பூ 23
அவள் இதழ் விரிவது தாமரை மலர்வது போல மயூரனுக்கு தோன்றியது. அவளது பன்னீர் இதழ் ரோஜா இதழ்களை பார்த்திருந்தவன் மான்வி நிமிர்ந்து மயூரனை பார்க்கவும் புன்னகையுடன் நின்றிருந்தான்.
அவளுமே சிறு புன்னகையை உதிர்த்து விட்டு ஒரு தோசையை சாப்பிட்டு “போதும் மாமா என்னால சாப்பிட முடியலை” என்றவளிடம் “ம்ஹும் நீ சாப்பிட்டுதான் ஆகணும்” என்று கருணாகரன் அதட்டவும் இன்னொரு தோசையை சாப்பிட்டு அவளது அறைக்குள் இருந்த வாஷ் பேஷனில் தட்டை கழுவி வந்தாள்.
“ப்பா மான்வி நம்ம பாட்டி போலவே இருக்காளா!” என்றான் கருணாகரனின் காதோரம்.
“டேய் படவா என் மருமகளை சைட் அடிக்குறியா!” என்று மகனை முறைத்தார்.
“ஏன்ப்பா சைட் அடிச்சா தப்பா மான்வி என்னோட முறைப்பொண்ணுதானே” என்றவனோ நாக்கை கடித்துக்கொண்டான்.
“இப்போதான் காலேஜ் பொறுப்பெடுத்திருக்க கவனம் தொழில இருக்கணும்டா” என்று விரல் நீட்டி மகனை எச்சரிக்கை செய்தார்.
மான்வி வரவும் பேச்சை நிறுத்திக்கொண்டனர் அப்பாவும் மகனும்.
அன்றிரவு அருணாச்சலத்தோடு கதிரும் மான்வியின் அறைக்குள் இருந்தனர். “தாத்தா இவங்களை நான் என்னனு கூப்பிடறது என்னை விட சீனியரா இருக்காங்க பேரு சொல்லியும் கூப்பிடமுடியாது என்னை விட சின்ன வயசு பொண்ணா இருந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கலாம். நல்லா கொலு பொம்மை போல அழகாயிருக்காங்க யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ” என்று பெரும்மூச்சு விட்ட கதிரின் தோளில் அடி போட்டார் அருணாச்சலம்.
மான்வியோ கதிரின் பேச்சில் சிரித்து விட்டாள். “தாத்தா மான்வி அக்காவுக்கு இன்னொரு தங்கச்சி இருந்திருக்கலாம் எனக்கு செட் ஆகியிருக்கும்” என்றான் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு.
மயூரன் காலேஜிலிருந்து வந்தவன் எப்போதடா மான்வியை பார்ப்போமென்று காத்திருந்தான். அன்றிரவு சாப்பிட கருணாகரன் மருமகளை டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தார்.
மான்வியின் முன்னே கருணாகரணும் பின்னால் கதிரும் வருவதை கண்டு தன் அருகே நின்று இருந்த சந்திரமதியிடம் “அத்தை இவ என்ன மகாராணியா இவளுக்கு முன்னேயும் பின்னேயும் ஒரு ஆள் வராங்க!” என்று முகம் சுளித்தவள் கதிருக்கு பின்னே மான்வியை பார்த்தபடியே வந்த மயூரனை கண்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டாள் யாழினி.
“வந்து இரண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள இவ பக்கம் எல்லாரையும் காந்தம் போல இழுத்துக்கிட்டாளே! பார்க்க அமுக்கினி போல இருந்துக்கிட்டு எல்லாரையும் அவ பக்கம் வளைச்சுக்கிட்டா கேடி” என்று மான்வியை கண்டு பொறாமையில் பொங்கினாள் யாழினி.
சந்திரமதியோ “யாழு கண்ணு இவகிட்ட நீ தள்ளி நின்னு பழகு… என் வீட்டுக்காரரும் என் மாமானாரும் இருக்கற தைரியத்துல ஆட்டம் போடலாம்னு நினைச்சா இந்த சந்திரமதி சும்மா இருக்க மாட்டா! அவ வாலை சுருட்டிக்கொண்டு நம்ம வீட்டுல ஒரு ஓரமா இருந்தா நான் அமைதியா இருப்பேன். அமெரிக்காவுலயிருந்து வந்திருக்கேன்னு ஃபிலிம் காட்டினா வாலை ஒட்ட நறுக்கிடுவேன்” என்றதும் யாழினி சிரித்து விட்டாள்.
“சிரிக்காதே அவங்க வராங்க நீ சாப்பிடு கண்ணு” என்றவரோ மான்வியை மனுசியாக கூட மதிக்கவில்லை.
மனைவியின் முகத்தை அவதானித்த கருணாகரனோ “சந்திரமதி மான்விக்கு தட்டு வை” என்றவரோ டைனிங் டேபிளில் மான்வியை உட்கார வைத்தார்.
கதிர் மான்வியின் பக்கம் உட்காரும் முன் மயூரன் உட்கார்ந்துக் கொண்டு “ம்மா டைம் ஆச்சு இட்லி வைங்க” என்று பரபரத்தான்.
மகனுக்கு இட்லியை வைத்து சாம்பாரை ஊற்றியவர் ‘இவ பக்கத்துல போய் மயூரன் ஏன் உட்கார்ந்திருக்கான்’ முகம் சுளித்தவரை “ம்மா மான்விக்கு இட்லி வைங்க” என்ற மகனை ஆயாசமாக பார்த்தார்.
“இதோ வைக்குறேன்ப்பா” என்றவரோ மான்வியை முறைத்துக்கொண்டே நாலு இட்லியை எடுத்து மான்வியின் தட்டில் வேண்டா வெறுப்பாய் பரிமாறினார்.
மான்வியோ “எனக்கு இரண்டு இட்லி போதும்” என்று தட்டில் இருந்த இட்லியை பக்கத்தில் இருந்த தட்டில் வைத்தவுடன் மயூரனோ மான்வி எடுத்து வைத்த இட்லியை எடுத்து தன் தட்டில் வைத்துக்கொண்டான்.
சந்திரமதியோ “அவ தட்டுல இருந்த இட்லியை நீ ஏன்பா எடுக்குற? உனக்கு வேற வைக்குறேன்”
“மான்வி எச்சில் பண்ணியா சாப்பிட்டா அப்படியே சாப்பிட்டாலும் அவ என்னோட அத்தை பொண்ணுதானே இதுல என்ன இருக்கு” தோளை குலுக்கிக்கொண்டு சாப்பிட்டான் மயூரன்.
அன்றிரவு சாப்பிட்டு முடித்து எழுந்த மான்வியிடம் “அமெரிக்காவுல வேணா நைட் ட்ரஸ் போட்டு வீடு முழுக்க சுத்தலாம் இது ஆம்பள பசங்க இருக்குற வீடு அடக்கம் ஒடுக்கமா சுடிதார் போடு! வேலைக்கு போறேன்கிற திமிர்ல காலையில ரொம்ப நேரம் வரைக்கும் தூங்குற வேலை வச்சிக்காதே! உன்னோட அறையை நீதான் சுத்தம் பண்ணிக்கணும். உன்னோட ட்ரஸ்ஸும் நீதான் துவைச்சிக்கணும்!” என்றார் சந்திரமதி அதிகார குரலோடு.
“என்னோட வேலையை நான் செய்துக்குவேன்! நீங்க சொல்ல வேண்டியது இல்ல அத்தை! அண்ட் நான் இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி கிடையாது! இது என்னோட தாத்தா வீடு..! எனக்கு முழு உரிமையும் இருக்கு. முதல் நாள் நீங்க பேசும்போதே எனக்கு தெரிஞ்சுது உங்களுக்கு என்னை பிடிக்கலைனு உங்களுக்கு பிடிக்கலைனு நான் வேற எங்கயும் போய் தங்க முடியாது! என்னை அதிகாரம் பண்ணுற வேலை வச்சிக்காதீங்க. நான் யார்கிட்டயும் கம்ப்ளைண்ட் பண்ணமாட்டேன் முகத்துக்கு நேரா உங்களை போலவே எடுத்தெறிஞ்சு எனக்கு பேச தெரியும்! நான் எப்படி ட்ரஸ் போடணும்னு எனக்கு தெரியும் நீங்க சொல்ல வேண்டிய அவசியமில்ல… எங்கம்மா இந்தியாவோட கல்சரை சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்காங்க” நைட் ட்ரஸ் போட்டிருந்தாலும் சாப்பிட வரும்போது மேலே துப்பட்டா அணிந்துக் கொண்டுதான் வந்திருந்தாள்.
அடுத்தநாள் காலேஜ் கிளம்பி நின்றவள் அருணாச்சலத்தின் காலில் விழ “சந்தோசமா இருடா” என்று பேத்தியை ஆசிர்வாதம் செய்தார்.
கருணாகரனின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
“மான்வி அம்மா காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு நான் தினமும் அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் காலேஜ் கிளம்புவேன். அம்மா ராசியானவங்க”
‘ஓ இவன் அம்மா பையனா!’ என்று பெரும்மூச்சுவிட்டு மயூரனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு சந்திரமதியின் காலில் விழப்போனவளை தடுத்து நிறுத்தி “ம்ம் நல்லாயிரு” என்று பெரும்போக்காக பேசிவிட்டு சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார் சந்திரமதி.
