ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 10

அத்தியாயம் 10

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண் டிருந்தது. இன்று காலை என்றும் இல்லாது, வஞ்சி பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய மல்லிப்பூ என, ஹாலில் அமர்ந்திருந்த தன் மாமனிடம் ஆசிர்வாதம் வாங்கி னாள்.

சுந்தரமூர்த்தி, சந்தோஷத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சின்ன சிட்டு, சந்தோஷமா இருடா என்றவர் பாக்கெட்டில் இருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தா ர். 

வஞ்சி மாமா காசு எல்லாம் வேண் டாம், உங்க ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும் என்றாள். அதில் சிரித்த சுந்தரம், வேணா சொல்லாத குட்டிமா வாங்கிக்கோ…, என்றவர் உனக்கு என்ன வயசு ஆகுது என்றார்.

வஞ்சி, 22 முடிஞ்சு 23 வயசு தொட ங்குது, மாமா என்றாள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஈஸ்வர் வந்து அமந்தான். 

வஞ்சி, அவனைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள்.மாமா நான் போய் பாட்டிகிட்ட  ஆசிர்வா தம், வாங்க.. போறேன் என்றவள் சென்று விட்டாள்.

ஈஸ்வர் தன் தந்தையை பார்த்தா ன்.சுந்தரம் இன்னைக்கு வஞ்சிக்கு பிறந்தநாள் டா 23 வயசு ஆயிடுச்சு என் சின்ன சிட்டுக்கு, 10 வயசுல துரு துருன்னு பார்த்தது, என்றவர் எழுந்து சென்றுவிட்டார். 

 ஈஸ்வர் அங்கு தான், அமர்ந்திருந் தான். இவள் பாட்டி அறையில் இருந்து வெளியே வரும் வரை, அவன் இன்னும் ஹாலில் அமர்ந்தி ருந்ததை,  கண்டு கண்களை உருட்டியவள் விறுவிறுவென சென்று விட்டாள். 

வஞ்சிக்கு அவன் வாழ்த்து சொல் லவில்லை என்ற வருத்தமும், அதே நேரம் பயமும் இருந்தது. 

 போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த, ஈஸ்வருக்கு அவள் மேல் கோபம் வந்தது என்றும் இல்லாமல், கல்மிஷ பார்வை பார்த்து வைத்தான் அவளை.

அவளுக்கு அழகம்மை, சந்தானம், பொன்னி, அவள் அக்கா, அவள் மாமா, என அனைவரும் வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

 அதன் பிறகு, பள்ளிக்கு சென்று தன் நாட்களை கடத்தினாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை அனைவருக்கும் சமைத் து, பரிமாறிக் கொண்டிருந்தாள் வஞ்சி,

ஈஸ்வர், தட்டு மட்டும் காலியாக இருந்தது. எப்போதும் அவன் தான் பரிமாறிக் கொள்வான். இல்லை யெனில் வேலையால் பரிமாறுவார் கள். இன்று உணவு இருந்தும் போட்டுக்கொள்ளாமல்,இருந்தான்

அதைக் கண்ட, வஞ்சி அக்கா என சமையல் கட்டை நோக்கி குரல் கொடுத்தாள்.

உடனே, ஈஸ்வர் சாப்பிடாமல் எந்திரிக்கப் போனான்.

 சுந்தரம், ஈஸ்வர்.. ஏம்பா சாப்பிட உட்கார்ந்துட்டு எந்திரிச்சு போற, வஞ்சிமா… நீ அவனுக்கு பரிமாறு என்றார்.

வஞ்சி, அவர் அப்படி கூறியதும், தன் மாமனை நிமிர்ந்து பார்த்தாள் கண்களில் கெஞ்சலுடன், அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண் டுதான் இருந்தான் ஈஸ்வர். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

 வஞ்சி, தன்னை திடப்படுத்திக் கொண்டவள் அவனுக்கு தட்டில் உணவை பரிமாறினாள்.கைகள் நடுங்கியது அவளுக்கு, கேட்டு கேட்டு வைக்க வேண்டும் என்ற ஆசைதான். ஆனால்  தன்னை பிடிக்காது என்பவனிடம் எப்படி கேட்பது…,

 தர்ஷிகா, இதை எதையும் கவனி க்காமல்,சாப்பிடுவதில் மும்முரமா க,.. இருந்தாள். சுந்தரம், வஞ்சி… ஈஸ்வருக்கு, பிஷ் பிரய்னா ரொம்ப பிடிக்கும் இன்னும் ரெண்டு வைடா என்றார்.

அவளும், எட்டி மீன் துண்டை எடுத்து, அவன் தட்டில் வைத்தாள் அப்போது, அவள் இடை விலகி பளிச்சென அவனுக்கு விருந்தாகி யது. 

அதுவும் அவன் முகத்தின் அருகி ல்,  தன் விரல்களை நெற்றியில் வைத்து தேய்த்தான். கண்களை திருப்பினாலும், மீண்டும் கண்கள் அங்கே சென்றது.

