ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 24

அத்தியாயம் 24

 மறுநாள், காலை சந்திரமூர்த்தி சென்று நின்றது, ஆகாஷ் வீட்டில் வஞ்சியை பார்க்க,  காலில் விழுந் தாவது, அவளை கூட்டிப் போக வந்திருந்தார். 

காலை 6:00 மணிக்கு ஹாலில் சுந்தரமூர்த்தியை பார்த்த வஞ்சிக் கு தூக்கி வாரி போட்டது அவரிடம் ஓடி…, சென்றவள்,  முட்டி போட்டு அமர்ந்து, மாமா.. என்ன ஆச்சு….? ஏன்?  இவ்ளோ காலையில இங்க வந்து இருக்கீங்க….என்றாள் பதட் டமாய், அவர் தெளியாத முகத்தை பார்த்து…

சுந்தரமூர்த்தி வஞ்சியின் கையை பிடித்துக் கொண்டு அழுதுவிட்டா ர். வஞ்சி, அதிர்ந்து மாமா!  ஏன் அழுறீங்க.. யாருக்கு என்ன ஆச்சு? சொல்லுங்க மாமா… அழாதீங்க… கஷ்டமா இருக்கு….  அத்தைக்கு ஏதாவது… என்றாள்.

சுந்தரம்,இல்லை.. என்னும் படியாக தலையசைத்தார். 

வஞ்சி,அப்ப… அவருக்கு.. ஏதாவது என எச்சில் விழுங்கியவள்…  அவ ரைப் பார்த்தாள். 

சுந்தரம், ஓவென அழுதவர் வஞ்சி மா.. என் பிள்ளையை காப்பாற்றி கொடு.. டாக்டர் என்னென்னமோ சொல்றாங்கமா… என்றார்.

 சத்தம் கேட்டு, புவனா மட்டும் ஆகாஷ் ஓடிவந்தனர். 

 வஞ்சி, மாமா.. அவருக்கு என்ன ஆச்சு,சொல்லுங்க மாமா என்றாள் பதட்டத்துடன்,  மனதில் அவன் நன்றாக இருக்க வேண்டும் என ஆயிரம் முறை  வேண்டிக் கொண் டாள். 

சுந்தரம், அவள் கையைப் பிடித்த.. வர், வஞ்சிமா.. என் பிள்ளையை காப்பாத்தி கொடும்மா….,  அவன் உடம்பு  சரியாகிறது உன் கையில தான் இருக்கு.. 

 வஞ்சி, மாமா.. என்ன சொல்றீங்க என்றாள்.

சுந்தரம் எல்லாவற்றையும், சொன் னவர்,  டாக்டர் கூறியதையும் சொன்னார்.

 நீயும், பாப்பாவும் வீட்டுக்கு வந்தா ஈஸ்வர்,  குணம் ஆகிடுவாம்மா…. உன்னால மட்டும்தான் என் பிள்ள ய, காப்பாத்தி….கொடுக்க முடியும் என அழுதார். 

வஞ்சி, ஆகாஷை திரும்பிப் பார்த் தாள். 

 அவன், ம்ம்..,சரி என்னும் படியாக தலையாட்டினான். 

வஞ்சி,மாமா… நான் வரேன் ஆனா என நிறுத்தினாள். 

சுந்தரம், என்னம்மா… என்றார் 

 வஞ்சி, அவருக்கு குணமானதும் நான் திரும்ப வந்து விடுவேன். அவருக்கு அதை சொல்லி புரிய வைக்கிறேன், என்றாள்.சுந்தரமும் சரி என்றார் அரை மனதுடன், 

 வஞ்சி எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள், ஆகாஷை… தேடி… அவன் அறைக்கு சென்றாள் வஞ்சி,ஆகாஷ்..என குரல் கொடுத் தாள். 

