ATM Tamil Romantic Novels

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17

அத்தியாயம் 17

 

இரண்டு நாட்கள் முழுதாக நாற்பத்தி எட்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை… காற்றில் கரையும் கற்பூரம் போல் கரைந்து காணாமல் போனது…

 

பரத் என்ன ஆனான் ஏதானான் எவர்க்கும் தெரியவில்லை… 

 

உடல் நிலை சீராகும் முன்னே எங்கே போய் என்ன கஷ்டப்படுகிறானோ என பெற்றவர் வருந்த…

 

பரத்தின் மறைவு அனாவுக்கு பலவித அலைப்புறுதலை தந்தது…

 

திருமணத்தை நிறுத்தினேன் புகார் கொடுத்தேன் என்று என் மீது கோவமாக இருக்கிறாரா… பின்னே இப்படி ஒரு பிள்ளை இருப்பது என்று ஒன்றை மறைத்து வாழ்ந்து விட்டு மீண்டும் அவனிடம் வந்து உதவி கேட்டால் அதுவும் அவன் பழையதை மறந்து புதிய வாழ்க்கை ஒன்றை தேர்ந்தெடுத்த இந்த சமயத்தில் நான் வந்தது தவறோ…???

 

தவறு தான் ஆனால் என் மகனைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியலையே… என பரிதவித்தாள் அனா…

 

பரத் காணவில்லை என்றதும் அவனைத் தேடி ஆட்களை ஏவி இருந்தார் ஆதிகேசவன்… அவன் கிடைக்கும் மார்க்கம் தெரியவில்லை அதற்காக அனாவை அப்படியே விட்டு விட முடியுமா… ரேயான் அவர் குல வாரிசு ஆகிற்றே அவனை எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாதே… அதனால் சிறந்த வக்கீலலை தேடி அலைந்தார்… அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு இந்தியா முழுக்க இருக்கும் சிறந்த வக்கீலை வரவழைத்து இருக்க முடியும்… ஆனால் அதற்கு போதிய கால அவகாசம் தான் அவரிடம் இல்லை…

 

தனது வழக்கறிஞரிடம் நிலைமையின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்த போது எதுவும் அவருக்கு சாதகமாக எதுவும் இல்லை… என்ன செய்வது என்று புரியாமல் இருந்த சமயம் தான் அந்த அழைப்பு வந்தது…

 

இதற்கு மேல் தன் கையில் எதுவும் இல்லை என்பதால் அனாவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு தன் வக்கீல் உதவியோடு காவல் நிலையம் சென்றார்… 

 

அனாவையும் குழந்தையையும் திருப்பி அனுப்புவதை தவிர வேறு வழியே இல்லை என்ற இக்கட்டான நிலையில் வேறு வழி இன்றி ஆதிகேசவனும் அவர்களை அனுப்பி வைக்க சம்மதித்தார். அதுவும் அவர்களை தகுந்த கௌரவத்தோடு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு பின்…

 

அமெரிக்காவிற்கு திரும்பச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் அனாவுக்கு பரத் மீது கோவத்தை விட வருத்தமே மேலோங்கி இருந்தது… இப்படி தானே தானும் காணாமல் போன நேரம் அவனுக்கும் இருந்து இருக்கும் என்கிற எண்ணம் வேறு எழுந்து பாடாய் படுத்தியது…

 

ஆனால் எங்கோ ஒரு மூலையில் அவள் காதல் இதயத்தில் பரத் மீதான நம்பிக்கை கிளம்பி வந்து விட்டாள்… ஆனால் இன்று இப்படி ஒரு நிராதரவான நிலையில் இருக்கும் போது அவன் மீதான நம்பிக்கை செல்லாக உடைந்து பெரும் ஏமாற்றம் அவள் நெஞ்சை கவ்விக் கொண்டது…

 

இனி அடுத்து என்ன…?? எனக்கும் என் மகனுக்கும் இனி யார் இருக்கின்றார்கள்…?? என்று நினைக்கையிலே வாழ்க்கை மீதான அவள் நம்பிக்கை உடைந்து போனது… விரக்தியின் உச்சியில் விமானத்தில் அமர்ந்து இருந்தவள் விமானம் மேலே பறக்க பறக்க அவள் உள்ளம் பாதுகாப்பை இழக்க தொடங்கியதை உணர்ந்தது… அவள் உள்ளம் சொல்லாத கதறலை அவள் உயிர் சொல்லாத வலியை அவள் சொல்லாத வேதனையை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது… விண்ணில் சூழ்ந்த கார் மேகக் கூட்டங்கள் பொழிந்த பெரு மழையை போல் அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது…

