பூ 17
“ஆஆ என்ன இது விடுங்க மயூ யாரும் வந்துடப்போறாங்க!” என்று சிணுங்கி அவனது மார்பிலிருந்து எழுந்தவளை இடுப்போடு கைப்போட்டு இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு “இப்படியே கொஞ்ச நேரம் இருடி வானத்துல பறக்கறது போல இருக்கு” என ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டு அவளது இடுப்பு சேலையை நகர்த்த “மயூ நோ” என்று சிறு கோபத்துடன் அவனது கையை தட்டி விட்டு எழுந்து நின்று விட்டாள்.
“உன் இடுப்பை தொட எனக்கு உரிமையில்லையாடி! நீ என்னோட பொண்டாட்டி..! உன்னை எங்க வேணாலும் தொடுவேன்! நீ தடை போடக்கூடாது!” என்று ஆட்காட்டி விரலை அசைத்து கொண்டு அச்சத்தில் கண்களை சுழட்டும் மான்வியின் கண்களை பார்த்து கொண்டு வந்தவன் மீண்டும் அவளது இடுப்பில் கைபோட்டு இழுத்து அணைத்துக் கொண்டு அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவளது அங்கங்கள் அவனது மார்பில் உரசி ஒட்டி உறவாட அவளுக்குள் ஏக்கப்பட்ட மின்சார மின்னல்கள் தாக்கியது. அவனோ கண் மூடி அவளது மென்மையின் ஸ்பரிசத்தை உணர்ந்து பெரும்மூச்சு விட்டான்.
“மயூ விடுங்க இது காலேஜ் ப்ளீஸ்.. எ.எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு” என்று அவனது அணைப்புக்குள் நெளித்தாள் பெண்ணவள்.
லவ் சொல்லிய அடுத்த கணம் இப்படி கட்டிபிடிப்பதும் முத்தம் கொடுப்பதுமாக இருக்க மான்விக்கு கூச்சம் நெட்டித்தள்ளியது.
மயூரனோ இன்னும் கண்களை திறந்தவன் “ஒரே ஒரு கிஸ் பண்ணிக்குறேன்டி பர்மிஷன் கொடுடி” என்று ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான்
“அச்சோ வேணாம் பர்ஸ்ட் டைம் முத்தம் கொடுக்குறேங்கிற பேர்ல என் லிப்ஸ ஒரு வழி பண்ணிட்டீங்க இப்போவும் என்னால முடியாது” என்று அவனிடமிருந்து மீனாக துள்ளினாள்
“ம்ஹும் நான் முத்தம் கொடுக்காம விடமாட்டேன்டி ப்ளீஸ் கோஆப்ரேட் பண்ணு டார்லிங்” என்று அவள் இதழ் நோக்கி குனிந்த நேரம் அவனது போன் அடித்தது.
போன் ரிங்கை சட்டை செய்யாது அவள் இதழோடு இதழ் உரசினான்
“ம.மயூ போன்ல அத்தையா இருக்கப்போறாங்க போ. போன் எடுங்க!” என்று படபடத்தாள் மான்வி. போன் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது.
“ப்ச்” என்று சலித்து தலையை முடியை அழுந்தக்கோதிக்கொண்டவன் அவளை தன் அணைப்பிலிருந்து விலக்கிவிட்டு போனை எடுத்து காதில் வைத்தான்.
