அத்தியாயம் 5
இரண்டு நாள் கழித்து ஈஸ்வர் வீடு வந்தான். கனகா, ஐயா..என் ராசா.. கண்ணு… எங்கய்யா போயிருந்த இத்தன நாளு, நீ இல்லாம வீடு வீடாவே இல்லையப்பா..எப்படி இளச்சி போய் இருக்க பாரு, வாயா ராசா…வந்து சாப்பிடு என்றார்.
அதேநேரம் சமையலறையில் வஞ்சி,சமைத்துக்கொண்டிருந்தாள். இரு தினங்களாக அவள் தான் சமைக்கிறாள்.
தர்ஷிகா அவனை பார்த்ததும் ஈஸ்வர்.. எப்படி இருக்கீங்க?எங்க போயிருந்தீங்க.., இத்தனை நாள். நீங்க இல்லாம எனக்கு சாப்பிட பிடிக்கல,தூங்க பிடிக்கல பாருங்க எப்படி இளச்சி போய் இருக்கேன்.
இதுவே உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா…, இந்த நேரம் நம்ம ரெண்டு பேரும் ஹனி மூன் போய் இருப்போம் எல்லாம் போச்சி இந்த கேடு கெட்டவளால என்றாள் அவனை அணைத்துக் கொண்டு,
இதையெல்லாம் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த வஞ்சி கேட்டு, ஒரு நிமிஷம் நிறுத்தி திரும்ப சமைக்க ஆரம்பித்தாள்.
சுந்தரமூர்த்தி சாப்பிட அமர்ந்தார். கனகா தன் பிள்ளையை பக்கத் தில் அமர்த்தி கொண்டார். சுந்தரம் பார்த்தாரே தவிர பேசவில்லை. சுந்தரம், வஞ்சி பசிக்குது சாப்பாடு ரெடியாமா…, என சமையலறை நோக்கி குரல் கொடுத்தார்.
அவளும் ஹான் மாமா ரெடி மாமா என்றாள்.சாதாரண புடவையில் அவன் கட்டிய தாலியோடு நெற்றி வகுட்டில் குங்குமம் என அழகாய் நடந்து வந்தாள்.
அவள் குரல் கேட்டதும், ஈஸ்வர் தன் அப்பாவை பார்த்தவன், திரும்பி வஞ்சியை முறைத்தான்.
அவன் முறைத்ததில் பயந்த வஞ்சி அங்கேயே நின்று விட்டாள். அதை பார்த்துவிட்டு மூர்த்தி என்னம்மா வஞ்சி,என்ன அங்கேயே நின்னுட் ட வா வந்து பரிமாறு என்றார்.
வஞ்சி, கண்களால் வரல என கெஞ்சினாள்.ஆனாலும் சுந்தரம் விடவில்லை, நீ சாப்பாடு போட்டா நான் சாப்பிடுறேன் இல்லனா நான் போறேன் என்றார்.
வஞ்சி மாமா… போகாதீங்க.. என மெதுவாக கூறினாள்.
அதில் சிரித்த சுந்தரம் அமர்ந்து கொண்டார்.வஞ்சி அவருக்கு பரிமாறினாள்.கனகா ஈஸ்வரிடம் பார்த்தியாப்பா, இந்த அன்னகாவ டிக்கு வந்த வாழ்வ.., அவதான் தினம் சமைக்கிறா, ரெண்டு நாளா யாரையும் உள்ள விடுறதில்ல.
உன் அப்பா முழுஅதிகாரத்தையும் கொடுத்து வச்சிருக்காரு அவளுக் கு என்றார். உடனே மாதங்கி, ம்ம்.. ஆமாம், மாப்ள என் பொண்ணு உரிமையா இருக்க வேண்டிய இடம் இவ வந்து பட்டாபோட்டு உக்காந் துகிட்டா என் பொண்ணு என்ன பண்ணுவாளோ? உங்களையே நெனச்சி உடம்ப கெடுத்துக்கிறா? என்றார்.
உடனே தர்ஷிகா மம்மி எனக்கு பசிக்கவே மாட்டேங்குது, சரியா சாப்பிடவே முடியல, என தன் தாயிடம் கண்ணை காட்டியவள் தன் அறைக்கு சென்று விட்டாள்.
உடனே மாதங்கி ஐயோ! என் பொண்ணு சாப்பிடாம போறாளே, இப்படித்தான் மாப்பிள்ளை உங்க ளுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து சரியா சாப்பிடாம,தூங்காம,உடம்ப கெடுத்துக்குற, என்றவர் தட்டில் எல்லா பதார்த்தங்களையும் நிரப்பிக்கொண்டு அவள் அறைக் கு சென்றாள். பின்னால் அவள் தந்தையும் சென்று விட்டார்.
அறைக்குள் மாதங்கி வந்ததும் மாம் சீக்கிரமா வாங்க, பசிக்குது. இன்னைக்குன்னு பார்த்து எல்லா சாப்பாடும் செம்மையா இருந்துச்சு நீங்க என் காலை மிதிச்சதால தான், வேற வழி இல்லாம எழுந்து வந்தேன், என்று கூறி தட்டில் இருந்த உணவை ஒரு பிடி பிடித்தா ள்.
