ATM Tamil Romantic Novels

3 இத இதமாய் கொன்றாயடி

 

3 – இத இதமாய் கொன்றாயடி

 

 

 

    இவனுக்கு கொல்லும் வெறியே வந்தது.எவ்வளவு தன் மேல் கோபம் இருந்தால் அழுகை வராமல் இவ்வளவு அடியை வாங்கிக் கொள்வாள் என நினைத்துக் கொண்டான். மனதில் அவள் இந்த நிலையில் இருக்கும் போது ஏதும் செய்யக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். 

 

முகத்தை திருப்பிக் கொண்டதும் மட்டுமில்லாமல் வாயில் முணுமுணுத்தவாறே இருந்தாள். வேலாயுத்த்திற்கு இதுவரை பொறுத்துக் கொண்டான். பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டான்.

 

“என்னடி… முணுமுணுக்கறவ… தகிரியம் இருந்தா எங்க சத்தமா பேசுடி பார்க்கலாம்…” என்று சவால் விட்டான்.

 

பதிலுக்கு அவளும்,”சவால் விடறியா… ஆமாம்டா உன்னய தான் திட்டறே… அதுக்கு என்ன இப்ப… எனக்கு உன்னய கண்டா பயம்மா என்ன…” திமிராகவே சொன்னாள்.

 

“என்னய டா போட்டு பேசறியாடீ…”

 

“என்னது டீயா…” அதிந்தாள். 

 

“என்ன அதிர்ச்சியா இருக்காடீ… பின்ன என்னய டா பேசினில்ல… அதுக்கு தான்டீ உன்னய டீ போட்டு பேசினே…”

 

“சரிதான் போடா…”

 

“சரி தான்… நீ… முதல்ல போடீ…”

 

“நா எதுக்கு போகனும்டா… நீ தான என்னய பார்க்க வந்தடா… நீ முதல்ல இங்கிருந்து போடா…” கத்தினாள்.

 

“கிறுக்கு பிடிச்சவ… மனசு கேட்காம உன்னய பார்க்க வந்தேன்ல பாரு… என் புத்திய நல்லா பிஞ்ச செருப்பால அடிச்சுகணும்…”

 

“அடிச்சுகோ…நானே எடுத்துக் கொடுக்கட்டுமா…” இடையில் வந்து மகள் வாயை மூடினார். வேலாயுதத்தின் கையைத் தட்டி விட்டு மேலும் பேசினாள்.

 

அவள் பேச்சை கேட்க முடியால்,”ச்சேய்…” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றான். பின்னாலயே ஓடி வந்து தமிழ் கையை பிடித்து நிறுத்தி,”நில்லுங்க மாப்ளே… அவ தான் புத்தியில்லாம பேசறா… நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதிங்க மாப்ளே… அவ பேசினதுக்கு எல்லாம் நானு மன்னிப்பு கேட்டுக்கறேன்…” கையை எடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டார்.

 

பெரியவர் முகத்தைப் பார்த்தான். தந்தை வயசிருக்கும் அவ பண்ணிய தப்புக்கு இவர் போயி எங்கிட்ட மன்னிப்பு கேட்பதா… என்று எண்ணி அவர் கைகளை கீழே இறக்கி விட்டுட்டு,”அவ பேசினதுக்கு நீங்க என்ன பண்ணுவிங்க மாமா… நா வரேன் மாமா…” சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

 

உள்ளுக்குள்ளே கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்த போதும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல் தன் புல்லட்டில் கிளம்பினான். போகும் வழியில் தாவணி அணிந்த பருவமங்கை கோமதி கை நீட்டி இடைமறித்தாள். தமிழ் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

 

அதைப் பார்த்து அந்த கோமதி அவனிடம்,“மச்சான் என்ன கோவமா இருங்கிங்க போல…” என்று கேட்டாள்.

 

“உம் மேல கோவபப்ட நா யாரு…” மகிழ்விழி மேல் இருக்கும் கோபத்தை கோமதியிடம் காண்பித்தான்.

 

“கோவபப்படுங்க மச்சான்… உங்களுக்கு இல்லாத உரிமையா…” உரிமை இருப்பது போல் பேசினாள்.

 

‘என்னடா இது… உறவே இல்லாதவ உரிமை கொண்டாடறா…. அங்கு ஒரு உறவுகாரி இத்தனைக்கும் நெருங்கிய நண்பர் பொண்ணு உரிமையில்லாத மாதிரி பேசறா…’ என்ற சிந்தனையில் இருந்த போது இடையில் புகுந்து,”என்ன மச்சான் பலத்த யோசன போல இருக்கு… எப்படி உங்களுக்கு உரிமையானவளா மாத்திக்கறதுங்கறது…” 

 

இவள் பேச்சை கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருந்ததால் என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் முழித்தான்.

 

“சின்ன வீடா வரட்டுமா… இல்ல பெரிய வீடா வரட்டுமா…” என பாட்டாகவே பாடி கண்களால் அழைப்பு விடுத்தாள்.

