அத்தியாயம் 7
மாணிக்கம் சொன்ன வார்த்தையி ல் மங்கை மற்றும் குழலி அதிர்ந்து நின்றனர் மங்கைக்கு லோ பிரஷர் ஆகி மயங்கியே விட்டார்.
பூவுக்கு இனி ன் தாத்தா பாட்டியை பார்க்கவே முடியாதா என கண்க ளில் கண்ணீருடன் நின்று கொண் டிருந்தாள்
செந்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த அன்று மாலை வீடு திரும் பினார். முதுகில் வெட்டப்பட்டு இ ருந்ததால் 13 தையல் போட்டிருந்த னர்.கனகா மற்றும் முல்லை அழுத படி இருந்தனர். தப்பிக்க முயன்ற சின்ராசுவை கதிரும் அன்பும் சேர் ந்து பிடித்து போலீசில் ஒப்படைத் து இருந்தனர் தகவல் வேல்முருக னுக்கு சொல்லப்பட்டது
வீடே பொலிவிழந்து காணப்பட்ட து. வேல்முருகன் நேரடியாகவே கா வல் நிலையம் சென்று புகார் அளி த்து விட்டு வந்தார். அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர் கவ லையுடன்,
வேல்முருகன் கோபத்துடன் இனி அந்த மாணிக்கம் குடும்பத்திற்கு இந்த பெரிய வீட்டோட உறவு இன் னையோட அத்து போச்சு யாரும் இ னி அங்க போகவும் வரவும் கூடாது
பேச்சுவார்த்தையும் வைக்க கூடா து.மீறி யாராச்சும் பேசுனது தெரிஞ் சா நான் மனுஷனாவே இருக்க மா ட்டேன்.
செந்தில் மச்சான் மட்டும் இன்னை க்கு குறுக்கால வரலனா என்ன இ ன்னைக்கு பொணமாதான் பார்த் திருப்பீங்க என்றார் ஆதங்கமாய்
அதில், பதற்றமான ராஜதுரை வே லு என்னடா பேசுற வாய மூடு உன் ன மீறி எதுவும் இந்த வீட்டில் நடக் காது .
கனகா செந்தில போய் பாரு மத்தவ ங்க, ஆக வேண்டியதை பாருங்க போங்க என அனைவரையும் அனு ப்பி வைத்தார். ராஜ துரையும் கா மாட்சி மனதளவில் சோர்ந்து போ யினர்.
ஆனால் இங்கே கார்மேகம் திருவி ழா பாதியில் நின்ற செய்தி அறிந்த தும், ஆனந்தக் களிப்புடன் பெரிய விருந்தே நடந்தது அவன் வீட்டில்.
கார்மேகம்,, காளி என்னடா திருவி ழா நின்னு போச்சா ரொம்ப சந்தோ ஷமா இருக்குடா இன்னைக்கு ஒரு உசுரு மட்டும் போயிருந்தது. இன் னும் சந்தோஷப்பட்டு இருப்பன்டா என்ன கொக்கரித்தார்.
அதன்பிறகு மாணிக்கம் பூவை மே ற்படிப்பிற்காக சென்னைக்கு வலு க்கட்டாயமாக அனுப்பி வைத்தார் இந்த நினைவுகளில் இருந்து மீண் ட மங்கை அழுகையுடன் சமைய லறை புகுந்தார்
=================================
இன்று அதேபோல் மேலே தாளம் பட்டாசு வெடியோடு ராஜதுரை வீட் டின் சார்பாக அலங்கார பொருட்க ள், சீர் வரிசை என ஊரே அசந்து போகும்படி கோவிலை நோக்கி செ ன்றது.அதற்கு உரிமை ஆனவளோ யாரோபோல் வீட்டின்மாடியில் இரு ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல கோவிலில் பூஜை செய்யப்பட்டு முதலில் ராஜதுரை வேல்முருகன் செல்வம் மாறன் எ ன அனைவருக்கும் பரிவட்டம் கட் டி கையில் கலசம் கொடுக்கப்பட்ட து
அதை அனைவரும் சென்று ஆற் றில் விட்டனர். B பின், திரு விழா க லை கட்டியது இவர்கள் சாமி கும்பி ட்டதும் வீடு வந்து சேர்ந்தனர்.ஊர் முழுவதும், பந்தல் போட பட்டு மோ ர், தண்ணீர், கலர், சாப்பாடு என திருவிழாவிற்கு வந்த அனைவருக் கும் வழங்கப்பட்டது
மாறன் மாத்திரம் அங்கிருந்து எல் லா வேலைகளையும் சரியாய் நடக் கிறதா என்று மேற்பார்வை பார்த் துக் கொண்டிருந்தான்.
