ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 15

அத்தியாயம் 15

காலை, கதிரவன் யாருக்காகவும் காத்திராமல் தன் கடமையை செய்ய கிழக்கே வந்து விட்டான். காலை 7:00 மணிக்கு சுந்தரமூர்த்தி ஹாலில் வந்து அமர்ந்தார். 

 சுந்தரம், வஞ்சி, வஞ்சி மா…, டீ எடுத்துட்டு வாடா  என்றார். 

 யாரும் வரவில்லை, சிறிது நேரம் பொறுத்து வேலையாள், வந்து டீயை கொடுத்தார், சுந்தரத்திடம்

வேலையாளை கேள்வியாக பார்த்த சுந்தரம், வஞ்சி.. எங்கே? நீ ஏன்? டீ கொண்டு வர என்றார் அதட்டலாய் 

 வேலையாள்,தயங்கியவர் அது.. வந்து.. தெரியாதுங்கயா….என முடிக்கும் முன்பே.. 

 ஈஸ்வர், அவ போய்ட்டாப்பா… என்றான் மொட்டையாக…. 

 சுந்தரமூர்த்தி, ஏன்?என்ன ஆச்சு ஸ்கூல்ல ஏதாவது ஆண்டு விழா வா. என்கிட்ட கூட சொல்லலையே சீக்கிரம் போறேனு என்றார் விஷய ம் தெரியாது. 

ஈஸ்வர் இழுத்து மூச்சை விட்டவன் ப்பா… அவ ஸ்கூலுக்கு எல்லாம் போகல.. வீட்டை விட்டு போயிட்டா நான்தான், போக சொன்னேன் என்றான் நிமிர்வுடன், 

 அவன், அப்படி கூறியதும் அவர் கையில் இருந்த, டீ கப் நழுவி விழுந்தது. 

 ஈஸ்வர் அவரையும் டீ கப்பையும் மாறி மாறி பார்த்தான்.

சுந்தரம், கோபம் கொண்டவர் எது க்காக, வஞ்சியை வீட்டை விட்டு.. வெளியே அனுப்பின….,வெளிய அனுப்புற அளவுக்கு வஞ்சி,என் ன,தப்பு செஞ்சா?சொல்லு ஈஸ்வரா சொல்லு… என்றார்.அவன் சட்டை  யை பிடித்து..

 கனகா, என்னங்க தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை கிட்ட என்னங்க சட்டை எல்லாம் பிடிச்சுக்கிட்டு என்றார்.

மாதங்கி, உடனே அவ என்ன தப்பு பண்ணினா தெரியுமா? அண்ணா என்றார், முந்திக்கொண்டு

 சுந்தரம், மாதங்கி பார்த்த பார்வை யில், அவர் கப்சிப் 

சுந்தரம், அவளை எதுக்காக வீட்ட விட்டு அனுப்பின? சொல்லு என திரும்பவும் கேட்டார் கோபமாய்,

 அதில் பொறுமை, எழுந்த ஈஸ்வர் ஆமா..ஆமா நான் தான் அவள அடிச்சி,வீட்டவிட்டு  அனுப்பினே ன். அதுக்கு என்ன இப்ப… அவ என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியுமா?

 அவ, நம்ப அம்மாச்சிக்கும் என் அம்மா, அதான் உங்க பொண்டாட் டிக்கும் பால்ல விஷத்தை கலந்து கொடுத்து இருக்கா… சரியான நேர த்தில கவனிக்காம போயிருந்தா தாத்தா போல அம்மாவும், அம்மாச் சியும் இறந்து போயிருப்பாங்க… போதுமா… விளக்கம் இல்ல…

 இன்னும், விளக்கி சொல்லனுமா உங்களுக்கு என்றான். ரௌத்திரத் துடன்…

சுந்தரம் அவன் மேலிருந்து,  கை யை எடுத்தவர், இல்ல ஈஸ்வரா!… அவ இதை கண்டிப்பா பண்ணி இருக்க மாட்டா.. இது வேற யாரோ தான் பண்ணி இருக்கணும்.என்றா ர்.உறுதியாய்… 

 ஈஸ்வர், என்ன சொல்றீங்கப்பா… விஷம் கலந்து இருந்தத செக் பண் ணி, பார்த்தது நான், அந்த  பாட்டி லும் கிச்சன்ல தான்….இருந்தது. மாதங்கி ஆன்ட்டி, சொன்னதும் ஓடிப்போய், பார்த்தேன் குப்பைல, விஷப்பாட்டில் இருந்தது, இதுக்கு மேல என்ன வேணும் என்றான்.