அருணாச்சலமோ கருணாகரனை முறைத்தார்.
“ம்ம் நான் பார்த்துக்குறேன்பா” என்று கண்ணைமூடித்திறந்தார் கருணாகரன்.
மான்வி சந்திரமதி தன்னை அவமதித்ததை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. தாத்தாவும் மாமாவும் தன் பக்கம் இருக்கிறார்கள் என்ற மன தைரியத்தில் இருந்துவிட்டாள்.
மயூரனின் காரில் மான்வியும் யாழினியும் ஏறிக்கொண்டனர். மான்வியோ யாழினியை பார்த்து லேசாக புன்னகைத்தாள். யாழினியும் மயூரன் இருப்பதால் “ஹாய் நான் யாழினி” என்று கைகொடுத்தாள்.
மயூரன் மிரரில் மான்வியை பார்த்துக்கொண்டே வந்தான் ஏசிகாற்றில் மான்வியின் முன் நெற்றி முடி பறக்க கையால் சரி செய்துக் கொண்டே ஜன்னலில் வேடிக்கை பார்த்தவளை நொடிக்கொரு முறை பார்த்துக்கொண்டே வந்தான்.
யாழினிக்கு வயிற்றில் அமிலம் தானாக சுரந்தது. ‘நானும் உங்க கூடவேதான் வரேன் மாமா என்னை இப்படி ஒரு முறை பார்த்திருப்பீங்களா’ அவள் முகம் கவலையில் கன்றிப்போனது.
காலேஜை சுற்றிப்பார்த்துக்கொண்டே வந்தாள் மான்வி. அமெரிக்கா யூனிவர்சிட்டி போல இல்லாமல் இருந்தாலும் காலேஜ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை கண்டு விழி விரித்துப்பார்த்தாள்.
மயூரன் தமிழ் டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடியை அவனது அறைக்கு வரச்சொல்லியிருந்தான்.
மயூரனின் கேபினை சுற்றிப்பார்த்துக் கொண்டுருந்தாள் மான்வி.
“காபி ஆர் டீ மான்வி?” என்று அவளது கவனத்தை தன்புறம் திருப்பினான்.
“இப்போதானே வீட்ல சாப்பிட்டு கிளம்பினோம்” என்று லேசாக பற்கள் தெரிய சிரித்தவளை இரசித்துப்பார்த்தான்.
“நீ சிரிச்சா அழகா இருக்க மான்வி. அழுதா முகம் மான்வி நல்லாயில்ல” என்று மூக்கை சுருக்கினான்.
“என்னோட இழப்பு பெருசு மயூரன்” என்றவளின் குரல் தழுதழுத்தது.
“ஏய் எமோசனல் ஆகாதே மான்வி! நான் உனக்கு பக்கபலமா என்னிக்கும் இருப்பேன்” என்று அவளது தோளில் அழுத்தம் கொடுத்தான். அவனையறியாமலேயே மான்வியை விரும்ப ஆரம்பித்தான் மயூரன்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று தமிழ் ஹெச்ஓடி கோமதியின் குரலில் மான்வியிடமிருந்து விலகி நின்றான்.
“மான்வி என்னோட அத்தை பொண்ணு” என்று அறிமுகப்படுத்தியவன் “நியூ ஸ்டாப்புக்கு என்ன ஃபார்மாலிட்டிஸோ மான்வியை ஃபாலோ பண்ண சொல்லிடுங்க” என்றவன் “மான்வி நீ டிபார்ட்மெண்ட்டுக்கு கிளம்பு நான் வரேன் ஆல் தி பெஸ்ட்” என்று கையை நீட்டினான்.
“தேங்க்ஸ் மயூரன்” என்று மான்வியும் கை கொடுத்தாள்.
அவளது கைகளை அழுத்தமாக பற்றி குலுக்கினான்.
மான்வி மயூரனை சங்கடமாக பார்க்கவும் “சாரி” என்று கண்ணைச்சிமிட்டி மான்வியின் கையை விடுவித்தான்.
முதல்நாள் வகுப்பில் தன்னை அறிமுகப்படுத்தியவள் “நான் வந்த முதல் நாள் பாடம் எடுத்து போர் அடிக்க விரும்பலை ஸ்டுடன்ஸ் நாளைக்கு கிளாஸ் ஆரம்பிக்கலாம்” என்றவள் ஜென்ட்ரலாக பேசிமுடித்து கிளம்பி விட்டாள்.
மான்வியின் மீது அக்கறையாக நடந்துக் கொண்டான் மயூரன். தோட்டத்தில் மான்வி இயர் போன் காதில் போட்டு பாட்டு கேட்டபடி
நடந்துக் கொண்டிருந்தாள்.
அவனோ பால்கனியிலிருந்து மான்வியை இரகசியமாக சைட் அடித்தான். மான்விக்கு தன்னை யாரோ பார்ப்பது போல உணர்வு வர மேலே நிமிர்ந்து பார்க்க “ஹாய் நானும் வரவா?” என்று கையை காட்டினான்.
“வாங்க” என்று கையை அசைத்தாள் மான்வி.
மயூரனோ அடுத்த ஐந்து நிமிடத்தில் மான்வியின் பக்கம் மூச்சு வாங்க நின்றிருந்தான்.
காதிலிருந்த இயர் போனை எடுத்துவிட்டு “ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வரீங்க இப்படி வந்து உட்காருங்க” என்று தோட்டத்தில் போட்டிருந்த நாற்காலியை கை காட்டினாள்.
மயூரன் உட்கார்ந்ததும் மான்விவோ இயர் போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
“உனக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்குமா?” என்றவனின் உதடசைவது பார்த்து
“ம்ம் ரொம்ப பிடிக்கும்… இப்போ எனக்கு இதுமட்டும் தான் துணையா இருக்கு மயூரன். உங்களை பேர் சொல்லி கூப்பிடலாம்ல இல்ல மாமானு முறை வச்சு கூப்பிடணுமா?”
“உன் இஷ்டம்பா”
“அப்போ மயூரன்னு கூப்பிடறேன்”
“அம்மா முன்னாடி மட்டும் பேர் சொல்லி கூப்பிடாதே”
“ஏன் உங்க அம்மாவை கண்டா உங்களுக்கு பயமா?” என்று கண்ணை உருட்டினாள்.
“பயம் கிடையாது நான் அம்மாவோட செல்லப் பையன். யாழினியை கூட என்னை மாமானுதான் கூப்பிடச் சொல்லியிருக்காங்க! பொண்ணுங்கன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும் ஆம்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்கணும்னு சொல்லுவாங்க ஆனா நீ உன் விருப்பப்படி என்னை எப்படி வேணாலும் கூப்பிடு”
“அப்போ வாடா போடானு கூப்பிடட்டுமா?” என்றவளோ நாக்கை கடித்துக்கொண்டாள்.
“நீ பார்க்கத்தான் அமைதியா இருக்க. சரியான வாயாடி நீ” என்று வாய் விட்டு சிரித்தான்.
“நாம தனியா இருக்கும்போது நீ என்னை வாடா போடா என்னவேணா கூப்பிட்டுக்கோ! நான் எதுவும் நினைக்கமாட்டேன். ஆனா அம்மா முன்னாடி மட்டும் அடியேனுக்கு மரியாதை கொடுங்க மகாராணி” என்று நெஞ்சில் கையை வைத்து தலை குனிந்தான்.
“அச்சோ காமெடி பண்ணாதீங்க மயூரன் நான் வாடா போடானு ஒரு காலேஜ் செகரட்டரியை கூப்பிட்டா நல்லாவா இருக்கும்” என கன்னக்குழி விழ சிரித்தவளை “உன் கன்னம் குளோயிங்கா இருக்கு மான்வி” என்று அவள் கன்னத்தை தொட்டு பார்க்க துடித்த கைகளை அரும்பாடு பட்டு அடக்கி வைத்தான்.
யாழினிக்கோ இருவரும் காதல் கிளிகள் போல கொஞ்சி பேசி சிரிப்பதை போல அவள் கண்ணுக்கு தெரிய சமையல்கட்டிலிருந்த சந்திரமதியை கூட்டிக்கொண்டு வந்து “அத்தை இங்க பாருங்க இவளை மாமாகூட எப்படி பேசி சிரிச்சு கூத்தடிக்குறா” பொருமினாள் யாழினி.
மான்வி மயூரனுடன் பேசி சிரிப்பதை பார்த்தவருக்கு உடல் திகு திகுவென எரிய ஆரம்பித்தது சந்திரமதிக்கு.
“வயசு பொண்ணு இப்படியா ஒரு ஆம்பிள்ளை கூட நின்னு சிரிச்சிக்கிட்டு நிற்பா அறிவுக்கெட்டவ இவளை சொல்லி குற்றமில்லை வளர்ப்பு சரியில்லை” என்று வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருந்தார் சந்திரமதி.
“எனக்கு தூக்கம் வருது மயூரன் பை” என்றவளிடம்
“நானும் வரேன் வா போகலாம்” என்று இருவரும் பாடத்தை பற்றி பேசிக்கொண்டேச் சென்றனர்.
“இந்த சிறுக்கியை மயூரன் அறைபக்கத்துல தங்க வச்சிருக்க கூடாது. அறிவுக்கெட்டவ ஆம்பிள்ளை கூட ஒட்டிக்கிட்டு நடக்குறா பாரு” என்று முகம் சுளித்தார் சந்திரமதி.