“தம்பி யாழினிக்கு இன்னிக்கு நைட் அமெரிக்கா கிளம்புறா.. நீதான் யாழினியை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணனும்! இப்ப கொஞ்ச முன்னதான் காலேஜ்லயிருந்து வீட்டுக்கு வந்தா என்னமோ அவ முகமே சரியில்லைப்பா! நீ அவளை ஏதும் திட்டினியா!” எனறார் கவலையான குரலில்
“நா.நான் எதுவும் சொல்லலையேம்மா! இன்னிக்கு ஹோலி செலிபரேன்! நான் பார்க்கும்போது யாழினி ஹேப்பியா தானே இருந்தா! டான்ஸ் ஆடி களைப்பா இருப்பானு நினைக்குறேன் நீங்க போய் அவளை என்னனு பாருங்க நான் வந்துடறேன்மா!” என்றான் நெற்றியை நீவிக்கொண்டு
“கண்ணா உனக்கும் யாழினிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு உன் மாமாகிட்ட பேசியிருக்கேன்! உன் மாமாவோ மயூரன் மனசுல என்ன இருக்குனு கேட்டு சொல்லுங்கக்கானு சொல்லிட்டான். நீதான் பிடி கொடுத்து பேசமாட்டேன்கிறயேப்பா” என்றார் வருத்தப்பட்டு
“யாழினி சின்ன வயசுலயிருந்து நம்ம வீட்டுலயே இருந்துட்டா. அவளை என்னோட மனைவியா நினைச்சுக்கூட பார்க்கல! அவளுக்கு வேற மாப்பிள்ளை பாருங்கம்மா!” என்று போனை வைத்துவிட்டான்
மான்வியோ மார்ப்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு மயூரனை முறைத்தவள் “இப்போ உங்கம்மாகிட்ட நான் மான்வியை லவ் பண்ணுறேனு சொல்ல வேண்டியதுதானே மயூ” என்றாள் அழுத்தமான வார்த்தைகளுடன்
“அம்மாகிட்ட நம்ம லவ் பத்தி பேசத்தான் போறேன்டி. அம்மா கைக்குள்ளயே வைச்சு வளர்த்த பொண்ணு யாழினி.. அவளை வேற வீட்டுக்கு அனுப்ப முடியாம அம்மா அவங்க கூடவே வச்சிக்கலாம்னு நினைச்சிருப்பாங்க அவ்ளோதான். என்னோட விரும்பத்திற்கு மாறா அம்மா எதுவும் பண்ணமாட்டாங்கடி! இப்ப கிஸ் கன்டினியூ பண்ணலாம் வா” என்று அவளை பிடித்து இழுத்த நேரம் கதவு திறந்து வெங்கட் வந்திருந்தான்
“சாரி! சாரி!” என்று கையை உயர்த்தி காண்பித்து புன்னகையுடன் வெளியே சென்று விட்டான் வெங்கட்
“அச்சோ என் மானமே போச்சு மயூ” என்று முகத்தில் கையை வைத்து மறைத்து கொண்டவளுக்கு விழியோரம் கண்ணீர் கசிந்தது.
“வெங்கட்டுக்கு நான் உன்னை லவ் பண்ணறது தெரியும்.. இப்போ நாம ரெண்டு பேரும் அறைக்குள்ள இருக்கோம்னு தெரியாம வந்துட்டான்டி! தப்பா ஏதும் நினைக்க மாட்டான்..” அவள் முகத்திலிருந்து கையை எடுத்து விட்ட நேரம் அவளது விழிகள் கலங்கி இருந்தது.
“என்னடி கண்ணு கலங்கியிருக்கு நான் முத்தம் கொடுக்கல நீ அழாதடி நீ அழுதா எனக்கு என்னோமோ நெஞ்சுக்குள்ள வலிக்குது.. இதோ இப்போ தலையும் வலிக்குதுடி.. உன் கண்ணுல தண்ணியே வரக்கூடாது” என்று அவளது விழியோரம் கசிந்த கண்ணீரை விரலால் துடைத்து விட்டான்.
“மாமாஆஆ” என்று அவனை தாவி அணைத்துக்கொண்டதும் அவனோ அவளது முதுகை ஆதுரமாக தடவிவிட்டான். ஆனால் இன்றோ மயூரனோ அவளை தினம் தினம் கண்ணீரில் குளிக்க வைக்கிறான் .
மயூரனின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்த நேகாவோ “ம்மா உச்சா வருது” என்று கண்ணை மூடிய படியே முணகியது. மயூரன் உறங்காமல் விழித்தபடிதான் இருந்தான்.
மகள் முனகலில் விழித்துவிட்டாளோ என்று நேகாவின் முகத்தை பார்த்தான். நேகா லேசாக கண்களை திறந்தது. தாயின் முகத்தை தினமும் பார்த்த குழந்தை இன்று தந்தையின் முகத்தை பார்த்ததும் தான் எங்கே இருக்கிறோமென அறையை சுற்றிப்பார்த்தது. தான் இருப்பது தாயின் அறை அல்ல தான் படுத்திருப்பது தாயின் மார்பில் அல்ல என்பதை தெரிந்து கொண்டதும் முகத்தை உர்ரென்று வைத்து “எனக்கு உச்சா வருது” என்றது.
“ம்ம் போகலாம் தங்கம்” என்று நேகாவை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் இறக்கி விட்டதும் தன் தேவையை முடித்துக்கொண்டு திரும்பி “எனக்கு ப்ரஸ் பண்ணி விடுங்க” என்றது அதிகாரமாக
“அடியேன் பாக்கியம் ஏஞ்சல்” என புன்னகை முகமாகவே மகளுக்கு ப்ரஷ் பண்ணிவிட்டு ஹாட் வாட்டரை நேகாவின் மீது ஊற்றினான்.