சுந்தரம், ஈஸ்வர் அப்படி சொன்ன தும், மாதங்கியை, ஒரு பார்வை பார்த்தார். மாதங்கிக்கு உள்ளுக்கு ள், பயம் இருந்தாலும் வெளியே தைரியமாக நின்று கொண்டார். உள்ளுக்குள் நடுக்கத்துடன், நின் றது என்னவோ உண்மை…

சுந்தரம், ஈஸ்வரா… வஞ்சி, விஷம் கலக்கினத… நீ நேர்ல பார்த்தியா? என்றார்.  

 அவன், இல்லை என்னும் படியாக தலையாட்டினான், கைகளை கட்டிக்கொண்டு, கனகா, தர்ஷிகா மாதங்கி, நீங்க யாராவது நேரில் பார்த்தீர்களா? அவ விஷத்தை கல க்குனத என்றார் கோபமாய்,

 மூவரும், ஒரே மாதிரியாக இல்லை என தலையாட்டினர் பயத்துடன்,

 அப்ப, எத வச்சு வஞ்சிதான் இதை பண்ணானு,உறுதியா சொல்றீங்க என்றார்.அனைவரையும் பார்த்து 

ஈஸ்வர்,அப்பா அவதான் சமையல் கட்டுல வேலை பாக்குறா…., அப்ப அங்க எது நடந்தாலும் அவ தானே பொறுப்பு என்றான்.

சுந்தரம் ஓ அப்போ சமையல்  கட்டு ல, என்ன நடந்தாலும், வஞ்சி தான் காரணம் சரிதானே, 

சரி,  ஈஸ்வரா விஷம் கலந்த பால் னு..கரெக்டா எப்படி வந்து இவங்க எல்லாம் தடுத்தாங்க அப்ப இவங்க மேலையும்,சந்தேகப்படலாம் இல்ல என்றதும், மாதங்கிக்கு வியர்த்தே விட்டது.

விஷயம், காலையில நடந்து இருக் கு, போன் பண்ணி விஷயத்தை முதல்ல என்கிட்ட சொல்லி இருக்க ணும். வீட்ல பெரிய மனுஷன்னு நான் எதுக்கு இருக்கேன்…. ,  நான் வந்து விசாரிச்சு இருப்பேன்ல அவ பேருல, சொன்ன குற்றச்சாட்டை ஒரு யூகத்துல தானே சுமத்தி இருக் கீங்க…

அப்புறம் யாரைக் கேட்டு அவளை வீட்டை விட்டு அனுப்பின?  இது என் வீடு. இங்கே யார் இருக்கணும், இருக்க கூடாதுனு….., நான்தான் முடிவு பண்ணுவேன் என்றவர், 

 சுந்தரம், எல்லாரையும் ஒரு முறை பார்த்தவர், எப்ப…  எனக்கு இந்த வீட்ல, மரியாதை இல்லையோ நான் வீட்டை விட்டு போறேன்.

கனகா, உடனே என்னங்க…. ஏன்? இப்படி எல்லாம் பேசுறீங்க,உங்கள விட்டு நான் எப்படி  இருப்பேன் என்றவரின் பேச்சை இடைவெட்டி யவர்,

கனகு, நீ இந்த வீட்டுக்கு…, நல்ல மருமகளா, இருப்பேன்னு நினை ச்சேன்,ஆனா நீ  அப்படிஇல்ல  என தலையாட்டியவர், ரொம்ப மாறிட்ட கனகா என்றவர்,

 வஞ்சி என்னைக்கு இந்த வீட்டு க்கு, வராளோ அன்னைக்கு தான் நானும் இந்த வீட்டுக்கு வருவேன் என்றவர், தோட்டத்து வீட்டுக்கு கிளம்பிவிட்டார். கனகா ஈஸ்வரி யார், சொல்லியும் சுந்தரம் கேட்க வில்லை. 

கனகா,அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.  தர்ஷியும்,  மாதங் கியும்,  விட்டால் போதும் என ஓடி விட்டனர் அறைக்கு 

பாட்டிக்கு இரு தினங்களாக உடல் நிலை சரியில்லை என்பதால், அவ ரிடம், எதையும் கூறிக் கொள்ளவி ல்லை. 

