அத்தியாயம் 18
இங்கு, சென்னையில் வஞ்சிக்கு ஏழாம் மாதம் ஆரம்பித்திருந்தது வீட்டில் சில பேரை கொண்டு வளைகாப்பு நடத்தப்பட்டது. தாய்மையின் பூரிப்பில் அழகாய் இருந்தாள் வஞ்சி.
வஞ்சியின் தாயும் தந்தையும் வளைகாப்புக்கு வந்திருந்தனர். வஞ்சி ஒருநாள் அவர்களை அழைத்துப்பேசி அழுது சென்னை வரும்படி கேட்டிருந்தாள். அதன்ப டி, மூன்று மாதங்கள் வஞ்சியோடு இருந்துவிட்டு, வளைகாப்பு முடிந் ததும் கிளம்பி விட்டனர்.
ஊருக்கு வந்தவர்கள் எதைப்பற் றியும் வெளியே சொல்லிக் கொள் ளவில்லை, இரு வாரங்கள் சென்றிருந்தது.
ஈஸ்வர் வீட்டில் சமையலறையில் மாதங்கி, பாலை எடுத்துக் கொண் டவர்,தன்னறைக்குள் நுழைந்தார்
தர்ஷி,… ம்மா நாள், போயிட்டே இருக்குமா, எப்பமா கல்யாணம் செஞ்சு வைப்பீங்க.. எனக்கு ஈஸ்வ ருக்கும். அந்த முசுடு தொல்லை வேற தாங்க முடியல மா என்னால என்றாள்.
ஏண்டி, ஆக்க பொறுத்தவ.. ஆள பொறுடி. இவ்வளவு பண்ணுனா நான், உன் கல்யாணம் நடக்க என்ன வேணாலும் பண்ணுவேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அதே நேரம், ஈஸ்வர் நேற்று தன் காரை தர்ஷிகா எடுத்துச் சென்று இருந்ததால்,கார் சாவியை அவளி டம், இருந்து வாங்க அவள் அறைக்கு சென்றான்.
ஈஸ்வர், அவர்கள் அறையின் அருகே வரும்போது, திடீரென பிளான், நான் என்ன வேணாலும் பண்ணுவேன்,என்றதில் நடையை நிறுத்திய ஈஸ்வர் காதை கூர்மை யாக்கி, அவர்கள் பேசுவதை உற்று கேட்டான்.
மாதங்கி, ஏண்டி சும்மா நச்சரிச்சிட் டே.. இருக்க.என் நாத்தனார் கைக் குள்ள, போட்டுகிட்டு உனக்காக அதுவும், நீ ஆசைப்பட்ட ஈஸ்வர் கூட உனக்கு கல்யாணம் நடக்க என்னென்ன பண்ணி இருக்கேன்.
என்,நாத்தனார்க்கு,அழகம்மையை, பிடிக்காதுனு தெரிஞ்சுகட்டு பெரியவர், ஹார்ட் அட்டாக்ல… இறந்தத, அவர் வாயில பாய்சன ஊத்தி.. அழகம்மை தான் கோவத் துல, பண்ணான்னு பழிய தூக்கி அவமேல போட்டு, சொத்து எதுவும் அவளுக்கு கொடுக்காம பண்ணி அப்பப்பா… போடி என்றவர் திரும்பினார்.
திரும்பியவர்,அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார். எதிரில் ஈஸ்வர் அனல்கக்கும், பார்வையுடன் பல் லை.. கடித்துக் கொண்டு…. மூச்சு வாங்க நின்றிருந்தான்.இவர்களை பார்த்தபடி,
அவன்,பார்த்த பார்வையிலும் அவன் நின்றிருந்த தோரணையும் பார்த்தவர்களுக்கு, பயத்தில் விய ர்த்து, கைகால்கள் நடுங்க ஆரம்பி த்துவிட்டது.தர்ஷிகாவும் பயந்து விட்டாள்.
ஈஸ்வர், அவர்களை நோக்கி வந்தவன், தர்ஷிகா…. உனக்கு இதெல்லாம், முன்னமே தெரியுமா?சொல்லு,என உறுமினான் சத்தமா ய்.
சத்தம், கேட்டு கனகா ஓடி வந்தார் அதேநேரம்,பார்த்து என்றுமில்லா த,, அதிசயமாய் சுந்தரம் வீடு வந்தி ருந்தார் ஒரு வேலையாக. சத்தம் கேட்டு அவரும் ஓடி வந்தார்.
தர்ஷிகா, கண்களை உருட்டி பயத்துடன், ஆ… ஆமா.. ஈஸ்வர் எனக்கு முன்னமே தெரியும் என்ற அடுத்த நொடி, ஈஸ்வர் அடித்த அடியில், தரையில் இருந்தாள்.