 

“உன் இஷ்டம் எதாயிருந்தாலும் எனக்கு ஓகே…” கிண்டலாக சொல்லிவிட்டு விசில் அடித்தவாறே புல்லட்டில் பறந்தான். தாமதம் ஆனாதால் உரக்கடைக்கு செல்லாமல் சதீஸ்க்கு போன் செய்து,”நா இன்றைக்கு கடைக்கு வரமாட்டேன். கடைய பூட்டி சாவிய வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துரு…” சொல்லிவிட்டு நேராகவே வீட்டுக்கு சேர்ந்தான்.

 

வழக்கமாக திறந்திருக்கும் வீடு அன்று வீடு பூட்டி இருந்தது. ‘ஏனோ… வீடு பூட்டியிருக்கே… இந்தம்மா எங்க போச்சு தெரியல… எங்காவது போவதால் இருந்தால் வேலைக்காரர் ஒருத்தரையாவது நிறுத்தி வச்சுகிட்டு போயிருக்குமே… ‘ என யோசனையில் இருக்கும் போது வாசல் கதவை திறந்துக் கொண்டு பக்கத்து வீட்டு பாக்கியம் வந்தாள்.

 

வந்தவள் வீட்டு சாவியை அவன் கையில் கொடுத்து,”இப்ப தான் எதிர்வீட்ல இருக்காளே புனிதா அவளுக்கு தீடீர்னு பிரசவ வலி வந்துடுச்சுனு ஆசுபத்திரிக்கு கூட்டி போயிருச்சு… நீ வந்தா உங்கிட்ட சாவிய கொடுக்க சொல்லுச்சு… சாப்பாடு எடுத்து வச்சிருக்குதாம் போட்டு சாப்பிட சொல்லுச்சு… நா வரேன்…” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

பூட்டிய வீட்டை திறக்கும் போதோ அம்மா இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது. தமிழ் எப்பவும் அம்மாவை கையால் உணவு பரிமாறி தான் சாப்பிடும் பழக்கம் கொண்டவனால் தானே போட்டு சாப்பிட விரும்பாமல் வசந்தாவிற்காக காத்திருக்கலானான். 

 

புனிதாவை கூட்டிட்டு போய் ஆசுபத்திரியில் அனுமதித்து விட்டு குழந்தைப் பிறப்பதற்காக காத்திருந்தாள். அப்போது வசந்தாவை மந்தாகினியே பார்த்துவிட்டு வந்து,”எங்க மதனி இங்க வந்திருக்கிங்க…”

 

“ஒன்னுமில்ல… எதிர்வீட்டு புனிதாவுக்கு புள்ள வலி வந்துருச்சு… புருசங்கூட ஒரு அவசர சோழியா போயிருக்கான். என்னய பார்த்துக்க சொல்லிட்டு தான் போனான்… நீ எங்க இந்த பக்கம்… யாருக்காவது உடம்பு சரியில்லயா… அண்ணாக்கு ஏதாவது…”

 

“அண்ணாவுக்கு ஒன்னுமில்ல… மகிழுக்கு தான்…” என்று தயங்கினாள். 

 

“மகிழு என்ன பண்ணினா… அவளயா இங்கய சேர்த்திருக்கிங்க…”

 

“மகிழு வந்து மகிழு…” இழுத்தாள்.

 

“என்ன இழுக்கற… சொல்லு நாந்தான் அடிச்சேனு…” மனைவியை காணவில்லை என்று தேடி வந்த வேலாயுதம் சொன்னார்.

 

“என்னது… நீயா அடிச்சா…” ஒரே மகள் என்று பொத்தி பொத்தி வளர்த்தவர் மகளை அடித்தாளா என நம்ப முடியாமல் கேட்டார்.

 

“ஆமாம் மதனி… இந்த கையால் தான் அடித்தேனு… நா பாவி…” என்று சொல்லி சொல்லி தலையில் அடித்துக் கொண்டார்.

 

“எம்மருவளே எதுக்கு அடிச்சே…” 

 

“இதுக்கு தான் அடிச்சேனு… மாப்ளய மாமானு கூப்பிடமாட்டேனு சொன்னா… இவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கமாட்டேனுட்டா… என்னால பொறுத்துக்க முடியாம தான் என் கையால அடிச்சேனு…” என சொல்லி அழுதார்.

 

“எதுக்கு எம்மவன் பேச்சு வந்தது…” வசந்தா கேட்டார்.

 

இருவரும் வரப்பில் சந்தித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டது. கோபத்தில் சேற்றில் தள்ளிவிட்டுச் சென்றது. அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்தவுடன் பெற்றவர்கள் சொல்ல சொல்ல தமிழை கண்டபடி திட்டியது அதுப் பொறுக்காமல் மாந்தாகினி அடித்தது என்று ஒன்றும் விடாமல் வேலாயுதம் சொல்லி முடித்தார்.

 

வசந்தா கொஞ்ச நேரம் யோசித்தார். பிறகு அவர்களை பார்த்து,”இருவருக்கும் பேசாமல் கண்ணாலம் பண்ணி வச்சிடலாமே…”

 

வசந்தா பேச்சைக் கேட்டு இருவரும் அதிர்ந்தார்கள். மந்தாகினி,“இவர்களுக்கு கண்ணாலமா… இது சரி வருமா…” என கேட்டார்.