இது அவனையும் மீறி செய்யும் வேலை. ஈஸ்வர் எட்டி தண்ணீர் எடுக்கும் சாக்கில், அவன் முரட்டு கை அவள் இடை உரசி சென்றது. அதன் மென்மையை அவனும் உணர்ந்தான் கண்மூடி, பின் எழுந்து சென்று விட்டான். 

ஆனால் வஞ்சி தான், அவன் செயலில் அப்படியே ஷாக் அடித்த துபோல்.., அசையாமல்… நின்று விட்டாள். சுந்தரம் கூப்பிட்டதும் தான் நினைவிற்கு வந்தாள்.

அவன் கை உரசி சென்ற இடம் இன்னும் குறுகுறுத்தது. அமைதி யாக எடுத்து வைத்தவள், அறைக் கு சென்று விட்டாள்.

 பின்புதான், அவன் தான் உணவு பரிமாறியதற்கு எதுவும் சொல்லவி ல்லையே.. என யோசித்தாள். பின் உறக்கம் வரவே, அப்படியே உறங்கி விட்டாள். 

வீட்டில் அனைவரும் அவள்  சமையலுக்கு பழகிருந்தனர். ஸ்கூலுக்கும் சென்று வந்தாள். அவனிடம் உரிமையாய் எதையும் கேட்கவில்லை.அவள் தன் தேவை களை தானே பார்த்துக் கொண்டா ள்.

அன்று பள்ளியில் இருந்து வந்தவள் எல்லா வேலைகளை யும் முடித்தவள், சமையலறையில் நின்று கொண்டு, கையில் இருந்த தேன்மிட்டாயை…,வாயில் போட்டா ல்,அதேநேரம் ஃப்ரிட்ஜில் தண்ணீர் எடுக்க வந்த ஈஸ்வர், பார்த்து விட்டான்,தேன் மிட்டாயை வாயில் போடுவதை.

அவன் பார்த்ததும், வஞ்சி வாயில் தேன் மிட்டாயை வைத்து  கன்னம் உப்பலுடன் அவனைப் பார்த்து மலங்க மலங்க முழித்தாள்.

அதைப் பார்த்தவனுக்கு அவளை கட்டிக்கொண்டு முத்தமிடஆசை வந்தது. அவன் பார்வை வஞ்சி யை சிலிர்க்க வைத்தது. சட்டென, மிட்டாயை விழுங்கியவள்.

 அது..,அது.. நான்.., போறேங்க… என்றவள், ஓடிவிட்டாள். ஈஸ்வர் தான் ஓடும் அவளை பார்த்திருந் தான். அறைக்கு வந்தவனுக்கு அந்த நாளை நோக்கி நினைவுகள் சென்றது.

அன்று வஞ்சி படிக்கும் பள்ளிக்கு சுந்தரமூர்த்தியும் ஈஸ்வரும் வந்து இருந்தார். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டவர் பழம் ஹார்லிக்ஸ் என வாங்கிக் கொண்டு பள்ளிக்கு வந்தார். இன்னும் உணவு இடைவேளை விடவில்லை.

 அவசரமாக வெளியே செல்லும் வேலை இருந்ததால், தலைமை ஆசிரியர்யிடம்,அனுமதி வாங்கிக் கொண்டு அவளை பார்க்க சென்றனர் இருவரும், 

அவள் எட்டாம் வகுப்பு, படித்துக் கொண்டிருந்தாள். சுந்தரமூர்த்தி வகுப்புக்கு சென்றவர், அவள் பெயரை சொல்லி ஆசிரியரிடம் பார்க்க அனுமதி கேட்டார்..

 அதே நேரம், கணக்கு பாடம் போர் அடிக்கவே,தூக்கம் வருவது போல் இருந்தது வஞ்சிக்கு. உடனே தன் பாக்கெட்டில் இருந்த தேன்மிட்டாய் எடுத்தவள், வாயில் போட்டுக் கொண்டு நிமிரவும் இருவரும் வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. 

 இருவரையும் எதிர்பாக்காத வஞ்சி வாயில் தேன்மிட்டாயோடு கன்னம் உப்பி மலங்க மலங்க விழித்தாள் ஆசிரியருக்கே,  அவள் செயலில் சிரிப்பு வந்துவிட்டது. சுந்தரமூர்த் திக்கு, தன் தங்கையை சிறுவயதில் பார்ப்பது போலவே இருந்தது..

ஈஸ்வர், சிரிப்பை அடக்கிப் பார்த் தான் முடியவில்லை. குபிரென சிரித்து விட்டான்.  ஆனாலும் இரட்டை ஜடையில், அழகாக… இருந்தாள் வஞ்சி. அதன் பின் அவளை பார்த்து நலம் விசாரித்து விட்டு சென்றனர் இருவரும்.

அந்த நினைவுகளில் லேசாக உதடு சிரிப்பில் விரிந்தது ஈஸ்வருக்கு. கிரேஸி கேர்ள், என சொன்னவன் அப்படியே உறங்கிப் போனான்.

 

தொடரும்….

 

 

 

 

 

 

 

 

 

8 thoughts on “எனக்கென வந்த தேவதையே 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top