அடுத்த நாள் காலையில் டீ குடிக்க சமையல்கட்டுக்குள் வந்தவளுக்கு வள்ளியம்மா இஞ்சி டீ போட்டுக் கொடுக்கவும் சமையல் திண்டில் ஏறி அமர்ந்து வள்ளியம்மாவிடம் பேசிக்கொண்டே டீயை குடித்து முடித்தாள்.
சந்திரமதி குளித்து வந்தவர் “ஏய் சமையல்திண்டுல ஏறி உட்கார்ந்திருக்க பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்க தெரியாதா! உன் அம்மா நல்ல பழக்கம் சொல்லிக்கொடுக்கலையா!” என்று எரிந்து விழுந்தவரிடம்
“அத்தை சமையல் திண்டுல உட்கார்ந்ததால என்ன தப்பு! என் அம்மாவை எதுக்கு குறை சொல்லுறீங்க! நான் உட்கார்ந்ததால இந்த திண்டு உடைஞ்சு விழுந்துருமா என்ன?” சந்திரமதியை எதிர்த்து பேசிவிட்டாள்.
வள்ளியம்மாள் முன்னே தன்னை எதிர்த்து பேசியது சந்திரமதிக்கு அவமானமாக போய்விட “என்கிட்டயே வாதாடுறியா? என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம சரிங்கத்தைனு சொல்லிப்பழகு இல்லை கன்னம் பழுத்திடும் அனாதை கழுதை” என்று மான்வியை அடிக்க கையை ஓங்கிவிட்டார் சந்திரமதி.
மான்விக்கோ தன்னை அனாதை என்றதில் அவள் மனம் அடிப்பட்டு போனது.
“நான் ஒன்னும் அனாதை கிடையாது எனக்கு தாத்தாவும் மாமாவும் இருக்காங்க. பெரியவங்கனு மரியாதை கொடுத்துப்போறேன் இன்னொரு முறை அனாதைனு சொன்னீங்க நான் மனுசியாவே இருக்கமாட்டேன் பார்த்துக்கோங்க” என்று காளி அவதாரம் எடுத்தவளை
“நீ அனாதை கழுதைதான் டி ஆயிரம் முறை சொல்லுவேன் அனாதை கழுதைனு” என்றவரோ மான்வியின் கன்னத்தில் அறைய சென்றவரின் கையை மடக்கி பிடித்து விட்டாள் மான்வி.
“அம்மா கையை விடு மான்வி” என்று மயூரனின் கர்ஜனை குரலில் சந்திரமதியின் கையை விட்டாள்.
“டேய் மயூரா இந்த அமெரிக்கா காரிக்கு வாய் கொழுப்பு ஜாஸ்திடா என் கையே போச்சு ஆ அம்மா வலிக்குது” என்று நீலிக் கண்ணீர் விட்டார்.
“என்ன நடந்துச்சு மான்வி அம்மாவோட கையை எதுக்கு மடக்கி பிடிச்ச? அம்மாகிட்ட சாரி கேளு” என கோபத்துடன் அதட்டல் போட்டான்.
“நான் எதுக்கு சாரி கேட்கணும். அவங்க என்னை அனாதை கழுதைனு பேசினதும் இல்லாம என்னை அடிக்க கையை ஓங்கிட்டு வந்தாங்க. என் கை பூ பறிச்சிட்டு இருக்குமா? அதான் மடக்கிப்பிடிச்சேன் இதுல என்ன தப்பிருக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது” என்று நின்றவளின் கையை பிடித்தவன்
“நீ அம்மாகிட்ட சாரி கேட்கணும் பெரியவங்க ஏதோ பேசிட்டாங்கனா நீயும் அவங்களுக்கு சரிசமமா ஏட்டிக்கு போட்டியா பண்ணுவியா மான்வி?” என்றான் கோபக்குரலில்.
“மன்னிப்பு கேட்க முடியாது மயூரன்!”
“அவ்வா அவ்வா என் பிள்ளையை பேரு சொல்லி கூப்பிடறா பாரு” என்று சின்ன விசயத்தை ஊதி ஊதி பெருசாக்கினார் சந்திரமதி.
மயூரனோ “மான்வி நீ அம்மாகிட்ட மன்னிப்பு கேட்டுத்தான் ஆகணும்” என்று அதிகாரம் பண்ணினான்.
“முடியாது வழிய விடுங்க மயூரன் எனக்கு மரியாதை கொடுக்கலைனா நானும் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டேன்” என்று நெஞ்சை நிமிர்த்திப்பேசியவளை கண்டு மூச்சடைத்துப்போனார் சந்திரமதி.
“என் மகனையே எதிர்த்து சண்டைபோடுறா பெரிய இவ… என்னைய விட சண்டைக்காரி போல இவகிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்” என்று தலையை ஆட்டிக்கொண்டார்.
சமையல்கட்டில் ஏற்பட்ட சலசலப்பில் கருணாகரனும் அருணாச்சலமும் அங்கே வந்துவிட்டனர்.
“என்னங்க உங்க மருமக என் கையை பிடிச்சு முறுக்கிட்டா என் கை போச்சு பிராக்சர் ஏதும் ஆகியிருக்குமோ பயமா இருக்கு” என்று வலியில் இருப்பதை போல கண்ணீர் விட்டார்.
“என்ன நடந்துச்சு பேத்தி பொண்ணு” என்றார் அருணாச்சலம்.
“தாத்தா அத்தை என்னை சமையல்திண்டுல உட்காருவியா உன் அம்மா வளர்ப்பு சரியில்லை அனாதை கழுதைனு சொல்லி என்னை அடிக்க கையை ஓங்கினாங்க அதான் அவங்க கையை தடுத்தேன் இதுல என் மேல என்ன தப்பிருக்கு. உங்க பேரன் மயூரன் என்னை அவங்க அம்மாகிட்ட மன்னிப்பு கேட்க சொல்லி வழியை மறைச்சு நிற்குறாரு… என் மேல தப்பிலாத போது மன்னிப்பு கேட்கமாட்டேன்” என எள்ளும் கொள்ளும் வெடிக்க பேசியவளை கண்டு மயூரன் ஆடித்தான் போனான்.
பூ 24
கருணாகரனோ “மான்வி நீ யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டாம் உன்னோட அறைக்கு கிளம்பு!” என்றவர் “மயூரா மான்விக்கு வழியை விடு! யார் மேல தப்பு இருக்குனு விசாரிக்காம மான்வியை சந்திரமதிக்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்க. நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணை நாம பார்த்துக்கணும் அதைவிட்டு அவ கையை பிடிச்சு மிரட்டுற நீ பிச்சிப்புடவேன் படவா… என் தங்கச்சிப்பொண்ணுக்கு நான் இருக்கேன்! அவ எதுவும் தப்பு பண்ணியிருந்தா என்கிட்ட சொல்லுங்க.
நான் அவளை கண்டிக்குறேன் அதை விட்டு யாரும் அதட்டவோ மரியாதை குறைவாவோ நடத்தக்கூடாது குறிப்பா சந்திரமதி உனக்குதான் சொல்லுறேன் நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ! அதை விட்டு ஆளாளுக்கு மான்வியை ஜாடை மாடையா குத்தலா பேசறதை நான் பார்த்தேன்னா மனுசனா இருக்கமாட்டேன்” என்று அனைவருக்கும் எச்சரிக்கை செய்து மான்வியின் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.
அருணாச்சலமோ பெரும்மூச்சு விட்டு மான்வியின் அறைக்குச் சென்றவர் “கருணா நானும் மான்வியும் என்னோட பங்களாவுக்கு போயிடறோம். இங்க இருந்தா உன் பொண்டாட்டி மான்வியை குறை சொல்லி சின்னப் பொண்ணு மனசை காயப்படுத்திட்டே இருப்பா! குடும்பத்துல தேவையில்லாத பிரச்சனைகள் வேணாம்பா… என் பேத்தியை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்திட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்” என்றார் கரகரப்பு குரலுடன்.
“அப்பா இவங்களுக்கு பயந்துக்கிட்டு ஏன் நீங்களும் மான்வியும் தனியா போய் இருக்கணும். எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையா இருக்கு” என்றதும் அருணாச்சலம் அமைதியாகி விட்டார்.
மான்வியோ நான் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம். சந்திரமதி அத்தைக்கு சரிசமமா பேசவும்தானே இப்போ பிரச்சனை வந்துருச்சு! என்னால மாமாவுக்கும் தாத்தாவுக்கும்தான் கஷ்டம் என்று தன் மீது கோபம் வந்தது அவளுக்கு.
சந்திரமதியின் கைக்கு ஆயில்மெண்டை போட்டுக்கொண்டிருந்த மயூரனோ “அம்மா மான்வியை அனாதைனு சொல்லியிருக்கக் கூடாது! நம்ம குடும்பத்தை நாடி வந்திருக்க பொண்ணுமா அவகிட்ட நீங்க பாசமா பேசலைனாலும் முகத்தை காட்டாதீங்க!”