ஆகாஷ்,உடனே உள்ள வா  வஞ்சி. என்றான். வஞ்சி தயங்கி அவனிட ம், வந்து நின்றவள்,,

ஆகாஷ், அவருக்கு உடம்பு, சரியில் லைன்னு.. மாமா சொல்றாங்க… அதான், உங்ககிட்ட சொல்லிட்டு போக வந்தேன்.  இத்தனை நாள் என்னையும் என் பொண்ணையும் நல்லா பாத்துக்கிட்டிங்க. உங்களு க்கு, எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. 

ஆகாஷ், ” ஓ” என்றவன், எல்லாத் தையும், எடுத்து வச்சுட்டியா வஞ்சி என்றான்..

வஞ்சி அப்புறம் என தயங்கியவள் சாரி.. ஆகாஷ், அவர்தான் என் புருஷன்னு உங்ககிட்ட சொல்லாம மறைச்சதுக்கு, என்ன மன்னிச்சிடு ங்க.. 

ஆகாஷ், மூச்சை இழுத்து விட்டவ ன், சொல்லி இருக்கலாம்.. வஞ்சி, எல்லாத்தையும்,சொன்ன நீ இதை யும்,சொல்லி இருக்கலாம், என்றவ ன்,திரும்பி நின்று கொண்டான்.

வஞ்சி,அப்ப..அப்ப…இருந்த கோவ த்துல, எனக்கு சொல்லனும்னு… தோணல ஆகாஷ்.

ஆகாஷ்,சொல்லியிருந்தா, நிறைய ஆசை வச்சிருக்க மாட்டேன்வஞ்சி ரொம்ப வலிக்குது என்றான்.

அவர்,என்ன மறந்துட்டு கல்யாண ம், பண்ணி செட்டில் ஆகி இருப்பா ருன்னு…,  நெனச்சேன் ஆகாஷ். எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் நினைச்சேன்.புவனாம்மா ஆசைப்பட்டபடி நீங்க கல்யாணம் பண்ணிக்கணும் ஆகாஷ்.

 ஆகாஷ், அத அப்புறம் பாத்துக்க லாம்… வஞ்சி…என்றான். 

 வஞ்சி, உங்கள நல்லா பார்த்துக்கி ற பொண்ணு.. வருவா பாருங்க ஆகாஷ். 

ஆகாஷ்,உன்னமாதிரி பார்த்துக்கி ற,, பொண்ணு வருவாளா? வஞ்சி என்றான், அவளை ஆழ்ந்து பார் த்து, வஞ்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள், கண்கள் கலங்கி இருந்தது.

ஆகாஷ், என்.. பொண்ண… விட்டு எப்படி? இருக்க போறேன்னு தெரி யல,வஞ்சி.என கண் கலங்கினான் வஞ்சி, ஆகாஷ்.. ப்ளீஸ்….,எனக்கு குற்ற உணர்ச்சியா…இருக்கு 

 நான் உங்களுக்கு, தகுதியானவன் இல்ல.உங்களுக்கு நல்லவாழ்க்கை இருக்கு ஆகாஷ்.

ஆகாஷ் அதுல நீ இருந்தா இன்னு ம், சந்தோஷமா இருப்பேன் வஞ்சி.

நீயும், என் பொண்ணும்,  போன பிறகு இந்த வீடு பழைய மாதிரி களை இழந்து போயிடும் இல்ல…. வஞ்சி..

வெறுமையா…மாறிடும் இல்ல…..    என்றவன் குரல் தழுதழுத்தது 

 வஞ்சி, கண்ணீருடன் அவனைப் பார்த்தாள். வஞ்சி, அவருக்கு உட ம்பு சரியானதும் வந்துடுவேன் ஆகாஷ். 

