அத்தியாயம் 9
வஞ்சி சுந்தரத்திடம் போய் நின்ற வள், மாமா.. என அழைத்தாள் சுந்தரமூர்த்தி, என்னம்மா, ரூம்ல தூங்க வேண்டிய பொண்ணு இங்க நிக்குற,அவன் ஏதாச்சும் சொன் னானா, வாடா. நான் வந்து கேட்கி றேன் என்றார்
வஞ்சி,அச்சோ! மாமா அவர் ஒன் னும் சொல்லல.அவருக்கு இன்னு ம் கொஞ்சம் டைம் வேணும்னு… கேட்கிறாங்க…, அவள் அப்படி சொன்னதும் சுந்தரமூர்த்தி அவளையே பார்த்திருந்தார்.
வஞ்சி, மாமா.. அப்படி பாக்காதீங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல,மாமா. கொஞ்சநாள்ல எல்லா சரியாகிவிடும். அப்புறம், மா..மா நான் ஸ்கூல் போகவா, எல்லாம் சரியாகற வரைக்கும், நீங்க வேணான்னு…. சொன்னா எனக்கும் வேணாம், என பரிதாப மாக முகத்தை வைத்து கொண்டு,,
உடனே, சுந்தரமூர்த்தி சிரித்தவர் குட்டி இந்தா, உன் தேன்மிட்டாய் என்றவர்,போய்ட்டு…. வா என ஆசிர்வாதம் செய்தார்.
வஞ்சி ஹையா ரொம்ப தேங்க்ஸ் மாமா.. என அவர் கொடுத்த தேன் மிட்டாய் வாயில் போட்டுக் கொண்டாள்.
அதில் சிரித்தவர் இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க டா…, நீ என்றவர்,சரிமா போய் படு என்று விட்டு படித்து விட்டார்.
வஞ்சி சுந்தரமூர்த்தியிடம் என்ன தான் நன்றாக பேசினாலும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு பிடித்த தேன்மிட்டாய் கூட உள்ள இறங்கவில்லை. வேதனையில், நெஞ்சை பிடித்து க்கொண்டு சுவரொரம் அமர்ந்து விட்டாள்.பக்கத்து மேஜின் மீது அவன் கட்டிய,மஞ்சள் கயிறு தாலி அதையே பார்த்தபடி இருந்தாள்.
********–**—–**************
சுருளிப்பட்டியில் இருந்து வஞ்சியு ம், அவள் அக்காவும், கம்பத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தனர் சாதாரண பள்ளியில் தான் இருவ ரும், படித்தனர் நடந்தே போய், சிறுவயதில் இருந்தே வஞ்சிக்கு தேன்மிட்டாய் என்றால் உயிர். எப்போதும் அவள் வாயில் அது இருக்கும்
அழகுக்கு திருமணம் ஆகி பல வருடம், பேசாமல் இருந்த சுந்தர மூர்த்தி, வஞ்சி பிறந்து 10 வயது இருக்கும் போது,ஒரு நாள் அவரை வழியில் பார்த்து இடுப்பில் கை வைத்து, ஏன்? மாமா எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா? நாங்க என்ன தப்பு பண்ணோம். எங்க அம்மா டெய்லி அழறாங்க உங்க ளால.. என்றாள். அவள் முட்டை கண்ணை உருட்டி,
சுந்தரமூர்த்தி அவள் முட்டைக் கண்ணை உருட்டி பேசுவதே கை கட்டி ரசித்து பார்த்துக் கொண்டி ருந்தார். அப்போதுதான் பார்த்தார் வாயிலும் கையிலும் தேன்மிட்டாய் இருப்பதை, என்னவோ…,அந்த நிமிடம் அந்த செல்ல சிட்டை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
வஞ்சி, துடுக்காக.. என்ன மாமா? என்ன அடிக்க போறீங்களா ? அடிச்சுக்கோங்க.. நான் ஒன்னும் பயப்பட மாட்டேனாக்கும்… அக்கா வா என்றவள் அவரை கடந்து சென்று விட்டாள்.
சுந்தரம்,அவள் அப்படி பேசியதும் சிரித்துக்கொண்டார்.அந்தநாளில் இருந்து தினமும் அவளை பார்த்து பேசிவிட்டு தான் செல்வார். மறக்காமல் கையில் தேன்மிட்டாய் இருக்கும் அடிக்கடி ஈஸ்வரும் கூட வருவான்.
17 வயதில் அரும்பு மிசையுடன் அமர்ந்திருந்தான். பெரிதாக வஞ்சி யை கண்டு கொள்ள மாட்டான். அவளும் தன் மாமாவோடு பேசும் போது அவனை பார்ப்பாள். பேச மாட்டாள், கனகாவை நினைத்து பயம். அம்மா நிறைய சொல்லி இருக்கிறார் அவரைப் பற்றி.