“ஆஆ சுடுது சுடுது இவ்ளோ சூடாவா தண்ணி ஊத்துவாங்க! அம்மா கொஞ்சமான சூடுல தண்ணி ஊத்தி விடுவாங்க உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை! அம்மாதான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட்” என்று கண்ணைச் சிமிட்டியது
மயூரன் ஒன்றுமே பேசவில்லை. பொஷசிவில் புகைந்தான். ஆனால் மகளிடம் வெளிக்காட்டவில்லை. தண்ணீர் குளிக்கும் அளவுதான் வைத்திருந்தான். மகள் வேண்டுமென்றே சண்டை போடுகிறாள் என்பதை புரிந்து கொண்டு “சாரி! சாரி! ஏஞ்சல் அப்பா நாளைக்கு சூடு குறைவா குளிக்க வைக்குறேன்.. இப்ப ஸ்கூலுக்கு டைம் ஆச்சு கிளம்பலாமா” என்று பேச்சு கொடுத்தபடியே நேகாவை தேங்காய் பூ துண்டால் துடைத்து விட்டு அறைக்குள் தூக்கி வந்தான்.
வள்ளி கையில் பாலுடன் வந்தார். வள்ளியோ நேகாவை பார்த்ததும் “பாப்பா அப்படியே நம்ம மான்வி பொண்ணை உரிச்சி வச்சிருக்கா.. கண்ணு பாரு அப்படியே மானு கண்ணை எடுத்து ஒட்ட வச்சது மாதிரி இருக்கு தம்பி” என்றவர் பாலை டேபிள் மேல் வைத்து விட்டு நேகாவை நெட்டி முறித்தார்.
நேகாவோ வள்ளியை பார்த்து மெலிதாய் சிரித்தது.
மயூரனோ “வள்ளியம்மா நீங்க என்னோட மகன் நேத்ரனை பார்த்ததில்லை அவன் என்னை போல ஜெராக்ஸ் தெரியுமா! ஆனா அவன் என்னோட வரமாட்டேனு சொல்லிட்டான் கூடிய சீக்கிரம் அவனையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுவேன்: என்றபடியே நேகாவிற்கு கவுனை போட்டு விட்டான்.
“ஏஞ்சல் பால் குடிக்கலாமா!” டேபிள் மேல் இருந்த பாலை எடுத்து நேகாவின் கையில் கொடுத்தான் மயூரன்
நேகாவோ “காலையில அம்மா பூஸ்ட்தான் கொடுப்பாங்க! இப்ப எனக்கு பூஸ்ட் வேணும்!” என்று கண்ணை உருட்டியது.
அப்படியே மான்வி பொண்ணு போலவே பேசுறா தம்பி! என்று தாடையில் கைவைத்து நேகாவை அதிசயமாய் பார்த்தார் வள்ளி
மயூரனுக்கோ தன் பொண்ணு தன்னை போல ஒரு விசயம் கூட பண்ணவில்லையே என்று வருத்தம் இருந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. மகள் தன்னுடன் இருப்பதே என் அதிர்ஷ்டம் என்று நினைத்துவிட்டான்
“பூஸ்ட் போட்டு எடுத்துட்டு வாரேன் தம்பி” என்று பால் கப்பை மயூரனிடமிருந்து வாங்கினார் வள்ளி.
“பாட்டி இன்னிக்கு பால் குடிச்சுகுறேன் கொடுங்க எனக்கு வேஸ்ட் பண்றது பிடிக்காது” என்று கண்ணைச் சிமிட்டியது.
“அச்சோ மான்வி பொண்ணு என் கண்ணு முன்னால நிற்கறது போலவே இருக்கு என்னோட குட்டி ராஜாத்தி” என்று நேகாவின் கன்னம் தொட்டு நெட்டி முறித்தார்
“க்கும்” என்று தொண்டையை செருமியவன் “வள்ளியக்கா பால் கப்பை என்கிட்ட கொடுத்துட்டு நேகாவுக்கு டிபன் எடுத்து வைங்க! ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்றபடியே பால்கப்பை வள்ளியிடமிருந்து வாங்கினான்.
மகளுக்கு எல்லாமே தான் தான் பண்ணணும்னு நினைக்குறாரு போல என்று பெரும்மூச்சு விட்டு சென்றார் வள்ளி.
நேகாவை மடியில் உட்கார வைக்க “நான் பெட்ல உட்கார்ந்து பால் குடிக்குறேன் கொடுங்க” என்று முகத்தை உர்ரென்று வைத்து கையை நீட்டியது..
வள்ளியக்காவை பார்த்து சிரிக்குற ஏஞ்சல் இந்த அப்பாவை பார்த்து கொஞ்சம் சிரியேன் என்றது மயூரனின் ஆழ்மனது.
மயூரனை பார்க்காமல் தலையை குனிந்து உட்கார்ந்திருந்த நேகாவை தூக்கி மடியில் உட்கார வைத்து பாலை கோப்பையை மகளின் உதட்டில் வைத்தான். பாலை குடிக்காமல் போனால் மிரட்டி விடுவானோ என்று சிறு பயத்தில் பாலை குடித்துவிட்டது நேகா.