 ஆகாஷ், அதை  நீ வரும் போது பாத்துக்கலாம் வஞ்சி, ஏனெனில் அவனுக்கு தெரியும் ஈஸ்வரின் பிடிவாதத்தை பற்றி பல வருடங் களாக அவனோடு பழகி இருக்கி றான் அல்லவா… 

 ஆகாஷ், அவளைப் பார்த்தவன் வஞ்சி, ஈஸ்வர் ரொம்ப கொடுத்து வச்சவன்ல, ஆசைப்பட்ட எல்லாம் அவனுக்கு கிடைக்குது, என்றான் அவன் கண்கள் கலங்கி இருந்தது 

 வஞ்சி,ஆகாஷ் ப்ளீஸ்.. என்றாள் 

ஆகாஷ், நீ பேசுறது மூளைக்கு தெரியுது, ஆனா… மனசு.., ஏத்துக்க மாட்டேங்குது..ரொம்பஆசை வச்சு ட்டேன்  என்றவன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்,

ஒரே ஒரு ரிக்வெஸ்ட் என் பொண் ண, மட்டும் அடிக்கடி பார்க்க எனக் கு, அனுமதி கொடுக்கணும் என்ன மொத மொத அப்பானு அவ தான் கூப்பிட்டா…வஞ்சி என்றான்

 வஞ்சி, ஆகாஷ் ஏன்?  இப்படி எல் லாம்… பேசுறீங்க என்றாள். 

 வஞ்சி, அவன் பேசியதில் ஓவென அழுதி விட்டாள்.ஒருவன் மனதில் இத்தனை ஆசை… வளர்த்திருக்கி றோம் என்று 

நான்.. அதுக்கு தான் இப்படி நடக்க கூடாதுனு…. தான், அன்னைக்கே ஹாஸ்டல் போறேன்னு சொன்னே ன் நான்… ஆகாஷ்.

ஆகாஷ்,இப்பவும் எனக்கு அனுப்பு மனசு இல்ல.. வஞ்சி.. ஆனா போய் தானே ஆகணும் 

ஆகாஷ், உங்க மேல மதிப்பும் மரியாதையும் அன்பும் இருக்கு ஆனா? அதை தாண்டி யோசிக்க முடியல…, ஆகாஷ்.

 எனக்கு தெரியும் வஞ்சி என்றான் 

  ஆகாஷ், ப்ளீஸ் வஞ்சி.. அழாதே என் மனசுல, இருக்கிறத தான் சொன்னேன்.

அது  எந்த விதத்திலையும் உன் வாழ்க்கையை பாதிக்காது உள்ளே யே.. வச்சிருந்தா, ஒரு நாள் வெடிச் சிட கூடாதுல, அதான் சொல்லிட் டேன், சாரி வஞ்சி, உன்ன ஹர்ட் பண்ணதுக்கு…

 கொஞ்சம் கொஞ்சமா, வெளியே வர ட்ரை பண்றேன், வா இப்ப… நம்மளுக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்றவ ன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். 

அதன்படி, அன்றைக்கே..கிளம்பி னார்கள், சென்னைக்கு. ஆகாஷ் புவனா அம்மா என அனைவரும் வந்தனர், பிரதன்யா ஆகாஷை தேடுவாள், என்பதால் பழகிய பிறகு விட்டு விட்டு வர நினைத்தா ன்.

மாலைப்போல் கம்பம் வந்து சேர்ந் தனர். அவளை பார்த்ததும் கனகா ஓடிவந்து, காலில் விழப் பார்த்தார் 

வஞ்சி, மாமா.. நான். அவர பாக்க ணும் என்றாள் அவரிடம் இருந்து விலகி, 

 கனகா, ஒரு மாதிரியாகிவிட்டார்.

சுந்தரம், அவளை அழைத்துக் கொண்டு, அவன் அறைக்கு சென் றார்.

அங்கே, ஈஸ்வரும் வஞ்சியும் சேர்ந் து, நிற்பது போல், ஆளுயர படம் இருந்தது. வெறுமையாக சிரித்துக் கொண்டாள். 

படுக்கை பார்த்தாள், ஈஸ்வர் படுத் திருந்தான். ஆளே மாறி இருந்தான் சவரன் செய்யாத தாடி, உடல் மெலி ந்து கருவளையத்தோடு படுத்திரு ந்தான்.