கதிரும் அன்பும் அவனுடன் இருந் தனர் மாலை தேர் திருவிழா இருப் பதால் அதற்கான ஏற்பாடுகள் மா றனின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது மு ல்லை தன் தோழிகளுடன் அங்கே வந்தாள் தன் மாமனை தேடி, கதிர் அவளையே பார்த்துக் கொண்டிரு ந்தான்
முல்லை மாறனிடம் வந்தவள் மா மா என் கூட கொஞ்சம் வா வந்து எனக்கு வளையல் வாங்கி கொடு என்றாள்
மாறன் முல்லை எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் வரேன் நீ போய் உன் தோழிங்க கூட வாங்கிக் க என்று விட்டு தன் வேலையை தொடர்ந்தான்
முல்லை உடனே ஏன் மாமா நான் கேட்டா வாங்கி தர மாட்டியா என உதடு பிதுக்கினாள். அதில் தலை யில் அடித்துக் கொண்ட மாறன் வா உடனே மூஞ்ச அப்படி வைக் காத பாக்க சகிக்கல என கூட்டிக் கொண்டு சென்றான்
இங்கே குழலியின் வீட்டிற்கு ஸ்வே தா வந்திருந்தாள்.வந்தவள்காலை உணவை சாப்பிட்டு கோவிலையும் கடைகளையும் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்து குழலியை தி ருவிழாக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
ஸ்வேதா குழலி வாடி முதல்ல சாமி கும்பிட்டு கடையை சுற்றி பார்க்க லாம் என்றாள் அதன்படி இருவரு ம் கோவிலில் உள்ளே நுழைந்தனர்
கோவிலுக்கு செல்வதால் மங்கை அவளுக்கு புடவை கட்டி தலை நி றைய பூ வைத்து அனுப்பி இருந் தாள் ஸ்வேதாவுக்கு பாவாடை தாவணி கட்டிவிட்டார்
பூசாரியிடம் பூஜை பொருட்களை கொடுத்து விட்டு கண்களை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள்
மாறன் முல்லையோடு செல்ல போ கையில் பூசாரி வந்து மாறன் தம்பி சாமிக்கு உடை மாத்தணும் கொஞ் சம் கொண்டு வந்து தரீங்களா
அப்பாட்ட கேட்டேன் அப்பா தான் நீங்க வச்சு இருக்கிறதா சொன்னா ர் அதான் கேட்க வந்தேன் என்றார்
மாறன் ஆமா சாமி என்கிட்ட தான் இருக்கு முல்லை நீ முன்னாடி போ ய்க்கிட்டே இரு நான் உடைய கொ டுத்துட்டு வரேன்என அவளை அ னுப்பி வைத்தான்.
கதிரிடம் திரும்பியவன் கதிர் சாமி பொருட்களை எல்லாம் நம்ம ரூம் ல வச்சிருக்கேன் போய் எடுத்துட்டு வரலாம் வா என கதிரையும் அன் பையும் அழைத்துக் கொண்டு செ ன்றான்
சிறிதுநேரம் கழித்து மூவரும் உடை மற்றும் நகையோடு சாமி சிலை இ ருக்கும் இடத்திற்கு வந்தனர்
மாறன் சாமி இந்தாங்க இதுல நீங்க கேட்டதெல்லாம் இருக்கு என கொ டுத்துவிட்டு நிமிர்த்தான்.
எதிரே ட்டு சேலையில் அழகு தேவ தையா க அம்சமாக தலை நிறைய பூவுடன் கண்களை மூடி சாமி கும் பிடும் குழலியை பார்த்தவன் ஒரு நிமிடம் தன்னிலை இழந்தான்.
அவனையும், மீறி அவன் கண்க ள் அவளை ரசித்தது அவன் வாய் தானாக ராங்கி என உச்சரித்தது
ஐயர் வந்து பிரசாதம் எடுத்துக்கோ ங்க என்றதும் தன் இமை பிரித்தா ள் பூவு,அந்த கண்களை கண்டவ ன் அதில் தன்னை தொலைத்தா ன்.
குழலி பிரசாதம் வாங்கிக் கொண்டு நிமிர்ந்த போது எதிரில் நின்ற மாற னின் கண்களைப் பார்த்தாள்
அதில்,, என்ன கண்டாளோ… தன் தோழியின் கையைப் பிடித்து இழு த்துக் கொண்டு ஓடி விட்டாள்
அவள் ஓடும் போது இடைத்தாண் டிய அவள் கார்க்கூந்தல் அவள் ஓடுவதற்கு ஏற்ப அதுவும் நர்த்தன மாடியது மாறன் அதை ரசித்தபடி நின்று இருந்தான்
ஸ்வேதா, ஏய் பட்டி எரும ஏண்டி என்னை இப்படி இழுத்துட்டு வர பொறுமையா போடி மூச்சு இறைக் குது என்றாள் சிறிது நேரம் சென்ற குழலி பின் ஸ்வேதா கையை விட் டவளாக எப்போதும் போல் நடந்து சென்றாள்
ஸ்வேதா, மூச்சி வாங்க ஏன்டி இவ் ளோ நேரம் என்னை இழுத்துட்டு வந்துட்டு இப்ப எதுவும் நடக்காத மாதிரி நடந்து வர என அவள் த லையில் குட்டு ஒன்று வைத்தாள்
குழலி ஸ்..ஆ வலிக்குதுடி எருமை ஒன்னும் இல்ல அதை நான் அப்பு றமா சொல்றேன் என கடைவீதிக்கு சென்றாள் எல்லா கடைகளையும் இருவரும் சுற்றிப் பார்த்தனர்
ஒருபுறம் விளையாட்டு போட்டிக ள் நடந்து கொண்டிருந்தது. ஸ்வே தா அனைத்தையும் வேடிக்கை பா ர்த்தபடி தன் தோழிகளோடு நடந்து வந்தாள். வளையல் கடையை க ண்டதும் ஸ்வேதாவிற்கு வாங்கும் ஆசை வந்தது
ஸ்வேதா அங்க பாரு டி கண்ணாடி வளையல் வா வாங்கலாம் என த ன் தோழியை அழைத்தாள்,
பூவுக்கும் கண்ணாடி வளையல் பி டிக்கும் என்பதால் இருவரும்அதை வாங்க கடைக்குள் சென்றனர்
அதேநேரம் உள்ளே வளையல் வா ங்கிக் கொண்டிருந்தாள் சற்று தள் ளி கதிர் அன்பு மாறன் நின்று கொ ண்டிருந்தனர்.