“ஆம்பிளை பசங்க இருக்க வீட்டுல நைட் ட்ரஸ் போட்டு அலையுறா… இதே நம்ம யாழினி சுடிதார் மேல ஷால் இல்லாம ஒருநாள் வெளிய வந்திருப்பாளா சொல்லு மயூரா! நான் அவ அம்மா ஸ்தானத்துல இருந்துதான் கண்டிச்சேன்! இதுல உங்கப்பா யாரும் என் மருமகளை கண்டிக்க கூடாதுனு அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசுறாரு. இனிமே நான் அவள் இருக்க பக்கம் கூட போகமாட்டேன்பா! எவளோ எங்கேடோ கெட்டு போனா எனக்கென்ன வந்துச்சு!” நீட்டி முழக்கினார் சந்திரமதி.
“அம்மா அவளை திட்டினதை நான் உங்களை குறையா சொல்லலை. அனாதைங்கிற வார்த்தை அவளை ஹர்ட் பண்ணியிருக்கும்மா ப்ளீஸ் எனக்காக அவக்கிட்ட பாசமா நடந்துக்குங்க நம்ம வீட்டுல இருக்க வேலைக்காரவங்களும் சண்டையை பார்த்தாங்கனா நாளைக்கு வெளியில போய் சந்திரமதி அப்பா அம்மா இல்லாத பொண்ணை கொடுமைப்படுத்துறாங்கனு உங்களை தான் குறை சொல்லுவாங்க”
“சரிப்பா ஊருக்காக இல்லைனாலும் என் மகனுக்காக அந்த அடங்காபிடாரியை நான் எதுவும் பேசல போதுமா!” என்று மகனின் கன்னத்தை பிடித்தார்.
“இதுதான் என் அம்மா எனக்காக எதுவும் பண்ணுவாங்க” சந்திரமதியின் தோளில் சாய்ந்துக் கொண்ட மயூரனோ சந்திரமதியிடம் பேசி விட்டு அவனது அறைக்கு வந்தவன் மான்வியிடம் மன்னிப்பு கேட்க வேண்டி கதவை தட்டினான்.
அவளோ ‘இந்த தடியன்தான் கதவை தட்டுறான் போல போடா நான் உன் கிட்ட பேசமாட்டேன்!’ என்று போர்வையை போர்த்திப் படுத்துக்கொண்டவளுக்கு உறக்கம் வரவில்லை எழுந்து உட்கார்ந்துக் கொண்டவள் ‘இந்த மயூரன் அம்மா கோண்டு போல. என்ன தைரியம் எல்லார் முன்னாடியும் என் கையை பிடிச்சுட்டான் தடிமாடு ராஸ்கல்! இந்த நேரம் எங்கப்பா மட்டும் இருந்திருந்தா என் பொண்ணு கையை பிடிப்பியாடானு அவன் பல்லை உடைச்சு கையில கொடுத்திருப்பாரு. நீங்க இல்லாம போகவும் கண்டவங்க கிட்டயெல்லாம் ஏச்சு பேச்சு வாங்க வேண்டியிருக்குப்பா!’ என்று விசும்பியவள் இனிமே சொர்ணாக்கா டைனிங் டேபிளில் இருந்தா நாம சாப்பிட போகவே கூடாது சந்திரமதிக்கு பட்டப்பெயர் வைத்துவிட்டாள்.
அவளது அறைக்கும் மயூரன் அறைக்கும் கதவு இடையில் இருப்பது மான்விக்கு தெரியாது. மயூரனுமே கதவு இருப்பதை மறந்திருந்தான். மான்விகிட்ட மன்னிப்பு கேட்கணுமோ என்று யோசித்துக்கொண்டிருக்க அவனுக்கு அப்போதுதான் மான்வி தங்கியிருக்கும் அறைக்கு தன் அறையிலிருந்து செல்லும் கதவு நினைவு வந்தது.
ஆனாலும் இந்த நேரம் அவ அறைக்குள் தனியா போறது தப்பு என்று அவன் மூளை அறிவுறுத்தியது. அவன் மனனோ நீ லவ் பண்ணுற பொண்ணு அறைக்குள் போறது தப்பில்லை மயூரா நீ போ என்று அவனை பிடித்து தள்ளியது.
கதவை மெதுவாய் திறந்தான் அவள் மெத்தையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை கேட்டு ‘நான் தடிமாடாடி உனக்கு! என்ன பேச்சு பேசுறா பாரு! மயூரா இப்ப நீ அவளை சமாதானம் பண்ண வந்திருக்க உன் கோபத்தை மூட்டை கட்டி வை’ என்றவனோ
“க்கும்” என்று தொண்டையை செருமினான்.
“யா.யாரு இந்த நேரம் பேய் வந்திருச்சோ?” என்று பயந்துவிட்டாள் மான்வி.
“நா.நான் மயூரன்“
அவசரமாக கட்டிலுக்கு பக்கம் இருந்த லைட் சுவிட்சை ஆன் பண்ணினாள்.
மயூரன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு நின்றிருந்தான்.
“நீ. நீங்க எப்படி வந்தீங்க கதவு லாக் பண்ணியிருக்கேனே!” என்று அரண்டு விழித்தாள்.
“ஏய் கூல்மா கோப்படாதே நம்ம ரெண்டு பேர் அறைக்கு நடுவுல ஒரு கதவு இருக்கு அதை பெயின்ட் அடிச்சு மறைச்சு வச்சிருக்கோம் இத்தனை நாள் தேவைப்படாம இருந்துச்சு. இனிமே எனக்கு தேவைப்படும்” என்று கண்ணை சுழட்டி பேசியபடி அவளது பக்கத்தில் வந்து உட்கார்ந்ததும்
“ஏய் எந்திரிடா தடியா ராத்திரி நேரம் ஒரு பொண்ணு தங்கியிருக்க ரூம்க்குள்ள வரதே தப்பு அதிலும் நீ பக்கத்துல வந்து உட்காருற அறவில்லை… என்ன நடந்துச்சுனு தெரியாம எங்க அம்மாகிட்ட மன்னிப்பு கேளுனு என்னமோ உன் பொண்டாட்டி கையை பிடிக்கறது போல என் கையை அழுத்தி பிடிக்குற என் கை வலிச்சுது தெரியுமா! எங்க வீட்ல எங்கப்பாவோ அம்மாவோ என்னை கைநீட்டி அடிச்சது இல்லை… நீதான் என் கையை பிடிச்சிருக்க எனக்கு ஒரு சமயம் வரும் உன் கையை உடைச்சி விடறேன் பாரு. இனிமே உன்கிட்ட பேசமாட்டேன் இங்கிருந்து போடா” என்று மயூரனின் தோளில் கையை வச்சு தள்ளினாள் மான்வி.
“போறேன்மா இங்க உன் பக்கத்துல படுத்தா தூங்க முடியும்!”
மான்வியோ “என்ன சொன்ன?” என்று கண்ணகியாய் முறைத்தாள்.
“உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போறேன்னு சொன்னேன்மா” என்றவனோ பட்டென்று அவளது கையை பிடித்து வைத்து “மான்வி ரியலி சாரிமா! அம்மா உன்னை அந்த வார்த்தை சொல்லி இருக்ககூடாது. இதுல நான் வேற எங்கம்மாகிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லி உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்! அம்மா சார்புல நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன் சாரி சாரிடா” என்று அவளது கையை விட்டு அவளது கன்னத்தை பிடித்துவிட்டான்.
அவனது கையை தட்டி விட்டு “உன்னை என்னால மன்னிக்க முடியாது போடா! நீ அம்மா பையனா. அப்போ உன் பொண்டாட்டி பாடு திண்டாட்டம்!” என்று பெரும்மூச்சு விட்டாள்.
“நீதான்டி என் பொண்டாட்டி” என்று நெஞ்சை நீவிக்கொண்டான்.
“என்ன சொன்ன” என்று மெத்தையிலிருந்து எழும் முன்னே அவனது அறைக்குள் ஓடி கதவை மூடியிருந்தான்.
“இவனுக்கு நான் பொண்டாட்டியா! கனவுல கூட நினைக்காதேடா தடிமாடு” என்று மயூரனை வறுத்துக்கொட்டிக்கொண்டே உறங்கிப்போனாள். இருவரின் வாழ்க்கையிலும் பல சோதனைகள் காத்திருக்கிறது என்று தெரியாமல் இருந்தார்கள்.
அடுத்து வந்த நாட்களில் மான்வி மயூரனின் காரில் ஏறவில்லை. கருணாகரனுடன் காலேஜ் செல்ல ஆரம்பித்தாள்.
வெங்கட் மாலதியும் மயூரனின் கிளாஸ்மேட். மாலதி தமிழ் டிபார்ட்மெண்டில்தான் ஜாயின் பண்ணி இருந்தாள். மான்வியுடன் பேசி பழகி இருவரும் சேர்ந்து வெளியே போகும் அளவிற்கு நெருங்கிப் பழகினார்கள்.
வீக் எண்ட் மாலதியின் வீட்டுக்குச் சென்று மாலையில் கருணாகரன் சென்று அழைத்து வருவார் மான்வியை.
மான்வி மயூரனிடம் பேசுவதை தவிர்த்தே விட்டாள்.
கதிரிடம் மட்டும் சிரித்து சிரித்து பேசி மயூரனை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தாள். அறைக்கு நடுவே இருந்த கதவுக்கு லாக் வேணும் மாமா என்றிட கருணாகரன் மான்வி அறையிலிருந்து பூட்டி வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்து விட்டார்.