 வஞ்சிக்கு, ஒரு பக்கம் கஷ்டமாக இருந்தது அவன் கம்பீரம் எப்பவும் அவளுக்கு பிடிக்கும்.  முறுக்கிக் கொண்டே திரிவான். அப்படி பட்ட வன்,படுத்திருப்பது வேதனையாக இருந்தது. 

ஆகாஷுக்கும் கஷ்டமாக இருந்த து, புவனா அம்மா கனகாவிடம் உடல்நிலை பற்றி பேசிக் கொண்டி ருந்தார். 

 சுந்தரம், வஞ்சி இடம் வந்தவர் சாப் பிட்டு, மாத்திரை கொடுக்கணுமா.. சரியா, சாப்பிட  மாட்டேங்கிறான். ஜுரமும், விடவே மாட்டேங்குது.. தெம்பே இல்லமா உடம்புல.. என குரல் தழுதழுத்தார்.

 வஞ்சி, ஒரு நிமிடம் ஒரு நிமிடம் அவனையே பார்த்து இருந்தாள்.

 பின், சாப்பாடு எடுத்துட்டு வாங்க மாமா, மாத்திரை எப்படின்னு… சொல்லிட்டு, போங்க…என்றவள் இல்ல,  நானே செஞ்சு கொண்டு வரேன், என்றவன் இலகுவான உணவை செய்து கொண்டு வந்தாள்.

உணவையும் தண்ணியையும் எடுத்துக்கொண்டு அவன் அருகி ல் போய் அமர்ந்தாள்.

வஞ்சி குரலை செருமியவள், என் னங்க. என்னை பாருங்க… என அவனை தொட்டாள். உடல் கொதி த்தது, முனங்கியபடி இருந்தான். 

வஞ்சி, நெருங்கி அமர்ந்து அவன் கையை பிடித்தாள்.அவள் ஸ்பரிச ம், பட்ட அடுத்த நொடி வஞ்சி என பிரண்டு அவள் மடியில் படித்து இறுகணைத்துக் கொண்டான்.

வஞ்சி சங்கடமாக அனைவரையும் திரும்பி பார்த்தாள். அனைவரும் வெளியே சென்று விட்டனர், தனி மை கொடுத்து, 

வஞ்சி, எந்திரிங்க முதல்ல சாப்பிடு ங்க, என்றவள் அவனை சாய்ந்து அமர வைத்து  உணவை,   ஊட்டி னாள். அவளின் கை மனதில் அனைத்தையும் சாப்பிட்டு முடித் தான்.

 வாயை, துடைத்தவள் மாத்திரை கொடுத்து படுக்க வைத்தாள்.. ஈஸ்வர்,அவள் முந்தானை பிடித்து க் கொண்டு போக விடவில்லை, 

 வஞ்சி, போகாத. என்ன விட்டு போகாத.. மன்னிச்சிடுடி எனக்கு நீ வேணும், என் பொண்ணு வேணும் எனக்கு என பிதற்றினான்.அவன் உறங்கிய பிறகுதான் வெளியே வந்தாள்.

சுந்தரம் வெளியே வந்தவளை பார்த்தவர், என்னமா.. வஞ்சி… சாப்பிட்டானா,மாத்திரை போட்டா னா…. என்றார். 

வஞ்சியும், சாப்பிட்டாரு… மாமா தூங்குறாரு.. இப்ப என்றாள் 

 பின் அனைவரும் சென்று உறங்கி விட்டனர்.

 இங்கு ஈஸ்வர் அறையில் தான் வஞ்சி இருந்தாள். இரவும் ஜுரம் இருந்தது, எழுந்து எழுந்து எப்படி இருக்கிறான், என்று பார்த்து மருந் து,கொடுத்து கொண்டு இருந்தாள் குழந்தையை ஆகாஷ் பார்த்துக் கொண்டான்.

