண்டாட்டின்னு என் மனசுக்குள்ள பச்சை குத்திட்டேன்” என அவளை காதல் பார்வையுடன் பார்த்தான்.
“உங்க அம்மாவிற்கு என்னை பிடிக்காதே மாமா! அவங்க யாழினியை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இருக்காங்க. நான் உங்களை லவ் பண்ணினா சந்திரமதி அத்தை என்னை அவங்க மருமகளா ஏத்துப்பாங்களா மாமா?” என்றாள் அழுத்தமான குரலில்.
“என்னோட விருப்பத்திற்கு அம்மா ஒருநாளும் குறுக்கே வரமாட்டாங்கடி! யாழினிய நான் என் மாமா பொண்ணா தான் பார்க்குறேன். அம்மாவை விடு! உனக்கு என்னை பிடிச்சுருக்குனு எனக்கு தெரியும்… நீ என்னை மறைஞ்சு நின்னு சைட் அடிக்குறது எனக்கு தெரியாம போகுமா டி என் அத்தை மகளே” என்று அவள் தோளோடு இடித்தான்.
மான்வியால் அவளது காதலை மனதிற்குள் பூட்டி வைக்க முடியவில்லை. மயூரனோ மான்வியின் பதிலுக்காக அவளது கண்களை காதல் மையலுடன் பார்த்திருந்தான்.
“நா… நான் நாளைக்கு சொல்லட்டுமா?” என்று அவனது குறு குறு பார்வை வீச்சை பார்க்க முடியாது கடல் அலைகளை பார்த்தவாறு பேசினாள்.
“நீ நாளைக்கு என்கிட்ட லவ் சொல்லணும்டி என்னை ஏமாத்த நினைச்ச அவ்ளோதான்” என்ற மயூரன் கூறிய வார்த்தைகள் அவள் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.
“ம்ம்” என்று மான்வி உதட்டுக்குள் முணகியதும் அவளது வாயிலிருந்து கையை எடுத்தவன் “என்கிட்டயிருந்து தப்பிச்சு வாஷ்ரூம்குள்ள போய் மறைஞ்சிக்க பார்க்குறீயா நான் மயூரன்டி என் கண் பார்வையிலிருந்து நீ தப்பிக்க முடியுமா! கட்டம் கட்டி தூக்கிட்டு வந்துட்டேன் பார்த்தியா! இப்பவாவது ஐ.லவ்.யுனு சொல்லுடி” என்று தன்னை விட்டு தள்ளி நின்ற மான்வியின் தோளை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.
“மாமா இது தப்பு காலேஜ்குள்ள நாமளே இப்படி பண்ணினா எப்படி” என்று மான்வி சலித்துக்கொண்டாள்.
“என்னடி நீ ஆசையா லவ் சொல்வேன்னு நான் என்ன என்னமோ கற்பனை கட்டி வந்திருக்கேன் நீ பொசுக்குனு இது காலேஜ் அது இதுனு காரணம் சொல்லுற… இது என்னோட ரூம்! எனக்கு காதல் பண்ண உரிமையில்லையா! இல்ல உனக்கு என்கிட்ட லவ் சொல்ல விருப்பம் இல்லையா சொல்லுடி” என்றான் சற்று குரலை உயர்த்தி.
“அச்சோ மாமா எனக்கு உங்க மேல காதல் இருக்கு! எ.எனக்கு அத்தையை நினைச்சா பயமா இருக்கு… நீ.நீங்க அம்மா பையன்! உங்களுக்கு அத்தையை யாரும் ஒத்த வார்த்தை எதிர்த்து பேசினா பிடிக்காது. நான் அத்தைகிட்ட தினமும் சண்டைதான் போடுவேன்! நமக்குள்ள செட் ஆகுமா?” என்றாள் கண்ணை சுழட்டி.
“இப்போ நீ எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி அதனால தான் உன்னை அம்மா திட்டுறாங்க… என்னோட பொண்டாட்டி ஆகிட்டா உன்னை தலைக்கு மேல தூக்கி வச்சு கொண்டாடுவாங்கடி டார்லிங் என் காதலை அக்சப்ட் பண்ணிக்கோடி” என்று அவளது கையை எடுத்து நெஞ்சோடு வைத்துக்கொண்டு கெஞ்சுதலாக பார்த்தான்.
மான்வியோ “நான் கோபக்காரி மாமா உங்களுக்கே தெரியும்! உங்கம்மா என்ன பேசினாலும் கையை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன்! நீங்க என் அம்மாகிட்ட சண்டை போடக்கூடாது மானு பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க நீதான் அஜஸ்ட் பண்ணிப்போகணும்னு என்கிட்ட சொல்லக்கூடாது என் தன்மானம் அடிபட்டா சும்மா வேடிக்கை பார்க்க மாட்டேன்” என்று வெடித்து பேசி டிமாண்ட் செய்தாள்.
“அம்மா உன் கிட்ட சண்டை போடாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு டார்லிங்… நான்தான் எல்லாருக்கும் டிமாண்ட் போடுவேன் நீ எனக்கே டிமாண்ட் வைக்குற” என்று பெரும்மூச்சு விட்டு
“நீ ஐ லவ் யு சொல்லாம இருந்துக்கோடி இப்ப நான் உனக்கு ப்ரபோஸ் பண்ணப்போறேன்” என்றவனோ பாக்கெட்டில் வைத்திருந்த ஹார்ட்டின் ஷேப் வைர மோதிரத்தை எடுத்து மான்வியின் முன்னே மண்டியிட்டு “ஐ லவ் யூ மானு டார்லிங்” என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டினான் மயூரன்.