அவள் இந்த பக்கம், கொளுத்தி விட்டு சென்றதும் வஞ்சி அவன் தட்டில் உணவு காலியானதை கண்டவள் தன் மாமனை பார்த் தாள்.அவரும் வை என கண்ணை காட்டினார்.
வஞ்சி தயக்கத்துடன் அவன் தட்டில் உணவை வைத்தாள். அவ்வளவுதான், ஈஸ்வர் வெறி கொண்டவனாய், ச்சீ.. என கையை உதறியவன், ஏய்!.., எவ்வளவு தைரியம் இருந்தா என் பக்கத்தில் வந்து எனக்கு பரிமாறுவ…, யார்? உனக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது என தட்டை விசிறி அடித்தான்.
அவன் அப்படி செய்ததும் வஞ்சி பயந்து காதை மூடிக்கொண்டாள் தட்டு பறந்து கீழே விழுந்து உணவு சிதறியது. சத்தம்கேட்டு அனைவ ரும் ஓடி வந்தனர்.
ஈஸ்வர் அவள் முழங்கையை பற்றியவன் ஏன்டி, எத்தனை… தடவை சொல்றேன் உன்னை எனக்கு பிடிக்கல.., பிடிக்கலன்னு என் கண்ணு முன்ன வராதுன்னு, ச்ச.. உன்ன பாத்தாலே… வெறுப்பா வருது. என் கண்ணு முன்னாடி இனி உன்ன பார்த்தேன், உசுரோட இருக்க மாட்ட…,உன்னால என் வாழ்க்கையே போச்சுடி என்றான்.
(பார்த்து பேசி தம்பி எதிர்காலத்து ல லவ்வு லவ்வுன்னு அவ பின்னா டி சுத்த வேண்டி வந்தாலும் வரலாம் )
வஞ்சி அவன் வார்த்தையில் அடி பட்டு கூனி குறுகினாள்.அவளை பேசவே விடவேயில்லை. சுந்தரம் ஈஸ்வரா!?.. என்ன பேச்சு இது, நான்தான் உன் தட்டில் சாப்பாடு காலியானதும் வைக்க சொன்னே ன். அதுக்கு அவளை எதற்கு தேவையில்லாம பேசுற என்றார்.
ஈஸ்வர், ப்பா.. உங்க பேச்சுக்கு.. மரியாதை கொடுத்து தான் இத்தன நாள் இவள எதுவும் செய்யாம அமைதியா இருக்கேன். என்னை அரக்கனா மாத்திடாதீங்க என்றவ ன் அறைக்கு சென்று விட்டான்.
இதையெல்லாம் மேலிருந்து மற்ற அறைகளிலிருந்தும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.குதூகல மாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வஞ்சி அழுதபடி நின்று கொண்டி ருந்தாள்.சுந்தரமூர்த்தி ஒன்றும் செய்ய முடியாத நிலை.
ஈஸ்வர் எப்பவும் கோபப்படுவான் தான், ஆனால் இன்று அந்த கோபம் அதிகப்படியாக இருந்தது என்ன நடந்திருக்கும்.
திருமணம் முடிந்து வீட்டை விட்டு சென்ற ஈஸ்வர் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தான்.இந்த விஷயம் வஞ்சியை,தவிர மற்ற எல்லாருக் கும் தெரியும். ஏனென்றால் ரெண் டுநாள் கழித்து கனகா அழுததின் பெயரில் புல்லட் புல்லட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.
அதே நேரம்,உதயன்பன் வாழை தோப்பு பக்கமாக தன் கூட்டாளி களோடு எதிரே வந்தான்.
ஈஸ்வரை பார்த்த அன்பன் என்ன வெளிநாட்டு மாப்ள என்ன இந்த பக்கம். புது பொண்டாட்டிய கூட்டி கிட்டு ஹனிமூன் போயிருப்பேனு நினைச்சேன். நீ என்னடான்னா தோட்டத்து…, வீட்ல இருந்து வர. என்ன பொண்டாட்டி பக்கத்துல சேக்கலையா.. துரத்தி விட்டுட்டா ளா என்றான் நக்கலாய்.
இதைக்கேட்டு அன்பன் கூட இருந் த மற்ற அனைவரும் கொல்லென சிரித்தனர்.
ஈஸ்வர் கோபத்தில் கையை இறுக மூடி, பல்லை கடித்து, டேய் ஒழுங்கு மரியாதையா… போயிடு.. வர கோப த்துக்கு உன்னை சாவடிச்சிடுவேன் டா என்றான்.
அன்பன் அட என்ன மாப்ள நீ டென்ஷனாகாத தங்கச்சிய கேட்ட தா.., சொல்லு.. வரட்டா என்றவன் தன் கூட்டாளிகளுடன் சென்று விட்டான்.
இதனால்தான் ஈஸ்வர் அவ்ளோ கோவப்பட்டான் வஞ்சியின் மீது, சுந்தரமூர்த்தி நினைவையில் கடந்த கால நினைவுகள்.
தொடரும்.
super next epi…..
купить мебель в италии [url=https://kupit-italyanskuyu-mebel.ru/]https://kupit-italyanskuyu-mebel.ru/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