மாதங்கி, அவள் விழுந்ததை பார்த் தவர் ஐயோ என் பொண்ணு என்று தூக்க, சென்றவர் ஈஸ்வரின் எரிக் கும் பார்வையில் அப்படியே நின்று விட்டார்
ஈஸ்வர், மாதங்கியை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவர் பயந்தப டி, பின்னாலே சென்றார்.
ஈஸ்வர், இப்ப நடந்தை எல்லாம் நீங்களா சொல்ல போறீங்களா? இல்ல..போலீச கூப்பிட்டு விசாரிக் கிற, விதத்துல விசாரிக்கட்டுமா? இல்ல, என் ஸ்டைல்ல விசாரிக்கட் டுமா.. என கெர்ஜித்தான்.
மாதங்கி,நடுங்கி பயத்துடன் இல்ல இல்ல.. வேணாம், மாப்ள.. நானே எல்லாத்தையும்.. சொல்லிடுறேன். என்றவர் சொல்ல ஆரம்பித்தார்
வஞ்சி வயதுக்கு வந்த செய்தி ஆதி குலசேகருக்கும் வடிவம்மாலுக்கும் வந்து சேர்ந்தது. இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
சுந்தரத்தை, அழைத்து பெரிதாக செய்ய சொன்னார், ஆனால் ஒரு சில காரணங்களால் அது முடியா மல், போய்விட்டது. கனகாவிற்கு இதில் ஒரு துளியும் உடன்பாடு இல்லை.
ஈஸ்வரிடம் கனகா போக வேணாம் என சொல்லி இருந்ததால்அவனும் முடியாதுஎன்று,சொல்லிவிட்டான்
ஒருநாள் வடிவும் ஆதிகுலசேகரும் அறையில் பேசிக்கொண்டிருந்த தை,மாதங்கி ஏதேச்சையாக கேட்டு விட்டார்.
குலசேகர்,ஏம்மா வடிவு நம்ம பேத்தி இளவஞ்சி, பெரிய பொண்ணு… ஆகிட்டா இல்ல, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாண வயசு வந்துடும் நம்ம பொண்ணு கல்யாணத்தை தான் பார்க்க முடியல ஈஸ்வருக்கா வது,வஞ்சிய கட்டி நம்ம ஆசைய தீர்த்துக்க வேண்டியது தான், என சிரித்து பேசிக் கொண்டிருந்தனர் வயதான தம்பதியினர்.
இதைக்கேட்ட மாதங்கி கனகாவிட ம், சென்றவர் ஒன்றுக்கு இரண்டாக போட்டு கொடுத்து விட்டார்.
உடனே கனகா என் உயிர் இருக்கிற வரை, இத நடக்க விடமாட்டேன் என வெஞ்சினத்துடன் கூறினார். மாதங்கிக்கு, அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
மூன்று மாதங்கள் கழித்து சுந்தர மூர்த்தி, மூலம் அழகம்மையும் இள வஞ்சியுடன், தாயும் தந்தையும் பார்க்க வீட்டுக்கு வந்தனர்.
இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை . இவர்களுடன் சுந்தரமூர்த்தியும் சேர்ந்து கொண் டார். வீடு கலகலப்பாய் இருந்தது
ஆதி குலசேகரும் வடிவம்மாளும் தன் மகளையும் பேத்தியும் கொண் டாடி, தீர்த்து விட்டனர்.
ஆனால், கனகாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை இருவரின் வரவில்,
இதை பார்த்த மாதங்கிக்கு பொறு க்கவில்லை,
கனகாவிடம் சென்றவர் பார்த்தியா கனகா, நான் சொன்னது தான் இனி நடக்கப்போகுது, நீ தனியா நிக்க போற, அதுவும் அனாதையா என்றார், வன்முத்துடன்
கனகா இல்ல இல்ல இது நடக்கவே கூடாது, நான் விடவே மாட்டேன் என்றார் ஆவேசமாய்…
மாதங்கி, இதை தனக்கு தோதாக எடுத்து கொண்டவர் கனகாவிடம் அப்ப நான் செய்யறது வேடிக்கை மட்டும் பாரு, அவங்க இனி இங்க வராத மாதிரி பார்த்துக்கலாம் என்றார் குரூரமாய்
கனகாவும் கோபத்தில் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் கோபத்தில் தலையாட்டி இருந்தார்
மாதங்கி எங்கோ கிளம்பி சென்ற வர் அரை மணி நேரத்தில் மருந்து டன் வந்தார். இது கனகாவிற்கு தெரியாது..
வாங்கி வந்த மருந்தை பாலில் கலக்கியவர், யார் செத்தாலும் தனக்கு லாபம் என நினைத்தவர் வேலைக்காரி மூலம் அவர்களுக்கு கொடுத்து அனுப்பினார்.ஆனால் பால் கொண்டு செல்வதற்கு முன்பு அழகம்மையும் மஞ்சையும் அவரு க்கு, வேறு பாலை கொடுத்திருந்த னர்.