பாலைக்குடித்து முடித்ததும் பால்கப்பை வாங்கி டேபிள் மேல் வைத்த மயூரனோ நேகாவின் கன்னம் பற்றி தன்னை பார்க்க வைத்தவன் “அப்பாவை உனக்கு எப்போ பிடிக்கும்.. நான் காலேஜ்ல இருந்து வரும்போது ஓடிவந்து அப்பானு எப்போ முத்தம் தருவ பாப்பா! ஐஞ்சு வருசமா உங்களை அப்பா பார்க்க வரலைனு கோபம் இருக்கும்தான் நீங்க இருக்கறது தெரிஞ்சிருந்தா ஓடி வந்திருப்பேனே!” என்றான் கரகரத்த குரலில்
“அப்போ அம்மாவை நீங்க ஏன் தேடி வரலைப்பா! அம்மா பாவம் இல்லையா! நைட்ல நிறைய நாள் உங்க போட்டோவை வச்சிகிட்டு அழுதிட்டேயிருப்பாங்க தெரியுமா! நீங்கதான் எப்போ பார்த்தாலும் அம்மாகிட்ட சண்டை போடுறீங்க பேட் அப்பா.. அப்புறம் உங்கிட்ட எப்படி நான் கொஞ்சி பேசுவேன்! நீங்க அம்மாவை இந்த வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு வருவீங்களோ அப்பத்தான் உங்க கழுத்தை கட்டி கன்னத்துல முத்தம் கொடுப்பேன்” என்றது நேகா
“அது ரொம்ப கஷ்டம் பாப்பா நீ அப்பாவுக்கு முத்தம் கொடுக்க வேணாம்.. நான் என் ஏஞ்சலுக்கு முத்தம் கொடுத்துக்குறேன்” என்று நேகாவின் இரு கன்னத்திலும் முத்தம் கொடுத்ததும் அவன் கொடுத்த முத்தத்தை உடனே கையால் துடைத்துக்கொண்டது நேகா.
மான்வி கோபமாய் இருக்கும் போது மயூரன் முத்தம் கொடுத்தால் உடனே முத்தத்தின் ஈரத்தை துடைத்துக்கொள்வாள்.. மகளும் மனைவி போல பண்ணவும் மயூரனின் உதடுகள் மெலிதாய் விரித்தது.
மயூரன் சிரித்ததும் நேகாவோ “நான் அம்மாகிட்ட போகணும் எனக்கு ஸ்கூல் போக யூனிபார்ம் இல்லையே அம்மாவீட்லதான் இருக்கு நான் அம்மாகிட்ட கூட்டிட்டு போங்க” என்று மயூரனை முறைத்தது
“டிபன் சாப்பிட்டு முடிஞ்சு அம்மாகிட்ட போகலாம் ஏஞ்சல்” மகளை தூக்கப்போனான் டைனிங் டேபிளுக்கு.
“நான் நடந்தே வரேன் சும்மா சும்மா தூக்கி வச்சிருக்கீங்க!” என்று இதழை சுளித்த மகளின் கோபத்தை பார்த்து கோபம் வராமல் சந்தோசம்தான் வந்தது மயூரனுக்கு. மானுவோட அடுத்த வெர்ஷன் நீ என்று புன்னகைத்து மகளின் கைபிடித்து டைனிங் ஹாலுக்கு அழைத்துச்சென்றான்
கருணாகரனோ “அடடே என் பேத்தி பொண்ணு வாங்க வாங்க” என்று நேகாவின் கையை பிடித்தார்.
“குட் மார்னிங் தாத்தா” என்று பற்கள் தெரிய சிரித்தது நேகா. மயூரனோ மகளின் புன்னகை பூத்த முகத்தையே பார்த்திருந்தான். மகளின் பாசத்திற்கு ஏக்கமான தந்தையாய்.
தன் அறையிலிருந்து வந்த சந்திரமதியோ கருணாகரனின் மடியில் மான்வியின் மரு உருவில் அமர்ந்திருந்த நேகாவைத்தான். நேகாவை பார்த்ததும் என்னை கொல்ல பார்த்தவளோட பொண்ணு என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கா விடுவேனா! ஓட ஓட விரட்டிவிடறேன் பாரு டி குட்டி பிசாசே” என்று தன் மகன் பெற்ற மகள் என்றும் பாராமல் குழந்தையின் மீது வஞ்சகத்துடன் மயூரன் பக்கத்தில் வந்து நின்ற சந்திரமதியை கண்டதும் சிரித்துக்கொண்டிருந்த நேகா அமைதியாகிவிட்டது.
மயூரனோ “நேகா குட்டி இவங்க தான் உன்னோட பாட்டி” சந்திரமதியை பார்த்தான் புன்னகையுடன்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