மயூரனுக்கு மான்வியின் செயலில் கோபம் வந்துவிட்டது.
பொறுமையா இருக்கணும் மயூரா காதலில் இதெல்லாம் சகஜம் என்று தன்னை திடப்படுத்திக்கொண்டு எப்படியும் காலேஜ் வந்து தானே ஆகணும் அப்போ உன்னை பிடிக்குறேன்டி என்றவன்
அடுத்த நாள் செகரட்டரி மீட்டிங் என்று மான்வியை தன் அறைக்கு வரவைத்து விட்டான்.
மீட்டிங் முடித்ததும் “மான்வி மேடம் நீங்க இருங்க” என்று விட்டான்.
மாலதியோ “என்னடி உன் மாமா உன்னை மட்டும் இருக்கச் சொல்லுறாரு செகரட்டரி பார்வையே சரியில்லை பார்த்துக்கோடி” என்று சிரித்துவிட்டு போனாள்.
அவளோ இந்த குரங்கு என்னைய மட்டும் இருக்கச் சொல்லுது என்று அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“மான்வி என்கூட பேசு! நீ பேசலைனா எனக்கு மனசு சங்கடமா இருக்குடி” என்று கெஞ்சியும் பார்த்தான். அவனது பார்வையில் தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தாலும் மயூரன் காதலை சந்திரமதி ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்து மான்வி மயூரனின் காதலை கண்டும் காணாமலும் இருந்தாள்.
இருவரின் சண்டையை தீர்த்து வைக்கும் சம்பவம் நடந்தது.
மான்வி கிளாஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டாள். மீட்டிங்கில் இருந்த மயூரனுக்கு மான்வி மயங்கி விழுந்தது தெரிந்ததும் ஓடிச் சென்று அவளை அள்ளி காரில் போட்டு ஹாஸ்பிட்டல் சென்றான்.
மான்வியை செக் பண்ணிய டாக்டரோ “இவங்களுக்கு ரெண்டு கிட்னியும் செயலிழந்திருந்துச்சு… உடனே சர்ஜரி பண்ணனும் இப்போ கிட்னி கிடைக்கறது ரேர்… நாங்க எங்க ஹாஸ்பிட்டல் சைடுல கிட்னிக்கு ஏற்பாடு பண்ணுறோம் ஆனா பேஷண்ட்டுக்கு மேட்ச் ஆகணும்!”
அருணாச்சலமோ “என்னோட கிட்னியை எடுத்துக்கோங்க என் பேத்தி வாழணும்” என்று கண்ணீர் விட்டார்.
கருணாகரனோ “என்னோட கிட்னியை எடுத்துக்கோங்க” என்ற போதும் சந்திரமதியோ ‘பீடை செத்து ஒழியட்டும்னு விட வேண்டியதுதானே நான் தரேன்னு ஆளாளுக்கு போட்டி போடுறாங்க’ என்று புகைந்துக் கொண்டார்.
யாழினியோ “மான்வி உயிரோட இருக்கவே கூடாது சாமி” என்று கடவுளை வேண்டினாள்.
“தாத்தா நான் மான்விக்கு என்னோட கிட்னியை தரேன்!” என்று கூற அருணாச்சலம் பேரனை அணைத்துக்கொண்டு “உன்னை டாக்டர் செக் பண்ணிட்டு சொல்லட்டும். நமக்கு தெரிஞ்சவங்களுக்கு கிட்னி டோனர் வேணும்னு சொல்லியிருக்கேன் கடவுள் நமக்கு உதவி செய்வார்” என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.
அடுத்த நாள் வரை கிட்னி டோனர் யாரும் கிடைக்கவில்லை. “மயூரா மான்விக்கு நீ கிட்னி கொடுக்க வேணாம். ஆப்ரேசன்ல உனக்கு ஏதும்னா என்னால உயிரோடவே இருக்க முடியாது ப்பா” என்று மகனை அணைத்துக்கொண்டு அழுத சந்திரமதியை “ம்மா ஒரு கிட்னியோட உயிர் வாழலாம் நீங்க பயப்படாதீங்க எனக்கு ஒண்ணும் ஆகாது. இதே நம்ம வீட்ல யாருக்காவது மான்வி நிலமை வந்திருந்தா நான் கிட்னி கொடுத்திருப்பேன்தானேமா” என்று சந்திரமதியை சமாதானம் செய்தான்.
அதிர்ஷ்ட வசமாக மயூரன் கிட்னி மான்விக்கு பொருந்தி வந்தது.
அருணாச்சலமோ மயூரன் மான்விக்கு கிட்னி கொடுப்பதால் “மயூரனுக்கு எந்த பாதிப்பும் இல்லைதானே டாக்டர்… என் பேத்தியும் பேரனும் நல்ல ஆரோக்கியமா இருக்கணும்” கடவுளை வேண்டிக்கொண்டு நின்றார்.
“மயூரன் ஹெல்தியா இருக்காரு நோ ப்ராப்ளம்” என்று டாக்டர் கூறியதும் அருணாச்சலத்திற்கு நிம்மதி வந்தது.
ஆப்ரேசன் முடிந்ததும் மான்வியையும் மயூரனையும் ஒரே ஐசியுவில் வைத்திருந்தனர். முதல் நாள் இன்ஃபெக்ஷன் ஆகிடுமென்று யாரையும் பார்க்க விடவில்லை.
மயூரன் முதலில் கண்விழித்து விட்டான். “மானு என்னை விட்டு உன்னை போக விட்டிருவேனாடி. எமன்கிட்ட போராடி உன்னை என்கூட அழைச்சிட்டு வந்துட்டேன் பார்த்தியாடி” என்று இதழ் விரித்து சிரித்தான்.
மான்வியோ கண்விழித்ததும் தலையை திருப்பி தன் பக்கத்தில் பெட்டில் படுத்திருந்த மயூரனை பார்த்தாள்.
“ஐலவ்யு பொண்டாட்டி” என்று உதடசைத்தான்.
“போடா” என்று தலையை திருப்பிக்கொண்டாள்.
“ஏய் டார்லிங்” என்றான் மெதுவாய். நர்ஸ் வரவும் அமைதியாகி விட்டான்.
இருவரையும் நார்மல் வார்ட்டுக்கு மாற்றியதும் மயூரனை பார்த்து பார்த்து கவனித்தார் சந்திரமதி. வெங்கட் மயூரன் கூடவே இருந்தான்.
யாழினி எங்கே தன்னை மான்வி கூட இருக்கச் சொல்லிவிடுவார்களோவென்று காய்ச்சல் என்று வீட்டிலேயே இருந்துகொண்டாள்.
மான்வியை கவனிக்க மாலதி ஓடி வந்துவிட்டாள். யாரும் இல்லாதவர்களுக்கு கடவுள் நேரிடையாக வந்து உதவி செய்வார் என்று பெரியவர்கள் வாக்கு பலித்தது.
இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்று விட்டனர்.
மான்வியோ மயூரன் தனக்காக கிட்னியை கொடுத்திருக்கிறானே!
“என் மேல உனக்கு அத்தனை காதலாடா… என்னமோ தெரியலை என் அப்பா அம்மாவுக்கு அடுத்து உன் மேலதான் ரொம்ப ஆசை வருது. ஏன் தாத்தா மாமாவை விட உன்னை எப்பவும் பார்க்க தோணுதுடா… ஆனா நம்ம காதல் ஒத்தையடி பாதை போல மாமு. உங்கம்மா நிச்சயம் என்னை மருமகளா ஏத்துக்கமாட்டாங்க ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா. என் மேல நீ கேரிங்கா இருக்கறது உரிமையா தொட்டு பேசறது… ஏன்டா எனக்குள்ள வந்த!” என்று இரவு பால்கனியில் நின்று தோட்டத்தில் இரவு நேர பறவைகளின் ஒலியை கேட்டுக்கொண்டிருந்தாள்.
மயூரனோ மான்வியின் அறைக்குள் வந்தவன் அவள் அறையில் இல்லையென்றதும் பால்கனியில் எட்டிப்பார்க்க அவள் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
“ஹாய் டார்லிங்” என்று அவளருகே நெருங்கி வரவும் அவள் சற்று தள்ளி நின்று “ஏன் மாமா உங்க கிட்னியை கொடுத்தீங்க அப்படியே விட்டிருந்தா நான் எங்கம்மா அப்பாகிட்ட போயிருப்பேனே” என்றாள் அவன் முகத்தை பார்க்காமல் அவள் கண்கள் கலங்கி இருந்தது.
“என் பொண்டாட்டியை என்னை விட்டு நான் போக விடுவேனா! நாம ரெண்டு பேரும் நூறு வருசம் சேர்ந்து வாழணும்டி என் லவ்வை ஏத்துக்கோயேன்டி எல்லாரும் லவ்க்கு ஹார்ட் கொடுப்பாங்க என் லவ்வுக்கு என் கிட்னியை கொடுத்து உன் லவ்வை கேட்குறேன்டி” என்றான் குழைந்த குரலில்.
“நம்ம லவ் சக்ஸஸ் ஆகாது மாமா. எனக்கும் உங்களுக்கும் செட் ஆகாது.”
தன்னை பார்க்காது தரையை பார்த்திருந்தவளின் முகத்தை பற்றி “நிஜமா என் கண்ணைப்பார்த்து சொல்லு உனக்கு என்னை பிடிக்கலைனு” என்றான் ஊசி குத்தும் பார்வையுடன்.