பேசிவிட்டு விடைப்பற்றும் சென்று இருந்தனர் வடிவு உறங்கிக்கொண் டிருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து, குலசேகர் அறைக்கு, சென்ற மாதங்கி அவர் குடித்து வைத்த, பால் கிளாசில், மருந்து கலந்த பாலை சிறிது ஊற்றி விட்டு,படுத்திருந்த, குலசே கர், வாயில்விஷம் கலந்த பாலை ஊற்றினார்.
ஆனால், பால் உள்ளே போகவில் லை, சந்தேகப்பட்டு மூக்கில் கை வைத்து பார்த்தார்.மாதங்கி. ஆதி குலசேகருக்கு மூச்சி இல்லை. பெண்ணையும் பேத்தியும் பார்த்த மகிழ்ச்சியில் தன் மூச்சை நிறுத்தி க்கொண்டார் ஆதி குலசேகர்.
வேறு, வழியில்லாது துணிந்து பாலை,அவர்வாயில் ஊற்றி விட்ட மாதங்கி, அறைக்கு வந்து விட்டார் அதன்பிறகு, எழுந்த வடிவு, தன் கணவனின் நிலையை பார்த்தவர் கூச்சலிட்டத்தின் பெயரில் அவரு க்கு, விஷம் கலந்த பால் கொடுக்க ப்பட்டது என தெரிந்தது.
கடைசியாக கூட இருந்து அவருக் கு,பாலை கொடுத்தது அழகம்மை என்று, தெரிந்ததும் பழி அவர்மேல் போடப்பட்டது. ஆனால் பாட்டி எழுந்த போது, ரோஜா பூ வாசம் வந்தது அந்த அறையில், ஏனெனி ல், அந்த வீட்டில் ரோஜா வாசனை திரவியம், மாதங்கி மட்டும் தான் உபயோகப்படுத்துவார்.
குலசேகரின் தலைமாட்டிலும்அந்த வாசம் இருந்தது.பாட்டி குழப்பத்தி ல், மறந்து போனார்.
இதைக் கேட்ட அனைவரும் வாய டைத்துபோயினர். நீ இவ்ளோ…. கேவலமானவளா? என்று.
ஈஸ்வருக்கு அவரைக் கொல்லும் அளவிற்கு வெறியுடன் கோபம் வந்தது. எரிக்கும் விழியுடன் அவரைப் பார்த்தான்..
அதில், இன்னும் நடுங்கியவர் மாப்பிள்ளை என்னை ஒன்னும் செஞ்சுடாதீங்க என்றார்.
ஈஸ்வர் பல்லை கடித்து கோபமாக எவ்வளவு தைரியம், இருந்தா இதை நீங்கள் செஞ்சி இருப்பீங்க எல்லா தப்பையும் நீங்க செஞ்சுட்டு பழியை என் அத்தை அழகம்மை மேலயும், வஞ்சி மேலயும் போட்டு இருக்கீங்க… உங்களை என்ன பண்ணா தகும், என்றான் கை முஷ்டி இறுக…
ஈஸ்வர்,அப்ப அப்பா போலீஸ்க்கு கால் பண்ணுங்க இம்மீடியட்டா என்றான்.
மாதங்கி,அதில் இன்னும் அலறிய வர், அவன் காலை பிடித்துக் கொண்டு, இல்ல.. மாப்ள வேணாம் வேணாம் என அழுதார் அதே நேரம், கனகா அண்ணனும் வந்து விட்டார்..
மாதங்கி மாப்ள என்ன போலீஸ்ல மாட்டிகொடுத்துராதீங்க.. வஞ்சி வீட்டை விட்டு போனதுக்கும் நான் தான் காரணம். அன்னைக்கு பாட்டிக்கும் கனகாக்கும் பால்ல விஷம் கலந்தது நான்தான்.
எங்க அவ உங்கள விட்டுப் போகா ம, நிரந்தரமா இங்கேயே இருந்துரு வாலோன்னு…., பயந்து.. ஜன்னல் பக்கமா போய் அவ அசந்த நேரம் பால்ல,விஷம் கலந்தேன்.அதை நானே சமைக்கட்டு குப்பை தொட்டியில் போட்டுட்டு, நானே தடுக்கிற மாதிரி பண்ணி வீட்டை விட்டு போக வெச்சேன்.
இது எல்லாமே என் பொண்ணுக் காகவும், கனகாக்காகவும் தான் மாப்பிள்ளை செஞ்சேன், என கூறியவர் என் பொண்ண மட்டும் விட்டுடாதீங்க மாப்பிள்ளை என அழுதார்.
எவ்வளவு அதிர்ச்சிதான் தாங்கும் அந்த குடும்பம் சுந்தரம் உடைந்து அமர்ந்து விட்டார்
தொடரும்..
wow super sis vera level………
Semma.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
eswar ah vanji panish pannanum
Avanoda style laye panish pannuva
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