மறுநாள், உடல்நிலை சற்று அவ னுக்கு தேறி இருந்தது. ஆட்களை வர வைத்து அவனுக்கு சவரன் பண்ணி விட்டாள்.இரண்டு  நாளி ல் சோர்வு காணாமல் போய் இருந்  தது  அவன் உடலில்.

அவள், கொடுக்கும் உணவை மிச் சம் வைக்காமல், உண்டான். அடிக் கடி, அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அன்று அவன் உட லை, சுடுதண்ணி வைத்து துடைத் து,அமர வைத்தாள். 

 ஈஸ்வர்,  வஞ்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 அவள் வாயைத் திறங்க என்றாள் அவனும் அவ அவளைப் பார்த்து க் கொண்டே… வாயைத் திறந்து உணவை வாங்கிக் கொண்டான். சாப்பிட்டு,முடித்ததும்,அவள் முந் தானையை பிடித்துக் கொண்டு அவள் மடியில் படுத்து வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். 

வஞ்சிக்கு,அவன் நெருக்கம்  என் னவோ,செய்தது. உதட்டை கடித்து அமைதியாக அமர்ந்திருந்தாள் இதுவே தொடர்ந்து நடந்தது.

 இரண்டு நாள், கழித்தும் இதுவே தொடரவே மறுநாள் காலை உணவை கொடுத்தவள் மதியம் வரவில்லை,

 ஈஸ்வருக்கு, மதியம் கனகா தான் சாப்பாடு கொடுத்தார். கண்கள் அவளையை தேடி அலைந்தது.

கனகா உடனே அவர் தூங்குற…பா பாப்பா கூட குழந்தை அழுதா அதான் என்றார். 

அவன் எதுவும் பேசாமல் கொஞ்ச மாக உண்டவன், அமர்ந்து கொண் டான். டாக்டர் வந்து பரிசோதித்துப் பார்த்தார் நல்ல முன்னேற்றம் சுந்த ரம், சீக்கிரம் சரியாயிடுவாரு உங்க பையன் என்று விட்டு சென்றார் 

வஞ்சி, மாமா…  அவருக்கு எப்படி இருக்கு, டாக்டர் என்ன சொன்னா ரு.. என்றாள்.

சுந்தரம், ம்ம்..தேறிட்டு வரான்னு சொன்னாருமா சீக்கிரம் சரியாகி டுவான்னு சொன்னார் என்றார் 

 வஞ்சி, சரி என்றவள் ஆகாஷோடு ம்,  புவனாமாவோடும் பேசிக் கொண்டிருந்தாள் 

 கனகா,  தன் பேத்தியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அவள் சுந்தரம் மடியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள். அப்படி யே.ஈஸ்வரை போலவே இருந்தாள் தூக்க ஆசை ஆனால் ஏதாவது சொல்லிவிட்டாள் 

 அவள் குறும்பை ரசித்து கொண்டிருந்தார் 

 

தொடரும்…

 

 

18 thoughts on “எனக்கென வந்த தேவதையே 24”

  1. Клининг цены: профессионально, быстро и без скрытых условий
    клининговая компания москва цены [url=https://www.stoimost-kliningovykh-uslug.ru/]https://www.stoimost-kliningovykh-uslug.ru/[/url] .

  2. Эффективные методы удаления бородавок
    Удаление бородавок: советы и рекомендации, исследуйте.

    Методы удаления бородавок [url=http://www.epilstudio.ru/udalenie-borodavok/#Методы-удаления-бородавок]http://www.epilstudio.ru/udalenie-borodavok/[/url] .

  3. Hi there, I found your site via Google while searching for a related
    topic, your web site came up, it appears great.
    I have bookmarked it in my google bookmarks.
    Hello there, just was alert to your blog via Google, and found that it is truly informative.
    I’m going to watch out for brussels. I will appreciate for those who proceed this
    in future. Many people will likely be benefited out of your writing.

    Cheers!

  4. That is a great tip especially to those fresh to the blogosphere.
    Short but very accurate information… Many thanks for sharing this
    one. A must read article!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top