“பிடிக்கல” என்றவள் மீண்டும் தலையை குனிந்துக் கொண்டாள்.
“ஓ.கே தூங்கறவங்களை எழுப்ப முடியும் தூங்குற மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாதுடி” என்றவன் அவளது கன்னத்தை விட்டு கோபத்துடன் விறுவிறுவென அவனது அறைக்குள் சென்றுவிட்டான் மயூரன்.
“ஐ லவ் யு மாமா” என்றாள் உதடுகள் துடிக்க.
சந்திரமதி யாழினிக்கும் மயூரனுக்கும் திருமண பேச்சை எடுத்தார். மயூரனோ “இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் மா என்ன அவசரம்” என்று மழுப்பி விட்டான்.
மயூரனோ பொறுத்துப்பார்த்தவன் ஒருநாள் கடற்கரைக்கு அழைத்துச் சென்று “என்னால நீ இல்லாம வாழமுடியாது மானு ப்ளீஸ் என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கோடி” என்றான் உருகும் குரலில்.
“நீங்க கிட்னி கொடுத்ததால என்னை லவ் பண்ணச் சொல்றீங்களா மாமா?”
“இல்லடி இந்த ஜென்மத்துல நீதான்னு எனக்கு முடிவு ஆகிடுச்சு! நீ நாளைக்கு என்கிட்ட காதலை சொல்லணும்” என்று ஆர்டர் போட்டு அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.
அடுத்தநாள் ஹோலிப்பண்டிகையில் மான்வி மயூரனை காதலனாக ஏற்றுக்கொண்டு விட்டாள். காதல் கிளிகள் கொஞ்சி திரிவதற்கு இடைஞ்சலாக அறைக்குள் இருந்த கதவில் இருந்த லாக்கை எடுத்துவிட்டனர்.
மான்வி மயூரன் மடியில் படுத்துக் கொண்டு “மாமா நம்ம காதலுக்கு அத்தை ஓ.கே சொல்லுவாங்களா!” அடிக்கடி கேட்டுக்கொள்வாள்.
“அம்மா என் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லமாட்டாங்கடி” என்று அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அவளது இதழில் கவி பாட ஆரம்பித்துவிடுவான்.
வெங்கட் மாலதி இருவரும் பார்க், பீச், சினிமா என்று சுற்றிக்கொண்டிருந்தனர்.
மயூரனும் மான்வியும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த நேரம் “ஹேய் டார்லிங் ஒரு முத்தம் கொடுடி” என்று கண்ணடித்தான்.
“போடா தோட்டத்துல வச்சு கேட்குற யாராவது வந்துட்டா அவ்ளோ தான்” இதழை சுளித்தாள்.
“யார் வந்தா என்ன நம்ம காதல் எல்லாருக்கும் தெரியட்டும்” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
யாழினி அறை ஜன்னலை மூடப்போனவளின் கண்ணில் மயூரன் மான்விக்கு முத்தம் கொடுப்பதை கண்டவளுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தது.
“எனக்கு நீ இல்லையா மாமா! நோ நோ எனக்கு நீ வேணும் மாமா உன்னை யாருக்கும் விட்டுத்தரமாட்டேன்” என்று சந்திரமதியிடம்
போய் நின்றவள் “என்னை மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு எனக்கு வாக்கு கொடுத்தீங்கல்ல அத்தை… இ.இப்போ மயூரன் மான்விக்கு முத்தம் கொடுத்ததை நான் பார்த்துட்டேன் எனக்கு மாமா வேணும் அத்தை மான்வியை இந்த வீட்டை விட்டு துரத்தி விடுங்க” என்றாள் அழுகையுடன் கூடிய ஆத்திரத்துடன்.
சந்திரமதி பேயாட்டம் ஆடிவிட்டார் கருணாகரனிடம்.
“லவ் பண்ணுறவங்க முத்தம் கொடுப்பது தப்பு கிடையாது. அவன் உரிமை பட்டவளுக்குதானே முத்தம் கொடுத்திருக்கான் ஊருல உள்ள பொண்ணுக்கு கொடுக்கலையே. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம் சந்திரா” என்றவரிடம்
“யாழினியை மயூரனுக்காக வளர்த்து வச்சிருக்கேன். யாழினி கழுத்துலதான் மயூரன் தாலிகட்டணும்” என்று பிடிவாதம் பிடித்தார்.
“மயூரா நீ மான்வியை விரும்புறியா?” என்ற கருணாகரனிடம்
“ஆமா அப்பா மான்வியை விரும்புறேன் எனக்கு மான்வியை கல்யாணம் செய்து வைங்க” என்றவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் சந்திரமதி.
“நீ அந்த அனாதை கழுதையை கல்யாணம் பண்ணிக்க கூடாது என் தம்பி பொண்ணு யாழினியைத்தான் நீ கல்யாணம் செய்துக்கணும். நீ என்னோட முடிவுக்கு கட்டுப்படலைனா என்னை உயிரோட பார்க்க முடியாது” என்று கோபத்தில் வெடித்தார்.
“அம்மா யாழினியை கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஒருநாளும் தோணியது இல்ல. யாழினியை என் ப்ரண்டாகத்தான் பார்க்குறேன்… ம்மா நான் இதுவரை கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறீங்க உங்க மகன் ஆசையை நிறைவேத்தி வைக்க மாட்டீங்களா அம்மா… எனக்கு மான்வி வேணும்மா அவ இல்லாம என்னால வாழ முடியாதும்மா! மான்வி நல்ல பொண்ணுமா உங்களுக்கப்பறம் மான்வி நம்ம குடும்பத்தை பார்த்துப்பா ம்மா சரினு சொல்லுங்க” என்று சந்திரமதியின் கையை பிடித்து கன்னத்தில் வைத்துக்கொண்டான்.
கருணாகரனும் அருணாச்சலமும் பார்வையாளராக நின்றுக் கொண்டனர்.
சந்திரமதியோ வெகு நேரம் கழித்து “என் மகனோட ஆசையை நிறைவேத்துறேன்” என கண்ணை மூடித்திறந்தார்.
“தேங்க்யூ சோ மச் அம்மா” என்று சந்திரமதியை அணைத்துக்கொண்டான் மயூரன்.
அருணாச்சலமோ “மயூரா என் பேத்தி கண்ணுல தண்ணி வரக்கூடாது. தண்ணி வரவச்ச உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவேன்” என்றார் சந்திரமதியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.
“என்னை நம்பி மான்வியை என்கிட்ட கொடுங்க தாத்தா நான் காலம் முழுக்க அவளை சந்தோசமா வச்சிப்பேன்” என்றான் கண்கள் மின்னும் சிரிப்பில்.
வெளியே தெரியாத இடத்தில் பேத்தியை கொடுப்பதை விட மயூரனுக்கு மான்வியை கல்யாணம் செய்து வைத்துவிடலாமென்று முடிவு எடுத்து மயூரனுக்கு மான்வியை கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.
யாழினி அழுது கரைந்தாள்.
லண்டனிலிருந்து வந்த யாழினியின் அப்பா ஆனந்தனோ “மயூரன்கிட்ட உன் காதலை சொல்லி அவன் உன்னை லவ் பண்ணலைனு சொல்லிட்டானேடா! இதுக்கப்பறம் அப்பா எப்படி மயூரன்கிட்ட என் மகளை கல்யாணம் பண்ணிக்கோனு கேட்க முடியும் நீ லண்டன் கிளம்பி வந்துடு உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன். மயூரன் மான்விக்கு நீ இடைஞ்சலா இருக்க கூடாது சரியா” என்று மகளின் தலையை வருடியவரிடம்
“நா.நான் உங்க கூட லண்டன் வரலைப்பா நான் அத்தை வீட்லயே இருக்கேன் மாமாவை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்னை நம்புங்க” என்றதும்
“நீ என் பொண்ணுடா காதலுக்கு எதிரியா எப்பவும் நிற்க கூடாது” என்று மகளை தோளோடு அணைத்துக்கொண்டார்.
மயூரன் மான்வியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான்.
25
தாலி கட்டி முடித்த தருணம் சிதம்பரமும் சிவகாமியும் தன் பக்கம் நிற்கவேயில்லையே என்ற கவலையில் மான்வியின் கண்ணில் கண்ணீர் சொட்டு சொட்டாய் மயூரனின் கையில் விழுந்தது.
“அழாதடி” என்று அவளின் கண்ணீரை கைகுட்டையால் துடைத்துவிட்டவன் “மாமா அத்தையும் இங்க நின்னு நம்மளை ஆசிர்வாதம் பண்ணிட்டுதான் இருப்பாங்கடி கண்ணு கலங்காதே” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி
“ம்ம் அழலை” என்று தலையை அசைத்தாள். மயூரனின் கைப்பிடித்து அக்னியை சுற்றி வந்து சடங்குகளை முடித்தாள் மான்வி
மயூரனின் கைகோர்த்து கழுத்தில் மாலையுடன் முகத்தில் சந்தோச சிரிப்புடன் நடந்து வரும் மான்வியை பார்க்க பார்க்க யாழினிக்கு பற்றிக்கொண்டு வந்தது. வெளியே சிரித்து நின்றவள் மனதிற்குள் வன்மதீ பற்றி எரிந்தது.