 

வசந்தா,”இப்ப மட்டும் ஒத்துமயா இருங்காங்களா என்ன… இப்ப அடிச்சுகறது கண்ணாலம் பண்ணிகிட்டு அடிச்சிகிட்டுமே…” 

 

“அதெப்படி ரெண்டு பேரும் கண்ணாலம் பண்ண ஒத்துக்கமாட்டாங்களே…” மந்தாகினி சொன்னார். 

 

“எல்லாம் ஒத்துக்கவாங்க… ஒருத்தர் மேல ஒருத்தர் பிரியம் இருக்குது…” இடையிட்டு வேலாயுதம் சொல்ல வந்தார். “நா சொல்லிடறேன்… பிறகு உங்க சந்தேகத்த சொல்லுங்க… பிரியம் இல்லாமலா நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் மோதி கொள்றாங்களா… பேசி பார்க்கலாம்…”

 

“பேசியும் ஒத்துவரலனா…” மந்தாகினி கேட்டார். அதற்கு வசந்தா,”அதற்கும் ஓத்துக்கலனா… மிரட்டி கட்டாய கண்ணாலம் பண்ண வச்சிடலாம்…”

 

இருவரும் வசந்தாவை நம்பாமல் பார்த்தார்கள். “நம்புங்க… முதலில் முறுக்கிட்டு திரிவாங்க… ஊரு உலகத்துல இவங்கள போல யாரும் இல்லனு சொல்வாங்க பாரு… அந்தளவுக்கு ஒத்துமயா வாழுவாங்க பாரு… “ 

 

எதிர்வீட்டு புனிதாவுக்கு ஆண்குழந்தை பிறந்துவிட்டது என்று நர்ஸ் வந்து சொன்னாள். உடனே மூவரும் பார்க்கச சென்றார்கள். பார்த்து பேசிவிட்டு,”இனி மேல் உம் புருசன் பார்த்துக்குவாருல…”

 

புனிதா புருஷன் கையை எடுத்து கும்பிட்டு,”இந்த உதவிய உடம்புல உசுரு இருக்கற வரைக்கும் நா மறக்கமாட்டே…”

 

வசந்தா கையை இறக்கிவிட்டு,”இது எல்லாம் பெரிய உதவியா… இத்த போயி பெருசா பேசிகிட்டு… அட சும்மா இருப்பா… அப்ப நா வரேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார். வேலாயுதமும் மாந்தாகினியும் சொல்லிவிட்டு வசந்தா கூடவே கிளம்பினார்கள். 

 

வெளியில் வந்தவுடன் வசந்தா இருவரையும் பார்த்து,”உங்க மவளுக்கு நா வந்தது பார்த்தது பேசியது எல்லாம் தெரிய வேணாம்… நீங்களா பேசுவது போல பேசுங்க… நானும் எம் மவன்கிட்ட பேசறேன்… அப்ப நா வரேன்…” கிளம்பினார்.

 

வீடு போய் சேர்வதற்குள் நடுநிசி ஆகிவிட்டது. போய்ப் பார்த்தால் வீட்டை திறந்து போட்டுவிட்டு தமிழ் சாப்பாட்டு மேஜையில் கவிழ்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

உறங்கியவை எழுப்பி,”ஏன்டா… வீட்டை திறந்து போட்டு தூங்கறே… எவனாவது வீடு புகுந்து ஏதாவது களவாடி போயிட்டா என்ன பண்றது…” கேட்டார்.

 

“அதான் ஏதும் களவாடிட்டு போவலியே… சும்மா இரும்மா…”

 

“அதுவும் சரி தான் விடு… நீ சாப்பிட்டியா…”

 

“என்றைக்கும் உம் கையாலே பரிமாற நா சாப்பிட்டுக்குறே…”

 

மகன் அப்படி சொன்னதும் ஒரு தாயாக பெருமைபட்டார். இருந்த போதும் ஒரு வருங்கால மாமியாராக கவலைப்பட்டார். கூடவே இவனிடம் எப்படி விசயத்தை சொல்லி சம்மதம் வாங்குவது என யோசித்தார் யோசனையில் இருந்த வசந்தாவிடம்,”என்னம்மா யோசன… சாப்பாடு போடு…” தமிழ் கேட்டான்.

 

தலைகீழாக நின்றாவது வாங்கிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சை விட்டவாறே… தட்டை எடுத்து சாதத்தை பரிமாறினார்.

 

அம்மா பரிமாறிய சாப்பாட்டை உண்டுக் கொண்டே,”என்னம்மா… பெருமூச்சு பலமாயிருக்கு…” என்று கேட்டான்.

 

‘இப்போது சொன்னா ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிடுவான். காலையில் பேசிக்கலாம்’ என நினைத்தவாறே… “ஒன்னுமில்லபா… விடிய போகுது போயி படு…” சமாளித்தாள். சொன்னதும்

படுக்கப் போய்விட்டான். 

 

காலையில் விசயத்தை சொன்னதும் இருவரும் பிடிவாதமாக மறுத்துவிட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top