மான்வியோ அதிரடியாய் காதலை மறுக்காமல் மெலிதான சிரிப்புடன் மோதிர விரலை நீட்டினாள்.
மான்வியின் கண்களை பார்த்தவாறு அவளது விரலில் மோதிரத்தை போட்டு விட்டு “ஐ லவ் யூ மானு டார்லிங்” என்று அவளது கையில் முத்தமிட்டான்.
மான்வியோ “இது காலேஜ் மாமா” என்று சிணுங்கி அவனிமிடமிருந்து கையை உருவிக்கொண்டாள்.
“ஃபர்ஸ்ட் கிஸ் பண்ணியிருக்கேன்டி தட்டி விடற” என்றவனோ உயிர் உருகும் பார்வையில் அவளிடம் நெருங்கி வர அவளோ அவனது காந்த பார்வையில் தள்ளி தள்ளிச் சென்றுக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் சுவற்றில் மோதி நிற்க அவளின் இருபக்கமும் சிறையிட்டு முற்றுகையிட்டான்.
“மயூ ப்ளீஸ் கையை எடுங்க யாராவது வந்துடப்போறாங்க மானம் போயிடும் எல்லாரும் என்னை வச்சு செய்வாங்க” என்றாள் கெஞ்சுதல் பார்வையுடன்.
“ஏய் எனக்கு லிப் லாக் வேணும்… மனசுக்கு பிடிச்ச பொண்ணை வீட்டுக்குள்ள வச்சிக்கிட்டு ஒரு கிஸ் கூட பண்ணாம நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும். அதுவும் நீயும் என்னை லவ் பண்ணுறேன்னு எனக்கு தெரிந்ததும் என் கன்ட்ரோல் இழந்து எத்தனை தவிச்சிருக்கேன்டி… ஒரே ஒரே கிஸ்” என்று அவளது கன்னத்தை தாங்கிப்பிடித்தான்.
“வே.வேணாம் மா.மாமா” என்று அவளது உதடுகள்தான் அசைந்தது. அவனோ “எனக்கு வேணும் வேணும்டி மானு”என்று அவளது இதழை நோக்கி குனிந்தவனை பிடித்து தள்ளி விட்டு திரும்பி நின்றுக் கொண்டாள். அவனுக்கோ தன்னை தள்ளியதும் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. தலை முடியை அழுந்த கோதி கொண்டு “போடி” என்று திரும்பி நின்றுக் கொண்டான் போலி கோபத்துடன்.
அச்சோ அவசரப்பட்டியேடி ஒரு கிஸ்தானே உன்னோட மாமா கேட்டான் கொடுத்தா குறைஞ்சு போயிடுவியா என்று அவளது மனசாட்சி அவளிடம் பேசவும்.
மயூரனின் முதுகை சுரண்டினாள்.
“என்னடி” என்றான் எரிச்சலாக.
“மா.மாமா. முத்தம் கொடுத்துக்கோங்க” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.
“என் காதுல விழல” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.
“முத்தம் கொடுத்துக்கோங்க” என்று அவனது காதோரம் பேசினாள்.
“நானா முத்தம் கொடுக்குறேன்னு சொன்ன போது நீ ஓ.கே சொல்லியிருந்தா ஒரு முத்தத்தோடு நிறுத்தியிருப்பேன் இப்போ எங்க எங்க முத்தம் கொடுப்பேன்னு தெரியாதுடி” என்றவனோ தாடையை தேய்த்துக் கொண்டு அவளது கன்னத்தை பிடித்தான்.
“ஹாங்” என்று அவளது கண்கள் சாசர் போல விரிந்து இதழையும் மீன் குஞ்சு போல திறந்து விட்டாள்.
அவளது கண்களை காதலுடன் பார்த்துக்கொண்டே அவளது இதழை மெதுவாய் கவ்விக்கொண்டான். அவளோ இறுக கண்ணைமூடிக்கொண்டாள். மயூரனோ மன்மதனாக மாறி அவளது இதழை கொய்துக் கொண்டிருந்தான் இருவருக்கும் முதல் முத்தம். மயூரனோ மலரில் தேன் எடுக்கும் வண்டாக மாறி அவளது இதழை சுவைத்தவன் நாவு என்னும் திறவுகோல் கொண்டு அவளது இதழை திறந்து உமிழ்நீரை அமிழ்தமாய் பருகினான். அவளுமே அவன் கொடுக்கும் முத்தத்தில் தடுமாறி மூச்சுக்கு ஏங்கவும் அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவள் இதழை விட்டு பிரிந்து அவளது முகத்தை இன்னுமே ஏக்கமாய் பார்த்தான்.
மான்வியோ “அடப்பாவி மாமா என்னோட லிப்ஸ் வீங்கியே போச்சு காஞ்ச மாடு கம்புல புகுந்தது போல கடிச்சு வச்சு வீங்கிப்போச்சு இப்படியே நான் எப்படி வெளியே போவேன்” என்று சிணுங்கி அவனது மார்பில் இரு கைகளாலும் குத்தினாள்.
அவனோ அவளது கைகளை இழுத்து பிடித்து அங்கிருந்த சோபாவில் சரிந்தான்.
காதலர் தினத்தை முன்னிட்டு பிரீ சைட் ல ரெண்டு எபி போட்டு இருக்கேன் .. 1000 பேர் படிக்குறிங்க ஒரு 50 லைக்ஸ் போட்டு விட்டா சந்தோச படுவேன் உங்க சூர்யா சரவணன் போடுவீங்களா டியர்ஸ்
👍👍👍👍👍👍👍👍👍
Supt
1👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
свечи бетадин инструкция по применению [url=https://svechi-dlya-zhenshchin.ru/]свечи бетадин инструкция по применению[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super bro
Nice
Super sema super super super super