“உன்னை இந்த வீட்டை விட்டு துரத்திட்டு மயூரன் மாமா கையால தாலி வாங்கத்தான் போறேன்டி” என்று பொருமினாள் யாழினி
யாழினி வீட்டுக்குள் வந்தவள் அழுதுகொண்டேயிருந்தாள். சந்திரமதியும் தாலி கட்டும்வரை இருந்தவர் “நான் வீட்டுல போய் ஆரத்தி ரெடி பண்ணுறேன் நீங்க பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வந்துடுங்க” என்று கருணாகரனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
மனதில் விரும்பியவன் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி அவளுடன் சந்தோசமாய் வாழ்க்கையை தொடங்குவதை மகள் பார்த்து ஏக்கப்படக்கூடாதென யாழினியை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் ஆனந்தன்.
மணமக்களுக்கு ஆரத்தியை வேண்டா வெறுப்பாய் எடுத்தார் சந்திரமதி.
மாலதி மான்வியுடன் கூடவே இருந்தாள். விளக்கேற்றி முடித்ததும் பால் பழம் சாப்பிட்டு முடித்தவுடன் “மான்வி நம்ம அறைக்கு போகலாமா” என்று மான்வியின் கையை பிடித்தான் மயூரன்
“மயூரா நைட் வரைக்கும் நீயும் மான்வியும் தனி அறையிலதான் இருக்கணும்பா நீ கீழ கதிர் அறையில ரெஸ்ட் எடு” என்றவரோ “மான்வி நீ என்னோட குளிச்சிட்டு சமையல்கட்டுக்கு வா” என்று ரோபோர்ட் போல பேசி சென்றார் சந்திரமதி
மாலதியோ “என்னடி உன் மாமியார் முகத்தில மருந்துக்கும் சிரிப்பு இல்ல. இந்த கல்யாணத்துல அவங்களுக்கு விரும்பமில்லைனாலும் சொந்தகாரவங்க முன்னால உன்கிட்ட சிரிச்சு பேசலாம்ல”
“மயூரனுக்காக நான் அத்தையை பொறுத்துதான் ஆகணும்டி! இன்னுமா குளிக்க போகலை என்கிட்ட சண்டைக்கு வருவாங்க வா போகலாம்” என்று மாலதியுடன் சந்திரமதி அறைக்குள் சென்றாள் மான்வி.
குளித்து முடித்ததும் மாலதி குளிலறைக்குள் சென்றிருந்த சமயம் எப்போதடா மான்வியை தனியே சந்திப்போம் என்று காத்திருந்த மயூரனோ மாலதி மான்வியுடன் இருப்பதை மறந்து விட்டான்
கள்ள பூனையை போல சந்திரமதியின் அறைக்குள் சென்று கதவை லாக் பண்ணி திரும்ப மான்வி புடவைக்கு பின் குத்திக்கொண்டிருந்தாள்.
இருவரும் காதலிக்கும் காலத்தில் முத்தத்தை தவிர அடுத்த கட்டத்துக்கு முன்னேற வில்லை. ஜெம் காதலர்களாக இருந்தனர். மயூரனை பார்த்ததும் பதட்டத்தில் மான்வி மராப்பை நழுவ விட்டாள்.
அவளது முன் அழகுகள் இரட்டை தாமரை பூக்களாய் மலர்ந்திருப்பதை கண்டு எச்சில் விழுங்கினான் மயூரன்.
“ம.மயூ வெ.வெளியே போங்க” என்று மான்விக்கு பேச்சு வராமல் காற்றுத்தான் வந்தது.
மயூரனோ மான்வியை விழுங்கி விடும் மோகப் பார்வையில் மெதுவாய் காலடிகளுடன் வந்தவன் “மானு” என்று அவள் கன்னத்தை பற்றி அவளது நெற்றியில் முத்தம் கொடுக்க கண்களை மூடிக்கொண்டான்.
“ஊப்” என்று அவள் கண்களில் ஊதினான் அவள் இமைகுடைகளை திறக்க கண் இமைகளுக்கு முத்தம் கொடுத்தவன் “செமயா இருக்கடி” என்று அவளது கண்கள் போன இடம் கழுத்துக்கு கீழ் ராஜ கோபுரங்களுக்குத்தான் அவள் அவரசமாக கீழே விழுந்த சேலையை எடுக்க போனவளின் கையை பிடித்து இழுத்து தன்னோட காற்று புகா வண்ணம் அணைத்துக்கொண்டு அனல் மூச்சை இழுத்துவிட்டான் அவளது கழுத்தில் உள்ள பூனை முடிகள் எல்லாம் சிலிர்த்து நின்றது.
குளியலறைக்கதவை திறந்து கொண்டு மாலதியோ “அச்சோ அம்மா” என்று அலறி குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
இருவரும் கதவு திறந்த சத்ததில் விலகி நின்று “என் மானமே போச்சு வாஷ்ரூம்ல மாலதி உள்ள இருந்தா ஏன்டா இப்படி வந்து அலப்பறை பண்ணுற” என்று மான்வி முந்தானையை எடுத்து மேலே போட்டுக்கொண்டாள்
மயூரனோ அவள் பேசியதை காதில் வாங்காமல் அவள் மூடி மறைந்த பாகங்களை படம் வரைந்து பாகம் விளக்குவது போல பார்த்துக்கொண்டிருந்தான்
“மயூ வெளியே போங்க” என்று மயூரனின் முதுகில் கையை வைத்து தள்ளிச் சென்றவளை சட்டென திரும்பி அவளது இதழில் அவசரமாய் முத்தமிட்டு “சீக்கிரமா நம்ம ரூமுக்கு வந்துடுடி என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை” என்று மூக்கைச்சுருக்கி கதவு திறந்து வெளியே வந்தவன் சந்திரமதியின் மேல் மோதி நின்றான்
“இங்க என்னடா பண்ணுற!” என்று மகனை முறைத்தார் சந்திரமதி
அங்கே நின்ற உறவுக்கார பெண்மணகள் “மாப்பிள்ளைக்கு ரொம்ப அவசரம் போல” என்று கொல்லென்று சிரித்தனர்.
மான்வியோ வெட்கம் கொண்டு அறைக்குள் ஓடிவிட்டாள். வெங்கட்டோ கிழே வந்தவன் “என்னை உன் அறையில தனியா விட்டு இங்க வந்து சல்ஜா பண்ணி மாட்டிகிட்டயா” இடுப்பில் கை வைத்து சிரித்தான்
குளியலறையிலிருந்து வெளிய வந்த மாலதியோ “உன் மாமாவுக்கு கொஞ்ச நேரம் பொறுக்க தெரியாதடி” .. அவள் சிரிக்கவும்
“சும்மா இருடி” என்ற மான்வியின் கன்னங்கள் சிவந்தது
மான்வி சமைலயறைக்குச் சென்று பாலைக்காய்ச்சி விட்டு ஈசியாக செய்து முடிக்கும் கேசரியை செய்து முடித்து விட்டாள்.
மதியம் தடபுலாக விருந்து வைத்தார் சந்திரமதி. மயூரன் இருக்கும் சமயம் மட்டும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொள்வார். விருந்து முடித்து மாலையானது சொந்தங்கள் சென்றுவிட்டனர்.
இரவானது மான்விக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் மாலதி.
“பேத்தி பொண்ணு” மான்வியின் அறைக்குள் வந்தார் அருணாச்சலம்
“வாங்க தாத்தா” என்று இருவரும் எழுந்து நின்றனர்.
“இப்படி வந்து நில்லுமா” என்றவரின் கையில் வைர நெக்லஸ் இருந்தது.
“இது உன் பாட்டிக்கு நான் முதல் கல்யாண நாளுக்கு வாங்கிக்கொடுத்தது இப்போ உனக்கு கொடுக்குறேன் எங்க நினைவா நீ பத்தரமா வச்சிக்கணும்” என்றதும்
“நீங்களே போட்டு விடுங்க தாத்தா” என்றாள் புன்னகை மலர்ந்த முகத்துடன்
மாலதியிடம் “எந்த நகையும் வேண்டாம்டி” என்று மறுத்த மான்வி அருணாச்சலம் போட்டு விட்ட நெக்லஸை போட்டுக்கொண்டு அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள்.
“டேய் மான்வி ரெடி ஆகிட்டாளானு மாலதிக்கு போன் போட்டு கேளுடா” என்று அறைக்குள் குட்டி போனை போல அலைந்து கொண்டிருந்தான்
“அடங்குடா மச்சான் மான்வி வரத்தான் போறா அவரசப்படாதேடா” என்று மயூரனின் தோளில் அடித்தான்.