 

நீண்ட நெடிய வலிய பிராயணம் அது… தூதரக அதிகரிகளின் அறிவுறுத்தலின் படி பாதுகாவலர்களின் கண்காணிப்பின் கீழ் ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தனர்…

 

விதியே என்று இறங்கி வந்தாள் அனா… அதுவரை அவளது பாதுகாப்பில் பதுங்கி கிடந்த ரேயானோ… தரை இறங்கியது தான் தாமதம்… 

 

“டாடி” என கத்திக் கொண்டே பாய்ந்து ஓடி போய் எதிரில் வந்த பரத்திடம் தாவி கட்டிக் கொண்டான்…

 

என்ன நடந்தது என்று அவள் கிரகிக்கும் முன்னே குழந்தையை தூக்கியப் படி அவள் அருகில் வந்தான் பரத்…

 

“என்ன விட்டு போயிட்டேன்னு நினைச்சிட்டியா… பல வருஷ காத்திருப்பிருக்கு பிறகு கிடைத்த வரம் நீங்கள்… உங்களை அவ்ளோ சீக்கிரம் விட்டு போகவும் மாட்டேன் யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டேன்…” என்று பரத் அனாவிடம் கூறி விட்டு சிரிக்க… 

 

என்ன என்று அப்போதும் புரியாதவள் போல் முழிக்க பரத் அருகில் சில பரீட்சையப் பட்ட முகங்கள்… அவர்கள் யார்… யார்…?? 

 

முதலில் கிரிதரன் அவனின் மனைவி திலோத்தமா, அடுத்து அனா ஒளிந்து வாழ இடம் கொடுத்த அவளது முதலாளி, அடுத்து அவளை சிறு வயதில் ஆசிரமத்தில் பாதுகாத்த செவிலித் தாய் அவர்கள் கூடவே அவளது வக்கீலும் மற்றும் அமெரிக்காவிலே மிக பிரபலமான வக்கீல் கேமிலியா வாஸகுஸ் (கெஸ்ட் அப்பீயரென்ஸ் )வந்து இருந்தனர்…

 

“என்னமா எங்க இருந்து இவங்க எல்லாரையும் கூட்டி வந்தோம்னு யோசிக்கிறியா… உதவின்னு கேட்டாலே தரமா செய்வோம்… அதுவும் உயிர் நண்பனுக்கு ஒண்ணுன்னா இறங்கி செய்ய மாட்டோமா என்ன…?? என்னடா புள்ளைக்கு இன்னும் விளங்கல போல… நீ பொறுமைய புரிய வச்சி கூட்டி வா… அப்புறம் தம்பி இது செண்டிமெண்ட் சீனு, ஞாபகம் இருக்கட்டும்…அப்புறம் உன் பாட்டுக்கு காதல் ஓவர் ஃபுளோவுல ரொமான்ஸ் சீன் ஓட்டிக்கிட்டு திரியாத சரியா… அமெரிக்காவுல கர்வாலி மரத்தடி பஞ்சாயத்து நமக்காக காத்து கிடக்கு சட்டுனு வெரசா வாடா” என்று கிண்டல் அடித்து விட்டு ரேயானை அழைத்துக் கொண்டு போக…

 

அனாவிடம் திரும்பியவன் “என்ன என்னாச்சு எது புரியல உனக்கு?” என்று புருவத்தை உயர்த்தி கேட்க…

 

“இல்லை நீங்க ரெண்டு பேரும் எப்படி… அன்னைக்கு அப்படி சண்டை போட்டீங்க அவர் கூட கோவிச்சுக்கிட்டு ஹாஸ்பிடல் விட்டு போனாரே அப்புறம் எப்படி…?”