அறைக்கு வந்த ஈஸ்வருக்கு  கோப ம்..கோபம் கோபம்,வந்த வேகத்தில் அனைத்தையும் போட்டு உடைத் தான். காரை எடுத்தவன் வேகமாக ஓட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டான் 

இங்கே, பேருந்தில் ஏறி அமர்ந்த வஞ்சிக்கு சென்னையில் யாரை பார்ப்பது, எங்கே தங்குவது என தெரியவில்லை.ஓரிருமுறை,பயிற் சிக்காக,பொன்னியுடன் சென்னை வந்திருக்கிறாள். அவ்வளவுதான் 

அவள் வாங்கி வைத்திருந்த பட்ட ன், போன் உயிரை விட்டிருந்தது. பெருமூச்சோடு பர்சைமூடி,வைக்க போனவளின் கண்களில் ஆகாஷ் வீட்டிற்கு வந்தபோது அவள் அழு வதை.. பார்த்து 

என்னைக்காவது…  என்  உதவி தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு கூப்பிடுங்க.. என்ன உதவினாலும் என அழுத்தி சொன்னவன் அவள் எவ்வளவு மறுத்தும் அவள் கையி ல் வைத்து விட்டு சென்றான். 

 மாலை, நாலு மணி இருக்கும் ஆகாஷ் தன் அம்மாவுடன் சென் னை முகப்பேரில் உள்ள வீட்டின் முகப்பில் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு போன் வந்தது. 

 அவன், அம்மா புஷ்பா யாருப்பா போன் பண்றது என்றார்.

 ஆகாஷ், தோளை உலுக்கியவன் தெரியலம்மா,புது நம்பரில் இருந்து கால் வருது, என அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

 அந்தப்பக்கம் சிறிது நேரம் தயங்கி பின், ஆகாஷ் சார் இருக்காங்களா என குரல் கேட்டது. ஆகாஷ்,ஆமா ஆகாஷ் தான் பேசுறேன். நீங்க யாரு  பேசுறது என்றான். 

 வஞ்சி, தன் குரலை செருமியவள் நான்.. நான்.. வஞ்சி.. என்றாள் 

 ஆகாஷ், வஞ்சியா…? யாரது என் றான். 

 இவள், அழுகையுடன் அது… அது ஈஸ்வர் சார் வீட்டுல பார்த்திங்க இல்லயா வேலைக்கார பொண்ணு என்றாள்.

அவள்,அப்படி சொன்னதும், ஆகா ஷ், எழுந்து நின்று விட்டான். நீங்க நீங்க.. உங்க பேர்,வஞ்சியா என்ன விஷயமா? எனக்கு கால் பண்ணி இருக்கீங்க.. இப்ப எங்க இருக்கீங்க ஏதாவது ப்ராப்ளமா என படபடத் தான். 

 அவன்,அம்மா புவனா என்னடா யாரு? ஏன்? இவ்வளவு படபடப்பா இருக்க… யாருக்கும்…  ஏதாச்சும் ப்ராப்ளமா என்றார். 

 ஆகாஷ்,  ஒன்னும் இல்லம்மா… இதோ பேசிட்டு வரேன்னு சற்று தள்ளி வந்தான். 

 ஆகாஷ் சொல்லுங்க வஞ்சி என்றான்.

 வஞ்சி, அது நான் சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கேன் சார். எனக்கு,அங்க யாரையும்,  தெரியா து, அங்க வந்ததும்,  எனக்கு….ஒரு வேலையும்….ஹாஸ்டலும் ஏற்பாடு பண்ணி கொடுக்க முடியுமா? என தயங்கி தயங்கி கேட்டாள்.

 வஞ்சி, நீங்க பயப்பட வேண்டாம், நீங்க,வரும்போது நான் பஸ் ஸ்டா ப்ல, வெயிட் பண்றேன்…, அம்மா கூடத்தான் வருவேன்.

கார், நம்பர் நோட் பண்ணிக்கோங் க, என்றவன் ஒயிட் கலர் bmw கார் அண்ட், நான் ரெட் கலர் டி-ஷர்ட் போட்டுஇருப்பேன் என சொன்னா ன். வஞ்சி அதைக் குறித்துக் கொண்டாள் 

அழுகை மட்டும் நிற்கவில்லை அவளுக்கு பக்கத்தில் இருப்பவர் களின்,  பார்வை எதிர்கொள்ள முடியாமல்,தன்னிடமிருந்த ஈஸ்வ ர், கட்டிய தாலியை…. வலியுடன் அணிந்து கொண்டாள் கழுத்தில் 

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

8 thoughts on “எனக்கென வந்த தேவதையே 15”

  1. ஹா ஹா பாக்கலாம். அதுக்கு ஈஸ்வர் விடணும் ல,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top