மான்வியின் சிரிப்பு சத்தம் கேட்டதும “என் பொண்டாட்டி வந்துட்டா நீ வெளியே போடா”
“நான் போகத்தான் போறேன்டா வாழ்த்துக்கள் மச்சான்” என்று நண்பனை கட்டிக்கொண்டான்
“கொஞ்சம் நெர்வஸா இருக்குடா” என்றவனை
“நடிக்காதேடா மச்சான்” என்று அவனது வயிற்றில் குத்தி வெளியே வந்துவிட்டான்
கையில் பால் சொம்புடன் மயூரனின் அறைக்குள் நுழைந்தாள் மான்வி. மாம்பழ மஞ்சள் நிற காஞ்சிபுரபட்டில் தலையில் சரமாய் தொங்க விட்ட மல்லிகை பூவுடன் நடந்து வந்த மான்வியின் கையிலிருந்த பாலை வாங்க டேபிளில் வைத்தவுடன் மயூரனின் காலில் விழுந்தான் மான்வி
வெங்கட்டோ மாலதியை காரில் அழைத்துச் சென்றான் மாலதியின் வீடு வந்ததும் “நாம எப்போடி கல்யாணம் பண்ணி கச்சேரி நடத்துறது” என்று பெரும்மூச்சுவிட்டவனை “உங்கம்மாகிட்ட நாம லவ் பண்ணுற விசயத்தை சொல்லுங்க சார்” என்று அவன் கன்னத்தில் இடித்தாள்.
அவளது கையை பிடித்து அவளது இதழில் அச்சாரமிட்டதும் அவள் அவனை விலக்கவில்லை. எதிரே வந்த கார் சத்ததில் இருவரும் விலகினார்.
“அம்மாகிட்ட நம்ம லவ் மேட்டர் சீக்கிரம் பேசிடறேன்” என்றவன் அவளது இதழை நோக்கி குனிந்தான்.
“ஒரு நாளைக்கு ஒரு முறைத்தான் கோட்டா முடித்தது” என்று கார் கதவை திறந்து சென்றுவிட்டாள்.
மான்விக்கோ ஏசி அறையிலும் குப்பென்று வியர்த்தது. அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை விரலால் துடைத்தான்.
“ம. மயூ கூச்சமா இருக்கு” என்றவளின் கன்னம் செங்காந்தள் மலராய் சிவந்தது.
அவனது விரல்கள் அவளது கன்னத்தை வருட அவளோ அவனது கையை தட்டிவிட்டு முதுக காட்டி நின்றாள்.
“ஓ இந்த நெக்லஸ் எனக்கு இடைஞ்சலா இருக்கும்னு கலட்டி விடச் சொல்லுறயாடி” என்று அவளது நெக்லஸ் கொக்கியை கழட்டி டேபிள் மீது வைத்தவள் அடுத்து ஆரி ஓர்க் செய்த ப்ளவுஸின் நாட்டிற்கு விடுதலை கொடுத்தான்.
அவளுக்கோ அடுத்து நடக்ககூடிய எண்ணி அச்சத்தில் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.
ஏய் அவள் அச்சப்படுகிறாள் என்று தெரிந்து தன் பக்கம் திரும்பி அவளது கன்னத்தை பற்றி “என்னை பார்த்தா உனக்கு பயமா இருக்கா நான் உன்னை கஷ்டப்படுத்துவேனா கண்மணி!” என்று அவளது கருவிழிகளில் அழுந்த முத்தமிட்டான்
“கொ.கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறமா” என்றவளின் இடுப்பில் கைபோட்டு தூக்கி மெத்தையில் உட்கார வைத்து “நாம ரொம்பநாள் பேசிட்டோம் டார்லிங் இப்போ ஒன்லி ஆக்சன்தான் ப்ளீஸ் கோ ஆப்ரேட் பண்ணுடி” என்று அவளது முகத்தை பற்றினான் முத்தமிட
பா.பால் கு.குடிக்கணும்
“இப்ப என்ன அ.அவசரம் முத்தம் கொடுத்து குடிக்குறேன்” என்றவனோ அவளை கிறக்கமாக பார்த்துக்கொண்டே சட்டை பட்டனைகளை கழட்டினான்.
அவளோ “அச்சோ வெட்கமா இருக்கு” கண்ணை மூடிக்கொண்டாள்
வெற்று உடம்புடன் இருந்தவன் “நீயும் இப்படித்தான் இருக்கணும்டி” என்றவன் அவளது முந்தானையில் கையை வைக்க போக “பால் குடிக்கணும் மாமா” என்று அவள் எழும்ப “இப்பவே குடிக்கணுமா கொஞ்ச கொஞ்சமா போவோமே”
“அச்சோ நம்ம வீட்டுக்கு வந்த பாட்டி பர்ஸ்ட் பால் குடிச்சிட்டு அப்புறம்தான் மத்ததுனு சொன்னாங்க” என்றாள் கண்ணைசுழட்டி
அவனோ “அதுக்குள்ள என்ன அவசரம் அந்த பாட்டிக்கு ஒன்னும் தெரியலை போல” என்றவனோ அவளது மராப்பை விலக்கி சோளிகளின் பட்டனை தொட்டு விட்டான்
“நான்தான் பால் குடிச்சிட்டு ஆரம்பிக்கணும்னு சொல்றேன்டா” என்று அவன் தலை முடியை பிடித்து ஆட்டினான்.
“அடி அறிவுகெட்டவளே நானும் அதைதான்” என்று சொல்லிமுடிக்கவில்லை அவனை தள்ளிவிட்டு டேபிள் வைத்திருந்த பாலை எடுத்து அவன் கையில் கொடுத்து “பாலைக்குடிச்சிட்டு ஆரம்பிக்கலாம்” என்றதும் அவனோ “இந்த பாலைச் சொன்னியா” என்று அசடு வழிந்தான்
“அடப்பாவி நீ இவ்ளோ காஜியா இருப்பனு நான் நினைக்கலடா” என்று அவனை இடுப்பில் கை முறைத்தவள் அவன் குடித்து கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு திரும்ப அவளை தூக்கி மெத்தையில் போட்டு அவசரமாக அவளது ஆடைகளுக்கு விடுப்பு கொடுத்தான்
“என்னடா இப்படி அவசரம் உனக்கு மெதுவாடா” என்று அவள் சிணுங்க அவனோ அவனது காரியத்தில் கண்ணாக இருந்தான்.
கன்னக்கதுப்பில் முத்தம் கொடுத்து அவளது தேன் இதழை கவ்விச் சுவைத்தான். இதழ் பிளந்து அவள் நாவோடு போர் புரிந்து உமிழ்நீரை உறிஞ்சினான். அவளும் அவனது முத்தத்திற்கு இணைந்து கொடுத்தாள்.
மன்னவனின் கைகள் கொண்டு அவளது பூகோளங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
“மாமு” என்று அவளது முணகலில் அவனது கைகளின் அழுத்தம் அதிகமானது.
“மாமு மாமு” என்று அவள் ராகம் போட அவனோ “மானு மானு” என்று அவளது உடல் முழுக்க இதழ் ஒத்தடம் கொடுத்தான்.
மேடு பள்ளங்களில் பிரேக் இல்லாத கார் போல ஏறி இறங்கி விளையாடினான்.
“மெதுவாடா” என்று அவனது தலையை முடியை பிடித்து இழுத்தாள். அவனோ கள்ளுண்ட வண்டாய் இரட்டை ரோஜாவில் தேன் அருந்திக்கொண்டு இருந்தான்.
நாபியில் முத்தமிட்டு வட்டமடித்தான். அவளது பெண்மை மலர்ந்து வெடித்தது. “மாமு” என்று அவனது முதுகில் நகக்கீறல் போட்டாள்.
வாழைத்தண்டு கால்களில் முத்தமிட்டு இதழ்கள் மேலே முன்னேறி வர அவள் எழுந்து விட்டாள்
“ஏய் என்னாச்சு” என்ற தலையை முடியை பிடித்து அவள் மார்பில் போட்டு “பயமா இருக்கு மாமு” என்று கண்கலங்கியவளை இதழில் முத்தமிட்டு “நான் பார்த்துக்குறேன்டி பயப்படாதேடி” என்று அவளது கழுத்து வளைவில் முத்தமிட்டு அவளை கூடலுக்கு ஆய்த்தம் செய்தான். அவளை முத்தமிட்டே தன் வழிக்கு கொண்டு வந்து அவளுடன் இணையும் நேரம் “ஹாஹா” வென்று உச்ச ஸ்தானியில் உறுமினான். அவளுக்கோ வலியில் பெட்கவரை இறுக்கி பிடித்தவளின் கண்ணில் கண்ணீர் தாரையாய் வடித்தது.
ஆழ்கடலுக்குள் மூழ்கி முத்தெடுத்தவன் அவள் மார்பில் தஞ்சம் கொண்டு மூச்சை இழுத்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்ட “கஷ்டமா இருந்துச்சாடி” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்
“இ.இல்ல வலிக்கல மாமு” என்று அவனை அணைத்துக்கொண்டாள். அவனோ அவளது முதுகை வருடிக்கொடுத்து அவள் மென்மையில் புதைந்தான். அவள் தாயாக மாறினாள் இவன் சேயாக மாறினான். விடிய விடிய கொடுக்கல் வாங்கல் கணக்குகள் தொடர்ந்து கொண்டே இருந்தது
முத்தங்களை வட்டிக்காரனாய் வசூல் செய்துகொண்டிருந்தான் மயூரன் மான்வியிடம்
Проблемы с водой в доме? Услуги сантехника от нашей компании вернут вам спокойствие
вызов сантехника на дом спб [url=https://vizov-santehnikavspb.ru/]https://vizov-santehnikavspb.ru/[/url] .
super bro
Почему машинка на пульте от нашего магазина станет самым желанным подарком на любой праздник
машинки монстр трак для детей [url=http://www.wildberries.ru/catalog/281617142/detail.aspx]http://www.wildberries.ru/catalog/281617142/detail.aspx[/url] .