 

“அதுவா சொல்றேன்…”

 

“நீ ஆலனை பற்றி சொன்னதுமே எனக்கு விஷயம் புரிஞ்சி போச்சு… கடையம்பட்டி வரைக்கும் அவர் பணம் பாய்ஞ்சி இருக்குனு…அதனால அவரை பணத்தை வச்சோ பதவியை வச்சோ அடிக்க முடியாதுனு புரிஞ்சிக்கிட்டேன்… உடனே எனக்கு தெரிஞ்ச வக்கீலை வச்சி அடுத்து என்ன செய்ய முடியும்னு பார்த்தேன்… அவர் சொன்ன வரை இந்தியாவில் இருந்து எதுவுமே செய்ய முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டேன்… உடனே புறப்பட்டு வர முடிவு பண்ணேன் அதுக்கு முன்னாடி எனக்கு இங்க நம்பகமான ஒருத்தரோட உதவி தேவைப் பட்டது… அதான் கிரிக்கு ஃபோன் போட்டேன்” என்று அவர்கள் இருவரின் உரையாடலை நினைத்து பார்த்தான் பரத்…

 

ஒரு வித தயக்கத்துடன் தான் கிரிக்கு அழைத்தது… இரண்டு ரிங்கிலே உடனே அழைப்பை ஏற்றவன்…

 

“மச்சான் பரத்தே நீ இன்னும் சாவலையா…??“ என எடுத்த எடுப்பிலே கிரி கேட்க…

ஒரு நொடி ஜெர்க் ஆகி மீண்டவன்…

 

“அது எப்படி மச்சான் அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு நான் மட்டும் சாவேனா… அப்படியே செத்தாலும் உன்னை விடுறதா இல்லை… ஆவியா வந்தாவது உன்கூட தான் சுத்துவேன்…” பரத் அதே கேலி குரலிலே தொடர 

 

“அதானே செத்தாலும் விடாது கர்மான்னு சும்மாவா சொன்னாங்க… சரிடா என்ன விஷயம் சும்மாலாம் நீ ஃபோன் பண்ண மாட்டியே என்ன பிரச்சனை?” என நேரடியாக விஷயத்திற்கு வந்த நண்பனை மெச்சிக் கொண்டான்… அதனால் எந்த தயக்கமும் இன்றி…

 

“ஒருத்தன் எனக்கே விபூதி அடிச்சுட்டான் டா மச்சான்” என்றான் பரத்…

 

“சரிடா அவனை போட்டு தள்ளினா போதுமா..??” கிரி.

 

“அதுக்கு அவன் உயிரோட இருக்கணும்டா” பரத்.

 

“அட விளங்காதவனே எதையும் முழுசா சொல்ல மாட்டியா… ஏன்டா இப்படி உளர்ற…?“ கிரி.

 

“நாயே சொல்றத முழுசா கேளு… அவன் செத்து வருஷம் நாலு ஆகுது… இப்போ குடைச்சல் கொடுக்கிறது அவங்கப்பன் ஆமை வாயன்… அவனை சும்மா விடக் கூடாது மச்சான்… என் பொண்டாட்டி பிள்ளையை ரொம்ப படுத்தி வச்சி இருக்கான்… இவனுக்கு பயந்து உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு ஓடினதா அவள் சொன்னதை கேட்டு நான் அந்த நிமிஷமே செத்து போயிட்டேன்டா… அவனை எதாவது செய்யணும்…”

 

“*** மவன சும்மாவே விடக்கூடாது நீ சொல்லு மச்சான் செஞ்சிடலாம் இப்போ நான் என்ன செய்யணும்…?” கிரி…

 

“உடனே கிளம்பி அமெரிக்கா வரணும்” என்று பரத் அழைத்த ஒற்றை காரணத்திற்காக ஓடி வந்தான் கிரிதரன் கூடவே அனாவின் துணைக்காக திலோவையும் அழைத்துக் கொண்டு… 

 

சிரித்து பேசினால் மட்டும் தான் நட்பா… அடித்து பிடித்துக் கொண்டாலும் நட்பு நட்புதான் என்று ஓடி வந்து விட்டான் அவன்… கிரியை நினைத்து பரத்தின் முகம் பெருமிதத்தில் மிளிர்ந்தது…

 

அடுத்து அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் ஏது செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி… அதன் படியே எதிரியின் கோட்டைக்குள் சென்று எதிரியை சந்திக்க களம் இறங்கினர் நட்பின் கூட்டணி…

 

 

 

1 thought on “பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17”

  1. Мы изготавливаем дипломы любых профессий по приятным ценам. Покупка документа, который подтверждает окончание университета, – это рациональное решение. Заказать диплом ВУЗа: [url=http://careerfy.pl/employer/diplomy-grup-24/]careerfy.pl/employer/diplomy-grup-24[/url]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top