முல்லை தான் வாங்கிய வளையல் களை மாறனிடம் காட்டி மாமா இ து நல்லா இருக்கா இது நல்லா இரு க்கா… என கேட்டுக்கொண்டு இருந் தாள் மாறன் உனக்கு எது பிடிக்கு தோ அதை எடுத்துக்கோ முல்லை என்று விட்டு கடைக்காரரிடம் காசு கொடுத்து விட்டு வந்தான்
அவன் திரும்பி நடக்கையில் ஒரு சத்தம் கேட்டது என்னவென்று க டைக்குள் எட்டிப் பார்த்தான்
அங்கு, குழலியும் ஸ்வேதாவும் வ ளையல், வாங்கி அதை கையில் போட்டு அழகு பார்த்துக் கொண்டி ருந்தனர். குழலி அவள் அணிந்தி ருக்கும் புடவை கலரில் வளைய லை அணிந்தவள் அதை குலுக்கி குலுக்கி ஸ்வேதாவிடம் ஏதோ ரச னையுடன் பேசிக் கொண்டிருந்தா ள்
மாறன் ஒருநிமிடம் அவளை ரசித் தவன் புன்னகையுடன் அவளைக் கடந்து சென்று விட்டான். சிறிது தூரம் சென்றதும் மாறனை யாரோ அழைத்ததால், கதிர், அன்பிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை வி ட்டு நகர்ந்தான்
மாறன் அங்கிருந்து நகர்ந்ததும் கதிரும் அன்பும் குழலிடம் ஓடி வந்தனர்
கதிர், பூவுமா என்றான். யார் தன் னை அழைக்கிறார்கள் என்று திரு ம்பி பார்த்தவளுக்கு கண்களில் க ண்ணீர். அன்பும் பூவு எப்படி இரு க்க மா என்றான்
அவர்கள் அப்படி கேட்டதும் அவ ள் அழுதபடி ஓடி வந்து இருவரையு ம் அணைத்துக் கொண்டாள்.
குழலி அண்ணா.. அண்ணா.. நீங்க ளும் என்கிட்ட ஏன் பேசல மாமா திட்டுவார்னு பயமா ஆடல் பெரிய ம்மா கூட என்கிட்ட பேசல என தேம்பினாள்
இந்த மூணு வருஷமும் எல்லாரும் இருந்தும் அனாதை போல தனியா இருந்தோம் தெரியுமா..? உங்க எல் லாரையும் பார்க்க முடியாம எப்படி தவிச்சு போனேன் தெரியுமா? நம்ம குடும்பம் ஒன்று சேர முடியாதா அ ண்ணா நம்ம பழையபடி இருக்க முடியாதா? என தேம்பினாள்
கதிருக்கும் அன்புக்கும் குழலயின் வார்த்தை என்னவோ போல் ஆகி விட்டது கதிர் இல்ல பூவுமா கண்டி ப்பா எல்லாம் மாறும் நாம எல்லாம் ஒரே வீட்ல இருக்க போறோம் பாரு நடக்குதா இல்லையான்னு என்று அவள் நெற்றி முட்டினான்
பின் அவளுக்கு நிறைய பொருட் களை வாங்கி கொடுத்து சந்தோஷ மாய் அனுப்பி வைத்தனர்.
முல்லை வளையல் வாங்கிக் கொ ண்டு மாறனை தேடினாள். அவன் இல்லை என்றதும் தோழிகளுடன் சென்றுவிட்டாள் முல்லை பொறு த்தவரை மாறனை கட்டிக் கொள் ள வேண்டும் எப்பவும் அவனோடு இருக்க வேண்டும் அதற்கு குழலி தான் தடையாக இருந்ததால் அது இப்ப இல்லை என்றதும் சந்தோஷ மாக சுற்றி வருகிறாள்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
counter-strike.com.az
I really like it when folks get together and share opinions.
Great site, keep it up!
my site – Custom Monuments