வஞ்சி வயதுக்கு வந்திருந்தாள் கனகா பெரிதாக அவரை எதுவும் செய்ய விடவில்லை. பாவாடை சட்டையில் இருந்து தாவணிக்கு மாறி இருந்தாள்.வாசலைக் கூட்டி பெருக்கிக் கொண்டிருந்தாள்.திடீர் என பக்கத்தில் பைக் ஒன்று சடன் பிரேக் போட்டு நின்றது.
வஞ்சி, பயந்து திட்ட வாய் எடுத்த வள் ஈஸ்வரி பார்த்ததும் பயத்தில் தாவணி நுனியை பிடித்துக் கொண்டு, மிரண்டு முழித்தாள்.
ஈஸ்வர், இரு கைகளையும் கட்டிக் கொண்டு, அவளையே பார்த்தான்
வஞ்சிக்கு,அப்படியே,தன்மாமனை பார்ப்பது போல் இருந்தது சிறிது நேரம் அவனையே பார்த்தாள் ஈஸ்வர் குரலை செறுமியவன் டாடி கொடுக்க சொன்னாரு, என ஒரு பையை அவளிடம் கொடுத்தவன் தலைகோதி, அழகாக வண்டி எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.
அன்றிலிருந்து அவளுக்கு ஈஸ்வர் மேல் பிடித்தம் ஏற்பட்டது அடிக்கடி வருவான்,அப்பா கொடுத்தார் என ஏதாவது கொடுத்துவிட்டு செல்வா ன். ஆனால் அவளை திட்டாமல் செல்ல மாட்டான்.
நான் என்ன இவளுக்கு வேலைக் காரியா? எல்லாம் டாடி ய சொல்ல ணும் என சத்தமாக சொல்லிவிட்டு செல்வான். அவன் பேசும்போதெல் லாம், முணங்கும் போதெல்லாம் வஞ்சி, தன் வாய்க்குள்ளே சிரித்து கொள்வாள்.வெளியே சிரித்தால் திட்டுவான் என்று அவளுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் மாதத்தில் இருமுறையாவ து வந்து விடுவான். எப்போது.. பார்த்தாலும் அவள் வாயில் தேன் மிட்டாய் இருக்கும் அவள் கன்னத் தைபார்ப்பவன்,சென்றுவிடுவான்
அதன் பிறகு மேற்படிப்புக்காக மேலை நாடு சென்று விட்டதாக தகவல், அதன்பிறகு இரண்டு வருடத்திற்கு முன்புதான் பார்த்தா ள், அதுவும் தர்ஷிகாவுடன் கல்யா ணம் என்ற பேச்சோடு..
தனக்கு அதைப் பற்றி யோசிக்க தகுதி இல்லை, என நினைத்தவள் அதை கடந்து சென்று விட்டாள்.
பசி அவள்,நினைவை நிகழ்விற்கு கொண்டு வந்தது சிறிதாக உண்ட வள், படுக்கையில் படித்துக் கொண்டாள்.தன் தாயை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
அதே நேரம், ஈஸ்வர் அவன் அறை யில், அவள் போட்டுக் கொடுத்த கையெழுத்தையே….சிறிது நேரம் பார்த்து இருந்தவன், அதை கபோர் டில் வைத்து பூட்டிவிட்டு படுக்கை யில் விழுந்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது. வஞ்சி எல்லா வேலைகளையும் முடித்தவள், கிளம்பி தன் மாமனி டம், வந்து நின்றாள்.
வஞ்சி, மாமா..நான் போயிட்டு வரேன் ஸ்கூலுக்கு, டைம் ஆச்சு என்றாள்.
எதிரில் ஈஸ்வர் அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான். சுந்தரம் போயிட்டு, வாம்மா.. என்றார்
உடனே மாதங்கி இவ வேலைக்கு போயிட்டா, வீட்டு வேலையெல்லா ம் யாரு பார்க்கிறது என்றார்.
சுந்தரம் கோபம் கொண்டவராய், உடனே அவ ஒண்ணும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை, அவங்க அவங்க வேலையை, அவங்க அவங்கதான் செஞ்சுக்கணும். அவ இந்த வீட்டு மகாராணி, இனியும் ஏதாவது பேசினீங்க.. என்ன வேற மாதிரி பார்க்க வேண்டி வரும். எல்லாரும் போய் வேலையை பாருங்க. என்றவர் எழுந்து சென்று விட்டார்.
மாதங்கிக்கு முகம் செத்துவிட்டது. ஈஸ்வர்,ஓரக்கண்ணால் அவளை அவள் செல்வதை பார்த்தான்.
தொடரும்….
Nalla poguthu story🫰🏻
Semma👍🏻
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis koncham big epi podugga plssss…..
Periya epi ya po dunga sis.very nice
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